“உர்ஜூனில் கதீம்” என்றால் என்ன ?”  படித்துப் பட்டம் பெற்றவர்களிலிருந்து, பாமரர்களான எழுத, வாசிக்க, தெரியாத, சாதாரண, அடிமட்ட, கைநாட்டுப் பேர்வழிகளும் கூட  மிக இலகுவாக, எளிய முறையில், ஹிஜ்ரி மாதங்களின் ஆரம்பத்தை இரண்டு நாட்களுக்கு முன்னரே; மிகச் சரியாக அறிந்து திடமாக முடிவு செய்துகொள்ளத் தக்கதாக; ஏக இறைவனால் மாதந்தோறும், உலகம் படைக்கப்பட்ட நாளிலிருந்து இறுதி யுக முடிவுவரை ஏற்படுத்தப் பட்டுள்ள பிறையின் ஒரு நாளைய தோற்றமே “உர்ஜூனில் கதீம்” என்பதாகும். இது குறித்து உயர்ந்தோனும் […]

{ 0 comments }

இஸ்லாம் மட்டும்தான் விஞ்ஞானத்திற்கு முரண்படாத மார்க்கம் என்று சொல்லிக் கொண்டே முஸ்லிம்களில் மிக அதிகமானோர் விஞ்ஞானம் கூறும் மிகத் துல்லியமான சந்திரக் கணக்கீட்டை மறுத்துக் கொண்டு, பிறையைப் புறக்கண்களால் பார்த்துத்தான் மாதத்தைத் தீர்மானிக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். ஆனால் இவர்கள் சூரியனை மட்டும் கணக்கிட்டு அதன் அடிப்படையில் தங்களது வணக்க வழிபாடுகளை அமைத்துக் கொள்கின்றனர். சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையில் பாரபட்சம் காட்டும் இத்தகையவர்களின் நட வடிக்கை சரிதானா என்பதை குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் பார்ப்போம். “”சூரியனும், சந்திரனும் […]

{ 0 comments }

பிஸ்மில்லாஹ்ஹிர்ரஹ்மானிர்ரஹீம் எஸ்.ஹலரத் அலி, திருச்சி-7. மாதத்தை துவக்குவதற்கான பிறை பார்த்தல், இன்று முஸ்லிம்களிடையே பல்வேறு குழப்பங்களை நிகழ்த்திக்கொண்டிருப்பதை பார்க்கிறோம். இதன் காரணம் என்னவென்று சிந்திக்கும்போது ஒரு ஹதிஸின் நோக்கத்தை எப்படி விளங்கி செயல்படுத்த வேண்டும் என்ற அடிப்படையை அறியாததே ஆகும்.பிறை பார்த்தலுக்கான ஹதீஸை பார்ப்போம். நீங்கள் பிறை கண்டதும் நோன்பு வையுங்கள்; (மறு) பிறை கண்டதும் நோன்பை விடுங்கள். மறைக்கப்பட்டால் நாள்களை எண்ணிக்கொள்ளுங்கள். அறிவிப்பவர்: இப்னு உமர்  (ரலி)    புஹாரி. 1900,1906. முஸ்லிம்.1958. இது போன்ற சொற்களுடன் […]

{ 0 comments }

“எரிகற்களால் (METEOR) அழிக்கப்பட்ட மானக்கேடான சமுதாயம்” . -அல் குர்ஆனை நிரூபிக்கும் அறிவியல் சான்று! – எஸ்.ஹலரத் அலி, திருச்சி-7.(Mob: +91 99653 61068) நமக்குமுன் வாழ்ந்த எத்தனையோ மக்கள் சமுதாயங்களை, அவர்களின் அக்கிரமத்தின் காரணமாக அல்லாஹ் அழித்திருக்கிறான்.அவர்களின் அழிவுக்கான காரணங்களை நமக்கு படிப்பினையாக அல் குர்ஆனில் சொல்லிக்காட்டுகின்றான். அப்படி அழிக்கப்பட்ட ஒரு சமுதாயமே லூத் நபி அவர்களின் சமுதாயம். நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் சம காலத்தில் வாழ்ந்தவர்தான் லூத் (அலை) அவர்கள். இன்றைய ஜோர்டான் […]

{ 0 comments }

“அல்லாஹ்விடம் அனைத்துமே !” துல்லியமான கணக்கில் உள்ளன” ☪  அளவற்ற அருளாளனாகிய அல்லாஹ்வின் அழகிய திருநாமங்களில் ஒன்று அல் – “ஹஸீப்” (கணக்கெடுப்பவன்) என்பதாகும். (04:06, 86, 33:39, 02:202, 284, 05:04, 58:06,) ஒவ்வொரு பொருளையும் அவன் எண்ணிக்கையால் (துல்லியமாக) அறிவான். (72:28) அல்லாஹ் அனைத்துப் பொருட்களையும் (மிகத் துல்லியமாகக்) கணக்கெடுப்பவனாக இருக்கின்றான். 04:86) அல்லாஹ் விரைந்து (அனைத்து பொருட்களையும் துல்லியமாகக்) கணக்கெடுப்பவன். (ஆவான்.  02:202, 05:04)  ☪  அனைத்துப் பொருட்களின் மீதும் அல்லாஹ் (துல்லியமாகக்) […]

{ 0 comments }

“நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் அல்லாஹ்வுடைய (பதிவுப்) புத்தகத்தில் வானங்களையும் பூமியையும் படைத்த நாளிலிருந்தே மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு ஆகும்  அவற்றில் நான்கு (மாதங்கள்) புனிதமானவை; இது தான் நேரான மார்க்கமாகும்……” அல்குர்ஆன் 9:36. தற்போது உலகில் இஸ்லாமியர்கள் என்று கூறுபவர்களில் பலர் மாதங்களை எந்தெந்த முறையில் ஆரம்பிக்கிறார்கள் என்பதையும் அறிய கடமைப்பட்டுள்ளோம். 1. பிறையை புறக்கண்ணால் கண்டால் அதற்கு அடுத்த நாள் முதல் நாள் என ஒருசாரார் மாதங்களை ஆரம்பிக்கிறார்கள். 2. பிறையை 29 நாள் புறக்கண்ணால் பார்க்க […]

{ 0 comments }

எஸ். ஹலரத் அலி. திருச்சி- 7. அன்றைய ஜாஹிலியா கால அரேபியாவில் ஆண்டுமானமானது, இப்ராஹீம் (அலை) நெருப்பில் இடப்பட்ட நாளையும், பின்னர் காபத்துல்லாஹ் கட்டிய நாளையும், ஆண்டு மானங்களாக வைத்து கணக்கிட்டார்கள். பின்னர் அவர்களுக்குள் முரண்பாடு  ஏற்பட்டது. பின்னர், காப் இப்னு லுஆவின் மரணத்தை, யானையாண்டு வரை ஆண்டுமானமாகக் கொண்டார்கள். பின்னர் ஹிஜ்ரி ஆண்டு வரை யானையாண்டே அவர்களின் ஆண்டுமானமாக இருந்து வந்தது. அரபுகளில் ஒவ்வொரு கூட்டமும் ஒவ்வொரு பிரபல்யமான நிகழ்வுகளை வைத்து வரலாற்றை உறுதிப் படுத்தினர். […]

{ 0 comments }

‘மிஹ்ராஜ்” எனும் விண்னேற்றப்பயணம் : – இன்றைய அறிவியல் கூறுவதென்ன? – எஸ். ஹலரத் அலி, திருச்சி -7 ( +91 9965361068) இஸ்லாம் ஓர் அறிவியல் மார்க்கம் என்பதற்கு ஏராளமான சான்றுகள் இருக்கின்றன. அதில் ஒரு சான்றுதான், நபி (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து பைத்துல் முகத்தஸ் சென்று அங்கிருந்து ஏழு வானங்கள் சென்று மீண்ட “மிஹ்ராஜ்” எனும் விண்ணேற்றப்பயணம். நமது பூமியிலிருந்து கோடிக்கணக்கான மைல் தூரமுள்ள நட்சத்திர மண்டலத்திற்கு சில நிமிடத்தில் சென்று திரும்பலாம் என்று […]

{ 0 comments }

அவர்களுடைய முகக்குறிகளைக் கொண்டு நீர் அவர்களை நன்கறிந்து கொள்வீர்! -அல் குர்ஆன்.47:30. (Human Facial Expressions maybe Universal across Cultures –AI Study found) உலகிலுள்ள மனிதர்கள் அனைவரும் பரிணாம வளர்ச்சியின்படி குரங்கிலிருந்தே படிப்படியாக மனிதனார்கள என்பதே இன்றைய அறிவியல் கொள்கை இந்த கற்பனை கதையை இஸ்லாம் முற்றாக மறுக்கிறது. மாறாக, ஒரு ஆண் பெண்ணிலிருந்தே மனித சமுதாயம் உருவானது என்ற உண்மையை உரைக்கிறது. மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஒரு ஆண் பெண்ணிலிருந்தே படைத்தோம்.நீங்கள் […]

{ 0 comments }

ஒட்டகங்களை இவர்கள் பார்க்கவில்லையா, அவை எவ்வாறு படைக்கப்பட்டுள்ளன என்று! -அல் குர்ஆன். 88:17. ( Desert Camels Inspire a new cooling Technology) – எஸ்.ஹலரத் அலி, திருச்சி,7.(Mob: +91 9965361068) அல்லாஹ்வின் வல்லமையையும் ஆற்றல்களையும், அவனது படைப்பினங்களை ஆய்வு செய்வதன் மூலம் அறிந்து கொள்ளச் சொல்கிறான். உதாரணமாக, வானத்தைப் பார்க்கவில்லையா, அது எவ்வாறு படைக்கப்பட்டுள்ளன என்று! மேலும் மலைகளைப் பார்க்கவில்லையா, அது எவ்வாறு உயர்த்தப்பட்டுள்ளது என்று! (அல் குர்ஆன்.88:18,19) படைப்பினங்களை ஆராய்வதன் மூலம் படைத்த […]

{ 0 comments }