அனாச்சாரங்கள்

அன்றைய அறியாமை காலத்தில் 360 சிலைகள் நிரம்பிய கஃபாவில், முஆவியா கோத்திரத்தார் கொடுத்த ஹுபைல் சிலையே பிரதானமானது. அடுத்து குறைஷியரின் பெருமைக்குறிய ஆலயங்களாக மூன்று விளங்கின.”கடவுளின் பெண் மக்கள்” என்று பக்தியோடு வணங்கப்பட்ட லாத், உஸ்ஸா, மனாத் கோவில்களாகும். 1, மதீனாவிற்கு மேற்கே செங்கடலை ஒட்டிய ‘குதைத்’ என்னும் பிரதேசத்தில் இருந்தது. “மனாத்” கோவில். 2, மக்காவிலிருந்து ஒரு நாள் பிரயாண தூரத்தில் இருந்தது ‘நக்லா’ எனும் சமவெளி பிரதேசம். இங்கிருந்தது அல்-உஸ்ஸாவின் குறைஷிகளின் அதிக சிறப்பு […]

{ 2 comments }

தூய இஸ்லாம் இன்று பெரும்பான்மை முஸ்லிம்களால் இறைமறுப்புக்கு ஒப்பாகிவிட்டது. நபி வழியை குழிதோண்டிப் புதைத்துவிட்டு பிஅத்தை (மார்க்கத்தில் புதிதாக ஒன்றை) சுன்னத் என்ற பெயரில் அறங்கேற்றி விட்டார்கள். ஹராம் ஹலாலாகவும் சபிக்கப்பட்டவை பரகத்களாகவும் பரகத் தரக்கூடியவைகள் லஃனத் (சபிக்கப்பட்டவை)களாகவும் முஸ்லிம்களால் மாற்றப்பட்டு விட்டன. நபி(ஸல்) அவர்களின் காலத்தில், நபித் தோழர்கள், தாபியீன்கள் வாழ்ந்த பொற்காலத்தில் இருந்த அசல் மார்க்கம் இன்று காணப்படவில்லை. நபி(ஸல்) அவர்களின் காலத்தில் வழிகேட்டில் வீழ்த்தும் செயல்களாக கருதப்பட்டவை இன்று நேர்வழி காட்டிகளாக கருதப்படுகின்றன. […]

{ 1 comment }

    “எவர்கள் அல்லாஹ்வின் வேதத்தில் அருளியவற்றை மறைத்து அதற்கு கிரயமாக     சொற்பத்தைப் பெற்றுக் கொள்கிறார்களோ! நிச்சயமாக அவர்கள் தங்கள் வயிறுகளில்     நெருப்பைத் தவிர வேறெதனையும் உட்கொள்ளவில்லை. கியாம நாளில் அல்லாஹ் அவர்களிடம்     பேசவும் மாட்டான். அவர்களுக்கு மிகக் கடுமையான வேதனையுண்டு.” (2:174) ஆலிம்கள் உங்களுக்கு எதை மார்க்கமாய் போதிக்கிறார்கள்? சற்று சிந்தியுங்கள்.   அவர்கள் வயிற்றுப் பிழைப்பை வெற்றிகரமாய் நடத்துவதற்காக மார்க்கத்திற்கு   எதிரானவையெல்லாம் மார்க்கமாய் போதிக்கின்றார்கள். அவைகளை இன்னமும் நீங்கள்   உணராமல் இருக்கின்றீர்கள். நாங்கள் தன்னிச்சையாக ஆலிம்கள் விமர்சிப்பதாய் […]

{ 2 comments }

{ 1 comment }

ரஸூல் (ஸல்) அவர்கள் கப்ருகள் பூசப்படுவதையும், அவற்றின்மீது எதனையும் எழுப்படுவதையும் தடுத்துள்ளார்கள் என அவர்களின் அன்புத்தோழர் ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (திர்மிதி)     யூதர்களும், கிறிஸ்தவர்களும் தங்கள் நபிமார்களின் கப்ருகளை வணங்கும் இடமாக ஆக்கிய காரணத்தால்,  அல்லாஹ்  சபித்துவிட்டான்  என  தன்னுடைய  மரண  தருவாயில்  நபி(ஸல்)  அவர்கள் கூறினார்கள், என அவர்களின் அன்பு மனைவி அன்னை ஆயிஸா அவர்கள் அறிவித்துவிட்டு, “இவ்வாறு ரஸூல் (ஸல்) அவர்கள் சொல்லியிருக்கா விட்டால் அவர்களின் கப்ரும் (தரைமட்டத்தைவிட)உயர்தப்பட்டிருக்கும் “என்று கூறினார்கள் […]

{ 1 comment }

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் அருமை ஸஹாபாக்கள் ‘உங்களுக்கு நாங்கள் எப்படி ஸலவாத் கூறுவது’ என்று கேட்டபோது, நபி அவர்கள் ‘ஸலவாத்’ கூறும் முறைகளை நமக்குத் தெளிவாக கற்றுத் தந்துள்ளனர். அவர்கள் எவற்றை ‘ஸலவாத்’ என்று கற்றுத் தந்தார்களோ அதை விடுத்து நாமாகப் புதிய ‘ஸலவாத்’ களை உருவாக்கிக் கொண்டால் அது ஸலவாத் ஆக முடியாது. மாறாக ‘பித்அத்’ஆக அவை கருதப்படும். இதற்கு உதாரணமாக ‘இப்னு அபீ ஜைது’ என்ற அறிஞர் ‘வர்ஹம் முஹம்மதன் வஆல […]

{ 5 comments }

{ 0 comments }

சடங்குகளிலும் சம்பிரதாயங்களிலும் மூழ்கிப் போன சமூகத்தினர் கூட ‘சீர் திருத்தத் திருமணங்கள்” என்னும் பெயரில் இந் நாகரீகக் காலத்தில் மூடப் பழக்கங்களை விட்டொழித்து விட்டனர். ஆனால் உண்மையான சீர் திருத்தத் திருமணங்களை உலகுக்கு நடத்திக் காட்டிய உத்தம நபி (ஸல்) அவர்களின் வழியைப் பின் பற்றி நடப்பதாகக் கூறும் நம் சமுதாயத்தினர் பலர் இன்னமும் அநாச்சாரங்களிலும் மூடப் பழக்கங்களிலும் மூழ்கிக் கிடப்பதைக் காணுகிறோம். ஒரு மணப்பந்தலை அமைத்து அதை மின் விளக்குகளால் அலங்கரித்து மணமக்களை அமரவைத்து குடும்பத்தினர் […]

{ 13 comments }

இறைவனால் கொடுக்கப்பட்ட ஒரே நேரான மார்க்கத்தில் மனித அபிப்பிராயங்களையும், யூகங்களையும் புகுத்தியதால் பொதுவாகப் பல மதங்கள் தோன்றியிருக்கின்றன. எனவே மனித யூகங்களால் பெறப்பட்ட மதங்களில் மாற்றாருடன் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்ற தெளிவுப்படுத்தப் பட்டிருக்கும் என நாம் எதிர்பார்க்க முடியாது.. எனவே மதவாதிகளால் தீய சக்திகளால் வகுப்பு, இன, மதக் கலவரங்கள் தூண்டப்பட்டுக் கொண்டே இருக்கும் என்பதில் சந்தேகமேயில்லை.     இந்த நிலையில் இஸ்லாமிய மார்க்கத்தை பின்பற்றும் முஸ்லிம்களாகிய நாம் நமது கடமை என்ன? மாற்று மதத்தாருடன் […]

{ 1 comment }

{ 4 comments }