பிரார்த்தனை

 அல்லாஹ் மனிதனைப் படைத்து அவன் வாழ்வதற்குத் தேவையான அனைத்து வாய்ப்புகளையும் கொடுத்துள்ளான். அல்லாஹ் மனி தனிடம் கூறுவது ஒன்றே ஒன்றுதான். ‘நீ எனக்கு மட்டுமே அடிபணியவேண்டும் எனக்கு எதையும் இணையாக்காதே’ என்பது தான் அது! இவ்வாறு இறைவனுக்கு மட்டுமே செய்ய வேண்டிய வணக்கங்களில் ஒன்று தான் அல்லாஹ்வை மட்டும் அழைத்து பிரார்த்தனை செய்வது!  அல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ‘பிரார்த்தனை ஒரு வணக்கமாகும்’ பிறகு, ‘என்னை அழையுங்கள்! உங்களுக்கு பதிலளிக்கிறேன். எனக்கு அடிபணி வதை விட்டும் […]

{ 0 comments }

{ Comments on this entry are closed }

முஸ்லிம் எவராவது இறந்து விட்டால் அவரது உறவினர்கள் அவருக்காக” பாத்திஹா ஓதுதல்” என்ற பெயரில் பெரிய சடங்கு செய்கின்றனர். இது திருமண வீடோ என்று சந்தேகிக்கும் அளவுக்கு மரணம் அடைந்தவர் வீட்டின் நிலை இருக்கும்.     அடக்கம் செய்து வந்த பிறகு இறந்த நாளிலிருந்து 3ம் நாள்,10ம் நாள், 40ம் நாள், அரை வருட பாத்திஹாக்கள், ஒரு வருட பாத்திஹாக்கள் என்று விஷேசம் நடைபெரும். சில ஊர்களில் 10,20,30 என்று நாட்கணக்கிலும், ஏன் சில ஊர்களில் தினமும் […]

{ 0 comments }

1.அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்வதற்குமுன்     1. பிரார்த்தனை செய்வதற்கு முன் அல்லாஹ்வைப் போற்றிப் புகழவேண்டும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஸலவாத் கூறவேண்டும். அது ஏனெனில், நிச்சயமாக நீர் அல்லாஹ்விடம் அவனுடைய அருட்கொடைகளை, கருணைகளை, பாவமன்னிப்பை கேட்கப்போகிறீர். எனவே, அல்லாஹ்வுடைய தகுதிக்கேற்றவாறு எதிலே புகழ்வார்த்தையும், மேன்மைப்படுத்திப் பேசுதலும் இருக்குமோ அத்தகைய ஒரு முன்னுரையை நீர் முதலில் அவனுக்காக முற்படுத்துவதே இவ்விடத்தில் பொருத்தமான ஒரு செயலாக இருக்கும்.     இதற்குச் சான்றாக பின்வரும் நபிமொழியைப் பாருங்கள்! […]

{ 4 comments }

ஈமான் கொண்டவர்களே! கலப்பற்ற(மனதோடு) அல்லாஹ்விடம் தவ்பா செய்து, பாவமன்னிப்புப் பெறுங்கள்; உங்கள் இறைவன் உங்கள் பாவங்களை உங்களை விட்டுப் போக்கி உங்களைச் சுவனச் சோலைகளில் பிரவேசிக்க செய்வான்; அவற்றின் கீழே ஆறுகள் (சதா) ஓடிக் கொண்டே இருக்கும்; (தன்) நபியையும் அவருடன் ஈமான் கொண்டார்களே அவர்களையும் அந்நாளில் அல்லாஹ் இழிவுப்படுத்த மாட்டான்; (அன்று ஈடேற்றம் பெற்ற) அவர்களுடைய பிரகாசம் (ஒளி) அவர்களுக்கு முன்னும், அவர்களுடைய வலப்புறத்திலும் விரைந்துக் கொண்டிருக்கும்; அவர்கள் “எங்கள் இறைவா! எங்களுக்கு, எங்களுடைய பிரகாசத்தை […]

{ Comments on this entry are closed }