எரிகற்களால் (METEOR) அழிக்கப்பட்ட மானக்கேடான சமுதாயம்

Post image for எரிகற்களால் (METEOR) அழிக்கப்பட்ட மானக்கேடான சமுதாயம்

in அறிவியல்

“எரிகற்களால் (METEOR) அழிக்கப்பட்ட மானக்கேடான சமுதாயம்” . -அல் குர்ஆனை நிரூபிக்கும் அறிவியல் சான்று!

– எஸ்.ஹலரத் அலி, திருச்சி-7.(Mob: +91 99653 61068)

நமக்குமுன் வாழ்ந்த எத்தனையோ மக்கள் சமுதாயங்களை, அவர்களின் அக்கிரமத்தின் காரணமாக அல்லாஹ் அழித்திருக்கிறான்.அவர்களின் அழிவுக்கான காரணங்களை நமக்கு படிப்பினையாக அல் குர்ஆனில் சொல்லிக்காட்டுகின்றான். அப்படி அழிக்கப்பட்ட ஒரு சமுதாயமே லூத் நபி அவர்களின் சமுதாயம். நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் சம காலத்தில் வாழ்ந்தவர்தான் லூத் (அலை) அவர்கள்.

Archaeologists believe the 'monstrous' site at Tall el Hammam may have been the Biblical city of Sodomஇன்றைய ஜோர்டான் பள்ளத்தாக்கு அருகிலிருந்த சோதாம் மற்றும் கொமரா (Sodom and Gomorrah) நகரங்களில் வாழ்ந்த மக்களுக்கு சத்தியத்தை சொல்வதற்காக லூத் (அலை) நபியாக அனுப்பப்பட்டார்கள். ஆனாலும் அம்மக்கள் நபியவர்களின் போதனையை புறக்கணித்து விட்டு, தொடர்ந்து மானக்கேடான செயல்களை செய்வதிலும், அருவருப்பான காரியங்களிலுமே கவனம் செலுத்தினார்கள். அல்லாஹ் கூறுகிறான்.

மேலும் லூத்தை (அவர் சமுகத்தாரிடையே நபியாக அனுப்பி வைத்தோம்); அவர் தம் சமூகத்தாரிடம் கூறினார்: “நிச்சயமாக நீங்கள் உலகத்தாரில் எவருமே உங்களுக்கு முன் செய்திராத மானக்கேடான ஒரு செயலை செய்ய முனைந்து விட்டீர்கள். – அல் குர்ஆன்.29;28.

நீங்கள் ஆண்களிடம் (மோகம் கொண்டு) வருகிறீர்களா? வழி மறித்துப் பிரயா ணிகளைக் கொள்ளையடிக்கவும் செய்கின்றீர்கள். (மக்கள் நிறைந்த) உங்கள் சபைகளிலும் (பகிரங்கமாகவே) மிக்க வெறுக்கத்தக்க இக்காரியத்தைச் செய்கிறீர்கள்.” என்று கூறினார். அதற்கவர்கள், “மெய்யாகவே நீங்கள் உண்மை சொல்பவராக இருந்தால் அல்லாஹ்வுடைய வேதனையை எங்களிடம் கொண்டு வாருங்கள்.” என்று கூறியதைத் தவிர வேறொன்றும் அவருடைய மக்கள் கூறவில்லை. – அல் குர்ஆன்.29:29.

உலகில் இதுவரை எந்த சமுதாய மக்களும் செய்யாத ஓரினப்புணர்ச்சி எனும் மானக் கேடான செயலை செய்த அவ்வூர்வாசிகளை; அல்லாஹ் சுடப்பட்டநெருப்புக் கற்களை மழை போல் பொழியச்செய்து அழித்தான் என்பதை கீழ் வரும் வசனங்கள் கூறுகின்றது.

அவர்களுடைய ஊரை மேல் கீழாக புரட்டி விட்டோம்.இன்னும அவர்கள் மேல் சுடப்பட்ட களிமண் கற்களை (Carbonaceous Chondrite) பொழியச்செய்தோம். – அல் குர்ஆன்.15:74.

நம்முடைய கட்டளை வந்ததும் அவர்களுடைய ஊரின் மேல்பகுதியை அதன் கீழ்ப் பகுதியாக (தலைகீழாக) ஆக்கிவிட்டோம். அன்றியும் (அதற்கு முன்னர்) அதன்மீது சுடப்பட்ட செங்கற்களை மழையாக பொழியச் செய்தோம். –அல் குர்ஆன்.11:82.

சுமார் 3600 வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற இச்சம்பவத்தைப் பற்றி இன்றைய மனிதக் கரங்கள் ஊடாடிய பைபிளிலும் சொல்லப்பட்டுள்ளது. (ஆதியாகமம்.19:24-25.) ஆகவே இது குறித்து ஆய்வு செய்வதற்காக, சர்வதேச ஆய்வாளர்கள் குழு, சம்பவம் நடைபெற்ற ஜோர்டான் “தால் எல் – ஹமாம்” (Tall el-Hammam) நகரில் விரிவான அகழாய்வு நடத்தியது. இந்த சர்வதேச ஆய்வுக்குழுவில், அமெரிக்காவின் பல பல்கலைகழக விஞ்ஞானிகளும், அமெரிக்கா கடற்படை மற்றும் தேசீய ஆய்வகங்களின் ஆய்வாளர்களும் கலந்து கொண்டு விரிவாக ஆய்வு செய்தனர்.

A Tunguska sized airburst destroyed Tall el-Hammam a Middle Bronze Age city in the Jordan Valley near the Dead Sea | Scientific Reports (nature.com)

ஜோர்டானின் டால் –எல் ஹம்மாம் அகழ்வாராச்சி திட்டத்தில் திரட்டப்பட்ட பலதரப்பட்ட விஞ்ஞானிகளின் ஆய்வு முடிவுகள் “நேச்சர் சயின்டிபிக் ரிப்போர்ட்ஸ்”இணைய (Nature scientific Reports-20,septermber-2021) இதழில் வெளியிடப்பட்டது. இதன் படி சுமார் 3600 ஆண்டுகளுக்கு முன்பு வானில் இருந்து மணிக்கு 61,000 km வேகத்தில் வந்து சிதறி வெடித்த விண்கல் (Astroid meteor) காரணமாக அந்நகரம் அழிந்ததாக ஆய்வுகள் கூறுகின்றன. “தால் எல்-ஹம்மாம்” அழிவுக்கான காரணத்தை முடிவு செய்ததில் 14 முக்கிய சான்றுகளின் ஆய்வுகள் உதவின. இதில் அதிக வெப்ப நிலையில் (சுமார் 2500 டிகிரி) உருகிய மட்பாண்டங்கள் மற்றும் செங்கற்கள், ஆகியவை அதிக அழுத்தத்தின் காரணமாக வைரம் போன்ற (Dimonoids) கடினத்தன்மையாக மாறி இருந்தன.

இந்த விண்கல் வெடிப்பானது, ஜப்பான் ஹிரோஷிமாவில் விழ்ந்த அணுகுண்டை விட ஆயிரம் மடங்கு சக்தி வாய்ந்த ஒன்றாக இருந்தது.விண்கல் வெடித்து சிதறிய வெப்பத்தினால் அனைத்துப் கல்,மண்,கட்டிடங்கள்,மட்பாண்டப்பொருள்களும் உருகிவிட்டன. விண் கல்லானது வானிலேயே 4 கி.மீ உயரத்தில் நொறுங்கிச் சிதறியபோது எழுந்த வெப்பக்காற்று (Cosmic Airburst blast wave) அந்நகரை முற்றிலுமாக தலைகீழாக புரட்டிப்போட்டது. வானிலிருந்து மழையாக பொழிந்த வெப்ப கற்களும், வெடிப்பினால் உருவான மிகையழுத்த வெப்ப காற்றுக்கும் லூத் (அலை) அவர்களின் சமுதாயத்தை முற்றாக அழித்தது.. இதைத்தான் அல்லாஹ் கூறுகிறான்.

நாம் கல்மாரி பொழியும் காற்றை( AIRBURST) அவர்கள் மீது ஏவினோம்.
-அல் குர்ஆன்.54:34.

Tall el-Hammam map-2லூத் (அலை) அவர்கள் சமூகத்தார் வாழ்ந்த நகரத்தை வானிலிருந்து வந்து வீழ்ந்து சிதறிய நெருப்புக் கற்களே அழித்தது என்பதற்கான போதுமான சான்றுகள் அம்மண்ணில் இருக்கிறது. மண்ணிலுள்ள சிலிக்கா தனிமமும் இரும்புத் தாதுவும் உயர் வெப்ப அழுத்தத்தின் காரணமாக குவார்ட்ஸ் துகள்களாக மாறியிருந்தன.சாதாரணமாக மண்ணிலுள்ள சிலிக்காவையும் இரும்பையும் ஒன்று சேர்த்து குவாட்ஸ் ஆக மாற்றுவதற்கு ஒரு சதுர அங்குலத்தில் 7,25000 பவுண்டு அழுத்தம் கொடுக்கவேண்டும். அதாவது ஐந்து ஜிகா பாஸ்கல் அழுத்தம். இப்படி மாற்றுவதற்கு மனித அறிவியலில் சாத்தியமில்லை. ஆனால் விண்கல் வெடிப்பின் உயர் வெப்பமும், அழுத்தமும் மண்ணை குவாட்ஸ் துகள்களாக மாற்றிவிட்டன.

Reconstruction of the blast above a city building
Ancient City's Destruction by Exploding Space Rock May Have Inspired Biblical Story of Sodomஅந்நகரத்தில் இருந்த மரங்கள், மரத்துண்டுகள் எல்லாம் எரிந்து கரித்துண்டாக மாறி,உயர் அழுத்தத்தின் காரணமாக மிக நுண்ணிய வைரத் துகள்களாக (DIAMONOIDS) மாறியிருப்பதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர். இந்த வைரத்துகள்களின் அளவானது ஒரு வைரஸ் கிருமியின் அளவே இருந்தது.

வானில் விண்கல் வெடித்து சிதறிய அடுத்தநோடியில், அதன் தாக்கத்தினால் எழுந்த கடும் வெப்ப அதிர்ச்சி அலை புயல் காற்றானது மணிக்கு 1400 கி.மீ வேகத்தில் சுழன்றடித்து…நகரிலுள்ள கட்டிடங்கள் அனைத்தையும் தலைகீழாக்கி தரைமாட்டமாக்கியது. அந்நகரில் வாழ்ந்த சுமார் 8000 மக்களும் உடல் சிதைந்து சிறு சிறு துகள்களாக சிதறிவிட்டனர். கடும் வெப்ப அதிர்ச்சி அலையின் காரணமாக 14 கி.மீ தொலைவில் இருந்த ஜெரிக்கோ,நகரின் சுற்றுச சுவர்களும் நகரமும் எரிந்து வீழ்ந்ததாக ஆய்வுகள் கூறுகின்றன.

இன்றும் ஆயிரக்கணக்கான ஆபத்தான விண்கற்கள் நம் தலைக்குமேல் சுழன்று கொண்டிருகின்றன. ஆகஸ்ட் 2021 நிலவரப்படி 2,203 ஆபத்தான விண் கற்கள் (Potentially hazardous asteroids PHA) பூமிக்கு நெருக்கமான பாதையில் சுழன்று சென்று கொண்டிருக்கின்றன. இவற்றுள் சுமார் 159 விண்கற்கள் ஒரு கிலோமீட்டர் நீளத்திற்கும் அதிகமானதாகும். மனிதர்கள் செய்யும் பாவத்தின் காரணமாக எந்த விண்கல் எவர் தலையில் விழும் என்று எவருக்கும் தெரியாது. இதைத்தான் அல்லாஹ் எச்சரிக்கின்றான்.

உங்களை பூமி விழுங்கி விடாதென்றோ அல்லது உங்கள் மீது கல்மாரி பொழியாதென்றோ நீங்கள் அச்சமற்று விட்டீர்களா? – அல் குர்ஆன்.17:68.

நாம் நாடினால் அவர்களை பூமியினுள் சொருகி விடுவோம்; அல்லது வானத்திலிருந்து அவர்கள் மீது ஒரு துண்டை விழச்செய்து அவர்களை அழித்து விடுவோம்.அல்லாஹ்வை முன்னோக்கி நிற்கும் ஒவ்வோர் அடியானுக்கும் நிச்சயமாக இதில் ஓர் அத்தாட்சி இருக்கிறது. – அல் குர்ஆன்.. 34:9.

Leave a Comment

Previous post:

Next post: