சந்திர நாட்காட்டி

எஸ்.ஹலரத் அலி, திருச்சி-7 (+91 98 653 61068) மக்காவில் உள்ள காபத்துல்லாஹ்வை நோக்கி ஒவ்வொரு தொழுகையிலும், உலகிலுள்ள அனைத்து திசை வாழ் முஸ்லிம்களும் கிப்லாவாக முன்னோக்க வேண்டும் என்பது அல்லாஹ்வின் கட்டளை. கிப்லாவை மையப்படுத்தியே முஸ்லிம்கள் தொழ வேண்டும். ஆகவே நீர் இப்போது (மக்காவின்) மஸ்ஜிதுல் ஹராம் பக்கம் உம் முகத்தை திருப்பிக் கொள்ளும்.( முஸ்லிம்களே!) இன்னும் நீங்கள் எங்கிருந்தாலும் (தொழுகையின்போது) உங்கள் முகங்களை அந்த (கிப்லாவின்) பக்கமே திருப்பிக் கொள்ளுங்கள்.   அல் குர்ஆன். 2:144 […]

{ 1 comment }

மனிதனைப் படைத்த இறைவன் ஆதம்(அலை) அவர்களிலிருந்து மனிதனுக்கு கொடுத்தது இஸ்லாம்| என்ற சாந்தி, நேர்வழி மார்க்கத்தையே. அந்த இஸ்லாம் மார்க்கம் 1432 ஆண்டுகளுக்கு முன்னர் அல்லாஹ்வால்  சம்பூரணமாக நிறைவு பெற்றுவிட்டது. அதன் பின்னர் இஸ்லாம் என்ற சாந்தி மார்க்கத்தில் மேல் அதிகமாகச் சேர்ப்பதற்கு யாருக்கும் அதிகாரம் இல்லை. இந்த  உண்மையை அல்குர்ஆன் 5:3, 3:19,85, 33:36, 59:7 இறைவாக்குகளை விளங்குகிறவர்கள் சந்தேகத்திற்கிடமின்றி ஒப்புக் கொள்வார்கள். இறைவனால் நாளை மறுமையில் மார்க்கமாக ஒப்புக் கொள்ளப்படும்  இஸ்லாம்  என்ற சாந்தி-நேர்வழி […]

{ 13 comments }

“உர்ஜூனில் கதீம்” என்றால் என்ன ?”  படித்துப் பட்டம் பெற்றவர்களிலிருந்து, பாமரர்களான எழுத, வாசிக்க, தெரியாத, சாதாரண, அடிமட்ட, கைநாட்டுப் பேர்வழிகளும் கூட  மிக இலகுவாக, எளிய முறையில், ஹிஜ்ரி மாதங்களின் ஆரம்பத்தை இரண்டு நாட்களுக்கு முன்னரே; மிகச் சரியாக அறிந்து திடமாக முடிவு செய்துகொள்ளத் தக்கதாக; ஏக இறைவனால் மாதந்தோறும், உலகம் படைக்கப்பட்ட நாளிலிருந்து இறுதி யுக முடிவுவரை ஏற்படுத்தப் பட்டுள்ள பிறையின் ஒரு நாளைய தோற்றமே “உர்ஜூனில் கதீம்” என்பதாகும். இது குறித்து உயர்ந்தோனும் […]

{ 0 comments }

இஸ்லாம் மட்டும்தான் விஞ்ஞானத்திற்கு முரண்படாத மார்க்கம் என்று சொல்லிக் கொண்டே முஸ்லிம்களில் மிக அதிகமானோர் விஞ்ஞானம் கூறும் மிகத் துல்லியமான சந்திரக் கணக்கீட்டை மறுத்துக் கொண்டு, பிறையைப் புறக்கண்களால் பார்த்துத்தான் மாதத்தைத் தீர்மானிக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். ஆனால் இவர்கள் சூரியனை மட்டும் கணக்கிட்டு அதன் அடிப்படையில் தங்களது வணக்க வழிபாடுகளை அமைத்துக் கொள்கின்றனர். சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையில் பாரபட்சம் காட்டும் இத்தகையவர்களின் நட வடிக்கை சரிதானா என்பதை குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் பார்ப்போம். “”சூரியனும், சந்திரனும் […]

{ 0 comments }

பிஸ்மில்லாஹ்ஹிர்ரஹ்மானிர்ரஹீம் எஸ்.ஹலரத் அலி, திருச்சி-7. மாதத்தை துவக்குவதற்கான பிறை பார்த்தல், இன்று முஸ்லிம்களிடையே பல்வேறு குழப்பங்களை நிகழ்த்திக்கொண்டிருப்பதை பார்க்கிறோம். இதன் காரணம் என்னவென்று சிந்திக்கும்போது ஒரு ஹதிஸின் நோக்கத்தை எப்படி விளங்கி செயல்படுத்த வேண்டும் என்ற அடிப்படையை அறியாததே ஆகும்.பிறை பார்த்தலுக்கான ஹதீஸை பார்ப்போம். நீங்கள் பிறை கண்டதும் நோன்பு வையுங்கள்; (மறு) பிறை கண்டதும் நோன்பை விடுங்கள். மறைக்கப்பட்டால் நாள்களை எண்ணிக்கொள்ளுங்கள். அறிவிப்பவர்: இப்னு உமர்  (ரலி)    புஹாரி. 1900,1906. முஸ்லிம்.1958. இது போன்ற சொற்களுடன் […]

{ 0 comments }

“நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் அல்லாஹ்வுடைய (பதிவுப்) புத்தகத்தில் வானங்களையும் பூமியையும் படைத்த நாளிலிருந்தே மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு ஆகும்  அவற்றில் நான்கு (மாதங்கள்) புனிதமானவை; இது தான் நேரான மார்க்கமாகும்……” அல்குர்ஆன் 9:36. தற்போது உலகில் இஸ்லாமியர்கள் என்று கூறுபவர்களில் பலர் மாதங்களை எந்தெந்த முறையில் ஆரம்பிக்கிறார்கள் என்பதையும் அறிய கடமைப்பட்டுள்ளோம். 1. பிறையை புறக்கண்ணால் கண்டால் அதற்கு அடுத்த நாள் முதல் நாள் என ஒருசாரார் மாதங்களை ஆரம்பிக்கிறார்கள். 2. பிறையை 29 நாள் புறக்கண்ணால் பார்க்க […]

{ 0 comments }

எஸ். ஹலரத் அலி. திருச்சி- 7. அன்றைய ஜாஹிலியா கால அரேபியாவில் ஆண்டுமானமானது, இப்ராஹீம் (அலை) நெருப்பில் இடப்பட்ட நாளையும், பின்னர் காபத்துல்லாஹ் கட்டிய நாளையும், ஆண்டு மானங்களாக வைத்து கணக்கிட்டார்கள். பின்னர் அவர்களுக்குள் முரண்பாடு  ஏற்பட்டது. பின்னர், காப் இப்னு லுஆவின் மரணத்தை, யானையாண்டு வரை ஆண்டுமானமாகக் கொண்டார்கள். பின்னர் ஹிஜ்ரி ஆண்டு வரை யானையாண்டே அவர்களின் ஆண்டுமானமாக இருந்து வந்தது. அரபுகளில் ஒவ்வொரு கூட்டமும் ஒவ்வொரு பிரபல்யமான நிகழ்வுகளை வைத்து வரலாற்றை உறுதிப் படுத்தினர். […]

{ 0 comments }

அலாஸ்கா தேதி மாற்றத்தால்…   வியாழக்கிழமையில் ஜும்மா தொழுகை? எஸ்.ஹலரத் அலி, திருச்சி-7.( +91 9865361068) இஸ்லாமிய அடிப்படையில் காலெண்டரை கட்டமைக்காமல்…. ஆங்கிலேயரின் (GMT) கிரீன்விச் பிரைம் மெரிடியன் 00 / 24 என்ற அடிப்படையில் லண்டனை மையப்படுத்திய காலெண்டரை ஹிஜ்ரி கமிட்டி தயாரித்துள்ளது  இதனால் அலாஸ்காவில் உள்ளவர்கள் இன்றும் ஜும்மா தொழுகையை வியாழக்கிழமையில் தொழும் அவல நிலையில் உள்ளதாக குற்றம் சாட்டப்படுகிறது. அலாஸ்காவானது ரஷ்யாவிடமிருந்து 1867 ஆம் ஆண்டு அமெரிக்கா வாங்கியதிலிருந்து இந்நிலை நீடிப்பதாக சொல்லப்படுகிறது. ஹிஜ்ரி […]

{ 0 comments }

“நாளின் ஆரம்பம்” “நேற்று” என்பதும் “இன்று” என்பதும் “நாளை” என்பதும் ஓருபோதும் ஒன்றல்ல. அது போலவே “கடந்த” காலம் ,”நிகழ்”  காலம் ,”எதிர்”  காலம் , ஆகிய இவை மூன்றும் ஒருபோதும் ஒன்றல்ல வெவ்வேறானவைதான் எம்மைவிட்டும் கடந்து சென்ற “நேற்றைய” தினம் என்பது வேறு .  பொழுது புலர்ந்துள்ள எமது “இன்றைய” தினம் என்பது வேறு . நாம் எதிர்பார்த்திருக்கும் “நாளைய” தினம் என்பது வேறு . என்பதாகவே அல்லாஹ்வும் அவனுடைய தூதர்களும் நமக்குச் சொல்லித் தந்துள்ளார்கள் […]

{ 0 comments }

“பார்க்க  வேண்டாமா ?” பார்க்க வேண்டாமா ?” பார்க்க வேண்டாமா ?” ☪  பலகோடிப் பால் வெளி மண்டலங்களைப் படைத்த படைப்பாளனின் பலகோடிப் படைப்புகளைப் பூமியிலும் பால்வெளி மண்டலங்களிலும் பார்த்துப், பார்த்துப், படிப்பினை பெறவேண்டாமா ?” பார்க்க வேண்டாமா ?” எனப் பல வசனங்களில் படைத்தவன் படைப்பினங்களாகிய  நம்மை ஏவுகின்றானே. ☪  அல்லாஹ்  படைத்துள்ள பொருட்களை அவர்கள் பார்க்கவில்லையா ?  16:48 ,10:06, ☪  வானங்களிலும் பூமியிலும் எத்தனையோ சான்றுகள் இருக்கத்தான் செய்கின்றன (12:105) ☪  (நபியே! […]

{ 0 comments }