
எஸ்.ஹலரத் அலி (+91 99653 61068)
- குர்ஆனிய ஆயத் – ஆதம் நபியின் மகன் கதை!
“பின்னர் அல்லாஹ் ஒரு காகத்தை அனுப்பினான். அது பூமியை தோண்டி, தன் சகோதரனின் உடலை எப்படி மறைப்பது என அவனுக்கு காட்டியது. அப்போது அவன் கூறினான்: கைசேதமே! இந்த காகத்தை போல் கூட என்னால் ஆக முடியவில்லையே! என் சகோதரனின் உடலை நான் மறைக்க வேண்டுமே!” – -அல் குர்ஆன் 5:31
- 4 அற்புதங்கள் + Science:
A. “குராபன்” – காகத்தை ஏன் தேர்ந்தெடுதான்?
- அறிவு: _
Animal Cognition 2020_ ஆய்வு – காகத்திற்கு 7 வயது குழந்தையின் IQ உள்ளது. கருவிகளை பயன்படுத்தும். முகத்தை ஞாபகம் வைக்கும்.
- அடக்கம்:: காகம் மட்டுமே இறந்த காகத்தை பார்த்தால் “அடக்க சடங்கு” செய்யும். மற்ற பறவைகள் கூடி கத்தும்.
- தோண்டும் திறன்:
காகத்தின் அலகு + கால் மண்ணை தோண்டுவதற்கு Perfect Design.
B. முதல் “புதைக்கும் சட்டம்!”
மனிதன் கொலை செய்ய கற்றுக்கொண்டான். ஆனால் புதைக்க தெரியவில்லை.
அல்லாஹ் ஒரு பறவையை வைத்து “மனித கண்ணியம்” என்ற பாடத்தை கற்றுக்கொடுதான்.
பாடம்: உடல் = அமானிதம். அதை மண்ணில் மறைப்பதே மரியாதை.
C. “ஃபஅஸ” – அனுப்பினான்:
அல்லாஹ் அந்த காகத்தை “தற்செயலாக” வரவில்லை. வேண்டுமென்றே அனுப்பினான்..
அதாவது இயற்கையில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வுக்கு பின்னாலும் அல்லாஹ்வின் திட்டம் இருக்கிறது.
D. மனிதனின் வெட்கம்!
கொலை செய்தவன் ஒரு காகத்தை விட தன்னை கேவலமாக உணர்ந்தான்.
`
“நான் இயலாமல் போய்விட்டேனே!”
இது தான் “தவ்பா” வின் ஆரம்பம்.
- அறிவியல் புதுமை – 2021 கண்டுபிடிப்பு!
- Crow Funeral:: காகம் இறந்தால் 100+ காகம் கூடி 10-15 நிமிடம் கத்தும். பின் ஒவ்வொன்றாக வந்து பார்து விட்டு போகும். இதை “பாதுகாப்பு கற்றல்” என்கிறார்கள்.
- Tool Use: காகம் குச்சியை வளைத்து புழுவை எடுக்கும். எதிர்காலத்தை திட்டமிடும்.
- மண்ணை மூடுதல்::
காகம் உணவை மறைத்து வைக்கும் போது, மற்ற காகம் பார்கிறதா என மூன்று முறை சுற்றி பார்த்துவிட்டு மறைக்கும். “ஏமாற்றம்” என்ற உணர்வு கூட உண்டு.
Subhanallah!
இந்த அறிவு எல்லாம் கொலைக்கு பின் மனிதனுக்கு தேவைப்பட்டது.
- நமக்கான மூன்று பாடம்:
- கற்றுக்கொடுப்பவன் அல்லாஹ்!: ஆசிரியர் மனிதனாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஒரு காகம் கூட உஸ்தாத் ஆகலாம்.
- தவறு செய்தால் ஒப்புக்கொள்!: “நான் காகத்தை விட கேவலம்” என்று சொன்னதுதான் முதல் படி.
- இறந்தவருக்கு மரியாதை!: இஸ்லாத்தில் அடக்கம் கட்டாயம். இதன் ஆரம்பம் ஒரு காகம்.
நிறைவுரை
“பூமியில் உள்ள எந்த உயிரினத்தின் உணவும் அல்லாஹ்வின் பொறுப்பில் உள்ளது” _
-அல் குர்ஆன்.-11:6
அந்த காகத்திற்கு ரிஸ்க் கொடுத்த அல்லாஹ்,
அதை வைத்து மனிதகுலத்திற்கு “நாகரிகம்” கற்றுக்கொடுதான்.
இறுதி வரி:
காகம் = அல்லாஹ்வின் பேனா.
அதை வைத்து அல்லாஹ் மனிதனுக்கு “கண்ணியம்” என்ற எழுத்தை எழுதினான்!.
அடுத்து……..
காகம் – வெட்கத்தின் அடையாளம்!
- தமிழ் பழமொழி + அறிவியல்!
“காணாமலே புணரும் காகம்”
Science 2019 – Journal of Ornithology ஆய்வு!:
- Privacy: காகங்கள் இணை சேரும் போது மரத்தின் அடர்ந்த கிளையில், யாரும் பார்க்காத இடத்தில் மட்டுமே இணை சேரும். தரையில் வைத்து சேர்வதில்லை.
- Pair Bonding: காகம் ஒருமுறை ஜோடி சேர்ந்தால் வாழ்நாள் முழுக்க அதே ஜோடிதான். “Divorce” ரொம்ப குறைவு. 95% விசுவாசம்.
- Mate Guarding: ஆண் காகம் பெண் காகம் இணை சேரும் நேரத்தில் சுற்றி நின்று மற்ற காகங்களை விரட்டும். வெட்கத்தை காக்கும்.
- மற்ற பறவைகளுடன் ஒப்பீடு,!
பறவை இணை சேரும் இடம்
கோழி, குருவி பொது இடத்தில், மரத்தில் எங்கும்..
காகம் தனிமை, மறைவு, யாரும் பார்காத இடம்.
ஹிக்மத்: அல்லாஹ் காகத்திற்கு கூட “ஹயா” – வெட்கத்தை கொடுதுள்ளான்.
- குர்ஆனிய தொடர்பு!
அல்லாஹ் காகத்தை வைத்து மனிதனுக்கு இரண்டு பாடம் கற்றுக்கொடுதான்:
- அல் குர் ஆன்.5:31 – அடக்கம்: இறந்தவரை எப்படி மறைப்பது என்று..
- இயற்கை!: உயிரோடு இருப்பவர்கள் எப்படி “மறைவை” காக்க வேண்டும் என்று
இரண்டுக்கும் அடிப்படை ஒன்றே!
“சத்ர்” – மறைத்தல்!
“ஆதமின் மக்களே! உங்கள் மறைவான உறுப்புகளை மறைக்கும் ஆடையை நாம் இறக்கினோம்!” _- — அல் குர்ஆன்
7:26
- அறிவியல் ஆச்சரியம் – 2022.
Current Biology இதழ் சொல்கிறது:
காகத்தின் மூளையில் “Empathy + *Shame Centre.
இருக்கிறது.
ஒரு காகம் தவறு செய்தால் மற்ற காகங்கள் அதை ஒதுக்கி வைக்கும்.
அதனால் தான் தவறான செயலை “மறைத்து” செய்ய பழகிவிட்டது.
நிறைவுரை: நமக்கான பாடம்
காகம் நமக்கு சொல்கிறது:
1.உடலை மறை!: அடக்கத்திலும் சரி, வாழ்கையிலும் சரி..
- உறவை மறை: குடும்பம் என்பது பொது காட்சி பொருள் அல்ல.
- தவறை மறைத்து திருந்து: பகிரங்கமாக பாவம் செய்யாதே!
ஒரு பறவைக்கு இருக்கும் வெட்கம்,
அல்லாஹ்வை நம்பும் மனிதனுக்கு இல்லையென்றால்… யார் கேவலம்?
ஆதாரங்கள்:
திருக்குர்ஆன்: 5:31, 11:6
Animal Behaviour 2020 – Crow Intelligence | Science 2021 – Crow Funeral Behavior.
Journal of Ornithology-2019.
Current biology-2022-Crow social behavior.