நோய்க்கு பின் “நாஹிஹ்” நிலை: நபி (ஸல்) பரிந்துரைத்த பத்தியம்! (Diet Plan!)

எஸ்.ஹலரத் அலி
(+91 99653 61068.)

உம்முல் முன்திர் பின்த் கைஸ் அல்-அன்சாரிய்யா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நோய் நீங்கி நலம் பெற்று வந்த அலி (ரழி) அவர்களுடன் என்னைச் சந்திக்க வந்தார்கள்.

எங்களிடம் தொங்கவிடப்பட்ட பேரீச்சம் பழக் கொத்துகள் இருந்தன. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எழுந்து அவற்றிலிருந்து சாப்பிடத் தொடங்கினார்கள்.

அலி (ரழி) அவர்களும் சாப்பிடுவதற்காக எழுந்தார்கள், ஆனால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அலி (ரழி) அவர்களிடம் மீண்டும் மீண்டும், “நிறுத்துங்கள்! நீங்கள் நலம் பெற்று வருகிறீர்கள்” (நாஹிஹ்) என்று கூறினார்கள். அலி (ரழி) அவர்களும் நிறுத்திவிட்டார்கள்.

அவர்கள் (உம்முல் முன்திர்) கூறினார்கள்: நான் பின்னர் வாற்கோதுமையையும் கீரையையும் (பீட்ரூட் கீரை அல்லது சுவிஸ் சார்ட் போன்ற) தயாரித்து கொண்டு வந்தேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்,

“அலி, இதிலிருந்து கொஞ்சம் எடுத்துக்கொள்ளுங்கள், இது உங்களுக்கு அதிக நன்மை பயக்கும்” என்று கூறினார்கள்.

ஹதீஸ் தரம் : ஹஸன் (அல்-அல்பானீ)

–சுனன் அபூதாவூத் : 3856.

அலி ரழி அவர்கள் நோயில் இருந்து “நாகிஹ் – Naaqih” அதாவது Convalescence – குணமடையும் நிலையில் இருந்தார்கள்.

நபி (ஸல்) அவர்கள் இரண்டு காரியம் செய்தார்கள்:

  1. தடுத்தது: தொங்கிய பேரீச்சை – Tamr/Dawaali.

சாப்பிட வேண்டாம் என்றார்கள்.
காரணம்:

“நீங்கள் இன்னும் குணமடையும் நிலையில் இருக்கிறீர்கள்!”

  1. பரிந்துரைத்தது: வாற்கோதுமை + சில்க்/கீரை – Sha’eer wa Silq. சாப்பிட சொன்னார்கள்.
    காரணம்: “இது உங்களுக்கு அதிக நன்மை பயக்கும்!”

பகுதி- 2

நவீன மருத்துவ அறிவியல் ஆய்வு!:

இது 2026 WHO வின் “Post-Illness Diet Protocol” உடன் 100% ஒத்துபோகிறது.

நபி ﷺ கட்டளை!

1. பேரீச்சை வேண்டாம்

A. High Fiber + High Sugar:

பேரீச்சையில் நார்சத்து 8g மற்றும் சர்கரை 66g உள்ளது. நோயில் இருந்து எழுந்தவர்களுக்கு செரிமான மண்டலம் பலவீனமாக இருக்கும். நார்சத்து வயிற்றுப்போக்கு, வாயுவை தரும்.

B. “Hot” Nature:

யுனானி மற்றும் ஆயுர்வேதப்படி பேரீச்சை “சூடு”. காய்ச்சல், வயிற்றுப்புண் இருந்து எழுந்தவர்களுக்கு அது உடலை மீண்டும் சூடாக்கும்.

  1. வாற்கோதுமை – Sha’eer சாப்பிடு* A. Barley Gruel / Kanji: வாற்கோதுமை கஞ்சி உலகின் முதல் “ORS + Protein Drink”.
    B. Beta-Glucan: இது குடலை ஆற்றும், நோய் எதிர்ப்பை அதிகரிக்கும். ஜப்பானில் “Mugicha” என்று மருத்துவ பானம்.

C. Easy to Digest:
சமைத்த வாற்கோதுமை ஜெல் போல மாறி குடலை பூசும். வயிற்றுப்போக்கு, பலவீனத்திற்கு No.1 உணவு.

  1. கீரை – Silq சாப்பிடு* *

A. Beet Greens / Swiss Chard*: “Silq” என்பது பீட்ரூட் கீரை அல்லது சுவிஸ் சார்ட்.

B. Iron + Folate + Vitamin K*:

இரத்த இழப்பு, பலவீனம் உள்ளவர்களுக்கு இரத்தத்தை ஊற வைக்கும்.

C. Alkaline + Cooling:

உடலின் அமிலத்தன்மையை குறைத்து காய்சல் பின் வரும் வெப்பத்தை தணிக்கும்.

நபி (ஸல்) அவர்களின் மருத்துவ கொள்கை!:

“நோய்க்கு பின் – Low Residue Diet + High Nutrient Diet”

அதாவது: குடலை வேலை வாங்காத, ஆனால் சத்து நிறைந்த உணவு.

பகுதி — 3.

இன்றைய மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள்?

டெங்கு, டைபாய்டு, வயிற்றுப்போக்கு வந்து எழுந்தவர்களுக்கு மருத்துவர்கள் சொல்வது:

  1. தவிர்க்கவும்!: பழங்கள், கடினமான உணவு, அதிக இனிப்பு, அதிக நார்சத்து = பேரீச்சை.
  2. சாப்பிடவும்!: கஞ்சி, கூழ், கீரை சூப், வேகவைத்த காய்கறி = பார்லி + சில்க்.

1400 வருடங்களுக்கு முன்பே நபி (ஸல்) அவர்கள் அதை எழுதி வைத்துவிட்டார்கள்.

பகுதி –4.

இஃஜாஸ் – மூன்று அற்புதங்கள்!

  1. Personalized Medicine:

அலி (ரழி) ஒரு நோயாளி. அவருக்கு மட்டும் தனி Diet. இது இன்றைய “Personalized Nutrition”.

  1. Preventive Medicine:

“நாகிஹ்” நிலையில் தவறான உணவு சாப்பிட்டால் நோய் திரும்ப வரும். அதை தடுத்தார்கள்.

  1. Food as Medicine:

மருந்து தரவில்லை. உணவையே மருந்தாக மாற்றினார்கள்.

நபி (ஸல்) அவர்கள் ஒரு மருத்துவர் மட்டுமல்ல. அவர் “நோயாளியின் மனநிலையை புரிந்த Dietician”.

அலி (ரழி)க்கு பேரீச்சை மீது ஆசை இருந்திருக்கும். ஆனால் நபி (ஸல்) அவர்கள் அன்பாக
“மெஹ் – நிறுத்து!”
என்று சொல்லி, அதை விட சிறந்த “ஷஃபா” உணவை தந்தார்கள்.

பாடம்:

நோய் வந்து எழுந்ததும் அவசரப்படாதீர்கள். மூன்று நாள் பத்தியம் இருங்கள்.

சுன்னா உணவு:

பார்லி கஞ்சி + முருங்கை கீரை சூப்.

நிறைவு!

وَمَاۤ اَرْسَلْنٰكَ اِلَّا رَحْمَةً لِّـلْعٰلَمِيْنَ‏

“வ மா அர்ஸல்னாக இல்லா ரஹ்மதல் லில்’ஆலமீன்!”

(நபியே!) நாம் உம்மை அகிலத்தாருக்கு எல்லாம் ரஹ்மத்தாக – ஓர் அருட் கொடையாகவேயன்றி அனுப்பவில்லை!.

–அல்குர்ஆன் : 21:107.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *