காகம் – இறந்த உறவைஅடக்கம் செய்யவும்….இணைந்த துணையிடம் உறவாடவும் கற்றுக்கொடுத்த முதல் ஆசிரியர்!

எஸ்.ஹலரத் அலி (+91 99653 61068)

  1. குர்ஆனிய ஆயத் – ஆதம் நபியின் மகன் கதை!

“பின்னர் அல்லாஹ் ஒரு காகத்தை அனுப்பினான். அது பூமியை தோண்டி, தன் சகோதரனின் உடலை எப்படி மறைப்பது என அவனுக்கு காட்டியது. அப்போது அவன் கூறினான்: கைசேதமே! இந்த காகத்தை போல் கூட என்னால் ஆக முடியவில்லையே! என் சகோதரனின் உடலை நான் மறைக்க வேண்டுமே!” – -அல் குர்ஆன் 5:31

  1. 4 அற்புதங்கள் + Science:

A. “குராபன்” – காகத்தை ஏன் தேர்ந்தெடுதான்?

  1. அறிவு: _

Animal Cognition 2020_ ஆய்வு – காகத்திற்கு 7 வயது குழந்தையின் IQ உள்ளது. கருவிகளை பயன்படுத்தும். முகத்தை ஞாபகம் வைக்கும்.

  1. அடக்கம்:: காகம் மட்டுமே இறந்த காகத்தை பார்த்தால் “அடக்க சடங்கு” செய்யும். மற்ற பறவைகள் கூடி கத்தும்.
  2. தோண்டும் திறன்:

காகத்தின் அலகு + கால் மண்ணை தோண்டுவதற்கு Perfect Design.

B. முதல் “புதைக்கும் சட்டம்!”

மனிதன் கொலை செய்ய கற்றுக்கொண்டான். ஆனால் புதைக்க தெரியவில்லை.
அல்லாஹ் ஒரு பறவையை வைத்து “மனித கண்ணியம்” என்ற பாடத்தை கற்றுக்கொடுதான்.

பாடம்: உடல் = அமானிதம். அதை மண்ணில் மறைப்பதே மரியாதை.

C. “ஃபஅஸ” – அனுப்பினான்:
அல்லாஹ் அந்த காகத்தை “தற்செயலாக” வரவில்லை. வேண்டுமென்றே அனுப்பினான்..

அதாவது இயற்கையில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வுக்கு பின்னாலும் அல்லாஹ்வின் திட்டம் இருக்கிறது.

D. மனிதனின் வெட்கம்!

கொலை செய்தவன் ஒரு காகத்தை விட தன்னை கேவலமாக உணர்ந்தான்.

`
“நான் இயலாமல் போய்விட்டேனே!”

இது தான் “தவ்பா” வின் ஆரம்பம்.

  1. அறிவியல் புதுமை – 2021 கண்டுபிடிப்பு!
  2. Crow Funeral:: காகம் இறந்தால் 100+ காகம் கூடி 10-15 நிமிடம் கத்தும். பின் ஒவ்வொன்றாக வந்து பார்து விட்டு போகும். இதை “பாதுகாப்பு கற்றல்” என்கிறார்கள்.
  3. Tool Use: காகம் குச்சியை வளைத்து புழுவை எடுக்கும். எதிர்காலத்தை திட்டமிடும்.
  4. மண்ணை மூடுதல்::

காகம் உணவை மறைத்து வைக்கும் போது, மற்ற காகம் பார்கிறதா என மூன்று முறை சுற்றி பார்த்துவிட்டு மறைக்கும். “ஏமாற்றம்” என்ற உணர்வு கூட உண்டு.

Subhanallah!

இந்த அறிவு எல்லாம் கொலைக்கு பின் மனிதனுக்கு தேவைப்பட்டது.

  1. நமக்கான மூன்று பாடம்:
  2. கற்றுக்கொடுப்பவன் அல்லாஹ்!: ஆசிரியர் மனிதனாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஒரு காகம் கூட உஸ்தாத் ஆகலாம்.
  3. தவறு செய்தால் ஒப்புக்கொள்!: “நான் காகத்தை விட கேவலம்” என்று சொன்னதுதான் முதல் படி.
  4. இறந்தவருக்கு மரியாதை!: இஸ்லாத்தில் அடக்கம் கட்டாயம். இதன் ஆரம்பம் ஒரு காகம்.

நிறைவுரை

“பூமியில் உள்ள எந்த உயிரினத்தின் உணவும் அல்லாஹ்வின் பொறுப்பில் உள்ளது” _
-அல் குர்ஆன்.-11:6

அந்த காகத்திற்கு ரிஸ்க் கொடுத்த அல்லாஹ்,
அதை வைத்து மனிதகுலத்திற்கு “நாகரிகம்” கற்றுக்கொடுதான்.

இறுதி வரி:
காகம் = அல்லாஹ்வின் பேனா.
அதை வைத்து அல்லாஹ் மனிதனுக்கு “கண்ணியம்” என்ற எழுத்தை எழுதினான்!.

அடுத்து……..

காகம் – வெட்கத்தின் அடையாளம்!

  1. தமிழ் பழமொழி + அறிவியல்!

“காணாமலே புணரும் காகம்”

Science 2019 – Journal of Ornithology ஆய்வு!:

  1. Privacy: காகங்கள் இணை சேரும் போது மரத்தின் அடர்ந்த கிளையில், யாரும் பார்க்காத இடத்தில் மட்டுமே இணை சேரும். தரையில் வைத்து சேர்வதில்லை.
  2. Pair Bonding: காகம் ஒருமுறை ஜோடி சேர்ந்தால் வாழ்நாள் முழுக்க அதே ஜோடிதான். “Divorce” ரொம்ப குறைவு. 95% விசுவாசம்.
  3. Mate Guarding: ஆண் காகம் பெண் காகம் இணை சேரும் நேரத்தில் சுற்றி நின்று மற்ற காகங்களை விரட்டும். வெட்கத்தை காக்கும்.
  4. மற்ற பறவைகளுடன் ஒப்பீடு,!

பறவை இணை சேரும் இடம்
கோழி, குருவி பொது இடத்தில், மரத்தில் எங்கும்..

காகம் தனிமை, மறைவு, யாரும் பார்காத இடம்.

ஹிக்மத்: அல்லாஹ் காகத்திற்கு கூட “ஹயா” – வெட்கத்தை கொடுதுள்ளான்.

  1. குர்ஆனிய தொடர்பு!

அல்லாஹ் காகத்தை வைத்து மனிதனுக்கு இரண்டு பாடம் கற்றுக்கொடுதான்:

  1. அல் குர் ஆன்.5:31 – அடக்கம்: இறந்தவரை எப்படி மறைப்பது என்று..
  2. இயற்கை!: உயிரோடு இருப்பவர்கள் எப்படி “மறைவை” காக்க வேண்டும் என்று

இரண்டுக்கும் அடிப்படை ஒன்றே!

“சத்ர்” – மறைத்தல்!

“ஆதமின் மக்களே! உங்கள் மறைவான உறுப்புகளை மறைக்கும் ஆடையை நாம் இறக்கினோம்!” _- — அல் குர்ஆன்
7:26

  1. அறிவியல் ஆச்சரியம் – 2022.

Current Biology இதழ் சொல்கிறது:

காகத்தின் மூளையில் “Empathy + *Shame Centre.
இருக்கிறது.
ஒரு காகம் தவறு செய்தால் மற்ற காகங்கள் அதை ஒதுக்கி வைக்கும்.
அதனால் தான் தவறான செயலை “மறைத்து” செய்ய பழகிவிட்டது.

நிறைவுரை: நமக்கான பாடம்

காகம் நமக்கு சொல்கிறது:

1.உடலை மறை!: அடக்கத்திலும் சரி, வாழ்கையிலும் சரி..

  1. உறவை மறை: குடும்பம் என்பது பொது காட்சி பொருள் அல்ல.
  2. தவறை மறைத்து திருந்து: பகிரங்கமாக பாவம் செய்யாதே!

ஒரு பறவைக்கு இருக்கும் வெட்கம்,
அல்லாஹ்வை நம்பும் மனிதனுக்கு இல்லையென்றால்… யார் கேவலம்?

ஆதாரங்கள்:
திருக்குர்ஆன்: 5:31, 11:6
Animal Behaviour 2020 – Crow Intelligence | Science 2021 – Crow Funeral Behavior.
Journal of Ornithology-2019.
Current biology-2022-Crow social behavior.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *