நம்பிக்கையாளர்களே! நீங்கள் (தயங்கிக் கொண்டிருக்க வேண்டாம்) இஸ்லாமில் முற்றிலும் நுழைந்து விடுங்கள். (இதனைத் தடை செய்யும்) ஷைத்தானின் அடிச்சுவடு களைப் பின்பற்றாதீர்கள். நிச்சயமாக அவன் உங்களுக்குப் பகிரங்கமான எதிரியாவான். (2:208)
இவ்வாறு (அவர்களைப் பயமுறுத்திச்) செய்தது ஒரு ஷைத்தான்தான். ஆவன் தன் நண்பர்களைப் பற்றி (அவர்களுக்குப்) பயமுறுத்தினான். ஆகவே, நீங்கள் உண்மை நம்பிக்கையாளர்களாக இருந்தால் அவர்களுக்குப் பயப்பட வேண்டாம்ளூ எனக்கே பயப்படுங்கள். (3:175)
அல்லாஹ்வையன்றி அவர்கள் (தெய்வங் களாக) அழைப்பவைகள் பெண் (பெயருடை யவை)களேயன்றி வேறில்லை. துஷ்ட ஷைத் தானை அன்றி (மற்றெதையும்) அவர்கள் அழைக்கவில்லை (4:117)
(ஷைத்தான்) அவர்களுக்கு வாக்களிக் கின்றான்ளூ அவர்களுக்குப் பொய் நம்பிக்கையும் ஊட்டுகின்றான். எனினும் ஏமாற்றுவதற்கன்றி ஷைத்தான் அவர்களுக்கு வாக்களிப்பதில்லை. (4:120)
இத்தகையவர்கள் செல்லுமிடம் நரகம்தான். ஆவர்கள் அதிலிருந்து தப்ப யாதொரு வழியையும் காணமாட்டார்கள். (4:121)
மதுவாலும் சூதாட்டத்தாலும் உங்களுக்கிடையில் பகைமையையும் பொறாமையையும் உண்டுபண்ணி அல்லாஹ்வின் ஞாபகத்திலிருந்தும், தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்துவிடவுமே நிச்சயமாக ஷைத்தான் விரும்புகிறான். (ஆகவே, அவைகளிலிருந்து நீங்கள் விலகிக் கொள்வீர்களா? (மாட்டீர்களா?) (5:91)
(ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற) கால்நடை களில், சுமை சுமக்கக் கூடியவற்றையும், (சுமை சுமக்க முடியாத) சிறிய கால்நடைகளையும் (அவனே படைத்திருக்கின்றான். ஆகவே) அல்லாஹ் உங்களுக்கு அளித்திருக்கும் இவற்றில் (புசிக்கக்கூடியவற்றை) நீங்கள் புசியுங்கள். (இதில்) ஷைத்தானுடைய அடிச் சுவட்டைப் பின்பற்றாதீர்கள். நிச்சயமாக அவன் உங்களுக்குப் பகிரங்கமான எதிரியாவான். (6:142)
நிச்சயமாக நான் உங்களுக்கு நன்மை யையே கருதுகிறேன் என்று அவ்விருவரிடமும் சத்தியமும் செய்து. (7:21)
அவர்களை மயக்கி (அம்மரத்தின் கனியைப் புசிப்பதற்காக) அதன் பக்கம் அவர் களைச் செல்ல வைத்தான். அவ்விருவரும் அம்மரத்(தின் பழத்)தைச் சுவைக்கவே. அவ்விருவரின் மர்ம உறுப்புகளும் அவர்களுக் குத்தெரிந்தது. அச் சோலையின் இலையைக் கொண்டு தங்களை மூடிக் கொள்ள அவர்கள் முயற்சித்தனர். அது சமயம் இறைவன் அம் மரத்தை விட்டும் நான் உங்களைத் தடுத்திருக்க வில்லையா? நிச்சயமாக ஷைத்தான் உங்களிரு வருக்கும் பகிரங்கமான எதிரி என்றும் நான் உங்களுக்குக் கூறவில்லையா? என்று அவ்விரு வரையும் அழைத்துக் கூறினான். (7:22)
ஆதமுடைய மக்களே! ஷைத்தான் உங்கள் தாய் தந்தையை (அவர்கள் இன்பமுடன் வசித்து வந்த) சோலையிலிருந்து வெளியேற்றி (துன்பத்திற்குள்ளாக்கி)யது போல் உங்களையும் துன்பத்திற்குள்ளாக்கிவிட வேண்டாம். அவர்களுடைய மானத்தை அவர் களுக்குக் காண்பிப்பதற்காக அவன் அவர் களுடைய ஆடையைக் களைத்துவிட்டான். நிச்சயமாக அவனும் அவனுடைய இனத்தாரும் நீங்கள் அவர்களைக் காணமுடியாதவாறு (மறைவாக இருந்து கொண்டு) உங்களை (வழி கெடுக்க சமயம்) பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள். நிச்சயமாக நம்பிக்கை கொள்ளாதவர்களுக்குத்தான் அந்த ஷைத்தான் களை நாம் நண்பர்களாக்கி இருக்கிறோம். (7:27)
(உங்களில்) சிலர் அவன் நேரான வழியில் செலுத்தியிருக்க மற்றோர் மீது வழிகேடே விதிக்கப்பட்டதன் காரணம். நிச்சயமாக அவர்கள் அலலாஹ்வையன்றி ஷைத்தான் களையே தங்கள் தோழர்களாக எடுத்துக் கொண்டதுடன் தாங்கள் நிச்சயமாக நேரான வழியில் இருப்பதாகவும் எண்ணிக் கொண்டது தான். (7:30)
ஷைத்தான் யாதொரு (தவறான) எண்ணத்தை உங்கள் மனதில் ஊசலாடச் செய்து (தகாததொரு காரியத்தைச் செய்யும் படி உங்களை)த் தூண்டினால் உடனே நீங்கள் (உங்களை) காப்பாற்றும்படி அல்லாஹ்விடம் கோருங்கள். நிச்சயமாக அவன் நன்கு செவியுறுபவனும் (அனைத்தையும்) நன்கறிந்த வாகவும் இருக்கின்றான். (7:200)
ஷைத்தான் அவர்களுடைய செயல்களை அவர்களுக்கு அழகாகக் காண்பித்து எம்மனி தராலும் இன்று உங்களை ஜெயிக்க முடியாது: நிச்சயமாக நானும் உங்களுக்கு(ப் பக்க) துணையாக நிற்கிறேன். என்று கூறிக் கொண்டிருந்ததையும் (நபியே!) நீங்கள் நினைத்துப் பாருங்கள். (இவ்;வாறு கூறிக் கொண்டிருந்த) அவன். இரு படைகளும் நேருக்கு நேர் சந்திக்கவே புறங்காட்டி (ஓடி) பின்சென்று நிச்சயமாக நான் உங்களைவிட்டு விலகிக் கொண்டேன். நீங்கள் பார்க்க முடியாத ஒன்றை நான் பார்க்கின்றேன். நிச்சயமாக நான் அல்லாஹ்வுக்குப் பயப்படுகின்றேன். வேதனை செய்வதில் அல்லாஹ் மிகக் கடுமையானவன் என்று கூறினான். (8:48)
(யாகூப் நபி யூஸுபை நோக்கி) என் அருமைக் குழந்தையே! நீ கண்ட கனவை உன் சகோதரர்களிடம் கூறாதே. (அவ்வாறு கூறினால்) அவர்கள் உனக்கு யாதேனும் தீங்கிழைக்கச் சதி செய்வார்கள் ஏனெனில் நிச்சயமாக ஷைத்தான் மனிதனுக்குப் பகிரங்கமான எதிரியாக இருக்கிறான். (சதி செய்யுமாறு அவர்களை அவன் தூண்டக் கூடும்) என்று கூறினார். (12:5)
(இக்குற்றவாளிகளைப் பற்றி தீர்ப்புக் கூறப் பட்டதும் பின்னர், ஷைத்தான் (இவர்களை நோக்கி) நிச்சயமாக அல்லாஹ் (இவ்வேதனைத் தருவதாக) உங்களுக்கு மெய்யாகவே வாக்களித்திருந்தான். (அவ்வாறே கொடுத்தும் விட்டான்) நானும் உங்களுக்கு(ப் பொய்யாக) வாக்களித்தேன். எனினும் நான் உங்களை வஞ்சித்து விட்டேன். நான் உங்களை அழைத்தேன். நீங்கள் என்னைப் பின்பற்றினீர்கள் என்;;பதைத் தவிர உங்களை நான் நிர்ப்பந்;திப் பதற்கு எனக்கு யாதொரு அதிகாரமும் இல்லாமலே இருந்தது. ஆதலால் நீங்கள் என்னை நிந்திக்காதீர்கள். உங்களை நீங்கள் நிந்தித்துக் கொள்ளுங்கள். நான் உங்களுக்கு யாதொரு உதவியும் செய்ய முடியாது. நீங்களும் எனக்கு யாதொரு உதவியும் செய்ய முடியாது. இதற்கு முன்னர் நீங்கள் என்னை (அல்லாஹ்வுக்கு) இணை ஆக்கிக் கொண்டி ருந்ததையும் நிச்சயமாக நான் நிராகரித்து விட்டேன். நிச்சயமாக (உங்களைப் போன்ற) அநியாயக்காரர்களுக்கு மிக்க துன்புறுத்தும் வேதனை உண்டு என்று கூறுவான். (14:22)
(நபியே!) அல்லாஹ்வின் மீது சத்தியமாக! உங்களுக்கு முன்னிருந்த பல வகுப்பார்களுக் கும் நாம் (நம்முடைய) தூதர்களை அனுப்பி வைத்தோம். எனினும், ஷைத்தான் அவர்களுக் கும் அவர்களுடைய (தீய) காரியங்களையே அழகாகக் காண்பித்தான். இன்றைய தினம் இவர்களுக்கும் அவனே நண்பனாக இருக ;கிறான். ஆகவே இவர்களுக்கு மிக்க துன்புறுத் தும் வேதனையுண்டு. (16:63)
மலக்குகளை நோக்கி ஆதமுக்குச் சிரம் பணியுங்கள் என நாம் கூறிய சமயத்தில் இப்லீஸைத் தவிர (மலக்குகள் அனைவரும் அவருக்குச்) சிரம் பணிந்தார்கள். அவனோ நீ மண்ணால் படைத்தவனுக்கு நான் சிரம் பணிவதா? என்று கேட்டான். (17:61)
(பின்னும் இறைவனை நோக்கி!) என்னை விட நீ கௌரவப்படுத்தி இருப்பவர் இவரல்லவா என்பதை நீ கவனித்தாயா? (என்று ஏளனமாக ஆதமைச் சுட்டிக் காண்பித்து) நீ என்னை மறுமை நாள் வரையில் பிற்படுத்தி வைத்தால் வெகு சிலரைத் தவிர இவருடைய சந்ததிகள் அனைவரையும் நான் வழிகெடுத்து (வேரறுத்து) விடுவேன் என்று கூறினான். (17:62)
(அதற்கு இறைவன் இங்கிருந்து) நீ அப்புறப் பட்டு விடு. அவருடைய சந்ததிகளில் உன்னைப் பின்பற்றியவர்களுக்கும் (உனக்கும்) முற்றிலும் தகுதியான கூலி நிச்சயமாக நரகம்தான் என்றும். (17:63)
(அன்றி) நீ உனக்குச் சாத்தியமான அளவு கூச்சல் போட்டு அவர்களைத் தூண்டிவிடு. உன்னுடைய குதிரைப் படைகளையும் காலாட் படைகளையும் அவர்;கள் மீது ஏவி விடு. அவர் களுடைய பொருளிலும் சந்ததியிலும் நீ கூட்டாக இருந்து கொண்டு அவர்களுக்கு (நயத்தையும் பயத்தையும் காட்டி) வாக்களி என்றும் கூறினான். ஆகவே ஷைத்தான் (ஆகிய நீ) அவர்களுக்கு வாக்களிப்பதெல்லாம் ஏமாற்றமே அன்றி வேறில்லை. (17:64)
நிச்சயமாக என் நல்லடியார்கள் மீது உனக்கு எவ்வித அதிகாரமும் இல்லை (என்;றும் கூறினான். ஆகவே அவர்களை) பாதுகாத்துக் கொள்ள உங்கள் இறைவ(னாகிய நா)னே போதுமானவன். (17:65)
(நபியே!) நிராகரிப்பவர்களை (பாவமான காரியங்களைச் செய்யும்படித்) தூண்டிக் கொண்டி ருப்பதற்காகவே ஷைத்தான்களை நாம் (அவர்களிடம்) அனுப்பி வைக்கின்றோம் என்பதை நீங்கள் கவனிக்கவில்லையா? (19:83)
எனினும், ஷைத்தான் அவர்களுக்கு ஊசலாட்டத்தை உண்டுபண்ணி ஆதமே! நிரந்தர வாழ்க்கைக்குரிய மரத்தையும் அழிவில்லாத அரசாங்கத்தையும் நான் உங்களுக்கு அறிவிக்கவா? என்று கூறினான். (20:120)
ஆகவே அவ்விருவரும் (தடுக்கப்பட்ட) அதனைப் புசித்துவிட்டார்கள். உடனே (நிர்வாணமாகி) அவ்விருவரின் மானமும்; வெளியாகவே அச்சோலையின் இலைகளைக் கொண்டு தங்களை மறைத்துக் கொள்ள முற்பட்டார்கள். ஆகவே, ஆதம் (இப்லீஸின் சூழ்ச்சியில் சிக்கித் தவறிழைத்துத்) தன் இறைவனுக்குமாறு செய்து வழி தவறிவிட்டார். (20:121)
பின்னர், (அவர் மன்னிப்புக் கோரவே) அவருடைய இறைவன் அவருடைய குற்றங் களையும் மன்னித்து அவரைத் தேர்ந்தெடுத்து நேரான வழியிலும் செலுத்தினான். (20:122)
அன்றி நீங்கள் இருவரும் இதிலிருந்து வெளியேறி விடுங்கள். உங்க(ளுடைய சந்ததிக)ளில் சிலர் சிலருக்கு எதிரிகளாக ஏற்பட்டு விடுவார்கள். அச்சமயம் நிச்சயமாக என்னுடைய நேர்வழி உங்களிடம் வரும். எவன் என்;னுடைய நேர்வழியைப் பின்பற்றுகிறாரோ அவர் வழி தவறவும் மாட்டார். நஷ்டமடையவும் மாட்டார். (20:123)
எவன் என்னுடைய நல்லுபதேசங்களைப் புறக்கணிக்கின்றானோ அவனுடைய வாழ்க்கை நிச்சயமாக நெருக்கடியானதாகவே இருக்குமளூ; மறுமை நாளிலோ நாம் அவனைக் குருட னாகவே எழுப்புவோம். (20:124)
(இவ்வாறு) ஷைத்தான் உண்டுபண்ணும் தப்பானதை எவர்களுடைய உள்ளங்களில் நோய் இருக்கின்றதோ அல்லது எவர்களுடைய உள்ளங்கள் (கல்லைப் போல்) கடினமாக இருக்கின்றனவோ அவர்களைச் சோதிப்பதற்கு (அல்லாஹ்) ஒரு காரணமாகவும் ஆக்கிவிடுகிறான். அன்றி, நிச்சயமாக (அத்தகைய கடினமான உள்ளங்களை உடைய) அநியாயக்காரர்கள் வெகு தூரமான விரோதத்தில்தான் இருக்கின்றனர். (22:53)
நம்பிக்கையாளர்களே! ஷைத்தானுடைய அடிச்சுவட்டை நீங்கள் பின்பற்றாதீர்கள். (ஏனென்றால்) எவன் ஷைத்தானுடைய அடிச்சுவட்டைப் பின்பற்றிச் செல்கிறானோ அவனை அவன் மானக்கேடான விஷயங்களை யும், பாவமான காரியங்களையும் செய்யும்படி நிச்சயமாகத் தூண்டிக் கொண்டே இருப்பான். அல்லாஹ்வுடைய அருளும், கிருபையும் உங்கள் மீது இல்லாதிருப்பின் உங்களில் ஒருவருமே எக்காலத்திலும் பரிசுத்தவானாக இருக்க முடியாது. எனினும், அல்லாஹ் தான் நாடியவனைப் பரிசுத்தவானாக ஆக்குகிறான். அல்லாஹ் செவியுறுபவனும் (அனைத்தையும்) நன்கறிபவனாகவும் இருக்கின்றான். (24:21)
(நம்பிக்கையாளர்களே!) ஷைத்தான்கள் யார் மீது இறங்குகின்றனர் என்பதை நான் உங்களுக்கு அறிவிக்கவா? (26:221)
பொய் சொல்லும் ஒவ்வொரு பாவியின் மீதும் இறங்குகின்றனர். (26:222)
அவளும் அவளுடைய மக்களும் அல்லா ஹ்வையன்றிச் சூரியனைச் சிரம் பணிந்து வணங்குவதை நான் கண்டேன். அவர்களு டைய இக்காரியத்தை ஷைத்தான் அவர் களுக்கு அழகாகக் காண்பித்து அவர்களை நேரான பாதையிலிருந்து தடுத்து விட்டான். ஆதலால், அவர்கள் நேரான வழியை அடையவில்லை. (27:24)
அன்றி இவ்வாறே ஆது ஸமூது கூட்டத்தின ரையும்(அவர்கள் செய்து கொண்டிருந்த பாவத்தின் காரணமாக) நாம் அழித்துவிட்டோம். (நீங்கள் போக வர உள்ள வழியில்) இருந்த இடங்கள் உங்களுக்கு நன்றாகவே தென்படு கின்றன. இவர்கள் அனைவருக்கும் அவர் களுடைய (பாவச்) செயலையே ஷைத்தான் அழகாகக் காண்பித்து நேரான வழியில் செல்லாது அவர்களைத் தடுத்துக் கொண்டான் அவர்கள் நல்லறிவுடையவர்களாகத்தான் இருந்தார்கள் (ஷைத்தானுடைய வலையில் சிக்கி இக்கதிக்கு ஆளானார்கள்) (29:38)
அவர்களை நோக்கி அல்லாஹ் இறக்கிய (அல்குர்ஆன்)னைப் பின்பற்றுங்கள் எனக் கூறினால், அதற்கு அவர்கள் அன்று, எங்கள் மூதாதைகள் எதன்மீது இருக்க நாங்கள் கண்டோமோ அதனையே பின்பற்றுவோம் என்று கூறுகின்றனர். (என்னே!) அவர்கள் மூதாதை களை ஷைத்தான் நரக வேதனையின் பக்கம் அழைத்து (அவர்களும் சென்று) இருந்தாலுமா? (இவர்கள் அவர்களைப் பின்பற்றிச் செல்வார்கள்!) (31:21) நிச்சயமாக (அவர்கள் தன்னைப் பின்பற்று வார்களென்று! இப்லீஸ் எண்ணிய எண்ணத்தை உண்மை என்றே அவன் கண்டுகொண்டான். ஆகவே நம்பிக்கை கொண்ட சிலரைத் தவிர (மற்ற) அவர்கள் அனைவரும் அவனையே பின்பற்றினார்கள். (34:20)
நிச்சயமாக ஷைத்தான் உங்களுக்கு எதிரியாக இருக்கின்றான்;. ஆகவே அவனை நீங்களும் எதிரியாகவே கருதுங்கள். அவன் (தனக்கு வழிப்பட்ட) தன் கூட்டத்தாரை அழைப்பதெல்லாம் அவர்கள் நரகவாசிகளாகி விடுவதற்காகவே (35:6)
எவர்கள் நிராகரிக்கின்றார்களோ அவர்க ளுக்குக் கடினமான வேதனை உண்டு. எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்கி றார்களோ அவர்களுக்கு மன்னிப்பும் உண்டு. பெரிய கூலியும் உண்டு. (35:7)
எவனுக்குத் தீய காரியங்கள் அழகாகக் காண்பிக்கப்பட்டு அவனும் அதனை அழகாகக் காண்கிறானோ அவனும் (எவன் தீய காரியங் களைத் தீயனவாகவே கண்டு அதிலிருந்து விலகிக் கொள்கின்றானோ அவனும் சமமாவா ர்களா? ஒருபோதும் ஆகமாட்டார்கள்) நிச்சயமாக அல்லாஹ் தான் விரும்பியவர் களைத் தவறான வழியில் விட்டுவிடுகிறான். தான் விரும்பியவர்களை நேரான வழியில் செலுத்துகிறான். ஆகவே, (நபியே!) அவர்களுக் காக உம் உயிரையே மாய்த்துக் கொள்ளும் அளவுக்கு நீர்; கவலைப்படாதீர்;. நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவைகளை நன்கறிந்தவனாக இருக்கிறான். (35:8)
ஆதமுடைய சந்ததிகளே! நீங்கள் ஷைத்தானை வணங்கக் கூடாது என்றும் நிச்சயமாக அவன் உங்களுக:;குப் பகிரங்கமான எதிரி என்றும் நான் உங்களிடம் உறுதிமொழி வாங்கவில்லையா? (36:60)
(நபியே!) ஷைத்தானுடைய யாதொரு ஊசலாட்டம் (தீய காரியங்களைச் செய்யும்படி) உங்களைத் தூண்டும் சமயத்தில் (உங்களை அதிலிருந்து) பாதுகாத்துக் கொள்ளும்படி அல்லாஹ்விடத்தில் நீங்கள் கோருவீராக! நிச்சயமாக அவன் (அனைத்தையும்) செவியுறு பவனும் நன்கறிபவனாகவும் இருக்கின்றான். (ஆதலால் அவன் உங்களை பாதுகாத்துக் கொள்வான்) (41:36)
எவன் ரஹ்மானுடைய நல்லுபதேசத்தி லிருந்து கண்ணை மூடிக் கொள்கிறானோ? அவனுக்கு நாம் ஒரு ஷைத்தானை (நன்;பணாக) சாட்டி விடுவோம். அவன் அவனுக்கு இணைபிரியாத தோழனாகி விடுகிறான். (43:36)
உங்களை ஷைத்தான் தடுத்துக் கெடுத்து விட வேண்டாம். நிச்சயமாக அவன் உங்களுக் குப் பகிரங்கமான எதிரியாக இருக்கின்றான். (43:62)
நிச்சயமாக எவர்களுக்கு நேரான வழி இன்னதென்று தெளிவானதன் பின்னரும் அவர்கள் (அதன்மீது செல்லாது) தங்கள் பின்புறமே திரும்பிச் சென்றுவிட்டார்களோ, அவர்களை ஷைத்தான் மயக்கிவிட்டான். அன்றி, அவர்களுடைய தப்பெண்ணங்களையும் விரிவாக்கி, அவர்களுக்கு அவற்றை அழகாக்கி யும் விட்டான். (47:25)
ஷைத்தான் இவர்களை ஜெயித்து அல்லாஹ்வைப் பற்றிய எண்ணத்தையே இவர்களுக்கு மறக்கடித்துவிட்டான். இவர்கள் தாம் ஷைத்தானுடைய கூட்டத்தினர். ஷைத்தானுடைய கூட்டத்தினர் நிச்சயமாக நஷ்டமடைந்தவர்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள். (58:19)
நிச்சயமாக, நாம் நூஹை அவருடைய மக்களிடம் (நம்முடைய) தூதராக அனுப்பிவைத்து, (அவரை நோக்கி நீங்கள் உங்களுடைய மக்களுக்குத் துன்புறுத்தும் வேதனை வருவதற்கு முன்னதாகவே அவர்களுக்கு அதனைப் பற்றி அச்சமூட்டி எச்சரிக்கை செய்யுங்கள் என்று கட்டளையிட்டோம். (71:1)
(அவரும் அவ்வாறே அவர்களை நோக்கி என்னுடைய மக்களே! நுpச்சயமாக நான் உங்களுக்குப் பகிரஙக்மாகவே அச்சமூட்டி எச்சரிக்கை செய்கின்றேன் என்றும், (71:2)
அல்லாஹ் ஒருவனையே நீங்கள் வணங்குங்கள் அவனுக்கே நீங்கள் பயப்படுங்கள். எனக்கு நீங்கள் கட்டுப்பட்டு நடங்கள் என்றும், (அவ்வாறு நீங்கள் நடந்தால், அல்லாஹ்) உங்களுடைய குற்றங்களை மன்னித்து, குறிப்பிட்ட காலம் வரையில் உங்களை (அமைதி யாக வாழ) விட்டுவைப்பான். நுpச்சயமாக (வேதனைக்காகக் குறிப்பிடப்பட்ட) அல்லாஹ்வுடைய தவணை வரும் சமயத்தில், அது ஒரு சிறிதும் பிந்தாது என்றும் (இதனை) நீங்கள் உறுதியாக நம்ப வேண்டாமா? என்றும் கூறினார். (71:3-4)
{ 2 comments… read them below or add one }
allah akbar
Assalamu alaikum bro I need to do download but how to do