Post image for விரைவாக விரியும் விண்வெளி பிரபஞ்சம்

விரைவாக விரியும் விண்வெளி பிரபஞ்சம்

in அறிவியல்

(THE UNIVERSE IS EXPANDING FASTER)

 எஸ்.ஹலரத் அலி – திருச்சி-7

 

நமது பிரபஞ்ச விண்வெளி விரிந்து சென்று கொண்டிருக்கிறது,எப்படியென்றால் ஒரு பலூனை ஊதினால் அது எல்லாப்புறமும் விரிந்து உப்புவதுபோல் விண்வெளிப் பெருவெளி விரிந்து கொண்டிருக்கிறது.இந்த பேருண்மையை அல்லாஹ் அல் குர்ஆனில் அன்றே கூறினாலும்,அறிவியல் ஆய்வுகள் தற்போதுதான் இதை மெய்பித்து வருகின்றன.

  “ மேலும் நாம் வானத்தை நம் சக்திகளைக் கொண்டு அமைத்தோம்; நிச்சயமாக நாம் விரிவாற்றலுடையராவோம்.     அல் குர்ஆன்.51:47.

  பெரு வெடிப்பு (Big Bang) கொள்கையின்படி விரிய ஆரம்பித்த பிரபஞ்சம் இன்றுவரை விரிந்து கொண்டேயிருக்கிறது.இவ்வுண்மையை முதலில் ரஷியா அறிஞர் அலெக்ஸ்சாண்டர் பிரைட்மன் என்பவரும்,பெல்ஜியம் நாட்டு அறிஞர் ஜார்ஜியஸ் லமைட்ரே என்பவரும் அறிவித்தனர்.இதை இன்னும் அதிக சான்றுகளுடன்,அமெரிக்கா ஆய்வாளர் எட்வின் ஹப்பிள், நவீன தொலைநோக்கி மூலம் ஆய்வு செய்து 1929 ல் இவ்வுண்மையை வெளியிட்டார்.

  ஆனால் கடந்த வாரம் ( June,2-2016) வெளியிடப்பட்ட அமெரிக்கா ஜான் ஹாப்கின் பல்கலைகழக தொலைநோக்கி அறிவியல் (Space Telescope Science Institute and Johns Hopkins University in Baltimore) ஆய்வின்படி,பிரபஞ்சம் விரியும் வேகம்,முன்பு கணிதத்தை விட 5% ல் இருந்து 9% அதிக வேகத்தில் விரைவதாக, இதன் ஆய்வுத் தலைவர்.ஆடம் ரைஸ் அறிவித்துள்ளார்.இவர் கடந்த 2011 ம் ஆண்டு இயற்பியல் துறையில்,பிரபஞ்சம் விரியும் வேகத்தின் முடுக்கத்தை ( Universe”s expansion  is accelerating)கண்டுபிடித்தமைக்காக நோபல்பரிசு பரிசு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

  இந்த வியப்பூட்டும் கண்டுபிடிப்பின் மூலம், இப்பிரபஞ்ச விண்வெளியை 95 % கட்டுப்படுத்தி ஆட்சி செய்யும்கருஞ்சக்தி,(Dark energy),கரும்பிண்டம்,(Darkmatter),கருங்கதிர்கள்( Dark radiation), பற்றிய உண்மைகளை புரிந்து கொள்ள உதவும் என்று கூறியுள்ளார்.

http://phys.org/news/2016-06-hubble-universe-faster.html

  உப்பி விரிந்து, விரையும் பிரபஞ்சத்தில் கருஞ்சக்தியின் விளைவுகள்!

கருஞ்சக்தி (Dark energy) என்பது நமது பிரபஞ்சம்விரிவடைவதற்கு காரணமாகச் சொல்லப்படும் ஒரு கருதுகோள் அளவிலான ஆற்றல் ஆகும்.பெருவெடிப்புக் கொள்கையின் படி நமது பிரபஞ்சம் தோன்றிய நாளிலிருந்து விரிவடைந்து கொண்டே போகிறது. பிரபஞ்சவியலின் திட்டவட்ட வடிவமைப்பின்படி பார்த்தால் நம் பிரபஞ்சத்தின் 74 விழுக்காடு கருஞ்சக்தியே உள்ளது. ஒளியின் திசைவேகத்தை விட அதிகமான திசைவேகத்தை எந்த ஒரு பொருளும் அடைய முடியாது என ஐன்ஸ்டீன் கருதினார். ஆனால் கருஞ்சக்தி அதிகரிக்க அதிகரிக்க காலம் இடப் பரிமாணங்களில் மாற்றம் ஏற்பட்டு ஒரு பொருள் ஒளியின் திசைவேகத்திற்குஅதிகமான திசைவேகத்தை அடைய முடியும் என்று நம்பப்படுகிறது.

பிரபஞ்சத்தின் தோற்றம் பற்றிக் கருதும் போது வெகு சமீபத்திலேயே அதாவது 1998 ஆம் ஆண்டே கரும் சக்தி ( Black Energy) எனும் மறைவான விசை பிரபஞ்சத்தை ஆக்கிரமித்திருக்கிறது என்ற ஊகம் உறுதிப் பட்டது. அதுவரை அதன் இருப்பை அறியாது வானியல் வெறும் குருடாகவே இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  கரும் சக்தி குறித்து இரு வரிகளில் சுருக்கமாக சொல்வதானால் பெருவெடிப்புடன் (Big bang) தோன்றிய காலத்தை வழி நடத்தும் விண் வெளியில் மறைந்துள்ள விலக்கு விசை எனலாம். 

பிரபஞ்சத்தில் கருஞ்சக்தி, கரும்பிண்டம், கருந்துளை ஆகிய புதிர்கள் இருப்பது கண்ணுக்கு நேராகத் தெரியாத போதும் கருவிகளின் மூலமே அறியப் பட்டுள்ளன. விலக்கு விசையான கருஞ்சக்தி காலாக்ஸி ஒளிமந்தைகளைத் துரிதமாக விரைவாக்கிப் பிரிப்பது எதற்காகவென்றால், வெறும் ஈர்ப்பு விசை மட்டும் இருந்திருந்தால் காலாக்ஸிகள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொள்ள வாய்ப்புள்ளது. அந்த முறையில் காலாக்ஸிகளை மோத விடாமல் விலக்கு விசை ஈர்ப்பு விசைக்கு எதிராகப் பிரிக்கிறது.

 இதைத்தான் அல்லாஹ்,

நிச்சயமாக,வானங்களும் பூமியும் அவை இரண்டும் விலகிவிடாதவாறு நிச்சயமாக அல்லாஹ்வே தடுத்துக் கொண்டிருகின்றான்; அவை இரண்டும் விலகுமாயின், அதற்குப் பிறகு வேறெவரும் அவ்விரண்டையும் தடுத்து நிறுத்த முடியாது.நிச்சயமாக அவன் பொறுமையுடையவன்; மிக மன்னிப்பவன்.

 அல் குர்ஆன்.35:41.   

 பிரபஞ்சத்தில் கருஞ்சக்தியே 74% ஆகவும் கரும்பிண்டம்எனும் கரும்பொருள் 22% ஆகவும் அமைந்திருப்பது இன்னும் புதிராக உள்ளது! பிரபஞ்சத்தில் இயற்கையாகக் கருஞ்சக்தி கரும்பிண்டத்தை விட சுமார் மூன்று மடங்கிருப்பது காரணத்தோடுதான்! அப்போதுதான் சுழலும் காலாக்ஸி ஒளிமந்தைகளுக்கு அகிலத்தில் நகர்ந்து பயணம் செய்ய விலக்கு விசை கிடைக்கிறது!வெறும் ஈர்ப்புச் சக்தி மட்டும் இருந்திருந்தால் பிரபஞ்சத்தில் நகர்ச்சி இல்லாது முடக்கமே நிலவி கருஞ்சக்தி, கரும்பிண்டம் ஆகிய இரண்டில் கருஞ்சக்தியே மிக்கப் புதிராக நிலவி இருக்கும்.
content-of-the-universe.jpg?w=540

  பிரபஞ்சம் உப்பி விரிவதில் கரும்பிண்டமும், கருஞ்சக்தியும் வெவ்வேறு கடமைகளைச் செய்து வருகின்றன. கரும்பிண்டம் பெரும்பான்மைக் கவர்ச்சி விசையாகப் பயன்பட்டு பிரபஞ்ச விரிவிக்கு ஓர் உன்னதத் “தடைக் கருவியாக” (Brake) நிலவி வருகிறது ! அதே சமயத்தில் கருஞ்சக்தியானது பிரபஞ்ச காலாக்ஸி ஒளிமந்தைகளை நகர்த்திச் செல்லும் உந்து விசையாக(Gas Pedal or Accelerator) இயங்கி வருகிறது ! பிரபஞ்ச வாகனத்தை இயக்க உந்து விசையும் தேவை ! தடை விசையும் தேவை !

அல்லாஹ்வின் சக்தியாகிய கருஞ்சக்தி, விரியும் வானத்தை உயர்த்தி,பிரபஞ்ச நட்சத்திரம்,மற்றும் கோள்கள் ஒன்றோடு ஒன்று மோதிவிடாமல் அனைத்துக்கும் அளவான இடைவெளியுடன் சமநிலையை பேணுகிறது.இதை அல்லாஹ் அழகாக கூறுகிறான்.

  “ மேலும்.வானம் – அவனே அதை உயர்த்தித் தராசையும் ஏற்படுத்தினான்.”  

​ – அல் குர்ஆன். 55:7

பிரபஞ்ச முடுக்கம் என்பது நமது பிரபஞ்சம் விரிவடையும் வேகம் அதிகரித்துக் கொண்டே இருக்கும் நிகழ்வைக் குறிக்கிறது. பிரபஞ்சம் விரிவடைய விரிவடைய கரும்பொருளின் (Dark matter) செறிவு குறைந்து கருஞ்சக்தியின் (Dark energy) அளவு அதிகரிக்கும். குறிப்பாக இப்பிரபஞ்சத்தின் கனஅளவு இருமடங்காகும் போது கரும்பொருளின் அளவு பாதியாகிறது. ஆனால் கருஞ்சக்தியின் அளவு மாறாது.

இன்று கண்ணுக்குத்தெரியாத கருஞ்சக்தியை,விண்வெளி ஆய்வாளர்கள் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.இந்த கருஞ்சக்திதான் விண்வெளியை விரிக்கிறது.விண்ணை விரிக்கும் ஆற்றலுள்ள கருஞ்சக்தியைப்பற்றி அல்லாஹ் கூறுகிறான்.

“ மேலும் நாம் வானத்தை நம் சக்திகளைக் கொண்டு அமைத்தோம்; நிச்சயமாக நாம் விரிவாற்றலுடையராவோம்.     – அல் குர்ஆன்.51:47.

  வல்ல அல்லாஹ்வின் சக்திகளே இம்மாபெரும் பிரபஞ்சத்தை வழிநடத்துகின்றன.

  வழிகாட்டும் நட்சத்திரங்கள். ( Standard Candles- Cepheid Stars. & Type La Supernova)

விரியும் பிரபஞ்சத்தின் வேகத்தை அளப்பதற்கு இரண்டு விதமான வழிமுறைகளை ஆய்வாளர்கள் பயன்படுத்துகிறார்கள். ( Standard Candles)  நமது பால்வெளி பிரபஞ்சத்திற்கு (Milky way Galaxy) அருகில் உள்ள சுமார் 19 கலாக்சிகளைச் சேர்ந்த 2400 (Cepheid Stars) நட்சத்திரங்களின் ஒளியளவை கணக்கிட்டும்,இதற்கும் அப்பால் நீண்ட நெடுந்தொலைவில் உள்ள 300 நட்சத்திரக்கூட்டம் வெடித்துக் சிதறும் சூப்பர் நோவா ( Type La Supernova)ஒளியளவை கணக்கிட்டும் விரியும் தூரத்தையும்,வேகத்தையும் கணிக்கிறார்கள்.

நட்சத்திரங்களில் “வெண் குள்ளன்” (White Dwarf) என்ற ஒருவகை உண்டு.இவை நமது சூரியன் அளவு அதிக பொருண்மையுடன்,ஆனால் அளவில் பூமியளவில் சிறிதாக இருக்கும்,அடர்த்தி மிகுந்தவை.அதன் உள்ளிருக்கும் எரி ஆற்றல் தீர்ந்தவுடன் இறுதியில் வெடித்துக் சிதறி விடும்.அப்படி வெடித்துக் சித்தும் நிகழ்ச்சிக்கு சூப்பர் நோவா என்று பெயர். ( Type La Supernova) .இவை வெடித்துச் சிதறும்போது மிகப் பிரமாண்ட ஒளியை வெளிப்படுத்தும்.

இவ்வகை சூப்பர்நோவாக்கள் எங்கேயுள்ளன என்று ஹப்பில் தொலைநோக்கி மூலமாக ஆய்வுசெய்தனர்.இவை பூமியிலிருந்து எவ்வளவு தூரத்தில் உள்ளன;நம்மை விட்டு எவ்வளவு வேகத்தில் விலகிக்கொண்டிருக்கின்றன என்பதையெல்லாம் கணக்கிட்டனர்.

பின்னர் மற்றொரு முறையில் இதை சரிகாண, அருகில் இருக்கும் இரண்டு காலக்ஸிகள் விரிவடையும் வேகத்தை நிர்ணயித்தால்,இரண்டுக்கும் உள்ள வித்தியாசமும்,இரண்டு விரிவாக்கத்திற்கும்இடைப்பட்ட கால வித்தியாசமும் சேர்ந்து,பிரபஞ்சப் பெருவெளி விரிவடைவதன் முடுக்க வேகத்தைக் கண்டுபிடித்தனர்.

 சூப்பர்நோவாக்களிலிருந்து வந்த ஒளி வீரியம் எதிர்ப்பார்த்ததை விடக் குறைவாக இருந்தது.அதாவது,அளப்பதற்கு முன்னரே சூப்பர்நோவா அங்கிருந்து மிகவிரைவில் எதிர்த்திசையில் ஓடிக்கொண்டிருக்கிறது என்பது புலனானது.அப்படியென்றால் பிரபஞ்சப்பெருவெளியின் விரிவடையும் வேகம் அதிகரித்துக்கொண்டிருக்கிறது என்பது புலப்பட்டது. அதாவது முன்பு விரிவடைந்த வேகத்தை விட தற்போது 5 %  முதல் 9 % வரை விரிவடையும் வேகம் அதிகரித்துள்ளது.

http://www.livescience.com/54975-universe-expanding-faster-than-thought-hubble.html#sthash.7aAXHWcM.dpuf

சூப்பர்நோவா நட்சத்திரக்கூட்டமும், கலாக்ஸி நட்சத்திரக்கூட்டமும் விண் ஆய்வாளர்களுக்கு வழிகாட்டும் ஒளிவிளக்குகளாக இருக்கின்றன.

பூமியில் உள்ள பிரயாணிகளுக்கு வழிகாட்டவும்,பிரபஞ்சத்தை ஆராய்ந்து,அது விரைந்து செல்லும் தூரத்தையும்,வேகத்தையும் கணக்கிடும் ஆய்வாளர்களுக்கு, விண்வெளி வழிகாட்டியாகவும் நட்சத்திரத்தை அல்லாஹ் அமைத்துள்ளான்.

“ (வழிகாட்டும்) அடையாளங்களையும்,(வழிகாட்டுவதற்காக அவன் அமைத்துள்ளான்);நட்சத்திரங்களைக்கொண்டும் அவர்கள் வழிகளை அறிந்து கொள்கிறார்கள்.”       அல் குர்ஆன்.16:16.

{ 2 comments… read them below or add one }

farook July 29, 2016 at 8:39 pm

masha allah / great

Reply

venkatraman raman September 17, 2016 at 3:18 pm

thanks

Reply

Leave a Comment

Previous post:

Next post: