வானத்திலிருந்து வரும் மரணம். (DEATH FROM THE SKIES)

Post image for வானத்திலிருந்து வரும் மரணம். (DEATH FROM THE  SKIES)

in அறிவியல்

எஸ்.ஹலரத் அலி-திருச்சி-7

அல்லாஹ் படைத்த பூமியானது மனிதர்களுக்கு அமைதி அளிக்கும் தொட்டிலாக ஆடி வருகிறது. ஆயினும் அவ்வப்போது புயல், மழை, வெள்ளம், பூகம்பம், சுனாமி, போன்ற  இயற்கை பேரிடர்களும் இடையிடையே வந்து உயிர்பலி வாங்கும் சம்பவங்களும் நடக்கத்தான் செய்கிறது. இது போன்ற இயற்கை சீற்றங்களுக்கு பெரிதும் காரணமாக இருப்பது மனிதனின் பேராசை கொடுங்கரங்களே!

காட்டை அழித்தும், கடலில் கழிவை கொட்டியும், பெட்ரோலிய, நிலக்கரி புகையினை வெளியிட்டு காற்றை மாசுபடுத்தியும் இரசாயன உரங்களை இட்டு, மண்ணையும், நீரையும் மனிதன் விஷமாக்கிவிட்டான். இயற்கையின் சம நிலையினை குலைத்ததன் காரணமாக அழிவுகள் அவனை நோக்கி அடுக்கடுக்காக வந்து கொண்டிருக்கின்றன. அல்லாஹ் மனிதர்களுக்கு அணுவளவும் அநியாயம் செய்வதில்லை.மனிதன் தன் கைகளைக்கொண்டே தனக்கு கேடு செய்து கொள்கிறான்.

மனிதர்களில் கைகள் தேடிக்கொண்ட (தீச் செயல்களின்) காரணத்தால் கடலிலும் தரையிலும் (நாசமும்) குழப்பமும் தோன்றின; (தீமைகளிலிருந்து) அவர்கள் திரும்பி விடும் பொருட்டு அவர்கள் செய்தார்களே (தீவினைகள்) அவற்றில் சிலவற்றை (இவ்வுலகிலும்) அவர்கள் சுவைக்கும்படி அவன் செய்கிறான்.   அல் குர்ஆன்.30:41.

 நிச்சயமாக அல்லாஹ் மனிதர்களுக்கு எவ்வித அநியாயமும் செய்வதில்லை- எனினும் மனிதர்கள் தமக்குத்தாமே அநியாயம் செய்து கொள்கிறார்கள்.   அல் குர்ஆன்.10:44.

 

இருபதாம் நூற்றாண்டில் வாழும் மனிதர்கள், இதுவரை சந்தித்த தீமைகள் அனைத்தும் இப்பூமியில் உருவானது. ஆனால் இனி இவர்கள் சந்திக்கப் போகும் தீமைகள் வானில் இருந்து இறங்கக்கூடியவை என்று, அறிவியல் ஆய்வாளர்கள் எச்சரிக்கை செய்துள்ளார்கள்.

 

Death by Asteroid: The Most Likely Ways for a Space Rock to Kill You

By  Mike Wall, Space.com Senior Writer  |   April 20, 2017 11:30am ET   Space.com |

The asteroid 2011 AG5 will pass near to Earth in 2040, with a one in 625 chance of hitting our planet, according to scientistsநம் தலைக்கு மேல் விண்வெளியில் சுழன்று மிதக்கும் கோடிக்கணக்கான குறுங்கோள் (Astroids) விண்கற்கள், எரி கற்கள் (Meteors), வால் நட்சத்திரங்கள், (Comets) போன்றவை எந்த நிமிடமும் அவை பூமியின் சுற்றுப்பாதையில் நுழைந்து நம்மை தாக்கக்கூடும் என்று அறிவியல் உலகம் அபாயச் சங்கு ஊதுகிறது. விண்ணிலிருந்து ஒரு கல் பூமியை தாக்கினால் எது மாதிரியான விளைவுகள் ஏற்படும் என்பதை கணினி மாடல் மூலம்  அறிவியல் ஆய்வாளர்கள் வெளியுட்டுள்ளனர்.

இங்கிலாந்து சவுத்தாம்டன் பல்கலைக்கழக மூத்த ஆய்வாளர் கிளமென்ஸ் ரம்ஸ் (Clemens Rumpf, a senior research assistant at the University of Southampton in the United Kingdom) அவர்களின் ஆய்வுக்குழுவின் அறிவிப்பின்படி, ஒரு குறுங்கல் வானிலிருந்து வீழ்ந்தால், அதனால் ஏற்படும் அதிர்ச்சி அலை மற்றும் கொடும் (Powerful shock waves and Violent   காற்றின் தாக்கத்தால் மனித உடலிலுள்ள உறுப்புகள் கிழிந்து சிதறி விடுமளவு கடுமையாக இருக்குமாம்.

பூமியை தாக்க வாய்ப்புள்ளதாக கருதப்படும் சுமார் 50,000 குறுங்கோள்களை ஆய்வாளர்கள் தேர்ந்தெடுத்தார்கள்.இவைகள் முறையே சுமார் 50 அடி முதல் 1300 அடி அகலம் கொண்ட விண் கற்களாகும். இவை பூமியை தாக்கும்போது ஏழு வகையான எதிர் விளைவுகள் உண்டாக்கும்.அவைகள், ( shock waves, wind blasts, heat, flying debris, cratering, seismic shaking and tsunamis) அதிர்ச்சி அலை, காற்றின் வெடிப்பு விசை, வெப்பம், வெடித்து சிதறும் கற்கள், பூமி பிளவு, பூகம்ப அதிர்ச்சி மற்றும் சுனாமி.இதில் எந்த தாக்கத்தால் அதிகமான மக்கள் இறப்பார்கள் என்று கம்ப்யூட்டர் உதவியுடன் ஆய்வு செய்தனர்.

சுமார் 60% மக்கள், விண்கல் தாக்கத்தால் உருவாகும் வெடிப்பு விசை காற்றினாலும், அதிர்ச்சி அலையினாலும் இறந்து விடுவார்களாம். (Wind and shock waves were the most deadly, together accounting for more than 60 percent of all lives lost. (Though these two effects act in concert, wind blasts were far more devastating than shock waves, the study found.)

விண்கல் தாக்குதலால் உருவாகும் கொடும் வெப்பத்தால்  சுமார் 30% மக்கள் இறப்பார்கள். விண்கல் கடலில் விழுந்தால், உருவாகும் சுனாமியாலும்  மக்கள் இறப்பார்கள்.மிகக்குறைவான மக்கள் 0.91% பேர் வெடித்துச் சிதறும் பொருட்களினாலும், 0.17%  பூமி பிளவினாலும், 0.2% மக்கள் பூகம்ப அதிர்ச்சி அலையிலும் இறப்பர்.

Related imageபூமி நோக்கி வரும் விண்கல்லானது கடலில் விழாமல் தரைப்பகுதியை தாக்கினால் ஏற்படும் விபரீதம் பத்து மடங்கு அதிகமாக இருக்கும். மேலும் இந்த ஆய்வின் படி, சுமார் 59 அடி அகலம் கொண்ட  (18 மீட்டர்) ஒரு விண் கல்லின் தாக்கமே அதிக உயிர் சேதத்தை ஏற்படுத்துமாம்.

விண்வெளி ஆய்வாளர்கள், இதுவரை சுமார் 16,000 விண்கற்களை ஆபத்தானது என்று வகைப்படுத்தியுள்ளனர். ஆனாலும் இந்த எண்ணிக்கை மிக சொற்பமானது. உண்மையில் ஆபத்தான  பத்து லட்சத்துக்கு மேற்பட்ட விண்கற்கள் நம் தலைக்கு மேலே உலா வந்து கொண்டுதான் இருக்கின்றன. மனித சமுதாய பேரழிவுக்கு 95% மான விண்கற்கள் மோதல் ஏற்படுவது  சாத்தியமே என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். சுமார் ஒரு கி.மீ அகலம் உள்ள கல்லே நம்மை காலி பண்ண போதுமானது.

ஆய்வாளர்களின் கண்களுக்கு தெரியாத ஆயிரக்கணக்கான கற்கள் விண்ணில் மிதந்து கொண்டுதான் இருக்கின்றன. ஒவ்வொரு 1500 வருட இடைவெளியில், 60 மீட்டர் அகலமுள்ள விண்கல்லும், ஒரு லட்ச ஆண்டு இடைவெளியில், 400   (1,300  feet)  மீட்டர் அகலம உள்ள விண் கல்லும் தாக்குவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.விணகல் தாக்குதலால் உலகம் அழிவதறகான வாய்ப்புகள் மிக மிக குறைவு. ஆனாலும் அப்படி ஒரு சம்பவம் நடந்து விட்டால் கற்பனைக்கெட்டாத அளவு  அழிவு  இருக்கும் என்று ஆய்வாளர் ரம்ஸ் கூறுகிறார்.

 சுமார் 200 மீட்டர் அகலமுள்ள ஒரு விண்கல் இலண்டன் மாநகரத்தில் விழுந்தால் என்ன விளைவு ஏற்படும் என்பதை கம்ப்யூட்டர் உதவியுடன் ஆய்வு  செய்தனர். வானிலிருந்து வரும் கல்லின் வேகம் வினாடிக்கு 20 கி.மீ இருக்குமாம். அதாவது மணிக்கு 72,000கி.மீ. படுபயங்கர வேகம். உடனடியாக 87 லட்சம் மக்கள் கொல்லப்படுவார்கள். மக்களை கொல்வதில் முக்கால்வாசி பங்கு எடுத்துக்கொள்வது உடன் உருவாகும் கடும் காற்றும், அதிர்ச்சி அலையும்தான்.

இந்த அறிவியல் உண்மையை கடந்த மாதம் (March 27 in Meteoritics & Planetary Science.) வெளியிட்டார்கள். விண்கல் வீழ்வதால் உருவாகும் கொடும் காற்று மனிதர்களை  கொன்று விடும் என்ற உண்மையை  அல்லாஹ் 1400  வருடங்களுக்கு முன்பே அல் குர்ஆனில் அல்லாஹ் கூறி, நம்மை ஆச்சரியப்படுத்துகிறான். அல்ஹம்துலில்லாஹ்!

லூத் (அலை) அவர்களின் கூட்டத்தார் ஹராமான ஓரினப்புணர்ச்சியின் காரணமாக,அல்லாஹ் வானிலிருந்து விண்கற்களை மழையாக பொழியச் செய்து அவர்களை அழித்தான். அப்படி விண்கல் வீழ்ந்தபோது உருவான கொடும் காற்றைப் பற்றி அல்லாஹ் கூறுகிறான்.

நான் கல்மாரி  பொழியும் காற்றை  (ஹஸிப் –violent storm)  அவர்கள் மீது ஏவினோம்.     அல் குர்ஆன்.54:34.

நாங்கள்  அவர்கள் மீது  களிமண்ணால் செய்த சுட்ட கற்களை (சிஜ்ஜில்) எறிவதற்காக அனுப்பப்பட்டுள்ளோம்.   அல் குர்ஆன்.51: 33.

இறுதியில் ஒவ்வொருவரையும் அவருடைய பாவத்தின்  காரணமாக நாம் பிடித்தோம்,பிறகு அவர்களில் சிலர் மீது கல்மாரி பொழியும் காற்றை அனுப்பினோம்

.-அல் குர்ஆன்.29:40.

இவ்வாறு ‘சிஜ்ஜில்” எனும் சூடான விண்கல் விழும்போது “ஹஸிப்” என்னும் கொடுங்  காற்று உருவாகி மனிதர்களைக் கொல்லும் என்று அல்லாஹ் கூறுகிறான். இந்த உண்மையை இன்றைய அறிவியல் ஆய்வாளர்களும் கூறுகிறாகள்

Even asteroids that explode before reaching Earth’s surface can generate high-speed wind gusts, shock waves of pressure in the atmosphere and intense heat. Nearly three-quarters of that doomsday scenario’s lethality came from winds and shock waves, planetary scientist Clemens Rumpf and colleagues report online March 27 in Meteoritics & Planetary Science.

இன்றைய  மனிதன் எல்லா அக்கிரமத்தையும், அயோக்கியத்தனத்தையும் அரசியல் ஆட்சியின் பெயரில் செய்து கொண்டு,என்னை எவனும் ஒன்று செய்துவிட முடியாது என்று ஆணவமாகப் பேசுகிறான். ஒழுக்கக்கேடான ஓரினப் புணர்ச்சியை சட்டப்பூர்வமாக்கி சல்லாபித்துக்கொண்டிருக்கின்றான். இந்த அச்சமில்லா மனிதர்களைப்  பார்த்து அல்லாஹ் கூறுகின்றான்….,

வானத்திலும்,பூமியிலும் அவர்களுக்கு முன்னாலுள்ளதையும் அவர்களுக்கு பின்னாலுள்ளதையும் பார்க்கவில்லையா? நாம் நாடினால் அவர்களை பூமியில் சொருகிவிடுவோம்; அல்லது வானத்திலிருந்து அவர்கள் மீது ஒரு துண்டை விழச்செய்து (அவர்களை அழித்து) விடுவோம். (அல்லாஹ்வையே) முன்னோக்கி நிற்கும் ஒவ்வோர் அடியானுக்கும் நிச்சயமாக இதில் ஓர் அத்தாட்சி இருக்கிறது.    அல் குர் ஆன்.34:9.

Image result for Chelyabinsk asteroid in russiaஇதற்கு முன்பு பூமியை விண்கல் தாக்கிய பல சம்பவங்கள் நடந்திருந்தாலும் இந்த நவீன 21 ம் நூற்றாண்டில் இப்படி ஓர் பெரிய சம்பவம் நிகந்ததில்லை. ஆயினும் ஒரு சாம்பிள் போன்ற சம்பவம் கடந்த 2013 ம் வருடம் பிப்ரவரி  15 அன்று ரஷ்யா நாட்டிலுள்ள செல்யாபின்ஸ்க் (Chelyabinsk) நகரில் நடந்தது. சுமார் 19 மீட்டர் விட்டமுடைய ஒரு சிறிய விண்கல் பூமியின் சுற்றுப்பாதையில் நுழைந்து, வானில் 27 மீட்டர் உயரத்தில் வெடித்துச் சிதறியது.

இந்த விண்கல் வெடிப்பினால் ஏற்பட்ட அதிர்ச்சி அலையினால் சுமார் 7200 கட்டிடங்களின் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின.இந்த சிதறல்களால் சுமார் 1500  மக்கள் காயமடைந்தனர்.இந்தக் விண்கல் எப்படி வந்தது,எங்கிருந்து வந்தது என்ற  உண்மையை, நமது நவீன அறிவியல் உலகத்தால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை.

நமக்கு முன்பு வாழ்ந்த, ஆது, ஸமூது, பிர் அவுன் போன்ற சமுதாயத்தவர்கள் செய்த அக்கிரமம் மற்றும் பாவத்தின் காரணமாக அல்லாஹ் அவர்களை அழித்துள்ளான். ஒவ்வொருவரும் வெவ்வேறு முறையில் அழிக்கப்பட்டனர்.அல்லாஹ் கூறுகிறான்.

இறுதியில் ஒவ்வொருவரையும் அவருடைய பாவத்தின் காரணமாக நாம் பிடித்தோம்.பிறகு அவர்களில் சிலர் மீது நாம் கல்மாரி பொழியும் காற்றை அனுப்பினோம்;வேறு சிலரை ஓர் உரத்த முழக்கம் பிடித்துக் கொண்டது; மற்றும் சிலரை பூமியினுள் புதைத்து விட்டோம்; அவர்களில் மேலும் சிலரை மூழ்கடித்து விட்டோம்.  அல் குர்ஆன்.29:40. 

இன்று உலகத்தில் எந்த இடத்திலும் கல்மாரி பொழியலாம் என்று  சொல்லக்கூடிய அளவில், எல்லா நாடுகளிலும் ஆணோடு ஆண்,பெண்ணோடு பெண் திருமணம் செய்யும் கேடுகெட்ட உறவை சட்டப்பூர்வமாக ஆக்கி வைத்துள்ளனர். லூத் (அலை) அவர்களின் சமுதாயத்தை அழித்த எரிகல் காற்று எம்மீதும் இறங்கலாம். அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாக்க வேண்டும்!

 

 

{ 2 comments… read them below or add one }

jabir May 10, 2017 at 6:35 pm

assalamu alaikkum.
Allah, akkaala samuukathudan veseda kobamum illai , nammudan veseda anbum illai.

nabiyin dua muulam thandanai konjam pitpadutha padukirathu.

may Allah forgive us! ameen.

Reply

A.Abdulrajak May 15, 2017 at 6:47 am

வானில் சுற்றி கொண்டு இருக்கும் சில கற்கள் ஐஸ் மலைகளாகவும் உள்ளது . இதனை ஆலங்கட்டி மழை என்பர் . பூமிக்கு வரும் ஆலன் கட்டி மலை , மழையாக பொழிவதால் நெறைய நன்மைகளும் சிலரை தாக்கவும் , பயிர்களை அழிக்கவும் பயன்படுகிறது . பனிக்கட்டி மழை என்பது வேறு .இது பூமியிலேயே தோன்றி பூமியிலே பனிக்கட்டி ஆகி பெய்கிறது .
buhari – 744. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் தக்பீருக்கும் கிராஅத்துக்கும் இடையே சற்று நேரம் மவுனமாக இருப்பார்கள். இறைத்தூதர் அவர்களே! என் தந்தை தாய் தங்களுக்கு அர்ப்பணம். தக்பீருக்கும் கிராஅத்துக்குமிடையே நீங்கள் மவுனமாக இருக்கும் சமயத்தில் என்ன கூறுவீர்கள்? என்று கேட்டேன். ‘இறைவா! கிழக்குக்கும் மேற்குக்குமிடையே நீ ஏற்படுத்திய தூரத்தைப் போல், எனக்கும் தவறுகளுக்குமிடையே நீ தூரத்தை ஏற்படுத்துவாயாக! இறைவா! வெண்மையான ஆடை அழுக்கிலிருந்து தூய்மைப் படுத்தப் படுவது போல் என் தவறுகளைவிட்டும் என்னைத் தூய்மைப் படுத்துவாயாக! தண்ணீராலும் பனிக்கட்டியாலும் ஆலங்கட்டியாலும் என் தவறுகளைக் கழுவுவாயாக! என்று நான் கூறுவேன்’ என்றார்கள்.
Volume :1 Book :10

Reply

Leave a Comment

Previous post:

Next post: