வஹியை மறுப்பதில் TNTJ, YMJ, NTF ஆகிய மூவருக்கும் உள்ள ஒற்றுமை!

in அழிவுப் பாதை

உண்மையை விட்டு பலவித தவறான நிலைப்பாட்டை கொண்டவர்கள்தான் அசத்தியவாதிகள்.சிலர் சத்தியத்தை மறுக்கக்கூடியவர்களாகவும், சிலர் சத்தியத்தோடு அசத்தியத்தை கலக்கக்கூடியவர்களாகவும், மேலும் சத்தியத்திற்கு அசத்தியத்தைக் கொண்டு மாற்றுவிளக்கம் கொடுப்பவர்களாகவும், ஆதாரங்களை முறை தவறி பலவிதமான விளக்கங்களோடு பொருத்தி, மக்களை வழிகெடுக்கும் அசத்தியவாதிகள் மூன்றாம் கலீஃபா உஸ்மான் (ரலி) அவர்களின் கொலைக்கு பிறகே தோன்றிவிட்டார்கள்.

முஸ்லிம் உம்மத்தில் தோன்றிய பல பிரிவுகளின் வரிசையில் முஃதஸிலாக்கள் என்று ஒரு வழிகெட்ட கூட்டம் தோன்றியது. அவர்கள் தங்களுக்குள் முஃதஸிலாக்கள் என்று பெயர் சூட்டிக்கொள்ளவில்லை. மாறாக அவர்கள் ‘அஹ்லுத் தவ்ஹீத் வல் அத்ல்’ என்றே தங்களை அழைத்துக் கொண்டனர்.

இஸ்லாமிய கொள்கையை அகீதாவை ஆய்வு செய்யும் விஷயத்தில், பகுத்தறிவுக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய இவர்களை அடையாளப் படுத்துவதற்காக இவர்களுக்கு முஃதஸிலாக்கள் என்று பெயர் வைத்தது அழைத்தனர் அஹ்லுஸ் சுன்னா ஆலிம்கள். இஸ்லாமிய சமூகத்திலிருந்து சிந்தனை ரீதியில் பிரிந்து சென்றுவிட்டனர் என்று அடையாளப்படுத்தும் விதமாகதான் இந்தப் பெயரைப் பயன்படுத்தினர்.

முஃதஸிலாக்கள் என்ற பெயரில் எந்த அமைப்பும் உலகில் இல்லையென்றாலும் முஃதஸிலாக்களின் சிந்தனையில் குர்ஆன், ஸுன்னாவை அணுகும் வழிகெட்ட இஸ்லாமிய அமைப்புக்கள் இருக்கவே செய்கின்றன. இந்த வரிசையில் குறிப்பாக தமிழகத்தில் பீஜேயின் சிந்தனையில் தோன்றிய முஃதஸிலாக்களின் சித்தாந்தம் தவ்ஹீத் ஜமாஅத் என்ற பெயரில் பிரச்சாரம் செய்யப்பட்டு இப்போது TNTJ, YMJ, NTF என மூன்று உட்பிரிவுகளாக தமிழகத்தில் பரிணாம வளர்ச்சியடைந்துள்ளது.

இந்த TNTJ, YMJ, NTF போன்ற முஃதஸிலாக்களின் மூன்று உட் பிரிவுகளுக்குள், ஒருவர் மற்றொருவரை எவ்வளவு அசிங்கமாக விமர்ச்சித்துக் கொண்டாலும், அல்லது ஒரு சாரார் மற்றொரு சாராரை காஃபிர்கள் என்ற அளவுக்கு வசை பாடிக்கொண்டாலும் இவர்களுக்குள் கொள்கையில் எவ்வித மாற்றுக்கருத்தும் கிடையாது. பிஜே உருவாக்கிய வஹி மறுப்புக் கொள்கைதான் இந்த மூன்று முஃதஸிலாக்களின் உட்பிரிவுகள் உள்ளது.

அல்லாஹுவின் பண்புகளுக்கு தவறான வியாக்கியானம் கொடுப்பதும், அல்லாஹ் குர்ஆனில் குறிப்பிடுகின்ற சூனியத்தை மறுப்பதும், ஸஹீஹான நபிமொழிகளை (வஹியை) மறுப்பதும் இவர்கள் மூன்று பிரிவினர்களுக்குள் உள்ள ஒற்றுமையாகும்.

TNTJ, NTF இவர்கள் தங்களுக்குள் மிகவும் கீழ்த்தரமாக வசை பாடிக்கொண்டாலும், அல்லது ஒருவரையொருவர் காட்டிக்கொடுக்கும் அளவுக்கு சென்றாலும், இவர்கள் ஒன்று சேர்ந்து தங்களுக்குள் ஏற்றுக்கொண்ட வழிகெட்ட கொள்கையை விமர்ச்சித்துக் கொள்ளமாட்டார்கள், அதைவிட்டு பின்வாங்கவும் மாட்டார்கள். காரணம், ததஜ பேச்சாளர்களோ, அல்லது அல்தாஃபியோ பிஜேயிடமிருந்து கற்றுக்கொண்ட வழிகெட்ட கொள்கையை பின் வாங்கினாலோ, அல்லது மீளாய்வு செய்தாலோ அதைவைத்து எதிரி தன் பக்கம் மக்களை வென்றெடுத்துவிடுவான் என்ற அச்சம் இந்த TNTJ, YMJ, NTF ஆகிய மூன்று பிரிவின் நிர்வாகத்திலும் நிறைந்துள்ளது என்பதை அப்பாவித் தொண்டர்கள் விளங்கவேண்டும்.

பக்கீர் முகம்மது அல்தாஃபியிடம், ததஜவிலிருந்து பிரிந்துவந்து நீங்கள் புதிய இயக்கம் துவங்கிவிட்டீர்களே உங்களில் கொள்கையில் மாற்றம் உள்ளதா? குறிப்பாக வஹி (ஸஹீஹான ஹதீஸ்) மறுப்பு கொள்கையில் மாற்றம் ஏதேனும் உள்ளதா என்று கேட்கும் கேள்விக்கு, அதையெல்லாம் மறுபரிசீலனை செய்வோம் என்று சொல்லிக்கொண்டே கடந்துபோகின்றார்.

பக்கீர் முகம்மது அல்தாஃபி தனது எல்லா பணிகளையும் தற்காலிகமாக நிறுத்தி வைத்துவிட்டு வஹி (ஸஹீஹான ஹதீஸ்) மறுப்புக் கொள்கையை விரைவாக மறுபரிசீலனை செய்யவேண்டும். இதேநிலையில் வஹி (ஸஹீஹான ஹதீஸ்) மறுப்பு கொள்கையிலேயே ஒருவன் மரணித்தால் அவனது மறுமை கேள்விக்குறியாக அமையும்.

இவர்கள் கீழ்காணும் ஸஹீஹான ஹதீஸை மறுத்து, மறுமையின் அடையாளங்களில் ஒன்றை மறுப்பவர்கள் ஆவார்கள்.

அபூதர் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:

சூரியன் மறைந்த நேரத்தில் நபி (ஸல்) அவர்கள் என்னிடம், “அது எங்கு செல்கிறது என்று உனக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள். “அல்லாஹ்வும், அவனது தூதருமே அறிவார்கள்” என்று நான் கூறினேன். “அது அர்ஷுக்கு கீழே ஸஜ்தா செய்வதற்காகச் செல்கிறது. அங்கு அது அனுமதி கேட்கிறது. உடனே அதற்கு அனுமதியளிக்கப்படுகிறது. (ஒரு நாள்) அது ஸஜ்தா செய்ய, அந்த ஸஜ்தா ஏற்கப்படாமல் போகவிருக்கிறது. அப்போது அது (வழக்கம் போல்) கிழக்கிலிருந்து உதயமாகுவதற்கு அனுமதி கேட்கும். ஆனால், அனுமதி மறுக்கப்படும். “வந்த வழியே திரும்பி விடு” என்று அதற்கு உத்தரவிடப்படும். அதன்படி அது மேற்கிலிருந்து உதயமாகும்” என்று நபி (ஸல்) கூறினார்கள். இதைத் தான், “சூரியன், தான் நிலை கொள்ளம் ஓர் இடத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. அது பேரறிவாளனான வல்லமை மிக்கவனின் நிர்ணயமாகும்” எனும் இறைவசனம் (36:38) குறிக்கிறது” என்றார்கள். (ஸஹீஹுல் புகாரி: 3199 – 4803), (ஸஹீஹுல் முஸ்லிம் ஹதீஸ்: 250)

வஹியை மறுப்பதில் இவர்களுக்குள் உள்ள ஒற்றுமையை காணொளியில் காண்க.

S.A.Sulthan
15/01/2019
Jeddah

வஹியை மறுப்பதில் TNTJ, YMJ, NTF ஆகிய மூவருக்கும் உள்ள ஒற்றுமை!******************************************உண்மையை விட்டு பலவித தவறான நிலைப்பாட்டை கொண்டவர்கள்தான் அசத்தியவாதிகள்.சிலர் சத்தியத்தை மறுக்கக்கூடியவர்களாகவும், சிலர் சத்தியத்தோடு அசத்தியத்தை கலக்கக்கூடியவர்களாகவும், மேலும் சத்தியத்திற்கு அசத்தியத்தைக் கொண்டு மாற்றுவிளக்கம் கொடுப்பவர்களாகவும், ஆதாரங்களை முறை தவறி பலவிதமான விளக்கங்களோடு பொருத்தி, மக்களை வழிகெடுக்கும் அசத்தியவாதிகள் மூன்றாம் கலீஃபா உஸ்மான் (ரலி) அவர்களின் கொலைக்கு பிறகே தோன்றிவிட்டார்கள்.முஸ்லிம் உம்மத்தில் தோன்றிய பல பிரிவுகளின் வரிசையில் முஃதஸிலாக்கள் என்று ஒரு வழிகெட்ட கூட்டம் தோன்றியது. அவர்கள் தங்களுக்குள் முஃதஸிலாக்கள் என்று பெயர் சூட்டிக்கொள்ளவில்லை. மாறாக அவர்கள் ‘அஹ்லுத் தவ்ஹீத் வல் அத்ல்’ என்றே தங்களை அழைத்துக் கொண்டனர்.இஸ்லாமிய கொள்கையை அகீதாவை ஆய்வு செய்யும் விஷயத்தில், பகுத்தறிவுக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய இவர்களை அடையாளப் படுத்துவதற்காக இவர்களுக்கு முஃதஸிலாக்கள் என்று பெயர் வைத்தது அழைத்தனர் அஹ்லுஸ் சுன்னா ஆலிம்கள். இஸ்லாமிய சமூகத்திலிருந்து சிந்தனை ரீதியில் பிரிந்து சென்றுவிட்டனர் என்று அடையாளப்படுத்தும் விதமாகதான் இந்தப் பெயரைப் பயன்படுத்தினர்.முஃதஸிலாக்கள் என்ற பெயரில் எந்த அமைப்பும் உலகில் இல்லையென்றாலும் முஃதஸிலாக்களின் சிந்தனையில் குர்ஆன், ஸுன்னாவை அணுகும் வழிகெட்ட இஸ்லாமிய அமைப்புக்கள் இருக்கவே செய்கின்றன. இந்த வரிசையில் குறிப்பாக தமிழகத்தில் பீஜேயின் சிந்தனையில் தோன்றிய முஃதஸிலாக்களின் சித்தாந்தம் தவ்ஹீத் ஜமாஅத் என்ற பெயரில் பிரச்சாரம் செய்யப்பட்டு இப்போது TNTJ, YMJ, NTF என மூன்று உட்பிரிவுகளாக தமிழகத்தில் பரிணாம வளர்ச்சியடைந்துள்ளது.இந்த TNTJ, YMJ, NTF போன்ற முஃதஸிலாக்களின் மூன்று உட் பிரிவுகளுக்குள், ஒருவர் மற்றொருவரை எவ்வளவு அசிங்கமாக விமர்ச்சித்துக் கொண்டாலும், அல்லது ஒரு சாரார் மற்றொரு சாராரை காஃபிர்கள் என்ற அளவுக்கு வசை பாடிக்கொண்டாலும் இவர்களுக்குள் கொள்கையில் எவ்வித மாற்றுக்கருத்தும் கிடையாது. பிஜே உருவாக்கிய வஹி மறுப்புக் கொள்கைதான் இந்த மூன்று முஃதஸிலாக்களின் உட்பிரிவுகள் உள்ளது.அல்லாஹுவின் பண்புகளுக்கு தவறான வியாக்கியானம் கொடுப்பதும், அல்லாஹ் குர்ஆனில் குறிப்பிடுகின்ற சூனியத்தை மறுப்பதும், ஸஹீஹான நபிமொழிகளை (வஹியை) மறுப்பதும் இவர்கள் மூன்று பிரிவினர்களுக்குள் உள்ள ஒற்றுமையாகும்.TNTJ, NTF இவர்கள் தங்களுக்குள் மிகவும் கீழ்த்தரமாக வசை பாடிக்கொண்டாலும், அல்லது ஒருவரையொருவர் காட்டிக்கொடுக்கும் அளவுக்கு சென்றாலும், இவர்கள் ஒன்று சேர்ந்து தங்களுக்குள் ஏற்றுக்கொண்ட வழிகெட்ட கொள்கையை விமர்ச்சித்துக் கொள்ளமாட்டார்கள், அதைவிட்டு பின்வாங்கவும் மாட்டார்கள். காரணம், ததஜ பேச்சாளர்களோ, அல்லது அல்தாஃபியோ பிஜேயிடமிருந்து கற்றுக்கொண்ட வழிகெட்ட கொள்கையை பின் வாங்கினாலோ, அல்லது மீளாய்வு செய்தாலோ அதைவைத்து எதிரி தன் பக்கம் மக்களை வென்றெடுத்துவிடுவான் என்ற அச்சம் இந்த TNTJ, YMJ, NTF ஆகிய மூன்று பிரிவின் நிர்வாகத்திலும் நிறைந்துள்ளது என்பதை அப்பாவித் தொண்டர்கள் விளங்கவேண்டும்.பக்கீர் முகம்மது அல்தாஃபியிடம், ததஜவிலிருந்து பிரிந்துவந்து நீங்கள் புதிய இயக்கம் துவங்கிவிட்டீர்களே உங்களில் கொள்கையில் மாற்றம் உள்ளதா? குறிப்பாக வஹி (ஸஹீஹான ஹதீஸ்) மறுப்பு கொள்கையில் மாற்றம் ஏதேனும் உள்ளதா என்று கேட்கும் கேள்விக்கு, அதையெல்லாம் மறுபரிசீலனை செய்வோம் என்று சொல்லிக்கொண்டே கடந்துபோகின்றார்.பக்கீர் முகம்மது அல்தாஃபி தனது எல்லா பணிகளையும் தற்காலிகமாக நிறுத்தி வைத்துவிட்டு வஹி (ஸஹீஹான ஹதீஸ்) மறுப்புக் கொள்கையை விரைவாக மறுபரிசீலனை செய்யவேண்டும். இதேநிலையில் வஹி (ஸஹீஹான ஹதீஸ்) மறுப்பு கொள்கையிலேயே ஒருவன் மரணித்தால் அவனது மறுமை கேள்விக்குறியாக அமையும்.இவர்கள் கீழ்காணும் ஸஹீஹான ஹதீஸை மறுத்து, மறுமையின் அடையாளங்களில் ஒன்றை மறுப்பவர்கள் ஆவார்கள்.அபூதர் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:சூரியன் மறைந்த நேரத்தில் நபி (ஸல்) அவர்கள் என்னிடம், “அது எங்கு செல்கிறது என்று உனக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள். “அல்லாஹ்வும், அவனது தூதருமே அறிவார்கள்” என்று நான் கூறினேன். “அது அர்ஷுக்கு கீழே ஸஜ்தா செய்வதற்காகச் செல்கிறது. அங்கு அது அனுமதி கேட்கிறது. உடனே அதற்கு அனுமதியளிக்கப்படுகிறது. (ஒரு நாள்) அது ஸஜ்தா செய்ய, அந்த ஸஜ்தா ஏற்கப்படாமல் போகவிருக்கிறது. அப்போது அது (வழக்கம் போல்) கிழக்கிலிருந்து உதயமாகுவதற்கு அனுமதி கேட்கும். ஆனால், அனுமதி மறுக்கப்படும். “வந்த வழியே திரும்பி விடு” என்று அதற்கு உத்தரவிடப்படும். அதன்படி அது மேற்கிலிருந்து உதயமாகும்” என்று நபி (ஸல்) கூறினார்கள். இதைத் தான், “சூரியன், தான் நிலை கொள்ளம் ஓர் இடத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. அது பேரறிவாளனான வல்லமை மிக்கவனின் நிர்ணயமாகும்” எனும் இறைவசனம் (36:38) குறிக்கிறது” என்றார்கள். (ஸஹீஹுல் புகாரி: 3199 – 4803), (ஸஹீஹுல் முஸ்லிம் ஹதீஸ்: 250)வஹியை மறுப்பதில் இவர்களுக்குள் உள்ள ஒற்றுமையை காணொளியில் காண்க.—————–S.A.Sulthan,15/01/2019#Jeddah

Posted by Sulthan Seaport on Tuesday, January 15, 2019

Leave a Comment

Previous post:

Next post: