மறுமையில்!…..புதை குழி வெடித்து வெளியேறும் …..வெட்டுக்கிளி மனிதர்கள்.!

Post image for மறுமையில்!…..புதை குழி வெடித்து வெளியேறும் …..வெட்டுக்கிளி மனிதர்கள்.!

in அறிவியல்

மறுமையில்!…..புதை குழி வெடித்து வெளியேறும் …..வெட்டுக்கிளி மனிதர்கள்.!

– எஸ்.ஹலரத் அலி, திருச்சி-7 (+91-9965361068).

அல்லாஹ்வின் படைப்பில் ஆரம்பமும் உண்டு அதன் இறுதி அழிவுமுண்டு. இது அவனது சுன்னா .இந்தமாபெரும் பிரபஞ்சத்தில் உள்ள சூரிய,சந்திர, நட்சத்திர, பூமி மற்றும் அதில் வாழும் உயிரினங்கள் அனைத்தும் ஒரு நாள் அழிக்கப்படும். மனிதனும் அழிக்கப்படுவான். ஆயினும் அவன் இப்பூமியில் செய்த நன்மை தீமைகளுக்கான பலனை அடைவதற்கான தீர்ப்புக் நாளுக்காக மீண்டும் இப்பூமியிருந்தே எழுப்பப்படுவான்.

இறந்து மண்ணோடு மண்ணாகிப் போன மனிதன் மீண்டும் உயிருடன் எழுப்பப்படுவதென்பது இறை விசுவாசிகளுக்குக்கான அடிப்படை நம்பிக்கையாக உள்ளது. ஆயினும் இறை மறுப்பாளர்களுக்கு இது ஒரு மூட நம்பிக்கையாகவே தெரியும். பல்லாயிரம் ஆண்டுகள் இம்மண்ணில் தொடர்ந்து வாழ்ந்து மரித்த மனிதர்கள்… மீண்டும் இம்மண்ணிலேயே உயிர்த்தெழும் சம்பவத்தை பல உதாரணங்கள் மூலம் அல்லாஹ், அறிவார்ந்த முறையில் விவரிக்கின்றான்.


அவன்தான் அவனுடைய அருள் மழைக்கு முன்னர் நற்செய்தியாக குளிர்ந்த காற்றை அனுப்பி வைக்கின்றான். அது கருக்கொண்டு கனத்த மேகங்களைச் சுமந்த பின்னர் அதனை நாம் வரண்டு இறந்த பூமியின் பக்கம் ஓட்டிச் சென்று அதிலிருந்து மழைபெய்யச் செய்கின்றோம். பின்னர் அதைக் கொண்டு எல்லா வகை கனிகளையும் வெளியாக்குகின்றோம். இவ்வாறே மரணித்தவர்களையும் அவர்களின் சமாதிகளிலிருந்து வெளியாக்குவோம். இதனை அறிந்து நீங்கள் நல்லுணர்ச்சி பெறுவீர்களாக! – அல் குர்ஆன்.7:57.

அல்லாஹ்தான் காற்றை அனுப்புகின்றான். அது மேகங்களை ஓட்டுகிறது. பின்னர்  அவைகளை இறந்து பட்டுப்போன பூமியளவில் செலுத்தி, இறந்து போன பூமியை உயிர்ப்பிக்கின்றான். (மரணித்தவர்கள் மறுமையில்) உயிர் பெற்றேழுவதும் இவ்வாறே!
-அல் குர் ஆன்.35:9.

நம் கண்முன்னே காய்ந்து வறண்டு பொட்டலாக இருக்கும் நிலத்தில்…..  உயிர்கள் ஏதேனும் உள்ளதா என்று எவருக்கும் தெரியாத நிலையில்….. ஒரு சிறு மழை அங்கு பொழிந்த பின்பு..  அந்நிலத்திலிருந்து பல பசுமைத் தாவரங்கள் உயிர்பெற்று எழுவதைப் பார்க்கிறோம். இது போன்றே மண்ணில் அடங்கிய மனித உடல்களின் அணுக்கள் மண்ணோடு மண்ணாக மறைந்தே உள்ளன. மழை நீர் பொழிந்து தாவரங்கள் உயிர்பெற்றேழுவது போன்று… மனித உடல் அணுக்கள் ஒன்று சேர்ந்து உயிர் பெற்றெழும்…. என்பது நபி (ஸல்) அவர்கள் விளக்குகிறார்கள்.

( மறுமை நாளில், இறந்தவர்கள் உயிர்பெற்றேழுவதற்காக) அல்லாஹ் வானத்திலிருந்து ஒரு நீரை இறக்குவான். அப்போது (மண்ணறைக்குள் உக்கிப் போயிருக்கும் மனித சடலங்கள்) தாவரங்கள் முளைத்து எழுவது போல் எழுவார்கள். மனிதர்களிலுள்ள உறுப்புகள் அனைத்துமே (மண்ணுக்குள்) உக்கிப் போகாமல் இருப்பதில்லை. ஆனால் ஒரேயோர் எலும்பைத் தவிர! அதுதான் (முதுகுத்தண்டின் வேர்ப்பகுதியில் இருக்கும்) உள்வால் எலும்பின் (COCCYX BONE) (அணுவளவு) நுனியாகும். அதை வைத்தே படைப்பினங்கள் மீண்டும் மறுமை நாளில் உருவாக்கப்படும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். – புஹாரி.4935, முஸ்லிம்.5660.

மறுமை நாளில் மனிதர்கள் எவ்வாறு தாங்கள் அடக்கப்பட்ட, புதை குழியிலிருந்து வெளியேறுவதை, வெட்டுக்கிளி வெளியேறுவது போல்…  என்ற ஓர் உதாரணம் மூலம் அல்லாஹ் விளக்குகின்றான்.

(தாழ்ந்து பணிந்து) கீழ் நோக்கிய பார்வையுடன், அவர்கள் புதை குழியிலிருந்து பரவிச் செல்லும் வெட்டுக்கிளிகளைப்போல் வெளியேறுவார்கள். – அல் குர்ஆன்.54:7.

மறுமை நாளில் உயிர்த்தெழும் மனிதர்கள், தங்கள் உடல் அடங்கிய புதை குழிகளிலிருந்து வெளியேறும் சம்பவத்தை…. வெட்டுக்கிளி எப்படி புதை குழியிலிருந்து வெளியேறுவதோடு அல்லாஹ் ஒப்பிட்டுக் காட்டுகின்றான். இன்று உணவு உற்பத்தி செய்யும் விவசாயிகளை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் காரணிகளில் பிரதானமாக இருப்பது பாலைவன வெட்டுக்கிளிகளின் படைஎடுப்புகளே! ஒரே நாளில் ஒட்டு மொத்த பயிர்களையும் தின்று தீர்க்கும் திறன் கொண்டவை இவ்வெட்டுக்கிளிகள்.

மனிதர்களின் வாழ்வில் இம்மை மறுமை என்ற இரு நிலைகள் உள்ளதைப்போல்… வெட்டுக்கிளிகளின் வாழ்வில் இரு நிலைகள் உள்ளன. சாதாரணமான வெட்டுக்கிளி வாழ்க்கை… ( Solitary Phase Locust) …இதற்கு அடுத்த நிலை உடலின் நிறம்,உருவம் மாற்றமடைந்து கூட்டாக ஒன்று சேர்ந்து வெளியேறும் (Gregarious Phase Locust) நிலை. பொதுவாக மத்திய கிழக்கு நாடுகளின் பாலைவனப் பகுதிகளில் வாழும் வெட்டுக்கிளிகள், நிலத்தை துளைத்து நூற்றுக்கணக்கான முட்டைகளை அக்குழிகளில் இடும்.

இந்த முட்டைகள் குஞ்சுகளாக வளரும் பருவத்தில் ….அப்பகுதியில் மழை பொழிந்து தாவரங்கள் பசுமையாக இருக்கும், அவைகளை உண்டு வளர்ந்த பின்பு அவைகளின் உடலில் ஏற்படும் சில இரசாயன மாற்றத்தால் (The Gregarisation pheromone of Locusts) என்ற நிலைக்கு மாறும்.இப்படி நிறம் மற்றும் உருவம் மாறிய வெட்டுக்கிளிகள், கோடிக்கணக்கில் தம் புதை குழியிலிருந்து கூட்டாக வெளியேறும். ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு அளித்துள்ள தகவல்படி, ஒரு வெட்டுக்கிளிகளின் கூட்டம் சுமார் 60 கிலோமீட்டர் நீளமும் சுமார் 40 கிலோமீட்டர் அகலமும் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இது போன்றே இம்மை உலகில் இதுவரை வாழ்ந்து மடிந்த மனிதர்கள் அனைவரும் மறுமை வாழ்வுக்காக, புது உடல் எடுத்து புதைகுழியிலிருந்து கூட்டாக கோடிக்கணக்கில் வெட்டுக்கிளிகளைப் போல் வெளியேறுவார்கள். புதைகுழியிலிருந்து வெளியேறும் வெட்டுக்கிளிகளின் கண்கள் சிறுத்திருப்பதைப் போன்றே… கபர்ஸ்தானிலிருந்து வெளியேறும் மனிதர்களின் கண்களும் கீழ் நோக்கிய பார்வையுடனே இருக்கும் என்று குர் ஆன். 54:7.கூறுகிறது.

குறிப்பாக அமெரிக்கா நாடுகளில் காணப்படும் சில வகை வெட்டுக்கிளி இனங்கள், தொடர்ந்து 13 வருடங்கள் மண்ணில் புதையுண்டு மரண நிலையில் வாழ்ந்து வரும். இதில் வேறு ஒரு இன வெட்டுக்கிளிகள். 17 வருடங்கள் மண்ணுக்குள்ளேயே முட்டையுடன் அடங்கிக் கிடக்கும். சரியாக 13 வருடங்கள் முடிந்து பதினாலாம் வருடத்தில்…அல்லது 17 வருடம் முடிந்து பதினெட்டாவது வருடத்தில்தான் மண்ணுக்கு மேல் வெளி வந்து பறந்து திரியும். இந்த வெட்டுக்கிளி இனத்திற்குப் பெயர். ( Periodical cicadas.Magiccicada is the genus of the 13 years and 17 year )

பதினேழு வருடங்கள் மண்ணுக்குள் மரண நிலையில் இருந்த இந்தவெட்டுக்கிளிகள் கடைசியாக 2007 ஆம் ஆண்டு அமெரிக்காவில் தென்பட்டது. இனி அதன் மரண மயக்கம் தெளிந்து விழித்து எழுவது 2024 ஆம் வருடமே! அல்லாஹ்வின் படைப்பில் பல ஆச்சரியங்கள் உண்டு.இறந்த மனிதன் இறுதி நாளில் மீண்டும் உயிர் பெற்றெழுவது இறை மறுப்பாளர்களுக்கு நம்ப முடியாத செய்தியாக உள்ளது. ஆனால் ஒரு சிறிய வெட்டுக்கிளி முட்டையானது பதினேழு வருடம் பூமியில் புதையுண்டு மரண நிலையில் இருந்து பதினெட்டாம் வருடம் சிறகுகள் முளைத்து மண்ணுக்கு மேல் உயிருடன் பறந்து வருவது இன்றும் நம் கண்முன்னே நடக்கும் காட்சியாக உள்ளது.

பனிரென்று ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலர் போல் 17 வருடங்களுக்கு ஒரு முறை மட்டுமே மண்ணறையிலிருந்து மேல் வரும் வெட்டுக்கிளிகள் உள்ளன. இவைகளின் உலக வாழ்வு ஐந்து வாரங்கள் மட்டுமே! அதற்குள் இனப்பெருக்கம் செய்து முட்டையிட்டு அதை மண்ணறையில் வைத்து தன் வாழ்வை முடித்து விடும். இந்த முட்டைகள் மீண்டும் வெட்டுக்கிளிகளாக வெளியுலகம் வருவதற்கு அடுத்த 13 அல்லது 17 வருடங்கள் மண்ணறை கப்ர்ஸ்தானிலேயே உறங்க வேண்டும். மரித்த மனிதர்கள் புதை குழியிலிருந்து வருவதற்கு உதாரணமாக அல்லாஹ் வெட்டுக்கிளியை உதாரணம் காட்டியதன் காரணம் இதுவாகவும் இருக்கலாம்.அல்லாஹ்வே அறிந்தவன்.!

Image result for Periodical cicadas under earth
சிக்காடா (Cicada)என்று அழைக்கப்படும் இந்த வெட்டுக்கிளியும்.லொகஸ்ட் (Locust) என்று அழைக்கப்படும் வெட்டுக்கிளியும் பார்வைக்கு ஒன்று போல் இருப்பினும்.இருவகைகளும் வெவ்வேறு இனத்தை சேர்ந்தவை. ஆயினும் அவைகளின் செயல்களில் சில ஒற்றுமைகள் உள்ளன. பாலைவன வெட்டுக்கிளிகள் தகுந்த பருவம் வரும்போது தனது தங்கும் குழியிலிருந்து கூட்டம் கூட்டமாக வெளியேறி பயிர் நிலங்களை அழிக்கும். சிக்காடா வெட்டுக்கிளிகள் தாங்கள் புதைந்திருக்கும் குழிகளிலேயே 13 லிருந்து 17 வருடம் வரை மரண அமைதியாக உறங்கிக் கிடக்கும். அந்த கப்ர் வாழ்க்கை முடியும் காலம் வந்ததும் தங்கிய புதை குழியிலிருந்து பில்லியன் கணக்கில் ஒன்றாக வெளியேறி பறக்க ஆரம்பித்து விடும்.

பண்டைய.எகிப்து, மற்றும் சீனப் பேரரசர்களின் கல்லறைகளில் சிக்காட வெட்டுக்கிளிகளின் உருவங்கள் பச்சை கற்களில் செதுக்கப்பட்டு….இறந்தவர் உடலோடு வைக்கப்பட்டன. புதைகுழி வெட்டுக்கிளிகள் உயிர்தெழுவது போன்று… இறந்தபின் மனிதனும் உயிர்தெழுவான் என்று அன்றய மக்களும் நம்பினார்கள்.

(இறைவன் ஆதம் (அலை) அவர்களை நோக்கி), “ இதிலிருந்து நீங்கள் இறங்குங்கள். உங்களில் ஒருவர் மற்றவருக்குப் பகைவராக இருப்பீர்கள்; உங்களுக்கு பூமியில் தங்குமிடம் இருக்கிறது. அதில் ஒரு குறிப்பிட்ட காலம் வரை அதில் நீங்கள் சுகம் அனுபவித்தலும் உண்டு” என்று கூறினான்.

“அங்கேயே நீங்கள் வாழ்ந்திருப்பீர்கள்; அங்கேயே நீங்கள் மரணமடைவீர்கள்; இறுதியாக அங்கிருந்தே எழுப்பப் படுவீர்கள்” என்றும் கூறினான். – அல் குர்ஆன்.7:24-25.

பூமியில் வாழ்ந்து மரணமடைவதும்… பின்பு இறுதியில் உலகம் அழிக்கப்பட்டு மீண்டும் மனிதர்களுக்கு உயிர் கொடுத்து எழுப்பப்படும் செய்தியையும் ஆரம்ப காலத்திலேயே அல்லாஹ் தெளிவுபடுத்தி விட்டான். இறந்த மனிதன் இறுதியில் எழுப்பப்படும் உண்மையை ஒவ்வொரு காலத்திலும் வாழ்ந்த மக்கள் நம்பிக்கை கொண்டிருந்தார்கள். குறிப்பாக பண்டைய எகிப்து,சீனா நாகரிகங்களில் வாழ்ந்த அரசர்களின், தோண்டி எடுக்கப்பட்ட கல்லறைகளில் சிக்காடா வெட்டுக்கிளி உருவங்கள் செதுக்கிய சிற்பங்களை கண்டெடுத்தனர். புதை குழியிலிருந்து உயிருடன் வெளியேறும் வெட்டுக்கிளிகளைப்போல் இறந்த மனிதர்களும் உயிருடன் எழுப்பப்படுவார்கள் என்றே அன்றைய மக்களும் நம்பிக்கை கொண்டிருந்தார்கள்.

Similarly, cicadas were used in China as imitative magic to help ensure life after death. In China, the cicada was a symbol of rebirth . It was thought that the nymph crawling out of the ground, shedding its nymphal skin, and transforming into an adult was symbolic of resurrection. The nymph becomes very still prior to molting and thus appears to “die.” The adult cicada comes out of the “dead” shell, just as the spirit of a deceased person should emerge out of his dead body (Kritsky and Cherry 2000). Again, using the principle of “like produces like,” stylized cicadas called “tongue cicadas” were carved from jade and placed in the mouth of the deceased.
-American Endomologist magazine.Vol.51.no.1.2005.page.11.

Cicada. Han dynasty (206 B.C.E.–220 C.E.). China. Nephrite. Courtesy of the Asian Art Museum, The Avery Brundage Collection, B60J583.

https://www.journal-news.net/life/home-and-garden/cicadas-symbols-of-resurrection-rebirth-in-ancient-myths/article_37490562-ab59-56a5-b321-0fd810393411.html

இறந்த மனிதர்கள் மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பப்படுவார்கள் என்பதை மட்டும் குர் ஆன் கூறவில்லை. அவர்கள் வெட்டுக்கிளிகள் போல ஒரே நேரத்தில் கோடிக்கணக்கில் புதைகுழியிலிருந்து எழுவது போன்று எழுவார்கள் என்ற உண்மையை உதாரணத்துடன் கூறுகிறது. இஸ்லாம் ஓர் அறிவியல் பூர்வமான அல்லாஹ்வின் மார்க்கம்.

.இறப்பிற்குப்பின் மறுமை வாழ்வு உள்ளது என்ற உண்மையை உணர்வதற்கு…. சிந்திக்கும் மனிதர்களுக்கு இந்த உதாரணத்தை கூறுகிறது. ஆயினும் பெரும்பாலோர் இதனை நம்ப மாட்டார்கள் என்பதையும் குர் ஆன் கூறுகிறது.

இறந்தவர்கள் உயிர் கொடுத்து எழுப்பப்படுவார்கள் என்ற அவனின் வாக்கு முற்றிலும் உண்மையானதே. எனினும் மனிதர்களில் பெரும்பாலோர் இதனை அறிந்து கொள்ள மாட்டார்கள். – அல் குர்ஆன்.16:38.

Leave a Comment

Previous post:

Next post: