மனிதர்களை ஆட்டிப்படைக்கும் அற்ப கொசு!

Post image for மனிதர்களை ஆட்டிப்படைக்கும் அற்ப கொசு!

in அறிவியல்

எஸ்.ஹலரத் அலி, திருச்சி-7

அல்லாஹ் படைத்த படைப்பினங்களில் பிரமாண்டமான உயிரினங்களும்,கண்ணுக்கே தெரியாத நுண்ணுயிரிகளும் இவ்வுலகில் வாழ்கின்றன.இந்த படைப்பினங்களின் மூலம்  பகுத்தறிவு கொடுக்கப்பட்ட மனிதனுக்கு, அல்லாஹ் பல உதாரணங்களை  சொல்லிக் காட்டி  பாடம் நடத்துகின்றான். அவற்றுள் ஒன்று நாம் அற்பமாக கருதும் கொசுவின் மூலமாக,

நிச்சயமாக, அல்லாஹ் கொசுவையோ அதைவிட அற்பமானதையோ உவமானமாகக் காட்டுவதற்கு வெட்கப்படுவதில்லை. – அல்குர்ஆன்.2:26.

 Image result for how mosquito take bloodஉருவத்தில் மிக சிறியதாக, அற்பமானதாக இருந்தாலும், மனிதர்களுக்கு ஏற்படுத்தும் பாதிப்புகளில் கொசுக்களே முதலிடத்தில் இருக்கின்றன.  மலேரியா, டெங்கு, யானைக்கால் நோய், மூளைக்காய்ச்சல், ஜிக்கா வைரஸ் போன்ற நோய்களுக்கு கொசுக்களே காரணமாக இருக்கிறது. குறிப்பாக ‘அனாபெலஸ்” பெண் கொசுக்கள் மூலம்தான் மலேரியா,டெங்கு போன்ற நோய்கள் மனிதர்களுக்குப் பரவுகிறது.

உலகளவில் 2015  ஆண்டு கணக்கின்படி சுமார்   21.2  கோடிப்பேர் மலேரியாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும்  4.2  லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.  90 சதவீதம் பாதிப்பு ஆப்பிரிக்க நாடுகளில் தான் ஏற்படுகிறது என்கிறது உலக சுகாதார நிறுவனம்.

அல்லாஹ்வின் படைப்பில் பெரும் பெரும் ஜீவராசிகள் இருந்தாலும்,நாம் அற்பமாக கருதும் கொசுவின் மூலம் நமக்கு உதாரணங்கள் காட்டுவதிலிருந்தே, கொசுவின் படைப்புத்தன்மையின் சிறப்பியல்புகளை அல்லாஹ் ஆராய்ந்து பார்க்கக் சொல்லுகின்றான்.

அல் குர்ஆன்.2:26  வசனத்தில், “கொசுவையோ அதைவிட அற்பமானதையோ” என்று  கூறுவதன் மூலம் கொசுவை விட அற்பமான உயிரிகளும் உண்டு என்ற அறிவியல் உண்மையை உலகிற்கு உணர்த்துகின்றான். மலேரியா,டெங்கு போன்ற நோய்களை பரப்புவதில் அற்பமான கொசு மட்டும் பங்கெடுப்பதில்லை…அதைவிட அற்பமான ஒட்டுண்ணிகளும் (Parasites) இணைந்தே நோய்களை பரப்புகின்றன என்ற அறிவியல் உண்மையும் அவ்வசனத்தில் தொக்கி நிற்கிறது.

Image result for malariaமலேரியா நோய்க்கு முதல் காரணியாக இருப்பது கொசுக்கள் அல்ல. ஒரு செல்  உயிரியாகிய “பிளாஸ்மோடியம்” (Plasmodium.) என்ற ஒட்டுண்ணியாகும். அனோபிலிஸ் என்ற பெண் கொசுவானது நோய் தொற்றுள்ள மனிதரை கடித்து இரத்தத்தை உறுஞ்சுகிறது. இந்த ஒட்டுண்ணி கலந்த இரத்தமானது பெண் கொசு முட்டைகளை உற்பத்தி செய்ய உதவுகிறது.பின்பு கொசுவின் வயிறு வெடித்து வெளியேறும் பிளாஸ்மோடியம் ஒட்டுண்ணி, கொசுவின் எச்சில் வழியாக வெளியேறி கடிபடும் மனிதர்கள் இரத்தத்தில் கலந்து மலேரியா நோயை பிற மனிதர்களுக்கு பரப்புகின்றது.

மனிதர்களுக்கு  நோயை பரப்புவது அற்பமான கொசுவும் அதைவிட அற்பமாக கொசுவிலேயே இருக்கும் பிளாஸ்மோடியம் ஒட்டுண்ணி என்ற உயிரியுமே! இத்துடன் அற்ப கொசுவின் ஆச்சரியம் முடிந்துவிடுவதில்லை. பொதுவாக கொசு மனிதரின் மேல் அமர்ந்து தோலை துளைத்து, இரத்தம் உறுஞ்சி, பறந்து சென்ற பின்னரே நமக்கு கடி பட்ட இடம் வலிக்கிறது. அதற்கு முன்பு கொசு அமர்வதையும் பின்பு பறப்பதையும் உணர்வதில்லை.நாம் கொசுவை அடிப்பதற்குள் அது தப்பிப் பறக்கும் மர்மத்தை ஆய்வாளர்கள் ஆய்வு செய்தனர்.

நெதர்லாந்து நாட்டு பல்கலைகழக ஆய்வாளரான புளோரியன் மிஜ்ரெஸ் (Florian Muijres a biomechanics researcher at Wageningen University in the Netherlands) அமெரிக்கா பல்கலைக்கழக ஆய்வாளர்களுடன் சேர்ந்து ஆய்வு செய்து,மனித இரத்தம் குடித்த கொசு நமது கைகளில் அடிபடாமல் தப்பிப் பறக்கும் மர்மத்தை இந்த மாத அக்டோபர் (18 , 2017 Journal of Experimental Biology) ஆய்விதழில் வெளியிட்டனர்.பொதுவாக கொசுவை போன்றுள்ள ஈக்கள், பறக்கும் பூச்சிகள் முதலியவை மனித உடலில் அமர்ந்து மீண்டும் பறக்கும் போது தமது கால்களை நம் உடலில் அழுத்தி உந்தித் தள்ளியே பறக்கின்றன.

ஆனால் நமது அற்ப கொசு புதுவிதமான ஏரோடைனமிக் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி பறந்து செல்கிறது. மூன்று அதிவேக கேமிரா (Shooting at 125,000 frames per second.) மூலம் கொசுக்கள் இரத்தம் உறுஞ்சிய பின், பறக்கும் நுட்பத்தை ஆய்வு செய்தனர்.ஒரு கொசு இரத்தம் குடித்தபின் அதன் எடை இரண்டு அல்லது மூலம் மடங்கு அதிகமாகிவிடும்.இந்த அதிக எடையை தூக்கிகொண்டு பறப்பதற்கு பிற பூச்சி,மற்றும் ஈக்கள் தங்களின் கால்களால் உந்தித்தள்ளிய பிறகே சிறகை அடிக்க ஆரம்பிக்கும். ஆனால் கொசு, தன் நீண்ட கால்களால் தோல் பரப்பை அழுத்தாமல்  தங்களின் சிறகுகளை அதி வேகத்தில் அடித்து ஹெலிகாப்டர் போன்று அலக்காக எழும்புகின்றன.

பறப்பதற்கு 30 மில்லி நொடிகளுக்கு முன்பே சிறகை அடிக்க ஆரம்பித்துவிடுகின்றன. அதுவும் உயர் வேகம், நொடிக்கு 600 முதல் 800 தடவை இறக்கையை அடிக்கின்றன. கொசுவின் எடையுள்ள பிற பூச்சிகள் பறப்பதற்கு நொடிக்கு 200 தடவையே இறக்கையை அடிக்கும். இந்த உயர் வேகத்தில் இறக்கையை அடித்து பறப்பதால், தன் எடையை விட இரு மடங்கு இரத்தத்தை சுமந்து கொண்டு பறப்பது அதற்கு எளிதாக இருக்கிறது. மேலும் மனிதர்களின் தோல் பரப்பை அழுத்தாமல் உயர எழும்புவதால், நமக்கு கொசு அமர்வதும், பின் எழுவதும் நம்மால் உணர முடிவதில்லை.

சாதாரணமாக பழ ஈக்கள் (Fruit fly)  ஓரிடத்தில் அமர்ந்து பின் எழுந்து பறப்பதற்கு எடுத்துக்கொள்ளும் சக்தியை விட சுமார் நான்கு மடங்கு சக்தியை கொசுக்கள் எழும்பிப்பறக்க எடுத்துக்கொள்வதால், நம் உடலானது அதன் தொடு  உணர்வை அறிய முடிவதில்லை.எனவே நம்மால் கொசுவை அடிக்க முயர்ச்சிப்பதற்குள் அது பறந்து விடுகிறது.பறப்பதற்கு தேவையான சக்தியில் சுமார் 61 %  இறக்கைகளின் உயர்வேகத்திற்கே செலவிடப்படுகிறது.

http://jeb.biologists.org/content/220/20/3751

https://www.sciencenews.org/article/mosquito-flight-unlike-any-other-insect

அற்ப கொசுவின் இறக்கைகளுக்கு அல்லாஹ் கொடுத்த ஆற்றலால் அவைகள் மனிதர்களின் கைப்பிடியிலிருந்து எளிதாக தப்பி, தன் வாழ்வாதாரத்தை பெருக்கிகொண்டும் அல்லாஹ் நாடியவர்கள் மீது நோய்களை பரப்பிக்கொண்டும் பறந்து திரிகிறது. கொசுவின் இறக்கையின் மதிப்பை அதன் ஆற்றலை அறிவியல் மூலம் பார்த்து விட்டோம். கொசுவின் இறக்கைகளுக்கு மதிப்புள்ளதா? என்ற கேள்விக்கு ஆம்! அல்லாஹ்வை நிராகரித்து  நரகத்தில் விழும் மனிதர்களை விட அதற்கு மதிப்புள்ளது என்பதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

மறுமை நாளில் உடல் பருத்த கொழுத்த மனிதன் ஒருவன். வருவான். அல்லாஹ்விடம் கொசுவின் இறக்கையளவு எடை கூட அவன் (மதிப்புப்) பெறமாட்டான்.

“ மறுமை நாளில் அவர்களின் செயல்களுக்கு எந்த எடையையும் நாம் ஏற்படுத்த மாட்டோம்.” ( 18:105)  எனும் இறை வசனத்தை ஓதிக்கொள்ளுங்கள்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)   நூல்: ஸஹீஹ் முஸ்லிம்.5370.

 அல்லாஹ்வை ஏற்றுக் கொண்ட நல்லடியார்களுக்கு அற்ப கொசுவின் மூலமும் நல்லுபதேசம் செய்வதில் அல்லாஹ் வெட்கப்படுவதில்லை. ஆனால் நிராகரிப்பாளர்களோ “இத்தகைய உதாரணங்களைக் கொண்டு அல்லாஹ் எதை நாடுகின்றான்? என ஏளனமாக கேட்கிறார்கள். இந்த கொசு என்ற ஒரே விசயத்தைகொண்டு அல்லாஹ்வின் நல்லடியார்கள் அவனின் ஆற்றலை அறிந்து கொண்டு அவனுக்கு நன்றி செலுத்துகிறார்கள்.

நிராகரிப்பாளர்களோ நாளை மறுமையில் கொழுத்த மனிதனாக வந்தும், அற்ப கொசுவின் இறக்கைக்குள்ள எடை மதிப்பு கூட இல்லாமல் நரக நெருப்பில் எறியப்படுவார்கள்.

ஒரே விசயத்தைக்கொண்டு அல்லாஹ் பலரை வழிகேட்டில் ஆழ்த்துகின்றான்;மேலும் அதனைக் கொண்டு பலருக்கு நேர்வழியும் காட்டுகின்றான். ஆனால் கீழ்ப்படியாதவர்களைத் தவிர வேறு எவரையும் இதனைக் கொண்டு அவன் வழிகேட்டில் ஆழ்த்துவதில்லை.   அல் குர்ஆன்.2:26.

                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                

Leave a Comment

Previous post:

Next post: