மண்ணுக்குள் மறைந்து வாழும் …மகத்தான மருந்துகள்!

in அறிவியல்

எஸ்.ஹலரத் அலி – திருச்சி-7.

அல்லாஹ் கூறுகிறான்……..”. உங்களுக்கு தண்ணீர் கிடைக்காவிட்டால், சுத்தமான மண்ணைக் கொண்டு, அவைகளால் உங்கள் முகங்களையும், உங்களுடைய கைகளையும் தடவிக் (தயம்மம்) கொள்ளுங்கள்.”      – அல்குர் ஆன்.4:43, 5: 6.

 

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், “ பூமி முழுவதும் எனக்கு தொழுமிடமாகவும்,  தூய்மையானதாகவும் ஆக்கப்பட்டு விட்டது. ஒருவர், தொழுகை எங்கு நேரம் வந்துவிட்டாலும் தொழுது கொள்ளலாம்.”

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)    அஹ்மத், பைஹகீ (ஹதீஸ் சுருக்கம்)

 Image result for soil bacteria antibioticஇப்பூமியில் உள்ள மண் அனைத்தும், தூய்மையானது என்று அல்லாஹ் கூறுகிறான். மண்ணுக்கு மேல், கோடானு கோடி மனிதர்கள், மிருகங்கள், தாவரங்கள் வசிப்பது போலவே, மண்ணிற்கு அடியில் இதை விட பல மடங்கு உயிருள்ள நுண்ணுயிர்கள் வசிக்கின்றன. மண்ணுக்கு மேலுள்ள உயிர்களையும், மண்ணுக்கு கீழுள்ள எல்லா உயிர்களையும் வாழ வைப்பதும் மண்ணே! அவ்வுயிர்கள் இறுதியில் வீழ்ந்து மரிப்பதும் மண்ணிலேதான்.

 ஒரு அங்குல கனமுள்ள மண் உருவாக சுமார் 500 ஆண்டுகள் ஆவதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். ஒரு கைப்பிடி அளவுள்ள மண்ணில் 45% கனிமப் பொருட்களும்,   25% நீர்,   25% வளி என்னும் காற்றும்,  5% நுண்ணுயிர்களும் நிறைந்துள்ளன. ஒரு கிராம் மண்ணில் ஐயாயிரத்திலிருந்து ஏழாயிரம் வரையிலான பாக்டீரியாக்களும், ஒரு ஏக்கர் மண்ணில் ஐந்திலிருந்து பத்து டன் வரையிலான எண்ணிக்கையில் பல்வேறு நுண்ணுயிர்கள் வாழ்கின்றன.

மண்ணானது திட,திரவ,வாயு எனும் மூன்று நிலைகளும் ஒன்றாக கலந்து அமைந்து உயிரோட்டமாக உள்ளதால், அது என்றுமே தூய்மையாகவே இருக்கிறது. உலக உயிர்களை வாழவைப்பதற்குத் தேவையான உணவுப் பயிர்களை வளர்த்துத் தருவதுடன் மண்ணின் வேலை முடிந்து விடுவதில்லை. மேலும் உயிர்களுக்கு கேடு விளைவிக்கின்ற நோய்களை தடுக்கும் மருந்துகளும், தூய்மையான மண்ணிலேயே இருக்கின்றன. இந்த உண்மைகளை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறிய ஒரு செய்தியின் மூலம் அறியலாம்.

இறைத்தூதர்  (ஸல்) அவர்கள் கூறினார்கள். “நாய் வாய் வைத்துவிட்ட உங்களது பாத்திரத்தைச் சுத்தம் செய்யும்முறை யாதெனில், அப்பாத்திரத்தை ஏழு தடவை தண்ணீரால் கழுவுவதாகும்; முதல் தடவை மண்ணைக் கொண்டு கழுவுங்கள்”.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)  முஸ்லிம்..471.

 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்  கூறினார்கள், “பாத்திரத்தில் நாய் வாய் வைத்து விட்டால் ஏழு தடவை (தண்ணீரால்) கழுவிக் கொள்ளுங்கள். எட்டாவது  தடவை மண்ணிட்டுக் கழுவுங்கள்.”

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அல் முகப்பல் (ரலி)   முஸ்லிம்.473.

ஏழு விடுத்தத்தில் கடைசி  தடவை மண்ணைக் கொண்டு கழுவுங்கள். என்றும் திர்மிதி ஹதீஸில் வந்துள்ளது.

மேற்கண்ட ஹதீஸ்களில் ஒரு  பாத்திரத்தில், நாய் வாயை வைத்து நக்கி விட்டால், அதை எவ்வாறு தூய்மை செய்ய வேண்டும் என்ற வழிமுறையை நபி (ஸல்) அவர்கள் கற்றுத்தருகிறார்கள். தண்ணீரால் கழுவினால்மட்டும் போதாது  அத்துடன் மண்ணையும் சேர்த்துக் கழுகவேண்டும் என்று கூறுவதன் மூலம் இஸ்லாம் ஓர் அறிவு சார்ந்த அறிவியல்  மார்க்கம் என்ற உண்மையை உணர்த்துகிறார்கள்.

நபியவர்கள் வழிகாட்டுதல் நூறு சதவிகிதம் சரியானதே என்று இன்றைய நவீன விஞ்ஞானம் மெய்ப்பிக்கின்றது.

மண்ணில் மறைந்துள்ள மருத்துவம்.

நபி (ஸல்) அவர்கள், தாபித் இப்னு கைஸ் (ரலி) அவர்கள் நோயுற்று இருந்த போது அவர்களிடம் சென்று, “ மக்களை இரட்சிப்பவனே! துன்பத்தைப் போக்குவாயாக! என்று  கூறி,  (மதினாவில் பர்ஹான என்னுமிடத்திலிருந்து எடுத்துவரப்பட்ட) மண்ணை நீருடன் கலந்து அவர் மீது ஊற்றினார்கள்.”    – அபூ தாவூத். 3885. இப்னு மாஜா.

இந்த ஹதீஸ் அறிவிப்பாளர் வரிசை பலஹீனமானது என்று ஷேக் அல்பானி (ரஹ்) அவர்கள் கூறி இருப்பினும்,இமாம் இப்ன் ஹிப்பான் அவர்களும், ஷேக் பின் பாஸ் அவர்களும் இதை சரி காண்கிறார்கள்.இதிலும் ஸஹீகான ஒன்று…

ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

ஒரு மனிதர் வலியாக உள்ளது என்று நபி (ஸல்) அவர்களிடம் கூறிய போது, “ உமிழ்நீரை சுட்டிக்காட்டி இத்துடன் மண்ணைக் கலந்து கொள்வீராக! இந்த பூமியில் உள்ள நமது மண், இரட்சகனின் அனுமதியுடன் நோயைக் குணமாக்கும்!” என்று கூறினார்கள். – அபூ தாவூத். 3886.

நாயின் நாக்கிலுள்ள உமிழ்நீரில் ஆபத்தான பாக்டீரியா கிருமிகள் ஏராளமாக இருப்பது அனைவரும் அறிந்ததே! இந்த தீய கிருமிகளை மண்ணிலுள்ள நோய் எதிர்ப்பு நுண்ணுயிர்கள் (Antibiotic  microbes) அழிக்கின்றன என்ற உண்மைகள் தற்போதுதான் தெரிய வருகிறது. நாயின் நாக்கிலுள்ள உமிழ்நீரில் உள்ள  Capnocytophaga canimorsus என்னும் பாக்டீரியாவானது மனிதர்களுக்கு கடும் நோயைக் கொடுக்கக்கூடிய ஒன்று. இந்த நோயை குணப்படுத்தும் பெனிசிலின்-ஜி (Penicillin-G) என்னும் ஆன்டிபயாடிக் மருந்து மண்ணிலுள்ள ஒருவித பூஞ்சையிலிருந்துதான் தயாரிக்கப்படுகிறது. (The Production of Penicillins in Soils and Seeds by Penicillium chrysogenum and the Role of Penicillin β-Lactamase in the Ecology of Soil Bacillus.)

இம்மருந்து 1928 ஆம் ஆண்டு அலெக்ஸாண்டர் பிளமிங் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் அல்லாஹ்வின் மார்க்கத்தில், நாய் நக்கிய பாத்திரத்திலிருந்து வியாதிகள் ஏதேனும் உருவாகக்கூடாது என்பதற்காக…நோய்களை தடுக்கும் மருந்துகள் (Antibiotic medicine) மண்ணிலேயே உள்ளது என்பதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அன்றே அறிவித்து விட்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்!

கடந்த நூற்றாண்டின் மிகப் பெரிய மருத்துவச் சாதனை என்று போற்றப்படுவது, நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகள் என்று அழைக்கப்படும் ‘ஆண்டிபயாடிக்’குகளைக் கண்டுபிடித்ததுதான்.

உலகின் முதல் ஆண்டிபயாடிக் மருந்தான பென்சிலின் மருத்துவத் துறையில் பெரும் புரட்சியை நிகழ்த்தியது. பென்சிலினைக் கண்டறிந்த அலெக்சாண்டர் ஃபிளமிங்குக்கு 1928-ல் நோபல் பரிசு கிடைத்தது.

Image result for soil bacteria antibioticஉலக அளவில் 1930-க்கு முன்னால் சிறிய வெட்டுக்காயம், சாதாரண சளிகூடப் பலரது மரணத்துக்குக் காரணமாக அமைந்தன. பிளேக், காலரா போன்ற கொள்ளை நோய்கள் அசுர வேகத்தில் பரவி, பல்லாயிரம் மனித உயிர்களைப் பலி வாங்கிய வரலாற்று சான்றுகள் உள்ளன. முதல் உலகப் போரில் ஆயிரக்கணக்கான வீரர்கள் காயத்திலிருந்து விடுபட வழியின்றி மாண்டனர்.ஆண்டிபயாடிக்கின் வரவு மனிதக் குலத்தை மிகப் பெரிய அழிவிலிருந்து காப்பாற்றியது.

டெட்டனஸ், கொனேரியா, சிபிலிஸ், தொண்டை அடைப்பான், மூளை உறை காய்ச்சல், நிமோனியா, ருமாட்டிக் காய்ச்சல், காதில் சீழ் வடிதல், தொண்டைப்புண் போன்ற பலவித நோய்களுக்கு 1928 ஆம் ஆண்டுவரை நிவாரணம் இல்லாமலே இருந்தது. மண்ணிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட பென்சிலின் கண்டுபிடிக்கப்பட்ட பின்பே மனிதகுலம் தளைத்தெழுந்தது. அனைத்து “நோய் எதிர்ப்பு நுண்ணுயிர் மருந்துகளும்” (Antibiotic microbes) மண்ணிலுள்ள நுண்ணுயிர் பாக்டீரியாக்களிலிருந்தே தயாரிக்கப்பட்டன.

 

https://www.the-scientist.com/?articles.view/articleNo/41850/title/New-Antibiotic-from-Soil-Bacteria/

நூற்றுக்கணக்கான,(Streptomysin,Chloramphenicol,Tetracycline,Vancomysin,Erythromysin,Daptomysin) ஆன்டிபயாட்டிக் மருந்துகள் இன்று மண்ணிலிருந்து உருவாக்கப்பட்டு மக்களுக்கு நிவாரணம் அளித்து வந்தாலும், எல்லாவற்றுக்கும் முன்னோடி பென்சிலின் (Penicillin) மருந்துதான். இது எப்படி பாக்டீரியாக்களைக் கொல்கிறது?

பாக்டீரியாக்களின் செல் சுவர்கள் பெப்டிடோ கிளைக்கான் எனும் புரதப்பொருளால் ஆனவை. இந்தப் புரதம் உண்டாவதற்கு டிரான்ஸ்பெப்டிடேஸ் எனும் என்சைம் உதவுகிறது. இந்த உதவியை நிறுத்திவிட்டால் பாக்டீரியாக்கள் வளர முடியாது. இறந்து விடும். மேலே சொன்ன நோய்களும் கட்டுப்படும். இந்த அற்புதச் செயலைச் செய்கிறது பென்சிலின். டிரான்ஸ் பெப்டிடேஸ் என்சைமை அழித்து பாக்டீரியாக்களைக் கொல்கிறது.

தற்போது பயன்பாட்டில் இருக்கும் ஆன்டிபயாடிக் மருந்துகள் எல்லாமே சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டவையே. இன்றைய உலகில் நோய் எதிர்ப்பு மருந்துகளின் வீரியத்தை விட நோய்களின் வீரியம் அதிகமாகி, எந்த மருந்துக்கும் கட்டுப்படாத நிலைமை அதிகரித்துள்ளது. உதாரணமாக, “எலும்புருக்கி நோய்’ இன்று எந்த மருந்திற்கும் கட்டுப்படாத நிலையில் தன்னை தகவமைத்துள்ளது.. இந்நிலையில் தற்போது பாக்டீரியாக்களை வளர்ப்பதில் புதிய வழி முறைகளை அமெரிக்க ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

இந்த புதிய வழி முறையின் மூலம் 25 ஆண்டிபயாடிக் மருந்துகள் உருவாகியுள்ளன. இதில் குறிப்பாக ஒரு ஆண்டிபயாடிக் மருந்து அதிக வீரியத்துடன் நோயை எதிர்க்கும் நம்பிக்கையை அளித்துள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இந்த புதிய கண்டுபிடிப்பானது “மருத்துவ உலகின் மைல் கல்” என்று வர்ணிக்கப்படுகிறது. இதன் மூலமாக அதிகமான நோய் எதிர்ப்பு மருந்துகளை கண்டுபிடிக்கமுடியும் என்று நம்பப்படுகிறது.

1987 ஆண்டிற்குப் பிறகு இதுவரை எந்த புதிய ஆண்டிபயாடிக் மருந்தும் கண்டுபிடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படவில்லை. ஆகவே எல்லாவிதமான ஆண்டிபயாடிக் மருந்துகளுக்கும் மூலாதாரமான மண்ணில் இருந்து புது ரக ஆண்டிபயாடிக் மருந்துகளைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சியில், அமெரிக்காவின் மசெஷுசெட்ஸின் போஸ்டன்- நார்த் ஈஸ்டர்ன் பல்கலைகழக ஆய்வாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

மண்ணில் ஏராளமான நுண்ணுயிர்கள்  இருந்தாலும் அவற்றில் ஒரே ஒரு சதவீதத்தைத்தான் ஆய்வகத்தில் வளர்க்க முடியும். எனவே நுண்ணுயிர்கள் இயற்கையாக வாழும் மண்ணையே ஆய்வகமாக இந்த ஆய்வாளர்கள் மாற்றிக்கொண்டார்கள். இந்த நிலத்தடி பாக்டீரியா விடுதியில் ஒவ்வொரு அறையிலும் ஒரே ஒரு பாக்டீரியாவை மட்டும் வைத்து, அந்த ஒட்டு மொத்த ஆய்வகத்தையும் மண்ணுக்குள் புதைத்துவிட்டனர்.

சிலநாட்களுக்குப் பிறகு இந்த பாக்டீரியா ஆய்வகம் தோண்டி எடுக்கப்பட்டு ஆய்வு செய்ததில், ஒரு குறிப்பிட்ட ஆய்வு மண்ணில் புதைக்கப்பட்டிருந்த பாக்க்டீரியத்திற்கு அந்தமண்ணில் இருந்த நுண்ணுயிரிகள் உருவாக்கிய எதிர்வினை தடுப்பு வேதிப்பொருட்களை ஆய்வாளர்கள் அடையாளம் கண்டனர். இவற்றை பரிசோதனை செய்த போது அதில் ஆண்டிபயாடிக் மருந்து தயாரிப்பதற்கான மூலக்கூறுகள் அதில் இருப்பதை கண்டறிந்துள்ளனர்.

அமெரிக்காவில் ராக்பெல்லர் பல்கலைகழகத்தின் ஆய்வாளர்கள், வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஆசியா, ஆஸ்திரேலியா, என ஐந்து கண்டங்களில் உள்ள கடற்கரை,மழைக்காடுகள்,மற்றும் பாலைவனங்களில் 2000  வகையான மண் மாதிரிகளை சேகரித்து ஆய்வு நடத்தி வருகின்றனர்.

இந்த ஆய்வில் இதுவரை அறியப்படாத ஆண்டிபயாடிக் மற்றும் கேன்சரை குணப்படுத்தும் மருந்துகளை மண்ணிலிருக்கும் நுண்ணுயிர்களிலிருந்தே கண்டுபிடிக்கலாம்…என்பது தெரியவந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். இந்த அறிவியல் செய்தி,கடந்த 12- பிப்ரவரி .2018 “நேச்சர் மைக்ரோ பயாலஜி” (Nature Microbiology) இதழில் வெளிவந்தது.

https://www.livescience.com/61760-new-antibiotics-found-in-soil.html

(Employing an innovative technique to sequence the genes of microbes living in soil, the researchers recently announced they have found a new class of powerful antibiotics called malacidins, which they hope could be effective against multidrug-resistant bacteria.)

https://www.rockefeller.edu/news/21448-molecule-discovered-dirt-help-multi-resistant-bacteria/

வானங்கள் மற்றும் பூமியில் உள்ளவற்றிக்கும் அவற்றிக்கிடையே உள்ளவற்றிக்கும் மற்றும் மண்ணுக்கு அடியில் (Soil  Bacteria  and Microbes) உள்ளவற்றிற்கும் அவனே உரிமையாளன் ஆவான்.        – அல் குர்ஆன்.20:6.

 

Leave a Comment

Previous post:

Next post: