பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
எஸ்.ஹலரத் அலி, திருச்சி-
மனித குல வரலாற்றில் ஏராளமான பேரழிவுச் சம்பவங்கள் நடந்துள்ளன.இயற்கையின் சீற்றங்களான பெரும்ம ழை,புயல்,வெள்ளம்,எரிமலை,பூகம்பம், போன்றவற்றால் மனித குலம் அழிந்துள்ளது. மனிதர்களுக்கிடையே நடந்த பெரும் போர்களினால் கோடிக்கணக்கான மக்கள் மடிந்துள்ளனர். ஆனாலும் இது போன்ற பேரழிவு சம்பவங்களினால் ஒட்டு மொத்த மனித சமுதாயமும் அழிந்து விடவில்லை.
ஆனால் அல் குர்ஆனில் அல்லாஹ் கூறும் “யாஜுஜ்-மாஜுஜ்’ எனும் பெரும் கூட்டம், இறுதி நாளில் வெளியாகி பேரழிவில் ஈடுபடும்.இக்கூட்டத்தாரை எந்த மனிதராலும், எந்த வல்லரசாலும் தோற்கடிக்க முடியாது. எவராலும் வெல்லப்பட முடியாத பெருங்கொண்ட கூட்டமே யாஜுஜ்-மாஜுஜ். இன்று ஒவ்வொரு தொழுகையின் இறுதியில் கேட்கும் பிரார்த்தனைகளில் ஒன்று,”மஸீஹ் தஜ்ஜாலின்” தீங்கிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடுதல்.
இந்த தஜ்ஜாலை கொல்லக்கூடிய சக்தி மனிதர்களில் எவருக்கும் கிடையாது.அது இறுதி நாளில் மீண்டும் பூமிக்கு வரும் ஈஸா மஸீஹ் (அலை) அவர்களால் மட்டுமே அவனைக் கொல்ல முடியும்.ஆனாலும் இதற்குப் பின் வரும் பேரழிவு பெருங் கூட்டமான யாஜுஜ்-மாஜுஜ் இனத்தாரை ஈஸா (அலை) அவர்களாலும் அழிக்க முடியாது.அல்லாஹ் ஒருவனைத் தவிர.
இன்றைய அறிவியலின் உச்சத்தில் அணு ஆயுதங்களை வைத்து ஆட்டம் போடும் அனைத்து வல்லரசுகளையும் வெறும் வில், அம்பு ஆயுதங்களைக் கொண்டே யாஜுஜ்-மாஜுஜ் வென்று விடுவார்கள். மேட்டிலிருந்து தண்ணீர் எவ்வாறு பள்ளத்தில் விரைவாக பாய்வது போல் பூமியில் பரவி அனைவரையும் வென்று விடுவார்கள்.கையில் கிடைத்த அனைத்தையும் தின்று விடுவார்கள்.ஒரு சொற்பமான மனிதர்களைத் தவிர அனைத்து மனிதர்களையும் கொன்று தின்று விடுவார்கள்.
இன்றைய பகுத்தறிவு அறிவியல் உலகில் வாழும் பிற மக்களுக்கு மாஜுஜ் யாஜுஜ்-பற்றிய செய்திகள் வெறும் கற்பனை கதையாக, நம்ப முடியாத நாடகமாக தெரியலாம்.ஆனால் அல்லாஹ்வை மட்டும் இறைவனாக நம்பி வாழும் முஸ்லிம்களுக்கு இது இனி இவ்வுலகில் நடக்கப் போகும் சம்பவம் என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாக தெரியும்.ஆனாலும் அல்லாஹ்வின் கிருபையைக்கொண்டு,இது போன்ற பேரழிவு சம்பவம் சில மக்களால்,அல்லது சில வைரஸ் நரம்பு நோய்களால் பாதிக்கப்பட்டவர்களால் வெகுவாகப் பரவி உலகை குறுகிய காலத்தில் அழிக்க முடியும் என்று அறிவியல் ரீதியாக ஆய்வு செய்து நிரூபித்துள்ளார்கள்.
உதாரணமாக,இன்று அமெரிக்கா ஹாலிவுட் திரைப்படங்களில் அதிகமாக வெளிவந்து பரபரப்பு ஏற்படுத்திய படங்கள் சோம்பிகள் (zombies). பிணங்கள் எழுந்து நடமாடி பிற மனிதர்களைக் கடித்து இரத்தம் குடித்து,அவர்களையும் நடை பிணமாக்கும் இரத்தக் காட்டேரி கதைகள்.1932 ம் வருடத்திலிருந்து இதுவரை சுமார் 500,திரைப்படங்கள் வெளிவந்துள்ளது.(தமிழில் முதன் முதலாக வந்த சோம்பி திரைப்படம் “மிருதன்”)
மனிதர்கள் ஒருவித வைரஸால் தாக்கப்படும் போது அவர்கள் சோம்பிகளாக மாறிவிடுகிறார்கள். வலி உள்பட எதுவும் அவர்களுக்கு தெரிவதில்லை. அவர்கள் கடித்தால் கடிபட்ட மனிதனும் சோம்பியாகிவிடுவான்.எவராலும் கொல்ல முடியாத பிண மனிதர்களாக மாறி வெகு விரைவில் பல்கிப் பெருகி உலக மொத்த ஜனத்தொகையையும் சுத்தமாக கடித்து கொன்று வெறி பிடித்த நடைப் பிணமாக ( Zombies) அலைய விட்டு விடுவார்கள்.
இன்று உலகில் வாழும் சுமார் 750 கோடி மனிதர்களுக்கிடையே ஸோம்பி போன்ற தாக்குதலோ,அல்லது வைரஸ் நரம்பு நோய் தாக்கம் ஏற்பட்டாலோ இவை உடனடியாக உலகம் முழுவதும் பரவி,விரைவில் அனைவரையும் கொன்று விடும்.எந்தளவு என்றால் இந்த தாக்குதல் ஆரம்பித்த நூறாவது நாளில்,உலக மக்கள்தொகை 750 கோடிப்பேர்களில் மிஞ்சி இருக்கும் மக்கள் வெறும் 273 பேர் மட்டுமே என்பது அறிவியல் ரீதியாக ஆய்வு செய்து நிரூபிக்கப்பட்டுள்ளது.
Scientists have used math to estimate how a zombie outbreak would play out, similarly to how we predict the spread of real diseases.
When the zombie apocalypse comes, it will be swift and brutal. Within 100 days of the dead rising to feast on our flesh, only 273 people will remain. Or so suggests a grim estimate from students at the University of Leicester, published recently in the school’s Journal of Physics Special Topics.
https://physics.le.ac.uk/journals/index.php/pst/article/view/965/683
இன்று திரைப்படங்களில் மக்களை மிரட்டும் ஸோம்பிகள் வெறும் கற்பனை கதாபாத்திரமே.ஆனால் உலக இறுதிக்காலத்தில் உண்மையாகவே வெளிவர இருக்கும் ஸோம்பிகள் என்னும் யாஜுஜ்-மாஜுஜ் பெருங்கூட்டத்தின் பேரழிவில் சிக்கி பெரும்பான்மையான மக்கள் இறந்து விடுவார்கள்.ஈஸா (அலை) அவர்களை பின்பற்றிச் சென்று மலை உச்சியில் மறைந்து கொண்ட சிறு கூட்டமே தப்பிப் பிழைக்கும்.
யஃஜுஜு, மஃஜுஜு (கூட்டத்தார்)க்கு வழி திறக்கப்படும் போது, அவர்கள் ஒவ்வொரு மேட்டிலிருந்தும் இறங்கிப் பரவுவார்கள். அல்குர்ஆன் 21:96
“தஜ்ஜாலை விட்டும் அல்லாஹ் காப்பாற்றிவிட்ட ஒரு கூட்டத்தாரிடம் அடுத்து ஈஸா (அலை) அவர்கள் வருவார்கள். அவர்களின் முகங்களை தடவி விடுவார்கள். அவர்களிடம் சொர்க்கத்தில் உள்ள அவர்களுக்குரிய தகுதிகளைப்பற்றிப் ஈஸா நபி கூறுவார்கள். அந்த சமயத்தில் ஈஸாவிடம் அல்லாஹ், “நான் என் அடியார்களை சிலரை வெளியாக்கி உள்ளேன். அவர்களிடம் யாரும் சண்டை செய்ய முடியாது. எனவே என் அடியார்களை தூர் மலைப்பக்கம் ஒன்று சேர்ப்பீராக!” என்று அல்லாஹ் கூறுவான்.
அறிவிப்பவர்: நவாஸ் இப்னு ஸம்ஆன் (ரழி) –முஸ்லிம்.2937.
அல்லாஹ் யாஜுஜ்-மாஜுஜ் கூட்டத்தாரை அனுப்புவான்.அவர்கள் ஒவ்வொரு உயரமான பகுதியிலிருந்தும் வேகமாக கீழே இறங்கி வருவார்கள்.அவர்களில் முதல் அணியினர் (ஜோர்தானில்) உள்ள “தபரிய்யா” ஏரியைக் கடந்து செல்லும்போது, அதிலுள்ள மொத்த நீரையும் குடித்து விடுவார்கள்.அவர்களில் இறுதி அணியினர் அதைக்கடந்து செல்லும்போது, ‘முன்னொரு காலத்தில் இந்த ஏரியில் தண்ணீர் இருந்திருக்கும் என்று பேசிக்கொள்வார்கள்.
அறிவிப்பவர்: நவாஸ் இப்னு ஸம்ஆன் (ரழி) –முஸ்லிம்.5629..
பூமியில் குழப்பம் விளைவிக்கும் ஒரு பெருங்கொண்ட கூட்டம் இறுதி நாளில் வெளியாகி மக்களுக்குத் தீங்கிழைப்பார்கள் என்ற உண்மையை குர்ஆனும் ஹதீஸ்களும் கூறுகின்றன.
வெறும் வில்லும்,அம்பையும் ஆயுதமாகக் கொண்டிருக்கும் யாஜுஜ்-மாஜுஜ் குள்ளர் கூட்டம் எப்படி மனிதர்களை வெல்ல, கொல்ல முடியும்? ஆம்! அருவியிலிருந்து வெள்ளம் பாய்வதுபோல் கோடிக்கணக்கில் வந்து குவிவார்கள்.காரணம்,யாஜுஜ்-மாஜுஜ் மக்கள் கிடைத்த எல்லாவற்றையும் தின்று தீர்த்து ஆற்று நீரே வற்றிப்போகும் அளவு குடித்து பெரும் பஞ்சத்தை ஏற்படுத்துவார்கள்.அவர்கள் தின்று தீர்க்கும் அளவிற்கு அதிகமான குழந்தைகளை வத வத எனப் பெறுவார்கள்.ஒவ்வொரு பெண்ணும் ஆயிரம் குழந்தைகளுக்கு மேல் பெற்றேடுப்பார்கள்.
. “யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தினர் ஆதம்(அலை) அவர்களின் சந்ததிகளாவர். அவர்கள் விடுவிக்கப்படால் மக்களின் வாழ்க்கையை பாழாக்குவார்கள். அவர்களில் ஒவ்வொருவரும் ஆயிரம் அல்லது அதற்கும் அதிகமான சந்ததிகளை உருவாக்காமல் மரணிப்பதில்லை:”
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ரு(ரழி). நூல்: தப்ரானீ; இப்னு ஹஜர்.பத்ஹுல் பாரி.
ஒவ்வொரு ஆயிரம் பேர்களில் 999 பேர் நரகம் செல்பவர்கள்,மனிதர்களில் ஜனத்தொகையோடு யாஜுஜ்-மாஜுஜ் ஜனத்தொகையை ஒப்பிடும்போது,1: 999.ஒரு மனிதருக்கு 999 பேர் யாஜுஜ்-மாஜுஜ் கூட்டத்தினராக இருப்பார்கள்.இன்றைய மனித ஜனத்தொகை 750 கோடி மக்களிடையே Zombies தாக்குதல் ஏற்பட்டால் நூறாவது நாளில் மிஞ்சி இருப்பவர்கள் வெறும் 273 பேர் மட்டுமே…அப்படியென்றால் நம்மை விட 999 மடங்கு அதிகமான யாஜுஜ்-மாஜுஜ் கூட்டத்தினர் இறங்கும் போது,தப்பிப்பிழைக்கும் மனிதர்கள் வெகு சொற்பமே!
இது போன்ற ஸோம்பிகள் தாக்குதல் அமெரிக்காவில் பரவும்போது தப்பிப் பிழைப்பதற்கு மக்கள் ராக்கி மலைகளில் எறிக்கொள்ளவேண்டும் என்று இன்றைய ஆய்வாளர்கள் கூறுவது கவனிக்கத் தக்கது.
In a Zombie Outbreak, Head for the Rocky Mountains.
http://www.livescience.com/50016-best-place-to-hide-from-zombies.html
இன்று ஆய்வாளர்கள் கூறும் இக்கருத்தை அல்லாஹ் அன்றே அல்குர் ஆனில் கூறி,யாஜுஜ்-மாஜுஜ் கூட்டத்தினரிடமிருந்து தப்பிக்க “தூர்” மலையில் மக்களுடன் ஏறிக்கொள்ளும்படி, ஈஸா (அலை) அவர்களுக்கு வழி காட்டுகிறான்.
“ ஈஸா (அலை) அவர்களுக்கு அல்லாஹ்,”நான் என் அடியார்கள் சிலரை வெளிவரச் செய்துள்ளேன்,அவர்களுடன் போரிட யாருக்கும் ஆற்றல்.கிடையாது,எனவே,என் அடியார்களை (சினாயிலுள்ள) “தூர்” மலைக்கு அழைத்துச் சென்று பாதுகாப்பாக வையுங்கள்.” என்று வஹி அறிவிப்பான்.பின்னர் அல்லாஹ் யாஜுஜ்-மாஜுஜ் கூட்டத்தாரை அனுப்புவான்.
அறிவிப்பவர்: நவாஸ் இப்னு ஸம்ஆன் (ரழி) –முஸ்லிம்.5629.
அல் குர் ஆனில் அல்லாஹ் கூறும் அனைத்து செய்திகளும் கதையோ,கற்பனையோ அல்ல,அனைத்தும் ஞானமுள்ளவனும் பேரறிவாளனுமாகிய அல்லாஹ்விடமிருந்து வந்த சத்திய வாக்குகள்.இந்த சத்தியம் எப்போதும் உண்மை அறிவியலுக்கு என்றும் முரண்படாது.மாறாக அறிவியலை மெய்ப்படுத்தி அதற்கு சான்றாக விளங்கும்.
நிச்சயமாக நாம் அவர்களுக்கு ஒரு வேதத்தை கொடுத்தோம்.அதை நாம் பூரண ஞானத்தைக் கொண்டு விளக்கியுள்ளோம்; அது நம்பிக்கை கொள்ளும் மக்களுக்கு நேர் வழியாகவும் அருளாகவும் இருக்கிறது. — அல் குர்ஆன்.7:52.
{ 10 comments… read them below or add one }
natural aka iwwaru zombie oruwakkum oru anghi than “emerald cockroach wasp”. edu cockroach in head il neurotoxin i inject saidu athai zombie aka matri athan meedu egg edum.
ithan video you tube il ullathu. jezakallah.
MASHA ALLAH…
Assalamu alaikum warahmatullahi wa barakatuhu. Brothers stop comparing the verses of Allah to that of humans imagination. Allah’s verses are beyond the imagination of human thoughts. More over it is never a good example to compare a movie with the verses of Allah. Movie talks about disease whereas Allah talks about a well built generation from Adam pbuh. So Please stop taking these examples.
உடல் வளர்ச்சிக்கான ஹார்மோன் பிட்யூட்டரி சுரப்பியில் இருந்து வருவதால் அவை சரியாக இயங்காமல் போனால் எலும்புகளும் , தசைகளும் வளர்ச்சி அடையாமல் இருந்து விடும் . “யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தினருக்கு இந்த சுரப்பி சுரக்காததால் குள்ளமாக இருப்பார்கள் .
அஸ்ஸலாமு அலைக்கும்.
யஃஜூஜ் மஃஜூஜ் என்பவர்கள் நூஹ் நபியின் பரம்பரையில் வந்தவர்கள்.
அவர்கள் முழுமையாக தனிமைபடுத்தப்பட்ட மனித இனம். இதனால் அவர்களுக்கு எவ்வித வெளித்தொடர்பும் இல்லை. மற்றும் அவர்களின் இனப்பெருக்கமும் தமக்கிடையிலையே நடைபெறுகன்றது. அதாவது “in breeding”.
இதனால் அவர்களுக்கிடையில் காணப்படும் குறித்த இயல்புகள் (அவர்களின் தோற்றம்) வலிமை பெறுகின்றது.
அதாவது அங்கு உருவாகும் புதிய சந்ததிகள் யாவும் ஒரே தோற்றமுடையவர்களாக இருப்பர்.
இதை genetically ” hardy – weinberg low” என்பர்.
சகோதரரே! growth hormone ஆனது உடலின் வளர்ச்சி,விருத்தியுடன் தொடர்பானது. உயரத்துடன் மட்டுமல்ல.
jezakallah.
யஃஜுஜ், மஃஜுஜ் அவர்கள் படைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் விஞ்ஞான ரீதியாக மாற்றம் அடையப் போவதில்லை ஏனெனில் அல்குர்ஆன் அதை நன்றாக தெளிவுபடுத்துகின்றது. அது தொடா்பான ஆயத்துக்களை இங்கு பதிவிடுகிறேன்.
18:94. அவர்கள் “துல்கர்னைனே! நிச்சயமாக யஃஜூஜும், மஃஜூஜும் பூமியில் ஃபஸாது – குழப்பம் – செய்கிறார்கள்; ஆதலால், எங்களுக்கும், அவர்களுக்குமிடையே ஒரு தடுப்பு(ச் சுவரை) நீர் ஏற்படுத்தித் தரும் பொருட்டு நாங்கள் உமக்கு ஒரு தொகையைத் தரலாமா?” என்று கேட்டார்கள்.
18:95. அதற்கவர்: “என் இறைவன் எனக்கு எதில் (வசதிகள்) அளித்திருக்கிறானோ அது (நீங்கள் கொடுக்க இருப்பதைவிட) மேலானது; ஆகவே, (உங்கள் உடல்) பலம் கொண்டு எனக்கு நீங்கள் உதவி செய்யுங்கள்; நான் உங்களுக்கும், அவர்களுக்குமிடையே ஓர் உறுதியான தடுப்பை ஏற்படுத்தி விடுகிறேன்”என்றுகூறினார்.
18:96. “நீங்கள் இரும்புப் பாளங்களை எனக்குக் கொண்டு வாருங்கள்” (என்றார்). பிறகு அவை இரு மலைகளின் (இடையே நிரம்பி) உச்சிக்குச் சமமாகும் போது, ஊதுங்கள் என்றார்; அதனை அவர் நெருப்பாக ஆக்கியதும் (பின்னர் “உருக்கிய) செம்பை என்னிடம் கொண்டு வாருங்கள்; அதன் மேல் ஊற்றுகிறேன்” (என்றார்).
18:97. எனவே, (யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தார்) அதன் மீது ஏறவும் சக்தி பெறவில்லை, அதில் துவாரமிடவும் அவர்கள் சக்தி பெறவில்லை.
18:98. “இது என் இறைவனிடமிருந்துள்ள ஒரு கிருபையே ஆகும், ஆனால் என் இறைவனுடைய வாக்குறுதி நிறைவேறும்போது, அவன் இதனையும் தூள் தூளாக்கி விடுவான்; மேலும், என் இறைவனுடைய வாக்குறுதி (முற்றிலும்) உண்மையானதே” என்று கூறினார்.
18:99. இன்னும், அந்நாளில் அவர்களில் சிலரைச் சிலருடன் (கடல்) அலைகள் (மோதுவதைப் போல்) மோதுமாறு நாம் விட்டு விடுவோம்; பின்னர், ஸூர் (எக்காளம்) ஊதப்படும்; பிறகு நாம் அவர்களை ஒன்று சேர்ப்போம்.
எல்லாம் வல்ல றஹ்மானின் வாக்கு மட்டுமே உண்மை. மற்ற சிந்தனைகள், போக்குகள் அனைத்தும் வெறும் கற்பனையே.
ஆகவே, அல்லாஹ்வின் முன்அறிவிப்பைப் பற்றி போசும், எழுதும், பதிவிடும் போதும். நன்றாக சிந்தித்து செயற்படுவோம். வல்ல றஹ்மான் நம் அனைவருக்கும் நேர்வழி காட்டப் போதுமானவன்.
ஆனால் உலக இறுதிக்காலத்தில் உண்மையாகவே வெளிவர இருக்கும் ஸோம்பிகள் என்னும் யாஜுஜ்-மாஜுஜ் பெருங்கூட்டத்தின் பேரழிவில் சிக்கி பெரும்பான்மையான மக்கள் இறந்து விடுவார்கள். ///////// யாஜுஜ்-மாஜுஜ் வேறு கூட்டம் . ஸோம்பிகள் வேறு கூட்டம் . முன்பு அல்லாஹ்வால் அழிக்க பட்ட ஒரு நம்மை போன்று முழு வளர்ச்சி அடைந்த மனித சமுதாய கூட்டம் . இவர்கள் யாஜுஜ்-மாஜுஜ் கூட்டம் வரும் வரை திரும்ப மாட்டார்கள் . பார்க்க குரான்
21:95 وَ حَرٰمٌ عَلٰى قَرْيَةٍ اَهْلَكْنٰهَاۤ اَنَّهُمْ لَا يَرْجِعُوْنَ
21:95. நாம் எவ்வூரார்களை அழித்து விட்டோமோ அவர்கள் (திரும்பவும் இவ்வுலகம் வருவது) தடுக்கப்பட்டுள்ளது; நிச்சயமாக அவர்கள் திரும்ப மாட்டார்கள்.
21:96 حَتّٰٓى اِذَا فُتِحَتْ يَاْجُوْجُ وَمَاْجُوْجُ وَهُمْ مِّنْ كُلِّ حَدَبٍ يَّنْسِلُوْنَ
21:96. யஃஜூஜு, மஃஜூஜு (கூட்டத்தார்)க்கு வழி திறக்கப்படும் போது, அவர்கள் ஒவ்வொரு மேட்டிலிருந்தும் இறங்கிப் பரவுவார்கள்.
21.96 . hatta – until- வரை ——–என்ற வார்த்தை விடுபட்டு விட்டதால் விஷயமே மாறி போய் விட்டது .கட்டுரை ஆசிரியர் மீது எந்த தவறும் இல்லை மொழி பெயர்ப்பாளர் தவறு ./// நமக்கு தேவை வார்த்தைக்கு வார்த்தை மொழி பெயர்ப்பு குரான் இருந்தால் மட்டுமே குரானை நம்மால் அறிந்து புரிந்து கொள்ள முடியும் . யாரேனும் முயற்சி செய்யுங்கள் .
டாக்டர். முஹம்மது ஜான் . ஜான் டிரஸ்ட் நிறுவனம்,
ஆ.கா.அப்துல் ஹமீது பாகவி,தாருல் ஹுதா,
குத்புதீன் அஹ்மத் பாகவி, அப்துர் ரவூஃப் பாகவி,இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட்,
online pj – பி ஜைனுலாபிதீன்
quran kalvi .com
என நான் பார்த்த மொழி பெயர்ப்புகளிலும் இதே போல் hatta – until – வரை என்ற வார்த்தை விடுபட்டு உள்ளது . இவர்கள் அனைவருமே யாரோ ஒருவர் இடமிருந்து கோப்பி அடித்து சில வார்த்தைகளை மட்டும் தன சொந்த நடையில் மாற்றி குரானை மொழியாக்கம் செய்து விற்றுள்ளனர் என தெளிவாகிறது . இது குறை சொல்வதாக கருத வேண்டாம் . மேலும் குரான் மொழி பெயர்க்கும் போது ஒரு வார்த்தைக்கு ரெண்டு அர்த்தம் வரும் போது உதாரணமாக கலீபா – ( பிரதிநிதி , தொடர்ந்து வர கூடியவர் ) என்ற வார்த்தைக்கு இப்படி மொழி பெயர்க்க வேண்டும் . இல்லையேல் ஆலிம் பெரு மக்கள் நான் சொல்வது தான் சரி என கூறி முஸ்லீம் மக்களை பிரிக்கின்றனர் . பெரிய பட்டி மன்றமே நடத்தி நேரத்தையும் , பணத்தையும் வீணாக்குகின்றனர் .இந்த நிலை மாற வேண்டும் . வார்த்தைக்கு வார்த்தை மொழி பெயர்ப்பு வேண்டும் . மொழி பெயர்க்கும் போது குரான் வசனத்தில் உள்ள அத்தனை வார்த்தைகளும் இடம் பெற்று இருக்க வேண்டும் . செய்வீர்களா ????
நாம் இவ்வூராகளை அழித்து விட்டோமோ அவர்கள் அவர்கள்(அவ்வூருக்கு திரும்புவது) தடுக்கப்பட்டுள்ளது. நிச்சயமாக அவர்கள் திரும்பமாட்டார்கள். (எதுவரை என்றால்) 21:95
யஃஜூஜ் மஃஜூஜு கூட்டத்தாரை திறக்கும் போது அவர்கள் ஒவ்வொரு உயரத்திலும் பரவி இறங்கும் வரை(ஹத்தா) 21:96 (அவ்வூரார் திரும்ப மாட்டார்கள்) 21:95
நாம் இவ்வூராகளை அழித்து விட்டோமோ அவர்கள் அவர்கள்(அவ்வூருக்கு திரும்புவது) தடுக்கப்பட்டுள்ளது. நிச்சயமாக அவர்கள் திரும்பமாட்டார்கள். (எதுவரை என்றால்) 21:95
யஃஜூஜ் மஃஜூஜு கூட்டத்தாரை திறக்கும் போது அவர்கள் ஒவ்வொரு உயரத்திலும் பரவி இறங்கும் வரை(ஹத்தா) 21:96 (அவ்வூரார் திரும்ப மாட்டார்கள்) 21:95