பேய், பிசாசு, ஏலியன் = ஜின்கள்

Post image for பேய், பிசாசு, ஏலியன் = ஜின்கள்

in அறிவியல்

அல்குர் ஆன் வழியில் அறிவியல்………..

 ஆதி காலத்திலிருந்து இன்றைய அறிவியல் காலம் வரை மனிதர்கள்  பயப்படுவது ஒன்றே ஒன்றுக்குத்தான் அதுதான் பேய், பிசாசு. உண்மையில் பேய்,பிசாசு உலகில் உள்ளனவா? என்று கேட்டால், “உளன் எனில் உளன், அலன்  எனில் அலன்”, “உண்டு என்றால் அது உண்டு…இல்லை என்றால் அது இல்லை….” என்று கடவுள் நிலைதான் பேய்க்கும் என்றே கூறுவார்கள்.

 இஸ்லாத்தை பொறுத்தவரையில் பேய், பிசாசு என்று ஒன்று இல்லை. இறந்தவர்கள் ஆவி பேயாக உலவும் என்ற கருத்து இஸ்லாமியக் கொள்கைக்கு முரணானது. ஆனால் மற்ற மதங்களில் பேய், பிசாசு உலா வர தாராள இடம் உள்ளது. குறிப்பாக இந்து மதத்தில்,

“வல்ல பூதம் வாலாஷ்டிக பேய்கள்
அல்லல் படுத்தும் அடங்கா முனியும்,
பிள்ளைகள் தின்னும் புழக்கடை முனியும்,
கொள்ளிவாய்ப்பேய்களும் குறளைப் பேய்களும்,

பெண்களைத் தொடரும் ப்ருமராட்சதரும்,
அடியேனைக் கண்டால் அலறிக்கலங்கிட….”  என்று வாசிக்கும் பேய்க் காப்பு  “சஷ்டிக்கவசம்”  உள்ளன.   

கடவுளாகிய இயேசு கிறிஸ்த்துவை பிசாசு 40 நாள் சோதித்ததாக பைபிள் கூறுகிறது. (மத்தேயு-4:1) இயேசு கிறிஸ்து பேயோட்டிய சம்பவத்தையும் பைபிளில் காணலாம். (மத்தேயு-12:24) இஸ்லாம் மட்டுமே,பேய்,பிசாசு இல்லவே இல்லை என்று உறுதியாக கூறுகிறது. படைத்த இறைவனுக்கு மட்டும் பயப்படுங்கள். படைப்பினங்கள் எதற்கும் பயப்படக் கூடாது என்பதே இஸ்லாம். மூட நம்பிக்கைகளுக்கு அல்குர்ஆன் மற்றும் ஹதீஸில் இடமில்லை. ஆனாலும் மற்ற மதங்களில் உள்ள புரோகிதர்களை போல இஸ்லாம் மார்க்கத்திலும் மூட நம்பிக்கைகளை முல்லா புரோகிதர்கள் தம் சுய நலனுக்காக புகுத்தி விட்டதை மறுக்க முடியாது.

 இன்று உலகில் நடக்கும் சில அமானுசிய சம்பவங்கள், அறிவியலுக்கு அப்பாற்ப்பட்ட செய்திகள் பேய் உண்டு என்று கூறுபவர்களுக்கு பெரிய ஆதாரமாக உள்ளது. இன்றும் கிராம உக்கிர குல தெய்வங்களான அய்யனார், முனி, காளி கோவில்களில் நடக்கும் பேயோட்டும் சடங்குகள். மற்றும் நாகூர், ஏர்வாடி தர்கா சமாதி, சர்ச்களில் பேய் ஓட்டும் நிகழ்ச்சிகள், பேய் நம்பிக்கையை பெரிதும் வளர்க்கின்றன.

 இன்றைய அறிவியல் உலகம் பேய், பிசாசு கதைகளை ஏற்றுக்கொள்வதில்லை. இவை வெறும் மூட நம்பிக்கையே  என ஒதுக்கிவிட்டன. அதேசமயம் ஏலியன் என்று கூறப்படும் வேற்று கிரகவாசிகள், நம்மைப்போன்ற உயிரினம் இருக்க வேண்டும் என அறிவியல் உலகம்  நம்புகிறது. கடந்த 40 ஆண்டு காலமாக ஏலியன்களை “SETI” (Search for extra-Terrestrial Intelligence) அறிவுப்பூர்வமாக ரேடியோ தொலைநோக்கி மூலம் தேடி வருகிறார்கள்.

மலக்கு, ஜின், மனிதன்

இறைவனது பெரும் படைப்பில் மூன்று இனம் உள்ளது. முதலில் ஒளியால் (LIGHT) படைக்கப்பட்டவர்கள் மலக்குகள் (ANGELS), இரண்டாவது ஜின்கள்  (JINN) இவை நெருப்புக்கொழுந்தின் (FIRE-Smokeless Flame, (Plasma) மூலம் படைக்கப்பட்டவர்கள். ஒளியால் படைக்கப்பட்ட மலக்குகள் எப்பொழுதும் இறைவனின் ஆணைக்கு கட்டுப்பட்டு அவனுக்கு துதி செய்பவர்கள். அவனது கட்டளைக்கு மாறு செய்யாதவர்கள்.

நெருப்பினால் படைக்கப்பட்ட ஜின்கள் சுதந்திர சிந்தனையுடன் படைக்கப்பட்டார்கள். இறுதியில் களிமண்ணின் சத்தைக்கொண்டு படைக்கப்பட்ட மனிதனும் ஜின்களைப்போல பகுத்தறிவோடு படைக்கப்பட்டான். மனு, ஜின்களை படைத்த நோக்கத்தை அல்லாஹ் கூறுகிறான்.

“ஜின்களையும்,மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை.” -அல்குர்ஆன்.52:56.

  “களிமண்ணிலிருந்து, அவன் மனிதனைப்படைத்தான். நெருப்புக்கொழுந்திலிருந்து அவன் ஜின்களைப் படைத்தான்” -அல்குர்ஆன்.55:14,15.

களிமண்ணிலிருந்து படைக்கப்பட்ட மனிதன் உடம்பு களி மண்ணாக இல்லை, இரத்தமும் தசையுமாகவே உள்ளது. அதேசமயம் மண்ணில் உள்ள அனைத்து சத்துக்களும் (Minerals) மனித  உடலில் உள்ளது. இது போலவே நெருப்புச் சுடரிலிருந்து படைக்கப்பட்ட ஜின்கள் நெருப்பு சுவாலையாக இருப்பதில்லை. ஆனால் நெருப்பின் பண்பான வெப்ப ஆற்றலைக் (Plasma-Radiant energy) கொண்டுள்ளார்கள்.

பிளாஸ்மா நிலையில் ஜின்கள்

உலகில் ஒவ்வொரு பொருளும் திட,திரவ,வாயு என மூன்று நிலைகளில் இருக்கின்றன. மூன்றாவது நிலையான வாயுவை உஷ்ணப்படுத்தும்போது அணு தனது எலக்ட்ரான்களை இழந்து நேர் மின்,எதிர் மின் அயனிகள் தனித்தனியாக பிரிந்து (Plasma) பிளாஸ்மாவாக மாறுகிறது.

புகையற்ற நெருப்புக் கொழுந்தினால் (Smokeless Flame-Plasma) படைக்கப்பட்ட ஜின்கள் இறைவனின் கட்டளைக்கு மாறு செய்ததால் இறைவனிடமிருந்து தூரமாக்கப்பட்டு ஷைத்தான்களாக, வெளியேற்றப்பட்டனர். ஆனாலும் நல்ல ஜின்களும் இருக்கின்றனர். இறுதிக்காலம் வரையிலும் இவர்களுக்கு சில சக்திகளை, ஆற்றலை இறைவன் கொடுத்துள்ளான். இதைக்கொண்டே கெட்ட ஜின்கள் (ஷைத்தான்) மனிதர்களை ஏமாற்றி வழி கெடுக்கின்றனர்.

மனிதர்களைப்போல் மூன்று நிலைகளில் (3 டைமேன்சன்) இல்லாமல் நான்காவது நிலையான பிளாஸ்மா எனும் உருவமற்ற நிலையில் இருப்பதால் இவர்களால் அண்டவெளி முழுவதும் குறுகிய நேரத்தில் சுற்றிவர முடியும். இடம், காலம் வெளி, இவர்களுக்கு பொருட்டல்ல!

ஏழு வானங்களில் தாழ்வான வானத்தில் நட்சத்திரத்தை படைத்திருப்பதாக அல்லாஹ் கூறுகிறான். இந்த தாழ்வான வானம் வரை ஜின்கள் சென்று வர ஆற்றல் பெற்றுள்ளனர் என்பதை அல்குர்ஆன் மூலம் அறியலாம்.

 “திடமாக நாமே (பூமிக்குச்) சமீபமாக இருக்கும் வானத்தை (நட்சத்திர) விளக்குகளைக் கொண்டு அலங்கரித்திருக்கிறோம்.

இன்னும் அவற்றை ஷைத்தான்களை (ஜின்கள்) விரட்டும் எரி கற்களாகவும் நாம் ஆக்கினோம்.  –அல் குர்ஆன். 67:5,41:12.

இன்று பேசப்படும் ஏலியன்கள், என்னும் வேற்று கிரகவாசிகள் இஸ்லாம் கூறும் ஜின்களே! ஜின்கள் நம்மோடு நம் பூமியிலும் வசிக்கின்றன, பிரபஞ்ச பெருவெளியிலும் வாழ்கின்றன. நம் கண்களால் இவைகளைக்  காண முடியாது. ஆனால் அவைகளால் நம்மை பார்க்க முடியும். ஜின் என்ற அரபிச் சொல்லுக்கு மறைக்கப்பட்ட என்ற பொருள்.

உதாரணமாக நமது இதயத்தை நம் கண்ணால் காண முடியாது. உடலின் உள்ளே நெஞ்சில் இதயம் மறைக்கப்பட்டுள்ளது. ஜான் (இதயம்) என்ற சொல் வந்ததின் காரணம் இதுதான். ஜின்கள் வெப்பத்தால் படைக்கப்பட்டதால் நம் கண்களுக்கு தெரிவதில்லை. மின்காந்த வெப்ப அலை வடிவில் உள்ளனர். (Electromagnetic-Plasma Radiant Energy)

மேலும் ஜின்களால் மனிதர் உருவில் வர முடியும். மேலும் கருப்பு நாய்,யானை,பாம்பு போன்ற உருவில் வரும் சக்தி கொடுக்கப்பட்டுள்ளது. மாலை இருள் சூழும் நேரங்களில் குழந்தைகளை வெளியில் விட வேண்டாம், அது ஜின்கள் வெளிவரும் நேரம் என நபி (ஸல்) அவர்கள் கூறியது கவனிக்கத்தக்கது. காத்து,கருப்பு அடித்துவிடும் என நமது  கிராமங்களில் கூறுவது அனைவரும் அறிந்ததே!

இருள் சூழ்ந்த இரவு,கருப்பு நாய்,யானை,பன்றி போன்ற கருப்பு நிற பிராணி உருவங்களை  ஜின்கள் தேர்வு செய்யக்காரணம் என்ன? நெருப்பு வெப்பத்தால் படைக்கப்பட்ட ஜின்கள்  (Thermochromic  aliens change colors at different temperature  in the visible and invisible spectrum.)

http://www.indiadaily.com/editorial/20467.asp

தங்களை மறைத்துக்கொள்வதற்கு (Camouflage) கருப்பு நிறத்தை தேர்வு செய்வது அறிவியல் ரீதியாக சரியானதே. சூரிய ஒளியில் உள்ள வெப்ப அலைகளை உள்ளிழுத்துக் கொள்ளும் தன்மை கருப்பு நிறத்துக்கு மட்டுமே உண்டு.

மழைக் காலத்தில் கருப்புக் குடை பிடிப்பது சரியானது. ஆனால் கோடை காலத்தில் கருப்பு குடைகள் வெப்பத்தை உள்ளிழுக்கும் தன்மை கொண்டதால் வெண்மை நிற குடைகளே சிறந்தது. ஏனெனில் வெண்மை நிறம் சூரிய வெப்பத்தை பிரதிபலித்து திருப்பி மேலே அனுப்பும் தன்மை அனைவரும் அறிந்ததே.

கடும் வெப்பத்தால் படைக்கப்பட்டு, பிளாஸ்மா நிலையில் உள்ள ஜின்கள் உருவம் மாறி வரும்போது வெப்பத்தை இழுக்கும் தன்மை கொண்ட கருப்பு நிற உருவில் தங்களை மறைத்துக் கொள்ளுகின்றனர். மேலும் மற்ற நிறங்களை விட கருப்பு நிறமானது கன பரிமாணங்களையும் மறைக்கும் தன்மை கொண்டது. பொதுவாக பெண்களின் பர்தா துணிகள் கருப்பு நிறத்தில் இருக்கும் காரணமும் இதுவே.

சில சமயம் இரவு நேரங்களில் அமானுஷிய உருவங்களை (பேய்?) பார்ப்பவர்கள் அது கருப்பு நிறத்தில் இருந்ததாகவும் அந்த இடம் சில்லென குளிர்ச்சியுடனோ அல்லது அதிக வெப்பத்துடன் இருந்ததாகவோ குறிப்பிடுவார்கள். காரணம் இதுதான், வெப்ப தன்மையுள்ள ஜின்கள் வெப்பத்தை தன்னுள் ஈர்த்துக்கொள்ளும் கருப்பு நிறத்தை (Adaptation) தெரிவு செய்து தங்களை மறைத்து கொள்கின்றன.

ஜின்கள்  மின்காந்த அமைப்புடைய (Electromagnetic) உடலைப் பெற்றவை. அவ்விடத்தில் உள்ள வெப்பத்தை அவை கிரகித்துக் கொள்வதால் அவ்விடம் குளிர்ந்து சில்லென்றிருக்கும். தன் உடம்பிலிருந்து  அகச்சிவப்பு கதிர்களை (Infra-Red Rays)  வெளியிடுவதால் அவ்விடம் திடீரென்று வெப்பமாகும்.

1927 ல் சர்.பிரான்சிஸ் யங்ஹஸ்பெண்ட் என்பவர் ஒரு நூல் எழுதுகிறார். (”Life in Star ”by Sir.Fransis Younghusband-Published. John Murray-London.) “நட்சத்திரங்களில் உயிர்கள்”. இதில் நட்சத்திரங்களில் உயிரினங்கள் வசிக்க வாய்ப்புள்ளது என்று கூறியிருந்தார். நமது சூரியனும் ஒரு நட்சத்திரமே.

1980 ல் விஞ்ஞானிகள் (G.Feinberg & R.Shapiro) பெய்ன் பர்க், மற்றும் ஷாப்பிரோ ஒரு ஆய்வு நூல் எழுதுகிறார்கள் “Life Beyond Earth” பூமிக்கு அப்பால் உயிர்கள். (Published by  William Morrow and co.Inc.New York-1980.) அதில் அவர்கள், நட்சத்திரம் மற்றும் நமது சூரியனின் பிளாஸ்மாக்களில் வேறு உயிரினங்கள் வாழ்வதற்கு வாய்ப்புள்ளது என்றும் இவ்வுயிரினங்களுக்கு பிளாஸ்மா பீஸ்ட் (Plasma Beast) என்று பெயரிட்டனர்.

பூமியில் கார்பன் மற்றும் நீரின் இரசாயன மாற்றத்தால் வாழும் மனிதன் மற்றும் பல ஜீவ ராசிகள் இரசாயன உயிரிகளாக (Chemical Life) இருப்பது போல் சூரியனின் பிளாஸ்மா வெப்பத்தில் வாழும் ஜின்கள் இயற்பியல் உயிரினமாக (Physical life) இருக்கலாம். இவைகள் சூரியக் கதிர்களை சக்தியாக கிரகித்து (Radiant energy) செயல்படலாம்.

பிரபஞ்சத்தில் பிளாஸ்மா உயிர்கள்

சூரிய வெப்பத்தில் உருவாகும் பிளாஸ்மாக்கள் பிரபஞ்சத்தில் உள்ள தூசு (Cosmic Dust) உடன்  சேர்ந்து மின்னூட்டம் பெற்று பூமியில் உள்ள DNA உயிர்கள் போன்று மாறுவதாக ஜெர்மனி மாக்ஸ் பிளாங்க் ஆய்வகம் கூறுகிறது.

Could alien life exist in the form of DNA-shaped dust?   http://www.newscientist.com/article/dn12466-could-alien-life-exist-in-the-form-of-dnashaped-dust.html#.UdV04Nz2Ndg

  • ·                           Could alien life exist in the form of dancing specks of dust? According to a new simulation, electrically charged dust can organise itself into DNA-like double helixes that behave in many ways like living organisms, reproducing and passing on information to one another.

“This came as a bit of a surprise to us”, says Gregor Morfill of the Max Planck Institute for Extraterrestrial Physics in Garching, Germany. He and colleagues have built a computer simulation to model what happens to dust immersed in an ionised gas, or plasma.

இதே ஆய்வை விண்வெளியில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் ( ISS- International Space Station) ரஷ்ய விஞ்ஞானிகள் நிகழ்த்தி பிளாஸ்மா உயிர் உருவாவதை கண்டு பிடித்தனர். இந்த ஆய்வு இன்னும் ஆரம்ப நிலையில் உள்ளது. http://www.nasa.gov/mission_pages/station/research/experiments/PK-3_Plus.html


Are we living in a Plasma Brain?
பிரபஞ்சத்தில் பிளாஸ்மா ஜின்கள்

பூமியில், விளக்கு சுடர், பிளோரசன்ட், நியான் விளக்குகள் மற்றும் இடி மின்னலின்போதும் பிளாஸ்மா உருவாகிறது. விண்வெளி முழுவதும் 99% (Ionised Plasma) பிளாஸ்மாவே நிறைந்திருக்கிறது. நமது பிரபஞ்சம் 96% கரும் சக்தி,கரும் பிண்டம் (Dark Energy & Dark Matter) நிறைந்த இருள் வெளி.

நெருப்புச் சுடரில் (பிளாஸ்மா) ஜின்கள் படைக்கப்பட்டு இருப்பதால், இதனை எளிதாக விளக்க, ஜின்கள் மிகச் சிறிதாக ஒடுங்கி சுருங்கி பிரமாண்ட உருவமாக விரிவடையும் ஆற்றல் உள்ளவர்கள் என்பதை அறிந்து கொள்ளவும்.  அரபியர்கள் புகழ் பெற்ற “அலாவுதீனும் அற்புத விளக்கும்” என்ற நூலை உலகிற்கு அளித்தனர்.

ஏலியன்களை தொடர்பு கொள்ள ரேடியோ அலை தொலை நோக்கி (Radio Telescope) மூலம் கடந்த ஐம்பது வருடங்களாக கடும் முயற்சி செய்தும் பலனில்லை இதுவரை பதிலில்லை. காரணம் ரேடியோ அலைகளால் ஏலியன்-ஜின்களை தொடர்பு கொள்ள முடியாது. ஏனெனில் ஜின்கள் எலெக்ட்ரோ மாக்னடிக் ரேடியன்ட் ஆற்றல் உள்ளவர்கள். கடும் பிளாஸ்மா வெப்பத்தில் படைக்கப்பட்டவர்கள். அகச் சிவப்பு கதிர்களை வெளியிடக்கூடியவர்கள்.

இந்த மாதம் ஜூன் 2013 ல்  வெளிவந்த புகழ்பெற்ற “ASTRONOMY” இதழில் பிரபல்யமான ஐந்து விண்ணோக்கி ஆய்வாளர்கள் செய்த ஆய்வு முடிவு  வெளி வந்தது. கடந்த நாற்பது வருடமாக ரேடியோ டெலஸ்கோப் (Radio Telescope) மூலம் ஏலியன் என்னும் பிற உயிரினத்தை தேடி அலைந்து  தோல்வியுற்றார்கள்.

காரணம் பிரபஞ்சத்தில் வெப்பத்தை அடிப்படையாக கொண்ட உயிரினங்கள் உள்ளதாகவே ஆய்வுகள் கூறுகின்றன. (“The energy footprint of life and civilization appears as infrared heat radiation,” says Kuhn, the project’s lead scientist University of Hawaii’s Institute for Astronomy,.) எனவே வெப்பத்தை தேடும் (Heat Seeking) அகச் சிவப்பு கதிர் தொலைநோக்கி (Infra-Red Telescope) மூலம் இனி தொடர்பு கொள்ள முடிவு செய்துள்ளார்கள். இந்த தொலை நோக்கி (The Colossus Telescope) ஒரு பில்லியன் டாலர் செலவில் தயாரிக்கப்பட்டு இன்னும் ஐந்து ஆண்டுகளில் செயல்பாட்டுக்கு வருமாம்.

இறுதியில் அல்குர்ஆன் கூறும் ஜின்கள்(ஏலியன்) கடும் வெப்பமுடைய நெருப்பு கொழுந்து சுவாலையால் (பிளாஸ்மா) படைக்கப்பட்டார்கள் என்ற உண்மையை மேலை நாட்டு அறிவியல் உலகம் இன்று ஏற்றுக்கொண்டு விட்டது. அல்ஹம்துலில்லாஹ்!

“எவருக்கு கல்வி ஞானம் அளிக்கப்பட்டிருக்கின்றதோ அவர்கள், நிச்சயமாக இவ்வேதமானது உம்முடைய இறைவனிடமிருந்துள்ள உண்மை என்று அறிந்து அதன் மீது விசுவாசம் கொள்வதற்காகவும் (அவ்வாறு செய்தான், அதன் பயனாக) அவர்களுடைய இருதயங்கள் அவன் முன் முற்றிலும் வழிப்பட்டுப் பணிகின்றன; மேலும்: திடனாக அல்லாஹ் விசுவாசம் கொண்டவர்களை நேரான வழியில் செலுத்துபவனாக இருக்கின்றான்.” –அல்குர்ஆன். 22:54.

 
அல்லாஹ் மிக அறிந்தவன்.

–எஸ்.ஹலரத் அலி-ஜித்தா.

{ 45 comments… read them below or add one }

Imran July 6, 2013 at 9:39 am

“திடமாக நாமே (பூமிக்குச்) சமீபமாக இருக்கும் வானத்தை (நட்சத்திர) விளக்குகளைக் கொண்டு அலங்கரித்திருக்கிறோம்.

இன்னும் அவற்றை ஷைத்தான்களை (ஜின்கள்) விரட்டும் எரி கற்களாகவும் நாம் ஆக்கினோம். –அல் குர்ஆன். 67:5,41:12.”

ஷைத்தான்களா ? ஜின்களா ? எது சரி?..குரான் குறிப்பிடுவது எது?

Reply

Kadher July 9, 2013 at 12:04 am

Imran Bhai,

அஸ்ஸலாமு அழைக்கும்,

ஷைத்தானும் ஜின்னும் ஒன்றுதான். அல்லாஹ் ஜின்களை நெருப்பில் இருந்தில் படைத்தான். இப்லிஸ் ஜின்களில் ஒருவன். அவனே அல்லாஹ்விற்கு மாறு செய்தான்.

பின்னர் நாம் மலக்குகளை நோக்கி, “ஆதமுக்குப் பணி(ந்து ஸுஜூது செய்)யுங்கள்” என்று சொன்னபோது இப்லீஸைத்தவிர மற்ற அனைவரும் சிரம் பணிந்தனர்; அவன்(இப்லீஸு) மறுத்தான்; ஆணவமும் கொண்டான்; இன்னும் அவன் காஃபிர்களைச் சார்ந்தவனாகி விட்டான். 2:34.

“நான் உனக்குக் கட்டளையிட்ட போது, நீ ஸஜ்தா செய்யாதிருக்க உன்னைத் தடுத்தது யாது?” என்று அல்லாஹ் கேட்டான்; “நான் அவரை (ஆதமை)விட மேலானவன் – என்னை நீ நெருப்பினால் படைத்தாய், அவரை களிமண்ணால் படைத்தாய்” என்று (இப்லீஸ் பதில்) கூறினான். 7:12.

ஜின்களில் நல்ல ஜின்களும் உள்ளன.
இன்னும் அவற்றை ஷைத்தான்களை (ஜின்கள்) விரட்டும் எரி கற்களாகவும் நாம் ஆக்கினோம். –அல் குர்ஆன். 67:5,41:12.”

இந்த வசனத்தில் அல்லாஹ் கெட்ட ஜின்கள் அதாவது ஷைத்தான்களை குறிப்பிடுகின்றான் . கெட்ட ஜின்கலே ஷைத்தான்கள்.

நான் கூறியதில் எதாவது பிழை இருந்தால் மன்னிக்கவும்.

அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்…!!!

Reply

rifath ahamed August 21, 2014 at 8:09 pm

iblees saithan koottathin thalaivan ibleesai pin patrum koottathinar saithankal avarhal jinkalilum undu manitharhalilum undu

Reply

A.ABDULRAJAK September 9, 2014 at 9:58 pm

“நான் உனக்குக் கட்டளையிட்ட போது, நீ ஸஜ்தா செய்யாதிருக்க உன்னைத் தடுத்தது யாது?” என்று அல்லாஹ் கேட்டான்; “நான் அவரை (ஆதமை)விட மேலானவன் – என்னை நீ நெருப்பினால் படைத்தாய், அவரை களிமண்ணால் படைத்தாய்” என்று (இப்லீஸ் பதில்) கூறினான். 7:12.

dear brothers
நெருப்பினால், களிமண்ணால்

translators shall aware the preposition arabic word min means FROM, but here translated as a BY. SO the entire ayath give different meaning. so translated as a from fire , from clay.

Reply

syedibrahimali badusha July 11, 2013 at 1:47 am

அருமை தெளிவான பதிவு…சகோ

Reply

Hajira July 25, 2013 at 3:42 pm

Masha allah.exellent defenition.zaadhakallahu ilmuk.

Reply

abuthaheer July 27, 2013 at 1:26 pm

Allaha is great…very good scientific reason…

Reply

Mohammed Rishad. October 10, 2013 at 2:49 am

Nan irandam pakuthiyan jin saithan ivaikalai etrukolkiren anal neengal pei pisasu illai endreerkal. athai nan etkavillai. neenkal ithatkaka vethankalil irunthum bible ilirunthum atharam thantheerkal. neenkal kavanikka thavariyathu athavathu antha vethankalum intha saithan jinkalai patri than pesukirathu. athatkuriya vevveru molikalil vevveru peyarkalai koorukirathu. utharanam neer enbathatku angilaththil water, arabiyil maya. ithepol than ippeyarkalum. peyarin viththiyasaththai purinthukoollunkal. avi pei pisasu ellame saithan matrum jinkal than..

Reply

abdulrajak October 20, 2013 at 12:08 am

dear risad

பேய், பிசாசு, ஏலியன் = ஜின்கள்
see the heading is above , the author clearly mentioned. there is nodoubt pei , pisasu and botham all are jinns or bad jinns called saitans.

இஸ்லாத்தை பொறுத்தவரையில் பேய், பிசாசு என்று ஒன்று இல்லை. இறந்தவர்கள் ஆவி பேயாக உலவும் என்ற கருத்து இஸ்லாமியக் கொள்கைக்கு முரணானது.
here the writer is going to say the other religion people is called pei is derivated from death people spritual. so author cleared mentioned. nothing wrong. Interpertation and understanding is important

Reply

ym.sarjoon October 30, 2013 at 1:02 pm

today i got clearness about jins. alhamthulillah

Reply

Mohamed Ali November 5, 2013 at 7:08 pm

Fantastic abrevation!!!!

Reply

Abdur Rahman November 16, 2013 at 10:54 am

சைத்தான் நம்மை நெருங்காமல் இருக்க நாம் என்ன செய்ய வேண்டும்

Reply

fathima November 18, 2013 at 4:28 pm

recite sura ihlas(kul huwallahu ahad) ,sura falaq (kul audu birabbil falaq) and sura naas (kul audu birabbinnas) 3 times every morning and evening……….

Reply

Abdur Rahman November 28, 2013 at 4:05 pm

jazakkir allah hiroon

Reply

Rizwan November 25, 2013 at 7:44 pm

ஷைத்தான் வேலை செய்யாதிருக்க இருக்கவேண்டும்

Reply

PREMNAZEER April 25, 2014 at 6:14 pm

ALLAVAI DHIKR PANNINAL SAITHAN NABBAI NERKUVATHUILAI

Reply

Nasreen saga November 24, 2013 at 11:15 am

Masha allah. i gain a lot of information.

Reply

Abdur Rahman November 28, 2013 at 4:07 pm

சைத்தான் பயம் போகவும் மனம் தைரியம் பெறவும் என்ன செய்ய வேண்டும்

Reply

Rizwan December 18, 2013 at 11:54 am

சைத்தான்களின் பாதிப்பு matum alla…., ALLAHvin padaippukkal anaiththil Erunthum Paathukappup pera Owworu Naalum Kaalai, Maalai 3-3 Murai AUOOTHU BIKALIMAATHTHILLAHITH THAAMMAATHI MIN SHARRI MAA HKALAK enru Oathi warawum. Anupawaththil Kanda UNMAI ethu( Udalil vishamum Eraathu….)

Reply

Abdur Rahman November 28, 2013 at 4:54 pm

சைத்தான்களின் பாதிப்பு மனிதர்களை எவ்வாறு எப்படி பாதிக்கும். அவற்றிலிருந்து பாதுகாப்பு பெறுவது எப்படி

Reply

A.ABDULRAJAK September 18, 2014 at 3:54 pm

dear brothers
one type of jinn IBLIS became as a saitan amongs jinn . he has decendants. their duties are psychology effect in brain of humans. Not Physiology effect.

18:50. அன்றியும், “ஆதமுக்கு ஸுஜூது செய்யுங்கள்” என்று நாம் மலக்குகளிடத்தில் கூறியதை (நபியே!) நினைவு கூர்வீராக; அப்போது இப்லீஸைத்தவிர, அவர்கள் ஸுஜூது செய்தார்கள்; அவன் (இப்லீஸ்) ஜின் இனத்தைச் சேர்ந்தவனாக இருந்தான்; அவன் தன் இறைவனுடைய கட்டளையை மீறி விட்டான்; ஆகவே நீங்கள் என்னையன்றி அவனையும் அவன் சந்ததியாரையும் (உங்களைப்) பாதுகாப்பவர்களாக எடுத்துக் கொள்வீர்களா? அவர்களோ உங்களுக்குப் பகைவர்களாக இருக்கிறர்கள்; அக்கிரமக்காரர்கள் (இவ்வாறு) மாற்றிக் கொண்டது மிகவும் கெட்டதாகும்
14:22. (மறுமையில் இவர்கள் பற்றித்)தீர்ப்புக் கூறப்பெற்றதும் ஷைத்தான் (இவர்களை நோக்கி) “நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு உண்மையான வாக்குறுதியையே வாக்களித்திருந்தான்; நானும் உங்களுக்கு வாக்களித்திருந்தேன் – ஆனால் நான் உங்களுக்குக் கொடுத்த வாக்கில் மாறு செய்து விட்டேன். நான் உங்களை அழைத்தேன்; அப்போது நீங்கள் என் அழைப்பினை ஏற்றுக் கொண்டீர்கள் என்பதைத் தவிர எனக்கு உங்கள் மீது எந்த அதிகாரமுமில்லை; ஆகவே நீங்கள் என்னை நிந்திக்காதீர்கள்; உங்களையே நீங்கள் நிந்தித்து கொள்ளுங்கள்; உங்களை நான் காப்பாற்றுபவன் இல்லை; நீங்களும் என்னைக் காப்பாற்றுகிறவர்களில்லை. நீங்கள் முன்னால் என்னை (அல்லாஹ்வுக்கு) இணையாக்கிக் கொண்டிருந்ததையும், நிச்சயமாக நான் நிராகரித்து விட்டேன் – நிச்சயமாக அக்கிரமக்காரர்களுக்கு நோவினை மிக்க வேதனை உண்டு” என்று கூறுவான்.

7:200. ஷைத்தான் ஏதாவதொரு (தவறான) எண்ணத்தை உம் மனத்தில் ஊசலாடச் செய்து (தவறு செய்ய உம்மைத்) தூண்டினால், அப்போது அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுவீராக! மெய்யாகவே அவன் செவியேற்பவனாகவும், (யாவற்றையும் நன்கு) அறிபவனாகவும் இருக்கின்றான்
7:201. நிச்சயமாக எவர்கள் (அல்லாஹ்வுக்கு) அஞ்சுகிறார்களோ, அவர்களுக்குள் ஷைத்தானிலிருந்து தவறான எண்ணம் ஊசலாடினால், அவர்கள் (அல்லாஹ்வை) நினைக்கின்றார்கள் – அவர்கள் திடீரென விழிப்படைந்து (ஷைத்தானின் சூழ்ச்சியைக்) காண்கிறார்கள்.

second type of saitans from human, jinn and other creatures can affect Physiology effect. NOT psychology effect .
THIS WAS FOR SOLOMON ( PBUH)
38:37. மேலும், ஷைத்தான்களிலுள்ள கட்டடங்கட்டுவோர், முத்துக்குளிப்போர் ஆகிய யாவரையும்
38:38. சங்கிலியால் விலங்கிடப்பட்டிருந்த வேறு பலரையும்
38:39. “இது நம்முடைய நன்கொடையாகும்; (நீர் விரும்பினால் இவற்றைப் பிறருக்குக் கொடுக்கலாம், அல்லது கொடாது நிறுத்திக் கொள்ளலாம் – கேள்வி கணக்கில்லாத நிலையில் (என்று நாம் அவரிடம் கூறினோம்).

THIS WAS FOR AYYUB (PBUH)
38:41. மேலும் (நபியே!) நம்முடைய (நல்) அடியார் அய்யூபை நினைவு கூர்க! அவர் தம் இறைவனிடம், “நிச்சயமாக ஷைத்தான் எனக்குத் துன்பத்தையும், வேதனையையும் கொடுத்து விட்டான்” (என்று கூறிய போது);

Reply

A.ABDULRAJAK September 18, 2014 at 5:18 pm

Please read as for AYYUB(pbuh)
Third type of saitans from human, jinn and creatutres can affect both Physiology and psychology effect or vice versa.

Reply

sadaq December 9, 2013 at 6:54 pm

assalamu alaikum.thank you for detail information.jazakallah

Reply

abdul jabbar January 14, 2014 at 7:42 pm

“திடமாக நாமே (பூமிக்குச்) சமீபமாக இருக்கும் வானத்தை (நட்சத்திர) விளக்குகளைக் கொண்டு அலங்கரித்திருக்கிறோம்.

இன்னும் அவற்றை ஷைத்தான்களை (ஜின்கள்) விரட்டும் எரி கற்களாகவும் நாம் ஆக்கினோம். –அல் குர்ஆன். 67:5,41:12.”
allahvin meedu aanaiyaga nam ithanai nambuhinroom.
neruppinal padaikkapatta jinkal nerupp karkalal virattappadumaa..

Reply

a.abdulrajak January 21, 2014 at 2:11 pm

dear brother
THE FIRST HUMAN was created from essence of clay but we are not clay, we have blood ,skin, bone , flesh etc–. JINS was created by from a smokeless flame of fire but jins are not fire now . they live some visible and some invisible body or matter . surely they can affect by fire.

Reply

abdul jabbar January 14, 2014 at 7:50 pm

“திடமாக நாமே (பூமிக்குச்) சமீபமாக இருக்கும் வானத்தை (நட்சத்திர) விளக்குகளைக் கொண்டு அலங்கரித்திருக்கிறோம்.

இன்னும் அவற்றை ஷைத்தான்களை (ஜின்கள்) விரட்டும் எரி கற்களாகவும் நாம் ஆக்கினோம். –அல் குர்ஆன். 67:5,41:12.”
Innum Jinkalukkum Manitharkalukkum poduvana vethamaga Quran mattume valangappattadu yen..?

Reply

a.abdulrajak January 21, 2014 at 2:20 pm

DEAR BROTHER
Innum Jinkalukkum Manitharkalukkum poduvana vethamaga Quran mattume valangappattadu yen..?

Reply

a.abdulrajak January 21, 2014 at 2:32 pm

DEAR BROTHER
Innum Jinkalukkum Manitharkalukkum poduvana vethamaga Quran mattume valangappattadu yen..?
Because FINAL messanger of GOD is MOHAMED (PBUH ) only . No more messanger. So GOD send QURAN through MOHAMED (PBUH) for human and jins.

OH , LORD increase me in knowledge ( secular and wisdom )

Reply

deenul hudha January 23, 2014 at 1:08 pm

maasha allah.superb….jaadakumullahu ilmuk…jazakumullahu khair…..

Reply

Ravichandran February 4, 2014 at 3:06 pm

Admin. matra mathangalai punpatuthamal neengal sollum karuthukal nanraga ullathu, anaivarum padikka koodiya thalam ungaludaiyathu.

Reply

irfan February 5, 2014 at 4:09 pm

jingalal namaku bathipu varuma

Reply

irfan February 5, 2014 at 4:22 pm

jingalukum mohamed nabi marumail allahvidam parinthuraipagala avargalukum kuraan than vethama

Reply

essa February 15, 2014 at 8:06 pm

good message

Reply

jamal February 22, 2014 at 5:53 pm

aslama allaikum, allah yen ketathu seiyum ‘shythanai’ allikaamal vituvaithan?

Reply

A.ABDULRAJAK September 14, 2014 at 12:12 pm

18:50. அன்றியும், “ஆதமுக்கு ஸுஜூது செய்யுங்கள்” என்று நாம் மலக்குகளிடத்தில் கூறியதை (நபியே!) நினைவு கூர்வீராக; அப்போது இப்லீஸைத்தவிர, அவர்கள் ஸுஜூது செய்தார்கள்; அவன் (இப்லீஸ்) ஜின் இனத்தைச் சேர்ந்தவனாக இருந்தான்; அவன் தன் இறைவனுடைய கட்டளையை மீறி விட்டான்; ஆகவே நீங்கள் என்னையன்றி அவனையும் அவன் சந்ததியாரையும் (உங்களைப்) பாதுகாப்பவர்களாக எடுத்துக் கொள்வீர்களா? அவர்களோ உங்களுக்குப் பகைவர்களாக இருக்கிறர்கள்; அக்கிரமக்காரர்கள் (இவ்வாறு) மாற்றிக் கொண்டது மிகவும் கெட்டதாகும்.

15:36. “என்னுடைய இறைவனே! இறந்தவர்கள் எழுப்பப்படும் நாள்வரை எனக்கு அவகாசம் கொடுப்பாயாக!” என்று இப்லீஸ் கூறினான்.

7:14. “(இறந்தவர்) எழுப்பப்படும் நாள் வரை எனக்கு அவகாசம் கொடுப்பாயாக” என அவன் (இப்லீஸ்) வேண்டினான்.

17:62. “எனக்கு மேலாக கண்ணியப் படுத்திய இவரைப் பார்த்தாயா? நீ எனக்கு கியாம நாள்வரை அவகாசம் கொடுத்தால், நாம் இவருடைய சந்ததிகளில் சிலரைத் தவிர (மற்றவர்களை) நிச்சயமாக வழிகெடுத்து விடுவேன்” என்று (இப்லீஸ்) கூறினான்.

38:79. “இறைவனே! அவர்கள் (இறந்து) எழுப்பப்படும் நாள்வரை எனக்கு அவகாசம் கொடுப்பாயாக” என்று அவன் கேட்டான்.

38:80. “நிச்சயமாக நீ அவகாசம் கொடுக்கப்பட்டவர்களில் உள்ளவனே” என (அல்லாஹ்) கூறினான்.

38:81. “குறிப்பிட்டகாலத்தின் நாள்வரையில்” (உனக்கு அவகாசம் உண்டு எனவும் கூறினான்).

38:82. அப்பொழுது: “உன் கண்ணியத்தின் மீது சத்தியமாக, நிச்சயமாக நான் அவர்கள் யாவரையும் வழிகெடுப்பேன்” என்று (இப்லீஸ்) கூறினான்.

38:83. “(எனினும்) அவர்களில் அந்தரங்க சுத்தியான உன் அடியார்களைத் தவிர” (என்றான்).

38:84. (அதற்கு இறைவன்:) “அது உண்மை; உண்மையையே நான் கூறுகிறேன் என்று இறைவன் கூறினான்.

38:85. “நிச்சயமாக, உன்னைக் கொண்டும், அவர்களில் உன்னைப் பின்பற்றியவர்கள் அனைவரைக் கொண்டும் நரகத்தை நான் நிரப்புவேன்” (என்றான்)

Reply

ABDUL AZEEZ February 24, 2014 at 5:57 pm

sagotharar jamal
allaah VAAKKU maaradhavan saithanukku avagasam. koduthullaan uyirpitthu ezhup pap padum naal varai sithaan avagasam kettullaan andha avagasam ALLAAH vaal kodukkap pattadhagivittadhu’

மேலும் எவர் ஈமான் கொண்டு நற்கருமங்கள் செய்கிறார்களோ அவர்களை நாம் சுவனபதிகளில் நுழைய வைப்போம்; அவற்றின் கீழே ஆறுகள் சதா ஓடிக்கொண்டிருக்கும். அங்கு அவர்கள் என்றென்றும் தங்கி இருப்பார்கள் – அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது; இன்னும் வார்த்தைப்பாட்டில் அல்லாஹ்வைவிட உண்மையானவர்கள் யார்?
kur an 4:122

மா சலாம்.
அப்துல் அஜீஸ்

Reply

A.S.iBRAHIM March 4, 2014 at 3:16 am

allah is a creater he is the only one god of the world we worchip allah and get heaven after our life

Reply

JAMAL June 18, 2014 at 5:28 pm

allah oruvana avanuku mattum payaputungal.

Reply

rahman July 5, 2014 at 2:18 pm

அருமையான பதிவு

Reply

asar July 8, 2014 at 2:07 pm

Yes It’s true thanks for ever maasha allah

Reply

Hadeerbee , Coimbatore August 15, 2014 at 5:05 pm

awesome

Reply

shahul August 26, 2014 at 6:22 am

good

Reply

Abuthahir khan October 22, 2014 at 10:58 pm

This website is very good and it gives useful information with science related…
Thank you

Reply

irsath October 19, 2016 at 2:44 pm

Intha pathiu enaku oru periya santhegathaye thirthu vitathu

Reply

Anonymous December 1, 2018 at 9:00 am

அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரர் அவர்களே… பிக்பேங் தியரி பற்றிய தெளிவான விளக்கம் கொடுக்கவும்… ஏனென்றால் விஞ்ஞானிகளின் தவறான கூற்றால் பாமர மக்கள் தங்கள் ஈமானை இழந்து நாத்திகர்களாக மாறுகிறார்கள்… ஆகையால் அதை பற்றிய தெளிவான விளக்கம் கூறுங்கள் சகோதரர் அவர்களே…

Reply

Leave a Comment

Previous post:

Next post: