அல்குர்ஆன் வழியில் அறிவியல்
வானம், பூமி, சூரியன், சந்திரன் மற்றும் நட்சத்திரங்களை உள்ளடக்கிய இம்மாபெரும் பிரபஞ்சம் (Universe) எப்படி தோன்றியது என்பதைத் தொடர்ந்து விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். ஆனாலும் உறுதியான முடிவிற்கு அவர்களால் வர முடியவில்லை. இருப்பினும் ‘ஹப்பிள் விதி’ (Hubble’s Laws) என்ற கோட்பாட்டின் படி ஏறத்தாள 1300 கோடி வருடங்களுக்கு முன் இப் பிரபஞ்சம் தோன்றியதாக கருதப்படுகிறது.
ஒரு பொருளை உருவாக்கியவனுக்கே அப்பொருள் உருவான காலம் துல்லியமாகத் தெரியும். இறைவனால் படைக்கப்பட்ட மனிதர்கள் என்னதான் முயன்றாலும் துல்லியமாக முழுமையாக எதையும் அறிய முடியாது. ஏனென்றால் மனிதன் பலகீனமானவன் என்று அல்லாஹ் கூறுகிறான்.
மனிதன் பலஹீனமானவனாகவே படைக்கப்பட்டுள்ளான். அல்குர்ஆன் 4:28
இறைவன் படைத்த ஒவ்வொரு பொருளுக்கும் ஆரம்பமும் முடிவும் உண்டு. இன்றைய நவீன அறிவியம் மூலம் ஒவ்வொரு பொருட்களின் வயதை அறிய பல்வேறு தொழில் நுணுக்கங்கள் கையாளப்படுகின்றன. கனிமங்கள் அணுக்களால் ஆன கலவையாகும். கார்பன், நைட்ரேஜன், ஹைட்ரேஜன், ஆக்ஸிஜன், கால்சியம், மக்னீசியம், பொட்டாசியம், யுரேனியம், நிக்கல், இரும்பு போன்ற தனிமங்களின் (Elements) சேர்க்கையால் உண்டானவைகள் மனிதன், மிருகம், மரங்கள், மலைகள் போன்றவைகளாகும்.
உடலில் படியும் கார்பன் அணுக்கள்
விண்வெளியில் நிறைந்துள்ள கார்பனானது (Cosmic Carbon Particle) பூமியின் வளிமண்டலத்திலுள்ள நைட்ரஜனுடன் சேர்ந்த கார்பன் 14 என்ற கதிரியக்க கார்பனாக மாறுகிறது. (Carbon 14 Isotope) மனிதன், விலங்குகள், தாவரங்கள் சுவாசிக்கும் காற்றின் மூலமாக உட்செல்லும் கார்பன் அணுக்கள் அவ் உயிரனங்களின் உடலில் தொடர்ந்து படிகிறது. உயிரினங்கள் அனைத்திலும் கார்பன் எனும் கதிரியக்க (Carbon Isotope) உள்ளது.
எப்பொழுது உயிரினம் இறந்து விடுகிறதோ அன்றே கார்பன் படியும் நிகழ்ச்சியும் முற்றுப் பெறுகிறது. பின்னர் அவ்வுடலில் படிந்த கார்பன் அணுக்கள் தனது கதிர்களை வெளியிட்டு சிறிது சிறிதாக சிதைகிறது (Carbon Decay). இதுபோன்ற கதிரியக்க தனிமங்கள் முற்றாக அழிவதற்கு நீண்ட காலம் எடுத்துக்கொள்ளும். உதாரணமாக கார்பன் 14 என்ற கதிரியக்க கார்பன் அணு பாதி அளவாக குறைந்து அழிவதற்கு சுமார் 5730 வருடங்களாகும்.
மனிதன் இறந்து மண்ணோடு மண்ணாகி நம் கண்ணை விட்டு மறைந்த துகள்களாக துணுக்குகளாக மாறி இலட்சக்கணக்கான வருடங்களானாலும் அவன் உடம்பில் உள்ள கதிரியக்க அணுக்கள் பூமியில் எந்த அளவு குறைந்திருக்கிறது என்பதை கணக்கிட்டறியும் ஆற்றலை 21-ம் நூற்றாண்டில் மனிதன் பெற்றுவிட்டான். யுரேனியம், ரேடியம் போன்ற உலோகங்கள் இயற்கையிலேயே கதிர்களை வெளியிடுகின்றன என்ற உண்மையை 1896 ஆம் ஆண்டு ஹென்றி பெக்கரேல் என்ற விஞ்ஞானி கண்டு பிடித்தார்.
மனித உடலில் 0.1 மில்லி கிரான் யுரேனியம் உள்ளது. மனிதன் இறந்தவுடன் இந்த யுரேனியம் சிறிது சிறிதாக கதிர்வீச்சை வெளியிட்டு முற்றிலும் அழிந்து ஆர்கானாக மாறுவதற்கு ஆகும் காலம் 10 ஆயிரத்திலிருந்து 3 கோடி ஆண்டுகள் வரையுள்ள நீண்ட காலமாகும்.
இந்த அற்புதத்தை படைத்த இறைவன் 1400 ஆண்டுகளுக்கு முன்பே அழகாக கூறிவிட்டான்.
1400 ஆண்டுகளுக்கு முன் இறக்கப்பட்ட இவ்வசனத்தின் பொருளை அன்று நேற்று வரை மனித உடம்பை மண் தின்று அழிக்கும் நிகழ்ச்சியை மட்டும் குறிப்பதாகவே விளக்கப்பட்டது. ஆனாலும் இறுதி வேதமான அல்குர்ஆன், இதற்கு அப்பாலும் சென்று இறந்த உடல் அணுக்களில் உள்ள எலெக்ட்ரான் தனது கதிர்வீச்சை வெளிப்படுத்தி சிறிது சிறிதாக சிதைத்து குறையும் (Decay) நிகழ்ச்சி, இறந்த லட்சக்கணக்கான வருடங்களுக்குப் பின்பும் தொடர்வதை அல்குர்ஆன் உறுதிப்படுத்துகிறது.
கதிரியக்க தொழில் நுட்பம் மூலம் (Radioactive Isotope technique) இறந்த உடலில் உள்ள அணுக்கள் பூமியில் எந்தளவு குறைந்திருக்கிறது என்பதை வைத்து அது வாழ்ந்த காலத்தை அறியலாம்.
எதிர்கால மக்களுக்கு அத்தாட்சியாவதற்கு மூஸா (அலை) அவர்களை எதிர்த்த ஃபிர் அவ்ன் உடலும் அழியாமல் உள்ளது. ஏனெனில் அல்லாஹ் கூறுகிறான்.
இன்றைய தினம் நாம் உம் உடலைப் பாதுகாப்போம். அல்குர்ஆன் 10:92
கார்பன் சோதனை மூலம் ஆராய்ந்த உண்மை நிகழ்ச்சிகள்
1.கடந்த நூற்றாண்டின் ஜெர்மன் அகழ்வாராய்ச்சியாளர்கள் தோண்டி ஃபிர்அவ்னின் அழியாத உடம்பை கண்டெடுத்தனர். இந்த உடல் எப்பொழுது மரணித்தது என்பதை அவர்கள் அதே கார்பன் 14 சோதனை மூலம் ஆராய்ந்து 5 ஆயிரம் வருடத்திற்கு முன் இறந்தவன் என்று அறிவித்து அல்குர்ஆன் கூறியதை மெய்ப்பித்தனர். ஃபிர்அவ்ன் உடலில் உள்ள கார்பன் 14 எவ்வளவு குறைந்துள்ளது என்பதை கணக்கிட்டு அவன் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவன் என்று அறிய முடிகிறது.
அல்குர்ஆனின் 10:92 க்கு சான்றாக ஒன்றுகொன்று அறிவியல் ஆதாரமாகி நம்மை ஆச்சரியப்படுத்துகின்றது எனினும்,
நிச்சயமாக மக்களில் பெரும்பாலோர் நம் அத்தாட்சிகளைப்பற்றி அலட்சியமாக இருக்கின்றார்கள்” 10:92
உடல் அழியவில்லை, ஆனாலும் உடலிலுள்ள கார்பன், மக்னீசியம், பொட்டாசியம் போன்ற கதிரியக்க அணுக்கள் குறைந்து கொண்டு வருகின்றன. இப்படி குறைந்துள்ளதை கணக்கிட்டே அவன் வாழ்ந்த காலத்தை அறிய முடிந்தது. உடல்கள் மண்ணால் அரிக்கப்பட்டு சிதைக்கப்பட்டு அழிந்தாலும் அல்லது அழியாமல் உடல்கள் இருந்தாலும் அவற்றிலுள்ள அணுக்கள் கதிர்களை வெளியிட்டு குறைந்து கொண்டு செல்லும் என்பது அறிவியல் உண்மையாகும்.
சத்தியம் வந்தது அசத்தியம் அழிந்தது
2.இன்று உலகிலுள்ள தேவாலயங்களில் உள்ள சிலை ஓவியம் ஆகியவற்றின் இயேசுவின் முகத்தோற்றம் ஒன்று போல் இருக்கும். இயேசு கிறிஸ்துவின் முகத்தை பார்த்து படம் வரைந்தவர் யார்? என்ற கேள்விக்கு இயேசுவை சிலுவையில் அடித்து மரணித்தபின் அவரது ஒரு மெல்லிய துணியில் சுற்றி அடக்கம் செய்தனர்.
“சீமோன் பேதுரு அவனுக்குப் பின்னே வந்து கல்லறைக்குள்ளே பிரவேசித்து சீலைகள் (ஃகபன் துணி) இருப்பதையும், அவருடைய தலையில் சுற்றியிருந்த சீலை மற்றச் சீலைகளுடனே வைத்திராமல் தனியே ஒரு இடத்தில் சுருட்டி வைத்திருக்கிரதையும் கண்டாண்” யோவான் 20:7
இயேசு சுற்றியிருந்த துண்டில் இரத்தக் கரையுடன் அவரது முகம் பதிந்துள்ளதாகவும் அதை வைத்தே சிலை வடிக்கப்பட்டதாக கூறுகிறார்கள். அந்த துண்டு பிரான்ஸ் நாட்டு (Turin) நகரத்து தேவாலயத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
உண்மையில் இந்தத் துண்டு இயேசு கிருஸ்து வாழ்ந்த நூற்றாண்டைச் சார்ந்ததுதானா? என அறிவியல் சோதனை செய்து வெளிப்படுத்தி கிறிஸ்துவத்தை வளர்க்க விரும்பினர். எனவே போப்பின் அனுமதியுடன் மூன்று துண்டுகளை வெட்டி இங்கிலாந்து, பிரான்ஸ், அமெரிக்க ஆராய்ச்சி சாலைக்கு அனுப்பி கார்பன் 14 முறையில் சோதித்ததில் ஆராய்ச்சி மையத்தின் முடிகளும் ஒரே மாதிரி இருந்தது கண்டு கிருஸ்தவ உலகம் அதிர்ச்சியடந்தது.
ஏனென்றால் (Linen) துணியான அந்த துண்டு (Holy Shroud) இயேசுவை சேர்ந்தது இல்லை என்று சந்தேகமின்றி நிரூபிக்கப்பட்டது.
The simple weave of a textile found in a first-century A.D. Jerusalem tomb adds to evidence that the Shroud of Turin isn’t from Jesus’ time, experts say.
இயேசுவின் கல்லறையில் கண்டெடுக்கப்பட்ட பிரேதத்துணி என்ற பொய்யின் மூலம் கிருஸ்தவத்தை தூக்கி நிறுத்த முயற்சி செய்தனர். ஆனால், அல்லாஹ் அசத்தியத்தை அழித்து விடுகிறான்.
3.இத்தாலியிலுள்ள ஆல்ப்ஸ் (Alps) மலை உச்சியில் பனிப்பாறைகளுக்கிடையே ஒரு மனித உடலைக் கண்டனர். பனிக்கட்டியால் மூடப்பட்டிருந்ததால் அந்த உடல் எந்த ஓர் அழிவுமின்றி இருந்தது. இந்த மனிதன் எப்பொழுது இறந்தான் என்பதை அறிய அவன் உடலில் கார்பன் 14 எந்த அளவு குறைந்திருக்கிறது என்பதாக ஆய்வு செய்தபோது அவன் சுமார் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவன் என்பதை அறிந்தனர். http://ngm.nationalgeographic.com/2007/07/iceman/hall-text
4.பூமியில் இறந்த உடல் மட்டுமல்ல உயிரற்ற ஆக்கப்பட்ட அனைத்தும் காலம் செல்லச் செல்ல அதன் அணுக்கதிர்கள் சிறிது சிறிதாக வெளியிட்டு பூமியில் குறைந்து கொண்டே வரும். இதற்கு உதாரணமாக 1969ம் ஆண்டு மெக்ஸிகோவில் விழுந்த ஒரு விண்கல்லை இம்முறையில் சோதனை செய்த போது அக்கல்லில் உள்ள யுரேனியத்தின் அலவை கணக்கிட்டு அக்கல்லானது 460கோடி வருடங்களுக்கு முன்பு உருவானது என்பதை அறிந்தனர். http://en.wikipedia.org/wiki/Allende_meteorite
மனிதனுக்கு அவன் அறியாதவற்றையெல்லாம் கற்றுக் கொடுத்தான். அல்குர்ஆன் 96:5
ஆனாலும் இன்றைய மேலை நாட்டு விஞ்ஞானிகள் படைத்த இறைவனையே நிராகரிக்கிறார்கள். எழுத்தறிவித்தவன் இறைவன் என்பதை மறுத்து, எல்லாம் தங்கள் அறிவுத் திறமையைக் கொண்டே அறிந்து கொண்டதாக பெருமையடிக்கிறார்கள்.
இது எனக்குக் கொடுக்கப்பட்டதெல்லாம், என் அறிவின் காரணமாகத்தான்!” (என்று பெருமையடிக்கிறான்) அல்குர்ஆன் 39:49
அன்புச் சகோதரர்களே! நாளைய அறிவியல் உண்மைகளை உள்ளடக்கியிருக்கும் உயிர் வேதம் அல்குர்ஆனை ஆராய்ந்து பார்ப்போம். அதன் வழி நடப்போம். இதோ அகில உலக மாந்தர்களை நோக்கி அல்லாஹ்வின் அழைப்பு.
அவர்கள் இந்தக் குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்லது அவர்கள் இருதயங்கள் மீது பூட்டுப் போடப்பட்டு விட்டனவா? அல்குர்ஆன் 47:24
K.S.H. அபூ அப்திர்ரஹ்மான், ஜித்தா
{ 7 comments… read them below or add one }
alhamthulliilah……. ugal msg migavum payan nullathaga erunthathu seience ai quran neen vasanathai kondu nirubika palla visayagal ullathu allah antha arivai namaku tharuwanaga…paditha kalvi arivu ulla ooworwrum entha msg ai padithu sintheka vendum. allah shows right path….
Masha ALLAH , Its a nice article, composed in a beautiful manner. May ALLAH increase the knowledge of the writer
allah akbar.i really like this article.superb
ELLA PUKZAUM ERAIVANUKE
அவர்கள் இந்தக் குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்லது அவர்கள் இருதயங்கள் மீது பூட்டுப் போடப்பட்டு விட்டனவா? அல்குர்ஆன் 47:24
TRANSLATORS shall aware about ate arabic word qalb . mostly they translated as HEART . actually qalb means BRAIN.
The soul , concept, planning, intelligence, understanding,memory, 5 senses control and 6th sense lies in brain only.
GOD clearly mentioned in quran below.
96-15 – No! If he does not desist, We will surely drag him by the forelock –
96 – 16 – A lying, sinning forelock
in science
Frontal lobe fucntions are Planning and other executive functions.
11:5 أَلَا إِنَّهُمْ يَثْنُونَ صُدُورَهُمْ لِيَسْتَخْفُوا مِنْهُ ۚ أَلَا حِينَ يَسْتَغْشُونَ ثِيَابَهُمْ يَعْلَمُ مَا يُسِرُّونَ وَمَا يُعْلِنُونَ ۚ إِنَّهُ عَلِيمٌ بِذَاتِ الصُّدُورِ
11:5. “அவர்கள் தங்களை மறைத்துக் கொள்வதற்காகத் தங்கள் இருதயங்களை மூடுகிறார்கள்! அவர்கள் தம் ஆடைகளால் போர்த்திக்கொண்டாலும், அவர்கள் மறைத்து வைப்பதையும், வெளிப்படையாகக் காட்டுவதையும் அவன் அறிகிறான் – ஏனெனில் நிச்சயமாக அவன் இதயங்களின்
Sahih International: Unquestionably, they the disbelievers turn away their breasts to hide themselves from Him. Unquestionably, [even] when they cover themselves in their clothing, Allah knows what they conceal and what they declare. Indeed, He is Knowing of that within the breasts
Translators shall aware about ṣudūrahum – Arabic word is not mention their breasts (தங்கள் இருதயங்களை ). Actually it say about their mind or thinking or ideas . ( for understanding purpose – brain is a hardware and mind is a software.).
some one want hide from others they never close their breast or heart. They close their head only .
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
மிகவும் தெளிவான கட்டுரை. சிறந்த விஞ்ஞான விளக்கங்கள். அருமை.
சிராஜ்