பார்க்க வேண்டாமா ? பார்த்துப், பார்த்துப், படிப்பினை பெறவேண்டாமா ?

Post image for பார்க்க வேண்டாமா ? பார்த்துப், பார்த்துப், படிப்பினை பெறவேண்டாமா ?

in சந்திர நாட்காட்டி

“பார்க்க  வேண்டாமா ?” பார்க்க வேண்டாமா ?” பார்க்க வேண்டாமா ?”

☪  பலகோடிப் பால் வெளி மண்டலங்களைப் படைத்த படைப்பாளனின் பலகோடிப் படைப்புகளைப் பூமியிலும் பால்வெளி மண்டலங்களிலும் பார்த்துப், பார்த்துப், படிப்பினை பெறவேண்டாமா ?” பார்க்க வேண்டாமா ?” எனப் பல வசனங்களில் படைத்தவன் படைப்பினங்களாகிய  நம்மை ஏவுகின்றானே.

☪  அல்லாஹ்  படைத்துள்ள பொருட்களை அவர்கள் பார்க்கவில்லையா ?  16:48 ,10:06,

☪  வானங்களிலும் பூமியிலும் எத்தனையோ சான்றுகள் இருக்கத்தான் செய்கின்றன (12:105)

☪  (நபியே! அவர்களிடம்) வானங்களிலும் பூமியிலும் உள்ளவை என்ன என்பதைச் சிந்தித்துப்பாருங்கள் என்று நீர்  (அவர்களிடம்) கூறுவீராக. (10:101)

☪  அவற்றில் சந்திரனும், சூரியனும், பூமியும், அடங்கும்; அவனே சூரியனையும் சந்திரனையும் வசப்படுத்தினான் என்பதை நீர் பார்க்கவில்லையா ? (31:29)

☪  சூரியனும் சந்திரனும் அல்லாஹ்வை வணங்குவதை நீர்பார்கவில்லையா ? (22:18)

☪  அவனே சூரியனையும் சந்திரனையும் உங்களுக்கு  வசப்படுத்திக்கொடுத்துள்ளான் நிச்சயமாக இதிலும் ஆய்ந்தறியக்கூடியவர்களுக்கு (த்தக்க) அத்தாட்சிகள் இருக்கின்றன (16:12)

☪  சந்திரன் (பிரகாசமாக) உதயமாவதை  நபி இப்ராஹீம்(அலை) அவர்கள் பார்த்தார்கள் (6:77) என்றெல்லாம் செல்கின்றானே, மற்றுமோர் வசனத்தில்

☪  வானங்களையும் பூமியையும் படைத்த நாளிலிருந்தே அல்லாஹ்விடம் அவனுடைய பதிவுப் புத்தகத்தில் மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டாகும் (09:36) என்று சொல்லிவிட்டு அதனை அளவிடுவதற்காகவே

● அவனே சூரியனை ஒளிவீசக்கூடியதாகவும் சந்திரனை ஒளியைப் பிரதிபலிப்பதாகவும் அவனே ஆக்கியுள்ளான். நீங்கள் ஆண்டுகளின் எண்ணிக்கையையும் (மாதங்களின்)  காலக்கணக்கினையும் அறிந்துகொள்வதற்காக (ச் சந்திரனுக்குப்) பல படித்தரங்களை யும் உண்டாக்கினான் தக்க காரணங்களின்றி அல்லாஹ் இவற்றைப்படைக்கவில்லை அறிவுள்ள மக்களுக்குத் தனது அத்தாட்சிகளை விவரிக்கின்றான். (10:05 , 17:12 ,06:96 ,11:05) என்றும்;

● (நபியே!) பிறைகளைப்பற்றி அவர்கள் உம்மிடம் வினவுகின்றார்கள், அவை மக்க (ளின் பணிகளுக்காகவும், இதர மார்க்கக் கடமைக) ளுக்கும், ஹஜ்ஜுக்கும் காலம் காட்டிகள் (CALENDAR) என்று நீர் கூறுவீராக”(02:189) என்றும்;

● ஆண்டுகளின் எண்ணிக்கையையும் (மாதங்களின்) கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காக (இவ்வாறு செய்தோம்) (17:12) என்றும்;

● பிறைகளை  மக்களுக்குக் (CALENDAR) காலம் காட்டுபவைகளாக  அல்லாஹ் ஆக்கியுள்ளான் என்று நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள் இப்னு உமர் (ரலி) ஹாகிம் தஃப்சீர் இப்னு கஸீர் 1:பக்கம் 595)

“காலண்டர் என்று  சொன்னாலே அது தினமும் பார்க்கப்பட வேண்டியதுதானே”  நமது வீடுகளிலுள்ள காலண்டரும் அவ்வாறே அது ஒரு வருடத்தின் அத்தனை நாட்களையும் கொண்டதே தினமும் அதனைப்பார்க்கத்தான் செய்கிறோம்.

அன்று நபி (ஸல்)அவர்களது காலத்தில் இதுபோன்ற  ஏழுத்து வடிவத்திலுள்ள கலண்டர் இருக்க வில்லை அவர்கள் பார்த்தது எல்லாமே பிறைகளைத்தான்.

ஏன்  நபி(ஸல்)அவர்களது வருகைக்கு முன்பிருந்த அரபியரும் பிறைகளின் படித்தரங்களைக்கொண்ட சந்திர நாட்களையும் மாதங்களையும் வருடங்களையுமே கடைப்பிடித்து வந்துள்ளனர்.

இஸ்லாமும் அதை மறுக்கவில்லை அவர்கள் சந்திரன்  ஒரு மாதத்தில் சுற்றிவரும் பகுதிகளை28 பாகங்களாகக் கணக்கிட்டு அவற்றில் ஒவ்வொரு பாகமும்

ஒரு நிலையாகும் என்பர் அந்த  ஒவ்வொரு பாகத்துக்கும் நேராக இருக்கும் நட்சத்திரத்தின் பெயரை அன்றைய நிலைக்குச் சூட்டுவர் இவ்வாறு 28 நட்சத்திரங்களின் பெயர்களை 28 நாளின் நிலைகளுக்கு சூட்டிவந்தனர்  – அவையாவன

1 ஷரத்தான் 2 புத்தைன்  3 ஸுரய்யா 4 தபரான் 5 ஹக்ஆ  6 ஹன்ஆ 7 திராஉ 8 நஸ்ரா 9 தர்ஃப்  10 ஜப்ஹா 11 தப்ரா 12 ஸர்ஃபா 13 அவ்வாஉ  14 சம்மாக் 15 ஃகஃப்ர் 16 ஸுபானீ 17 இக்லீல்  18 கல்ப் 19 ஷவ்லா 20 ந ஆயிம் 21 பல்தா 22 ச அத்தாபிஹ்  23 ச அத் புலஃக் 24 ச அத் ச ஊத் 25 ச அத் அக்பியா 26  ஃபர உ அவ்வல் 27 ஃபர உ ஸானீ 28 ரஷா உ, தஃப்சீர் இப்னு கஸீர்,பா 4:பக்கம் 463; என்பனவாகும்.

அறியாமைக் காலத்திலிருந்துவந்த “நுஜும்” கணக்கைத்தான் இஸ்லாம் அங்கீகரிக்கவில்லை ஆனாலும் பிறைகளின் படித்தரங்களைப் பார்து வருவதற்குத் தடை விதிக்கவில்லை மாறாக மேலே உள்ள இறை வசனங்களின் அடிப்படையிலும், இறைத்தூதரான முஹம்மத் (ஸல்) அவர்களும்; பிறைகளின் அனைத்துப் படித்தரங்களையும் பார்த்துவரும்படி ஆர்வமூட்டுகின்றார்கள்.

☪  பிறைகளைப் பார்த்து வாருங்கள் அவை உங்கள் மீது மறைக்கப்படும்போது அதை நீங்கள் முப்பதாகக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.(இப்னு உமர்  (ரலி) அவர்கள் புகாரி -1823 , முஸ்லிம் -2551, அஹ்மத் -9641),

☪   பிறைகளைப் பார்த்து வாருங்கள் அவை உங்கள் மீது புலப்படாத போது எண்ணிக்கையை நீங்கள் முழுமைப்படுத்துங்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் (அபூஹுரைரா  (ரலி) முஸ்லிம் -2567,)

☪  பிறைகளைப் பார்த்து வாருங்கள் அவை உங்கள் மீது மறைக்கப்படும்போது நீங்கள் கணக்கிட்டுக்கொள்ளுங்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (இப்னு உமர்  (ரலி) அவர்கள் புகாரி -1906, முஸ்லிம் -1865, ஸஹீஹ் இப்னு ஹுஸைமா,1790,) என்றும் இறைதூதர் (ஸல்) அவர்கள் சொல்லியிருக்கின்றார்கள்.

☪  பிறைகளின் காட்சியை அடிப்படையாகக் கொண்டே நோன்பு பிடியுங்கள். பிறைகளின் காட்சியை அடிப்படையாகக் கொண்டே நோன்பை விடுங்கள். எனவே உங்கள்மீது அது புலப்படாது மறைக்கப்படும்போது நீங்கள் ஷஃஅபான் மாதத்தின் எண்ணிக்கையை முப்பதாக முழுமைப்படுத்துங்கள். என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூஹுரைரா (ரலி) 1823, அஹ்மத் 9641,)

☪  அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பிறை பார்த்து நோன்பு வையுங்கள்;  (மறு) பிறை பார்த்து நோன்பை விடுங்கள்; உங்களுக்குத் திங்கள் தென்படவில்லையானால் முப்பது நாட்களாக எண்ணிக் கொள்ளுங்கள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.ஸஹீஹ் முஸ்லிம் : 1974.
அத்தியாயம் : 13. நோன்பு)

● ரமழானின் ஆரம்பத்தைச் சரியாக அறிந்து கொள்வதற்காக  நபி (ஸல்) அவர்கள் ஷாஃஅபான் மாதத்தின் நாட்களை மட்டும்  (குறிப்பாகக் கவனித்துக்) கணக்கிடக்கூடியவர்களாக இருந்தார்கள் மற்ற மாதங்களின் நாட்களை அப்படிக்  (குறிப்பாக அவர்கள் ) கணக்கிடவில்லை -ஆயிஷா (ரலி) அபூதாவூத் -1993, அஹ்மத்)

● ரமழானின் ஆரம்பத்தை(ச் சரியாக)அறிந்துகொள்ள “ஷாஃஅபான் “ (மாதப்) பிறைகளைக் (கவனித்துக்) கணக்கிட்டு வாருங்கள் என்று நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள் -அபூ ஹுரைரா (ரலி) திர்மிதி -687, அஹ்மத்)

ரமழான் மாதத்தை சரியாக அடைந்துகொள்வதற்காக அதற்கு முந்திய ஷஃபான் மாத பிறைகளை பார்து வாருங்கள். அது மறைக்கப் படும் இறுதி நாள் வரை பார்த்து வாருங்கள். என்று கட்டளையிட்டதன் சொல் செயல் அங்கீகாரம் கொண்ட சுன்னாவின் அடிப்படையில் நாம் பிறைகளை பார்து வருகையில் பிந்திய பிறைகளை சுபஹ் நேரம்தான் நம்மால் பார்கமுடிகிறது அதை அந்நேரம் பார்கும்படி அல்லாஹ்வும் நம்மை ஏவுகின்றான் (36:39) மேலும்

நபியே! அவர்களிடம்) “வானங்களிலும் பூமியிலும் என்ன இருக்கின்றன என்பதை கவனித்துப் பாருங்கள்” எனக் கூறுவீராக ! எனினும் ஈமான் கொள்ளாதவர்களான சமூகத்தாருக்கு (நம்முடைய) அத்தாட்சிகளும் எச்சரிக்கைகளும் யாதொரு பயனுமளிக்கமாட்டா (10:101) என்றும்

சொல்கின்றான் ஆக இந்த குர்ஆன் வசனமும் சொல் செயல் அங்கீகாரம் கொண்ட  ஆதாரமும் போதாதா பிறைகளின் அனைத்துப் படித்தரங்களையும் பார்ப்பதற்கு. பார்த்துவருவதற்கு  மன முரண்டாக அறிந்துகொண்டே விதண்டா வாதம் செய்பவர்களுக்கு அல்லாஹ்தான் நேர்வழி கட்டவேண்டும் ஆக

அல்லாஹ்வும் அவனுடைய தூதர் (ஸல்) அவர்களும் பிறைகளின் படித்தரங்களைப் பார்த்து வரும்படியே நம்மை ஏவியுள்ளார்கள்.

அது தேய்ந்து மறைக்கப்படும் இறுதி நிலை வரைக்கும் பார்க்கும்படி கூறியுள்ளார்களே!

☪  இன்னும் (உலர்ந்து, வளைந்த,) பழைய, பேரீச்சை மரத்தின் (காய்ந்து வளைந்துபோன) மட்டையைப்போல் ஆகும் வரையில் சந்திரனுக்கு நாம் பல படித்தரங்களை ஏற்படுத்தியிருக்கின்றோம். (36:39)

அவ்வாறாயின் அது மாத ஆரம்பத்திலிருந்து முடிவுவரை எந்த நாளையில் எந்த திசையில் எந்த நேரத்தில் எந்த அளவில் தெரிகிறதோ அவை அத்தனை படித்தரங்களின் தோற்றத்தையையும் நாம் பார்த்து வரவேண்டும் அப்படியெனில் மேற்கிலும் பார்க்கவேண்டும், கிழக்கிலும் பார்க்கவேண்டும், தலைக்கு மேலும், பார்க்கவேண்டும் அவை அனைத்தும் பலமான நபிவழியில் உள்ளதுதான் மாறாக

மேற்கில மாத்திரம் தான் பார்ப்பேன், மஃரிபு நேரத்தில மாத்திரம் தான் பார்ப்பேன், மாதம் ஒருமுறை மாத்திரம்தான் பார்ப்பேன் என்று அடம்பிடிப்பது அறிவுடமையாகாது.

கிழக்கும் மேற்கும் அல்லாஹ்வுக்கே சொந்தமானது என்றிருக்க மேற்கில மாத்திரமே பிறை பார்ப்பேன் கிழக்கில் பார்க்கமாட்டேன் என்று வாதிடுவது ஒன்றை ஏற்று மற்றொன்றை நிராகரித்ததற்குரிய பாவத்தைப் பெற்றுக்கொள்ள நேரிடும்.ஜாக்கிரதை.

சூரியன் மீதும் அதன் பிரகாசத்தின் மீதும் சத்தியமாக (பின்னால்) அதனைத் தொடர்ந்து வரும் சந்திரன் மீதும் சத்திய மாக 91:1,2, எனும் இறை வசனத்திற்கு மாதத்தின் முதல் நாளில் சந்திரன் சூரியனைப் பின்தொடர்ந்து வரும் என்று இப்னு அப்பாஸ்  (ரலி) அவர்களும் சந்திர மாதத்தின் முதல் நாளில் பிறையானது சூரியன் உதித்த பின்னர் சற்று தாமதித்து கிழக்கில் உதிக்கும் அந்த முதல் நாளில் சூரியன் மறைந்ததற்க்குப் பின்னரே அந்தப் பிறை நமது புறக்கண்களுக்குக் காட்சியளிக்கும் என்றுகத்தாதா (ரஹ்) அவர்களும் விளக்கமளித்துள்ளார்கள். தஃப்ஸிர் இப்னு கஸீர் 91:1,2 விரிவுரை.

பெரும்பாலும் நபி (ஸல்) அவர்களது காலத்தில் அவர்கள் இஷா தொழுகையை தொழும்போது வழர்பிறையின் மூன்றாவது நாளின் மறைகிற நேரமாக இருந்திருக்கிறது, ஆனால் நம்மவர்கள் இஷா தொழும்போது இவர்கள் கூறும் மூன்று நாளைய பிறை என்பது இரவு பத்துமணிக்கே மறைகிறது காரணம் அது மூன்று நாளைய பிறை இல்லை மாறாக ஐந்து நாளைய பிறை.

☪  அல்லாஹ்வின் தூதர்  (ஸல்) அவர்கள் மாதத்தின் மூன்றாம் பிறை மறையும் போது இஷாத் தொழுபவர்களாக  இருந்தார்கள் நுஃமான் பின் பஷீர் (ரலி)திர்மிதி 151 நஸாயி 526 அபூதாவூத் 355

☪  நாங்கள் நபி  (ஸல் ) அவர்களுடன் அமர்ந்திருந்தோம் அப்போது பெளர்ணமி இரவில் அவர்கள் முழு நிலாவைக் கூர்ந்து பார்த்தார்கள்… ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) புகாரி 7434-7437,7439,4851,573,554,

☪  (பெளர்ணமி ) நிலா ஒளி வீசிக்கொண்டிருக்கும்போது நபி  (ஸல்) அவர்கள் சிவப்பு ஆடை அணிந்திருந்தார்கள் நான் நபியவர்களையும் பார்த்தேன் சந்திரனையும் பார்த்தேன் அப்போது நபியவர்கள் சந்திரனை விட  அழகானவர்களாக எனக்குத் தோன்றினார்கள் ஜாபிர் இப்னுஸமுரா (ரலி) திர்மதி, தாரமி

முப்பது நாட்களைக்கொண்டமாதத்தில் 29.வது நாளிலும், 29 நாட்களைக்கொண்ட மாதத்தில் 28 வது நாளிலும், சுபஹ் நேரம் கிழக்குத்திசையில் தென்படக்கூடிய அம்மாதத்தின்  கண்ணுக்குத் தெரியக்கூடிய கடைசிப் படித்தரமான உர்ஜூனில் கதீம் பிறையைப்பற்றி அல்லாஹ் குறிப்பிடும்போது.

இன்னும் உலர்ந்து வளைந்த பழைய பேரீத்தம் பாளையைப் போலாகும் வரையில் சந்திரனுக்கு நாம் பல படித்தரங்களை ஏற்படுத்தியிருக்கின்றோம் 36:39 * என்று சொல்லிவிட்டு மேலும்.

நபியே! அவர்களிடம்) “வானங்களிலும் பூமியிலும் என்ன இருக்கின்றன என்பதை கவனித்துப் பாருங்கள்” எனக் கூறுவீராக ! எனினும் ஈமான் கொள்ளாதவர்களான சமூகத்தாருக்கு (நம்முடைய) அத்தாட்சிகளும் எச்சரிக்கைகளும் யாதொரு பயனுமளிக்கமாட்டா (10:101) என்றும் சொல்கின்றான்

ஆக மாதத்தின் முதலாவது நாளில் ஆரம்பமாகும் பிறை யிலிருந்து (91:1,2), முடிவாக மறைந்துவிடும் பிறை வரை (36:39) குர்ஆனும் ஹதீஸும் தெளிவாகப் பிரஸ்தாபிப்பதாலும்

நபி இப்ராஹீம்  (அலை)அவர்கள் இருந்து 06:77 நபி  (ஸல் ) அவர்களும் சகாபாக்களும் பிறைகளைப் பார்த்துவந்த  அடிப்படையில் பிறைகளின் அனைத்துப் படித்தரங்களையும் பார்த்து வருவது குர்ஆனின் ஏவலும் நபி  (ஸல்) அவர்களது சொல் செயல் அங்கீகாரம் கொண்ட நபி வழியாகவும் இருக்கிறது மாறாக மாதா மாதம் இறுதியில் மாத்திரம்,

மேற்குத்திசையில் மாத்திரம், மஃரிபு நேரம் மாத்திரம், பிறை பார்ப்பது குர்ஆனுக்கும் நபிவழிக்கும் முரணானதும் அன்னிய கலாச்சாரத்தைப் பின்பற்றுவதுமாகும் *

☪  கிழக்கும் மேற்கும் அல்லாஹ்வுக்கே 02:115

☪  கிழக்கும் மேற்கும் அல்லாஹ்வுக்கே உரியவை 02:142

☪  கிழக்கிற்கும் மேற்கிற்கும் இறைவன் அவனே 73:09

☪  கிழக்குத்திசைகள் மேற்குத்திசைகள் ஆகியவற்றின்  இறைவன் 70:40

☪  கிழக்கிற்கும் மேற்கிற்கும் அவற்றுக்கிடையே இருப்பவற்றுக் கும் அவனே இறைவன் ஆவான் 26:28

☪  இரு கீழ்த்திசைகளுக்கும் இறைவன் அவனே

☪  இரு மேல் திசைகளுக்கும் இறைவன் அவனே 55:17

☪  பிறை பார்ப்பதற்காக மாதா மாதம் மஃரிபு நேரம்

☪  மேற்குத்திசையை மட்டும் ஏற்று கிழக்குத்திசையை மறுப்பவர்களே!

☪  நீங்கள் வேதத்தில் சிலதை ஏற்று சிலதை மறுக்கின்றீர்களா?  எனவே உங்களில் இவ்வகையில் செயல் படுகிறவர்களுக்கு இவ்வுலக வாழ்வில் இழிவைத் தவிர வேறு கூலி எதுவும் கிடையாது மறுமை நாளிலோ அவர்கள் மிகக் கடுமையான வேதனையின்பால் மீட்டப்படுவார்கள் 02:85

Leave a Comment

Previous post:

Next post: