பயங்கரவாத ஆயுதமாகும்…….பருவநிலை மாற்றங்கள்! (WEATHER WEAPONIZING)

in அறிவியல்

தங்களுக்கு தாங்களே தீங்கிழைக்கும் மனிதர்கள்!….-3.

  பயங்கரவாத ஆயுதமாகும்…….பருவநிலை மாற்றங்கள்!

(WEATHER  WEAPONIZING)

எஸ்.ஹலரத் அலி, திருச்சி-7.

மனிதர்களின் கைகள் தேடிக்கொண்டதன் காரணமாகக் கடலிலும் தரையிலும் அழிவு வேலைகள் (அதிகமாக) பரவி விட்டன…   – அல் குர்ஆன்..30:41.

என்ற அல்லாஹ்வின் வாக்குக்கேற்ப மனிதர்கள் தங்களுக்கு தாங்களே அழிவைத் தேடிக்கொள்கின்றனர். சுற்றுச்சூழலை மாசு படுத்தும் வாயுக்களை வெளியீட்டு, புவி  வெப்பமடைவதால் வரும் தீங்குகளை அனுபவித்து வருகின்றனர். அடுத்து, அல்லாஹ்வின் படைத்த படைப்பினங்களான நுண்ணுயீர்கள், தாவரங்கள், விலங்குகள் மற்றும் மனிதர்களின் படைப்பின் கட்டமைப்பை மாற்றும் வேலையில் (GENETIC MODIFIED ORGANISMS) இறங்கி, தங்களுக்கு தாங்களே தீங்கிழைத்துக் கொள்கிறார்கள்.

  இந்த வகையில், மனிதன் தனக்குத்தானே தீமையை ஏற்படுத்தும் ஒரு குழப்பமே வானிலையின் இயற்கை தன்மையை மாற்றி, அதை ஆயுதமாக மக்கள் மீது ஏவுதல். இயற்கை சீற்றங்கள் என்று சொல்லப்படும்,புயல்,,மழை, பெருவெள்ளம், கடல் சீற்றம், சுனாமி, நிலநடுக்கம் போன்றவற்றை செயற்கையாக உருவாக்கி எதிரிகளை அழிக்கும் ஆயுதமாக (WEAPONIZING THE WEATHER) அவைகளை மாற்றுதல்.

இயற்கை  பேரிடர்களான, புயல்,மழை, வெள்ளம், சுனாமி, நிலநடுக்கம் போன்றவற்றை மனிதனால் உருவாக்க முடியுமா? என்ற கேள்விக்கு….நிச்சயம் முடியாது. அல்லாஹ்வைத் தவிர.. படைப்பாளன் எவருமில்லை. ஆனால் இங்கு மனிதன், அல்லாஹ்வின் படைப்பில் மாற்றம் செய்து  குழப்பி வருகின்றான். ஆகவே தான் அல்லாஹ், “குழப்பம் கொலையை விடக் கொடிது.” (அல் குர்ஆன்.2;191.) என்கின்றான்.  இயற்கை சுற்றுச் சூழலை மாற்றும் வேலையை,மனிதன் கையிலெடுத்து நூறு வருடங்களுக்கு மேலாகிறது.இன்று புதிதாக உருவாக்கப்பட்ட மாற்றமன்று.

முதலாம் உலக யுத்தத்தில் தாக்க வரும் ஜெர்மன் விமானங்களை குழப்புவதற்காக, இங்கிலாந்தில் சப்போக் என்னுமிடத்தில் ஆர்போர்ட் நெஸ் விமானத்தளத்தில், செயற்கை மேகங்களை உருவாக்கி வானில் பரப்பி விட்டனர். இது போல் 1949-1952 கால கட்டத்தில் “புராஜெக்ட்  க்யுமுலஸ்” (PROJECT CUMULUS) என்ற பெயரில் இங்கிலாந்து விமானப்படை, மேகங்களில் சில்வர் அயோடைட்  உப்பை தூவினர்.  இதன் விளைவாக வழமையாக  பொழியும் மழையை விட 250 மடங்கு பொழிந்து பெரு வெள்ளம் ஏற்பட்டு ஒருகிராமத்தையே அழித்தது. இதில் 35 பேர் இறந்தனர். இந்த செயற்கை மழையின் ரகசியம் அன்று எவருக்கும் தெரியவில்லை. இயற்கை என்றே நினைத்தனர். ஐம்பது வருடம் கழித்தே விமானப் படை செய்த செயல் வெளியில் தெரிந்தது.

அமெரிக்காவும் இதே வேலையை வியட்னாம் போரில் கையாண்டது. கீ சான் (khe sanh) நகரை முற்றுகையிட்டுப் பிடிப்பதற்கு, பனி மூட்டம் ஒரு தடையாக இருந்ததால், பனியை கலைக்க வானிலிருந்து இரசாயன உப்பை தூவினர்.

Related imageவியட்னாம் ராணுவம் ஹோசிமின் நகருக்குள் வரக்கூடாது என்பதற்காக, வானில் சில்வர் அயோடைடு உப்புக்களைத் தூவி, தொடர்ந்து மழை பெய்ய முயற்சி செய்தனர். கடுமையான மழையால் போக்குவரத்து சாலையை சேறும் சகதியுமாக்கியும், நிலச்சரிவு  ஏற்படுத்தியும், ராணுவ வாகனங்களின் முன்னேற்றத்தை தடுக்க முயன்றனர். மழைக் காலத்தை நீடிக்க வைத்தனர். (Operation Popoye) இதற்கு “ஆபரேஷன் பொப்பாய்” என்றுபெயர் வைத்தனர்.

  இதன் தொடர்ச்சியாகவே, பருவகாலங்களை  பயங்கரவாத ஆயுதமாக்கும் செயல் இன்றும் நடக்கிறது. இன்று நடக்கும் இயற்கை பேரழிவுகளான புயல் மழை,வெள்ளம், சுனாமி, நிலநடுக்கம் போன்றவைகளை கவனித்து பார்க்கும்  போது, அதில் மனிதக்கரங்களின் பங்கு இருப்பதை ஆய்வாளர்கள் உறுதிப் படுத்துகின்றனர். பருவநிலை காலங்களில் மாற்றத்தை ஏற்படுத்தும் தொழிற்நுட்பம் (ENVIRONMENTAL WARFARE)  இன்று எல்லா  வல்லரசு நாடுகளிலும் உள்ளது.

இரண்டாம் உலகப்போரில் ஜப்பானை தாக்கிய அமெரிக்கா, “புராஜெக்ட் சீல்” (PROJECT SEAL) என்னும் பெயரில் ஒரு திட்டத்தை தயாரித்தது.  அதன்படி ஜப்பான் கடற்கரையிலிருந்து ஐந்து மைல் தொலைவில், கடலின் ஆழத்தில் 40   மில்லியன் பவுண்டு எடையுள்ள வெடி மருந்துகளை வரிசையாக புதைத்து வைத்து, அதை ஒரே நேரத்தில் வெடிக்கக் செய்ததால் எழும் பிரமாண்ட செயற்கை சுனாமி அலைகள் கரையோர ஜப்பான் துருப்புகளை துடைத் தெரிந்துவிடும். (பார்க்க..Tsunami bomb: in Wikipedia.)   

  இது போல் செயற்கையான “நிலநடுக்க குண்டு”களையும் தயாரித்து இரண்டாம் உலகப் போரில் நாஜி ஜெர்மனியில் போட்டு சோதித்தனர். வானிலிருந்து வீழும் இக்குண்டானது கட்டிடங்களுக்கு எந்த சேதத்தையும் ஏற்படுத்தாது. ஆனால் பூமியில் துளைத்துச் சென்று வெடித்து, ,நிலநடுக்கம் போன்று அதிர்ச்சி அலைகளை உண்டாக்கி மேற்பரப்பில் விரிசல் உண்டாக்கி கட்டிட அஸ்திவாரத்தை காலி செய்துவிடும். இதெல்லாம் ஐம்பது வருடத்திற்கு முன்பு உள்ள பழைய டெக்னாலஜி தற்போதுள்ள நவீன அறிவியலின் காரணமாக, நிகழும் பேரழிவுகள் இயற்கையா அல்லது செயற்கையா என்று சொல்ல முடியாத அளவு மனிதனின் அறிவியல் வளர்ச்சி உள்ளது.

Related imageசெயற்கையான புயல்,மழை,வெள்ளம், சுனாமி,நிலநடுக்கம் போன்ற பேரழிவுகளை மனிதன் உண்டாக்க முடியுமா ?  முடியும் என்பதால் தான் சுற்றுச்சுழல் வானிலையை மாற்றியமைத்து, அவற்றை ஆயுதமாக்கும் செயலுக்கு ஐ.நா.சபை அக்டோபர்- 5,1978  ல் தடைவிதித்தது. ஆயினும் ஆராய்ச்சி என்ற பெயரில் இவை எல்லாம் ரகசியமாக இன்றும் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. இந்தாய்வுகளில்  “ஹார்ப்” (HAARP) எனப்படும் அதி நவீன வானிலை ஆயுதம் (WEATHER  WEAPONS) பயங்கரமானது.

ஆதி மனிதனின் முதல் ஆயுதம் கல்லில் ஆரம்பித்து, பின்பு வாள் ,வேல், ஈட்டி,பின்பு நாகரீகமடைந்து துப்பாக்கி, பீரங்கி ஏவுகணை, அணு  குண்டு என்று முன்னேற்றம் அடைந்தான். ஆயினும் கொலை வெறி அடங்காமல், கத்தியின்றி ரத்தமின்றி கிருமி யுத்தத்தை (BIO-WEAPONS)  கண்டு பிடித்து, காலரா,பிளேக், சார்ஸ்,ஆந்த்ராக்ஸ், போன்ற கொடிய நோய்களை சோதனை சாலையில் உருவாக்கி, மக்களை உயிருடன் கொன்றான். தனித்தனியாக கொல்வதில் ஆர்வமின்றி, கூட்டம் கூட்டமாக, கொத்துக் கொத்தாக கொல்வதற்கு கண்டுபிடித்த சாதனமே ஹார்ப் ( HAARP)  ஆயுதம்.

  நாம் வாழும் உலகின் காற்று மண்டலம் பல அடுக்குகளாக உள்ளது. இதில் அயனோஸ்பியர் (IONOSPHERE)  எனப்படும் அயனி மண்டலம் பூமியிலிருந்து 60 கி.மீ ல் இருந்து 1000கி.மீ உயரம் வரை பரவி உள்ளது. இது சூரியனிலிருந்து வரும் வெப்பத்தை எடுத்து நேர் மின் அயனிகளாக மாறி சுதந்திரமாக உள்ளது (FREED IONS)

இப்படி சுதந்திரமாக இருக்கும் அயனிகள், ரேடியோ மின் அலைகளை எதிரொலிக்கும் தன்மையுடையவை. நமது வளி மண்டலமான அயநோஸ்பியரில் உள்ள அயனிகள், பூமியிலிருந்து அனுப்பப்படும் ரேடியோ அலைகளை மீண்டும் பூமிக்கே திருப்பி அனுப்பி தகவல் தொலை தொடர்புக்கு பெரிதும் உதவி வருகிறது.. மழை மேகங்களுக்கும் அரணாக உள்ளது.

 வானத்தின் திருப்பி அனுப்பும் பண்பு எவ்வளவு மிக உயர்வான ஒன்று என்பதை அல்லாஹ் அதன் மீது சத்தியமிடுவதிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

  திருப்பித் தரும் வானத்தின் மீது சத்தியமாக!  – அல் குர்ஆன். 86:11.

இவ்வசனத்தில் “வஸ்ஸமாயி தாதிர்ரஜ்இ” திருப்பித் தரும் வானம் என்பது, பொதுவாக, கடல் நீர் ஆவியாகி வான் மேகத்திற்கு சென்று, அங்கிருந்து மழை நீராக திரும்ப வருவதையே இவ்வசனம் குறிக்கிறது என்றாலும், நவீன அறிவியல்  ஆய்வில்,வானிலுள்ள அயநோஸ்பியர் மண்டலமானது பூமியிலிருந்து அனுப்பப்படும் தொலை தொடர்பு ரேடியோ அலைகளையும் மிண்டும் பூமிக்கே திருப்பி அனுப்பி வைக்கிறது  என்ற உண்மையை 1902 ஆண்டு மார்கோனி ரேடியோ கண்டுபிடித்த பின்னரே அறிந்தனர்.

 இந்த முக்கியமான அயனமண்டல ஆராய்ச்சிக்காக, அமெரிக்காவின்  பனிப்பிரதேசமான அலாஸ்கா மாநிலத்தில் ஹார்ப் ஆய்வு மையம் அமைத்துள்ளார்கள்.,3.6 மில்லியன் வாட் சக்தி வாய்ந்த 180 ஆண்டேனாக்கள் வழியாக, ஈ.எல்.எப்.என்னும்  (ELF – EXTREMELY LOW  FREQUENCY) மிகக் குறைந்த அலை வரிசை மூலம் சக்தி வாய்ந்த  மின் காந்த அதிர்வலைகளை உயரே அனுப்பி வெப்பப்படுத்துகிறார்கள். இத்தகைய அயனி மண்டல அதிர்வலை வெப்ப மாற்றத்தால், மழை மேகங்களை ஓர் இடத்திலிருந்து வேறு ஒரு இடத்திற்கு மாற்றவோ அல்லது .புதிய மேகங்களை உருவாக்கவோ முடியும்.

அயனி மண்டலத்தில் செயற்கையாக மாற்றம்  செய்வதன் மூலமாக, அதிக மழை,புயல், வெள்ளம்,வறட்சி, பூகம்பம் சுனாமி போன்றவற்றை விரும்பும் இடத்தில் உருவாக்கமுடியும். ஹார்ப்பின்  மூலம் அனுப்பப்படும் அதிர்வலைகள்,அயன் மண்டலத்தை சூடாக்கி தாம் விரும்பும் பகுதியில் துல்லியமாக, கடலில் காற்று அழுத்த தாழ்வு மண்டல நிலையை ஏற்படுத்தி புயலை உருவாக்கி சேதப்படுத்த முடியும்.

  https://www.globalresearch.ca/haarp-secret-weapon-used-for-weather-modification-electromagnetic-warfare/20407

 இரண்டு நாட்களுக்கு முன் அமெரிக்கா ஸ்டார் செய்தித்தாளில் வந்த தலைப்புச்செய்தி. (12-டிசம்பர்.  2018) ‘நியுயார்க் நகரை சூழ்ந்த விசித்திரமான மேகங்கள்’. கால நிலையை  கட்டுப்படுத்தும் அமெரிக்கா அரசின் ஹார்ப் திட்டத்தின் வான் வெளி ஆதாரம்?

Image result for HAARP weather control PROOF? Mysterious straight cloud emerges over New YorkHAARP weather control PROOF? Mysterious straight cloud emerges over New York

A WAVE of clouds engulfing New York City has sparked fears of weather control by the US government.   Published 12th December 2018.

https://www.dailystar.co.uk/news/weird-news/747731/haarp-weather-control-proof-straight-cloud-new-york

இது போன்ற கால நிலையை மாற்றும் ஆயுதங்கள் அமெரிக்கா, ரஷ்யா, மற்றும் சீனா விடமும் உள்ளது.தற்போது சீனா இதில் அதிக ஆர்வமுடன் ஆய்வு செய்துவருவதை கீழ் உள்ள பத்திரிக்கை செய்தி உறுதிப்படுத்துகிறது.

HAN OF GOD 

China creating powerful radar that can ‘control weather’ and ‘even trigger natural disasters’

Fears are growing that Beijing is bent on weaponising the weather with a high-powered radar being secretly developed in the contested South China Sea

By Patrick Knox

4th June 2018, 2:23 pm

https://www.thesun.co.uk/news/6446884/china-radar-control-weather-trigger-natural-disasters/

 26.12.2004 அன்று 9.3 ரிச்டர் அளவிலான புவி நடுக்கம் இந்தோனேசியாவின் சுமத்திரா பகுதியில் ஏற்பட்டு, அதன் தாக்கம் இந்து சமுத்திரனுடாக தென் இந்தியாவரை பல உயிர்களை பலி கொண்டிந்தது. இதன் பின்னணியில் அமெரிக்காவின் ஹார்ப் காலநிலை  மாற்றும் ஆயுதம் இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். சுனாமி  வருவதற்கு முன்பு 24.12.2004 அன்று இந்து சமுத்திர தீவுகளின் அமெரிக்க கடற்படை தளத்தில் பணியாற்றிய அனைவருக்கும் விடுமுறை என்ற பெயரில் ஒட்டு மொத்தமாக தனது நாட்டிற்கு திரும்ப அழைத்துக் கொண்டது அமெரிக்கா.

 (அதற்கு முன்னரும், பின்னரும் அவ்வாறு ஒட்டு மொத்தமாக விடுமுறை எந்த  ராணுவத்தினருக்கும் கொடுக்கப்படவில்லை.) கடும் சேதத்தை ஏற்படுத்திய காத்ரீனா புயலுக்கும், ஹைதி நிலநடுக்கத்திற்கும், ஜப்பான் சுனாமி நிலநடுக்கத்தால் புக்ஷிமா அணு உலை சேதத்திற்கும் கால நிலை மாற்றும் ஆயதங்களின் பங்கிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் சந்தேகிக்கிறார்கள்.

தமிழகத்திற்கும் இயற்கைக்கும் அப்படி என்னதான்  பகையோ? ஒன்றும் புரியவில்லை! நம் தமிழகத்தில் 1994 ல் இருந்து தொடர்ந்து புயல்கள் வருடந்தோறும் வரிசை கட்டி வருகின்றன. 2004 ல் சுனாமி, 2005 பானுஸ் புயல், 2008 நிஷா புயல், ஜல் புயல்,2011 தானே புயல், நீலம் புயல்,மடி புயல், அடுத்து 2016 வர்தா புயல், 2015சென்னை பெரு வெள்ளம், தற்போது டெல்டா மாவட்டங்களை சீரழித்த கஜா புயல்.

இது போன்ற இயற்கை பேரிடர்கள் தொடர்ந்து தமிழகத்தை தாக்கி வருகின்றன. இதற்கு பல காரணம் கூறுகிறார்கள்.வங்கக் கடலில் வழக்கமாக ஏற்படும் காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக உருவாவதாக… ஆயினும் ஹார்ப் போன்ற மனிதக் கரங்களின் உள்ளடி வேலையும்  இருப்பதாக, ஆய்வாளர்கள் கூறுவதையும் மறுப்பதற்கில்லை. அமெரிக்காவின் ஹார்ப் என்னும் காலநிலை ஆயுதமே காரணம் என்று கூறுபவர்கள் ஒரு உண்மையை மறந்து விட்டார்கள். சுற்றுச்சூழலை ஆயுதமாக்கும் ஹார்ப் தொழிற்நுட்பம் அமெரிக்காவிடம் மட்டுமல்ல. நமது இந்தியாவிலும் இந்த ஆயுதம் இருப்பது பல பேருக்குத் தெரியவில்லை. இந்தியாவில் 60% மக்களுக்கு கக்கூஸ் வசதி செய்ய முடியாத அரசுக்கு… எதற்கு இந்த ஹார்ப் ஆயுதம்? இதை கேக்கக் கூடாது.

சென்னைக்கு மிக அருகில் ஆந்திரா திருப்பதி – சித்தூருக்கு இடையில், காதங்கி என்னும்  கிராமத்தில் நமது இந்திய அரசின் பிரமாண்டமான, வானிலையை மாற்றும் ஹார்ப் (HAARP)  ஆய்வு நிலையம் உள்ளது. ( NATIOAL  MST –Mesosphere  -Stratosphere  –  Troposphere Radar Facility) இதை தேசிய வளி மண்டல ஆய்வு  நிலையம் (National Atmospheric  Research Laboratory- NARL )  இயக்குகிறது.


(HAARP like facilities are not in Alaska alone, but installed all across the globe. The one in India is located in Gadanki, Andhra Pradesh.

அமெரிக்கா, அலாஸ்காவில் உள்ளது போலவே ஆந்திராவில் உள்ள ஹார்ப் ஆய்வுக் கூடமும் (1024) கூடுதல் ஆண்டெனாக்களை வைத்து அயனமண்டலத்தை ஆராய்கிறது.இந்த ஆய்வுக் கூடம் நினைத்தால்…. பக்கத்துக்கு சென்னைக்கு பெரு வெள்ளத்தை அனுப்பலாம்…புயலை ஏவி டெல்டா மாவட்டத்தை காலி செய்து ஹைட்ரோகார்பன் எடுக்கலாம். எல்லாமே இயற்கை பேரிடராக லைவாக (LIVE) ஒளிபரப்பாகும். தமிழகத்தின் வாழ்வாதாரத்தை காவிரி நதியில் வஞ்சிக்கும் மத்திய அரசு… ஹார்ப்பை வைத்தும் பழி வாங்குமா? இருக்காது என்றே நம்புவோம்.

இயற்கையை மாற்றியமைக்கும் ஜியோ என்ஜினியரிங் (GEO-ENGINEERING) தொழிற்நுட்பத்தை இன்று யார் யாரோ கையிலேடுத்துள்ளனர்.”குழந்தைகள், பெரியவர்கள் யார் வேணாலும் சாப்பிடலாம் என்ற நிலையில் உள்ளது.உங்க வீட்டு கல்யாணத்தன்று மழை வரக்கூடாது என்றால்..கொஞ்சம் பணம் செலவு செய்தால் போதும்.உங்கள் வீட்டுக்கு மேலேயுள்ள மழை மேகத்தை காலி பண்ணிக் கொடுக்க ஏகப்பட்ட கம்பெனிகள் காத்திருக்கின்றன.

இயற்கையை அடிமைப்படுத்த மனிதன் ஆசைப்படுகிறான்.அல்லாஹ் தன் படைப்பில் உள்ள அனைத்தையும் மனிதனுக்கு வசப்படுத்திக் கொடுத்திருக்கின்றான். ஆயினும் பேராசை கொண்ட மனிதன் தொடர்ந்து குழப்பம் செய்வதையே தன் குறிக்கோளக  கொண்டுள்ளான். இது ஆபத்தை விலை கொடுத்து வாங்குவது போன்றதே! இயற்கையை மனிதன் தான் கைக்குள் அடக்க முடியாது. இயற்கையை புரிந்து, அதனுடன் இயைந்து பயணிப்பதே நமக்கு நன்மையைத் பெற்றுத் தரும்.

அல்லாஹ் படைத்த ஒழுங்கமைப்பில் அவர்கள் மாற்றங்கள் செய்வார்கள்.-4;!19.

 

Leave a Comment

Previous post:

Next post: