நிலவுக்குச் சென்ற விண்வெளி விமானிகளைக் தாக்கிய இதயநோய்!

in அறிவியல்

 “வானத்தில் ஏறுபவனின் நெஞ்சைப் போல் இறுகிச் சுருங்கும்படிச் செய்கிறான்”அல் குர்ஆன்.

(Deep space travels could shrink arteries in Astronauts)

எஸ்.ஹலரத் அலி, திருச்சி

image001நீர்,நிலத்தை வெற்றிகொண்டு பல்கிப்பெருகிய மனிதன், ஆகாயத்தையும் விட்டு வைக்கவில்லை.விண்ணில் சுழலும் வேறு கிரகங்களில் வசிக்க முடியுமா? என்ற தேடுதல் வேட்டையில்.அமெரிக்காவின் அப்போலோ-11 விண்கலம் மூலம்,1969 ம் ஆண்டு ஜூலை, 21 ம் நாள் நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் தடம் பதித்து சரித்திரம் படைத்தார்.

மனிதன் பறவைகளைப்போல் வானில் பறக்க முடியுமா? வானில் ஏறி நிலவைப் பிடிக்க முடியுமா?என்ற கற்பனைகளில் மூழ்கி இருந்த காலத்தில்,ஆயிரத்து நானுறு ஆண்டுகளுக்கு முன்பே மனிதன் வானையும் வசப்படுத்த முடியும்,விண்ணுக்கும் செல்லலாம்…அதற்குரிய ஆற்றலுடன் என்று அல் குர்ஆனில் அல்லாஹ் அழகாக உரைத்து விட்டான்.

ஓ, ஜின் மற்றும் மனிதக் கூட்டங்களே! வானங்கள் மற்றும் பூமியின் எல்லைகளை விட்டு ஓடிச் செல்ல உங்களால் முடியுமானால் ஓடிப்பாருங்கள்.உங்களால் ஓடிச் செல்லவே முடியாது; அதற்கெனப் பெரும் வலிமை வேண்டும்.                             அல் குர்ஆன்.55:33.

 இந்த வசனம் இறங்கியபோது வாழ்ந்த மக்களால், வானம் பூமி எல்லையை தாண்ட முடியாது.ஆனால் இதற்குரிய அறிவாற்றல் வலிமையைப் பெரும் வருங்கால மக்களால் இதுவும்  சாத்தியமே என்ற அல்லாஹ்வின்  முன் அறிவிப்பு இன்று நிதர்சனமாகி விட்டது.சந்திரனில் கால் பதித்த மனிதன், தற்போது செய்வாய் கிரகத்திற்கு சென்று 2035 ம் ஆண்டில் கால் பதிக்க ஆயத்தமாகி வருகிறான்.

மனிதனை மீண்டும் நிலவுக்கும்,செய்வாய் கோளுக்கும் அனுப்பும் ஆயத்த வேளையில் அமெரிக்கா,ரஷ்யா,சீனா,ஐரோப்பிய ஒன்றியம்,போன்ற நாடுகள் இருக்கும் நிலையில்,குறிப்பாக அமெரிக்கா 2020-2030 வருட வாக்கிலும்,ஐரோப்பிய யூனியன் மற்றும் தனியார் SpaceX,  2026 ம் வருடம் வாக்கிலும் செய்வாய் கோளுக்கு மனிதனை அனுப்ப தயார் செய்து வரும் நிலையில்,.இந்த வாரம் வெளியான,(28-ஜூலை 2016 நேச்சர் ஆய்விதழ்)அமெரிக்காவின் புளோரிடா மாநில பல்கலைக்கழகத்தின் அறிவியல் ஆய்வறிக்கை ஒரு அதிர்ச்சியான செய்தியை வெளியிட்டது.என்ன செய்தி?

விண்வெளியில் மிக நீண்ட தூரம் பயணம் செய்து நிலவுக்குச் சென்று திரும்பியதன் காரணமாக, இதயம் பாதிக்கப்பட்டு இறந்த விண்வெளி ஆய்வாளர்கள் சதவீதம் அதிகமாக உள்ளது. (Apollo Lunar Astronauts Show Higher Cardiovascular Disease Mortality: Possible Deep Space Radiation Effects on the Vascular Endothelium.- Michael D. Delp1-Scientific Reports) |

http://www.nature.com/articles/srep29901

Apollo astronauts experiencing higher rates of cardiovascular-related deaths.

http://news.fsu.edu/Top-Stories/Apollo-astronauts-experiencing-higher-rates-of-cardiovascular-related-deaths

இந்தச் செய்தி விண்வெளிப் பயணத்திட்டத்திற்கு ஒரு பின்னடைவாக கருதப்படுகிறது.இது குறித்து ஆய்வு நடத்திய பேராசிரியர்.மைகேல் டி டெலப் அவர்கள் கூறுவது; “We know very little about the effects of deep space radiation on human health, particularly on the cardiovascular system,” Delp said. “This gives us the first glimpse into its adverse effects on humans.”

விண்வெளி உள்ளே, நீண்ட தூரம் பயணிக்கும் மனிதர்களின் இதய ரத்த ஓட்டத்தில் ஏற்படும் ஆரோக்கிய குறைபாடு குறித்து நாங்கள் குறைவாகவே அறிந்திருக்கின்றோம்.

கடந்த 1961 ம் ஆண்டிலிருந்து 1972ம் ஆண்டுவரை அப்போலோ திட்டத்தில், மொத்தம் பதினொன்று பயணங்களில் மனிதர்கள் விண்வெளிக்கு சென்று வந்தார்கள்.இதில் ஒன்பது பயணங்கள் Deep space என்று சொல்லப்படும் பூமியும் எல்லைக்கு அப்பால் (Beyond Earth’s orbit into deep space)நீண்டஆழ் வெளி, நிலவை நோக்கி சென்ற பயணம்.இரண்டு பயணங்கள் மட்டும் பூமியின் எல்லைக்குள் போய்வந்த பயணம் (Near earth orbit).

நிலவுக்கு போய் வந்த விமானிகளில் சுமார் 43 சதவீதமானவர்களின் இறப்புக்கு காரணம் மாரடைப்பு,இதயக் கோளாறு நோய்கள்.(Cardiovascular disease) நிலவுக்குப்போகாமல் பூமிக்கு அருகில் போய் வந்த விமானிகளின் இறப்பைவிட சுமார் நான்கு அல்லது ஐந்து மடங்கு அதிகமாக இருக்கிறது,நீண்ட நிலவு பயணம் மேற்கொண்டவர்களின் இறப்பு.இதுவரை நிலவுப்பயணத்தை மேற்கொண்ட24 ஆய்வாளர்களில் 8 பேர் இதய நோயால் இறந்துள்ளதாக ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது.

விண்வெளியில் நீண்ட தொலைவு பயணம் செய்வதால் இதயம் பாதிப்படைய வாய்ப்புள்ளதா? என்பதை கண்டறிய, சோதனைசாலையில் எலிகளை விண்வெளி நிலையில் வைத்து ஆய்வு செய்தபோது அவைகளுக்கும் இதயம் பாதிக்கப்பட்டதை கண்டறிந்தார்கள்.பொதுவாக,பூமியின் எல்லைக்கு அப்பால் விஷேச கவச உடைகள் அணிந்து பயணம் செய்தாலும், அவர்களின் ஆரோக்கியத்திற்கு உத்திரவாதமில்லை.காரணம் என்ன?

அல்லாஹ் கூறுகிறான்: இன்னும் வானத்தை நாம் பாதுகாப்பான விதானமாக அமைத்தோம்.எனினும் அவர்கள் அவற்றிலுள்ள அத்தாட்சிகளைப் புறக்கணித்து விடுகிறார்கள்.”                                                                                           –அல் குர்ஆன்.21:32.

image003விண்வெளியில் தொடர்ந்துவரும் ஆபத்தான (Cosmic radiations)அண்டக் கதிர்களிலிருந்தும்,சூரியப் புயல்களிருந்தும்,(solar flare and storm) மனித மற்றும் அனைத்து உயிர்களையும் பாதுகாப்பதற்காக அல்லாஹ் பல விசேச பாதுகாப்புகளை அமைத்துள்ளான்.இந்தப் பாதுகாப்புக் கூரை பூமியிலிருந்து சுமார் 160 கி.மீ.இருந்து  60,000 கி.மீ தூரம் வரை பல அடுக்குகளாக அமைந்து பாதுகாப்பு கொடுக்கிறது.

பூமியிலிருந்து 16-48.K.M.உயரத்தில் உள்ள ஸ்டேட்ரோஸ்பியர் (Stratosphere) வளி மண்டல அடுக்கில் ஒசோன் வாயு நிறைந்துள்ளது.இது சூரியனிடமிருந்து வரும் தீங்கான புற ஊதா கதிர்களை (UV-B & UV-C)தடுத்துவிடுகிறது.இதற்கு அடுத்த நிலையில் உள்ள மெசோஸ்பியர் (Mesosphere-50-70.K.M) அடுக்கானது,விண்வெளியிலிருந்து வரும் விண் கற்களை எரித்து சாம்பலாக்கி விடுவதன் மூலம் உயிரினங்களைப் பாதுகாக்கிறது.

image004உலக உயிர் ஜீவன்களைப் காப்பதற்கு அல்லாஹ் ஏராளமான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளான். உயிரினங்களுக்கு ஆதாரமான உணவு உற்பத்திக்கு சூரிய ஒளி இன்றியமையாதது. சூரியன் இல்லையேல் உயிரினங்கள் இல்லை. ஆனாலும் அதே சூரியனிடமிருந்து உயிரினங்களுக்கு தீங்கு விளைவிக்கும் புற ஊதா, அகச்சிவப்பு கதிர்கள் பூமியை நோக்கி பாய்கின்றன. இக்கதிர்களை தடுப்பதற்கு பூமியிலிருந்து 6-30 மைல் உயரத்தில் ஓசோன் என்னும் தடுப்பை அல்லாஹ் ஏற்படுத்தியுள்ளான். ஓசோன் படலம் கூரை போன்று பூமியை பாதுகாக்கிறது.                                             

 ஒரு அறிவியல் ஆய்வு (Nature-Journal 26.Nov.2014) மூலம் அபாயகரமான விண்வெளிக் கதிர்களால் (Ultrarelativistic electrons) ஊடுருவ முடியாத, கண்ணுக்குத் தெரியாத ஒரு பாதுகாப்பு அமைப்பு பூமிக்கு மேல் இருப்பதாக அமெரிக்காவின் MIT மற்றும் Colorado University பல்கலைகழக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.
An impenetrable barrier to ultrarelativistic electrons in the Van Allen radiation belts. http://www.nature.com/nature/journal/v515/n7528/full/nature13956.html

சூரியனிலிருந்து புறப்பட்டு ஒளி வேகத்தில் வரும் ஆட்கொல்லி எலெக்ட்ரான்கள் ஐந்து நிமிடத்தில் பூமியை தாக்கி சின்னாபின்னப்படுத்த முடியும், இப்படி வரும் எலெக்ட்ரான்களை பூமியில் இருந்து 1000-60000 KM தொலைவில் உள்ள வான் ஆலன் கதிர்வீச்சு வளையத்தில் (Van Allen radiation belts) உள்ள கண்ணுக்குப் புலனாகாத, கதிர்வீச்சு ஊடுருவ முடியாத ஒரு பாதுகாப்பு ஒலித் தடுப்பு (Plasmaspheric hiss) தடுத்து விடுவதாக தற்போது கண்டு பிடித்துள்ளனர்.

அல்லாஹ்வின் பாதுகாப்பு இவ்வளவு இருந்தும்,நிலவுக்குச் செல்பவர்களுக்கு இதய நோய் வரக்காரணம் என்ன?

அல்லாஹ்  அவனது வானத்தின் கூரைகளுக்கு கீழ் வசிக்கும் அனைத்து உயிரினங்களுக்கும் முழுப் பாதுகாப்பு கொடுத்துக்கொண்டுதான் வருகிறான்.ஆனால் அல்லாஹ்வின் பாதுகாப்புக் கூரையைத் தாண்டி60,000 K.M, அதற்கும் அப்பால், நிலவுக்குச் செல்லும் மனிதர்களின் பாதுகாப்பை அல்லாஹ் உறுதி செய்யவில்லை. மாறாக,அவ்வாறு உயரே செல்லும் மனிதர்களின் இதயம் சுருங்கும்(அப்படி சுருங்குவதால் இதய நோய் வரும்) என்ற அறிவியல் உண்மையை ஓர் உதாரணம் மூலமாக அல் குர்ஆனில்  அன்றே சொல்லி விட்டான்.

அல்லாஹ் எவர்களுக்கு நேர்வழி காட்ட நாடுகிறானோ அவருடைய நெஞ்சை  இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதற்காக விசாலமாக்குகிறான்- யாரை வழிகெடுக்க நாடுகிறானோ அவருடைய நெஞ்சை, வானத்தில் ஏறுபவனின் நெஞ்சைப் போல் இறுகிச் சுருங்கும்படிச் செய்கிறான்.இவ்வாறே நம்பிக்கை கொள்ளாதவர்களுக்கு அல்லாஹ் தண்டனை ஏற்படுத்துகிறான்.

                                                                                 –அல் குர்ஆன்.6:125.

அண்டக் கோள், நட்சத்திரங்களிலிருந்து வரும் அபாயகரமான கதிர்வீச்சு மற்றும் சூரியனிடமிருந்து வரும் தீங்கான கதிர்களிலிருந்து உயிரினங்களை அல்லாஹ் வான் ஆலன் கவசப் பட்டையை 60,000K.M.வரை கூரை போன்று அமைத்து பாதுகாக்கிறான்.இந்தப் பாதுகாப்பு வளையத்தை(The Earth’s protective Magnetoshere) தாண்டி விண்வெளியில் ஆழமாக நிலவுக்குச் (384,400 km.) செல்பவர்களின் இதயம் சுருங்கி இரத்த ஓட்ட தமனிகளில் அடைப்பு ஏற்பட்டு மாரடைப்பு (CVD-Cardio vascular disease ) போன்ற இதய நோய் ஏற்படுவதை நவீன அறிவியல் ஆய்வு இன்று உறுதி செய்துள்ளது.அல்ஹம்துலில்லாஹ்!

Life on Earth is insulated from the harmful effects of galactic cosmic rays and solar particle events through particle deflection by the Earth’s magnetosphere and shielding by Earth’s atmosphere. With the exception of the Apollo lunar missions.

Apollo Lunar Astronauts Show Higher Cardiovascular Disease Mortality: Possible Deep Space Radiation Effects on the Vascular Endothelium. Sci. Rep. 6, 29901; doi: 10.1038/srep29901 (2016). http://www.nature.com/articles/srep29901

பூமியில் நீள் வட்டத்தில் இருக்கும் நமது இதயம்.விண்வெளிக்கு மேலே ஏறிச் சென்றபிறகு ஈர்ப்பு விசை இல்லாத காரணத்தால் ரத்தத்தை அழுத்தித் தள்ளும் ஆற்றல் குறைந்து விடுவதால் இதயம் 9.4 சதவீதம் வட்ட வடிவமாக சுருங்கிவிடுகிறது.இதையே அல்லாஹ் அல் குர்ஆன்.6:125

வசனத்தில் குறிப்பிடுகிறான்.பூமியை 400 K.M உயரத்தில் சுற்றிவரும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் (International Space Station-ISS ) பணியாற்றிய 12 விண்வெளி ஆய்வாளர்களின் இதயத்தை அல்ட்ரா சவுண்டு சோதனை மூலம் ஆய்வு செய்தபோது,இதயம் சுருங்கி வட்டவடிவ நிலை அடைவதை கண்டறிந்தனர்.

http://www.science20.com/news_articles/in_space_astronaut_hearts_work_less_shrink_and_become_more_spherical-132894

image005பூமியில் வசிக்கும்போது நமது இதயம் இருக்கும் நிலை பச்சை வண்ணத்தில் காட்டப்பட்டுள்ளது..விண்வெளியில் ஈர்ப்பு ஆற்றல் மற்றும் வெற்றிட நிலையில் இதயம் சுருங்கி வட்டவடிவமாக இருக்கும் நிலை சிவப்பு நிறத்தில் உள்ளது.

http://www.space.com/25452-zero-gravity-affects-astronauts-hearts.html

“வானத்தை நாம் பாதுகாப்பான விதானமாக அமைத்தோம்.” என்ற 21:32வசனத்தின் மூலம் அல்லாஹ் அமைத்த பாதுகாப்பு விதானத்தை (Magnetosphere-புவி காந்தப்புலம்-60,000 K.M) தாண்டிச் செல்பவர்களின் உடல் ஆரோக்கியம் கேள்விக்குறிதான் என்பது அப்போலோ நிலவுப் பயணத்தில் சென்று வந்தவர்கள் இதய நோய் இறப்பின் (CVD & Atherosclerosis-narrowing the arteries)மூலம் நிரூபணமாகிறது.

“வானத்தில் ஏறுபவனின் நெஞ்சைப் போல் இறுகிச் சுருங்கும்படிச் செய்கிறான்”..என்ற அல் குர்ஆன். 6:125 வசனப்படி,பூமியைத் தாண்டி வானத்தை நோக்கிச் செல்லும் விண்வெளி வீரர்கள்,  ஈர்ப்பு விசை அழுத்தமின்மை மற்றும் வெற்றிடம்  காரணமாக, இதயம் நீள் வட்ட அமைப்பு சுருங்கி வட்ட வடிவமாக மாறிவிடும் (Heart shrink like a spherical  shape) என்பதை நவீன அறிவியல் நிரூபித்துள்ளது.அல்ஹம்துலில்லாஹ்!

தெளிவான அத்தாட்சிகள் உங்களிடம் வந்த பின்னரும் நீங்கள் சருகிவிடுவீர்களானால்- நிச்சயமாக அல்லாஹ் வலிமை மிக்கவன்; பேரறிவாளன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

                                                                                              அல் குர்ஆன்.2;209

Leave a Comment

Previous post:

Next post: