“நாளின் ஆரம்பம்”
“நேற்று” என்பதும் “இன்று” என்பதும் “நாளை” என்பதும் ஓருபோதும் ஒன்றல்ல.
அது போலவே “கடந்த” காலம் ,”நிகழ்” காலம் ,”எதிர்” காலம் , ஆகிய இவை மூன்றும் ஒருபோதும் ஒன்றல்ல வெவ்வேறானவைதான்
எம்மைவிட்டும் கடந்து சென்ற “நேற்றைய” தினம் என்பது வேறு . பொழுது புலர்ந்துள்ள எமது “இன்றைய” தினம் என்பது வேறு . நாம் எதிர்பார்த்திருக்கும் “நாளைய” தினம் என்பது வேறு . என்பதாகவே அல்லாஹ்வும் அவனுடைய தூதர்களும் நமக்குச் சொல்லித் தந்துள்ளார்கள் என்பதற்கான சான்றுகளை நிறையவே எம்மால் குர்ஆனிலும் ஆதாரபூர்வமான ஹதீஸ்களிலும் காணமுடிகிறது .
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நாமே (காலத்தால்) பிந்தியவர்களாகவும் மறுமை நாளில் (தகுதியால்) முந்தியவர்களாகவும் இருப்போம். நாமே சொர்க்கத்தில் முதலில் நுழைவோம். எனினும், (யூதர் மற்றும் கிறித்தவரான) அவர்கள் நமக்கு முன்பே வேதம் வழங்கப்பெற்றனர். அவர்களுக்குப் பின்புதான் நாம் வேதம் வழங்கப்பெற்றோம். அவர்கள் கருத்து வேறுபாடு கொண்ட விஷயத்தில் அல்லாஹ் நமக்குச் சத்தியத்திற்கு வழிகாட்டினான். இந்த (ஜுமுஆ) நாள் விஷயத்திலும் (அதை வார வழிபாட்டு நாளாக ஏற்பது தொடர்பாக) அவர்கள் கருத்து வேறுபாடு கொண்டனர். அல்லாஹ் நமக்கு அந்த நாளை அறிவித்துத் தந்தான். (இதில் மக்கள் அனைவரும் நம்மைப் பின்தொடரக்கூடியவர்களே ஆவர்.) “இன்று (வெள்ளிக்கிழமை) நமக்குரிய (வழிபாட்டு) நாளாகும். “நாளை (சனிக்கிழமை) யூதர்களுக்குரிய நாளாகும். “நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) கிறித்தவர்களுக்குரிய நாளாகும்.இதை அபூஹுரைரா (ரலி) புகாரி – 896, 876, 3486, . முஸ்லிம் : 1549 – 1551, முஸ்னது அஹ்மத், நஸயி, ).
ஜுவைரியா (ரலி) அவர்கள் கூறியதாவது :- நான் வெள்ளிக்கிழமை (யாகிய “இன்று” ) நோன்பு நோற்றிருந்தபோது நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள் . “நேற்று” நோன்பு நோற்றிருந்தாயா ?” என்று கேட்டார்கள் நான் “இல்லை!” என்றேன். “நாளை” நோன்பு நோற்க விரும்புகிறாயா?” என்றுகேட்டார்கள் அதற்கும் “இல்லை” என்றேன் (இதைக் கேட்ட) நபி (ஸல்) அவர்கள் “அப்படியானால் (“இன்று” நோற்றுள்ள) நோன்பை முறித்துவிடு!” என்று கூறினார்கள் . (புகாரி-1986)
அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் :- உங்களில் எவரும் வெள்ளிக்கிழமைக்கு முன்னர் ஒரு நாளைச் சேர்க்காமல் அல்லது அதற்குப் பின்னர் ஒரு நாளைச் சேர்க்காமல் வெள்ளிக்கிழமை மாத்திரம் நோன்பு நோற்க வேண்டாம் !” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் . (புகாரி-1984,1985) என்பதிலிருந்து “நேற்று” “இன்று” “நாளை” , என்பது வெவ்வேறானவைதான் . அதுபோன்றே “கடந்த” காலம் , “நிகள்” காலம், “எதிர்” காலம், என்பதும் வெவ்வேறானவைதான். அவை மூன்றும் ஒருபோதும் ஒன்றல்ல. என்பதனைத் தனித்தனியாகப் பார்ப்போம் .
☪ ஒரு நாளின் ஆரம்பம் முடிவு இரண்டையும் நிர்ணயிப்பது சூரியனைக் கொண்டுதான் ஒவ்வொரு நாளும் “ கறுப்புக் கயிறு “ எனும் இரவின் இருள் ரேகை விலகி “ வெள்ளைக் கயிறு “ எனும் விடியலின் வெளிச்ச ரேகை தெரிய பொழுது புலர்ந்துவிட்டால் (02:187) அன்றைய நாளும் திகதியும் சூரியன் உதித்தவுடன் ( 06:96 ) இயல்பாகவே மாறிவிடுகிறது இதுவே தொன்றுதொட்டு மனித குலம் பயன்படுத்தி வரும் இயற்கையானதும் இலகுவானதுமான நாட்காட்டிக்கான (09:96) வழிமுறையாகும் இதனையே பரிசுத்த குர்ஆன் வசனங்களும் நபி(ஸல்) அவர்களின் சொல்லும் செயல் முறைகளும் நமக்கு நிரூபிக்கின்றன.
ஓர் ஆண்டைக் கணக்கிட வேண்டுமானால் அதன் மாதங்களையும், வாரங்களையும் , நாட்களையும் சரியாகக் கணக்கிட வேண்டும் , ஒரு நாளை முதலில் எதிலிருந்து கணக்கிட வேண்டும் என்ற கேள்விக்குப் பதிலாகத்தான் அல்லாஹ் – ( பொழுது புலரும்போது ) உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளை நீங்கள் தேடிக் கொள்வதற்காகவும் ;ஆண்டுகளின் எண்ணிக்கையையும் ,(மாதங்களின் , வாரங்களின் , நாட்களின் ) கணக்குகளையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காகவும் பகலின் அத்தாட்சியைப் பிரகாசமாக்கினோம் ( 17:12 ) என்றும்
ஆண்டுகளின் எண்ணிக்கையையும் காலக் கணக்கையும் நீங்கள் அறிந்துகொள்ளும் பொருட்டு அவன்தான் சூரியனைச் (சுடர்விடும்) பிரகாசமாகவும் சந்திரனை ஒளிவுள்ளதாகவும் ஆக்கினான் (10:05) என்றும் குறிப்பிடுகின்றான் , மேலும் , பொழுது புலரும் அதிகாலை நேரமென்பது மாற்றத்தின் நேரமாகும் உலகின் பல மாற்றங்களை எல்லாம் அல்லாஹ் அதிகாலை நேரத்திலேயேதான் ஏற்படுத்தி உள்ளான்
● அவனே பொழுதை விடியச் செய்பவன் ( 06:96 )
● ( பொழுது புலரும் ) விடியற்காலை மீது சத்தியமாக! ( 89:01 )
● பொழுது புலர்ந்து வெளிச்சம் தரும் அதிகாலை மீது சத்தியமாக (74:34)
● இரவின் இருள் ரேகை எனும் “ கறுப்பு கயிறு “ விலகி பொழுது புலர்ந்து விடியலின் வெளிச்சரேகை எனும் “ வெள்ளைக் கயிறு “ தெரியும்வரை உண்ணுங்கள் பருகுங்கள் (02:187)
☪ உலகில் அழித்து நாசமாக்கப்பட்ட கேடுகெட்ட சமுதாயத்தவர்கள் எல்லாம் பெரும்பாலும் பொழுது புலரும் அதிகாலை நேரத்திலேதான் அழித்து ஒழிக்க்கப்பட்டார்கள் என்று குர்ஆன் கூறுகின்றது
● நிச்சயமாக இவர்களுக்கு – அழிவு வர – வாக்களிக்கப்பட்ட நேரம் விடியற் காலையாகும் (11:81)
● ( பிர்அவ்னுடைய கூட்டத்தினரான ) அவர்கள் சூரியன் உதயமாகும் வேளையில் இவர்களைப் பின்தொடர்ந்தார்கள் ( 19:60 )
● நிச்சயமாக அவர்கள் அனைவரும் பொழுது புலரும் அதிகாலை வேளையில் வேரறுக்கப் பட்டிருப்பார்கள் என்ற அந்தத் தீர்ப்பை நாம் (லூத் நபியாகிய ) அவருக்கு அறிவித்து விட்டோம் ( 15:66 )
● எனினும் ( ஸமூது கூட்டத்தாரான ) அவர்கள் அனைவரையும் பொழுது புலர்ந்து அதிகாலையை அடைந்தபோது பாரிய பேரிடி முழக்கத்தின் சத்தம் பிடித்துக் கொண்டது (15:83 )
● அது தனது இரட்சகனின் கட்டளைப் பிரகாரம் அனைத்துப் பொருட்களையும் அழித்துவிடும் அவர்களது குடியிருப்புகளைத் தவிர (வேறெதுவும்) காணப்படாதவாறு அவர்கள் பொழுது புலர்ந்த காலையை அடைந்தனர் குற்றவாளிகளான இக்கூட்டத்தாருக்கு இவ்வாறே நாம் கூலி கொடுப்போம் (46:25)
● இன்னும் பொழுது புலர்ந்த அதிகாலை வேளையில் நிலையான வேதனை நிச்சயமாக ( லூத்துடைய சமூகத்தாராகிய ) அவர்களை வந்தடைந்தது (54:38)
● லூத்துடைய குடும்பத்தாரைத் தவிர மற்றவர்கள் மீது நாம் நிச்சயமாகவே கல்மாரியை அனுப்பினோம் பொழுது புலர்ந்த அதிகாலை வேளையில் நாம் அவர் குடும்பத்தார்களைப் பாதுகாத்துக் கொண்டோம் ( 54:34 )
● தோட்டவாசிகளை நாம் சோதித்ததுபோல் இவர்களையும் நிச்சயமாக நாம் சோதித்தோம் இவர்கள் அதை அறுவடை செய்வதற்காக பொழுது புலரும் அதிகாலை வேளையில் செல்வதாக சத்தியம் செய்தபோது அல்லாஹ் நாடினால் என அவர்கள் கூறவில்லை ( 68:17,18)
● அவர்களின் அழிவுக்குரிய நேரம் பொழுது புலரும் அதிகாலை நேரமாகும் பொழுது புலரும் அதிகாலை ( நேரம்) சமீபமானதாக இல்லையா ? ( 11:81 )
● எமது கட்டளை வந்தபோது ஷுஐபையும் அவருடன் நம்பிக்கை கொண்டோரையும் எம்மிடமிருந்துள்ள அருளால் நாம் பாதுகாத்தோம் அனியாயம் செய்தோரைப் பெரும் பேரிடி சப்தம் பிடித்துக்கொண்டது அதனால் அவர்கள் வீடுகளில் பொழுது புலர்ந்த அதி காலைவேளையில் சடலங்களாக முகம் குப்புறக் கிடந்தார்கள் (11:94 )
● ( ஷுஐபாகிய ) அவரை அவர்கள் பொய்ப்பித்தனர் எனவே அவர்களைப் பாரிய நிலநடுக்கம் பிடித்துக்கொண்டது அதனால் அவர்கள் தங்கள் வீடுகளில் பொழுதுபுலர்ந்த அதி காலைவேளையில் சடலங்களாக முகம் குப்புரக் கிடந்தனர் ( 29:37, 07:91)
● (அல்லாஹ்வின்) வேதனை ( மக்காவாசிகளான ) அவர்களது முற்றத்தில் இறங்கி விடுமானால் எச்சரிக்கப் பட்டோரின் பொழுது புலர்ந்த அதி காலைவேளை மிகக் கெட்டதாகிவிடும் (37:177)
● பொழுது புலர்ந்த அதி காலையிலும் இரவிலும் நீங்கள் அவர்கள் அழிந்துபோன இடத்தின் மீதே செல்கின்றீர்கள் நீங்கள் விளங்கிக்கொள்ள மாட்டீர்களா? ( 37:137,138)
● அவர்கள் பொழுது புலர்ந்த அதிகாலை வேளையை அடைந்தவுடன் நீங்கள் அறுவடை செய்பவர்களாக இருந்தால் உங்கள் விளை நிலங்களுக்கு பொழுது புலரும் அதிகாலை வேளையிலேயே செல்லுங்கள் என ஒருவரையொருவர் அழைத்துக் கொண்டனர் (68:21,22)
● ஏழைகளைத் தடுக்க ஆற்றலுடையவர்களாகவே அவர்கள் பொழுது புலரந்த அதிகாலைவேளையில் சென்றனர் (68:25)
☪ புனித ரமழானில் நபி (ஸல்) அவர்கள் புனித லைலதுல் கத்ரைத் தேடி பள்ளிவாசலில் தரித்திருக்க நாடினால் இரவு பகல் 24 மணி நேரங்களைக்கொண்ட ஒரு சுப்ஹுத் தொழுகையிலிருந்து மறு சுப்ஹுத் தொழுகை வரை எடுத்துக் கொள்வார்கள்
● நபி (ஸல்) அவர்கள் இஃதிகாஃப் இருக்க நாடினால் ஸுப்ஹ் தொழுதுவிட்டுப் பொழுது புலரும் அதிகாலைவேளையில் இஃதிகாஃப் இருக்கும் இடத்திற்குள் சென்றுவிடுவார்கள் ( ஆயிஷா (ரலி) புகாரி – பாகம் – 02 -பக்கம் – 689, பாடம் – 14,& 2041, 2033, முஸ்லிம் – 2007, அபூதாவூத் – 2107, நஸயி – 702, திர்மிதி – 721, இப்னுமாஜா – 1761, முஸ்னத் அஹ்மத் – 24710 )
● நபி (ஸல்) அவர்கள் இஃதிகாஃப் இருந்துவிட்டுப் பொழுது புலரும்போது அதி காலை வேளையில் இஃதிகாஃபிலிருந்து வெளியேறுவார்கள் (ஆயிஷா (ரலி) புகாரி – பாகம் – 02 – பக்கம் – 684 – பாடம் – 09,எனும் தலைப்பிலும் பக்கம் – 688 – பாடம் – 13 – என்ற தலைப்பிலும் மேலும் பார்க – 2027, 2036, 2040, 2045,)
● நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ஜுக்குச் செல்லும்போது துல் ஹுலைஃபாவில் விடியும்வரை தங்கினார்கள். பிறகு ஸுபஹ் தொழுதவுடன் வாகனத்தில் அமர்ந்து பைதா எனுமிடத்தில் வாகனம் நிலைக்கு வந்த போது ஹஜ், உம்ரா, இரண்டிற்காகவும் இஹ்ராம் அணிந்தார்கள். தல்பியா கூறினார்கள்.(அனஸ் பின் மாலிக் (ரலி) இப்னு உமர் (ரலி) புகாரி – 1546, 1547.1551, 1553, )
● நபி (ஸல்) அவர்கள் துல்ஹஜ் பிறை “எட்டில்” இஹ்ராம் அணிந்து வாகனத்தில் ஏறி மினா சென்று லுகர் அஸர் தொழுகைகளை அங்கு தொழுதார்கள் ( அனஸ் பின் மாலிக் (ரலி) ஜாபிர் (ரலி) இப்னு உமர் (ரலி) அதஃ (ரஹ்) அபுஸ் ஸுபைர் (ரஹ்) உபைத் பின் ஜுரைஜ் (ரஹ்) அப்துல் அஸிர் பின் ருஃபை(ரஹ்) புகாரி – பாகம் – 02 – பக்கம் – 379,பாடம் – 82 , பக்கம் – 380 – பாடம் – 83, & 1653, 1654, 1763, 1764,)
● மினாவில் சுபஹ் தொழுதுவிட்டு துல்ஹஜ் பிறை “ஒன்பதில் சூரியன் உதயமானதும் அதிகாலையிலேயே புறப்பட்டுச்சென்று அரஃபா மைதானத்தை அடைகின்றார்கள். ( அனஸ் (ரலி) புகாரி – 02, பக்கம் , 384, பாடம் 86, & 1659) அன்றைய ஒன்பதாவது நாள் முஜ்தலிஃபாவில் சுபஹ் தொழுகைவரை நீடிக்கின்றது.
● முஜ்தலிஃபாவில் ஸுப்ஹை அதற்கான (வழக்கமான) நேரத்திற்கு முன்னரே தொழுதுவிட்டு துல்ஹஜ் பிறை பத்தாவது நாளின் அதிகாலையிலேயே சூரியன் உதயமாவதற்கு முன்னர் புறப்பட்டு முதலாவது பெரிய ஜம்ராவில் கல் எறிவதற்காக மினா செல்கின்றார்கள். ( அபூஹுரைரா (ரலி) அப்பாஸ் (ரலி) ஃபள்ல் (ரலி) ஆயிஷா (ரலி) புகாரி – 1681,1682, 1683,1684, 1590, 1686, 1687, ) ஆக மினாவிற்கும், அரஃபாவிற்கும், மறுபடி மினாவிற்கும், அதிகாலையிலேயே நபி (ஸல்) அவர்கள் சென்றுள்ளார்கள். அதுபோன்றே. அதிகாலையிலேயே மக்காவிற்குள்ளும் நுழைந்துள்ளார்கள்.
● ஹஜ்ஜின்போது நபி (ஸல்) அவர்கள் புனித ஹரம் எல்லையை நெருங்கிவிட்டால் தல்பியாவை நிறுத்திவிடுவார்கள். பிறகு “ஃதூத்துவா” என்னுமிடத்தில் இரவு தங்கிச் ஸுப்ஹுத் தொழுதுவிட்டுக் குழிப்பார்கள். காலையில் மக்காவிற்குள் நுழைவார்கள். ( இப்னு உமர் (ரலி) அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) புகாரி – பாகம் 02, பக்கம் 318, பாடம் 39, பக்கம் 465, பாடம் 148, & 1573, 1574, 1767, 1768, 1769,)
● ஹஜ்ஜுப் பெருநாளன்று நபி (ஸல்) பகீஃ என்னும் இடத்திற்குச் சென்று இரண்டு ரக்அத்கள் தொழுவித்தார்கள் பின்னர் அவர்கள் எங்களை நோக்கி உரை நிகழ்த்தினார்கள் அவ் உரையில் இன்றைய தினத்தில் நாம் முதலில் செய்யவேண்டியது பெருநாள் தொழுகையை நிறைவேற்றுவதாகும் பிறகு திரும்பிச்சென்று அறுத்துப் பலியிடுதலாகும்….என்று (பராஃ பின் ஆஸிப் (ரலி) அனஸ் பின் மாலிக் (ரலி) ஜுன்தப் ) (ரலி) புகாரி – 968 , 976 , 983 , 984, 985 )
● நபி (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாள் தினத்தில் புறப்பட்டு இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள் அதற்கு முன்பும் அதற்கு பின்பும் எதையும் அவர்கள் தொழவில்லை அவர்களுடன் பிலால் (ரலி) அவர்களும் சென்றார்கள் ( இப்னு அப்பாஸ் (ரலி) ப்காரி – 989)
● இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் பெருநாள் தொழுகைக்கு முன்பும் பின்பும் வேறு தொழுகைகள் தொழுவதை வெறுப்பவர்களாக இருந்தார்கள் ( ஸயீத் (ரஹ்) புகாரி – பாகம் – 01 – பக்கம் – 746 – பாடம் – 26 பெருநாள் தொழுகைக்கு முன்பும் பின்பும் தொழலாமா ? என்பது பற்றிய பாடம் )
● பெருநாள் தொழுகைக்குக் காலையிலேயே செல்வது பற்றிய பாடம் (லுஹா எனும்) உபரித் தொழுகை நேரத்தில் இந்நேரம் நாங்கள் நபி(ஸல்) அவர்களது காலத்தில் பெருநாள் தொழுகையைத் தொழுது முடித்துவிடுவோம் (அப்துல்லாஹ் பின் புஸ்ர் (ரலி) புகாரி – 01- பக்கம் – 730 , பாடம் – 10)
● இரண்டு ஈட்டி அளவு சூரியன் உயர்ந்தபின்னர் நோன்புப் பெருநாள் தொழுகையையும் ஒரு ஈட்டி அளவு சூரியன் உயர்ந்தபின்னர் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையையும் நபி (ஸல்) அவர்கள் தொழுவார்கள் (ஹஸன் பின் அஹ்மத் , கிதாபுல் அழகீ , தல்கீஸ் , இப்னு ஹஜர் )
● அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் ஒவ்வொரு நாளின் காலையிலும் இரண்டு வானவர்கள் வானத்திலிருந்து இறங்கி பூமிக்கு வருகின்றார்கள்….அபூஹுரைரா (ரலி) புகாரி – 1442, முஸ்லிம் )
☪ ஏக இறைவனின் பேரருளால் நமது வாழ்நாளில் நாம் அடைந்திருக்கின்ற இன்று என்பது எதுவரையெனில் அதிகாலை சுபஹ் நேரம் சூரியன் உதித்ததிலிருந்து முழுப் பகலையும் முடித்து மஃரிபு நேரம் அது மறைந்தபின் தொடரும் இரவையும் முடித்து மறுபடியும் சுபஹ் நேரம் அது உதிப்பதற்கு முன்னர் வரையுள்ள நேரமாகும். என்பதாகவே குர்ஆனும் ஹதீஸும் நமக்குச் சான்று பகர்கின்றன – ஆக ஒரு நாளின் ஆரம்பம் முடிவு இரண்டையும் நிர்ணயிப்பது சூரியனின் சுளற்சியை வைத்துத்தான் அவ்வாறே பிரபஞ்ச நியதி ஒழுங்குபடுத்தப் பட்டுள்ளது அதனை நாம் இன்று என்போம் அதில் பகல் பொழுது 12 மணி நேரங்களும் இரவுப் பொழுது 12 மணி நேரங்களுமாகும். சில காலங்களில் மாத்திரம் பகல்,இரவு, நேரங்களில் சிறிதளவு கூடுதல் குறைவு ஏற்படுவதுண்டு.
“அல்லாஹும்ம ! அன்த்த ரப்பீ லா இலாஹ இல்லா அன்த கலக்த்தனீ வ அன அப்துக்க வ அன அலா அஹ்திக்க வ வஅதிக்க மஸ்ததஅத்து அஊது பிக்க மின் ஷர்ரி மா ஸனஅத்து அபூஉ லக்க பி நிஅமத்திக்க அலய்ய வ அபூஉ லக்க பி தன்பி ஃபஃக்பிர்லீ ஃபஇன்னஹு லா யஃக்பிருத் துனூப இல்லா அன்த்த”
என்ற தலைசிறந்த பாவமன்னிப்புப் பிரார்த்தனையை யார் நம்பிக்கையோடும் தூய்மையான எண்ணத்தோடும் (முற்) பகலில் கூறிவிட்டு அதே நாளில் மாலை நேரத்திற்கு முன்பாக இறந்து விடுகின்றாரோ அவர் சொர்க்கவாசிகளில் ஒருவராக இருப்பார்
யார் இதை நம்பிக்கையோடும் தூய்மையான எண்ணத்தோடும் (முன்) இரவில் கூறிவிட்டு (அடுத்தநாளின்) காலை நேரத்திற்கு முன்பே இறந்துவிடுகின்றாரோ அவரும் சொர்க்க வாசிகளில் ஒருவராக இருப்பார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ( ஷத்தாத் பின் அவ்ஸ் (ரலி) புகாரி – 6306)
● ( அரஃபாவுடைய நாளாகிய ) இன்றைய தினத்தில் உங்களது மார்க்கத்தைப் பூர்த்தியாக்கி விட்டேன் ; எனது அருட் கொடையை முழுமையாக்கி விட்டேன் ; இஸ்லாத்தை உங்களது மார்க்கமாகப் பொருந்திக் கொண்டேன் ( 05:03 ) என்ற இறைவசனம் குறித்து
● துல் ஹஜ் பிறை ஒன்பதாவது அரஃபாவுடைய வெள்ளிக் கிழமை நாளில் அருளப்பட்டது என்று உமர் (ரலி) அவர்களும் ( புகாரி – 47, 4407, 6726, 7268, முஸ்லிம் – 5332, 5334, நஸயி – 4926, திர்மிதி – 2929, அஹ்மது – 261, 183, ) துல்ஹஜ் ஒன்பதாவது நாள் மாலையில் அரஃபாவில் நின்று கொண்டிருக்கும்போது அருளப்பட்டது என்று அலி (ரலி) அவர்களும் ( தஃப்சீர் தபரீ , இப்னு கஸீர் 03:43, )
● அப்துல் அஸீஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது :- நான் துல்ஹஜ் பிறை எட்டாம் நாள் ( இஹ்ராம் அணிந்து ) மினாவுக்குப் புறப்பட்டேன் அப்போது கழுதையில் அமர்ந்து சென்று கொண்டிருந்த அனஸ் (ரலி) அவர்களைச் சந்தித்தேன் நான் அவரிடம் இன்றைய தினம் நபி (ஸல்) அவர்கள் எங்கு லுஹர் தொழுதார்கள் ? என்று கேட்டேன்…. (புகாரி – 1654 )
● ஹஜ்ஜுப் பெருநாளன்று நபி (ஸல்) பகீஃ என்னும் இடத்திற்குச் சென்று இரண்டு ரக்அத்கள் தொழுவித்தார்கள் பின்னர் அவர்கள் எங்களை நோக்கி உரை நிகழ்த்தினார்கள் அவ் உரையில் இன்றைய தினத்தில் நாம் முதலில் செய்யவேண்டியது பெருநாள் தொழுகையை நிறைவேற்றுவதாகும் பிறகு திரும்பிச்சென்று அறுத்துப் பலியிடுதலாகும்….எனறு (பராஃ பின் ஆஸிப் (ரலி) ஜுன்தப் (ரலி) அனஸ் பின் மாலிக் (ரலி) புகாரி – 968 , 976 , 983 , 984, 985 )
☆ ஹஜ்ஜுப் பெருநாளுடைய அன்றைய தினத்தில் முதன் முதலாவதாகச் செய்யவேண்டியது ஒரு ஈட்டி அளவு உயரத்திற்கு சூரியன் உயர்ந்தவுடன் பெருநாள் தொழுகையை நிறைவேற்றுவதாகும் என்ற அல்லாஹ்வுடைய தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களுடைய ஆதார பூர்வமான முன்மாதிரியில் இருந்து எவ்வித சந்தேகமும் இன்றி நாம் புரிந்து கொள்வது அன்றைய நாளின் ஆரம்பம் அதிகாலை நேரம் என்பதாகத்தான். மஃரிபு நேரம் அல்ல.
● நேற்று நான் கலீபா உமர் (ரலி) அவர்களிடம் வந்து மூன்று முறை ஸலாம் சொல்லி அனுமதி கேட்டேன் எனக்கு அனுமதி வழங்கப்படவில்லை திரும்பிச் சென்றுவிட்டேன் பிறகு இன்று அவர்களிடம் சென்று நேற்று நான் வந்து மூன்றுமுறை சலாம் சொன்னேன் பதில் வராததால் பிறகு நான் திருப்பிச் சென்றுவிட்டேன் என்று கூறினேன் (அபூமூஸா(ரலி) – முஸ்லிம் – 4352
● இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள் நபி (ஸல்) அவர்கள் தமது கடைசிக் காலத்தில் ஒருநாள் இஷாத் தொழுகையைத் தொழுவித்துவிட்டு எழுந்து நின்று இன்றைய இந்த இரவைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா ? இன்று பூமியில் இருக்கும் எவரும் நூறு ஆண்டுகளுக்குப்பிறகு எஞ்சியிருக்க மாட்டார்கள் என்று கூறினார்கள்
( புகாரி – 601 )
● ஜுவைரியா (ரலி) அவர்கள் கூறியதாவது :- நான் வெள்ளிக்கிழமை(யாகிய இன்று) நோன்பு நோற்றிருந்தபோது நபி(ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள் . நேற்று நோன்பு நோற்றிருந்தாயா ?” என்று கேட்டார்கள் நான் “இல்லை!” என்றேன். நாளை நோன்பு நோற்க விரும்புகிறாயா?” என்றுகேட்டார்கள் அதற்கும் “இல்லை” என்றேன் (இதைக் கேட்ட) நபி (ஸல்) அவர்கள் “அப்படியானால் (இன்று நோற்றுள்ள) நோன்பை முறித்துவிடு!” என்று கூறினார்கள் . (புகாரி-1986)
● இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என்னிடம் “இன்று” இரவு (கனவில்) இரண்டு வானவர்கள் (ஜீப்ரீலும் மீக்காயிலும்) வந்தார்கள். பிறகு நாங்கள் உயரமான ஒரு மனிதரிடம் சென்றோம். நீளத்தின் காரணத்தால் அவரின் தலையை நான் பார்க்க முடியவில்லை. அவர்கள் தாம் இப்ராஹீம்(அலை) அவர்கள் ஆவர்.( சமுரா இப்னு ஜுன்தப்(ரலி) அறிவித்தார்.ஸஹீஹ் புகாரி : 3354.)
● “ கறுப்புக் கயிறு “எனும் இரவின் இருள் ரேகை விலகி “ வெள்ளைக் கயிறு “ எனும் விடியலின் வெளிச்ச ரேகை தெரியும் வரை உண்ணுங்கள் பருகுங்கள் ( 02:187 ) என்பதானது அதிகாலை பொழுது புலர்ந்து சூரியன் உதயமாகும்வரை உண்ணலாம் பருகலாம் உறவு கொள்ளலாம் என்பதாகும் (தஃப்சீர் இப்னு கஸீர் 01:576 – 592 )
● நபித்தோழர்களில் சிலர் நோன்பு நோற்க நாடினால் தமது கால்களில் வெள்ளைக் கயிற்றையும் கறுப்புக் கயிற்றையும் எடுத்துக் கட்டிக்கொள்வார்கள் மற்றும் , சிலர் ஒரு கறுப்புக் கயிற்றையும் வெள்ளைக் கயிற்றையும் எடுத்துத் தனது தலையணைக்கடியில் வைத்துக்கொண்டு உற்றுப் பார்த்துக்கொண்டே கறுப்பையும் வெள்ளையையும் வித்தியாசம் காணும் அளவிற்கு அதிகாலை வெளிச்சம் தென்படும்வரை உணவு உண்டுவந்தார்கள் ( சஹ்ல் பின் சஅத் (ரலி) அதீ பின் ஹாத்திம் (ரலி அனஸ் பின் மாலிக் (ரலி) அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) ) புகாரி – 4511, 1916, 1921, 4509, 4510,1918, 1923,1931, 1932, முஸ்லிம் , திர்மிதி , நஸயீ , இப்னு மாஜா , முஸ்னத் அஹ்மத் , தாரமீ , அபூதாவூத் , ) அது போன்றே
● இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது விடைபெறும் ஹஜ்ஜின்போது துல்ஹஜ் பிறை ஒன்பதாவது நாள் இரவு அப்துல் முத்தலிப் குடும்பத்தாரின் சிறுவர்களான நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு முன்பே எங்களுக்குரிய கழுதைகளில் ஏறி முஜ்தலிபாவிலிருந்து மினாவுக்குச் செல்லத் தயாரானோம் (முதியோர்கள், பெண்கள், குழந்தைகள், நோயாளிகள், சிறுவர்கள், போன்ற பலவீனமானவர்களை இவ்வாறு நபியவர்கள் முன்னதாக அனுப்பினார்கள் )
அப்போது நபியவர்கள் எங்கள் தொடைகளை இலேசாகக் கிள்ளி “என் அருமை மக்களே !” சூரியன் உதயமாகாதவரை ஜம்ரா ( எனும் அகபா ) வில் நீங்கள் கல்லெறிய வேண்டாம் என்று கூறினார்கள் ( புகாரி – 02, பக்கம் 399, பாடம் 98, & 1676, 1677, 1678, 1679,1680, 1681, நஸயீ, அபூதாவூத், இப்னுமாஜா, முஸ்னத் அஹ்மத், தஃப்சீர் இப்னு கஸீர் 07:258,259,) இதிலிருந்து ஜம்ராவில் கல் எறியவேண்டிய துல்ஹஜ் பிறை பத்தாவது நாள் சூரியன் உதயமாகிய பின்னரே ஆரம்பமாகிறது என்பது தெளிவாகிறது . மாறாக மஃரிப் நேரம் சூரியன் மறைந்தவுடன் அல்ல .
● ஹாஜிகள் துல்ஹஜ் பிறை ஒன்பதில் அரஃபா மைதானத்தில் தங்கி அங்கு லுஹர் அசர் தொழுகைகளைத் தொழது மஃரிப் நேரமானதும் முஜ்தலிபாவிற்குச் சென்றால் தான் அது பரிபூரணமான ஹஜ்ஜாக அமையும் ஆனாலும் ஹஜ்ஜுக்காக வந்தவர்களுக்கு ஏதோ இடையூறு காரணமாக பிறை ஒன்பதாவது பகல் பொழுதில் அரஃபா மைதானத்தை அடைய முடியவில்லை ஆயினும் அன்றைய மஃரிபுக்குப் பிறகானாலும் அல்லது ஃபஜ்ருக்குள்ளேனும் அரஃபா மைதானத்தை அடைந்து அங்கு சிறிதளவேனும் தரித்துவிட்டு ஃபஜ்ர் தொழுகைக்கு முஜ்தலிபாவிற்குச் சென்று முஜ்தலிபாவில் ஜமா அத்தாக ஃபஜ்ர் தொழுதால் அவரது ஹஜ் பரிபூரணமாக நிறைவேறிவிடும் அவர் தனது ஹஜ்ஜின் கிரிகைகளை மேற்கொண்டு தொடரலாம் என்பதனைப் பின்வரும் அறிவிப்பு உறுதிப்படுத்துகிறது
நபி (ஸல்) அவர்கள் முஜ்தலிபாவில் சுப்ஹ் தொழுகைக்குத் தயாரான நேரத்தில் நான் அவர்களிடம் சென்றடைந்தேன் அல்லாஹ்வின் தூதரே நான் “தய்யீ” எனும் கஷ்டப்பிரதேச மலைப் பகுதியிலிருந்து வருகிறேன் மிகவும் கஷ்டப்பட்டு வருகிறேன் எனவே எனக்கு ஹஜ் பலன் உண்டா? என்று கேட்டார் அதற்கு நபி(ஸல்) அவர்கள் யார் நமது இந்த சுப்ஹ் தொழுகையில் பங்கெடுத்து நம்முடன் தங்கியிருந்தவர் இதற்கு முன்னர் அவர் அரஃபாவில் பகலிலோ இரவிலோ சிறிது தங்கியிருந்தாலும் அவரது ஹஜ் நிறைவு பெறுகிறது அவர் தனது ஹஜ்ஜுக்கான ஏனய கிரிகைகளை மேற்கொண்டும் தொடரலாம் என்று கூறினார்கள் (உர்வா பின் முளர்ரிஸ் (ரலி) திர்மிதி – 814, 815, 2901,)
மினாவில் இருக்கும்போது ஃபஜ்ருக்குப் பின்னர் அதிகாலை வேளையில் ஆரம்பித்த துல்ஹஜ் பிறை ஒன்பதாவது அரஃபாவுடைய நாள் முஜ்தலிபாவின் சுப்ஹ் ஜமாஅத் தொழுகைவரை என்பதைத் தெளிவாக அறிகின்றோம் மேற்கண்ட ஆதாரபூர்வமான அறிவிப்பின் மூலம் மஃரிபில் இருந்து நாள் ஆரம்பிக்கிறது என்னும் மாற்றுக் கருத்துடையவர்களின் கூற்றுப் பொய்யாகி விடுகிறது இவர்களின் வாதப்படி துல்ஹஜ் பிறை எட்டு மினாவில் இருக்கும் போது மாலை நேரம் மஃரிபிலிருந்து அரஃபாவுடைய நாள் ஆரம்பித்து அன்று மாலை மஃரிபுடன் அரஃபாநாள் முடிவு பெறுகிறது அத்துடன் அறுப்பின் பத்தாவது நாள் ஆரம்பித்து விடுகிறது அப்படியானால் அன்று பின்தங்கி மஃரிபுக்குப் பிறகு அல்லது இஸாவுக்குப் பிறகு அரஃபா மைதானத்தை அடைந்து வருபவர்களுக்கு ஹஜ் எப்படி நிறைவேறும் ?
முஜ்தலிபாவின் சுப்ஹுக்குள் யார் அரஃபாவைக் கடந்து தொழுகைக்கு வந்துவிட்டாரோ அவர் ஹஜ்ஜை அடைந்துவிட்டார் எனும் அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்களின் கூற்று என்னாவது
● வானத்தில் நீளவாக்கில் செங்குத்தாகத் தோன்றிப் பரவக்கூடிய வைகறை எனும் ஃபஜ்ருக்கு முன்புவரை உள்ள இருளான நேரத்தில் ஒருவர் அரஃபாவில் தங்குவதால் அவரது ஹஜ் தவறிவிடாது என்பதாக இப்னு அப்பாஸ் (ரலி) அதாஉ (ரஹ்) ஆகியோரிடமிருந்து சரியான அறிவிப்பாளர் தொடரில் வந்துள்ள ஆதாரபூர்வமான தகவலாகும் (தஃப்சீர் இப்னு கஸீர் 01:585 – 586 )
☪ அமைதி நிலவியிருக்கும் லைலத்துல் கத்ருடைய பாக்கியமுள்ள பரிசுத்தமான நாள் சூரியன் உதயமாகும் வரை நீடித்திருக்கும்
● நிச்சயமாக நாம் (பரிசுத்த குர்ஆனாகிய) இதை கண்ணியமிக்க (லைலதுல் கத்ர்) என்ற நாளில் இறக்கினோம் மேலும் கண்ணியமிக்க நாள் என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது ? கண்ணியமிக்க (அந்த) நாள் ஆயிரம் மாதங்களைவிட மிகச் சிறந்ததாகும் அதில் வானவர்களும் ஜிப்ரீலும் தமது இரட்சகனின் கட்டளையின்படி (நடைபெற வேண்டிய) ஒவ்வொரு காரியங்களுடனும் இறங்குகிறார்கள் அமைதி நிலவியிருக்கும் அது (அன்றைய) விடியற்காலை (சூரியன்) உதயமாகும்வரை இருக்கும் (97:01-05) என்பதானது ஆயிரம் மாதங்களைவிடச் சிறந்த லைலதுல் கத்ருடைய நாள் என்பது 24 மணி நேரங்களைக் கோண்ட ஒரு நாளாகும்
பனூ இஸ்ரவேலர்களது கூட்டத்தில் ஒரு மனிதர் ஆயிரம் மாதங்கள் அல்லாஹ்வின் பாதையில் புனிதப் போர் செய்வதற்காக ஆயத்தமாக இருந்தார் அவர் இரவிலும் விழித்திருந்து விரோதிகளுடன் போர் புரிந்தார் என்று கூறினார்கள் இதனைக்கேட்ட நபித் தோழர்கள் ஆச்சரியமடைந்தார்கள் அப்போதுதான் குர்ஆனின் ( 97:01 – 05 ) ஆவது அத்தியாயம் இறங்கியது ( முஜாஹித் (ரஹ்) இப்னு ஜரீர் (ரஹ்) அபூ ஹாத்தம் (ரஹ்) இப்னு கதீர் (ரஹ்) அத்தகைய
ரமழானில் லைலதுல் கத்ருடைய நாளைப் பெற்றவர் “பனூ இஸ்ரவேலர்களின் ஆயிரம் மாத இறை வணக்கத்திற்கும் மேலான பலனை அடைவார் “ எற்று இறைதூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் கூறினார்கள் ( அம்ர் பின் கைஸ் (ரலி) முஸ்னத் அஹ்மத் , தஃப்சீர் இப்னு கஸீர் , & அபூஹுரைரா (ரலி) புகாரி – 35 ) மேலும்
லைலதுல் கத்ர் எனது சமுதாயத்தினருக்கு மட்டும் அருளப்பட்ட ஒரு அருட்கொடை என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (அனஸ் பின் மாலிக் (ரலி) முஸ்னத் அஹ்மத் , தைலமி ) அதனால்தான் சொற்ப ஆயுள் கொடுக்கப்பட்ட எம்மீது அதிக இரக்கம் கொண்ட அல்லாஹ்
பகல் பொழுது 12 மணி நேரங்களையும் இரவுப் பொழுது 12 மணி நேரங்களையும் சேரத்து 24 மணி நேரங்களைக் கொண்ட ஒரே நாளில் முழு உலக முஸ்லீம்களும் அதிக நன்மைகளைப் பெற்றுப் பெரியளவு பிரதிபலன்களை அடைந்து கொள்வதற்காக வேண்டியே!
தெளிவான இவ்வேதத்தின்மீது சத்தியமாக ! நிச்சயமாக நாம் (குர்ஆனாகிய) அதனை பாக்கியமுள்ள நாளில் இறக்கினோம் (44:2,3)
நிச்சயமாக நாம் ( குர்ஆனாகிய ) அதை கண்ணியமிக்க ( லைலதுல் கத்ர் ) என்ற ஒரு நாளில் இறக்கினோம் மேலும் கண்ணியமிக்க நாள் என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது ? கண்ணியமிக்க (அந்த) நாள் ஆயிரம் மாதங்களை விட மிக மேலானதாகும் அதில் வானவர்களும் ஜிப்ரயீலும் தமது இரட்சகனின் கட்டளையின்படி (நடைபெற வேண்டிய) சகல காரியங்களுடனும் இறங்குகின்றார்கள் அமைதி நிலவியிருக்கும் அது விடியற் காலை உதயமாகும் வரையில் இருக்கும் ( 97:01 – 05 ) புனித நாளைத் தருவதாகச் சொல்கின்றான்
ரமழான் மாதம் எத்தகையது எனில் அ ( ம் மாதத் ) தில்தான் குர்ஆன் இறக்கியருளப்பட்டது. (02:185)
நிச்சயமாக நாம் ( குர்ஆனாகிய ) இதனை அருள்பொழியப்பட்ட ஓர் நாளில் இறக்கியருளினோம். ஏனெனில் நாம் ( உலக மக்களுக்கு ) எச்சரிக்கை செய்வோர் ஆவோம். “அதில்தான்” உறுதியான ஒவ்வொரு விவகாரமும் தெளிவாகப் பிரி ( த்து வனவர்களிடம் கைய்யளி ) க்கப்படுகிறது. (44:03) “அதில்தான்” என்றால் லைலதுல் கத்ருடைய நாளில் என்று பொருள். அந்த நாளில்தான் ஓராண்டின் விவகாரங்கள், அதில் நிகழவிருக்கும் ஆயுள்காலங்கள், “ரிஜ்க்” எனும் வாழ்வாதாரங்கள், அவ்வாண்டின் இறுதி வரையில் நடைபெறவிருக்கும் இதைப் போன்ற விவகாரங்கள் அனைத்தையும் லவ்ஹுல் மஹ்பூழ் எனும் பாதுகாக்கப்பட்ட ஏட்டிலிருந்து எடுக்கப்பட்டு எழுத்தாழர்களான வானவர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது. (தஃப்சீர் இப்னு கஸீர் 08;307 – 310)
ரமழானில் பிந்திய பத்தில் ஒற்றைப்படை நாளில் ஏற்படும் லைலதுல் கத்ர் என்பதற்கான அடையாளம் அந்த நாளின் இரவை அடுத்துவரும் நாளின் அதிகாலைப்பொழுதில் சூரியன் சுடரின்றி ஒளியிளந்து வெண்ணிறத்தில் மங்கலாக உதிக்கும் (உபை பின் கஅப் ( ரலி) முஸ்லிம் – 1397, 2175) ஆனால் உங்களிடம் இருக்கும் (97:01- 05) இன் மொழி பெயர்ப்பைப் புரட்டிப் பாருங்கள் அவற்றில் “இரவு” இரவு” என்றே மொழிபெயர்க்கப் பட்டுள்ளது காரணம்
மனித கரங்களால் புனிதம் மாசுபடுத்தப்பட்டுள்ள பைபிளில். பூமியே பிரபஞ்சத்தின் மையம் அதனைச் சுற்றியே சூரியனும் , கிரகங்களும் வட்டமிடுகின்றன. பூமியின் ஒரு உயரமான மலையின் மேல் சாத்தான் கொண்டு போய் உலகத்தின் சகல ராஜ்ஜியங்களையும் காட்டியது (விவிலியம் புதிய ஏற்பாடு மத்தேயு அதிகாரம் 04:08,09,10, ) எனும். பூமியின் ஒரே இடத்தில் எல்லாப் பொருட்களையும் ஒன்று சேர்த்து காட்டப்பட்டதனால் பூமி தட்டை வடிவமானது சூரியன் பூமியைச் சுற்றி வருகிறது அதனால்தான் இரவு பகல் உண்டாகின்றது என்ற அறிவியலுக்கு முரணான பைபிளின் கூற்றையே அன்றைய யூத கிறிஸ்த்தவ உலகம் பெரிதும் நம்பியது
ஏறக் குறைய அன்றைய அதே காலகட்டத்தில் பூமி தட்டையானது எனும் யூத கிறிஸ்த்தவ அன்னிய கலாச்சாரத்தின் தாக்கத்திற்கு ஆளான நிலையில் “தஷ்ரீக்குல் அஃப்லாக்” என்ற பெயரில் எழுதப்பட்டுள்ள புவி இயல் பற்றிய நூலில் பூமி தட்டையானது சூரியன் பூமியைச் சுற்றி வருகிறது அதனால்தான் இரவு பகல் உண்டாகின்றது என்று அறிவியலுக்கு முரணாக அபத்தமாக எழுதப் பட்டுள்ளதையே இன்றைய அறிவியல் உலகிலும் புவி இயல் பாடமாக அரபு மதரஸாக்களில் கற்றுக் கொடுக்கப் படுகிறது அதன் விளைவு இன்றைய அரபு மத்ரஸாக்களிலிருந்து மெளலவிகளாக வெளியான பெரும்பாலானவர்களுக்கு தலைப்பிறை எந்த திசையில் உதிக்கிறது என்பதில் கூட சரியான தெளிவில்லை என்பதனை நீங்களே அவர்களிடம் கேட்டுப் பாருங்களேன். அவர்களது நிலமை புரியவரும்.
இதனால்தான் உருண்டையான பூமியில் 24 மணி நேரங்களைக் கொண்ட ஒருநாளில் 12 மணி நேரங்களைக்கொண்ட பகலில் இவர்கள் இருக்கும்போது 12 மணி நேரங்களைக்கொண்ட இரவில் அவர்கள் இருக்கின்றார்கள். ஆக இவர்கள் பகலில் நுளையும்போது அவர்கள் இரவில் நுளைகின்றார்கள் இவர்கள் இரவில் நுளையம்போது அவர்கள் பகலில் நுளைகின்றார்கள் என்னும் அறிவியல் பேருன்மையைப் புரிந்து கொள்ளாததனாலேயே “ நாள் “ நாளில் “ என்று வரவேண்டிய இடங்களிலெல்லாம் “இரவு”இரவு” என 24 மணி நேரங்களைக்கொண்ட ஒரு நாளை இவர்கள் 12 மணி நேரங்களைக்கொண்ட ஒரு இரவு என மொழிபெயர்க்கின்றார்கள்
● பாலைவிட அதிக வெண்மையானதாகவும் தேனைவிட அதிக இனிப்பாகவுமுள்ள “மன்னு” மற்றும் “சல்வா” என்னும் உணவுப் பொருளானது இஸ்ரவேலர்களின் இருப்பிடங்களிலேயே பனிப் பொழிவைப்போன்று சூரியன் உதயமாகும்வரை வானத்திலிருந்து பொழிந்துகொண்டிருக்கும் ( கத்தாதா (ரஹ்) இப்னு கஸீர் (ரஹ்) – 01:217 )
● ரமழானில் பிந்திய பத்தில் ஒற்றைப்படை நாளில் ஏற்படும் லைலதுல் கத்ர் என்பதற்கான அடையாளம் அந்த நாளின் இரவை அடுத்துவரும் நாளின் அதிகாலைப்பொழுதில் சூரியன் சுடரின்றி ஒளியிளந்து வெண்ணிறத்தில் மங்கலாக உதிக்கும் (உபை பின் கஅப் ( ரலி) முஸ்லிம் – 1397, 2175)
● சூரியன் உதிக்கும் நாட்களில் வெள்ளிக்கிழமையே மிகவும் சிறந்த நாளாகும் அன்றுதான் ஆதம் (அலை) அவர்கள் படைக்கப்பட்டார்கள் அன்றுதான் சொர்க்கத்திற்குள் அனுப்பப்பட்டார்கள் அன்றுதான் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்கள் அன்றுதான் யுக முடிவு நிகளும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (அபூ ஹுரைரா(ரலி) முஸ்லிம் – 1547,1548)
● அடியார்களுக்குப் பொழுது புலருகின்ற ஒவ்வொரு நாளின் அதிகாலையிலும் இரண்டு வானவர்கள் இறங்கி வராமல் இருப்பதில்லை….என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (அபூஹுரைரா (ரலி) புகாரி – 1442, முஸ்லிம் – 1010, ரி,ஸா,295)
● அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் மனிதர்கள்
சூரியன் உதிக்கின்ற ஒவ்வொரு நாளிலும் தம்முடைய ஒவ்வொரு மூட்டு எலும்புகளுக்காகவும் தர்மம் செய்வது கடமையாகும் …. (அபூஹுரைரா (ரலி) புகாரி – 2707, 2989, முஸ்லிம் – 1009, 1302, 1835,ரியாதுஸ் ஸாலிஹீன் – 248)
● சூரியன் உதிக்கின்ற ஒவ்வொரு நாளிலும்…இருவருக்கிடையே நீதி செலுத்துவதும்….தர்மமாகும் என்று அல்லாஹ்வின்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் (அபூஹுரைரா (ரலி) புகாரி – 2707, 2989, முஸ்லிம் – 1009, 1302, 1835,ரியா-ஸாலி – 248)
● சூரியன் உதிக்கின்ற ஒவ்வொரு நாளிலும்….ஒருவர் தமது வாகனத்தின்மீது ஏறி அமர உதவுவதும் அல்லது அவரது பயணச் சுமைகளை அதில் ஏற்றி விடுவதும் தர்மமாகும்….என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் (அபூஹுரைரா (ரலி) புகாரி – 2707, 2989, முஸ்லிம் – 1835, 1009, 1302, ரி-ஸா- 248)
● சூரியன் உதிக்கின்ற ஒவ்வொரு நாளிலும்….ஒருவர் சொல்லும் ஒவ்வொரு இனிய சொல்லும் தர்மமாகும்….என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் (அபூஹுரைரா(ரலி) புகாரி – 2707, 2989, முஸ்லிம் – 1009, 1302, 1835, ரி-ஸா- 248)
● சூரியன் உதிக்கின்ற ஒவ்ஹொரு நாளிலும்….ஒருவர் தொழுகைக்குச் செல்வதற்காக எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் தர்மமாகும்….என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் ( அபூ ஹுரைரா(ரலி) புகாரி – 2707, 2989, முஸ்லிம் -1009, 1302, 1835,ரி-ஸா- 248)
● சூரியன் உதிக்கின்ற ஒவ்வொரு நாளிலும்….ஒருவர் தீங்கு தரும் பொருளைப் பாதையிலிருந்து அகற்றுவதும் ஒரு தர்மமேயாகும்….. என்று அல்லாஹ்ஹின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் (அபூஹுரைரா (ரலி) புகாரி – 2707, 2989, முஸ்லிம் – 1302, 1009, 1835,ரி-ஸா- 248)
● சூரியன் உதிக்கின்ற ஒவ்வொரு நாளிலும்….ஒருவர் செய்யும் ஒவ்வொரு திக்ரும் தர்மமாகும்… என்று அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் (அபூ ஹுரைரா (ரலி) முஸ்லிம் – 1302 )
● சூரியன் உதிக்கின்ற ஒவ்வொரு நாளிலும்…. ஒருவர் தீமையைத் தடுத்தலும் தர்மமாகும்….என்று அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் (அபூதர் (ரலி) முஸ்லிம் – 1302 )
● சூரியன் உதிக்கின்ற ஒவ்வொரு நாளிலும்….ஒருவர் லுஹாத் தொழுவதும் தர்மமாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் ( அபூதர் (ரலி) முஸ்லிம் – 1302
● உங்களில் ஒருவருக்கு சுவர்க்கத்தில் ஒரு வில்லின் அளவுக்கு இடம் கிடைப்பது சூரியன் எந்த அளவு நிலப் பரப்பின் மீது உதிக்கின்றதோ, அல்லது எந்த அளவு நிலப் பரப்பிலிருந்து மறைகிறதோ அந்த அளவு நிலப் பரப்பை விடச் சிறந்ததாகும். ( புகாரி – 3253,)
மேற்கண்ட அறிவிப்புகளின் மூலம் சூரியன் மறைந்து மஃரிப் நேரம் நாள் ஆரம்பமாகிறது என்று சொல்வோரின் கூற்றுக்கு மாற்றமாகவே நாளின் ஆரம்பம் என்பது சூரியன் உதிக்கின்ற ஒவ்வொரு நாளும் என்றுதான் நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்களேயல்லாது
சூரியன் மறைகின்ற போதுள்ள ஒவ்வொரு நாளிலும் என்று கூறவில்லை. இறுதியாக குறிப்பிடப்பட்ட ( புகாரி – 3253 ) ஆவது அறிவிப்பிலும் சூரியன் உதிப்பதை முதலாவதாகவும் மறைவதை இரண்டாவதாகவுமே குறிப்பிடப் பட்டுள்ளது. என்பதற்கு மேலும் பல ஆணித்தரமான சான்றுகளைக் குர்ஆனிலிருந்தும் சமர்ப்பிக்க முடியும்
● இரவு பகலை முந்த முடியாது ( 36:40 )
● விடியற்காலையின் மீது சத்தியமாக ! (89:1)
● (அதனைத் தொடர்ந்து வரும்) பத்து இரவுகளின்மீதும் சத்தியமாக ! (89:2)
● (ஒரு பகலும், ஒரு இரவுமாக, 24, மணி நேரங்களைக்கொண்ட ஒரு நாளாகிய) இரட்டையின்மீதும் (ஒரு பகல், அல்லது ஒரு இரவு, என்று சொல்லக்கூடிய) ஒற்றையின் மீதும் சத்தியமாக ! (89:3)
● (ஒரு நாள் முடிந்துவிட்டது என்பதைத் தெரிவிப்பதற்காக இறுதியாச்) சென்று விடுகின்ற இரவின்மீதும் சத்தியமாக ! (89:4)
● ( முதலில் வந்த ) முற்பகல்மீது சத்தியமாக ! (ப் பின்னால் வந்து அதனைப் போர்த்திய ) இருட்டான இரவின் மீது சத்தியமாக!(93:01,02)
● ஆகவே ( மக்கா வாசிகளே ! ) நீங்கள் வர்த்தகத்திற்காகச் சென்று திரும்புகின்ற போது ) காலைப் பொழுதை அடைந்தவர்களாக நிச்சயமாக நீங்கள் அவர்களின் ( ஊரின் ) மீதே நடந்து செல்கின்றீர்கள். இரவிலும் ( அவ் ஊர்ப்பக்கம் செல்கின்றீர்கள் ) இதனைக் கொண்டு நீங்கள் நல்லறிவு பெறமாட்டீர்களா ? (37:137,138)
● இன்னும் (இறை விசுவாசிகளே ! பகலில்) உங்களுடைய (உளைப்பிற்கான) செயற்ப்பாடுகளுக்குரிய இடத்தையும். (இரவில் ஓய்வுக்காக) உங்கள் தங்குமிடத்தையும் அல்லாஹ் நன்கறிவான்.(47:19)
● நிச்சயமாக அல்லாஹ் ( தான் பின்னால் வந்த ) இரவை (முன்னாலுள்ள ) பகலில் புகுத்துகிறான். ( பின்னர் ) பகலை இரவில் புகுத்துகிறான் ( 22:61 )
● ( இரவைப் பகலிலும் பகலை இரவிலும் நுழைவிக்கும் மாபெரிய ஆற்றலாகிய ) அது ( ஏனெனில் ) நிச்சயமாக அல்லாஹ்தான் உன்மையானவன், மிக உயர்ந்தவன், மிகப் பெரியவன், என்பதினாலுமாகும் ( 22:62 )
● ஏழு இரவுகளும் எட்டுப் பகல்களும் அவர்கள் மீது அவன் அதைத் தொடராக வீசச் செய்தான் ( 69:07)
● அதி காலையிலும் இரவிலும் நீங்கள் அவர்கள் அழிந்துபோன இடத்தின் மீதே செல்கின்றீர்கள் ( 37:137,138)
● அவனே இரவால் (முந்தியுள்ள அன்றைய ) பகலை மூடுகின்றான் (07:54)
● அவ் இரவு (முந்தியுள்ள அன்றைய ) பகலை வெகு விரைவாகப் பின் தொடர்கிறது ( 07:54 )
● சூரியன் மீதும் அதன் ஒளியின்மீதும் சத்தியமாக ( ப் பின்னால் ) அதைத் தொடர்ந்து வரும் சந்திரன் மீதும் சத்தியமாக ( 91:01, 02, )
முஜாஹித் ( ரஹ்) அவர்கள் 91:01,ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள “ளுஹாஹா “ எனும் சொல்லுக்கு “ அதன் ஒளி “ என்று பொருள் என்றும் . 91:02, ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள “இஃதா தலாஹா” எனும் சொல்லுக்கு “ அதைத் தொடர்ந்து வரும்போது “ என்று பொருள். என்றும் கூறுகின்றார்கள். ( புகாரி – 05:பக்கம் 751.752 “ அஷ்ஷம்சு “ 91 ஆவது அத்தியாயத்தின் விரிவுரை)
● ( முதலில் சூரியனால் ) பகல் வெளியாகும் போது ( ம் ) அதன் மீது சத்தியமாக ( ப் பின்னர் அப்பகலுக்குப் பின்னால் வந்து அதனை ) மூடிக்கொள்ளும் இரவின் மீது ( ம் ) சத்தியமாக ( 91:03, 04,)
● ( பகலைப் ) பின்தொடரும் இரவின்மீது சத்தியமாக ( ப் பின்னர் சூரியனால் ) வெளிச்சமாகும் விடியற்காலையின் மீது சத்தியமாக
( 74:32-34,)
● ( முதலில் பகலின் ஒளி இருக்கும்போது ) அவனே ( அப் ) பகலின் மீது இரவைச் சுற்றுகிறான் ( 39:05,)
● ( முதலில் பகலின் ஒளி இருந்துகொண்டிருக்கும்போது அதன் பின்னால் வந்த ) இரவை அவனே பகலில் புகுத்துகின்றான் ( 35:13,)
● ( முதலில் பகலின் ஒளி இருக்கும்போது அதன் பின்னால் வந்த ) இரவால் அவன் பகலை மூடுகின்றான் ( 13:03 )
● ( நபியே! ) நிச்சயமாக அல்லாஹ்தான் ( முதலில் ) இரவைப் பகலில் புகுத்துகின்றான் ( பின்னர் ) பகலை இரவில் புகுத்துகின்றான் இன்னும் ( முன்னால் வரும் ) சூரியனையும் ( பின்னால் வரும் ) சந்திரனையும் வசப்படுத்தினான் என்பதை நீர் பார்க்கவில்லையா ? (அவை) ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட தவணைவரை செல்கின்றன (31:29,) என்பதிலிருந்து நாளிள் ஆரம்பம் முதலில் பகல் என்றும் பின்னர் இரவு என்றும் புரிந்து கொள்ள முடிகிறது
● அபு மூஸா(ரலி) அவர்கள் கூறியதாவது தொழுகை நேரங்களைக் கற்றுக் கொடுப்பதற்காக நபி (ஸல்) அவர்கள் பிலால் (ரலி) அவர்களிடம் சுப்ஹுத் தொழுகைக்காக பாங்கும் இகாமத்தும் கூறுமாறு உத்தரவிட்டு ஒரநாள் வைகறை உதயமாகும் போதும் மற்றுமொருநாள் சுப்ஹுத் தொழுகையைப் பிற்படுத்தியும் தொழுதார்கள் எந்த அளவிற்கென்றால் தொழுகையை முடித்துத் திரும்பியபோது ஒருவர் சூரியன் உதயமாகிவிட்டது அல்லது சூரியன் உதிக்கப் போகிறது என்று கூறினார்….(முஸ்லிம் – 1079, 1080,
● ஒருநாள் நபி(ஸல்) அவர்கள் மதீனாவின் தோட்டங்களில் ஒன்றுக்குள் நுளைந்து அங்கு கீழே விளுந்துகிடந்த பேரீச்சம் பழங்களை எடுத்துச் சாப்பிட்டவர்களாக கடந்த மூன்று நாட்களாக எந்த உணவையும் நான் உண்ணவில்லை எந்த உணவும் எனக்குக் கிடைக்கவுமில்லை இது “ நான்காவது நாளின் காலைப் பொழுதாகும்” என்று கூறினார்கள் ( இப்னு உமர் (ரலி) – தஃப்சீர் இப்னு அபீஹாத்திம் இப்னு கஸீர் 07:78 ) என்பதிலிருந்து நாளின் ஆரம்பம் காலைப்பொழுது என்பதை அறிகின்றோம்
[8:10 pm, 03/05/2020] Ameer Sri Lanka: ● ஒருநாள் நபி (ஸல்) அவர்கள் மதீனாவின் தோட்டங்களில் ஒன்றுக்குள் நுளைந்து அங்கு கீழே விளுந்துகிடந்த பேரீச்சம் பழங்களை எடுத்துச் சாப்பிட்டவர்களாக கடந்த மூன்று நாட்களாக எந்த உணவையும் நான் உண்ணவில்லை எந்த உணவும் எனக்குக் கிடைக்கவுமில்லை இது “ நான்காவது நாளின் காலைப் பொழுதாகும்” என்று கூறினார்கள் ( இப்னு உமர் (ரலி) – தஃப்சீர் இப்னு அபீஹாத்திம் இப்னு கஸீர் 07:78 ) என்பதிலிருந்து நாளின் ஆரம்பம் காலைப்பொழுது என்பதை அறிகின்றோம்
● (அனைத்துத் ) தொழுகைகளையும் ( குறிப்பாக ) நடுத்தொழுகையையும் பேணி ( த் தொழுது ) வாருங்கள் ( 02:223 )
● ஹிஜ்ரி நான்காம் ஆண்டு அரபுக் குலங்கள் அனைத்தும் ஒன்றுதிரண்டு முஸ்லீம்களை முற்றுகையிட்டுத் தாக்கவந்த “அஹ்ஸாப் “ என்றும் “ஹந்தக் “ என்றும் அழைக்கக்கூடிய அகழ்ப் போரின்போது பெரும் நெருக்கடிகளுக்கு ஆளான -அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்கள் அந்த எதிரிகளுடைய வீடுகளையும் அவர்களது புதைகுழிகளையும் அல்லாஹ் நெருப்பால் நிறப்புவானாக அவர்கள் சூரியன் மறையும்வரை நடுத்தொழுகையான அஸர் தொழுகையிலிருந்து நமது கவனத்தைத் திசைதிருப்பி விட்டார்கள் என்று கூறினார்கள் பின்னர் இரவுத் தொழுகைகளான மஃக்ரிப், இஷா , ஆகிய தொழுகைகளுக்கிடையே அதைத் தொழுதார்கள் (அலீபின் அபீதாலிப் (ரலி) புகாரி – 2931, 4111, 4533, 6396, முஸ்லிம் – 1104 -1108, 1314, 1317, 1109,1316, திர்மிதி – 2908, அஹ்மது – 867, 17925, 19296, முஅத்தா மாலிக் – 308,371,தஃப்சீர் இப்னு கஸீர் -01:784 – 790 )
நடுத்தொழுகை என்பதற்குப் பலவிதமான அறிவிப்புகள் வந்தாலும் அஸர் தொழுகைதான் நடுத்தொழுகை என்பற்கு நபி (ஸல்) அவர்கள் வரை சென்றடையக் கூடிய ஹதீஸ்கள் மூலம் நிரூபணமாகியுள்ளது எனவே அஸர் தொழுகைதான் நடுத்தொழுகை என்பது இப்னு கஸீர் (ரஹ்) அவர்களின் முடிவாகும் (கஸீர் 01:787 ) இதன்படி ஒரு நாளின் முதலாவது தொழுகை சுப்ஹுத் தொழுகையாகும் அதனைத் தொடர்ந்து பொழுது புலரும் மேலும்
☪ ஒரு நாளின் ஆரம்பம் என்பது முதலில் முற்பகல் அதற்குப்பின்னர் பகல் அதற்குப் பின்னர் தான் இரவு என்பதைத் தெளிவாக நபித்தோழர்களும் அறிந்திருந்தார்கள்
● சூரியன்மீதும் அதன் பிரகாசத்தின்மீதும் சத்தியமாக…. முற்பகல்மீது சத்தியமாக….பகலின்மீதும் சத்தியமாக….இரவின் மீதும் சத்தியமாக…. ( 91:01,03,04, 93:01,20:59, 79:46)
● (திடீரெனத் தோன்றும் மறுமை நிகழ்வான) அதனை அவர்கள் (கண்ணால்) காணும் நாளில் அதன் முற்பகலிலோ அல்லது அதன் இரவிலோ (சொற்ப நேரமே) தவிர (உலகில்) தங்கியிருக்காதது போன்று (அவர்களுக்குத் தோன்றும், 79:46,)
● இதைப் போன்றதொரு சூனியத்தை உம்மிடம் நாமும் உறுதியாகக் கொண்டுவருவோம். எனவே எமக்கும் உமக்கும் இடையே மைய்யமானதோர் இடத்தில் ( நாம் சந்திப்பதற்கு ) நாள் குறிப்பீராக. அதை நாங்களோ நீரோ மீறக்கூடாது (என்றும் ஃபிர்அவ்ன் கூறினான். அதற்கு மூசா உங்களது) பண்டிகை நாளே உங்களுக்குக் குறிக்கப்பட்ட நாளாகும். (அன்று) மக்கள் “முற்பகலில்” ஒன்றுதிரட்டப்பட வேண்டும். என்று கூறினார். (20:59)
● ஹுதைஃபா (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது ஒருமுறை நாங்கள் கலீஃபா உமர் (ரலி) அவர்களிடம் அமர்ந்திருந்தபோது கடலலை போன்று அடுக்கடுக்காக ஏற்படும் அரசியல் குழப்பங்கள் பற்றிய நபி (ஸல்) அவர்களது முன் அறிவிப்பு பற்றி அறிந்தவர் உங்களில் யார் ? என்று கேட்டார்கள் மூமின்களின் தலைவரே! அந்தக் குழப்பங்களுக்கும் உங்களுக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை .உங்களுக்கும் அந்தக் குழப்பங்களுக்கும் இடையே மூடப்பட்ட கதவு ஒன்றுள்ளது என்று நான் கூறினேன்
அத்தக் கதவு திறக்கப் படுமா ? அல்லது அது உடைக்கப் படுமா ? என்று உமர் (ரலி) அவர்கள் கேட்டார்கள் அது உடைக்கப்படும் என்று நான் கூறினேன் – ஷஹீக் ( ரஹ் ) என்பவரிடம் கூறியதாவது ; அந்தக் கதவு எதுவென உமர் (ரலி) அவர்கள் அறிவார்களா ? என்று மக்கள் ஹுதைஃபா (ரலி) அவர்களிடம் கேட்டபோது
“ஆம் பகலுக்குப் பின்னர் இரவு என்பதைத் தெளிவாக அறிவது போன்று அதை உமர் (ரலி) அவர்கள் அறிவார்கள் என்று ஹுதைஃபா (ரலி) அவர்கள் கூறினார்கள் – மேலும் “ அந்தக் கதவு என்பது உமர் (ரலி) அவர்கள்தான் “ என்று மஸ்ரூக் (ரஹ் ) என்பவரிடம் ஹுதைஃபா (ரலி) அவர்கள் கூறினார்கள் ( புகாரி – 525 ) மேலும்
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது….அபூபக்கர் (ரலி) அவர்கள் என்னிடம் “நபி (ஸல்) அவர்கள் எந்த கிழமையில் மரணமடைந்தார்கள்?” எனக் கேட்டார்கள் “திங்கள் கிழமை” என்று நான்கூறினேன் “இன்று என்ன கிழமை என்று கேட்டபோது திங்கள் கிழமை என்று நான் கூறினேன் அதற்கு அவர்கள் இன்றைய இரவுக்குள் (எனது மரணம் ) நிகழும் என நான் எண்ணுகின்றேன் என்று கூறினார்கள்….(ஆனாலும்) அன்றை…
[8:10 pm, 03/05/2020] Ameer Sri Lanka: ▪ நபி (ஸல்) அவர்கள் சுபஹ் தொழுதுவிட்டு இஃதிகாஃப் இருக்கும் இடத்திற்குள் நுளைவார்கள் ஆனால் இவர்களோ மஃரிப் தொழுதுவிட்டு இஃதிகாஃப் இருக்கும் இடத்திற்குள் நுளைகின்றார்கள்
▪ பொழுது புலர்ந்து விடியலில் ஆரம்பித்த வியாழக்கிழமையன்று மாலை நேரம் மஃரிபில் இருந்து ஆரம்பித்த வியாழக் கிழமைக்குரிய இரவை வெள்ளிக்கிழமை இரவு என்று சொல்கின்றார்கள் அதுபோன்றே வெள்ளிக்கிழமையின் இரவை சனிக்கிழமையின் இரவு என்றும் சனிக்கிழமையின் இரவை ஞாயிற்றுக் கிழமையின் இரவு என்றும் ஞாயிற்றுக் கிழமையின் இரவை திங்கள் கிழமையின் இரவு என்றும் திங்கள் கிழமையின் இரவை செவ்வாய்க் கிழமையின் இரவு என்றும் செவ்வாய்க் கிழமையின் இரவை புதன் கிழமையின் இரவு என்றும் புதன் கிழமையின் இரவை வியாழக் கிழமையின் இரவு என்றும் நம்பிக் கடைப்பிடித்து வருகின்றனர்.
▪ பொழுது புலரும் ஃபஜ்ர் நேரம் அதிகாலைவேளையில் நாளை ஆரம்பிப்பதற்குப் பதிலாக மஃரிபுடைய இரவு நேரத்திலிருந்து
நாளை ஆரம்பிக்கின்றார்கள்
☪ ஆழ்த உறக்கத்தின் அமைதிக்குப் பிறகு கறுப்புக் கயிறு எனும் காரிருள் இரவின் கருமை அகன்று வெள்ளைக் கயிறு எனும் விடியலின் வெளிச்சம் இருளைப் பிழந்தவாறு காலைப் போழுது வசந்தமாகப் புலர்வதால் அடிவானம் பிரகாசித்து உலகம் ஒளிர்வு பெற்று பறவைகளின் பலவிதமான காதுக்கினிய ஒலிகளோடு மிருகங்களும் மனிதர்களும் விளிப்பை அடைந்து புத்துணர்வுடனும் புதுப் பொலிவுடனும் வாழ்வாதாரத்திற்கான காரணிகளைத் தேடிப் பயணங்களை மேற்கொண்டு சுறுசுறுப்பாக இயங்கி ஓடி ஆடிப் பாடுபட்டு உளைக்கும் பணிகளில் அதன் அலுவல்களில் உற்சாகமாக ஈடுபட்டுப் படைத்தவனின் அருளைப் பூமியில் தேடி ஓடி உளைக்கவும் சம்பாதிக்கவும் இன்னோரன்ன தொழில் செய்யவும் அல்லாஹ் பகலை உண்டாக்கினான்.
● அவனே தனது கருணையால் (உங்களது வாழ்வாதாரத்திற்கான) அவனது அருளை நீங்கள் தேடிக் கொள்வதற்காகப் (பொழுது புலரும் போதுள்ள) பகலையும் உங்களுக்கு ஏற்ப்படுத்தினான் ( இதற்காக அவனுக்கு ) நீங்கள் நன்றி செலுத்த வேண்டும் ( 28:73 )
● ( பொழுது புலரும் ) விடியற் காலையின் மீது சத்தியமாக அது வெளிச்சமாகும் பொழுது ( 74:34 )
● நீங்கள் (ஓடி உழைப்பதற்காக) அவனே பகலை வெளிச்சம் உடையதாகவும் உங்களுக்கு ஆக்கினான் நிச்சயமாக செவியுறும் மக்களுக்கு இதில் சான்றுகள் பல உள்ளன ( 10:67 )
● ( நீங்கள் ஓடி உழைப்பதற்காக அவனே பொழுது புலரச்செய்து ) விடியலைப் பிளப்பவன் இது வல்லமை மிக்கவனும் நன்கறிந்தவனுமான ( ஏக இறை ) வனின் ஏற்பாடாகும் ( 06:96 )
● அவனே உங்களுக்குப் பகலை ( ஓர் ) இயக்கமாகவும் ஆக்கினான் (25:47 )
● நிச்சயமாக நாமே பகலை வெளிச்சம் உடையதாகவும் ஆக்கினோம் இறைநம்பிக்கை கொள்கின்ற மக்களுக்கு இதில் பல சான்றுகள் உள்ளன ( 27: 86 )
● நீங்கள் பார்ப்பதற்காகப் பகலையும் அல்லாஹ்தான் படைத்தான் நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது அருள் பொழிகிறான் ஆயினும் மனிதர்களில் பெரும்பாலானோர் நன்றி செலுத்துவதில்லை ( 40:61 )
● ( வாழ்வாதாரத்தைத் தேடுவதற்குப் பேருதவியாகவுள்ள ) சூரியன் மீதும் அதன் பிரகாசத்தின் மீதும் சத்தியமாக ( 91:01 )
● ( வாழ்வாதாரத் தேடுதலுக்காக சுடர்விட்டுப் பிரகாசிக்கும் சூரியனால் ) பகல் வெளியாகும்போது அதன் மீதும் சத்தியமாக (91:03)
● ( சூரியன் மூலம் பூமியில் ) பிரகாசம் வெளிப்படும் பகலின் மீதும் சத்தியமாக ( 92:02 )
● ( சூரியனாகிய ) ஒளி வீசும் விளக்கையும் ( அங்கு நாம் வாழ்வாதாரத் தேடுதலுக்காக ) அமைத்தோம் ( 78:13 )
● உங்களுக்கு ( பகலின் ) வெளிச்சத்தைக் கொண்டுவருகின்ற இறைவன் அல்லாஹ்வையன்றி வேறு யார் ? என்று கூறுங்கள் (28:71)
● இறை நம்பிக்கை கொண்டவர்களே ! ஜும்ஆவுடைய தொழுகை நிறைவேற்றப்பட்டு விட்டதும் பூமியில் பரவிச் சென்று அல்லாஹ்வுடைய அருளைத் தேடிக்கொள்ளுங்கள் ( 62:09,10 )
■ பகல் பொழுது ஓடி உழைப்பதற்கு என்றுதான் அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்களும் கூறுகின்றார்கள்
■ உங்களுக்கும் வேதம் கொடுக்கப்பட்ட யூதர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் உள்ள உவமை ஒரு மனிதரால் கூலிவேலைக்கு நியமிக்கப்பட்ட கூலியாட்களைப் பொன்றவர்களாவர்
ஒரு கீறாத் கூலிக்கு காலையில் இருந்து நடுப்பகல் நேரம்வரை யூதர்கள் வேலை செய்தார்கள்
பிறகு நடுப் பகலிலிருந்து அஸர் தொழுகை வரை ஒரு கீறாத் கூலிக்கு கிறிஸ்தவர்கள் வேலை செய்தார்கள்
பிறகு அஸரிலிருந்து சூரியன் மறையும் வரை இரண்டு கீறாத் கூலிக்கு நீங்கள் வேலை செய்கிறீர்கள் என்று அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் ( அப்துல்லாஹ்பின் உமர் (ரலி) இப்னு உமர் ( ரலி) அபு மூஸா( ரலி ) புகாரி – 2268, 2269, 2271,
● யா அல்லாஹ் ! எனது சமுதாயத்தாருக்கு அதிகாலை நேரத்தில் அருள்வளத்தை வளங்குவாயாக ! என்று அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்கள் இறைவனிடம் பிரார்த்தனை செய்தார்கள் (அபுதாவூத்)
● அதிகாலை நேரத்தில் நான் படுக்கையில் புரண்டு படுத்துக் கொண்டிருந்தேன் அந்நேரம் அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்கள் என்னருகே வந்து தங்களது பாதங்களால் என்னை உசுப்பிவிட்டு அருமை மகளே ! எழு அல்லாஹ்வின் வாழ்வாதாரங்கள் வழங்கப்படும் நேரத்திற்கு சாட்சியாளராக இரு அலட்சியப் படுத்துபவராக மாறிவிடாதே அதிகாலை நேரத்திற்கும் சூரிய உதயத்திற்கும் இடையே இறைவன் வாழ்வாதாரத்தை வழங்குகிறான் என்று கூறினார்கள் (ஃபாத்திமா (ரலி) பைஹகீ )
● பாலை விட அதிக வெண்மையானதாகவும் தேனைவிட அதிக இனிப்பாகவும் உள்ள “மன்னு” எனும் விஷேட உணவுப் பொருளானது இஸ்ரவேலர்களின் இருப்பிடங்களிலேயே பனிப் பொழிவைப் போன்று வைகறை நேரத்திலிருந்து சூரியன் உதிக்கும்வரை பொழிந்து கொண்டிருக்கும் ( இப்னு அப்பாஸ் (ரலி) சுத்தீ (ரஹ்) கத்தாதா (ரஹ்) அப்துர் ரஹ்மான் பின் அஸ்லம் (ரஹ்) தஃப்சீர் இப்னு கஸீர் 01:216 )
○ ஆக இதுவரை நாம் குர்ஆன் ஹதீஸ் ஆதாரங்களின் அடிப்படையில் மேலே பார்த்த விடயங்களின் படி கடந்த காலமாகிய நேற்றையும் நிகழ்காலமாகிய இன்றையும் ஒருபோதும் ஒன்று சேர்க்க முடியாது அவை இரண்டும் வெவ்வேறானவை அதுபோன்றே நிகழ் காலமாகிய இன்றையும் எதிர் காலமாகிய நாளையும் ஒன்று சேர்க்க முடியாது அவை இரண்டும் வெவ்வேறானவைதான் . ஆனால் நாளின் ஆரம்பம் மஃரிப் என்போர் முற்றிலும் இயற்கை நிகள்வுகளுக்கு முரணாக
▪ கடந்த காலமாகிய நேற்றையும் நிகழ் காலமாகிய இன்றையும் ஒன்று என்று சொல்கின்றார்கள் அது எவ்வாறு எனில் கடந்த காலமாகிய நேற்றைய மஃரிப் நேரத்தில் இருந்து நிகழ் காலமாகிய இன்றைய மஃரிப் நேரம்வரை ஒருநாள் என்று வாதிடுகின்றனர் –
▪ அதுபோன்றே நிகழ் காலமாகிய இன்றையும் எதிர் காலமாகிய நாளையையும் ஒன்று என்று சொல்கின்றார்கள் அது எவ்வாறு எனில் நிகழ் காலமாகிய இன்றைய மஃரிப் நேரத்தில் இருந்து எதிர் காலமாகிய நாளைய மஃரிப் நேரம் வரை ஒரு நாள் என அறிவீனமாக வாதிடுகின்றார்கள்
▪ சூரியனின் சுளற்சியை வைத்து நாளை ஆரம்பிப்பதற்குப் பதிலாக சந்திரனின் சுளற்சியை வைத்து நாளை ஆரம்பிக்கின்றார்கள்
▪ நாளின் கடைசிப் பகுதி சுப்ஹுக்கு முன்னர் என்பதற்குப் பதிலாக
நாளின் கடைசிப் பகுதி மஃரிபுக்கு முன்னர் என வாதிடுகின்றனர்
▪ நபி (ஸல்) அவர்கள் சுபஹ் தொழுதுவிட்டு இஃதிகாஃப் இருக்கும் இடத்திற்குள் நுளைவார்கள் ஆனால் இவர்களோ மஃரிப் தொழுதுவிட்டு இஃதிகாஃப் இருக்கும் இடத்திற்குள் நுளைகின்றார்கள்
▪ பொழுது புலர்ந்த அன்று விடியலில் ஆரம்பித்து அடுத்த நாளின் பொழுது புலரும்வரை உள்ள வியாழக்கிழமையன்று மாலை நேரம் மஃரிபில் இருந்து அன்றைய வியாழக் கிழமைக்குரிய இரவை வெள்ளிக்கிழமை இரவு என்று சொல்கின்றார்கள்.
▪ அதுபோன்றே அன்றைய வெள்ளிக்கிழமையின் இரவை மஃரிபுக்குப் பிறகு சனிக்கிழமையின் இரவு என்றும்.
▪ சனிக்கிழமையின் அன்றைய இரவை மஃரிபுக்குப் பிறகு ஞாயிற்றுக் கிழமையின் இரவு என்றும்.
▪ ஞாயிற்றுக் கிழமையின் அன்றைய இரவை மஃரிபுக்குப் பிறகு திங்கள் கிழமையின் இரவு என்றும்.
▪ திங்கள் கிழமையின் அன்றைய இரவை மஃரிபுக்குப் பிறகு செவ்வாய்க் கிழமையின் இரவு என்றும்.
▪ செவ்வாய்க் கிழமையின் அன்றைய இரவை மஃரிபுக்குப் பிறகு புதன் கிழமையின் இரவு என்றும்.
▪ புதன் கிழமையின் அன்றைய இரவை மஃரிபுக்குப் பிறகு வியாழக் கிழமையின் இரவு என்றும் நம்பிக் கடைப்பிடித்து வருகின்றனர்.
○ ஆக குர்ஆன் ஹதீஸின் ஆதார அடிப்படையில் ஓடி உழைப்பதற்கு ஏற்ப வாழ்வாதாரம் வழங்கப் படுகின்ற அதிகாலைப் பொழுதில் நாளை ஆரம்பிக்க வேண்டும் என்று சொல்பவர்கள் பல இருள்களிலிருந்து வெளியேற்றி சூரிய ஒழியின் வெளிச்சத்தின் பக்கம் பிரகாசத்தின் பக்கம் மக்களை அழைக்கின்றார்கள் அதே நேரம்
☪ இடம்பெயர்ந்தும் பயணங்கள் செய்தும் வாழ்வாதாரங்களைத் தேடியும் அதிகளவு ஓடியதாலும் உளைத்த அலைச்சலாலும் திரிச்சலாலும் உடலை வருத்திய ஓயாத பணிச் சுமைகளாலும் உடலுறுப்புக்கள் நாடி நரம்புகள் அனைத்தும் களைப்புற்று உடலும் உள்ளமும் சோர்ந்துபோய் சலிப்புற்ற நிலையில் இருக்கும்போது இறைவன் இரவு எனும் ஆடையை நிலத்திற்குப் போர்த்தி அமைதியையும் ஏற்படுத்தி உடலுக்கும் உயிருக்கும் சுகமளிக்கும் ஓய்வை கொடுப்பதற்காக உறக்கத்தை அருளாகக் கொடுத்தான்
● நீங்கள் அதில் ஓய்வு பெறும் பொருட்டு உங்களுக்கு இரவைக் கொண்டு வரக்கூடியவன் அல்லாஹ்வையன்றி ( வேறு ) நாயன் உண்டா என்பதை நீங்கள் ( சிந்தித்துப் ) பார்த்தீர்களா ? ( இவ் உன்மையை ) நீங்கள் பார்க்க வேண்டாமா ? ( 28:72 )
● அவனே தனது கருணையால் நீங்கள் ( உறங்கி ஓய்வுபெற்று ) மன அமைதி அடைவதற்காக இரவையும் உங்களுக்கு ஏற்படுத்தினான் (இதற்காக அவனுக்கு) நீங்கள் நன்றி செலுத்த வேண்டும் (28:73)
● அவர்கள் (உறங்கி ஓய்வுபெற்று) மன அமைதி பெறுவதற்காக நிச்சயமாக நாமே இரவை (அவரகளுக்கு) வளங்கினோம் என்பதை அவர்கள் கவனிக்கவில்லையா ? இறைநம்பிக்கை கொள்கின்ற மக்களுக்கு இதில் பல சான்றுகள் உள்ளன ( 27:86 )
● அவனே உங்களுக்கு இரவை ஓர் ஆடையாகவும் உறக்கத்தை ஓய்வாகவும் ஆக்கினான் ( 25:47 )
● அவனே இரவை நீங்கள் அதில் மன அமைதி பெறுவதற்காகவும் உங்களுக்கு ஆக்கினான் ( 10:67 )
● நீங்கள் மன அமைதி பெறுகின்ற இரவை உங்களுக்குக் கொண்டுவருகின்ற இறைவன் அல்லாஹ்வையன்றி வேறு யார் ? என்று கூறுங்கள் ( 28:72 )
● ( அவனே ) இரவை அமைதியா ( ன பொழுதா ) கவும் ஆக்கினான் இது வல்லமை மிக்கவனும் நன்கறிந்தவனுமான ( ஏக இறை ) வனின் ஏற்பாடாகும் (06:96 )
● மேலும் உங்களுடைய தூக்கத்தை இளைப்பாறுதலாக ஆக்கினோம் அன்றியும் ( அதற்கான ) இரவை உங்களுக்கு ( சுகம் தரும் ) ஆடையாக ஆக்கினோம் ( 78:09, 10, )
● ( வெளிச்சம் தரும் அப்பகலை ) மூடிக் கொள்ளும் இரவின் மீதும் சத்தியமாக ( 91:04 )
● ( இருளால் ) தன்னை மூடிக்கொள்ளும் இரவின் மீது சத்தியமாக (92:01)
● (பூமியை மூடிக்கொள்ளும் ) இரவின் மீதும் சத்தியமாக ( 74:33 )
● நீங்கள் ( ஓய்ந்திருந்து உறங்கி ) இளைப்பாறுவதற்காக இரவையும் அல்லாஹ்தான் படைத்தான் நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது (ஏராளமான) அருள் பொழிகின்றான் ஆயினும் மனிதர்களில் பெரும்பாலானோர் நன்றி செலுத்துவதில்லை ( 40:61 )
○ ஆக நாள் முழுவதும் ஓடி ஆடி உழைத்துக் களைப்புற்ற மனிதன் ஓய்ந்து உறங்குவதற்காக இறைவன் இருட்டு எனும் ஆடையைப் போர்த்தி பூமியில் அமைதியை ஏற்படுத்தும் இரவு நேரம் இருள் நேரம் இருட்டு நேரம் நாளை ஆரம்பிப்பதாகச் சொல்பவர்கள்
▪ அறியாமை ( 06:119 ) சந்தேகம் ( 04:157 ) குழப்பம் ( 02:217 ) யூகம் (04:157) வெறும் அனுமானம் ( 10:66 ) மனோ இச்சையைப் பின்பற்றுதல் ( 25:43 ) வரம்பு மீறுதல் ( 04:14 ) கண்மூடிக் குரட்டுத்தனமாகப் பின்பற்றுதல் ( 09:31 ) அல்லாஹ் அல்லாதோரிடமிருந்து மார்க்க சட்டங்களைப் பெறுதல் ( 42:21 ) பெரியார்களைப் பின்பற்றுதல் ( 33:66-68 ) நிராகரிக்கப்பட வேண்டிய தாக்கூத்திகளைப் பின் பற்றுதல் ( 02:257 ) யூத கிறிஸ்தவர்களைப் பின்பற்றுதல் ( 05:51 ) இறை நிராகரிப்பு ( 09:37 ) ,,,,, போன்ற பல இருள்களின் பக்கம் அப்பாவி மக்களை அழைக்கின்றார்கள்
அவர்களையும் அறியாமல் அவர்களின் நாளின் ஆரம்பம் என்பது நடைமுறையில் “ஃபஜ்ரும்” நாவில் மட்டும் மஃரிபு எனும் மாறுபட்டதும் குழப்பமானதும் உள்ள நயவஞ்சக நிலைப்பாடுமாகும்.
☆ நாளின் ஆரம்பம் மஃரிபு என்று சொல்பவர்கள் அவர்களது பள்ளிவாசல்களில் உள்ள தொழுகை நேர அட்டவணையை மஃரிபில் இருந்துதானே ஆரம்பிக்க வேண்டும். ஆனால் அவர்களோ “ஃபஜ்ரில்” இருந்தே எழுதிக் கடைப்பெடித்து வருகின்றார்கள். அதேபோன்று.
☆ நாளின் ஆரம்பம் மஃரிபு என்று சொல்பவர்கள் இன்று இஷா தொழுகைக்குப் பின்னர் உள்ள ஒரு நிகழ்வு குறித்து பகல் பொழுதில் பேசும்போது நாளை “இஷா” தொழுகைக்குப் பிறகு என்றுதானே பேசவேண்டும் ஆனால் அவ்வாறு அவர்களில் யாரும் பேசுவதில்லை. மாறாக இன்று இரவு “இஷா” தொழுகைக்குப் பிறகு என்றேதான் பேசுகின்றனர். அதேபோன்று.
☆ நாளின் ஆரம்பம் மஃரிபு என்று சொல்பவர்கள். நாளை பகல் பொழுதில் “லுஹருக்குப்” பிறகு நடைபெறவிருக்கும் ஒரு நிகழ்வு குறித்து மஃரிபுக்குப் பிறகு பேசும்போது இன்று லுஹருக்குப் பிறகு என்றுதானே சொல்லவேண்டும். ஆனால் அவர்களில் யாரும் அவ்வாறு சொல்வதில்லையே மாறாக நாளை “லுஹர்” தொழுகைக்குப் பிறகு என்றே அந்நேரம் பேசுகின்றனர். அதேபோன்று.
☆ நாளின் ஆரம்பம் மஃரிபு என்று சொல்பவர்கள் மஃரிபு நேரம் ரமழானின் பிறையைக் கண்டுவிட்டால் “தராவிஹ்” (கியாமுல் லைல்) தொழுதுவிட்டு. இந்த வருடத்து ரமழான் மாதத்து பர்ழான நோன்பை அதாவாக “நாளை” பிடிக்க நீய்யத்து வைக்கிறேன் என்றுதான் சொல்லிக் கொடுக்கின்றார்கள் சொல்கின்றார்கள் ஆனால் நாளின் ஆரம்பம் மஃரிபு என்று சொல்லுகின்ற அவர்கள் இந்த வருடத்து ரமழான் மாதத்து பர்ழான நோன்பை அதாவாக “இன்று” பிடிக்க நீய்யத்து வைக்கிறேன் என்றுதானே அந்த நேரம் சொல்லவேண்டும். அவ்வாறு அவர்களில் யாரும் சொல்வதில்லையே.
ஆனால் குர்ஆன் ஹதீஸின் ஆதார அடிப்படையில் ஓடி உழைப்பதற்கு ஏற்ப வாழ்வாதாரம் வழங்கப் படுகின்ற அதிகாலைப் பொழுதில் நாளை ஆரம்பிக்க வேண்டும் என்று சொல்பவர்கள் பல இருள்களிலிருந்து வெளியேற்றி சூரிய ஒழியின் வெளிச்சத்தின் பக்கம் பிரகாசத்தின் பக்கம் மக்களை அழைக்கின்றார்கள்.
இறை நம்பிக்கையாளர்களுக்கு அல்லாஹ்வே பாதுகாவலன் அவான் அவன் அவர்களை ( பல ) இருள்களிலிருந்து வெளியேற்றி வெளிச்சத்தின் பக்கம் கொண்டுவருகின்றான் ( ஆனால் ) இறை மறுப்பாளர்களுக்கோ ( வழிகெடுக்கும் தீய சக்திகளான ) ஷைத்தான்கள்தாம் அவர்களின் பாதுகாவலர்கள் ஆவர் இவர்கள் அவர்களை வெளிச்சத்திலிருந்து வெளியேற்றி ( ப் பல ) இருள்களுக்குக் கொண்டு செல்கின்றார்கள் ( அத்தகைய ) அவர்கள் நரகவாசிகள் ஆவர் அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பர் ( 02:257, 05:16 ,14:01,02, 24:35, 33:43, 06:01, 57:09, ).
எஸ்.எம். அமீர். நிந்தவூர். இலங்கை.