திக்ர் என்ற பெயரால்…..

Post image for திக்ர் என்ற பெயரால்…..

in பித்அத்

திக்ர் என்ற பெயரால் அரங்கேற்றப்படும் அணாச்சாரங்கள். ஒவ்வொரு மனிதனும் தனது ஆன்மா பரிசுத்தப்பட வேண்டும் இறைவனுக்கு கட்டுப்பட்டு நடக்கவேண்டும் தீமை, பாவங்களின் கரைகள் கழுவப்பட்டு அதிலிருந்து பாதுகாப்பும் பெறவேண்டும் என்ற எண்ணம் தொடர்ந்து இருந்துகொண்டே இருக்கின்றது. மிகக் கெட்டவனாக இருந்தபோதிலும் எப்போதாவது அவன் உள்ளம் இப்படி சிந்திப்பதுண்டு. இறைநினைவு ஒன்று மட்டுமே இத்தீய நிலைகளிலிருந்து காப்பாற்றி… தன்னை மகிழ்வுடனும், அமைதியுடனும் வாழச்செய்யும் என்பது அனைவரும் அறிந்த உண்மை.

ஆனால் இறைநினைவு வரவேண்டும் என்று சொல்லி தம்மைத்தாமே வருந்தித் கொள்வதும் இயல்புக்கு மாற்றமாக செயல்படுவதும் நாம் காண்கிறோம். துறவரம் தானே வகுத்துக்கொண்டு அதை தாமே மீறுபவர்களை பற்றி ”குர்ஆன்” குறிப்பிடும்போது அவர்களாகவே தங்களை கஷ்டப்படுத்திக் கொள்கிறார்கள் என்கிறது. இவை இறை நினைவா? உண்மையில் இறைநினைவு என்றால் என்ன, என்பதை இரத்தின சுருக்கமாக இங்கு நாம் காண்போம்.

இறைவனை நினைவு கூர்வதன் மூலம் உள்ளங்கள் திருப்தி அடையவில்லையா? (13:28) என்று அல்லாஹ் கேட்கிறான். மேலும் அல்லாஹ் கூறுகிறான்.

அதிகமதிகம் இறைவனை நினைவு கூறுங்கள் திக்ர் செய்யுங்கள்!(62:10)

இறைவனை மறந்துவிட்ட மக்களைப் போன்று நீங்களும் ஆகிவிடாதீர்கள் இறைவன் அவருடைய ஆன்மாக்களையே அவர்களை மறக்கடிக்க வைத்துவிட்டான்.(59:19)

என்னுடைய நினைவை அலட்சியப்படுத்தி விடாதீர்கள்.(20:42) மேலும் அல்லாஹ் கூறுகிறான்.

ஈமான் கொண்டவர்களே! பொருட் செல்வமும், குழந்தை செல்வமும், அல்லாஹ்வை தீக்ர் செய்வதை விட்டும் உங்களை அலட்சியப்படுத்திவிட வேண்டாம் – எவர் இவ்வாறு செய்கிறாரோ நிச்சயமாக அவர்கள்தாம் நஷ்டமடைந்தவர்கள்.(63:09)

திக்ரைப்பற்றி ஓரு சில ஹதீஸ்களைப் காண்போம். முஃபர்ரித்துன் முன்னேறிச் சென்றுவிட்டார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னபோது, யாரஸுலல்லாஹ்! முஃபர்ரித்துன் யார்? என ஸஹாபிகள் கேட்டனர் ”அல்லாஹுதலாவின் திக்ருக்காகத் தம்மைத் தாமே அர்ப்பணித்துக் கொண்டவர்கள், திக்ரு அவர்களின் சுமையைக் குறைத்துவிடும். எனவே, கியாமத் நாளன்று அவர்கள் சுமை குறைந்தவர்களாக வருவார்கள். என நபி (ஸல்} அவர்கள் கூறியதாக, அபூஹுரைரா (ரழி) அறிவிக்கிறார்கள்.(திர்மீதி)

”என் அடியான் என்னை நினைத்து, அவன் உதடுகள் என் நினைவில் அசைந்து கொண்டிருக்கும் போது, நான் அவனுடன் இருக்கிறேன்” என்று அல்லாஹுதலா கூறுவதாக நபி (ஸல்) சொன்னார்கள்.(இப்னுமாஜா)

”எவர் அல்லாஹ்வைய் திக்ரு செய்து, பின்பு அல்லாஹ்வின் அச்சத்தால் கண்ணீர் பூமியில் விழும்வரை கண்ணீர் சிந்து வாரோ அவரை கியாமத் நாளன்று அல்லாஹ் வேதனை செய்ய மாட்டான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.(ஹாகிம்) இவைப்போன்ற ஏராளமான குர்ஆன் வசனங்கள், ஹதிஸ்கள் பல இருக்கின்றன.

அல்லரஹ்வும், அவனுடைய தூதரும் சொல்லித் தந்த முறைப்படி திக்ர் அமைய வேண்டும். அதல்லாமல், நமது நாவுகளில் பொருளற்ற ”ஹா,ஹு” ”ஹீ,ஹு யா மன் ஹு” ”ஹக்து ஹக்” ”அஹ்,அஹ்” இருட்டு அவ்லியா என்ற பெயரால் இருட்டில் உட்காந்திருந்து ‘4444: சலவாத்து என்று இதையெல்லாம் திக்ர் என்று கூறுகின்றனர். இது அல்லாஹ்யும் அவனுடைய தூதரும் காட்டித்தராதவையாகும். இன்று திக்ர் என்ற பெயரால் அறங்கேற்றப்படும் அணாச்சாரம் (பித்அத்) நம் சமுகத்தில் மலிந்து கிடக்கின்றன, இதையெல்லாம் ஓதுக்கி தள்ளிவிட்டு அல்லாஹ் மற்றம் அவனுடைய தூதர் (ஸல்) அவர்கள் காட்டித் தந்த வழியில், அச்சத்தோடும், அமைதியாகவும், உரக்க சப்தமில்லாமலும் அல்லாஹ்வை திக்ரு செய்யும் நல்வழியில் நம்மை சேர்த்தருள அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம்.


    இமாம் பிர் முஹம்மது,( JAQH )மர்கஸ் ஏர்வாடி

Leave a Comment

Previous post:

Next post: