தவ்ஹீத் ஜமாத்தினருக்கு தனிப்பள்ளி அவசியமா?

in பொதுவானவை

இன்னும் (இஸ்லாம் மார்க்கத்திற்குத்) தீங்கிழைக்கவும், குஃப்ருக்கு (நிராகரிப்புக்கு) உதவி செய்யவும், முஃமின்களிடையே பிளவு உண்டுபண்ணவும், அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் விரோதமாய்ப் போர்புரிந்தவர்களுக்கு புகலிடமாகவும் ஆக்க ஒரு மஸ்ஜிதை முன்னர் நிறுவியவர்கள்: “நாங்கள் நல்லதையே யன்றி (வேறொன்றும்) விரும்பவில்லை” என்று நிச்சயமாகச் சத்தியம் செய்வார்கள் – ஆனால் அவர்கள் நிச்சயமாகப் பொய்யர்கள் என்பதற்கு அல்லாஹ்வே சாட்சியம் கூறுகிறான்.

9:108. ஆகவே, (நபியே!) அங்கு நீர் தொழுகைக்காக ஒருக்காலும் நிற்க வேண்டாம் – நிச்சயமாக ஆரம்ப தினத்திலேயே பயபக்தியின் மீது அடிகோலப்பட்ட மஸ்ஜிது உள்ளது; அதில் நீர் நின்று (தொழவும், தொழ வைக்கவும்) மிகவும் தகுதியானது; அங்கிருக்கும் மனிதர்கள் தூய்மையுடையோராக இருப்பதையே விரும்புகிறார்கள். அல்லாஹ் தூய்மையுடையோரையே விரும்புகிறான்.

ததஜவினர் தங்களின் இக்கூற்றை நியாயப்படுத்தி அவர்கள் வரிசைப்படுத்தியுள்ள நான்கு காரணங்கள் :

1. முஃமின்களுக்குத் தீங்கு இழைத்தல்

2. ஏக இறைவனை மறுத்தல்

3. முஃமின்களுக்கு மத்தியில் பிரிவினையை ஏற்படுத்தல்

4. அல்லாஹ்விற்கும் அவனது தூதருக்கும் எதிராகப் போர் புரிவோருக்குப் புகலிடம்

இந்த நான்கு தலைப்புகளிலும் விலாவாரியாக விரிவாக இன்று பெரும்பாலான பள்ளிகளில் இடம் பெற்றுவரும் குஃப்ரான், ஷிர்க்கான, பித்அத்தான காரியங்கள் அனைத்தையும் பட்டியலிட்டுள்ளனர். அல்லாஹ்வின் பள்ளிகளில் நடைபெற்று வரும் இப்படிப்பட்ட அனைத்துப் பாவகரமான செயல்பாடுகளையும் அகற்றிப் பூர்வீகப் பள்ளிகளைத் தூய்மைப்படுத்த வேண்டும் என்பதில் குர்ஆனையும், ஹதீஃதையும் நேரடியாகப் படித்து விளங்குகிறவர்களிடையே மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

ஆனால் ததஜவினர் எதை வலியுறுத்துகிறார்கள் என்றால், பூர்வீகப் பள்ளிகளில் ஷிர்க், குஃப்ர், பித்அத் காணப்படுவதாலும், அப்பூர்வீகப் பள்ளிகளை நிர்வகிப்பவர்களிடம் மார்க்க முரணான செயல்பாடுகளும் காணப்படுவதாலும், அல்குர்ஆன் அத்தவ்பா 9:107-ல் அல்லாஹ் குறிப்பிடும் மஸ்ஜிதன்ழிராரைப் போன்ற பள்ளிகளே அவை. எனவே அப்பூர்வீகப் பள்ளிகளில் உண்மையான முஃமின்கள் தொழுவது தகாது என்கிறார்கள் ததஜவினர்.

இவ்வாறு கூறிவிட்டு முஃமின்கள் தொழுவதற்குத் தகுதியான பள்ளிகள் எவை என்றால். ஹிஜ்ரி 1425க்குப் பிறகு ததஜவினர் கட்டிய தனிப்பள்ளிகளே என்று கூறி அதற்கு ஆதாரமாக.

ஆரம்ப நாள் முதல் இறையச்சத்தின் அடிப்படையில் நிர்மாணிக்கப்பட்ட பள்ளிவாசலே நீர் வணங்குவதற்கு தகுதியானது. அதில் தூய்மையை விரும்பும் ஆண்கள் உள்ளனர். அல்லாஹ் தூய்மையானவர்களை விரும்புகிறான். (அல்குர்ஆன் 9:108)

என்ற இறைவாக்கை எடுத்து எழுதியுள்ளனர். ததஜவினர் என்ன சொல்கிறார் என்று புரிகிறதா? கடந்த 1430 ஆண்டுகளாக உலகம் முழுவதும் உள்ள பள்ளிகள் அனைத்தும் 9:107-ல் அல்லாஹ் குறிப்பிடும் முஃமின்கள் தொழத் தகுதியற்ற பள்ளிகள். 1425 ஆண்டுகளுக்குப் பின்னர் ததஜவினராகிய நாங்கள் கட்டியிருக்கும் தனிப்பள்ளிகள் மட்டுமே முஃமின்கள் அல்லாஹ்வை வணங்குவதற்குத் தகுதியுள்ள பள்ளிகள்  ஆணவத்துடன் கூறுகிறார்கள்.

இன்றைய சூழ்நிலையில் மஜ்ஜிதுல் ஹரம், மஸ்ஜிதுன் நபவி, மஸ்ஜிதுல் அக்ஸா போன்ற பூர்வீகப் பள்ளிகளிலும் குர்ஆனுக்கும், ஹதீஸுக்கும் முரண்பட்ட பல ஷிர்க், பித்அத்கள் நடக்கத்தான் செய்கின்றன. தவாஃபில், ஸயீயில், மினாவில், அரஃபாவில், முஜ்தலிபாவில் அல்லாஹ்வை அழைப்பதற்குப் பதிலாக அல்லாஹ் அல்லாதவர்களை அதுவும் இறந்து குளிப்பாட்டி இறந்தவர்களுக்காக நடத்தப்படும் தொழுகை நடத்தி, மண்ணில் புதைக்கப்பட்டவர்களை எல்லாம் அழைத்துப் பிரார்த்திக்கும் கொடூரமான ஷிர்க்கான செயல்கள் நடைபெற்றுதான் வருகின்றன,

இறந்து போன அப்துல் காதிர் ஜீலானி(ரஹ்) அப்துல்காதிர் நாகூரி(ரஹ்), காஜா முயீனுத்தீன் அஜ்மீரி(ரஹ்) போன்றவர்களை அழைத்துப் பிரார்த்திற்கும் நிலையும் இருக்கத்தான் செய்கிறது. ததஜவினரின் இந்த நவீன விளக்கப்படி மக்கா, மதீனா, ஜெருசலம் பள்ளிகளும் 9:107ல் அல்லாஹ் குறிப்பிடும் அல்லாஹ்வை வணங்கத் தகுதியற்ற பள்ளிகள் என்பதுதான் ததஜவினரின் புதிய கண்டுபிடிப்பு.

ஒவ்வொரு விஷயத்திற்கும் நபி(ஸல்) அவர்களிடம் அழகிய முன்மாதிரி இருக்கிறது என்று அல்குர்ஆன் உறுதியாக அறிவிக்கிறது. (பார்க்க 3:31, 33:21) நபி(ஸல்) இதற்கு எவ்வாறு வழிகாட்டியிருக்கிறார்கள் என்று பார்ப்போம்.

நபி(ஸல்) அவர்கள், அவர்களது 40வது வயதில் அல்லாஹ்வால் நபியாக தேர்ந்தெடுக்கப்பட்டபோது, அல்லாஹ்வுடைய வீடான மஸ்ஜிதுல் ஹரம் எந்த நிலையிலிருந்தது என்பது அனைவரும் அறிந்ததே!

அதனுள் 360 சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. கஃபா வளாகத்தினுள்ளேயே பல சமாதிகள்(தர்கா) இருந்தன. ஆண்களும், பெண்களும், நிர்வாணமாக தவஃபு செய்தனர். கை தட்டுவதும், சீட்டி அடிப்பதும்தான் அவர்களுடைய வணக்கமாக இருந்தது. சுருக்கமாக சொன்னால், இந்த ததஜவினர் இன்றைய பூர்வீக மஸ்ஜிதுகளைப் பற்றி எப்படிப்பட்ட குற்றச்சாட்டுகளை வைக்கின்றனரே அதைவிடழ பல மடங்கு மோசமான நிலையில்தான் மஸ்ஜிதுல் ஹரம் அன்று இருந்தது. நபி(ஸல்) அங்கு சென்று அல்லாஹ்வை வழிபடுவதைத் தடுத்தனர். கடுமையான துன்பங்களைக் கொடுத்தனர் அதனது அப்போதைய நிர்வாகிகளான குறைஷ் காஃபிர்கள். அன்று நபி(ஸல்) அவர்களுக்கு இழைக்கப்பட்ட துன்பங்களைக் கணக்கில் கொண்டு பார்த்தால், இன்றைய பூர்வீகப் பள்ளிகளின் நிர்வாகிகள் இவர்களுக்குக் கொடுக்கும் துன்பங்கள் ஒன்றுமே இல்லை என்று சொல்லிவிடலாம்.

இப்படிப்பட்ட கொடூர நிலையிலும் “தனியோனைத் துதித்திட தனிப்பள்ளி அவசியமே!” என்ற முழக்கத்துடன் நபி(ஸல்) தனிப்பள்ளி கட்டி வழிகாட்டவில்லை. சிலைகளும், சமாதிகளும் இருந்த அப்பள்ளிக்கே சென்று தனியோனைத் துதித்தார்கள். மதீனா சென்ற பின்னரும் முஸ்லிம்கள் தனியோனைத் துதித்திட அப்பள்ளியை நோக்கித் தொழும்படியே அத்தனியோன் அல்லாஹ் நபிக்குக் கட்டளையிட்டுள்ளான். நபி(ஸல்) அல்லாஹ்வின் கட்டளைக்கு முற்றிலும் அடிபணிந்து நடந்ததால், சில காலத்தில் அப்பள்ளியான மஸ்ஜிதுல் ஹரமை நபி(ஸல்) அவர்களின் முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர உதவி செய்தான். அங்கிருந்த சிலைகளும், சமாதிகளும் உடைத்தெறியப்பட்டு, தனியோனைத் துதித்திட தூய்மையானதாக அல்லாஹ் அதை ஆக்கித்தந்தான்.

மேலும் அன்று நபி(ஸல்) அவர்கள் முழுக்க முழுக்க அல்லாஹ்வின் கட்டளைப்படி நடந்தார்களே அல்லாமல் இம்மி அளவும் மாறு செய்யவில்லை.

ஆனால் ததஜவினரோ சமுதாயத்தைப் பிளவுபடுத்தித் தனிப்பள்ளி கட்டவேண்டும் என்ற கொடூரமான ஆர்வத்தால் குழப்பத்தை விளைவித்து பள்ளியிலேயே அடிபிடி தகராறு என கலகம் விளைவித்து. இப்பள்ளிகளில் நம்மால் தொழ முடியாது என தம் பக்தர்ளை தூண்டிவிட்டே தனிப்பள்ளி கட்ட வைத்தார்கள். அவர்களது குர்ஆன், ஹதீஸுக்கு முரண்பட்ட செயல்பாடுகளே கலகத்தை விளைவித்தது.

ஹனஃபி, ஷாபி, மாலிக்கி, ஹன்பலி மத்ஹபுகளைச் சேர்ந்தவர்கள் மற்ற மத்ஹபு பள்ளிகளில் போய் உரையாற்ற எவ்விதத் தடையும் இல்லை. தாராளமாக அனுமதிப்பார்கள். ததஜ பள்ளிகளில் மத்ஹபினரை விட்டு விடுவோம். அவரும் சேர்ந்து உருவாக்கிய ஜாக்கினர் வந்து உரையாற்ற அனுமதிப்பார்களா? முஜாஹித், அஹ்லஹதீஸ், ஸலஃபிகள் வந்து உரையாற்ற அனுமதிப்பார்களா? அனுமதிக்கமாட்டார்கள். அதுதான் போகட்டும்; மத்ஹபுகளிலோ, இயக்கப் பிரிவுகளிலோ இல்லாமல் “முஸ்லிம்” என்ற நிலையில் எவ்வித சுய விளக்கமும் இல்லாமல் குர்ஆன், ஹதீஸ் கொண்டு மட்டும் உரையாற்றுகிறவர்களையாவது ததஜ பள்ளியில் உரையாற்ற அனுமதிப்பார்களா? நிச்சயம் அனுமதிக்க மாட்டார்கள்.

நான்கு மத்ஹபினரைவிட கேடுகெட்ட நிலை தான் இவர்களின் நிலை. எங்களின் ததஜ பள்ளியில் எங்களின் ததஜ கொள்கையை ஏற்றவர்கள் மட்டுமே உரையாற்ற முடியும்; ததஜவில் இருக்கும் தாயீக்கள் ததஜ அல்லாத மேடையில் ஏறி உரையாற்ற மாட்டார்கள் என்று அவர்கள் பெருமையுடன் பீற்றிக் கொள்வதே மத்ஹபு பிரிவினர்களைவிட கேடுகெட்ட ஒரு புதிய பிரிவை பிளவை உண்டாக்கியிருக்கிறார்கள்.

தீங்கிழைப்பதற்காகவும் (ஏக இறைவனை அவனது பல குர்ஆன் வசனங்களை நிராகரிப்பதன் மூலம்) மறுப்பதற்காகவும், நம்பிக்கை கொண்டோரிடையே பிளவை ஏற்படுத்திவிடவும், இதற்கு முன் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் எதிராக (பல குர்ஆன் வசனங்களையும், ஆதாரபூர்வமான ஹதீஸ்களையும் மறுப்பதன் மூலம்) போரிட்டோருக்குப் புகலிடமாகவும் ஒரு பள்ளி வாசலை ஏற்படுத்திக் கொண்டோர்” நாங்கள் நல்லதைரத் தவிர வேறெதனையும் நாடவில்லை” என்று சத்தியம் செய்கின்றனர். “அவர்கள் பொய்யர்களே” என்று அல்லாஹ் சாட்சி கூறுகிறான். (முஹம்மதே) அதில் நீர் ஒருபோதும் வணங்காதீர். (அல்குர்ஆன் அத்தவ்பா 9:107,109)

இந்த இறைவாக்குகள் ததஜ புரோகிதருக்கும், அவரது பக்தர்களுக்கும் முழுக்க முழுக்க பொருந்துகிறதை அவரால் மறுக்க முடியுமா?

இன்றைய காலகட்டத்தில் ததஜ புரோகிதரை விட அல்குர்ஆனின் பல நேரடிக் கட்டளை மறுப்பவர்களை, அப்பட்டமாகப் பொய்களை கூறுபவர்களை, அப்பட்டமான அவதூறுகளைப் பரப்புகிறவர்களை, அதுவும் ஒருவரை மக்களிடமிருந்து ஒதுக்கிவிட முகவரி இல்லாதவராக ஆக்கிட அவர்மீது துணிந்து பெண்களைப் பற்றிய அவதூறுகளையும், பொருளாதாரக் குற்றச்சாட்டுக்களையும் சுமத்துங்கள் என்று தனது பக்தர்களுக்கு அப்பட்டமான அறிவுரை கூறி அவ்வாறு அவதூறு பரப்பச் செய்கிறவர்களை காட்ட முடியுமா? ஒருபோதும் முடியாது. இவை அனைத்திலும் கொடிகட்டிப் பரப்பவரே ததஜ புரோகிதர். அல்லாஹ் அன்னிஸா 4:112-ல் கூறி இருப்பதுபோல் பல குற்றங்களைச் செய்துவிட்டு அக்குற்றங்களை மற்றவர்கள் மீது எளிதாகச் சுமத்தி அவற்றை தனது கண்மூடி பக்தர்கள் மூலம் உலகம் முழுவதும் பரப்பத் துணிந்தவர் ததஜ புரோகிதர். சுருக்கமாகச் சொன்னால் அன்று நபி(ஸல்) அவர்களது காலத்தில் அப்துல்லாஹ் இப்னு உபை இப்னு ஸலூல் என்ற நயவஞ்சன் செய்த அனைத்து வஞ்சகச் செயல்களையும் துணிந்து செய்துவிட்டு, தான் நல்லதையே செய்வதாகப் பொய் கூறுபவரே ததஜ புரோகிதர். அப்துல்லாஹ் இப்னு உபை இப்னு ஸலூலை விட ஒருபடி மேலே போய், பாக்கரைப் பற்றி நூற்றுக்கும் மேலாக இருந்த ஒரு பெருங்கூட்டத்தில் தான் சொன்ன அவதூறுகளை, தான் சொல்லவே இல்லை என்று அல்லாஹ்மீது ஆணையிட்டு சத்தியம் செய்து, கடலூர் ஜமாஅத்தினருடன் குர்ஆன், ஹதீஸுக்கு முரணாக “முபாஹலா” செய்த பெரும்பாவி ததஜ புரோகிதர். அவரது துரோகச் செயல்களால்தான் குர்ஆன், ஹதீஸ் மட்டுமே மார்க்கம் என்று கூறி மத்ஹபுகளை விட்டு விலகி வந்தவர்கள். இன்று பல இயக்கப் பிரிவினர்களாகி ஒருவர் மீது ஒருவர் சேற்றை வாரி வீசுகின்றனர். சுன்னத்துவல் ஜமாஅத்தினர் இவர்கள் முகங்களிலேயே காரித்துப்ப இந்த ததஜ புரோகிதரே முழுமுதல் காரணம் என்பதை அறிவுள்ள மக்கள். சுயசிந்தனையுள்ள மக்கள் தெளிவாகப் புரிந்து வருகிறார்கள்.

அமானிதம், வாக்குறுதி, ஒப்பந்தம் என்று மக்களுக்கு பூச்சாண்டி காட்டும் ததஜ புரோகதர் அவற்றைத் தானும் உறுதியாகக் கடைபிடிக்க வேண்டும் என்பதை வசதியாக மறந்துவிடுவார். “மற்றவர்களுக்கு அறிவுரை கூறிவிட்டு உங்களை நீங்கள் மறந்து விடுகிறீர்களா?” என்ற (2:44) இறைவாக்கை துணிந்து நிராகரிப்பவர் ததஜ புரோகிதர்.

ஆரம்ப நாள் முதல் இறையச்சத்தின் அடிப்படையில் நிர்மாணிக்கப்பட்ட பள்ளி வாசலே நீர் வணங்குவதற்குக் தகுதியானது. அதில் தூய்மையை விரும்பும் ஆண்கள் உள்ளனர். அல்லாஹ் தூய்மையானவர்களை விரும்புகிறான். (அல்குர்ஆன் அத்தவ்பா 9:108)

இந்த இறைவாக்கை எடுத்து எழுதி தங்களின் ததஜ பள்ளி மட்டுமே தொழுவதற்கு தகுதியான பள்ளி எனவும் தாங்கள்தான் தூய்மையானவர்கள் எனவும் நிலைநாட்ட முற்பட்டுள்ளனர். எந்த அளவு அறிவு சூன்யமும், ஆணவமும் (அறிவு சூனியனுக்கே ஆணவமும் தற்புகழ்ச்சியும் ஏற்படும்) இருந்தால் ஹி.1425 ஈ.2005க்குப் பிறகு இவர்கள் கட்டிய பள்ளிகளை ஆரம்ப நாள் முதல் உள்ள பள்ளிக்கு ஒப்பிட்டுச் சொல்லும் அசட்டுத் துணிச்சல் ஏற்பட்டிருக்கும். இன்று உலகமெங்கும் காணப்படும் பள்ளிகளை விட இவரது ததஜ பள்ளிகள் முன்னிலை பெற்றுவிட்டனவா? தூய்மை பெற்றுவிட்டனவா?

உண்மையைச் சொன்னால், அன்றைய நயவஞ்சகர்கள் ஒன்றுபட்டிருந்த சமுதாயத்தைப் பிளவுபடுத்தும் தீய நோக்கத்துடன் புதிய பள்ளியைக் கட்டிக்கொண்டு நாங்கள் நல்லதைத்தான் செய்கிறோம் என்று பொய் உரைத்தார்களோ அதேபோல், இந்த நயவஞ்கர்கள் ஒன்றுபட்டிருந்த ஜமாஅத்தைப் பிளவுபடுத்தவே ஜாக் என்றும் பின்னர் ததஜ என்றும் தனிப்போட்டிப் பள்ளிகளைக் கட்டிக் கொண்டு நாங்கள் நல்லதையே நாடுகிறோம். ஏகத்துவத்தை நிலைநாட்டுபவராகவும் நல்லதை நாடுபவராகவும் இருந்தால் அன்நிஸா 4:49, அந்நஜ்ம் 53:32 இறைக் கட்டளைகளுக்கு முரணாக, அவற்றை நிராகரித்துவிட்டு தன்னை ஏகத்துவவாதி-தவ்ஹீத்வாதி, தான்தான் பரிசுத்தவான். தனது ஜமாஅத்துத்தான் தவ்ஹீத் ஜமாஅத் என ஒருபோதும் பீற்றிக் கொள்ளும் ததஜ புரோகிதர் பொய்யராகவும், ஆணவக்காரராகவும், அல்லாஹ்வின் நேரடிக் கட்டளைகளை மனமுரணாக நிராகரித்துப் பொய்யுரைப்பராகவும் மட்டுமே இருக்க முடியும்.

1988லிருந்து 1995 வரை இவரே முன் நின்று கட்டிய ஜாக் பள்ளிகள் இன்று ததஜ புரோகிதரின் பார்வையில் 9:107 கூறும் தொழ தகுதியற்ற பள்ளிகளாகிவிட்டன. அந்த ஜாக் பள்ளிகளுக்குப் பக்கத்திலேயே இப்போது போட்டி ததஜ பள்ளிகள் உருவாகி வருகின்றன. ததஜ புரோகிதர் உலகிலுள்ள பள்ளிகள் அனைத்தும் அல்குர்ஆன் 9:107 சொல்லும் தொழுவதற்குத் தகுதியற்ற பள்ளிகள், தான் 2005க்குப் பிறகு ஜமாஅத்தைப் பிறவுபடுத்தி கட்டிவரும் ததஜ தனிப்பிரிவு போட்டிப் பள்ளிகளே தொழுவதற்குத் தகுதியான பள்ளிகள் என்று ஆணவத்துடன் தனது ஏகத்துவ இதழில் பிதற்றி இருப்பதால் இந்த அளவு கடுமையாக விமர்சிக்க நேரிட்டது. அவரது கண்மூடி பக்தர்கள் பொறுத்துக் கொள்வார்களாக.

அந்நஜாத்

{ 1 comment… read it below or add one }

A.Abdulrajak May 25, 2017 at 1:40 am

பி. ஜைனுல் ஆபிதீன் மற்றும் ஒரு சிலரை தவிர தவ்ஹீத் ஜமாஅத் ஆதரவாளர்களுக்கு குரானும் தெரிய வில்லை . ஹதீஸும் தெரிய வில்லை . அவர்களில் முழுவதும் குரானை தம் தாய் மொழியில் படித்தவர் யாரும் இல்லை . வரதட்சிணை காரியத்தை வைத்து காலத்தை ஓட்டலாம் என உள்ளனர் . அவர்களிடம் பேசினால் தகராறுக்கு , மற்றும் அடிக்க வருகின்றனர் . பெரும் முட்டாள்களாக உள்ளனர் . வெள்ளி கிழமை தொழுகையை தவிர வேறு தொழுகைகளுக்கு 5 – 10 பேருக்கு மேல் யாரும் பள்ளிக்கு வருவதில்லை .மற்ற இடங்களில் தொழுவார்களா என்றும் தெரிய வில்லை .
என்றைக்கு இவர்கள் மொஹமட் நபி காலம் , மற்றும் தொடர்ந்து 40 ஆண்டு காலம் வரை முஸ்லீம் ஜமாத் இருந்ததோ அது போல் எந்த பிரிவு பெயர் இல்லாமல் ஒன்று படுகிறார்களோ அன்று தான் இந்தியா முஸ்லிம்களுக்கு விடிவு காலம் பிறக்கும் . இல்லையேல் இழிவு இவர்களை தேடி வரும்

Reply

Leave a Comment

Previous post:

Next post: