தவ்ஹீது பேசும்…. தீவிரவாத பிரிவினை இயக்கங்களும்…….தற்கொலை குண்டர்களும்…!

Post image for தவ்ஹீது பேசும்….  தீவிரவாத பிரிவினை இயக்கங்களும்…….தற்கொலை குண்டர்களும்…!

in அழிவுப் பாதை

 தவ்ஹீது பேசும்….  தீவிரவாத பிரிவினை இயக்கங்களும்…….தற்கொலை குண்டர்களும்…!

எஸ்.ஹலரத் அலி, திருச்சி-7.

இஸ்லாமானது ஓரிறை கொள்கையை  சொல்லி வளர்ந்த மார்க்கமாகும். அன்றைய அரேபிய மக்கா மாநகர், காபத்துல்லாஹ்வில், நாளுக்கொரு தெய்வம் என்னும் கணக்கில் 360 சிலைகளை வைத்து ஆண்டு முழுவதும் வணங்கி வந்தனர். இச்சூழலிலேயே வணங்கத் தகுதியுடைய ஒரே இறைவன் உலகத்தை படைத்துக் காத்து இரட்சிக்கும், ஒரே இறைவனான அல்லாஹ்வை தவிர வேறு எவருமில்லை. அவன் தனித்தவன், இணை துணை இல்லா தூயவன். என்ற கொள்கை இறங்கியது.

 தவ்ஹீத் என்னும் சொல்லானது “அஹத்” “வாஹித்” (ஒருவன்) என்னும் வேர்ச் சொல்லில் இருந்து பிறந்தது. ஓர் கடவுள் தத்துவத்தை சொல்லும் ஒப்பற்ற இஸ்லாமிய மார்க்கத்தில் தவ்ஹீத் தவிர்க்க முடியாத சொல்லாக விளங்குகிறது. மார்க்கம் என்று எந்த அமலைச் செய்தாலும் அது அந்த ஒரு இறைவனுக்காகவே  செய்யப்பட வேண்டும். இந்தளவு பிரபல்யமான தவ்ஹீத் எனும் சொல்லை குர்ஆன் முழுவதும் தேடிப்பார்த்தாலும் காண முடியாது. லட்சக்கணக்கான ஹதீஸ்களிலும் ‘தவ்ஹீத்” என்னும் சொல் ஓரிரண்டு தான் பார்க்க முடிகிறது.

இதற்கு என்ன காரணம் என்றால்….ஒரு மனிதன் பல கடவுள் சிலைகளை வணங்குவதை விட்டு முற்றாக தவிர்ந்து, ஏக தெய்வமாம் அல்லாஹ்வை தன் இறைவனாக ஏற்றுக்கொண்டு விட்டாலே…  அவன் தவ்ஹீதுவாதியாக ஆகி விடுகின்றான். ஒரு முஸ்லிம் தவ்ஹீதுவதியாக மட்டுமே இருக்க முடியும். அவனது அறியாமை, மற்றும் மூட முல்லா உலமாக்களின் துர்ப்போதனையின் காரணமாக (தர்ஹா செல்லுதல்போன்ற) ஷிர்க் வைக்கும் செயலைச் செய்தாலும்… அவன் உள்ளத்தில் அல்லாஹ் என்ற ஓரிறை கொள்கை மட்டுமே இருக்கும்.அவன் உள்ளத்தில் என்றும் தவ்ஹீதுவாதியாகவே இருக்கின்றான். அல்லாஹ் மனிதனின் உள்ளத்தை மட்டுமே பார்க்கிறான். செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொறுத்தே அமைகின்றன.(புஹாரி முதல் ஹதீஸ்)

 ஒவ்வொரு முஸ்லிமும் தவ்ஹீது வாதியாக இருக்கும் நிலையில்…. பிரத்தியேகமாக தன்னை அடையாளப்படுத்த, தன்னை “தவ்ஹீத்’ என்று என்று சொல்லிக்கொள்ள அவசியம் இல்லை. அல்லாஹ்வின் கட்டளைகள்… எந்த நபித் தோழர்கள் மத்தியில் இறங்கியதோ.. அந்த உத்தம சஹாபாக்கள் தங்களை “தவ்ஹீதுவாதிகள்” என்று அழைக்கவுமில்லை…அப்படி அறிமுகப்படுத்தவும் இல்லை. அல்லாஹ் எப்படி தங்களை அழைக்கச் சொன்னானோ…(41:33) அதன்படி தங்களை “முஸ்லிம்கள்” என்று மாத்திரமே அழைத்துக்கொண்டனர்… அறிமுகப்படுத்திக் கொண்டனர்.

 இஸ்லாம் தவ்ஹீதிற்குத் தரும் விரிந்த பொருளும், விளக்கமும் உயர்ந்த வாழ்க்கை இலட்சியமும் இன்று தவ்ஹீத்வாதிகள் என்று பீற்றிக் கொள்ளும் இயக்கதாரிகளால் குறுகிய வரையறைக்குள் தள்ளப்பட்டு விட்டது.  தவ்ஹீத் இஸ்லாத்தின் மூலக்கொள்கை அன்றி, ஒரு கொள்கைப் பிரிவாருக்குரிய பிரிவுப்பெயர் அல்ல. தவ்ஹீத் இஸ்லாத்தின் மூலக்கொள்கை அன்றி, ஒரு கொள்கைப் பிரிவாரின் தனியுடமையல்ல. தங்களைத் தனிமைப்படுத்தி பிரித்துக்காட்டி, காசு பார்க்கும் “கமர்சியல்  பிராண்டட்” பிரிவுப்பெயருமல்ல.

 முஃதஸிலாக்கள் என்று அடையாளப்படுத்தப்பட்ட ஒரு வழிகெட்ட கூட்டம் இஸ்லாமிய வரலாற்றில் தோன்றியது. குர்ஆனுக்கும், ஹதீஸிற்கும் மனம் போன போக்கில் விளக்கம் என்ற பெயரில் குதர்க்கமான அர்த்தங்களைக் கற்பித்தனர். தமது அறிவுக்கு முரண்பட்ட பல அம்சங்களை நிராகரித்தனர். ஏராளமான ஹதீஸ்களை நிராகரித்தனர் அல்லது மாற்று விளக்கமளித்தனர். முஃதஸிலாக்கள் கூட தம்மை முஃதஸிலாக்கள் என்று அழைத்துக் கொள்ளவில்லை. அவர்கள் தம்மை ‘அஹ்லுல் அல் தவ்ஹீத் வல் அத்ல்” என்றே அழைத்துக் கொண்டனர். எனவே, இன்றும் கூட தவ்ஹீத்வாதிகள் என்ற பெயரில், இஸ்லாமிய அமைப்புக்கள் என்ற பெயரில் முஃதஸிலாக்களின் எச்ச சொச்சங்கள் சமூகத்திற்குள் ஊடுருவியுள்ளது.

  இஸ்லாமிய வரலாற்றில்… முதன்முதலாக தங்களை தவ்ஹீதுவாதிகள் என்று தனியாக அழைத்துக் கொண்டவர்கள்…. நபி (ஸல்) அவர்களால் சபிக்கப்பட்ட கவாரிஜ்கள் என்னும் வழி கெட்ட கூட்டத்தாரே! முஸ்லிம் உம்மத்தை இரண்டாகப் பிளந்து… கூறு போட்டு தனி இயக்கம் தனிப் பள்ளிவாசல் கட்டி, தாங்கள் மட்டுமே ஏகத்துவவாதிகள் (தவ்ஹீத்) மற்ற சஹாபாக்கள் அனைவரும் இணை வைக்கும் காபிர்கள் என்று கூறியவர்களும் முதல் குழப்பவாதிகளான கவாரிஜ்களே!

இந்த கேடு கெட்ட கவாரிஜ்கள் கொள்கையை காப்பியடித்தே…இன்று புதுப் புது தவ்ஹீது இயக்கங்கள் தோற்றுவிக்கப்படுகின்றன.

 இஸ்லாத்தில் இல்லாத, தீவிரவாதத் தன்மையை உருவாக்கிய கவாரிஜ்கள் வழிமுறையைப் பின்பற்றியே… இன்றைய தீவிரவாத தவ்ஹீத் இயக்கங்கள் உருவாக்கப்படுகின்றன. முஸ்லிம் உம்மத்தை இரண்டாகப் பிரித்து தாங்கள் தவ்ஹீதுகள் என்றும் பிற முஸ்லிம்கள் காபிர்கள் என்று சொல்லும் போதே…. தீவிரவாதம் இவர்களுடன் ஒட்டிக கொள்கிறது. சக முஸ்லிம் சகோதரர்களை காபிர் என்றும் இவர்கள் பின்னால் தொழுவது ஹராம் என்றும் தீர்ப்பளிப்பவர்களை மத தீவிரவாதிகள் என்று சொல்லாமல் வேறு எப்படி சொல்வது.?

 இன்று உலகிலுள்ள அனைத்து தவ்ஹீது பெயர் சார்ந்த இயக்கங்களும்…முஸ்லிம்களை காபிராக்கும்  தீவிரவாதத்தை தங்கள் கொள்கையாகவே வைத்துள்ளனர். இதன் காரணமாகவே, தாங்கள் கட்டிய தனிப் பள்ளிவாசலைத் (மர்கஸ் பள்ளி) தவிர்த்து பிற முஸ்லிம்களின் மஸ்ஜீத்களில் இவர்கள் தொழ மாட்டார்கள்.அப்படித் தொழுவது அவர்களுக்கு ஹராமாகி விட்டது. இவர்கள் முஸ்லிம்களை காபிராக்குவதன் காரணம்….மக்கத்து முஷ்ரிக்குகளுக்கு இறக்கப்பட்ட வசனங்களை …கலிமா சொன்ன முஸ்லிம்கள் மீது பிரயோகித்து காபிராக்கிய காரீஜியாக்களின் வழிமுறையை அப்படியே பின்பற்றுவதே!

  இப்னு உமர் (ரலி)  அவர்கள்….காரிஜியாக்களை அல்லாஹ்வின் படைப்புகளிலேயே மிகவும் தீயவர்கள் என்று கருதி வந்தார்கள். மேலும் இறை மறுப்பாளர்கள் தொடர்பாக அருளப்பட்ட இறைவசனங்களை…இறை நம்பிக்கையாளர்கள் மீது திணிக்கும் அளவுக்கு இவர்கள்  சென்றுவிட்டார்கள்  என்றும் சொன்னார்கள். புஹாரி.6929-6930.                                                                        

 இன்றைய தவ்ஹீது இயக்கங்களும், கவாரீஜ்கள் வழி முறையை பின்பற்றியே, மக்கத்து குப்பார் இணை வைப்பவர்களுக்கு இறக்கப்பட்ட இறை வசனங்களை சுன்னத் ஜமாஅத் முஸ்லிம்களின் மீது திணித்து தன் சக சகோதரனையே காபிராக்குகிரார்கள்.

 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இறுதி காலத்தில் ஒரு கூட்டத்தார் வருவார்கள். அவர்கள் குறைந்த வயதுடைய இளைஞர்களாக இருப்பார்கள்..  முதிர்ச்சியுற்ற புத்தியுடையவர்களாயிருப்பார்கள். பூமியிலேயே மிகச் சிறந்த சொல்லை (குர் ஆன் வசனங்களை) எடுத்துச் சொல்வார்கள். வேட்டைப் பிராணியின்  உடலிலிருந்து வேடன்  எய்த அம்பு அதன் மறு புறமாக வெளிப்பட்டுச் சென்று விடுவதைப் போன்று அவர்கள் இஸ்லாத்திலிருந்து வெளியேறிச் சென்று விடுவார்கள்…  அவர்களின் இறை நம்பிக்கை அவர்களின் தொண்டைக்குழிகளைச் தாண்டிச் செல்லாது…(ஹதீஸ் சுருக்கம்) அறிவிப்பவர்; அலீ (ரலி)        நூல்: புஹாரி.6930.

இன்று காரீஜியாக்கள் கொள்கைகளை அப்படியே தாங்கிக் கொண்டும்…அதற்கு தவ்ஹீது பெயரில் இயக்கம் (தவ்ஹீது ஜமாஅத்) ஏற்படுத்தியும் முஸ்லிம்களைக் காபிர் என்றும்…மாற்று மதத்தவர்களை கொல்வதையே கொள்கையாக கொண்டவர்களை அன்றாடம் கண்டு வருகின்றோம். கடந்த வாரம் இலங்கையில் நடந்த தற்கொலை தாக்குதலில் ஈடுபட்டு அப்பாவி கிறிஸ்தவர்களை கொலை செய்த முஸ்லிம் பெயர் தாங்கி இளைஞர்கள் வயது முப்பது சொச்சமே என்பது கவனத்திற்குரியது. இவர்களுக்கும் இஸ்லாத்திற்கும் அணுவளவும் சம்பந்தமில்லை என்பதையே மேலுள்ள ஹதீஸின் மூலம் நபி (ஸல்) அவர்கள் உண்மைபடுத்துகிறார்கள்.

 இன்றும் இலங்கையில் செயல்பட்டுவரும் “ஜமாதுல் முஸ்லிமீன்” என்னும் இயக்கம் தங்கள் அமீரிடம் பை அத் எனும் உடன்படிக்கை செய்யாத முஸ்லிம்களை காபிர் என்றே தீர்ப்பளித்து வருகிறார்கள். உமர் அலி ரியாதி என்பவரை அமீராக நியமித்து செயல்படுகிறார்கள். முன்பு சவூதி அரேபியாவில் மார்க்கம் கற்று பிரச்சாரம் செய்த இந்த ஆலிம்தான்… இன்று தான்தோன்றித்தனமாக சிந்தித்து…குர்ஆனுக்கும், ஹதீஸுக்கும் சுய விளக்கம் கொடுத்து… அப்பாவி இளைஞர்களை மூளை சலவை செய்து தங்கள் கைக்குள் வைத்து ஆட்டிப்படைக்கிறார்கள். இதே நிலையில்தான் தவ்ஹீது இயக்கங்களும் இருக்கின்றன.

 முஸ்லிம்களை வழி கெடுக்கும் இயக்கவாதிகள் இன்று நேற்று உருவானவர்கள் அல்ல. நபி (ஸல்) அவர்கள் இறந்து இருபது ஆண்டுகளுக்குள்ளேயே கவாரிஜிகள்,  ஷீயாக்கள் போன்ற பல வழி கெட்ட கூட்டங்கள் வந்து விட்டார்கள். இது கியாமத் நாள் வரை தொடரும் என்பதையே இன்றைய தவ்ஹீது லேபிள் இயக்க நடவடிக்கைகள் தெரிவிக்கின்றன. இந்த இரு பிரிவினரும் இஸ்லாத்துக்கு கேடு விளைவித்த அளவுக்கு வேறு எந்தப்பிரிவினரும் கேடு விளைவித்ததில்லை.

 இப்பிரிவுகள் தோன்றுவதற்கு தனியொரு நபர் மீது கொண்ட விருப்பு… வெறுப்பே காரணங்களாய் அமைந்தது. அலி (ரலி) அவர்கள் மீது கொண்ட வெறுப்பு எல்லை மீறிப்போனதால் காரிஜீய்யா என்ற பிரிவு தோன்றியது. அலி (ரலி) அவர்கள் மீது கொண்ட விருப்பு எல்லை மீறி போனதன் காரணமாகவே ஷீஆ பிரிவு உருவானது, ”அதிகாரம் அனைத்தும் அல்லாஹ்வையன்றி வேறில்லை!”-6:57. என்ற வசனத்தை தவறாக விளங்கி வழிகெட்டவர்கள் .காரிஜிய்யாக்கள் .அலி (ரலி) அவர்களை அல்லாஹ்வின் மகனாக்கி மதி கெட்டவர்கள் ஷீஆக்கள்.

 இந்த வழி கேடர்களின் வாரிசாகவே அன்றிலிருந்து இன்று வரை தவ்ஹீது லேபிள்  இயக்கங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. 1979  ம் வருடம் ஜுகைமன் அல் ஒதைபி என்பவன் தலைமையில் செளதி அரேபியாவில் உருவான இயக்கமானது…முஹம்மது அப்துல்லாஹ் அல் கத்தானி என்பவன் தான் கடைசியில் வருகை தரும் இமாம் மஹ்தி (அலை) என்று சொல்லி… காபத்துல்லாஹ்வில் இரத்தக்களரியை ஏற்படுத்தி சுமார் இருநூறு முஸ்லிம்களை கொன்று குவித்தனர்.

இது போன்று எகிப்தில்,1976 ல் சுக்ரி அஹமது முஸ்தபா என்பவன் தலைமையில் உருவான “ஜமாஅத் அல்-தக்பீர் வல்-ஹிஜ்ரா” என்னும் இயக்கம்….நாடே ஒழுக்ககேடாகி  சீர் குலைந்து நாசமாக்கி விட்டது. ஆகவே நகரங்களை விட்டு விலகி நாட்டுப் புறங்களில் வாழ்வதுதான் சிறந்தது என்று சொல்லி… லக்ஸார் என்னும் இடத்திற்கு வந்த 62 வெளிநாட்டு பயணிகளை கொலை செய்து வெறியாட்டம் ஆடினர். இன்றும் ஐஎஸ்ஐஎஸ் என்ற பெயரில் ஈவு இரக்கமில்லாமல் ஆண்,பெண், சிறுவர்,சிறுமியரை கொன்று குவித்து வெறியாட்டம் ஆடும் இயக்கங்களை ஈராக்கிலும்,சிரியாவிலும் பார்த்து வருகிறோம்.

 இஸ்லாத்தின் உயர்ந்த ஒழுக்க மாண்புகளை குழி தோண்டிப் புதைத்து விட்டு வெறியாட்டம் ஆடும் இன்றைய இயக்கங்களுக்கும் இஸ்லாத்திற்கும் எள் அளவும்… எள் முனையளவும் சம்பந்தமில்லை. அன்று மதீனாவில்…அப்துல்லாஹ் இப்னு ஸபா என்ற ஏமன் நாட்டு யூதன்…. முஸ்லிம் வேடமிட்டு மக்களிடையே குழப்பத்தை  ஏற்படுத்தினான்.

 யூதன் அப்துல்லாஹ் இப்னு ஸபாவின் வழி வந்த யூதர்களே இன்றும் ஈரானிய ஆட்சியாளர்களை அடக்கி ஆள்கிறார்கள். ஷீயாக்களின் “தாக்கிய” கொள்கைப்படி மார்க்கத்தை மறைத்து நடிப்பது, எல்லாம் அவர்களுக்கு அனுமதிக்கப்பட்ட ஆகுமான காரியமே! வெளி உலகில் அமெரிக்கா, இஸ்ரேலை எதிர்ப்பது போல் நாடகமாடுவதும்… தன் நாட்டு சுன்னத் முஸ்லிம்களை கொல்வதுமே அவர்களின் கொள்கையாக உள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல் யூதர்களுக்கு எதிராக எந்த ஒரு முஸ்லிம் தலைவனும் எழுந்தால்… சதாம் உசேன், கடாபி கதிதான் அவர்களுக்கு ஏற்படும்.

  இன்று முஸ்லிம் சமுதாயத்திற்கு ஏற்பட்ட சோதனை எல்லாம் வழி கெடுக்கும் தலைவர்களாலே ஏற்படுத்தப்படுகிறது என்பதை அன்றே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறிவிட்டார்கள்.

  என் சமுதாயத்தில் வழி கெடுக்கும் தலைவர்கள் குறித்தே நான் பெரிதும் அஞ்சுகிறேன்…..  (ஹதீஸ் சுருக்கம்) அறிவிப்பவர்: ஸவ்பான் (ரலி), நூல்: திர்மிதீ.

 இஸ்லாத்தில் முதல் பிரிவினை ஏற்படுத்திய கவாரிஜ் தவ்ஹீது இயக்கத்தார்கள்… சஹாபாக்களை காபிர் என தீர்ப்பிட்டார்கள். இன்று அவர்களின் தவ்ஹீது இயக்க வாரிசுகள் முஸ்லிம்களை காபிர் என தீர்ப்பளிக்கிறார்கள். தவ்ஹீது என்னும் உயர்ந்த சொல்லானது…சகோதர முஸ்லிம்களை காபிராக்க பயன்படுத்தப்படுவது கொடுமையிலும் கொடுமை! இதுதான் இயக்க இப்லீஸின் வழி முறை. சக சகோதர முஸ்லிம்களையே காபிராகப் பார்க்கும் மன நோய்  உள்ளவர்கள்… பிற மாற்று சமுதாய மக்களை மனிதர்களாகவே பார்க்கமாட்டார்கள் என்பதையே தற்கொலை குண்டு படுகொலைகள் உனார்த்துகின்றன.

 இன்று தற்கொலை குண்டு தாக்குதல்களை கையில் எடுத்திருக்கும் தவ்ஹீது இயக்கதாரிகளுக்கு. இதற்கான ஆதாரத்தை குர் ஆனிலும்,அல்லது ஹதீஸ்களிலும் காண முடியாது. ஏனெனில் எவர் ஒருவர் தற்கொலை செய்து கொள்கிறாரோ அவருக்கு நிரந்தர நரகம் என்பதே அல்லாஹ்வின் தீர்ப்பு. ஒரு உண்மை முஸ்லிம் இது போன்ற பெரும்பாவத்தை செய்து நரகில் கிடக்க விரும்ப மாட்டான். சுயநல தவ்ஹீது இயக்கதாரி தலைவர்களால் வார்த்தெடுக்கப்பட்டு மூளைச்சலவை செய்யப்பட்ட அப்பாவி மூட இளைஞர்களே, தற்கொலை பலி கடாக்களாக பாவத்தில் வீழ்கிறார்கள்.

 அப்துல்லாஹ் இப்னு ஸபா என்னும் யூதனால் வளர்த்தெடுக்கப்பட்ட ஷீ ஆ கொள்கையாளர்களிடம் இது போன்ற தற்கொலை சாவுகளுக்கு அங்கீகாரம் உள்ளதாக வரலாற்றில் பார்க்கமுடிகிறது. அப்பாஸீயா கலீபாக்கள் ஆட்சியின் போது, அவருக்கு கட்டுப்பட மறுத்து எதிர்த்து நின்றான் ஷீ ஆ கொள்கை குறுநில மன்னன். உடனடியாக சரணடைய வேண்டும் என்று எச்சரிக்கையை ஒரு தூதுவர் மூலம் கலீபா அனுப்பி வைத்தார்.’அரணுட்” எனும் உயரமான மலைக்கோட்டையில் பாதுகாப்பாக இருந்த மன்னனிடம் கலீபாவின் தூதர் செய்தியை சொன்னார்.

  அதைக் கேட்ட ஷீ ஆ ஆட்சியாளன், “உமது கலீபாவிற்கு என்னிடம் பதில் ஒன்று உள்ளது என்று சொல்லி… அந்த கோட்டை உச்சியில் இருந்த பிரதான மண்டபத்திற்கு அழைத்துக் சென்றான். அம்மண்டபத்தில் ஆயிரத்திற்கு மேற்பட்ட இளைஞர்கள் அமர்ந்து அல்லாஹ்வை ‘திக்ர்” செய்து கொண்டிருந்தார்கள். அவர்களிடையில் சென்ற மன்னன்,” இளைஞர்களே! உங்களில் இருவருக்கு அல்லாஹ்விடமிருந்து அழைப்பு வந்துள்ளது. அந்த அழைப்பை ஏற்கும் அதிர்ஷ்டசாலி உங்களில் யார்?” என்று  சொன்ன உடனே ஒரே கூச்சல், குழப்பம்…நான்…நான்.. என்று போட்டி போட்டு கொண்டு அனைவரும் எழுந்தனர். மன்னன் இரு நபர்களை கை காட்டியவுடன் அந்த இரு இளைஞர்களும் “அல்லாஹு அக்பர்!” என்று சொல்லியவாறு அப்படியே மலைக்கோட்டையில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.

 அப்போது ஷீஆ மன்னன் சொன்னான்,  ‘தூதரே! உமது கலீபாவுக்கு நான் சொல்லும் செய்தி இதுதான். இது போன்ற இளைஞர்கள் என்னிடம் ஆயிரக்கணக்கில் உள்ளனர் என்பதையே!”

 தற்கொலை தாக்குதல்களை இஸ்லாமிய பெயரில் அறிமுகப்படுத்தியவர்கள் சியோனிச சிந்தனை ஷீ ஆக்களே! ஈரானுக்கும்,ஈராக்குக்கும் இடையில் தொடர் போர் நடந்தபோது, 1980 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பதிமூன்று வயதுடைய ஈரான் சிவன் ஒருவன் தன் உடலில் குண்டுகளை கட்டிக்கொண்டு  இராக்கிய யாணுவ டாங்கியை வெடித்துச் சிதறச் செய்தான். உடனடியாக ஆயத்துல்லாஹ் கொமைனி அச்சிறுவனை தேசிய ஹீரோ வாக அறிவித்து, ஷஹீத்  என்னும் சான்றளித்து கெளரவப்படுத்தினார்.

அதன் விளைவாக ஆயிரக்கணக்கான தற்கொலைதாரிகள் “ஷீ ஆ ஹிஸ்புல்லாஹ்” இயக்கத்தில் உருவாக்கப்பட்டார்கள். இதன் விளைவாக 1983 ஆம்  ஆண்டு லெபனானில் இருந்த அமெரிக்கா கப்பல் படைத்தளத்தை “இஸ்லாமிக் ஜிஹாத்” என்ற தற்கொலைப் படையினர் தாக்கி,241 அமெரிக்க ராணுவ வீரர்களை கொன்றனர். இவர்களும் ஷஹீதெ ன்னும் புனிதப் போராளி பட்டியல் சேர்க்கப்பட்டனர். இஸ்லாத்தில் நிரந்தர நரகம் என்று தீர்ப்பிடப்பட்ட தற்கொலைத் தாக்குதல் சியோனிச ஷீஆக்களால் இஸ்லாமாக்கப்பட்டது.

சியோனிச ஷீயா கொள்கைத் தலைவர்களின் தவ்ஹீத் தாவத்? பணி தொடர்ந்து நடந்து கொண்டேயிருக்கும். எதுவரை என்றால்…. எல்லா நபிமார்களும் எச்சரித்த நபி (ஸல்) அவர்கள் முன்னறிவித்த அந்த மாபெரும் குழப்பவாதி ஒற்றைக்கண் தஜ்ஜால் 70,000  ஈரானின் இஸ்பஹான் யூதர்கள் படையுடன் வரும்வரை நடந்து கொண்டே இருக்கும்.

 “பாராசீக போர்வைகளைப் போர்த்தியவர்களாக 70,000 இஸ்பஹான் யூதர்கள் பின் தொடர தஜ்ஜால் வருவான்.” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

 அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)  நூல் : முஸ்லிம்,அஹ்மத்.

யஹூதி ஷீஆ சிந்தனை தாக்கத்தால் உருவான தவ்ஹீது தலைவர்களால் இஸ்லாமிய ஒழுக்க மாண்புகளை தாங்கிய இளைஞர்களை உருவாக்க முடியாது. சுய சிந்தனையற்ற மூட அடிமை இளைஞர்களையே வளர்த்தெடுக்கமுடியும். இந்த அடிமைகளும்….. இஸ்லாத்தை வளர்ப்பதாக நினைத்துக் கொண்டு அதை அழிக்கத் துடிக்கும் சியோனிச சக்திகளுக்கு துணை நின்று, தமது இம்மை மறுமை வாழ்கையை பாழ்படுத்திக் கொள்கிறார்கள். இது போன்ற இளைஞர்களை தயார் செய்து தம் தவ்ஹீது இயக்க… கொலை வெறிக் கொள்கைக்கு இத் தலைவர்களே பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

 அன்றைய பல தெய்வ மக்கத்து குறைஷிகள், தங்கள் குல தெய்வப் பெருமைகளின் காரணமாக தங்களுக்குள் அடித்துக் கொண்டு பிரிந்து பிளந்து கிடந்தனர்.அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஏகத்துவ கலீமாவான தவ்ஹீதைச் சொல்லி அம்மக்களை ஒன்று படுத்தி ஒரே சகோதரர்களாக ஆக்கினார்கள். ஆனால்  கை சேதமே! இன்றுள்ள கள்ளத் தவ்ஹீது தலைவர்களோ, ஒன்றுபட்ட உம்மத்தை, சகோதரர்களை பிளந்து, பிரித்து, முஸ்லிம்களை காபிராக்கும் கயமைத்தனத்தில் காசு பார்க்கின்றனர். ”தவ்ஹீது” என்னும் சொல் பிற முஸ்லிம்களை பிரித்து காபிராக்கும் “பிராண்டட் பிரிவினை கம்பெனி” சொல்லாக மாற்றப்பட்டு விட்டது.

  இஸ்லாம் கடுமையாகத் தடுத்த ஐந்து சமூகக் குற்றங்களை செய்பவர்களே தற்கொலை குண்டு கொடியவர்கள்.

 இரண்டு  நாடுகளுக்கு இடையில் நடக்கும் போரில் கூட, அப்பாவி பொது மக்கள், பெண்கள்,சிறுவர்கள், மதகுருமார்கள் கொல்லப்படக் கூடாது.

  1. போரில் இறந்த உடல்களை சிதைத்து சின்னாபின்னப்படுத்தக் கூடாது.
  2. பொது மக்களின் நம்பிக்கைக்கு துரோகம் இழைக்கக் கூடாது.
  3. பொது மக்கள்,அரசு, தனியார் சொத்துக்களுக்கோ, உடமைகளுக்கோ சேதம் ஏற்படுத்தக் கூடாது.
  4. .ஒரு முஸ்லிம் தனக்குத் தானே மரணத்தை ஏற்படுத்தக் கூடாது.

 தற்கொலை குண்டு கொடியவர்கள் நல்லவர் போல் வேடமிட்டு தேவாலயத்திற்குள் நுழைந்த நம்பிக்கை துரோகிகள்.அப்பாவி ஆண்,பெண், சிறுவர்,சிறுமிகள், மத குருமார்களை கொன்ற குவித்த கொடும் பாவிகள் குண்டு வெடிப்பின் மூலம் தானும் சிதைந்து, மக்களின் உடல் உறுப்புக்களை சிதைத்து சீரழித்தவர்கள். பொதுமக்களின் சொத்துக்களை உடமைகளை சேதப்படுத்திய மிருகங்கள். இஸ்லாத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்த கயவர்கள்.இன்று இலங்கையில் ஷீயா கொள்கையை பரப்பும் பணியில் ஈரானிய தூதரகங்கள் பெரும்பொருள் செலவு செய்து வருவது கவனத்திற்குரியது கவலைக்குரியது.

  அவர்கள் எத்தகையவர்கள் எனில், அல்லாஹ்வுடன் உறுதியான  உடன்பாடு செய்து கொண்ட பின்னர் அதை முறித்து விடுவார்கள்.மேலும், எந்த உறவு முறைகள் இணைத்து வைக்கப்பட வேண்டும் என்று அல்லாஹ்  கட்டளையிட்டானோ அவற்றைத் துண்டிப்பார்கள்.மேலும், பூமியில் குழப்பம் செய்து கொண்டு திரிவார்கள். உண்மையில்  இத்தகையோரே இழப்புக்குரியவர்களாவர். அல் குர்ஆன்.2:27.   

Leave a Comment

Previous post:

Next post: