சூரிய குடும்பத்தின் கோள்கள் எட்டா,ஒன்பதா,அல்லது  பனிரெண்டா?

Post image for சூரிய குடும்பத்தின் கோள்கள் எட்டா,ஒன்பதா,அல்லது  பனிரெண்டா?

in அறிவியல்

எஸ்.ஹலரத் அலி,திருச்சி-7.

 

நமது சூரிய மண்டலம் எப்படி உண்டானது ?

விஞ்ஞான வரலாற்றில் எத்தனையோ கருத்துக்கள் மாறிப் போனாலும், சூரிய  மண்டலம் உருவான கருதுகோள் 250 ஆண்டுகளாக மாறவே இல்லை.  1755 ஆம் ஆண்டில் ஜெர்மன் விஞ்ஞானி இம்மானுவெல் கென்ட், (Immanuel Kant) (1724-1804) முதன்முதலில் தனது நெபுளா கோட்பாடைக் (Nebular Hypothesis) கூறினார்:  அதன்படி பேரளவு வாயு மேகம்  கொண்ட ஆதி நட்சத்திர மண்டல நெபுளா,  சூரியனாகவும், மற்ற அண்டக் கோள்களாகவும் உருவாக அடிப்படை  மூலாதாரப் பொருளானது! 

Image result for Nebular Hypothesisஇம்மானுவெல் கென்ட் விளக்கிய நெபுளா கோட்பாடில் இருப்பது இதுதான் : பேரளவுக் கொள்ளளவு வாயு நிறையும் தூசி துணுக்குகளும் திணிவு ஈர்ப்பு (Mass Gravity) விசையால் சேர்ந்து சுற்ற ஆரம்பித்தன.  திணிவு நிறை பெருகப் பெருக ஈர்ப்பு சக்தி மிகையாகி வாயுத் திணிவை இறுக்கிச் சுருக்கி (Gravitational Contraction) வாயுக் கோள்களாகவும், திடக்கோள்களாகவும் உருவாயின.

இதைதான் அல் குர்ஆன் அழகாக கூறுகிறது,                                              

..பிறகு வானம் புகையாக (வாயு நிறையும் தூசி துணுக்குகளும் திணிவு ஈர்ப்பு Mass Gravity) இருந்தபோது,(அதைப்) படைக்க நாடினான்.; ஆகவே அவன் அதற்கும் பூமிக்கும்: நீங்கள் விருப்புடனாயினும் அல்லது வெறுப்பிருப்பினும் வாருங்கள் என்று கூறினான். (அதற்கு) அவை இரண்டும் நாங்கள் விருப்புடனே வருகின்றோம் என்று கூறின.    அல் குர்ஆன்.41:11.

                                              

இந்தப் பிரபஞ்சம் பற்றியும் அதனது தோற்றம் பற்றியும் நமது கருத்துக்கள், ஆதிகாலத்திலிருந்தே பல்வேறு மாற்றங்களுக்கு உள்ளாகி வந்துள்ளது.

சூரியக் குடும்பம் என்பது,சூரியனையும், அதனைச் சுற்றி வரும்,கோள்கள்,(Planets) துணைக்கோள்கள்,(Moons) சிறுகோள்கள்,(Dwarf Planets) குறுங்கோள்கள்,(Astroids) வான்கற்கள், வால்வெள்ளிகள் (Comets) என்பனவற்றை கொண்ட ஒரு அமைப்பாகும். எமது சூரியக் குடும்பம், பால்வீதி( Milkyway Galaxy) எனப்படும், நட்சத்திரப்பேரடையில் (Star Clusters) இருக்கும் பில்லியன் கணக்கான நட்சத்திரத்தொகுதிகளில் ஒன்றாகும்.

Related imageசூரியக் குடும்பத்தில்  மிக முக்கிய அம்சமாக இருப்பது, மையத்தில் இருக்கும் சூரியனும், அதனைச்சுற்றிவரும் 8 (கிரகங்கள்-Planets) கோள்களுமாகும்.

சூரியக் குடும்பத்தைப் பொறுத்தவரை, சூரியனே மிகமுக்கியமான அமைப்பாகும். சூரியகுடும்பத்தில் இருக்கும் மொத்தத் திணிவில்(Mass) 99% ஆன திணிவை சூரியனே கொண்டுள்ளது. மற்றைய கோள்கள், குறுங்கோள்கள் ஏனைய பொருட்கள் எல்லாம் எஞ்சிய 1% திணிவிலேயே அடங்கிவிடும்.

சூரியனே சூரியக்குடும்பத்தை  கட்டுக்கோப்புக்குள் வைத்திருக்கும் குடும்பத்தலைவன்.. தனது ஈர்ப்பு விசையால், கோள்கள் மற்றும் அனைத்தையும் ஒரு தொகுதி போல பேணுகிறது. சூரியனும், அதனைச் சுற்றிய சூரியத் தொகுதியும் கிட்டத்தட்ட 4.6 பில்லியன் வருடங்களுக்கு முன்னர் தோன்றியதாக அறிவியலாளர்கள் கணக்கிட்டுள்ளனர்.

சூரியனுக்கு மிக அருகில் இருக்கும் கோள்களான புதன், வெள்ளி, பூமி மற்றும் செவ்வாய் ஆகியன பாறைகளாலான கோள்களாகும். செவ்வாய்க்கு அடுத்தததாக இருக்கும் வியாழன் மற்றும் சனி, வாயு கோள்கள்  என்று அழைக்கப்படுகிறது. இவை, ஹைடிரஜன் மற்றும் ஹீலியம் போன்ற வாயுக்களால் உருவாக்கப்பட்ட மிகப்பெரிய கோள்களாகும். அதற்கும் அடுத்ததாக இருக்கும், யுரேனஸ் மற்றும் நெப்டியூன் பனிக் கோள்கள் என்றழைக்கப்படுகின்றன. இவை நீர், அமோனியா மற்றும் மிதேன் போன்ற சேர்மானங்களால் ஆக்கப்பட்டவை.

16ம் நூற்றாண்டைச் சேர்ந்த நிகோலஸ் கோப்பர்நிகஸ் தனது சூரிய மையக் கோட்பாட்டை வெளியிட்ட பின்னரே கொஞ்சம் கொஞ்சமாக சூரியனை மையமாக கொண்ட கருத்து வலுப்பெறத் தொடங்கியது. பின்னர் 17ம் நூற்றாண்டில் வானியலாளர்கள், தொலைக்காட்டிகளைப் பயன்படுத்தி சூரியனே மையத்தில் இருப்பதாகவும், பூமி தொடக்கம் மற்றைய கோள்கள் அனைத்தும் சூரியனைச் சுற்றி வருவதையும் கண்டறிந்தனர். யுரேனஸ் கோள் 1781  ஆண்டிலும் , நெப்டியூன் 1846 ஆண்டிலும்  கண்டுபிடிக்கப்பட்ட  கோள்களாகும்.

புளுட்டோ, 1930 களிலேயே கண்டறியப்பட்டது. இது சூரியனைச் சுற்றிவரும் 9 ஆவது கோளாக பிரகடனப்படுத்தப்பட்டது. ஆனால் ப்ளுட்டோ, புதனை விட சிறியது, அது மட்டுமல்லாது, வேறு சில கோள்களின் துணைக்கோள்களை விடவும் சிறியது. ப்ளுடோ சற்று விசித்திரமானது, அது பூமி, செவ்வாய், வெள்ளி அல்லது புதன் போல பாறைகளால் ஆனா கோள் அல்ல,

சீரிஸ்(Ceres) என்ற வான்பொருள், செவ்வாய்க்கும், வியாழனுக்கும் இடையில் சூரியனைச் சுற்றிவருவதை வானியலாளர்கள் 1801 இல் கண்டறிந்தனர். இதனையும் ஒரு கோளாக அவர்கள் வகைப்படுத்தினர். ஆனால் பின்னர், அந்தப் பகுதியில் சீரிஸ் போன்ற நிறைய வான்பொருட்களை வானியலாளர்கள் கண்டறிந்ததன் பலனாக, பின்னர் அவற்றை எல்லாம் சேர்ந்து சிறுகோள்கள் (Asteroids) என்று அழைத்தனர்.

Image result for kuiper belt1990 களின் ஆரம்பத்தில் வானியலாளர்கள், புளுட்டோ போன்ற பல வான்பொருட்கள் சூரியனை,  கைப்பர் பட்டை பகுதியில் (Kuiper Belt) சுற்றிவருவதை கண்டனர். கைப்பர் பட்டையும், அந்தப் பகுதியில் சுற்றிவரும் ஆயிரக்கணக்கான கைப்பர் பட்டைப் பொருட்களினதும் (Kuiper Belt Object – KBO) கண்டுபிடிப்பு, ப்ளுட்டோவை கோள் என அழைப்பதைத் தவிர்த்து, அது ஒரு மிகப்பெரிய KBO என அழைக்கலாம் என ஆய்வாளர்கள் கருதினர்.

அதன் பின்னர், 2005 இல் வானியலாளர்கள், 10 ஆவது கோளைக் கண்டறிந்துவிட்டதாக செய்தி வெளியிட்டனர். இதுவும் ஒரு KBOதான், ஆனால் ப்ளுட்டோவை விடப் பெரியது. இப்போது எரிஸ்(Eris),  என அழைக்கப்படுகிறது. இது  பெரிய சிக்கலை உருவாக்கியது, அதாவது, இப்படி நாம் கண்டறியாத பல வான்பொருட்கள் இருந்தால், உண்மையிலேயே “கோள்” என்றால் என்ன? இது ஒரு சிக்கலான கேள்வியாகப் போகவே, இதற்கு எளிதாக  பதிலளிக்க முடியவில்லை.

சர்வதேச வானியல் கழகம் (International Astronomical Union – IAU), இந்தப் பிரச்சினைக்கு தீர்வுக்கான முனைந்தது. புதிதாக கண்டறிந்த KBO பொருட்களை ஒரு வகைப்படுத்தவேண்டும் என்று அவர்கள் கருதினர். அதேபோல 2006 இல், IAU, முதன்முதலில் “குறுங்கோள்” (Dwarf Planet) என்ற பதத்தைப் பயன்படுத்தி, KBOவை அழைத்தது. எரிஸ் (Eris), சீரிஸ் (Ceres), ப்ளுட்டோ (Pluto) மற்றும் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட கவுமியா (Haumea), மக்கேமக்கே (Makemake) என்பன IAU ஆல் ஏற்றுக்கொள்ளப்பட்ட குறுங்கோள்கள் ஆகும்.

ஒரு கோள் என்பது, பின்வரும் மூன்று நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யவேண்டும் என்று IAU கருதுகின்றது.

  1. ஒரு நட்சத்திரத்தை சுற்றிவரவேண்டும்.
  2. போதுமானளவு திணிவைக்கொண்டிருப்பதன் மூலம் கோளமான வடிவத்தைப் பெற்றிருக்கவேண்டும்.
  3. தனது சுற்றுப்பாதையை வேறு எந்த வான்கற்களோ இல்லை வேறு பெரிய பொருட்களோ இல்லாது சுற்றி  வரவேண்டும்.

இந்த மூன்றாவது விதிக்கு உடன்படாத புளுட்டோவை குறுங்கோள் (Dwarf Planets)  பட்டியலில் சேர்த்து,சூரிய குடும்பத்து கோள்கள் எட்டு மட்டுமே என்று 2006ல் அறிவித்தனர். தற்போது ஒன்பதாவது கோள் என்று கூறிக்கொள்ளத்தக்க ஒரு கோள் சூரியக் குடும்பத்திலேயே  இருப்பதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இதற்கான ஆதாரங்களும் மிக ஆணித்தரமாக இருகின்றன.

கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனத்தின் (California Institute of Technology) விண்ணியல் ஆய்வாளர்கள் மைக்கல் பிரவுன் (Michael E Brown) மற்றும் கொன்ஸ்டன்டின் பட்டிஜின் (Konstantin Batygin) இருவருமே இந்த புதிய ஒன்பதாவது கோள் இருப்பதற்கான ஆதாரத்தைக் கண்டறிந்துள்ளனர்

நெப்டியூனிற்கும் அப்பால் சூரியனைச் சுற்றிவரும் ஆறுக்கும் மேற்பட்ட விண்பொருட்களை ஆய்வுசெய்ததில், அவற்றின் பயணப்பாதையில் ஒரு முரண்பாடு தெரிவதை விஞ்ஞானிகள் கவனித்தனர். இந்த ஆறு விண்கற்கள்,விண்பொருட்களும் சூரியனை ஒரு குறித்த பக்கத்தில் இருந்தே சுற்றுகிறது. மேலும் இவை குறிப்பாக  ஒரே கோணத்தில் சூரியனைச் சுற்றிவருகின்றன.ஆகவே இந்த சற்று முரனான சுற்றுப்பாதைக்கு வேறு ஒரு காரணம் இருக்கலாம் என்று இவர்கள் கருதுகின்றனர். அந்தக் காரணம் – ஒன்பதாவது கோள்!

ஒன்பதாவது கோள், தனது ஈர்ப்புவிசையினால் இந்த சிறிய விண்பொருட்களின் பாதையை தனது ஆதிக்கத்தில் வைத்துள்ளது என்பது ஆய்வாளர்களின் கருத்து. நீண்டகால கண்காணிப்பு  மற்றும் கணிணி மாதிரி அமைப்புகள் நிச்சயம் ஒரு கோள் இருக்கவேண்டும் என்று வலியுறுத்துகின்றன.

இவர்களது கணக்குப்படி இந்தப் புதிய ஒன்பதாவது கோள், சுமாராக, நெப்டியூன் கோளின் அளவு அல்லது பூமியின் திணிவைப் போல பத்துமடங்கு திணிவைக் (Mass) கொண்டிருக்க வேண்டும்.

மேலும் இது சூரியனில் இருந்து 32 பில்லியன் கிமீ தொலைவில் சுற்றிவரவேண்டும், அதுவும் அதனது நீள்வட்டப் பாதையில் சூரியனுக்கு அருகில் இருக்கும் போதுதான், அது சூரியனுக்கு தொலைவில் செல்லும் போது சூரியனில் இருந்து 160 பில்லியன் கிமீ தொலைவில் இருக்கும். மேலும் ஒரு முறை சூரியனைச் சுற்றிவர 10000 – 20000 வருடங்கள் வரை எடுக்கும் என்று கணக்கிட்டுள்ளனர்.

Astronomers expect to discover Planet Nine about 700 times further out than the distance between the Earth and the Sun (over 100 billion km away). Here in the cold outer reaches of the Solar System, this ninth world would reflect very little sunlight. They also estimate that its temperature would be an icy -226C (-375F).

https://www.caltech.edu/news/caltech-researchers-find-evidence-real-ninth-planet-49523

http://www.space.com/31670-planet-nine-solar-system-discovery.html

இதுவரை நவீன அறிவியல், சூரிய குடும்பத்தை சுற்றி வரும் கோள்கள் புளுட்டோவை தவிர்த்தும்,புதிய கோளை சேர்த்தும் ஒன்பது கோள் என்று அறிவித்துள்ளனர்.இது குறித்து இயற்கை  மார்க்கமான இஸ்லாம் என்ன சொல்கிறது என்பதை பார்க்கலாம்.

அல் குர்ஆனில் அல்லாஹ், யூசுப் நபி அவர்கள் வரலாற்றில் வரும் பல செய்திகளை இறுதி உம்மத்தாகிய நமக்கு சொல்லிக் காட்டுகிறான்.அதில் யூசுப் (அலை) அவர்களுக்கு கனவுகளின் பலனை அறியும் ஆற்றலை அல்லாஹ் கொடுத்திருப்பதாக கூறுகிறான்.

“இவ்வாறு நாம் யூஸுப்புக்கு பூமியிலே வசதியளித்தோம்; இன்னும் கனவுகளுக்குப் பலன் கூறுவதையும் கற்றுக்கொடுத்தோம்.         –அல் குர்ஆன்.12;21.

யூசுப்(அலை) அவர்கள் தங்கள்  குடும்ப வரலாற்றுச்  சம்பவங்களை சொல்லிச் செல்லும் அதே வேளையில் ஒரு அறிவியல் உண்மையையும் கூறுகிறார்கள். அவர்கள் மூலமாக அல்லாஹ், அறிவிக்கச்  செய்கின்றான்.என்ன அது?

“யூசுப் தன் தந்தையாரிடம்; “என் அருமைத் தந்தையே! பதினோரு நட்சத்திரங்களும்,சூரியனும்,சந்திரனும் (இவை யாவும்) எனக்குச் சிரம் பணிவதை மெய்யாகவே (கனவில்) நான் கண்டேன்.” என்று கூறியபோது..”   அல் குர் ஆன்.12:4.

‘இன்னும், அவர் தாய் தந்தையரை அறியாசனத்தின் மீது உயர்த்தி அமர்த்தினார்;அவர்கள் எல்லோரும் அவருக்கு (மரியாதை செலுத்தியவர்களாக) சிரம் பணிந்து வீழ்ந்தனர்; அப்போது அவர் (தந்தையை நோக்கி) “என் தந்தையே! இதுதான் என்னுடைய முந்தைய  கனவின் விளக்கமாகும்; அதனை என்  இறைவன் உண்மையாக்கினான்….”         அல் குர்ஆன்.12:100.

இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: இறைத்தூதர்கள் காணும் கனவு இறைச்செய்தி (வஹீ) ஆகும்.  – ஆதாரம்: தப்ஸீர் தபரீ.

யூசுப் (அலை) அவர்கள் கண்ட கனவின் விளக்கம் குறித்து இப்னு அப்பாஸ் (ரலி) மற்றும்,ளஹ்ஹாக்,கத்தாதா,சுப்யான்,அஸ்ஸவ்ரீ ஆகிய விரிவுரையாளர்கள் கூறுவது:  பதினொன்று நட்சத்திரங்கள் என்பது அவருடைய சகோதரர்களை குறிக்கும்.யூசுப் (அலை) அவர்களையும் சேர்த்தால் மொத்தம் பன்னிரெண்டு சகோதரர்கள்.சூரியனும் சந்திரனும் அவருடைய பெற்றோரைக் குறிக்கும்.  –தப்ஸீர் இப்னு கஸீர்.-4.பக்.723.

இந்த உவமையின் மூலம் சூரிய குடும்பத்திற்கு மொத்தம் பன்னிரெண்டு கிரகங்கள் (கோள்கள்) உள்ளன என்ற உண்மையை அல்லாஹ் கூறுகிறான்.இதில் இன்னுமொரு ஆச்சரியம் இந்த “சூரத்துல் யூஸூப்”  அத்தியாயமே  குர் ஆனில் 12 வது அத்தியாயமாக உள்ளது.அல்லாஹ்  அறிந்தவன்.

“வானங்களையும்,பூமியையும் அல்லாஹ் உண்மையைக்கொண்டே படைத்துள்ளான்-நிச்சயமாக இதில் விசுவாசிகளுக்கு அத்தாட்சி இருக்கிறது.”  -அல் குர்ஆன்.29:44.

அல்லாஹ் உவமையாகவோ,உதாரணமாகவோ எதைக்கூறினாலும் அதில் உண்மையைத்தவிர வேறு கூறுவதில்லை.இது சம்பந்தமாக பைபிள் பழைய ஏற்பாட்டிலும் குறிப்புகள் காணப்படுகிறது.

“ மேலும் அவர் தாம் கண்ட வேறொரு கனவையும் தம் சகோதரர்களுக்கு விவரித்தார். “நான் மீண்டும் ஒரு கனவு கண்டேன்.அதில் கதிரவனும் நிலவும் பதினோரு விண்மீன்களும் என்னை வணங்கக் கண்டேன்.”  –ஆதியாகமம்.37:9.

பதினோரு நட்சத்திரங்கள் (கவாகிப்) என்று இங்கு குறிப்பிடுவது அசல் நட்சத்திரங்களைக் குறிக்காது கோள்களையே குறிப்பிடும்.நட்சத்திரங்களைக் அல்லாஹ் “நஜ்ம்” என்று குர்ஆனில் பதிமூன்று இடங்களில் குறிப்பிடுவது கவனிக்கத்தக்கது

Officials Propose 12 Planets in the Solar System The International Astronomical Union, currently meeting in Prague, has announced a proposal that would boost the number of planets in the Solar System to 12. Under their new classification, the asteroid Ceres, Pluto’s moon Charon, and the newly discovered UB313 (aka Xena) would join the traditional 9 planets we’re familiar with. Any additional large bodies would also be described as planets. The IAU will make a final vote on this proposal on August 24.

If the proposed Resolution is passed, the 12 planet in our Solar System will be Mercury, Venus, Earth, Mars, Ceres, Jupiter, Saturn, Uranus, Neptune, Pluto, Charon and 2003 UB313. The name 2003 UB313 is provisional, as a “real” name has not yet been assigned to this object. A decision and announcement of a new name are likely not to be made during the IAU General Assembly in Prague, but at a later time.

http://www.universetoday.com/472/officials-propose-12-planets-in-the-solar-system/

இன்றைய அறிவியல், சூரியக் குடும்பக் கோள்கள் எட்டு என்று இப்போது அறிவித்தாலும் இந்த  எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்க வாய்ப்புள்ளது மேலும் நமது சூரியனுக்கு  ஒன்பதுக்கு மேற்பட்ட கோள்கள் இருக்கலாம் என்னும் புதிய கருத்து  2016 ஜூன் 13 ராயல் வானியல் குழுவினர் மாத இதழில் [Royal Astronomical Society Journal ] வெளியாகியுள்ளது.

நமது  சூரியன் தனது அச்சிலிருந்து 6  டிகிரி சற்று சாய்ந்த நிலையிலேயே சுற்றி வரு கிறது. இதன் காரணம் என்னவென்று இது நாள் வரை வானியல் ஆய்வாளர்களால் விளக்கப்படாமல் இருந்தது.இது பற்றிய ஆய்வு முடிவுகள் இந்த வாரம் ( 20, அக்டோபர் .2016.) வெளியிடப்பட்டது.அதாவது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கோள் ஒன்பதானது தனது அதிக நிறையின் காரணமாக சூரியனையும் அதன் ஒட்டு மொத்த கோள்களையும் சாய்த்து இழுப்பதாக கம்ப்யூட்டர் கணக்கீடின் மூலம் கண்டறிந்தனர்.

http://www.space.com/34448-planet-nine-solar-system-tilt.html
இந்த பிரபஞ்சத்தை படைத்த அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே சூரியனைக் சுற்றிவரும் கோள்களின் எண்ணிக்கை சரியாகத் தெரியும்.அல் குர்ஆனின் விளக்கப்படி உலகம் படைத்த நாளிலிருந்து மாதங்கள் 12 இருப்பது போலவே 12 கோள்கள் இருப்பதை அறிவியல் உலகம வருங்காலங்களில் நிரூபிக்கும் இன்ஷாஅல்லாஹ்!.

நிச்சயமாக அவர்களின் வரலாறுகளில் அறிவுடையோருக்கு நல்ல படிப்பினை இருக்கிறது.;இது இட்டுக்கட்டப்பட்ட செய்தியாக இருக்கவில்லை, மாறாக இதற்கு முன் உள்ள(வேதத்)தையும் இது உண்மையாக்கி வைக்கிறது.ஒவ்வொரு விசயத்தையும் இது விவரித்துக் காட்டுவதாகவும், நம்பிக்கை கொண்ட சமூகத்தவருக்கு நேர்வழியாகவும் ரஹ்மாத்தாகவும் இருக்கிறது.    அல்குர் ஆன். 12:111.

 

{ 1 comment… read it below or add one }

A.Abdulrajak April 5, 2017 at 8:15 am

1 Mercury ☿ , 2 Venus ♀ , 3 Earth ⊕ , 4 Mars ♂ , 5 Vesta ⚶ , 6 Juno ⚵ , 7 Ceres ⚳ , 8 Pallas ⚴, 9 Jupiter ♃ , 10 Saturn ♄ , 11Uranus ♅, 12 pluto ♇ ////// ஏற்கனவே 11 கோள்களும் , பூமியும் சேர்த்து 12 ஆகா இருந்தது . இடையில் தான் மாற்றி விட்டனர் /////. 7:40.– எவர்கள் நம் வசனங்களை பொய்ப்பித்து இன்னும் பெருமையடித்தார்களோ நிச்சயமாக அவர்களுக்கு வானத்தின் வாயில்கள் திறக்கப்பட மாட்டா – மேலும் ஊசியின் காதில் ஒட்டகம் நுழையும் வரையில் அவர்கள் சுவனபதியில் நுழைய மாட்டார்கள் – இவ்வாறே குற்றம் செய்பவர்களுக்கு கூலி கொடுப்போம்

Reply

Leave a Comment

Previous post:

Next post: