சூனியம் பற்றி இறைமறையும் நபி மொழியும்

Post image for சூனியம் பற்றி இறைமறையும் நபி மொழியும்

in அல்குர்ஆன்,நபிமொழி

சூனியம் செய்யக் கூடாது. அது சிர்க் என்ற அடிப்படை நம்பிக்கையில் முஸ்லிம் சகோதரர்களுக்கு மத்தியில் கருத்து வேறுபாடு இல்லாத பொழுதும் அதன் உப பகுதிகளில் சில கருத்து முரண்பாடுகள் காணப்படுகின்றன. அவைகளை ஒரே பார்வையில் தீர்த்துக் கொள்ள இந்த வஹியின் தொகுப்பு பயனளிக்கலாம் இன்சா அல்லாஹ்

1-உலகில் சூனியம் என்ற ஒன்று இருக்கிறதா?

وَلَوْ نَزَّلْنَا عَلَيْكَ كِتَابًا فِي قِرْطَاسٍ فَلَمَسُوهُ بِأَيْدِيهِمْ لَقَالَ الَّذِينَ كَفَرُوا إِنْ هَذَا إِلَّا سِحْرٌ مُبِينٌ (7) الأنعام : 7

காகிதத்தில் (எழுதப்பட்ட) ஒரு வேதத்தையே நாம் உம் மீது இறக்கி வைத்து அதனை அவர்கள் தம் கைகளால் தொட்டுப் பார்த்தபோதிலும் ”இது பகிரங்கமான சூனியத்தைத்தவிர வேறில்லை” என்று அந்நிராகரிப்போர் நிச்சயமாக சொல்வார்கள். 6:7

2-சூனியக்காரர்கள் இருந்தார்களா?

يَأْتُوكَ بِكُلِّ سَاحِرٍ عَلِيمٍ (112) وَجَاءَ السَّحَرَةُ فِرْعَوْنَ قَالُوا إِنَّ لَنَا لَأَجْرًا إِنْ كُنَّا نَحْنُ الْغَالِبِينَ (113)الأعراف : 112 ، 113

”அவர்கள் சென்று சூனியத்தில் வல்லவர்களையெல்லாம் உம்மிடம் கொண்டு வருவார்கள்”” என்று கூறினார்கள். 7:112

3-சூனியம் கற்பிக்கப்பட்டதா?

وَلَكِنَّ الشَّيَاطِينَ كَفَرُوا يُعَلِّمُونَ النَّاسَ السِّحْرَ البقرة : 102

ஷைத்தான்கள் தாம் நிராகரிப்பவர்கள்; அவர்கள்தாம் மனிதர்களுக்குச் சூனியத்தைக் கற்றுக்கொடுத்தார்க 2:102

4-சூனியத்தை கற்பவர்கள் இருந்தார்களா?

وَيَتَعَلَّمُونَ مَا يَضُرُّهُمْ وَلَا يَنْفَعُهُمْ    البقرة : 102

தங்களுக்குத் தீங்கிழைப்பதையும் எந்த வித நன்மையும் தராததையுமே – கற்றுக் கொண்டார்கள். 2:102

5-சூனியத்தைக் கற்பித்தவர்கள் யார்?

وَاتَّبَعُوا مَا تَتْلُو الشَّيَاطِينُ عَلَى مُلْكِ سُلَيْمَانَ وَمَا كَفَرَ سُلَيْمَانُ وَلَكِنَّ الشَّيَاطِينَ كَفَرُوا يُعَلِّمُونَ النَّاسَ السِّحْرَ البقرة : 102

அவர்கள் ஸ{லைமானின் ஆட்சிக்கு எதிராக ஷைத்தான்கள் ஓதியவற்றையே பின்பற்றினார்கள்; ஆனால் ஸ{லைமான் ஒருபோதும் நிராகரித்தவர் அல்லர்;ஷைத்தான்கள் தாம் நிராகரிப்பவர்கள்; அவர்கள்தாம் மனிதர்களுக்குச் சூனியத்தைக் கற்றுக்கொடுத்தார்கள் 2:102

6-எந்தவிதமான சூனியத்தைக் கற்றார்கள்?

فَيَتَعَلَّمُونَ مِنْهُمَا مَا يُفَرِّقُونَ بِهِ بَيْنَ الْمَرْءِ وَزَوْجِهِ  البقرة : 102

கணவன் – மனைவியிடையே பிரிவை உண்டாக்கும் செயலை அவர்களிடமிருந்து கற்றுக்கொண்டார்கள். 2:102

7-அதனால் பாதிப்பை ஏற்படுத்தலாமா?

وَمَا هُمْ بِضَارِّينَ بِهِ مِنْ أَحَدٍ إِلَّا بِإِذْنِ اللَّهِ البقرة : 102

அல்லாஹ்வின் அனுமதியின்றி அவர்கள் எவருக்கும் எத்தகைய தீங்கும் இதன் மூலம் இழைக்க முடியாது 2:102

8-மூஸா நபியவர்களுக் கெதிரான முயற்சியில் சூனியக்காரர்கள் தடிகளையும் கயிறுகளையும் போட்டதன் நோக்கம் என்ன?

قَالَ بَلْ أَلْقُوا فَإِذَا حِبَالُهُمْ وَعِصِيُّهُمْ يُخَيَّلُ إِلَيْهِ مِنْ سِحْرِهِمْ أَنَّهَا تَسْعَى (66) طه : 66

அதற்கவர்: ”அவ்வாறன்று! நீங்களே (முதலில்) எறியுங்கள்”” என்று (மூஸா) கூறினார். (அவர்கள் எறியவே) அவர்களுடைய கயிறுகளும் அவர்களுடைய  தடிகளும் அவர்கள் சூனியத்தால் (பாம்புகளாக) நிச்சயமாக நெளிந்தோடுவது போல் அவருக்குத் தோன்றியது. 20:66

9-நோக்கம் நிறைவேறியதா?  ஆம்

وَاسْتَرْهَبُوهُمْ …………. (116) الأعراف : 116

“அவர்களை அச்சத்துக்குள்ளாக்கினார்கள் …..” 7:116

10-மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களும் அவர்களது சூனியத்தால் பாதிக்கப்பட்டார்களா?

فَأَوْجَسَ فِي نَفْسِهِ خِيفَةً مُوسَى (67) طه : 67

அப்போது மூஸா தம் மனதில் அச்சம் கொண்டார். 20:67

11-மூஸா நபியவர்களுக் கெதிரான முயற்சியில் சூனியக்காரர்கள் செய்த சூனியம் சாதாரணமானதா?

وَجَاءُوا بِسِحْرٍ عَظِيمٍ (116)الأعراف : 116

அவர்கள் திடுக்கிடும்படியான மகத்தான சூனியத்தை செய்தனர்.7:116

12-கண்களுக்கு சூனியம் வைக்கலாமா?

قَالَ أَلْقُوا فَلَمَّا أَلْقَوْا سَحَرُوا أَعْيُنَ النَّاسِ وَاسْتَرْهَبُوهُمْ وَجَاءُوا بِسِحْرٍ عَظِيمٍ (116) الأعراف : 116

அதற்கு (மூஸா) ”நீங்கள் (முதலில்) எறியுங்கள்”” என்று கூறினார். அவ்வாறே அவர்கள் (தம் கைத்தடிகளை) எறிந்தார்கள்; மக்களின் கண்களை சூனிய வயப்படுத்தினர் அவர்களை அச்சமுறுத்தினர் அவர்கள் திடுக்கிடும்படியான மகத்தான சூனியத்தை செய்தனர். 7:116

13-வஹியிற்கு முன்னால் சூனியம் வெற்றி பெற முடிந்ததா?

وَأَوْحَيْنَا إِلَى مُوسَى أَنْ أَلْقِ عَصَاكَ فَإِذَا هِيَ تَلْقَفُ مَا يَأْفِكُونَ (117) فَوَقَعَ الْحَقُّ وَبَطَلَ مَا كَانُوا يَعْمَلُونَ (118) فَغُلِبُوا هُنَالِكَ وَانْقَلَبُوا صَاغِرِينَ (119) وَأُلْقِيَ السَّحَرَةُ سَاجِدِينَ (120)  الأعراف : 117 – 120

அப்பொழுது நாம் ”மூஸாவே! (இப்பொழுது) நீர் உம் கைத்தடியை எறியும்”” என அவருக்கு வஹீ அறிவித்தோம்; அவ்வாறு அவர் எறியவே (அது பெரிய பாம்பாகி) அவர்கள் (சூனியத்தால்) கபொய்யாகச் செய்த  யாவற்றையும் விழுங்கி விட்டது. இவ்வாறு உண்மை உறுதியாயிற்றுஅவர்கள் செய்த (சூனியங்கள்) யாவும் வீணாகி விட்டன. அங்கேயே தோற்கடிக்கப்பட்டார்கள்; அதனால் அவர்கள் சிறுமைப்பட்டார்கள். 7:117..120

قَالَ مُوسَى أَتَقُولُونَ لِلْحَقِّ لَمَّا جَاءَكُمْ أَسِحْرٌ هَذَا وَلَا يُفْلِحُ السَّاحِرُونَ (77) يونس : 77

அதற்கு மூஸா:  ”உங்களிடம் சத்தியமே வந்த போது அதைப்பற்றியோ நீங்கள் இவ்வாறு கூறுகிறீர்கள்? இதுவா சூனியம்? சூனியக்காரர்கள் வெற்றி பெற மாட்டார்கள்“” என்று கூறினார். 10:77

وَأَلْقِ مَا فِي يَمِينِكَ تَلْقَفْ مَا صَنَعُوا إِنَّمَا صَنَعُوا كَيْدُ سَاحِرٍ وَلَا يُفْلِحُ السَّاحِرُ حَيْثُ أَتَى (69) طه : 69

ஆகவே சூனியக்காரன் எவ்வாறு வந்தாலும் வெற்றி பெற மாட்டான் 20:69

14-சூனியத்தால் ஒரு பொருளை இன்னொரு பொருளாக மாற்ற முடியுமா?     முடியாது.இன்னொன்று போன்ற தோற்றத்தை ஏற்படுத்தலாம் அதுவே மிகப் பெரிய சூனியமாகும்.

وَأَوْحَيْنَا إِلَى مُوسَى أَنْ أَلْقِ عَصَاكَ فَإِذَا هِيَ تَلْقَفُ مَا يَأْفِكُونَ (117) الأعراف :  ، 117

அப்பொழுது நாம் ”மூஸாவே! (இப்பொழுது) நீர் உம் கைத்தடியை எறியும்”” என அவருக்கு வஹீ அறிவித்தோம்; அவ்வாறு அவர் எறியவே (அது பெரிய பாம்பாகி) அவர்கள் (சூனியத்தால்) பொய்யாகச் செய்த  யாவற்றையும் விழுங்கி விட்டது. இவ்வாறு உண்மை உறுதியாயிற்று அவர்கள் செய்த (சூனியங்கள்) யாவும் வீணாகி விட்டன. 7:117

15-சூனியம் பாதிக்காமல் இருக்க நபிகளார் காட்டிய வழியென்ன?

صحيح البخاري ـ 5445 – عن عَامِرُ بْنُ سَعْدٍ عَنْ أَبِيهِ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ تَصَبَّحَ كُلَّ يَوْمٍ سَبْعَ تَمَرَاتٍ عَجْوَةً لَمْ يَضُرَّهُ فِي ذَلِكَ الْيَوْمِ سُمٌّ وَلَا سِحْرٌ

“ஒவ்வொரு நாள் காலையிலும் 7 அஜ்வா ஈத்தம் பழம் சாப்பிடுபவரை அன்றைய தினம் விசமோ சூனியமோ பாதிக்காது.” என்று நபியவர்கள் கூறினார்கள்.”

அறிவிப்பவர்: ஸஃத்

ஆதாரம்: புகாரி 5445

 

16-சூனியம் வைக்கப்பட்டிருந்தது தெரிந்தால் அந்தப்பாதிப்பை நீக்க சூனியத்தை எடுக்க வேண்டுமா?

قُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَفَلَا اسْتَخْرَجْتَهُ قَالَ قَدْ عَافَانِي اللَّهُ فَكَرِهْتُ أَنْ أُثَوِّرَ عَلَى النَّاسِ فِيهِ شَرًّا فَأَمَرَ بِهَا فَدُفِنَتْ    صحيح البخاري ـ 5763

“அல்லாஹ்வின் தூதரே (தங்களுக்கு வைக்கப்பட்ட சூனியப் பொருளை  நீங்கள் வெளியே எடுக்கவில்லையா?” என்று நான் நபியவர்களிடம் கேட்டதற்கு “அல்லாஹ் எனக்கு குணமளித்து விட்டான் அதை வெளியே எடுப்பதன் மூலம் ஒரு தீமை மக்கள் மத்தியில் பரவுவதை நான் வெறுக்கிறேன் என பதில் சொன்னார்கள். பின்னர் சூனியம் வைக்கப்பட்ட பொருளை புதைக்குமாறு ஏவி அவ்வாறே புதைக்கப்பட்டது.

அறிவிப்பவர்:ஆயிசா

ஆதாரம்: புகாரி 5673

17-சூனியம் செய்வது பற்றி படிப்பது சூனியம்; செய்வது போன்றவைகளைப் பற்றி மார்க்கத்தின் நிலை என்ன?

صحيح البخاري ـ 5764 –  عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ اجْتَنِبُوا الْمُوبِقَاتِ الشِّرْكُ بِاللَّهِ وَالسِّحْرُ

“அழித்து விடக் கூடிய பெரும்பாவங்களான சிர்க்கையும் சூனியத்தையும் தவிர்ந்துகொள்ளுங்கள்” என்று நபியவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹ{ரைரா

ஆதாரம்: புகாரி 5764

 

http://mujahidsrilanki.com/

{ 3 comments… read them below or add one }

P.M.S.அஜீஜுல்லாஹ் - ஜிதாஹ். January 10, 2016 at 3:22 pm

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹ்,
MR.MUJAHID,

முதலில் நாம் அனைவரும் குரானின் சொற்களை எந்தவித சந்தேகமில்லாமல் ஏற்கின்றோம் முஹம்மது ரசுளுல்லாவின் ஹதீஸ்களை நம்பியும் உள்ளோம் .

பணிவுடன் நான் உங்களுக்கு சொல்லவது என்னவென்றால், “சூனியம் செய்யாக்கூடாது” என்று நீங்கள் ஏன் ஆரம்பித்துள்ளீர்கள் அதுதான் எனக்கு மிகப்பெரிய தவறாக படுகின்றது .

தற்போது யார் இருகின்றார்கள் சூனியம் செய்வதற்கு ? தற்போது யாரால் அதை நிரூபிக்க முடியும் ? ஒரு சின்ன விஷயம் : செய்வினை செய்பவர் முஸ்லீம் அல்லாதவராக இருந்தால், அவர் ஏலக்க்ஷனில் அ. தி. மு. கா வை தி. மு. கா. வெற்றி பெறச்செய்ய முடியாதா ? பாங்கில் பணம் திருட முடியாதா ? அவர் முஸ்லீமாக இருந்தால் எல்லாரையும் முஸ்லீமாக்க முடியாதா ? எதையும் யாராலும் செய்ய முடியாது என்பது உங்களுக்கும் எல்லோருக்கும் தெரியும், இருந்தாலும் எல்லாரும் சந்தேகத்திலே ஜின்னை மனிஷனாகவும், மனிஷனை பேயாகவவும் நினைத்து அடிவைறு குலுங்கி குலுங்கி வாழ்பவர்களே ஏராளம் இந்த விஷயத்தில்தான்.

இதை சந்தர்ப்பகமாக பயன்படுத்தி வியாபாரம் தான் நடந்து கொண்டுள்ளது இதை நீங்களே மறுக்கலாமா ?

நீங்கள் சொல்லும் அனைத்தும் குர்ஆனில் நடந்த நிகழ்வுகள் நபி மூஸாவுக்கும் அவர்களுக்கு நடந்த சம்பவம் எல்லாம் அந்த நிகழ்வுகளை அல்லாஹ் நமக்கு தெரியப்படுதிகின்றான், அனால் முஹம்மது ரசுளுல்லாவின் உடல் நிலை இதுனாலதான் ஏற்பட்டது என்பது தனி விஷயம் ஏனெனில் இது விஷயமாக மிகப்பெரும் மாற்று கருத்து உள்ளது ஆதனிலால் இதை தவிர்த்து விட்டு கூறவும்.

ஒட்டு மொத்த குரான் ஆயத்துக்களை சொல்லிவுட்டு முக்கியமான ஒரு ஆயத்தை விட்டுவிட்டு நீங்க சொன்ன ஆயத்துகளை ( அதாவது நீங்கள் குறப்பிட்ட ஆயதுக்களை ) நம்ப சொல்லறீங்க ! ! !
அணைத்து சக்திகளையும் (ஜின்வசபடுத்ததுவதை) எனக்கு தந்துவிடுடா அல்லாஹ் என்று சுலைமான் நபி சொன்ன ஆயத்தை நீங்கள் சொல்லவே இல்லை ஏன் ? ? ?

அடுத்து , “அழித்து விடக் கூடிய பெரும்பாவங்களான சிர்க்கையும் சூனியத்தையும் தவிர்ந்துகொள்ளுங்கள்” என்று நபியவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹ{ரைரா
மிக அழகான தெளிவான ஹதீஸ்தான் , இது முஹம்மது ரசூலுல்லாஹ் அன்று வாழ்ந்த ஜாஹிலியா மக்களுக்கு சொன்ன ஹதீஸ் , அனால் இப்போ நாம் இந்த ஹதீஸை எப்படி எடுக்கணும் என்றால் சூனியம் இருந்தது அதை நாம் நம்பனும் என்று சொல்லாமல், எப்படி நம்பனும் என்றால் அன்று வாழ்ந்த மக்கள் எப்படி அறிவில்லாமல் அரை குறையாக சூனியத்தை நம்பி வாழ்ந்தார்களோ அது மாதரி நீங்களும் வாழாதீர்கள் என்று சொல்லுவது மிக நல்லதாக தெரிகின்றது, இது சரிதானே ?
அதாவது சுருக்கமாக சொல்லப்போனால் அன்று வாழ்ந்த ஜாஹிலியா மக்களின் அறிவிலே உள்ள அதே சிந்தனைதான் இப்போதும் இந்த காலத்திலும் உள்ளசில மக்களுக்கு சூனிய விஷயமாக சிந்தனைகள் உள்ளது எனலாம். காரணம் இஸ்லாத்தின் கல்வி இல்லாததாலும் உலக கல்வி இல்லாததாலுமே.

கடைசியாக ஒன்றை மட்டும் சொல்லி முடிக்க உள்ளேன் என்ன்வென்றால் குர்ஆனில் நடந்த நிகழ்வுகளை சொல்லி இதெல்லாம் உண்மை நம்புங்கள் என்று சொல்லுங்கள், நாங்கள் நன்ம்புகின்றோம்.

அனால் ஏன் சூனியம் தற்போது இருப்பது மாதரியும் அதெல்லாம் சிலர் செய்திடுவார்கள் அல்லது செய்ய சிலர் தகுதிபற்ற்வர்கள் மாதரி சொல்லி குரான் ஆயத்துக்களை மற்றும் ஹதீஸ்களை “ தவறாக ஏன் எங்களை நண்ப சொல்றீங்க ? ? “

ஆக மொத்தத்தில், மக்களை நாம் எப்படி சொன்னால் வீணான சடங்குகள் சம்புருதாயங்கள் & மூடனம்பிக்கைளிருந்து மீட்க முடியுமோ அது சம்பத்தப்பட்ட மாதரி விஷயங்களை பேசி சரி செய்ய பாக்கணும் என்பது எனது தாழ்மையான கருத்து.

குறிப்பு :-
( பேசப்பட்டது எல்லாம் (தற்காலத்தில்) ஜின்னை வைத்து மக்களை குணப்படுத்வதும், பிற உதவி செய்வதுமே என்ற கருத்து சம்பந்தமாகத்தான்.
வித்தைகள் செய்து மக்களை ஏமாற்றி கூட ஜின்னின் உதவியால் தான் செய்தோம் என்று சொல்லும் மக்கள் சம்பதமாகதான் )

அஜீஜுல்லாஹ் – ஜித்தாஹ்.

Reply

Shafeeq June 15, 2016 at 6:53 pm

சூனியத்தாலே எல்லாம் பண்ண முடியாதா என்பது சகோதரரோட கேள்வி. அதுக்கு உதராணமா, சூநியத்தாலே எல்லாரையும் முஸ்லிம்களாக்க முடியாத என பல உதாரணம் சொன்னிங்கே! மாஷா அல்லாஹ் நல்ல கேள்வி!

ஏரோப்லேனும் பறக்குது, ராக்கெட்டும் பறக்குது ஆனா ஏன் ஏரோப்லேன் விண்வெளி ஆராய்ச்சிக்கு அனுப்ப மாட்டேன்கிராங்கே? பாருங்கே ஒரு சாதனம் பறக்க கூடியது தான் பயன்படும் தேவையும் முறையும் மாறுகிறது.

சுலைமான் (அலை) இறந்து ,கரையான் அவங்களோட கைதடிய அறிச்சு நபி கீழே விழுந்த பிறகு தான் ஜின்களுக்கு தெரியும் நபி இறந்துடாங்கே அப்டீன்னு! ஜின்கள் எவ்வளோ சக்தி வாய்ந்தா இருந்தாலும், ஜின்கலாலே அறிய முடியலே இறந்ததை. ஜின்களோட சக்தி அவளோ தான்.

அதேபோல பல்கிஸ் ராணி சிம்மாசனம் விஷயம் இப்ரித் ஜின் சொன்ன வார்த்தை, வேத ஞான உள்ள ஒரு மனிதர் சொன்ன வார்த்தை. சிம்மா சனத்தை எடுத்துவருவதில்.ஆக இதிலிருந்து விளங்க முடியுது ஒவ்வொன்றிருக்கும் அல்லாஹ் சக்தியை நிர்ணயம் செய்து வச்சிருக்கான்.

அல்லாஹ்வுடைய நபி சுலைமான்(அலை) மற்றும் உலகத்தை ஆண்ட நபி செய்திருக்கலாமே, சிம்மாசனத்தை எடுத்து வருவதை ஏன் அரசவைலே கேட்கிறார்கள். ஒரு வேத ஞான உள்ள மனிதர் சொல்றார் கண்சிம்மிட்டு வதருக்குள் எடுத்துட்டு வரேன், அல்லாஹ்வுடைய நபி செய்திருக்கலாமே. இங்கே நமக்கு சந்தேகம் வரக்கூடாது (அவூதுபில்லாஹ்).

சூனியம் என்பது ஒரு கலை அது இருக்கு, காலப்போக்கில் மறைந்த கலைகளில் அதுவும் ஒன்று. இன்றைக்கு அதை யாரும் கத்துக்கிரதில்லே, அது பயன் பாட்டிலும் இல்லே. அது இன்றைக்கு பயன்பாட்டில் இருந்தாலும் அதற்க்கு எவளோ சக்தி நிர்ணயம் செய்து இருக்கோ அவளோ தான் அதை வைத்து செய்ய முடியும். எல்லாம் செய்ய முடியாது.

ஆக அல்லாஹ் குர்ஆனில் சொன்ன சூனியம் இல்லவே இல்லை என்ற முடிவுக்கு வர முடியாது.

இங்கே கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் சூனியத்தில் கைதேர்ந்த மக்கள் பிரௌன் காலத்தில் வாழ்ந்த மக்கள். பிரௌன் செய்ய சொன்னது சூனியம், மூசா (அலை) அவர்கள் செய்தது அல்லாஹ்வின் கட்டளை.
ஜின்களிலும் முஸ்லிம் காபிர் இருக்கிறார்கள். நன் மக்கள் நன்மைக்கு உதவுவார்கள், தீயவர்கள் தீமைக்கு உதவுவார்கள்.

முஸ்லிம்கள் ஏகத்துவத்திற்கு உதவுவார்கள், காபிர்கள் ஷிர்க் குப்ர் போன்ற தீயவற்றிற்கு உதவுவார்கள். இது மிகவும் தெளிவான விஷயம்.இது மூசா (அலை) காலத்தில் மட்டுமல்ல இன்றைக்கு நடந்து கொண்டுஇருக்கும் உலகத்தின் உண்மை!!

அல்லாஹ் விளங்கி அமல் புரிய தௌபீக் செய்வானாகே! ஆமீன்!!!

Reply

Shariff Ahamed. March 31, 2019 at 7:03 am

Please, obey the Allah rule and Rasool rule. That’s all. No cross questions please.

Reply

Leave a Comment

Previous post:

Next post: