– எஸ்.ஹலரத் அலி, திருச்சி-7
அல்லாஹ் படைத்த படைப்பினங்களில் மனிதன் ஒரு சிறந்த படைப்பாக கண்ணியப்படுத்தப்பட்டவனாக இருக்கின்றான். மனிதனுக்கு முன்னால் படைக்கப்பட்ட மலக்குகள், ஜின்களை, ஆதிமனிதர் ஆதம் (அலை) அவர்களுக்கு சிரம் பணிய அல்லாஹ் கட்டளையிட்டதன் ( அல் குர்ஆன்.7:11) மூலம் மனிதனின் சிறப்பை புரிந்து கொள்ளலாம்.
“ஆதமுடைய சந்ததியை நிச்சயமாக நாம் கண்ணியப்படுத்தினோம்; இன்னும், கடலிலும், கரையிலும் அவர்களைச் சுமந்து, அவர்களுக்காக நல்ல உணவு(ம் மற்றும்) பொருட்களையும் அளித்து, நாம் படைத்துள்ள (படைப்புகள்) பலவற்றையும் விட அவர்களை தகுதியால் மேன்மைப்படுத்தினோம். அல் குர்ஆன்.17:70.
கண்ணியப்படுத்தப்பட்டு, சிறப்பிக்கப்பட்ட மனிதன், அல்லாஹ்வுக்கு மாறு செய்தும், வரம்புகளை மீறியும், அக்கிரமம் செய்யும் போது, அம்மனிதர்களை அல்லாஹ் கீழான மிருகமாக உருமாற்றிய சம்பவங்களை அல்லாஹ்வின் நெறி நூலில் பார்க்க முடிகிறது. அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறு செய்வதையே வழக்கமாக கொண்ட யூதர்களே இந்த கேவலமான இழி நிலைக்கு ஆளானவர்கள்.
மேலும் சனிக்கிழமைகளில் (மீன் பிடிக்க கூடாதென்றிருந்த கட்டளையை) உங்களில் எவர்கள் மீறிவிட்டார்கள் என்பதையும், அதற்காக நாம் அவர்களை நோக்கி “ நீங்கள் சிறுமைப்பட்ட குரங்குகளாகி விடுக!” எனக் கூறினோம்…. அல் குர்ஆன் 2:65
அல்லாஹ் எவர்களை சபித்து,இன்னும் அவர்கள் மீது கோபமும்கொண்டு, அவர்களில் சிலரைக் குரங்குகளாகவும், பன்றிகளாவும், ஆக்கினானோ அவர்களும், ஷைத்தானை வழிப்பட்டவர்களும்தான் – அவர்கள்தாம் மிகவும் தாழ்ந்த நிலையினர்; நேரான வழியிலிருந்தும் தவறியவர்கள்.” அல்குர்ஆன். 5:60.
என் சமுதாயத்தாரில் சில கூட்டத்தார் தோன்றுவார்கள். அவர்கள் விபச்சாரம், பட்டு, மது இசைக்கருவிகள் ஆகியவற்றை ஆகுமானதாகக் கருதுவார்கள் இன்னும் சில கூட்டத்தார் மலை உச்சியில் தங்குவார்கள். அவர்களின் ஆடுகளை இடையன் காலையில் மேய்த்து விட்டு மாலையில் அவர்களிடம் ஓட்டிச் செல்வான். அவர்களிடம் தம் தேவைக்காக ஏழை உதவிக்காகச் செல்வான். அப்போது அவர்கள், நாளை எங்களிடம் வா என்று சொல்லுவார்கள். ஆனால் அல்லாஹ் இரவோடு இரவாக அவர்கள் மீது மலையை கவிழ்த்து அவர்களில் அதிகமானவர்களை அழித்து விடுவான். எஞ்சிய மற்றவர்களை குரங்குகளாகவும்,பன்றிகளாகவும் மறுமை நாள் வரை உருமாற்றி விடுவான். புஹாரி- 5590
பனு இஸ்ராயீல்களில் ஒரு குழுவினர் காணாமல் போய்விட்டனர். அவர்கள் என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லை. நான் அவர்களை எலிகளாக (உருமாற்றப்பட்டுவிட்டதாக)வே கருதுகிறேன். அவற்றிக்கு (முன்னால்) ஒட்டகத்தின் பால் வைக்கப்பட்டால் அவை (அதைக்) குடிப்பதில்லை. அவற்றிற்கு முன்பாக ஆடுகளின் பால் வைக்கப்பட்டால் அவை (அதைக்) குடித்துவிடும்” என்று நபி (ஸல்)அவர்கள் சொன்னார்கள். ( ஹதீஸ் சுருக்கம்) அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல் : புஹாரி.3305, முஸ்லிம்: 5723
ஹதீஸ் விரிவுரையாளர் இமாம் நவவீ (ரஹ்) அவர்கள் கூறுவது, பனு இஸ்ராயீல்களுக்கு, ஒட்டகப்பால் மற்றும் இறைச்சியை அல்லாஹ் ஹராமாக்கி இருந்தான். ஆட்டுப்பால், மற்றும் இறைச்சியை ஹலாலாக்கியிருந்தான். ஆகவே உருமாறிய எலிகள் ஒட்டகப் பாலை குடிப்பதில்லை. ஆட்டுப்பாலை வைத்தால் குடிக்கின்றன.
அல்லாஹ்வின் வரம்புகளை மீறிய பனு இஸ்ராயீல் யூதர்களை குரங்கு, பன்றி, எலி யாக உருமாற்றிய செய்திகளை நாம் குர்ஆன் மற்றும் ஹதீஸ்களிலிருந்து அறிய முடிகிறது. அல்லாஹ்வின் படைப்பில் எத்தனையோ மிருக ஜீவராசிகள் இருக்கும்போது, குறிப்பாக,குரங்கு,பன்றி, எலிகளை அல்லாஹ் ஏன் தேர்வு செய்ய வேண்டும்? என்ற கேள்வி நமக்குள் ஆய்வு ரீதியாக வரலாம்.
அல்லாஹ்வின் செய்கைகள் குறித்து எவரும் அவனிடம் கேள்வி கேட்க முடியாது. அல்லாஹ் நாடினால் மனிதர்களை ஆனையாகவும் உருமாற்றலாம், அல்லது பூனையாகவும் உருமாற்றலாம். மனிதர்களை எந்த மாதிரியும் உருமாற்ற சக்தியுள்ளவன் என்பதை, அவனே அல் குர்ஆன் 36:67 வசனத்தில் கூறுகிறான். அவன் ஆகுக! என்றால் ஆகிவிடும். அவனது ஆற்றல், வல்லமை நம் சிற்றறிவுக்கு அப்பாற்பட்டது. ஆயினும் மனிதனை தொடர்பு படுத்தி குரங்கு, பன்றி, எலி என்னும் தொடர்ச்சிக்கு உரிய காரணத்தை அல்லாஹ் வைத்தே இருக்கிறான்.
பொதுவாக உலகிலுள்ள எல்லா ஜீவராசிகளும் வெவ்வேறு இனங்களாக இருந்தாலும் அவை அனைத்தும் உயிரினங்கள் என்னும் பொது தொகுதியில் வந்து விடுகின்றன.
மனிதர்களைப் போன்று ஒவ்வொரு உயிர்களும் ஒரு இனமாகவே (Species) தனித்தன்மையுடன் இருக்கின்றன. இதைத்தான் அல்லாஹ் சொல்கிறான்,
பூமியில் ஊர்ந்து திரியும் பிராணிகளும், தம் இரு இறக்கைகளால் பறக்கும் பறவைகளும் உங்களைப் போன்ற இனமேயன்றி வேறில்லை; … அல்குர்ஆன்.6:38
அறிவியல் ரீதியாக, எல்லா உயிரினங்களின் செல்லின் (DNA-Cell) அடிப்படை அணுக்களை ஜீன்கள், என்னும் டிஎன்ஏக்களால் ( GENES – DNA-Deoxy ribo Nucleic Acid) அல்லாஹ் கட்டமைத்துள்ளான். அனைத்து உயிரினங்களின் ஜீன்களின் அமைப்பு சுமார் ஒன்று போலவே உள்ளன. நமது உடலானது மூன்று பில்லியன் ஜோடி ஜெனிடிக் அணுக்கள் என்னும் செங்கல்லால் கட்டப்பட்டுள்ளது.
உலகிலுள்ள ஒட்டுமொத்த மனிதர்களின் ஜீன்களும் 99.9% ஒரே அமைப்பிலேயே உள்ளன. மனிதர்களின் தோற்றம், நிறம், முடி,கருவிழியின் நிறம் போன்றவற்றை 0.01% ஜீன்களே தீர்மானிக்கிறது. இதற்குக் காரணம் நாம் அனைவரும் ஆதம்-ஹவ்வா (அலை) என்னும் ஒரூ தாய் தந்தையின் மூலமாக பிறந்து பல்கிப் பெருகியதே! அல்லாஹ் கூறுகிறான்,
மனிதர்களே! உங்கள் அனைவரையும் நிச்சயமாக நாம் ஒரே ஆண், ஒரே பெண்ணிலிருந்துதான் படைத்தோம். அல்குர்ஆன். 49:13.
நமது உடலிலுள்ள ஒட்டுமொத்த ஜீன்களின் தொகுதியை ஒரு புத்தகமாக தயார் செய்தால், அப்புத்தகமானது சுமார் 262,000 பக்கங்களை கொண்டதாக அமையுமாம். நமது உடலிலுள்ள ஒவ்வொரு செல்லிலும் உள்ள டிஎன்ஏ வானது, அதன் பண்புகளை அடுத்தடுத்த தலைமுறைக்கு கடத்தும் தன்மை கொண்டது. இந்த பண்பானது நான்கு எழுத்து வேதியல் கூறுகளாக ( A,G,C,T= Adenine-Guanine-Cytosine-Thymine) பதிவு செய்யப்பட்டுள்ளது.
மனிதனின் உடற்கூறு ஜீன்களுக்கு மிக நெருக்கமாக உள்ள உயிரினம் எது என்று ஆய்வு செய்தால், முதலில் வருவது சிம்பன்ஸி குரங்குகளே! மனித உடலில் உள்ள ஜீன்களில் சுமார். 98.6 % குரங்குகளிடமும் ஒன்று போலவே உள்ளது. இதற்கு அடுத்து வரும் உயிரினம் பன்றியாகும். மனித உடலில் உள்ள உறுப்புகளைப் போலவே பன்றியின் உடல் உறுப்புகளும் ஒத்துள்ளது. இதற்கு அடுத்து வரும் உயிரினம் எலியாகும்.மனித உடலில் உள்ள ஜீன்களில் சுமார் 92% எலியின் உடலிலும் உள்ளது.
இந்த அறிவியல் உண்மைகள் எல்லாம் சமீப காலத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் 1400 ஆண்டுகளுக்கு முன்பே, மனிதர்களுக்கு நெருக்கமான உடலமைப்பு கொண்டவைகள் குரங்கு,பன்றி, எலி என்று உருமாற்றுதல் நடவடிக்கை மூலம் அல்லாஹ் தெளிவுபடுத்தி விட்டான். அல்ஹம்துலில்லாஹ்!
மனிதர்களுக்கு ஏற்படும் நோய்களிலிருந்து அவர்களை தற்காத்துக் கொள்ள, இன்று ஏராளமான ஆய்வுகள் உலகெங்கும் நடைபெறுகின்றன. இந்த ஆய்வுகள் அனைத்தும் மனிதர்களுக்கு நெருக்கமாக உள்ள குரங்கு,பன்றி,எலிகளை சோதனை சாலையில் வைத்து ஆய்வு செய்தே மனிதர்களுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படுகிறது.
பன்றியின் இதயம்,ஈரல்,தோல், போன்றவற்றை மனிதர்களுக்கு பொறுத்த தீவிர ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. (Resent research in the last ten years has discovered that pigs could be, infact one of our closest ancestors and that we share a remarkably similar DNA.) குறிப்பாக பன்றியின் டிஎன்ஏ க்கள், மனித டிஎன்ஏ வுடன் மிக நெருக்கமாக உள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன.
குரங்கு,பன்றி,எலி இம்மூன்று விலங்கினத்தின் ஜீன்களும்,உறுப்புகளும், மனித உடலுக்கு நெருக்கமாக இருப்பதால், இன்றைய நவீன மருத்துவ ஆராய்ச்சிகளுக்கு இம்மூன்று விலங்கினமும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இன்றுள்ள பனீ இஸ்ராயீலிய யூதர்கள் அனைவரும் உருமாற்றப்பட்ட குரங்கு,பன்றி,பரம்பரையை சேர்ந்தவர்களா? என்ற கேள்வி எழும். நபி (ஸல்) அவர்கள் இதற்கு தெளிவான பதில் அளித்துள்ளதை ஹதீஸ்களில் காணலாம்.
“அல்லாஹ்வின் தூதரே! (தற்போதுள்ள) குரங்குகளும்,பன்றிகளும் உருமாற்றப்பட்ட (பனு இஸ்ராயீல் சமுதாயத்த)வர்களில் உள்ளவையோ?” என்று கேட்டனர்.அதற்கு நபி (ஸல்) அவர்கள், “ அல்லாஹ் உருமாற்றிய எந்த சமுதாயத்தாருக்கும் சந்ததிகளையோ வழித்தோன்றல்களையோ அவன் ஏற்படுத்தியதில்லை. குரங்குகளும்,பன்றிகளும் இதற்கு முன்பே இருந்தன.” என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) நூல்: முஸ்லிம்.5176,5177.!
ஒரு படைப்பிலிருந்து இன்னொரு படைப்பாக உருமாற்றப்பட்ட உயிரினங்களுக்கு சந்ததி பரம்பரை ஏற்படுவதில்லை. அவைகள் மலட்டுத்தன்மை ஆக்கப்பட்டு அந்நிலையில் மரணிப்பதால் அதிலிருந்து புதிய சந்ததி பிறப்பதில்லை. இன்றும் அறிவியல் ரீதியாக மரபணு மாற்றப்பட்ட விதைகளும் (Genetic modified seeds) மறு சாகுபடிக்கு பயன்படுவதில்லை.ஒரு முறை முளைப்பித்தவுடன் அவை மலடாக (Terminator seeds) மாறுவது குறிப்பிடத்தக்கது.
அல்லாஹ்வின் வரம்புகளை மீறிய மனிதர்கள் சபிக்கப்பட்டு, உருமாற்றம் செய்யப்பட்டதைப் போலவே மனிதர்களும் அறிவியல் ஆய்வு என்ற பெயரில் குரங்கு, பன்றியின் உறுப்புகளை மனிதனுக்குப் பொருத்தும் முயற்சியில் இறங்கிவிட்டனர். உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்ட மனிதன், பிறரிடமிருந்து உறுப்பு தானமாகப்பெறும் நடைமுறை இன்றுள்ளது. ஆனாலும் தேவைகள் அதிகமுள்ளது.
மாற்று உறுப்பு கிடைக்காதன் காரணமாக தினமும் 23 பேர் அமெரிக்காவில் இறப்பதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன. இதற்காகவே பன்றியின் உடலுறுப்பை பொறுத்த முயற்சி செய்கிறார்கள். இதுவரை பல நாடுகளில் 200 க்கும் அதிகமான பன்றியின் உடலுறுப்பு மாற்று ஆபரேஷன்கள் நடந்துள்ளன. பன்றியின் உடலுறுப்புகள் மனிதர்களின் உறுப்புகளுடன் ஒத்துப் போவதால் இத்தகைய ஆபரேஷன்கள் சாத்தியமாகிறது.. .
ஆயினும் பன்றியின் உடலுறுப்பு (இதயம்,சிறுநீரகம்,நுரையீரல்) பெற்ற மனிதர்கள்,சுமார் நாற்பது விதமான வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். இதனை சரி செய்ய, ஜப்பானிய மெய்ஜி மற்றும் கியோடோ பல்கலைகழக விஞ்ஞானிகள் புதிய வழி முறையை கண்டுபிடித்துள்ளனர். பன்றியில் இருக்கும் வைரஸ் கிருமி ஜீன்களை, கருவிலேயே வெட்டி எடுத்து விட்டு, வைரஸ் இல்லாத பன்றியை பிறக்க வைத்து….. அப்பன்றிகளின் உடலுறுப்பை மனிதர்களுக்குப் பொறுத்த ஆய்வு செய்து வருகின்றனர்.
அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைகழக ஆராய்ச்சியாளர்கள் குழுவானது,மனித செல் அணுக்களை பன்றியின் கருவில் வைத்து வளர்த்து, இதன் மூலம் உருவாகும் பன்றிகளின் உறுப்புகளை பொறுத்துவது குறித்து ஆராய்ந்து வருகிறது.
இஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட அசுத்தமான பன்றியின் பாகங்களை மனிதர்களுக்கு பொருத்துவதென்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றல்ல. ஒரு மனிதன் தன் உயிரைக் காக்க, தடை செய்யப்பட்ட ஹராமான உணவையும் உண்பதற்கு அனுமதியுள்ளது. இந்த அனுமதி, பன்றியின் உறுப்பை பொறுத்த அனுமதிக்குமா? என்பது கேள்விக்குறியே? ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்,
“பகடைக்காய் (நர்தஷீர்) ஆட்டம் விளையாடியவர், தமது கையை பன்றி இறைச்சியிலும், இரத்தத்திலும் தோய்த்தவரைப் போன்றவர் ஆவார்.”
அறிவிப்பாளர்: புரைதா (ரலி) நூல்: முஸ்லிம்.4549.
ஒரு முஸ்லிமுக்கு பன்றியின் இறைச்சிய ,இரத்தத்தை தொடுவதற்கே அனுமதியில்லை என்ற பிறகு, இந்த அசுத்த உறுப்பை தம் உடலில் பொருத்துவது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. ஆயினும், எதையும் உண்ணலாம், எப்படியும் வாழலாம் என்ற கொள்கையுடைய மக்களுக்கு எல்லாமே கூடும்.எதுவும் தடையில்லை என்பது உண்மையே!
(The anatomy of a pig and a human are very similar. Both are placental mammal, which means the fetus receives nourishment from the mother through the umbilical cord. Both species are also omnivores.)
பன்றியின் உடல் உள்ளுறுப்புகளும்,மனிதன் உடல் உள்ளுறுப்புகளும் ஏறக்குறைய ஒத்திருப்பதால் உடலுறுருப்பு மாற்று சிகிச்சைக்கு பன்றியின் பாகங்களை மருத்துவ உலகம் நம்பியுள்ளது. மேலும் பன்றியானது எண்ணிக்கையில் பல்கிப்பெருகியும் வீட்டு வளர்ப்பு பிராணியாக மலிவாக கிடைப்பதால் பன்றியே ஆய்வுக்கு சிறந்ததாக உள்ளது. மனித உடல் ஜீன்களுக்கு நெருக்கமாக உள்ள சிம்பன்ஸி குரங்கின் உடலுறுப்புகளை ஏன் பயன்படுத்தவில்லை? என்ற கேள்வி எழலாம். இக்குரங்குகளும் எண்ணிக்கையில் அருகி வருவதால், இது பாதுகாக்கப்பட்ட (Endangered species) இனமாக உள்ளது.
மேலும் மனிதர்களுக்கு வரக்கூடிய நோய்களிலுள்ள புரதத்தின் 112 ஜீன் நிலைகள் (Position in the Genome) பன்றியின் புரதத்திலுள்ள அமினோ ஆசிட் உடன் ஒத்துள்ளது. ஆகவே தான் மனிதர்களுக்கு வரக்கூடிய நோய்களை தடுப்பதற்கு உறுதுணையாக,பன்றியின் உடலில் புதிய மருந்துகளை செலுத்தி ஆய்வு செய்கின்றனர் குறிப்பாக,,உடல் பருமன்,நீரிழிவு,டிஸ்லேஷிய,பார்க்கின்சன் நோய்,மற்றும் அல்சிமர் நோய்களின் (Some of the protein aberrations that pigs share with humans are associated with obesity, diabetes, dyslexia, Parkinson’s disease and Alzheimer’s disease.) புரதக் கூறுகள் மனித உடலிலும்,பன்றியிலும் ஒன்று போலவே உள்ளது.
சர்க்கரை நோய் என்னும் நிரிழிவுக்குத் தேவையான இன்சுலின் மருந்து பன்றியின் உடலிலிருந்தே பெறப்படுகிறது.கர்ப்பத்தடை மாத்திரைக்கான ஈஸ்ட்ரோஜன் பன்றியிலிருந்தே எடுக்கப்படுகிறது. தீக்காயம்,மற்றும் பிளாஸ்டிக் சர்ஜரி போன்றவைகளுக்கு பன்றியின் தோல் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. மனித உடலுக்கு நெருக்கமாக பன்றியின் தோல்,முடி,உருவ எடை,கண்கள், போன்றவை அனைத்தும் ஒத்திருப்பதால் யூத,கிருஸ்துவ அறிவியல் உலகம், ஹராமான பன்றியை மனிதர்களுக்கு ஹலாலாக்க முயற்சி செய்கிறது.
இவர்களின் வழி முறையை முஸ்லிம்கள் ஒரு போதும் பின்பற்றக்கூடாது என்பதை அல்லாஹ், திரும்பத் திரும்ப ஓதப்படும் அல்ஹம்து சூராவிலேயே நமக்கு வழி காட்டுகிறான்.
“நீ எங்களை நேர் வழியில் நடத்துவாயாக! அது நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி. அது உன் கோபத்துக்கு ஆளானோர் வழியுமல்ல நெறி தவறியோர் வழியுமல்ல.” அல்குர்ஆன்.1:6,7.
ஆயினும் வருங்காலங்களில் முஸ்லிம்கள், சாணுக்குக்கு சாண், முழத்துக்கு முழம், அல்லாஹ்வால் சபிக்கப்பட்டு கோபத்திற்காளானோர் மற்றும் நெறி தவறியவர்களின் வழியையும் பின்பற்றுவார்கள் என்று முன்னறிவித்தபடியே, இன்றைய நமது முஸ்லிம்களும் பிறந்த நாள் கொண்டாடத்திலிருந்து அவர்கள் வழியில் பயணிப்பதை பார்க்க முடிகிறது.
உங்களுக்கு முன்னிருந்தவர்களின் வழிமுறைகளை நீங்கள் சாணுக்கு சாண்,முழத்துக்கு முழம் பின்பற்றுவீர்கள். எந்த அளவுக்கென்றால், அவர்கள் ஒரு உடும்பின் பொந்துக்குள் நுழைந்தால் கூட நீங்கள் அவர்களைப் பின்பற்றி நுழைவீர்கள்.” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நாங்கள், “அல்லாஹ்வின் தூதரே! (நாங்கள் பின்பற்றக் கூடியவர்கள் என்று) யூதர்களையும் கிருஸ்தவர்களையுமா (நீங்கள் குறிப்பிடுகிறீர்கள்)?” என்று கேட்டோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “ வேறு யாரை? என்று (திருப்பிக்) கேட்டார்கள்
அறிவிப்பாளர்: அபூசயீத் அலகுத்ரீ (ரலி), நூல்: ஸஹீஹ் முஸ்லிம்.5184
அல்லாஹ்வே மிக அறிந்தவன்.
{ 3 comments… read them below or add one }
மாஷா அல்லாஹ் மிக அருமையான பதிவு. தங்களின் கட்டுரை மூலமாக பல விஷயங்களை அறிந்து கொள்ள முடிந்தது. அல்லாஹ் உங்களுக்கு அருள்புரிவானாக!
Allah Akbar. Very Inrasting useful message@books. Alhamdulillah
Maasha Allah very interesting and useful message@books..