பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
பைபிள் கிறிஸ்துவர்களின் மூன்று கடவுள்களும்
மத்ஹப் முஸ்லிம்களின் நான்கு கடவுள்களும்…
– S.ஹலரத் அலி, திருச்சி-7.
இன்று தோன்றியுள்ள மார்க்கப் பிரச்சனைகளுக்கும் பிரிவினைக்கும் அடிப்படைக் காரணமே மத்ஹபுச் சட்டங்கள்தான். குர்ஆன், ஹதீஸிற்கு மாற்றமான சட்டங்களைப் போதிக்கும் மத்ஹபுகள் நமது நாட்டில் மாத்திரமல்லாது உலக நாடுகளிலும் செல்வாக்குச் செலுத்தியுள்ளன. இந்த மத்ஹபு மாயையில் சிக்கியுள்ள அப்பாவி முஸ்லிம்கள் அதன் விபரீதம் புரியாமல் தமது வணக்க வழிபாடுகளில் மத்ஹபுச் சட்டங்களையே பெரும்பாலும் பின்பற்றுகின்றனர்.
இம் மத்ஹபுகளே அநேக அரபு மத்ரஸாக்களின் பாடத்திட்டத்தில் சேர்த்து போதிக்கப்படுகின்றது. அனைத்து வழிகெட்ட கொள்கைகளும், அனாச்சாரங்களும், பித்அத்துக்களும் தோன்ற மத்ஹப்களே அடிப்படைக் காரணமாக இருக்கின்றன. இம் மத்ஹபுகள் முஸ்லிம்சமூகத்திடம் இருந்து ஓரங்கட்டப்பட வேண்டும். சுன்னத் வல்ஜமா அத் என்று தங்களை அழைத்துக்கொள்ளும் ஆலிம் மவுலவிகளும் மத்ஹப் சட்டத்தை உடும்புப்பிடியாக பிடித்துக்கொண்டு அப்பாவி முஸ்லிம்களின் ஈமானையும் பொருளையும் தட்டிப் பறிக்கின்றனர்.
நபியே! நாம் எல்லா மக்களையும் அவரவர்களுடைய தலைவர்களுடன் (இமாம்) அழைக்கும் நாளை (நீர்நினைவூட்டுவீராக! அந்நாளில்) எவருடைய (செயல்குறிப்பு) ஏடு அவருடைய வலக்கையில் கொடுக்கப்படுகிறதோ, அத்தகைய நற்பேறுருடையவர்கள் தம் ஏடுகளை நிம்மதியுடன் படிப்பார்கள். இன்னும் அவர்கள் அனைவரும் அநியாயம் செய்யப்படமாட்டார்கள்.
யார் இம்மையில் (நேர்வழியடையா) குருடனாகஇருக்கிறானோ, அவன் மறுமையிலும் (நற் பேற்றைக்காணாக்) குருடன்தான்; இன்னும் அவன் நேர்வழியில்மிகவும் தவறியவன். – அல் குர்ஆன். 17:71,72.
மேற்கண்ட வசனத்தில் அல்லாஹ் “ இமாம் “ என்ற ஒருசொல்லை பயன்படுத்துகிறான். இந்த இமாம் என்ற சொல்லுக்கு பல பொருள் உண்டு. அதில் ஒன்றுதான் அம்மனிதனின் எண்ணமும் செயலும். தன் எண்ணத்தை விருப்பத்தை (நப்சை) இமாமாக ஏற்று அதன்படி அமல் செய்தவர்கள் இடது கையில் ஏட்டைப் பெற்ற நஷ்டவாளிகளாவார்கள்.
இந்த இமாம் என்ற சொல்லுக்கு இப்ன் கதீர் அவர்கள் தமது தப்ஸீர் உரையில், சஹாபாக்களை கண்ணியப்பபடுத்தும் வசனமாக இதைக் கணிக்கிறார்கள். காரணம், நபித்தோழர்கள் மத்தியில் இறங்கிய வசனத்தில் “அவரவர் தலைவருடன்” என்பதில் அன்றைய நபித்தோழர்களின் ஒரே தலைவர் இமாம் நபி (ஸல்)அவர்கள் மட்டுமே இருந்தார்கள்.
ஆனால் இன்றைய முஸ்லிம்களுக்கு, ஆன்மீக இமாம்கள்,அரசியல் இமாம் என்று ஏராளமான தலைவர்கள் உள்ளனர். மத்ஹப்பை தக்லீத் செய்யும் முஸ்லிம்கள் நான்கு இமாம்களையும், தவ்ஹீது பேசும் முஸ்லிம்கள் தங்கள் அரசியல் தலைவர்களை இமாமாக பின்பற்றி வருகின்றனர். இவர்களின் போதனைப்படியே தங்களின் மார்க்க செயல்பாடுகளை அமைத்துக் கொள்கின்றனர்.
மத்ஹபு என்ற சொல்லுக்கு வழிமுறை, போக்கு, கருத்து என்று பொருள்படும். மக்கள் அன்றைய காலகட்டங்களில் தங்களிடம் இருந்த இமாம்களிடம் சந்தேகங்களைக் கேட்பர். அந்த சந்தேகம் பற்றி பின்பு அவர்கள் உரையாடும்போது இதுஷாபியி இமாம் மத்ஹபு(ஷாபியின் கருத்து) இது மாலிகிமத்ஹபு (மாலிகின் கருத்து) இப்படிப் பேசிக்கொள்வர். இவர்கள் இவ்வாறு பேசும்போது பயன்படுத்திய வார்த்தைநிலைத்து இறுதியில் ‘மத்ஹபு’ என்பது இஸ்லாத்தில் உள்ள பிரிவுகளுக்கு பயன்படுத்தும் வார்த்தையாக மாறிவிட்டது.
சொல் ரீதியாக ஆராயும்போது ‘தஹப’ என்ற பதத்திலிருந்து பிறந்த ஒரு சொல்தான் மத்ஹபு என்ற சொல்லாகும்.”தஹப’ என்றால் போனான் என்பது பொருள். ‘மத்ஹபு’என்றால் போகுமிடம் என்று பொருள்படும். எனவேதான் ஒருஹதீஸில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது. ‘நபியவர்கள் மத்ஹபுக்குப் போக நாடினால் தூரமாகுவார்கள்.’ (ஆதாரம்: அபூதாவுத்-01)
இவ்விடத்தில் ‘மத்ஹபு’ என்ற சொல் ‘கழிவறை’ எனும் கருத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே இஸ்லாத்திற்கும் மத்ஹபுகளுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்பதை அறியலாம். இஸ்லாத்தில் நான்கு மத்ஹபுகள் மட்டுமே உள்ளன. அவை ஹனபி, ஷாபியி, மாலிகி, ஹன்பலி என முஸ்லிம்கள் நினைக்கின்றனர். இது முற்றிலும் தவறான ஒரு எண்ணமாகும். இஸ்லாத்தில் பல மத்ஹபுகள் உண்டாயின. அவைகளில் முக்கியமானவைகளாக பின் வருபவற்றை குறிப்பிடலாம்.
1.ஜைதி மத்ஹப்-ஜைத் பின் அலி, (கி.பி.700-740)
2.அவ்ஜாயி மத்ஹப்-அப்துல் ரஹ்மான் பின் அல் அவ்ஜாயி,(கி.பி. 708-774)
3.ழாகிரி மத்ஹப்-தாவுத் இப்ன் அலி, (கி.பி.715-883)
4.லைதி மத்ஹப்-லைத் (கி.பி.716-791)
5.தவ்ரி மத்ஹப்-சுப்யானுத் தவ்ரி (கி.பி.719-777)
6.ஜரீரி மத்ஹப்-முஹம்மத் இப்ன் ஜரீர் இப்ன் யஸீத்(கி.பி.839-929)
ஆக மத்ஹப் நான்கு மட்டும் அல்ல. இதுபோல் ஏராளம் உண்டு.இந்த மத்ஹப்கள் பிற்காலங்களில் வந்த மார்க்க இமாம்களின் கருத்தே அல்லாமல் அல்லாஹ்வும் அவனது தூதரும் இஸ்லாமாக காட்டியது அல்ல. இன்றைய நான்கு மத்ஹப்களும் நிலைத்து நின்றதற்கு காரணம் ஆட்சியாளர்களின் ஆதரவும் பெரும்பாலான முஸ்லிம்கள் கண்ணை மூடி (தக்லீத்) குருட்டுத்தனமாக பின்பற்றியதுதான். இஸ்லாத்திற்கும் மத்ஹப்களுக்கும் யாதொரு சம்பந்தமுமில்லை.
இன்றைய சுன்னத் ஜமாஅத் பள்ளிவாசல்களில் கட்டாயம் ஒரு அறிவிப்புப் பலகையை அனைவரும் பார்க்கலாம்.நான்கு இமாம்களைப் பின்பற்றுபவர்களே இப்பள்ளியில் தொழ அனுமதிக்கப்படுவார்கள். தலையை கட்டாயம் மறைக்கவேண்டும், சப்தமாக ஆமீன் சொல்லக்கூடாது போன்ற ஸஹீகான ஹதீஸ் உள்ள அமல்களை தடை செய்கிறார்கள். இவைகளுக்கு நபி வழியில் அனுமதி இருந்தாலும்,பள்ளி ஆலிம்கள் தாங்கள் பின்பற்றும் இமாம் வழியிலேயே மக்களை குருட்டுத்தனமாகஅழைத்துச் செல்கின்றனர். தொழும் பள்ளிகள் அல்லாஹ்வுக்கு சொந்தம் என்று அல் குர்ஆன் கூறுகிறது. இல்லை இல்லை நான்கு இமாம்களுக்கு மட்டுமே உரியது என்று பகிரங்கமாகவே அறிவிப்பு பலகை வைக்கிறார்கள்.
நபி (ஸல்) அவர்கள் தம் வாழ்நாளில் கடமையான தொழுகைக்குப் பிறகு கூட்டு துவா ஓதியதாகவோ, நபித்தோழர்கள் அதற்க்கு ஆமீன் சொன்னதாகவோ ஒரு நம்பகமான செய்தியும் இல்லை.ஆனால் இன்று பள்ளி இமாமின் கூட்டு துவா இல்லாமல் ஸப்பு கலையாது. நபி(ஸல்) அவர்கள் காட்டித்தராத கூட்டுத் துவா இன்று கடமையான ஒன்றாக மாற்றி விட்டார்கள். ஆனாலும் தங்களை சுன்னத் வல் ஜமாஅத் என்று அழைத்துக் கொள்வதில் குறைச்சலில்லை.
யூதர்கள் மத்தியில் ஒரு கடவுள் கொள்கையைச் சொல்லிஈஸா (அலை) அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் மக்களை அழைத்தார்கள். அவர்களுக்குப்பின் நடந்தது என்ன?இயேசு கிறிஸ்துவின் பெயரைச் சொல்லி பவுலடிகள்(St.Paul) போதனையே இன்று கிருஸ்துவமாக உலகில் உள்ளது. பவுலின் போதனையை பின் வந்த நான்கு சுவிஷேசக்காரர்களும் ( மத்தேயு, மாற்கு,லூக்கா,யோவான்) புதிய ஏற்பாடாக எழுதி பிதா,சுதன்,பரிசுத்த ஆவி என்னும் முக்கடவுள்(Tirinity) கொள்கையை இன்று கிருஸ்துவர்கள் பின்பற்றுகின்றனர்.
நான்கு சுவிஷேசக்காரர்கள் அறிமுகப்படுத்திய முக்கடவுள் கொள்கையை வணங்கி கிருஸ்துவ மக்கள் பின்பற்றுவதுபோல் நான்கு இமாம்களின் பெயரால் மத்ஹப் இஸ்லாம் வணங்கப்படுகிறது. இப்படி நாம் எழுதும்போது, “ நாங்கள் எங்கள் இமாம்களை வணங்க வில்லையே?”அவர்கள் வழிமுறையைத்தானே பின்பற்றுகிறோம் என்று மத்ஹப் முஸ்லிம்கள் கூறுவார்கள்.ஒரு வரலாற்று சம்பவத்தை பார்ப்போம்.
அவர்கள் அல்லாஹ்வை விடுத்துபாதிரிகளையும்,குருமார்களையும் தங்களின் ரப் கடவுளாக்கிக் கொண்டார்கள்.மேலும் மர்யத்தின் குமாரர் மஸீஹையும் (இறைவனாக்கிக் கொண்டனர்.) உண்மையாதெனில், ஒரே இறைவனைத் தவிர வேறெவரரையும் வணங்க அவர்களுக்கு கட்டளையிடப்பட்டதில்லை.
வணக்கத்துக்குரிய இறைவன் அவனையின்றி யாரும்இல்லை.அவர்கள் செய்யும் இணைவைப்புச் செயல்களிலிருந்து அவன் தூய்மையானவன். -அல் குர்ஆன்.9:31.
என்ற இந்த வசனம் இறங்கியபோது, முன்பு கிறிஸ்துவராக இருந்து இஸ்லாத்தில் இணைந்த அதீ இப்ன் ஹாதம்(ரழி) என்ற நபித்தோழர் “ அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் எங்கள் மத அறிஞர்களை வணங்கிக் கொண்டிருக்கவில்லையே! (கடவுள்களாக ஆக்கி விட்டதாக இறைவன் கூருகின்றானே!) என்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்டார்கள்.
அதற்கு நபி(ஸல்) அவர்கள், “ உங்கள் மத அறிஞர்கள் ஹலால் என்று கூறியவற்றை ஹலால் என்றும்,ஹராம் என்று கூறியவற்றை ஹராம் என்றும் (கண்மூடித்தனமாகாக)நீங்கள் பின்பற்றி வந்தீர்கள் அல்லவா? அதுதான் அவர்களை கடவுளாக வணங்கியதற்கு நிகரானது.” என்று விளக்கம் அளித்தார்கள். நூல்: அஹ்மது.திர்மீதி.
கிருஸ்தவர்கள் தங்கள் பாதிரிகள் கூறுவதை பின்பற்றி வழி கெட்டதுபோல்,இன்றைய சுன்னத் வல் ஜமாஅத் ஆலிம் அறிஞர்கள் கூறும், நான்கு மத்ஹப்களை கண்மூடி பின்பற்ற ிநான்கு இமாம்களை ரப்பாக வழிபடும் இழிநிலை ஏற்பட்டுள்ளது.
உங்களுக்கு முன்னிருந்த (யூதர் மற்றும் கிருஸ்த)வர்களின் வழிமுறைகளை நீங்கள் அங்குலம் அங்குலமாக,முழத்திற்கு முழம் பின்பற்றுவீர்கள்.எந்த அளவிற்கென்றால் அவர்கள் ஒரு உடும்பின் பொந்துக்குள் புகுந்திருந்தால் கூட நீங்கள் அதிலும் புகுவீர்கள்.”என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்:அபூ ஸயீத்அல் குத்ரீ (ரழி) நூல்: முஸ்லிம்.
நபி (ஸல்) அவர்கள் கூறிய தீர்க்க தரிசனத்தை இன்றைய முஸ்லிம்களின் நடைமுறையில் காணலாம்.
டிசம்பர் 25 ம் தேதியை கிருஸ்தவர்கள் இயேசுவின் பிறந்த நாளைக கிருஸ்துமஸ் கொண்டாடப்படுவது போல மத்ஹப் முஸ்லிம்களும் வருடா வருடம் நபி(ஸல்)அவர்களின் பிறந்த நாளை மீலாது விழாவாக கொண்டாடி வருகின்றனர். அந்த மாதம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் மௌலூது ஓதி கந்தூரி சோறு போட்டு மகிழ்ச்சி அடைவார்கள். இதுபோல் இயேசு இறந்த தினமான ஈஸ்டர் பெரிய வெள்ளிதினத்தை கிருஸ்துவர்கள் துக்கம் அனுசரிப்பதைப்போல்,நான்கு இமாமை ரப்பாக்கிய முஸ்லிம்களும் இறந்தவர்களுக்கு வருஷக்கத்தம், பாத்திஹா உலமாபெருமக்களால் ஓதப் பெற்று கை மடிப்பு வழங்கப்படுகிறது. பிறந்த நாள், இறந்த நாள், மௌலூது போன்ற பித் அத்கள், அசல் இஸ்லாத்தில் கிடையாது. ஆனால் நான்கு இமாமை ரப்பாக வணங்கும் சுன்னத் வல் ஜமாஅத் என்னும் தக்லீது மத்ஹப் மக்களிடம் இவை பர்லான வணக்க வழிபாடாக இன்றும் உள்ளது.
இன்னும் எவர்கள் தங்கள் இறைவனின் வசனங்களை ஓதிக்காண்பிக்கப்பட்டால் குருடர்களைப்போலும் செவிடர்களைப் போலும் அதன் மீது அடித்து விழமாட்டார்கள்; (அதனை முற்றிலும் நன்குணர்ந்து கொள்வதுடன் அதன்படி செயல்படுவார்கள்.) -அல் குர்ஆன்.25:73.
கண்மூடி பின்பற்ற மார்க்கத்தில் அனுமதி இல்லை. நன்குவிளங்கியே அதை பின்பற்றவேண்டும். துர்பாக்கியமாக இன்றைய முஸ்லிம்கள், இமாம்கள் பெயரால் சொல்லப்படும் அனாச்சாரங்களை அப்படியே மார்க்கமாக எடுத்து நடக்கின்றனர். மதரஸாவில் தங்களுக்கு கற்றுக்கொடுக்கப்பட்ட இந்த வழிகேடுகளையே மார்க்கமாக ஆலிம் உலமாக்கள் மக்களுக்கு போதிக்கின்றனர்.
“ உங்கள் மார்க்க விசயத்தில் ஆலிம் உலமாக்கள் ஒரு விஷயத்தைப்பற்றி உண்மையையே கூறினாலும், அதைக்கண்மூடி பின்பற்றக்கூடாது.” என்னும் ஒரு செய்தியை நபித்தோழர் முஆது பின் ஜபல் (ரழி) அவர்கள்அறிவிக்கிறார்கள்.
நூல்: இமாம் இப்னுல் அப்தில்பர்,அல்ஜாமீ,இப்னு ஹஸ்மின் ‘அல் அக்காம்’
இமாம் தார குத்னீ அவர்கள் இதை ஸஹீஹ் எனக்கூருகிறார்கள்.
இஸ்லாத்தின் பெயரால் ஏராளமான பொய்யான கிஸ்ஸாக்களையும், கப்ஸாக்களையும் (அமல்களின் சிறப்பு)புர்தா, மவ்லிது, யாகுத்பா, ராத்தீபு, இருட்டு திக்ர் மஜ்லிஸ், போன்ற அனாச்சாரங்களையும் அறிமுகப்படுத்தி நம்மை வளர்த்தெடுத்தவர்கள் வேறு யாரும் அல்ல.நாம்பெரிதும் மதிக்கும், கண்ணியப்படுத்தும் சுன்னத் வல் ஜமாஅத் எனும் நபி வழியின் பெயரால் நபி மொழிகளை குழிதோண்டிப் புதைத்து, வழிகேடுகளை நமக்கு மார்க்கமாக போதிக்கும் ஆலிம் உலமா எனும் மார்க்க மேதைகள்தான்.
இவர்கள் பின்னால்தான் நாம் சிறுதும் தயக்கமின்றி தொழுகிறோம்.இதற்கு நமது மனம் சிறிதும் சங்கடப்படாத வகையில் நமது மூளையை ஷைத்தான் சலவை செய்து சரிகானச் செய்து விட்டான். இவையெல்லாம் தவறு என்று விளங்கி வெளியே வந்த முஸ்லிம்கள் தவ்ஹீது பேசும் ஐந்தாவது இமாமிடம் மூளையை மறு அடகு வைத்துவிட்டார்கள். இந்த ஐந்தாவது இமாமைப் பின்பற்றும் தவ்ஹீது தக்லீது முஸ்லிம்கள் இஸ்லாத்தின் அடிப்படை அகீகாவையே ஆட்டம் காண செய்து விட்டனர். தன்னை இன்னும் நபி என்று பிரகடனப்படுத்தாத ஐந்தாம் படை இமாம், தன்னை பின்பற்றும் முஸ்லிம்களின் சிரமத்தை குறைப்பதற்கு ஜக்காத் ஒருமுறை கொடுத்தால் போதும் என்று பெரும்தன்மையுடன் அறிவித்து, வசதி படைத்தவர்களுக்கு வாழ்க்கை கொடுத்து விட்டார்.
ஏராளமான ஸஹீகான ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படுவதாக அவருக்கு வஹீ வந்ததால், அவைகளை தூக்கி கடாசி விட்டார். தன்னை பின்பற்றும் தவ்ஹீது தக்லீது முஸ்லிம்களுக்காக ஆங்காங்கே தனிப்பள்ளி கட்டி ஆன்மீக சேவை செய்து வருகிறார். இந்த ஐந்தாம் இமாமின் ஆன்மீக அரசியல் சேவையில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஊக்கமுடன் பங்கு கொண்டு ஆக்கபூர்வமாக தங்கள் ஈமானை இழந்து கொண்டு வருகிறார்கள்.
எல்லாம் வல்ல அல்லாஹ் இந்த நான்கு இமாம்களையும்,இன்றைய ஐந்தாம்படை இமாமையும் விட்டு விலகி, மார்க்கத்தை மார்க்கமாக விளங்கி பின்பற்றி வெற்றியடைய அருள் செய்வனாக! ஆமீன்!
யாரேனும் அநீதி இழைத்தபின் பாவ மன்னிப்புக்கோரி, தன்னைச் சீர்திருத்திக்கொண்டால் அல்லாஹ்வின் கருணைப்பார்வை அவன் பக்கம் மீண்டும் திரும்புகிறது. நிச்சயமாக,அல்லாஹ் பெரிதும் மன்னிப்பு வழங்குபவனும் அளப்பரிய கருணையுள்ளவனுமாவன். – அல் குர்ஆன்.5:39.
{ 14 comments… read them below or add one }
All Immam said their opinnion only , they clearlly decleared if you found their opinnion against allah through that .
then where is the problem , but those who refuse immams now they make MATHAHAB in each street , they reach countless divide themself increasing day by day , and they compul all others to follow them untill all others will be in hell , this words habit only in christians
எல்லாம் வல்ல அல்லாஹ் இந்த நான்கு இமாம்களையும்,இன்றைய ஐந்தாம்படை இமாமையும் விட்டு விலகி, மார்க்கத்தை மார்க்கமாக விளங்கி பின்பற்றி வெற்றியடைய அருள் செய்வனாக! ஆமீன்!
dear brother
above those five imams and anyother imams speech or writen books , people must compare their words in to quran and hadees. if their speech against quran and hadees must throw their speech and writen words in carbage. they too agreed and gave disclaimer in their speech and written books. so problem is with people.
நீங்களும் ஒரு இமாமாகதாணே ட்ரை பண்றீங்க…உங்களுடைய கருத்தை ஏற்கனும் என்று கட்டாயம் இல்லையே. அவங்க சரியாக இருந்தா எடுத்துக்கொள்ள வேண்டியது தானே.
எல்லாம் வல்ல அல்லாஹ் இந்த நான்கு இமாம்களையும்,இன்றைய ஐந்தாம்படை இமாமையும் விட்டு விலகி, மார்க்கத்தை மார்க்கமாக விளங்கி பின்பற்றி வெற்றியடைய அருள் செய்வனாக! ஆமீன்!
very beautiful again i well prefer this page i like u so much this wep site
Most of people using maximum 2 senses only. nose, and touchability. so GOD told they are below the animal level. SO MUSLIMS always alert about kabir.
see below QURAN verses
7:179. நிச்சயமாக நாம் ஜின்களிலிருந்தும், மனிதர்களிலிருந்தும் அநேகரை நரகத்திற்கென்றே படைத்துள்ளோம்; அவர்களுக்கு இதயங்கள் இருக்கின்றன – ஆனால் அவற்றைக் கொண்டு அவர்கள் நல்லுணர்வு பெற மாட்டார்கள்; அவர்களுக்குக் கண்கள் உண்டு; ஆனால், அவற்றைக் கொண்டு அவர்கள் (இறைவனின் அத்தாட்சிகளைப்) பார்ப்பதில்லை; அவர்களுக்குக் காதுகள் உண்டு. ஆனால் அவற்றைக் கொண்டு அவர்கள் (நற்போதனையைக்) கேட்கமாட்டார்கள் – இத்தகையோர் கால்நடைகளைப் போன்றவர்கள். இல்லை! அவற்றை விடவும் வழி கேடர்கள்; இவர்கள் தாம் அலட்சியம் செய்தவர்களாவார்கள்.
2:171. அந்த காஃபிர்களுக்கு உதாரணம் என்னவென்றால்; ஒரு வனின் கூப்பாட்டையும், கூச்சலையும் தவிர வேறெதையம் கேட்டு, அறிய இயலாதவைபோன்றவர்கள்; அவர்கள் செவிடர்களாகவும், ஊமையர்களாகவும், குருடர்களாகவும் இருக்கின்றனர்; அவர்கள் எ(ந்த நற்போ)தனையும் உணர்ந்து கொள்ளமாட்டார்கள்.
22:46. அவர்கள் பூமியில் பிரயாணம் செய்து (இவற்றைப்) பார்க்கவில்லையா? (அவ்வாறு பார்த்திருந்தால்) அவர்களுக்கு விளங்கிக் கொள்ளக்கூடிய உள்ளங்களும், (நல்லவற்றைச்) செவியேற்கும் காதுகளும் உண்டாகியிருக்கும், நிச்சயமாக (புறக்) கண்கள் குருடாகவில்லை; எனினும், நெஞ்சுக்குள் இருக்கும் இதயங்கள் (அகக் கண்கள்) தாம் குருடாகின்றன.
Saying that the four imams divide Islam shows very shallow and weak thinking.
If anyone of us think that we have greater knowledge than Imams ( Malik, Hanbal, Abu Hanifa and Shafiyie) then we need not follow the imams
How many of the common people are bale to read the hadis diretly and give interpretations and rules.
The saying that Christians have three gods and Muslim have four is unintelligible and a very ignorant argument
Assalamu alaikkum paluvakkamohamedameen,
if there is knowledge or not . this doesn’t matter. we have to follow the complete knowledge of prophet MUHAMMAD (SAL) only. his knowledge is spread with 4 imams and more over thousands of imams.
above imams never receive directly from MUHAMMAD (SAL) they are received from hadhis narrators and thabi’eens.
maa salam.
ABDUL AZEEZ
inraya soolniliel yellorum edy unaravendum
sacha islam yadu yanbadu allah than teerpu vazanga vendum
ASSALAMU ALAIKKUM WA WAB
நான்கு இமாம் ok
இந்த ஐந்தாம் இமாம் யார்
Deviant Tamil Websites
இஸ்லாத்திற்கு எதிரான அல்லது இஸ்லாமிய கொள்கைக்கு மாற்றமான வழிகெட்ட நச்சு கருத்துக்களை பரப்பக்கூடிய இணையத்தளங்கள் சிலவற்றை முஸ்லிம்கள் அடையாளம் கண்டுக்கொள்வதற்காக இங்கு பட்டியல்படுத்தியுள்ளோம். இவை போன்ற வழிகெட்ட இணையத்தளங்களை விட்டும் முஸ்லிம் சகோதரர்கள் தமது ஈமானை (இறைநம்பிக்கை) பாதுகாத்து கொள்ளுமாறும் இவை பற்றி உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் அறிவித்து அவர்களின் ஈமானையும் பாதுகாக்குமாறும் அன்போடு வேண்டிக்கொள்கிறோம்.
♣ வஹாபிய இணையத்தளங்கள்
*************************
வஹாபிகள் எனப்படுவோர் நஜ்தில் (ரியாதில்) பிறந்த முஹம்மத் இப்னு அப்துல் வஹாப் என்னும் ஒரு வழிகேடனின் கொள்கையை பின்பற்றுவோர் ஆவர். இந்த முஹம்மத் இப்னு அப்துல் வஹாப் வழிகேடனை பற்றி 1400 வருடங்களுக்கு முன்னரே கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் எச்சரிக்கை செய்து கூறி உள்ளனர்.
அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்:
‘நஜ்து தேசம் அதிர்ச்சி தரும் சம்பவங்களும், (பித்னா) குழப்பங்களும் உற்பத்தியாகும் ஸ்தலமாகும். அங்கிருந்து ஷைத்தானின் கொம்பு உதயமாகும்’ என தமது விரலை நஜ்து தேசத்தின் பக்கமாக நீட்டிச் சொன்னார்கள்.
ஹஜ்ரத் அப்துல்லாஹ் இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு
ஆதாரம்: புகாரி- பாகம்-2, பக்கம் 1051
கீழே உள்ள இந்த இணையதளங்கள் வழிகெட்ட வஹாபிய கொள்கைகளை போதிக்கும் இணையத்தளங்களாகும். ஜாக்கிரதை!
http://www.onlinepj.com
http://www.jaqh.org
http://www.jaqh.in
http://www.islamkalvi.com
http://www.sltj.lk
http://www.rasminmisc.com
http://www.actj.lk
http://www.abdulbasithbukhari.com
http://www.slism.org
http://www.islahiyyah.edu.lk
http://www.frtj.net
http://www.pdmtntj.net
http://www.sheikhshmfaleel.lk
http://www.usthazhajjulakbar.org
http://www.annajaath.com
http://www.srilankamoors.com
http://www.usthazmansoor.com
http://www.shaikhnazar.net
http://www.yoosufmufthi.lk
http://www.readislam.net
http://www.tamilbayan.com
http://www.tamilbayans.com
then which website is true tell me
YOUR WEBSITE IS ALSO LISTED IN THIS LIST..
KINDLY MAKE US CLEAR