காஃபிர்களின் வழிமுறைகளை பின்பற்றும் TNTJ

Post image for காஃபிர்களின் வழிமுறைகளை பின்பற்றும் TNTJ

in அழிவுப் பாதை

தூதர் வழியில் நடக்கும் தூய ஜமாஅத் உலக அளவில் நாங்கள் மட்டுமே; எங்களைவிட சிறந்த ஜமாஅத் ஒன்று இருந்தால் எங்களது ஜாமஅத்தை கலைத்துவிட்டு அந்த ஜமாஅத்தில் நாங்கள் இணையத் தயார் என்று TNTJவின் நிறுவனர் P.ஜைனுல் ஆபிதீன் கூறியதை தொடர்ந்து அவரது பயானை காப்பியடித்து, அதை அப்படியே ஒப்புவிக்கும் கீழ் மட்ட மற்றும் மேல்மட்ட பேச்சாளர்கள் அனைவரும் இதையே கூறி வருகின்றனர். இந்தப் பேச்சின் மூலம் நாங்கள் மட்டும்தான் தூய்மையான ஜமா அத் என்ற கருத்தை ஆணவமாக வெளிப்படுத்தி மக்களை ஏமாற்றி இயக்கம் நடத்தி வருகிறார்கள். உண்மையில் இவர்களது ஜமாஅத்தை வளர்ப்பதற்கும், புதிய ஆட்களைப் பிடிப்பதற்கும், பிடிபட்ட ஆட்களைத் தக்கவைத்துக் கொள்வதற்கும் முன்மாதிரியாகக் கொண்டிருப்பது காஃபிர்களின் வழிமுறைகளைத்தான். இதை அவர்களின் எழுத்துகளிலிருந்தே பார்ப்போம்.

கோடான கோடி செலவில் மாநாடுகள் ஏன் நடத்தப்படுகின்றன. கோடிக்கணக்கில் செலவு செய்து இப்படி கூடி கலையும் மாநாடுகள் தேவையா? என்ற ஓர் எண்ணம் தோன்றலாம். தமிழகத்தின் கட்சிகள், கழகங்களின் வரலாற்றை உற்றுநோக்கினால் இதற்கு விடை கிடைத்து விடும். தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கும் தி.மு.க. மக்களிடம் களம் புகுந்தது மாநாடுகள் மூலம்தான் என்ற கடந்த கால வரலாற்றுக்குச் செல்லவேண்டிய அவசியமில்லை. அண்மை காலத்தில் ஓர் இயக்கத்தை நாம் உருவாக்கி அதை அடையாளப்படுத்த அடித்தளமாக அமைந்தது, கடற்கரையில் நடைபெற்ற வாழ்வுரிமை மாநாடு தான். விஜயகாந்தின் அரசியல் பிரவேசத்திற்கு அஸ்திவாரம் அமைத்தது. மதுரை மாநாடுதான். மாநாடுகள் ஓர் இயக்கத்தின் வளர்ச்சிக்குப் படிக் கட்டு! ஓர் இயக்கத்தின் திருப்புமுனை. இலக்கு நோக்கி செல்கின்ற இயக்கத்தின் இலட்சிய பயணத்திற்கு இந்த மாநாடுகள் எரிபொருளாக அமைகின்றன. பொதுவாக மக்கள் ஒரு கொள்கையை ஏற்கும்போது அக்கொள்கையில் பெருங் கூட்டம் உள்ளதா? அல்லது இணைகின்றதா என்று பார்ப்பார்கள்.

TNTJவின் கொள்கை விளக்க ஏடான ஏகத்துவம் மாத இதழில் மார்ச் 2008 பக்கம் 4ல் எழுதப்பட்ட தைத்தான் கட்டத்தில் நாம் குறிப்பிட்டுள்ளோம்.
1, நபி(ஸல்) அவர்களை முன்மாதிரியாக கொண்டு நாங்கள் மாநாடுகளை நடத்தவில்லை.
2. மாநாடுகளை நடத்துவதற்கு எங்களுக்கு அரசியல் கட்சிகளே முன்மாதிரி
3. மாநாடுகளை நடத்துவது (தவ்ஹீதை வளர்ப்ப தற்கு அல்ல) இயக்கத்தை வளப்பதற்குத்தான்
4. மாநாடுகளில் கூட்டத்தைக் காட்டி அதன் மூல மாக தங்களது இயக்கத்திற்கு புதிய ஆட்களை சேர்ப்பது.
5. தவ்ஹீதை வளர்ப்பதற்குத்தான் மாநாடுகளை நடத்துகிறோம் என்று சொல்வது பொய்.
6. மற்ற இயக்கங்கள் மாநாடுகள் நடத்தி அதன் மூலம் உலகியல் பயன் அடைவதைப் போன்று நாங்களும் உலகியல் பயன் அடைய வேண்டும் என்பதற்காகத்தான் மாநாடுகளை நடத்துகிறோம்.
TNTJ தலைமை மடாதிபதிகளின் எழுத்துக்களிலிருந்து வெளிப்படும் உண்மைகள் இதுதான்.
தி.மு.க. அ.தி.மு.க. போன்ற அரசியல் கட்சிகளிடம் இவர்கள் பாடம் படித்துவிட்டு, குர்ஆன், ஹதீஃதை வெறும் பெயரளவில் சொல்லித் தங்களது இயக்கத்திற்கு ஆள் பிடித்ததன் காரணமாகத்தான் அரசியல் கட்சியினரிடம் காணப்படும் அத்தனை இழி குணங்களையும் TNTJ மடாதிபதிகளிடமும், இவர்களது தொண்டர்களிடமும் காணலாம். இவர்களது ஜமாஅத்தில் தலைமைக்கு எதிராக யாரேனும் வாய் திறந்தால் அவரது அடிப்படை உறுப்பினர் பதவியை பறித்து ஜமாஅத்தில் இனி யாரும் மேற்படி நபரிடம் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது. அவரை பிரச்சாரத்திற்கு பயன்படுத்தக் கூடாது என்று உத்தரவிடுவதை பார்க்கலாம். இது எங்கிருந்து படித்த பாடம் என்று புரிகிறதா? அரசியல் கட்சியில் ஒருவரை வெளியேற்றும்போது அவர் தனக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி புதிய கட்சியை தொடங்குவதைப் போன்று இவர்களும் ஜமாஅத்திலிருந்து வெளியேரும்போது தங்களுக்குள்ள செல்வாக்கை பயன்படுத்தி புதிய ஜமாஅத்துகளை ஆரம்பிப்பதைப் பார்க்கலாம்.

ஒரு கட்சியில் இருந்தபோது அந்தக் கட்சியின் கொள்கைகளை ஆகா ஓகோ வென்று புகழ்ந்தவர்கள் புதிய கட்சியை ஆரம்பிக்கும் போது தாங்கள் ஏற்கனவே புகழ் பாடிய கட்சியை விமர்சிப்பது போன்று TNTJவில் இருக்கும்போது அந்த ஜமாஅத்தின் கொள்கைகளை குர்ஆன், ஹதீஃத் என்று சொல்லி மக்களை ஏமாற்றிப் பிரச்சாரம் செய்தவர்கள் TNTJவிலிருந்து வெளியேறி வேறு ஒரு புதிய ஜமாஅத்தை தொடங்கினாலோ அல்லது ஏற்கனவே உள்ள ஜமாஅத்தில் சரணடைந்தாலோ அதன் பிறகு தாங்கள் ஆதரித்த TNTJவை விமர்சனம் செய்வதைப் பார்க்கலாம்.
இயங்குவதும் தவ்ஹீத்! எதிர்ப்பதும் தவ்ஹீத்! ஏனிந்த இரட்டை நிலை? என்னும் தலைப்பில் ஏகத்துவம் டிசம்பர் 2014 இதழில் புலம்பல் கட்டுரையை வெளியிட்டதிலிருந்து TNTJ மடாதிபதிகளும் நபி வழியில் இல்லை. இவர்களால் உருவாக்கப்பட்ட கூட்டமும் நபிவழியில் இல்லை என்பதை தெளிவாக உணர்த்தவில்லையா? காஃபிர் களின் வழி முறைகளைப் பின்பற்றி அதன் மூலமாக கூட்டத்தை சேர்த்ததால்தான் இந்த இழிநிலை ஏற்பட்டுள்ளது என்பதை உணர்ந்து TNTJ மடாதிபதிகள் தங்களைத் திருத்திக் கொள்வார்களா?

குர்ஆனுக்கு எதிரானவர்கள் :
“”இந்த குர்ஆனை கேட்காதீர்கள்! நீங்கள் மிகைப்பதற்காக அதில் (குழப்புவதற்காக) வீணான காரியம் செய்யுங்கள்” என்று காஃபிர்கள் கூறுகின்ற னர். குர்ஆன் : 41:26

நபி(ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்தில் காஃபிர் கள் சத்தியத்திற்கு எதிராக எத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டார்கள் என்பதை மேற்கண்ட வசனத்தின் வாயிலாக அறியமுடிகிறது. இன்று இதைப் போன்று மாற்றுக் கருத்துக் கொண்ட வர்கள் நடத்தும் குர்ஆன் வகுப்புகளுக்கு போகாதீர்கள். அவர்களின் சொற்பொழிவுகளைக் கேட்காதீர்கள் என்று TNTJ தலைமை உத்திரவிடத் தொண்டர்கள் அந்தப் பேச்சுக்கு அப்படியே கட்டுப்பட்டு நடப்பதைப் பெரும் பாக்கியமாக கருதுவதைப் பார்க்கிறோம். அப்படியே மாற்றுக் கருத்து கொண்டவர்களின் கூட்டங்களுக்கு சொற்பமான சில நேரங்களில் வந்தாலும் அங்கு கூறப்படும் குர்ஆன், ஹதீஃதை கற்றுக் கொள்வோம் என்ற ஆர்வம் சிறிதளவும் இல்லாமல், தகராறு செய்து கூட்டத்தில் குழப்பத்தை உண்டாக்குவதற்கு மட்டுமே TNTJ தொண்டர்கள் வருவதையும் பார்க்கலாம்… எனது அடியார்களுக்கு நற்செய்தி கூறுவீராக! அவர்கள் சொல்லை செவி மடுத்து அதில் அழகானதைப் பின் பற்றுவார்கள். இவர்களுக்கே அல்லாஹ் நேர்வழி காட்டுகிறான். இவர்களே அறிவுடையவர்கள். குர்ஆன் 39:17,18 என்ற வசனத்தை இவர்களிடம் ஆதாரமாகக் காட்டி அனைவரது பயான்களையும் கேட்க வேண்டும். அதில் குர்ஆனுக்கு ஏற்ப கருத்துக்கள் சொல்லப்பட்டால் அதை ஏற்று நடக்க வேண்டும் என்று கூறினால் செவிடனாகவும், ஊமையாகவும் இருந்து விடுகிறார்கள். அறிவுரை கூறுவீராக! நிச்சயமாக அறிவுரை நம்பிக்கைக் கொண்டோருக்கு பயன் தரும். குர்ஆன் 51:55 என்று அல்லாஹ் கூறியிருப்பதன் அடிப்படையில் இவர்களுக்கு குர்ஆனை ஓதி காண்பித்து அறிவுரை சொன்னாலும் திருந்த மறுக்கிறார்கள். ஏனென்றால் இவர்களின் வழி குர்ஆன், ஹதீத் கிடையாது. TNTJ தலைவர்கள் எவ்வழியோ அதுதான் தொண்டர்கள் வழி. அதனால்தான் அல்லாஹ்வின் வசனங்கள் இவர்க ளுக்குப் பயன் தருவதில்லை. (17:41,45-47,89, 22:72, 25:60, 35:42)

குர்ஆனை வெறுப்பவர்கள் :
நமது தெளிவான வசனங்கள் அவர்களுக்கு கூறப்பட்டால் காஃபிர்களின் முகங்களில் வெறுப்பைக் காண்கிறீர். நமது வசனங்களை அவர்களிடம் கூறுவோரை தாக்கவும் முற்படுவர். இதைவிட கெட்டதை நான் கூறட்டுமா? என (நபியே) கேட்பீராக! அதுதான் நரகம். காஃபிர்களுக்கு அதையே அல்லாஹ் வாக்களித்துள்ளான். அது சென்றடையும் இடங்களில் மிகவும் கெட்டது. குர்ஆன் : 22:72
அளவற்ற அருளாளனுக்கு ஸஜ்தாச் செய்யுங்கள் என்று அவர்களிடம் கூறப்படும்போது அது என்ன அளவற்ற அருளாளன்? நீர் கட்டளையிடுப வருக்கு நாங்கள் ஸஜ்தா செய்வோமா? என்று கேட்கின்றனர். இது அவர்களுக்கு வெறுப்பை அதிகமாக்கியது. குர்ஆன் 25:60; அவர்கள் சிந்திப்பதற்காக இந்த குர்ஆனில் நிச்சயமாக பல விஷயங்களை தெளிவுபடுத்தியுள்ளோம். அது அவர்களுக்கு வெறுப்பை அதிகப்படுத்துகிறது. குர்ஆன் 17:41,46

எங்களிடம் ஒரு தூதர் வந்தால் நிச்சயமாக நாங்கள் மற்ற எல்லா வகுப்பாரையும் விட நேரான பாதையில் சென்றுவிடுவோம் என்று (அரபிகள்) அல்லாஹ்வின் மீது மிக உறுதியாகச் சத்தியம் செய்து கூறினார்கள். அவர்களிடம் (நம்முடைய) )தூதர் வந்தபோது அது வெறுப்பைத் தவிர(வேறெத னையும்) இவர்களுக்கு அதிகப்படுத்தவில்லை. குர்ஆன் :25:42

நபி(ஸல்) அவர்களது காலத்தில் வாழ்ந்த காஃபிர் களிடம் குர்ஆனை ஓதிக் காண்பித்து சத்தியத்தை ஏற்றுக் கொள்ளும்படி அழைப்பு விடுக்கும்போது அது அவர்களுக்கு வெறுப்பையே ஏற்படுத்தியது என்று மேற்கண்ட வசனங்களின் வாயிலாக அறிகிறோம். இதை போன்றே இன்று TNTJ இயக்கத்தினரின் இருப்பிடங்களுக்குச் சென்று குர்ஆன், ஹதீஃதை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட பிரசுரங்களைக் கொடுத்தால், நபி(ஸல்) அவர்களால் அனுப்பப்பட்ட இஸ்லாமிய அழைப்புக் கடிதத்தை பாரசீக மன்னன் கிஸ்ரா கிழித்ததைப் போன்று இவர்களும் வெறுப்புடன் பிரசுரங்களைக் கிழிக்கிறார்கள். குர்ஆன், ஹதீஃதை கொண்டு இவர்களிடம் பிரச்சாரம் செய்பவர்களை அடிப்பதற்கும் தயாராகி விடுகிறார்கள்.

TNTJ இயக்கத்தினரின் ஏராளமான நடவடிக்கைகள் குர்ஆன், ஹதீஃதிற்கு எதிராக உள்ளன என்று குர்ஆனை படித்துக் காண்பித்து அறிவுரை சொன்னாலும் திருந்துவதற்கு பதிலாக நம்மீது கடும் வெறுப்பு வருகிறது என்றால் இவர்கள் யாரைப் பின்பற்றுகிறார்கள்? எதை வெறுக்கிறார்கள்? நாங்கள் தவறு செய்தால் எங்களது சட்டையைப் பிடித்துக் கேளுங்கள் என்பார்கள். எங்களிடம் உள்ள தவறுகளை யார் சுட்டிக் காட்டினாலும் ஏற்போம் என்பார்கள். ஆனால் அவர்களின் தவறுகளை ஆதாரத்தோடு சுட் டிக் காட்டும்போது எதிரியை விட மோசமான நபராக நம்மைப் பார்ப்பார்கள். இந்தச் செயல் எங்களிடம் தூதர் வந்தால் அவரை ஏற்று நடப்போம் என்று சொல்லிவிட்டு, தூதர் வந்த பிறகு அவரை எதிர்த்த காஃபிர்களின் நடைமுறையை போன்றில்லையா?

மனநோயாளி என்பார்கள் :
நமது அடியாரை (நூஹை) பொய்யரென்றனர். பைத்தியக்காரர் என்றனர். குர்ஆன் : 54:9
உங்களிடம் அனுப்பப்பட்டுள்ள உங்கள் தூதர் (மூஸா) நிச்சயமாக பைத்தியக்காரர்தான் என்று அவன் (ஃபிர்அவ்ன்) கூறினான். குர்ஆன் 26:27 இவர் பைத்தியக்காரர் என்றும்(நபியே உம்மை) கூறுகின்ற னர். குர்ஆன் : 68:51 எந்தத் தூதர் வந்தாலும் பைத்தியக்காரர் என்றோ சூனியக்காரர் என்றோ கூறாமல் (காஃபிர்கள்) இருந்ததில்லை. குர்ஆன் : 51:52

சத்தியத்தை எடுத்துச் சொன்ன இறைத்தூதர்கள் அனைவரையும் அந்தக் காலத்து காஃபிர்கள் பைத்தியக்காரன் என்று சொன்னதைப் போன்றே இன்று TNTJ இயக்கத்தை எதிர்ப்பவர்களை மன நோயாளி என்று கூறுவதன் மூலமாக நாங்கள் இறைத் தூதர்களை எதிர்த்த காஃபிர்களின் வழி முறைகளைத்தான் பின்பற்றுகிறோம் என்று TNTJ இயக்கத்தினர்கள் நிரூபித்து வருகிறார்கள்.
1986களில் அறிஞர், சிந்தனையாளர், சத்தியத்தை மக்கள் மத்தியில் எடுத்து வைப்பவர், தவறுகளைச் சுட்டிக்காட்டினால் திருத்திக் கொள்ளும் மனப்பக்குவம் கொண்டவர் என்றெல்லாம் சகோதரர் அபூஅப்தில்லாஹ் அவர்களை புகழ்ந்து தள்ளினார்கள். ஆனால் இன்று TNTJவை எதிர்க்கிறார் என்ற ஒரே காரணத்திற்காக அவரை மன நோயாளி என்று சொல்லி ஆனந்தம் அடைகிறார்கள். மேலும் அதிராம்பட்டினம் விவாதத்தின் போது அதிரை தவ்ஹீத் ஜமாஅத்தினரை மன நோயாளி என்றார்கள். தங்கள் முன்னாள் கூட்டாளியான அப்பாஸ் அலீயை விவாத ஒப்பந்தத்தின் போது மனநோயாளி என்றார்கள். மொத்தத்தில் TNTJவை யார் எதிர்த்தாலும் அவர்களுக்கு மன நோயாளி என்ற பட்டத்தைச் சூட்டி மகிழ்ச்சியடைவார்கள். இவர்கள் ஒருவருக்கொருவர் இது குறித்து பேசி வைத்துக் கொண்டார்களா? மாறாக இவர்கள் வரம்பு மீறிய கூட்டமாவர். குர்ஆன் 51:53 என்று அல்லாஹ் கூறுவதை போன்று காஃபிர்கள் செய்த அதே விமர்சனத்தைக் கச்சிதமாகச் செய்பவர்கள் இறைத்தூதரின் வழிமுறைகளைப் பின்பற்றுபவர் களாக இருக்க முடியுமா?

மனோ இச்சைகளை பின்பற்றுபவர்கள் :
அல்லாஹ் அருளியதை அலட்சியம் செய்து மறுமையை நம்பாமல் இருப்பவர்கள்தான் தங்களது மனோ இச்சைகளைப் பின்பற்றி சட்டங்கள இயற்றி தாமும் வழிகெட்டு பிறரையும் வழிகெடுப்பார்கள். இத்தகைய பண்பு TNTJ இயக்கத்தினரிடம் ஏராளமாக இருப்பதைக் காணமுடிகிறது. உதாரணத்திற்கு ஒரு சட்டத்தை பார்ப்போம். கருத்து வேறுபாடுள்ள விசயங்களில் எங்களோடு விவாதம் செய்த பிறகே எங்களது பள்ளியில் மாற்றுக் கருத்து டையவர்கள் நோட்டீஸ் கொடுக்க நாங்கள் அனுமதிப்போம் என்று TNTJ இயக்கத்தினர் மனோ இச்சையைப் பின்பற்றி ஆணவமாகச் சட்டம் கூறி வருகிறார்கள்…. மக்களில் சிலருக்கு என்ன நேர்ந்தது? அல்லாஹ்வின் நூலில் இல்லாத நிபந்தனைகளை விதிக்கிறார்களே! அல்லாஹ்வின் நூலில் இல்லாத எந்த ஒரு நிபந்தனையும் செல்லாதது ஆகும். அது நூறு (முறை சொல்லப்பட்ட) நிபந்தனையாயினும் சரியே! அல்லாஹ்வின் நூலே (ஏற்று) பின்பற்றத் தகுந்ததாகும். அல்லாஹ்வின் நிபந்தனையே உறுதி வாய்ந்ததாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : ஆயிஷா(ரழி)
நூல்கள் : புகாரி 2155 முஸ்லிம் 2012 திர்மிதி 2050

மேற்கண்ட நபிமொழியை ஆதாரமாகக் காட்டி எந்த வசனத்தின் அடிப்படையில் இப்படியொரு நிபந்தனையை விதிக்கிறீர்கள் என்று TNTJவில் அட்டைப் போல் ஒட்டிக் கொண்டிருப்பவர்களிடம் கேட்டால், குர்ஆன், ஹதீஃத் அடிப்படையில் முறையான பதிலைத் தரமுடியாமல் நழுவி ஒளிந்து கொள்கிறார்கள். அவர்கள் உமக்கு பதிலளிக்காவிட்டால் அவர்கள் தமது மனோ இச்சைகளையே பின்பற்றுகின்றனர் என்பதை அறிந்து கொள்வீராக. அல்லாஹ்விடமிருந்து கிடைத்த நேர் வழியின்றி தனது மனோ இச்சையை பின்பற்றியவனை விட வழிகெட்டவன் யார்? நிச்சயமாக அல்லாஹ் அநீதி இழைக்கும் கூட்டத்திற்கு நேர்வழி காட்ட மாட்டான். குர்ஆன் : 28:50

தனது மனோ இச்சைகளை தனது கடவுளாக கற்பனை செய்தவனை நீர் பார்த்தீரா?
குர்ஆன்:25:43

அல்லாஹ்வின் நூலில் இல்லாத சட்டத்தைச் சொல்பவன் அல்லாஹ்வை மறுத்து மனோ இச்சைகளை அல்லாஹ்வாக்கி செயல்படுபவன் என்று மேற் கண்ட வசனங்கள் நமக்குத் தெளிவாக உணர்த்துகின்றன. ஒரே வரியில் சொல்வதென்றால் குர்ஆனுக்கும், இறைத் தூதரின் வழிமுறைகளுக் கும், TNTJ இயக்கத்தினர்களுக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை. மாறாக இறைத் தூதர்களை எதிர்த்த காஃபிர்களின் நடைமுறைகளுக்கும் இவர்களுக்கும் மிக நெருங்கிய தொடர்பு இருப்பதை, தினமும் குர்ஆனை பொருளுணர்ந்து படிப்பவர்கள் எளிதில் அறிந்து கொள்ளலாம். TNTJ இயக்கத்தினர் தூதர் வழியில் நடக்கும் தூய ஜமாஅத் நாங்கள் மட்டும் தான் என்று கூறி குர்ஆனைப் படிக்காத மக்களை ஏமாற்றி இயக்கத்தை வளர்த்து வருகிறார்கள்; இது தான் உண்மை. தங்களது அறியாமையின் காரண மாக TNTJ மட்டும் தான் நபிவழி நடக்கும் ஜமாஅத் என்று தவறாக நினைத்து மனத் தூய்மையான முறையில் செயல் படக்கூடிய சகோதர சகோதரிகள் உண்மையை விளங்கி அதிலிருந்து விடுபட நாம் அனைவரும் அல்லாஹ்விடம் துஆ செய்வோமாக.

குறிப்பு : TNTJ இயக்கத்தினர்களுக்கு காஃபிர் ஃபத்வா கொடுப்பதற்காக இந்த கட்டுரை எழுத படவில்லை. அவ்வாறு எழுதுவதற்கோ, பேசுவ தற்கோ நமக்கு அனுமதியும் இல்லை. TNTJயினரின் தவறுகளைச் சுட்டிக்காட்டித் திருத்த முற்படுவதே எங்களது நோக்கம் என்பதை நினைவூட்டுகிறோம்.


S முஹம்மது ஸலீம், ஈரோடு. செல் : 9842696165

{ 12 comments… read them below or add one }

jalal March 7, 2015 at 1:42 pm

very good understanding islamic mind.JAZAKALLH KHAIRAN.

Reply

mohamed risleen April 7, 2015 at 3:34 am

i am a srilankan.brothere neengal ungaludeye karuthuku muranaahe karuthu TNTJ le irunthalaum alahaana murayil solli irukkalam but blatant lie solli TNTJ ku avanamapdutahnum endu solli 2008 out aavine ithalil enru appattamaane poi solli eluthi irukireerhal allah unglauku nalla arivai tharuvaanahe aameen

Reply

sharfudeen March 10, 2015 at 1:46 pm

nee mudhalil endha amaippunu sollu

Reply

Mohamed Abdullah March 15, 2015 at 7:20 pm

ALLAH SHOWS US THE RIGHT PATH

Reply

sarfudeen March 16, 2015 at 4:47 pm

என்ன ஒரு பத்வா ?
நண்பர்களே இவர்களிடம் மிகவும் ஜாக்கிரதையாக இருங்கள்.
அல்லாஹ்வையும் அவனது தூதரையும் பின்பற்றினால் இவர்கள் பார்வையில் காஃபிர்களாம்.

Reply

S முஹம்மது ஸலீம், ஈரோடு. செல் : 9842696165 March 17, 2015 at 2:12 pm

ivargalin pechai kettu maargaththai unmaiyaaga sollum TNTJ vai kaafirgal endru kooraadheergal

moomingalai kaafirgal endru sollum indha kedu ketta naaigalai mutrilum purakkanippom

Reply

Abdur rehaman April 9, 2015 at 10:43 am

தொழுகை இல்லாத முஸ்லிம்களை நபி ஸல் காபிர் என்றுதான் சொல்கிறார்கள் ….. நீங்கள் அழகான வார்த்தை பேசவில்லை என்றாலும் நாய்கள் என்று குறிப்பிடுவது சரியல்ல““

Reply

Mohamed Nawaz May 16, 2015 at 1:08 am

காபீர் என்று பத்வா கொடுகபட்டவர்கள் இந்த TNTJ, அல்லாஹ்வும் & அவனது தூதரின் வார்த்தைகளை மதிப்பது தான் உண்மையான இஸ்லாம்.. (யார் எனது வாரிசுகளின் (இமாம்களின்) வழிகளை (வார்த்தைகளை) பின்பற்றவில்லையோ அவர்கள் என்னை சான்றவள்ளர் என்ற பெருமானார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். ஆகையால் சுன்னத்தான வழிமுறையை பின் பற்றுங்கள்.. TNTJ என்ற இயக்கத்தை பின்பற்றாதீர்கள். அவர்கள் நமது கண்மணி நாயகம் ரசூல் கரீம் முஹம்மது (ஸல்) அலைஹி வஸ்ஸலாம் அவர்களுடைய வார்த்தைகளை நம்பமாட்டார்கள், அந்த வார்தைகலையே பிழை என்றே கூறுகிறார்கள்.. ஏன் நமது இறைவனின் வசனத்திலேயே பிழை இருகின்றது என்று கூறினவர்கள் தான்.. ஆகையால் TNTJ இயக்கத்தினை பின்பற்றாதீர்கள்.அல்லாஹு சுபுஹாநாத்தாலா நம்மக்கு நேர் வழியை காட்டுவானாக மற்றும் நபிகள் நாயகத்தின் வார்த்தைகளை நம்புவோமாக!!! அமீன் !!! அமீன் !! யா ரப்பல் ஆலமீன்..

Reply

MUHAMMED May 19, 2015 at 12:17 am

SOLLUKA INNUM NERAYA SOLLUKA TNTJ VALACHIKU UTHAVUM

Reply

Alaudeen ksa July 21, 2015 at 5:18 pm

Assalamualikum சகோதர நீங்க சொல்லுவதர்க்கு எதுவிதமான அதாரம் இறுக்கா?(அல்லாவுக்கு பயந்து கொல்லூங்கள்)வீண் பழி TNTJ வை சுமத்தாதிங்க அப்புரம் கியமத் நாளில் அவர்களின் பாவாங்களை நீங்கள் சுமந்து வருவீர்கள் ….

Reply

Abu July 23, 2015 at 5:01 pm

Assalamu Alaikum wa rahamathullahi wa barakathu hu,

Nanbarhaley,
////////////S முஹம்மது ஸலீம், ஈரோடு. செல் : 9842696165 March 17, 2015 at 2:12 pm
ivargalin pechai kettu maargaththai unmaiyaaga sollum TNTJ vai kaafirgal endru kooraadheergal

moomingalai kaafirgal endru sollum indha kedu ketta naaigalai mutrilum purakkanippom/////////

itho aadharam!!!!!! innum venduma ???

meley sonnadu atthanayum unmai thaan ithai kankudaaha paarkathan seihirom, ithatrku aatharam veru thevaiya? ippadi ethartku ellam athaaram kettu kondey iruppeerhal naam sari illai endral thirunda muyarchikka vendum,

naam sariyaga irundhaal allah jallajalalhu athai anaithaiyum kavanippavan, engu kurai irukkiradu endru sari seivom

Assalamu alaikum

Reply

Mohamed Asath.S August 15, 2015 at 3:10 pm

WHO TOLD TNTJ IS TRU MUSLIM & THOWHEED JAMATH

Reply

Leave a Comment

Previous post:

Next post: