ஏகத்துவ வியாதி

in பொதுவானவை

எஸ்.ஹலரத் அலி,..திருச்சி-7

 

குர் ஆன், ஹதீஸ் முழுக்கத் தேடிப்பாருங்கள்…ஒரு முஸ்லிமை தவ்ஹீதுவாதி…ஏகத்துவவாதி என்று சொன்ன குறிப்பு ஏதேனும் உள்ளதா?
இல்லையே!

எங்கிருந்து எடுத்தீர்கள் இந்த ஏகத்துவ வியாதிகளை…

அல்லாஹ் மனிதர்களை இரண்டாக பிரிக்கின்றான்.

1.அவனுக்கு வழி படும் முஸ்லிம்.அவனுக்கு மாறு செய்யும் காபிர்.

2.அல்லாஹ் முஸ்லிமை இரண்டாக பிரித்துக் கூறுகிறான்..மூமின் அல்லது முனாப்பிகீன்.

ஒருவன் முஸ்லிம் ஆகிவிட்டாலே அதன் பொருள்…அவன் ஏக இறைவனை வணங்கி வழிபட்டு அவனுக்கு கட்டுப்படுபவன்.இதற்கு ஏகத்துவவாதி,தவ்ஹீதுவாதி என்ற தனிப்பெயரை அல்லாஹ்வும் கொடுக்கவில்லை.அல்லாஹ்வுடைய தூதர் ( ஸல்) அவர்களும் சூட்டவில்லை.

ஒன்று பட்ட உம்மத்தில் பிரிவினை ஏற்படுத்தி சுய ஆதாயம் அடையும் ஆசை கொண்ட ஆலிம்கள் சிலர்தான் ” தவ்ஹீது” என்ற சொல்லை பிரபலபடுத்தி பிராண்டட் பெயராக்கி விட்டனர்.

அல்லாஹ் கூறுவது…நீங்கள் முஸ்லிமாகவே அன்றி மரணித்து விடாதீர்கள் என்பதே யல்லாமல் ,” தவ்ஹீதுவாதியாகவே”…என்று கூறவில்லை.
எவன் ஒருவன் முஸ்லிம் பெயர் தாங்கியாக இருந்து இறைவனுக்கு இணை வைக்கும் செயலையும் செய்து இரட்டை வேசம் போடும் முனாப்பிகீன் என்னும் நயவஞ்சகனாக இருந்தால்…

நாளை மறுமையில் அல்லாஹ்வின் முன்னிலையில் அவன் தனியாக பிரிக்கப்படுவான்.

” முஜ்லிம்களே ( குற்றவாளிகளே!) இன்றைய தினம் நீங்கள் நல்லவர்களிடமிருந்து பிரிந்து நில்லுங்கள்.”

என்று அல்லாஹ் பிரித்து விடுவான்.

இன்று ஏகத்துவம் பேசும் ஆலிம் தலைவர்கள்…

அல்லாஹ் மறுமையில் பிரித்துக் காட்ட வேண்டிய வேலையை இம்மையிலேயே பிரித்து தாங்களும் ஆலிம் அல்லாஹ்வாக..மாறிவிட்டார்கள்.

சுருக்கமாக…ஒருவன் முஸ்லிம் என்றாலே அவன் தவ்ஹீதுவாதிதான்..ஏகத்துவவாதிதான்..

ஒவ்வொருவரும் தங்களை முஸ்லிம் என்று தான் அழைத்துக் கொள்ள வேண்டுமே ஒழிய …நான் தவ்ஹீது வாதி என்ற அல்ல…

பிரிவினை இயக்கங்களுக்கு இஸ்லாத்தில் இடமில்லை.இந்த ஹராமான இயக்கங்கள் எந்த பெயரில் வந்தாலும் சரியே!…

சிந்தித்து செயல் படுவோம்!

Leave a Comment

Previous post:

Next post: