உணரப்படாத அறியப்படாத பாவங்கள்

in சந்திர நாட்காட்டி

“உணரப்படாத அறியப்படாத பாவங்கள்” 

வானங்களையும் பூமியையும் படைத்த நாளிலிருந்தே அல்லாஹ்விடம் அவனுடைய பதிவுப் புத்தகத்தில் மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டே ஆகும்  ( 09:36,) என்று ஏக இறைவன் எழுதிவிட்டான்

ஒவ்வொரு வருடத்திற்குமான மாதங்கள் வாரங்கள் நாட்கள் மணிகள் நிமிடங்கள் நொடிகள் அனைத்தையும் துல்லியமாக அவனது ஏட்டில் எழுதி முடித்துவிட்டான்

வருடங்களையும் மாதங்களையும் வாரங்களையும் நாட்களையும் மணித்துளிகளையும் நிமிடங்களையும் நொடிப்பொழுதுகளையும் மனிதன் இலகுவாகவும் துல்லியமாகவும் அறிந்துகொள்ளும் பொருட்டுக் குளறுபடிகளைவிட்டும்  பாதுகாக்கப்பட்டதாகவும் மாறுபாடுகளற்றதுமாகவும் எதுவித தவறுகளற்றதுமாகவும் மிக மிகத் துல்லியமாகப் பிரபஞ்ச அசைவுகளையும் ஏற்படுத்தினான் (06:96, 07:54, 16:12, 13:02, 14:33,21:33, 29:61, 31:29, 35:13, 36:38-40, 39:05, 41:37, 55:05, 71:16, 06:77, )

ஏக இறைவனின் ஏற்பாட்டிலுள்ள பிரபஞ்ச அசைவுகளின் துல்லியமான முடிவுகளுக்கு ஏற்பவும்  நிரூபிக்கப்பட்ட அறிவியல் சான்றுகளுக்கு அமைவாகவும் குர்ஆன் கதீஸுக்கு முரணில்லாத வகையில்  மனித சமுதாயத்திற்குத் துல்லியமான தொரு கலண்டரை அறிமுகப்படுத்திக் கொடுக்கக் கடமைப்பட்டுள்ள உலகளாவிய  முஸ்லீம்கள் தடுமாற்றத்திற்கும் குழப்பத்திற்கும் ஆளாகி இஸ்லாமிய ஹிஜ்ரி கலண்டர் என்ற பெயரில்

குர்ஆன் ஹதீஸின் நேரிய அடிப்படை எதுவுமின்றி ஒரு திகதிக்கு மூன்று நாட்கள் ஒரு நாளைக்கு மூன்று திகதிகள் என்ற கணக்கில் முஸ்லீம் சமுதாயத்தைக் கூறுபோட்டு  பிரதேசத்திற்குப் பிரதேசம் நாட்டிற்கு நாடு பொருந்தாததும் குழப்பகரமானதும் பலவிதமான சந்தேகங்களைத் தோற்றுவிக்கக் கூடியதும் நடைமுறைச் சாத்தியமற்றதும் நம்பிச் செயல்படுத்த முடியாததும்  எதற்குமே லாயக்கற்றுக் குப்பைத்தொட்டியில் வீசி எறியப்படவேண்டிய நடைமுறைக்கு வேறு நாட்டு நடப்பிற்கு வேறு என்ற முன்மாதிரியற்ற போலியான கலண்டரைத்தான் அவரவர்களது பிரதேசங்களில் அறிமுகப்படுத்தி மக்களைக்  குழப்பத்திலாழ்தி வருகின்றனர்

இது விடயத்தில் பெரிதும் முன்மாதிரியாகத் திகளவேண்டிய  செயல்படவேண்டிய சவூதி அரேபியாவின் அறிவியலாளர்கள் கடந்த ஹிஜ்ரி 1300 ஆம் ஆண்டுமுதல் ஹிஜ்ரி 1429 வரை சுமார் 130 வருடங்களாகக் கணக்கீட்டின் அடிப்படையில் அமைந்த  துல்லியமான ஹிஜ்ரி நாட்காட்டியை அச்சிட்டு அதன் அடிப்படையில் சரியாகச் செயல்பட்டு வந்தனர் அதன்பிறகு சிலரின் சலபித்துவ ஊடுருவலால் தவறான வழிகாட்டுதலின் பேரில் சில பொருத்தமற்ற மாற்றங்களைச் செய்து ஹிஜ்ரி 1420 இல் புதிய “ உம்முல் குரா “   என்ற பெயரில் வணக்கதிற்கு வேறு நாட்டு நடப்பிற்கு வேறு என்று கூறிக்கொண்டு பல குழப்பத்துடன் செயல்பட்டு வருவது வேதனையான விடயமாகும்

உதாரணமாக வெள்ளிக்கிழமை நாள் ஒன்றாக இருந்த போதிலும் அங்குள்ள திகதியும் இங்குள்ள திகதியும் மற்ற நாடுகளிலுள்ள திகதியும் ஒருசேரப் பொருந்திப் போவதில்லை நாட்டிற்கு நாடு  மாறுபாடு ஏற்படுகிறது

அல்லாஹ்வின் கோபத்திற்கும் நிரந்தர, வெறுப்பிற்க்கும், சாபத்திற்கும், ஆளாகி சட்ட ரீதியாகவும் சமூக ரீதியாகவும் இழிவுக்கும் வறுமைக்கும் ஆளாக்கப்பட்ட யூதர்களின் (02:61, 05:64, & -புகாரி 2223, 2224, 3460, 3488, 4887, 5933–5942, ) வழிமுறையைப் பின்பற்றி எவன் இன்னொரு சமுதாயத்தவரின் கலாச்சாரங்களைப் பின்பற்றி அவர்களைப் போன்று நடக்கின்றானோ அவனும் அவர்களைப் போன்றவன்தான் என்று அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்கள் கூறிய ( அபூதாவூத் முஸ்னத் அஹ்மத் ) கண்டணத்திற்கும் ஆளாகி மற்றவர்களின் கலாச்சாரங்களைப் பின்பற்றி அதுபோன்று நடப்பவன் நம்மைச் சார்ந்தவன் அல்ல (திர்மிதி ) என்றுகூறிய வெறுப்பிற்க்கும் முஸ்லீம்கள் ஆளாகியவர்களாக

முதலாவது நாளில் சந்திரன் சுமார் 48, நிமிடங்களுக்குப் பிறகு  சூரியனைப் பின்தொடர்ந்து கிழக்குத் திசையில் ( 91:01,02, ) உதித்து சுமார் பனிரெண்டு மணி நேரங்களைக் கடந்து மாலையில் சூரியன் மறைந்தபிறகு அதனைத் தொடர்ந்து  மஃரிபு நேரம் மேற்குத் திசையில் மறையப் போகும் பிறையைப் பார்த்துவிட்டுப் பிறை பிறந்துவிட்டது மாதம் ஆரம்பித்து விட்டது என்று முடிவுபண்ணி அடுத்த இரண்டாவது நாளை முதலாவது நாளாக எடுப்பதாலும்  அல்லது முதலாவது நாளின் பிறை தென்படாது போனால் 36 மணி நேரங்களைக் கடந்து மஃரிபு நேரம் மேற்குத் திசையில் மறையப் போகும் இரண்டாவது நாளின் பிறையைப் பார்த்துவிட்டு அடுத்த மூன்றாவது நாளை முதலாவது நாளாக எடுத்து வருவதாலும்  மார்க்க ரீதியாகவும் சமூகரீதியாகவும் முஸ்லீம் சமூகத்திற்கு ஏற்படும் உணரப்படாத விபரீதங்களைக் குர்ஆன் ஹதீஸ் ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டக் கடமைப்பட்டுள்ளோம்

1439 துல்ஹஜ் மாதத்தின் பிறைகளின் படித்தரங்களைப் பார்து வந்த அடிப்படையிலும் துல்லியமான கணக்கீட்டின் அடிப்படையிலும் உன்மையிலேயே 1440 புதுவருட முஹர்ரம் மாதத்தின் முதலாவது நாள்  ஆரம்பித்தது 10 – 09 – 2018 திங்கள் கிழமையாகும் ஆனால் இலங்கை அரசின் அங்கீகாரம் பெற்ற கொழும்பு பெரிய பள்ளிவாசல் நிர்வாக சபை பிறைக் குழுவினர் மேற்சொன்ன அதே மூடத்தனமான நடைமறையைக் கடைப்பிடித்து 1440 முஹர்ரம் மாதத்தின் மூன்றாவது நாளாகிய 12 – 09 – 2018 புதன் கிழமையை முதலாவது நாளாக அறிவித்துப் பிறை விடயத்தில் அவர்களது உலக மகா பெரிய மூடத்தனத்தைப் பறைசாற்றியுள்ளார்கள் என்பது வேதனை கலந்த உன்மையாகும்

( மனிதர்களே ! ) உங்களுக்காக உங்கள் இரட்சகனிடமிருந்து இறக்கி வைக்கப்பட்ட ( இவ் வேதத் ) தைப் பின்பற்றுங்கள் அவனையன்றி (மற்றெவரையும் உங்களுக்கு ) ப் பாதுகாவலர் ( களாக ஆக்கி அவர் ) களை ( க் கண்மூடிக் குருட்டுத்தனமாகப் ) பின்பற்றாதீர்கள் ( எனினும் இதனைக் கொண்டு ) நீங்கள் மிகக் குறைவாகவே நல்லுணர்ச்சி பெறுகிறீர்கள் ( 07:03,)

ஓர் இறை நம்பிக்கையாளர் ஒரே புற்றில் இரண்டு முறை தீண்டப்பட மாட்டார் ( அபூ ஹுரைரா (ரலி) புகாரி -6133,)

என்றெல்லாம் அல்லாஹ்வும் அவனது தூதர் (ஸல்) அவர்களும் சொல்லியிருக்கையில் அவற்றைச் சிறிதேனும்  கண்டுகொள்ளாத நமது முஸ்லிம் சமூகத்தில் பெரும்பாலானவர்கள் பிறை விடயத்தில் மேலும் மேலும் கண்மூடிக்  குருட்டுத்தனமாகப் பெரிய பள்ளிவாசல் பிறைக் குழுவினரின் குர்ஆன் ஹதீஸுக்கு முரணான தவறான பிறை அறிவிப்பு முறையைப்  பின்பற்றியே வருகின்றனர் இதனால் இம்மை மறுமையில் ஏற்படப்போகும் பாரதூரமான விளைவுகளைக் கொஞ்சமேனும் கண்டுகொள்வதாகத் தெரியவில்லை இதோ உங்கள் கவனத்திற்கும் சிந்தனைக்குமாக

01 – உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ அவர் அம்மாதம் (முழுவதும்) நோன்பு நோற்க வேண்டும் (02:185) என்று ஏக இறைவன் சொல்லியிருக்க அவற்றைக் கண்டுகொள்ளாது பிறைமாத கடைசி நாளில் புவிமைய்ய சங்கம நிகள்வு ஏற்பட்டு புதிய மாதத்தின் சஹர் நேரத்தை  உலகம் அடைந்திட்ட போதிலும் முதலாவது நாளையும் இரண்டாவது நாளையும் தவற விட்டு விட்டு மூன்றாவது நாளை முதலாவது நாளாக எடுக்கும் பாவம் தொடர்கிறது

02 – ரமழான் பிறை ஒன்றிலிருந்து ஷவ்வால் பிறை ஒன்று வரையான
_கணக்கிடப்பட்ட குறிப்பிட்ட சில நாட்களில் ( 02:183-185 ) நோன்பு நோற்க வேண்டும் என்ற ஏக இறைவனின் கட்டளை வரம்பு மீறித் தகர்க்கப்பட்டு சில நாட்கள் விடுபட்டுத் தவறு செய்யப்படுகிறது இதனால்

03 –  ரமழானின் ஆரம்ப ஒருநாள் அல்லது இரண்டு நாட்கள் ஷஃஅபான் மாதத்தின் இறுதிக்குள் சென்று விடுகிறது இதனால்

04 – வருடா வருடம் ரமழானில் கடமையான நோன்பின் ஆரம்ப ஒரு நோன்பு அல்லது இரண்டு நோன்பு பெரும்பாலானவர்களுக்குத் தவறி விடுகிறது இதனால்

05 – ரமழான் மாதம் தக்க காரணம் இன்றி ஒருவன் நோன்பு நோற்பதைத் தவற விட்டால் பின்னர் வாழ்நாள் முழுவதும் -கழா- நோன்பு நோற்றாலும் ரமழானில் விட்ட நோன்பிற்கு அது ஈடாக மாட்டது ( அபூ ஹுரைரா ( ரலி ) இப்னு மஸ்ஊத் ( ரலி ) புகாரி – பாகம் 02 பக்கம் 608- பாடம் 29, & பக்கம் – 622 – பாடம் – 40 , 1949, 1952, 1953, திர்மிதி , அபூதாவூத் , இப்னு மாஜா , அல் ஹதீஸ் – 3875 , ) என்று அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்கள் எச்சரித்த வாறே பேரிழப்பிற்கு ஆளாவது

06 – ரமழானின் பிந்திய கடைசிப் பத்து நாட்களில் உள்ள ஒற்றைப்படை ( யான 21, 23, 25, 27, 29, போன்ற ) நாட்களில் லைலதுல் கத்ரைத் தேடுங்கள் ( அபூ ஸயீத் (ரலி) இப்னு அப்பாஸ் (ரலி) உபைதா பின் ஸாமித் (ரலி) இப்னு உமர் (ரலி) அபூ ஸயீத் அல் குத்ரி (ரலி) ஆயிஷா(ரலி) புகாரி- 2015 –2024,2027, ) என்று கூறிய அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்களது கட்டளைக்கு மாற்றமாக 22, 24, 26, 28, 30, போன்ற இரட்டைப் படை நாட்களில் அல்லது மூன்றாவது நாளை முதலாவது நாளாகக் கொள்வதால் 23, 25, 27, 29, ஷவ்வால் ஒன்று ஆகிய தவறான நாட்களிலும் புனித லைலதுல் கத்ரைத் தேடப்படுகிறது (97:01-05)

07 – புஹாரி – 1990–1995, 1197, முஸ்லிம் , திர்மிதி – 768,769, அபூதாவூத் , முஅத்தா  மாலிக் , இப்னுமாஜா , தாரமி , முஸ்னத் அஹ்மத் , தஹாவி , பைககீ , இப்னு அபீஷைபா , இப்னு ஜாரூத் , போன்ற பதிமூன்று ஆதாரபூர்வமான நூல்களில்

இப்னு அப்பாஸ் (ரலி) அபூஹுரைரா (ரலி) உமர் (ரலி) உக்பா பின் ஆமிர் (ரலி) அபூஸைத் (ரலி) அபூஸயீத் அல் குத்ரி (ரலி) அபூ உவைத் (ரலி)  நுபைஷா அல் ஹுதலீ (ரலி) ஆயிஷா (ரலி) போன்றோர் மூலமாக சுமார் அறுபதுக்கும் மேற்ப்பட்ட அறிவிப்பாளர்கள் வரிசையில் இடம் பெறும் ஆதார பூர்வமான அறிவிப்பாக வரும் –

நோன்பை முடித்துப் பெருநாளைக் கொண்டாடும் – ஷவ்வால் மாத முதலாவது – தினமும் , குர்பானி இறைச்சியை நீங்கள் சாப்பிடும் நாளுமாகிய ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரு நாட்களில் நோன்பு நோற்க நபி(ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள் என்ற கட்டளைக்கு மாற்றமாக ஷவ்வால் மாத பிறை ஒன்றிலும் ஹஜ் பெருநாளுக்குரிய துல்ஹஜ் பிறை பத்திலும் தடை செய்யப்பட்ட ஹராமான நோன்பு நோற்கப்படுகிறது

08 – நபி (ஸல்) அவர்கள் துல்ஹஜ் பிறை எட்டில்  இஹ்ராம் அணிந்து வாகனத்தில் ஏறி மினா சென்று லுஹர் , அஸர் , தொழுகைகளை அங்கு தொழுதார்கள் ( அனஸ்பின் மாலிக் (ரலி) ஜாபிர் (ரலி)இப்னு உமர் (ரலி) அதாஃ (ரஹ்) அபுல் ஸுபைர் (ரஹ்) உபைத் பின் ஜுரைஜ்(ரஹ்) அப்துல் அஸீஸ் பின் ருஃபை (ரஹ்) புகாரி – பாகம் 02, பக்கம் – 380, பாடம் -85, பக்கம் 379, பாடம் – 82, & 1763, 1764, 1653, 1654, ) என்று வரும் அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்களது சுன்னத்தான  நடைமுறைக்கு மாற்றமாக துல்ஹஜ் பிறை ஒன்பதில் மினாவிலிருந்து ஹஜ் கிரிகைகள் ஆரம்பிக்கப் படுகிறது இதனால்

09 – ஏக இறைவனால் கணக்கிடப்பட்ட குறிப்பிட்ட மாதத்தின் குறிப்பிட்ட  சில நாட்களில் ( 02:189, 197, ) ஆரம்பிக்கப்பட வேண்டிய புனித ஹஜ் கிரிகையானது அல்லாஹ்வின் சட்ட வரம்பை மீறித் தவறுதலான நாட்களில் நடைமுறைப் படுத்தப் படுகிறது ,

10 – நான் எவ்வாறு ஹஜ் கடமையை நிறைவேற்றக் கண்டீர்களோ அப்படியே நீங்களும் (ஹஜ்) செய்ய வேண்டும் ( முஸ்லிம் ) என்று அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்கள் கூறியதற்கு மாற்றமாக துல்ஹஜ் பிறை ஒன்திற்குப் பதிலாக  துல்ஹஜ் பிறை பத்தில் ஹாஜிகளான உலக மக்கள் அரபாவில் நிறுத்தப்படுகின்றாரகள்

11 – இதனால் முஜ்தலிபாவில் தரிக்கும் நாளிலும் மாற்றம் ஏற்படுகிறது

12 – துல் ஹஜ் பிறை ஒன்பதாவது அரபா தினத்தில் நோன்பு நோற்பது முந்தைய ஒரு வருடத்தினதும் வரும் அடுத்த ஒரு வருடத்தினதும் பாவங்களுக்குப் பரிகாரமாகும் ( அபூ கதாதா ( ரலி ) முஸ்லிம் – 1162, திர்மிதி , ரியாதுஸ் ஸாலிஹீன் – 1250, )  என்று நபி(ஸல்) அவரகள் கூறியதற்கு மாற்றமாக துல்ஹஜ் பிறை பத்தாவது பெருநாள் தினமான ஹராமான நாளில் அரபா நோன்பு நோற்கப்படுகிறது ,

13 – “அய்யாமுத் தஸ்ரிக் “எனும் துல்ஹஜ்மாத 11, 12, 13, ஆகிய நாட்களை (அபூஹுரைரா (ரலி) இப்னு அப்பாஸ் (ரலி) அக்பா பின் ஆமிர் (ரலி) நுபைஷா அல் ஹுதவீ (ரலி) ஆயிஷா (ரலி) புகாரி பாகம் 01 – பக்கம் – 731, பாடம் – 11, & பக்கம் 732 பாடம் – 12,) 12, 13, 14, அல்லது 13, 14, 15, ஆகிய தவறான நாட்களாக மாற்றிக் கடைப்படித்து வருகின்றார்கள் அவ்வாறே

14 – மூன்று ஜம்ராக்களிலும் கல் எறிதல் ( புகாரி பாகம் – 02 பக்கம் – 406, & 1723, 1685-1687, 1683, 1670, ) ,  முடி களைதல் , குர்பானி கொடுத்தல் ( புகாரி -பாகம் – 02 – பக்கம் – 451,& 1746–1754, பக்கம் – 406, & 1723,1685–1687,  1710–1720, 1725–1730 ) போன்றவற்றுக்கான நாட்களிலும் நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்த சரியான உரிய நாட்கள் தவறிய நிலையில் தவறான நாட்களிலேயே அக் கிரிகைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன

15 – நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஹஜ் செய்தோம் துல்ஹஜ் பத்தாம் நாள் நாங்கள் மக்கா சென்று – தவாஃபுல் ஸியாரத் – செய்தோம் ( இப்னு அப்பாஸ் (ரலி) இப்னு உமர் (ரலி) ஆயிஷா (ரலி) புகாரி – பாகம் – 02 – பக்கம் – 442, பாடம் – 129, & 1732, 1733, ) ஆகிய நடைமுறைக்கு மாற்றமாகத் தவறான நாளாகிய துல்ஹஜ் பிறை 11 இல் -தவாஃபுல் ஸியாரத் செய்யப்படுகிறது

16 – துல்ஹஜ் பிறை பத்தில் கொண்டாடப்பட வேண்டிய ஹஜ்ஜுப் பெருநாள் துல்ஹஜ் பிறை – 11, அல்து பிறை – 12 ஆகிய பெருநாள் அல்லாத தவறான நாட்களில்   கொண்டாடப் படுகிறது

17 – தவறான பிறைபார்க்கும் முறைமையினால் துல்ஹஜ் பிறை 10, எனக்கருதி பிறை 11, அல்லது பிறை 12, ஆகிய நாட்களில் ஹஜ்ஜுப்  பெருநாள் கொண்டாடப் படுவதால் அதற்கு அடுத்தநாளான பிறை 13, அல்லது அதற்கு அடுத்த நாளான பிறை 14, அன்று பூரண பெளர்ணமி நிலவு ஏற்படுகிறது நிச்சயமாக அன்று பெளர்ணமி நாள்தான் என்பதை அன்று நிகளும் சந்திர கிரகணம் உறுதிப்படுத்துகிறது , ஆனால் இவர்களது தப்பான கணக்கின்படி அன்று பிறை 11, அல்லது பிறை 12, மாத்திரமே அப்படியானால் பிறை 11,அல்லது 12, ஆவது நாளில் பெளர்ணமி ஏற்படுமா ? அப்படியானால் ஒரு மாதம் என்பது 12+12= 24 நாட்களா ? உன்மையில் அன்று 14 ஆவது அல்து 15 ஆவது தினத்தின் சரியான பெளர்ணமிதான் ஆனால் இவர்களது தவறான பிறைபார்க்கும் முறைதான் தப்பான பிறைக் கணக்கைக் காட்டுகிறது

18 – ஒரு மாதம் என்பது குறைந்த பட்சம் 29 நாட்களும் கூடிய பட்சம் 30, நாட்களுமாகும் (அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அபூ ஹுரைரா (ரலி) உம்மு சலமா (ரலி) அனஸ் (ரலி) புகாரி – 1907–1911, ) என்று அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்கள் கூறியதற்கு மாற்றமாக இவர்களது தவறான பிறைபார்கும் முறையினால் ஒருமாதம் என்பது குறைந்த பட்ச எண்ணிக்கையான 29 தை விட குறைவாகவும் கூடிய பட்ச எண்ணிக்கையான 30, தை விட அதிகமாகவும் ஆகிவிடுகிறது உதாரணமாக கடந்த ஹிஜ்ரி 1439 ரமழான் மாதம் 28 இல் முடிந்ததே

19 – இறை நியதிப்படி பிரபஞ்ச அசைவுகளால் உண்டாகும் துல்லியமான மாற்றங்களின் விளைவாக  அறிவியலால் துல்லியமாக நிரூபிக்கப்பட்டு 29 நாட்களைக் கொண்ட மாதங்களையெல்லாம் 30+30 ஆக மாற்றி வருகின்றார்கள்

20 – இவ்வாறு 29 நாட்களைக்கொண்ட  மாதங்களையெல்லாம் முப்பது நாட்களைக் கொண்டதாகப் பூர்தி செய்து வருவதால் புதிய மாதங்களின் ஆரம்ப ஒருநாள் அல்து இரு நாள் கடந்த மாதத்தின் இறுதிக்குள் சென்றுவிடுகிறது

21 -சில வேளை இவ்வாறு 29 நாட்களைக் கொண்டதாக வரும் துல்ஹஜ் மாதத்தையும் முப்பதாகப் பூர்த்திசெய்து வருவதால் புதிய வருட முஹர்ரம் மாதத்தின் ஆரம்ப ஒருநாள் அல்லது இருநாள் கடந்த வருட துல்ஹஜ் மாத இறுதிக்குள் சென்றுவிடுகிறது

22 – புதுவருட முஹர்ரம் மாதம் மாத்திரமல்ல அல்லாஹ்வும் அவனது தூதர் (ஸல்) அவர்களும்  புனிதமான மாதங்கள் என்று கூறிய ( 09:36, 05: 02, 02:217, அபூபக்ரா (ரலி) புகாரி – 4662, 3197, 4406, 5550, 4747, முஸ்லிம் – 3467, ) ரஜப், துல்கஅதா, துல்ஹஜ், முஹர்ரம், போன்ற அனைத்து புனிதமான மாதங்களையும் இவ்வாறே முன்னும் பின்னுமாக மாற்றி விடுகின்றார்கள் இது – புனித மாதத்தை அவமதிக்காதீர்கள் ( 05:02, ) என்று கூறிய ஏக இறைவனின் கட்டளையையும் மீறிய வரம்பு கடந்த  செயலாகும்

23 – பெரும்பாலும் புதிய மாதங்களின் ஆரம்ப ஒருநாள் அல்லது இரு நாட்கள் கடந்த மாதத்தின் இறுதிக்குள் சென்று விடுவதால் அந்த மாதத்தைக்கொண்டு இந்த மாதத்திற்குள்ளும் இந்த மாதத்தைக் கொண்டு அந்த மாதத்திற்குள்ளும்  செலுத்திவிடுவதால் குறைஷியர்களைப் போன்று மாதங்களை முன்னும் பின்னுமாக்கும் நிராகரிப்பு ( 09:37, ) எனும் கொடிய குற்றத்திற்கு ஆளாக நேருகிறது

24 – மாதங்களை மாத்திரமல்ல முஹர்ரம் மாதத்தின் ஆரம்ப ஒருநாள் அல்லது இரு நாட்களை துல்ஹஜ் மாதத்தின் இறுதிக்குள் செலுத்தி விடுவதால் வருடங்களையே முன்னும் பின்னுமாக மாற்றிவிடுகின்றார்கள் இது வரம்பை அத்தமீறிய செயலாகும்
உதாரணமாக இவ்வருட 1440 முஹர்ரம் மாதத்தின் ஆரம்ப இரண்டு நாட்களை 1439 துல்ஹஜ் மாதத்தின் இறுதிக்குள் செலுத்திவிட்டு மூன்றாவது நாளையே முதலாவது நாளாக எடுத்து இவ்வருடத்தை அவ்வருடத்திற்குள் தள்ளிவிட்டார்களே

25 – ரமழானுக்குப் பின்னர் நோன்புகளில் மிகச் சிறந்தது அல்லாஹ்வின் – புனித – மாதமான “ முஹர்ரம் “ மாத – ஆஸூரா – நோன்புதான் ( அபூஹுரைரா (ரலி) புகாரி – 2000–2007, 1592, 3397,4501–4504, 4680, 1893, 3942, முஸ்லிம் – 1130, 1162, 1163,) என்றும் அது கடந்த ஆண்டின் பாவங்களை மன்னித்து விடும் ( அபூ கத்தாதா (ரஹ்) முஸ்லிம் ) என்றும்  வரும் ஆண்டில் நான் இருந்தால் நிச்சயமாக முஹர்ரம் ஒன்பதாவது நாளிலும் நோன்பு நோற்பேன் (அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி) முஸ்லிம் – 1134, ரி- ஸா – 1253, ) என்றெல்லாம் அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்கள் எமக்குக் கூறிய முஹர்ரம் மாத ஒன்பதாம் , பத்தாம் , நாளின் நோன்புகள் 10, 11, அல்லது 11, 12, ஆகிய நாட்களில் நோற்கப் படுகிறது

26 – ஒவ்வொரு மாதமும் “ அய்யாமுல் ஃபீழ் “ எனும் 13, 14, 15, ஆகிய நாட்களில் மூன்று நாட்கள் நோன்பு நோற்பது காலம் முழுவதும் நோன்பு நோற்பது போலானதாகும் ( அப்துல்லாஹ் இப்னு அம்ரு இப்னு ஆஸ் (ரலி) அபூஹுரைரா (ரலி) கதாதா இப்னு மில்ஹான் (ரலி) அபூதர் (ரலி) புகாரி – பாகம் – 02-பக்கம் – 648, பாடம் – 60, & 1979–1981, முஸ்லிம், 1159, அபூதாவூத் – 2449, திர்மிதி – 761, ரியாதுஸ் ஸாலிஹீன் பக்கம் 519, பாடம் 230, & 1258-1264, ) என்று 13, 14, 15, ஆகிய நாட்களில் நோன்பு நோற்குமாறு அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்கள் கூறியதற்கு மாற்றமாக 14, 15, 16, அல்லது 15, 16, 17, ஆகிய தவறான நாட்களில் அந்த சுன்னத்தான நோன்பு நோற்கப்படுகிறது

27 – உங்களில் எவரேனும் மனைவியரை விட்டு மரணித்தால் அம் மனைவியர் நான்கு மாதமும் பத்துநாளும் பொறுத்திருக்க வேண்டும் (02:234, 65:04, புகாரி – 1280–1282, 4531, 5334–5345, அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி) இப்னு அப்பாஸ் (ரலி) உம்மு அத்திய்யா (ரலி) உம்மு ஹபீபா பின்த் அபீசுஃப்யான் (ரலி) உம்மு ஸலமா(ரலி) ஜைனப் (ரலி) உம்மு ஹபீபா (ரலி) ஜைனப் பின்து அபீ ஸலமா (ரலி) என்று அல்லாஹ்வும் அவனது தூதர் (ஸல்) அவர்களும் கூறிய சட்டத்திற்கு மாற்றமாக இத்தா எனும் காத்திருப்பு நாட்களில் கூடுதல் குறைவு ஏற்படுகிறது. மேலும்.

28 – புனித ரமழான் மாதத்தில்.  நபி (ஸல்) அவர்கள் புனித லைலதுல் கத்ரைத் தேடி பள்ளிவாசலில் தரித்திருக்க நாடினால் இரவு பகல் 24 மணி நேரங்களைக்கொண்ட ஒரு சுப்ஹுத் தொழுகையிலிருந்து மறு சுப்ஹுத் தொழுகை வரை எடுத்துக் கொள்வார்கள்.

நபி (ஸல்) அவர்கள் இஃதிகாஃப் இருக்க நாடினால் ஸுப்ஹ் தொழுதுவிட்டுப் பொழுது புலரும் அதிகாலைவேளையில்  இஃதிகாஃப் இருக்கும் இடத்திற்குள் சென்றுவிடுவார்கள் ( ஆயிஷா (ரலி) புகாரி – பாகம் – 02 -பக்கம் – 689, பாடம் – 14,& 2041, 2033, முஸ்லிம் – 2007, அபூதாவூத் – 2107, நஸயி – 702, திர்மிதி – 721, இப்னுமாஜா – 1761, முஸ்னத் அஹ்மத் – 24710 )

நபி (ஸல்) அவர்கள் இஃதிகாஃப் இருந்துவிட்டுப் பொழுது புலரும்போது அதி காலை வேளையில் இஃதிகாஃபிலிருந்து வெளியேறுவார்கள் (ஆயிஷா (ரலி) புகாரி – பாகம் – 02 – பக்கம் – 684 – பாடம் – 09,எனும் தலைப்பிலும் பக்கம் – 688 – பாடம் – 13 – என்ற தலைப்பிலும் மேலும் பார்க – 2027, 2036, 2040, 2045,) ஆனால் இங்கே நபிவழிக்கு மாற்றமாக இஃதிகாஃப் இருக்க நாடினால் “மஃரிப்” தொழுதுவிட்டு இஃதிகாஃப் இருக்கும் இடத்திற்குள் சென்றுவிடுவார்கள். இஃதிகாஃப் இருந்துவிட்டு மஃரிப் நேரம் வெளியேறுகின்றார்கள்.

□ மேலே நாம் பட்டியலிட்டுச் சுட்டிக் காட்டியவற்றை மறுபடியும் மறுபடியும்  மீட்டுப்பாருங்கள் அதன் சத்தையும் சாறையும் உணருங்கள் எத்தனை பாவங்கள் எத்தகைய பாவங்கள் என்பதை அறிவு பூர்வமாக ஆதாரத்தின் அடிப்படையில் உணருங்கள் இப்போது வாருங்கள் இதனைப் பாருங்கள்

■ சவூதி அரேபியாவிலுள்ள மத்யனுக்கும் சினாய் தீபகற்பத்திலுள்ள தூர் மலைக்கும் இடையே உள்ள அய்லா எனும் கடலோரக் கிராமத்தில் வசித்த யூதர்கள் இறைவனால் தொழிலுக்குத் தடை செய்யப்பட்ட புனித  பண்டிகை தினமான சனிக்கிழமையாகிய ஒரேயொரு நாளில் அல்லாஹ் புனிதமாக்கியவற்றைக் கெடுப்பதற்காகத் தந்திரம் செய்து இறையாணையை மீறி மீன் பிடித்தனர் அதற்காகச் சில வெளிக் காரணிகளை அவர்கள் தந்திரமாகக் கையாண்டார்கள் ஆனால் அவை அந்தரங்கத்தில் இறை சட்டமீறலாகவே இருந்தன இந்த ஒரேயொரு காரணத்திற்காக

அவர்களை இழிவடைந்த குரங்குகளாகவும் பன்றிகளாகவும் இறைவன் உருமாற்றினான் (07:66,02:65,66,07:163–166, 05:60, இப்னு அப்பாஸ் (ரலி) சுத்தீ (ரஹ்) கத்தாதா (ரஹ்) ஷைபான் (ரஹ்) அதாஉ அல்ஃகுராசானி (ரஹ்) ளஹ்ஹாக் (ரஹ்) இக்ரிமா (ரஹ்) அபுல் ஆலியா (ரஹ்) சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அபூ ஜஅஃபர் அர்ராஸீ (ரஹ்) முஜாஹித் (ரஹ்) இப்னு அபீஹாத்திம் (ரஹ்) ராஸீ (ரஹ்) தஃப்சீர் இப்னு கஸீர் பாகம் 01-பக்கம்- 242–249, பாகம் – 03- பக்கம்- 927–937,)

ஆகையால் ஓய்வுநாளை ஆசரிப்பீர்களாக அது உங்களுக்குப் பரிசுத்தமானது அதைப் பரிசுத்தக் குலைச்சலாக்குகிறவன் கொலையுண்டாகக் கடவன் அதிலே வேலை செய்கிற எந்த ஆத்துமாவும் தன் ஜனத்தின் நடுவில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான் – விவிலியம் பழைய ஏற்பாடு யாத்திராகமம் 31:14,

இறைவனால் புனிதமாக்கப்பட்ட ஒரேயொரு நாளில் மலிவான தந்திரத்தின் மூலம் இறைவன் தடை செய்தவற்றை அனுமதிக்கப்பட்டவையாக மாற்றியதற்கே குரங்குகளாகவும் பன்றிகளாகவும் இறைவன்  மாற்றினானென்றால் ! பிறை விடயத்தில் கணக்கிலடங்காத இளப்புக்கள் அத்துமீறல்கள் பித்அத்துக்கள் பாவங்கள் வரம்பு மீறல்கள் அட்டூளியங்கள் இறை நிராகரிப்புக்கு இட்டுச் செல்லுமளவுக்குப் பிடிவாதங்கள் தொடருகின்றதே நாம் அல்லாஹ்வை பயப்பட வேண்டாமா !

இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள் ஒருநாள் நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் சென்றேன் அப்போது அவர்கள் அழுதுகோண்டிருந்தார்கள் அவர்களின் மடியில் குர்ஆன் இருந்தது எனவே அவர்களுக்கு அருகில் செல்ல நான் தயங்கினேன் சிறிது நேரம் அவ்வாறே நின்று கொண்டிருந்தேன்

பின்னர் அவர்களுக்கு அருகில் சென்று அமர்ந்தேன் அப்போது இப்னு அப்பாஸ் அவர்களே ! அல்லாஹ் என்னை உங்களுக்கு அர்ப்பணமாக்கட்டும் ! ஏன் நீங்கள் அழுதுகொண்டிருந்தீர்கள் ? என்று கேட்டேன் குர்ஆனிலுள்ள ( குரங்குகளாகவும் பன்றிகளாகவும் மாற்றப்பட்ட )  இந்த அய்லாவாசிகளைப்பற்றிய (07:161-166 ) பக்கங்கள்தான் அழுததற்குக் காரணம் என்று பதிலளித்தார்கள்

அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள் நீங்கள் சில – பாவச் – செயல்களைப் புரிகிறீர்கள் அவை உங்கள் பார்வையில் முடியை விட மிக மெல்லியதாகத் தோன்றுகின்றன – ஆனால் – அத்தகையதை நாங்கள் நபி (ஸல்) அவர்களது காலத்தில் “ மூபிகாத் “ எனும் – பேரழிவை ஏற்படுத்துபவை – என்றே கருதி வந்தோம் ( புகாரி பாகம் 07- பக்கம் 59- பாடம் – 32, & 6492 இன் சிறுகுறிப்பு )

அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் – ஓர்- இறை நம்பிக்கையாளர் தமது பாவங்களை மலைகளைப் போன்று (பாரதூரமாகக்) கருதுவார் அவர் ஒரு மலை அடிவாரத்தில் உட்காந்திருப்பதைப் போன்றும் அந்த மலை தம்மீது விழுந்து விடுமோ என்று அஞ்சுபவரைப் போன்றும் அவர் இருப்பார்

ஆனால் பாவியோ தனது பாவங்களைத் தனது மூக்கின் மேல் ( வந்து உட்காரந்து ) பறந்து செல்லும் ஈயை ( த் தனது விரல்களால் தட்டி விடுவதை) ப் போன்று (அற்பமாகக்) காண்பான் -இதனைக் கூறியபோது இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் தமது மூக்குக்கு மேலே (உட்கார்ந்த ஈயை விரல்களால்) விரட்டுவது போலத் தமது கையால் சைகை செய்து காட்டினார்கள் (அறிவிப்பவர் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) புகாரி – 6492, )

ஒரு முறை நபி(ஸல்) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களை நோக்கி ஓ ! ஆயிஷா நீர் எந்தப் பாவத்தையும் இலேசாகக் கருதிவிட வேண்டாம் ஏனெனில் நிச்சயமாக அதற்கும் அல்லாஹ்விடத்தில் கேள்வி உண்டு என்று கூறினார்கள் (ஆயிஷா (ரலி) இப்னு மாஜா, பைககீ, தாரமீ,)

உங்கள் பார்வையில் அற்பமானவை என்று கருதப்படக் கூடிய -சறிய- பாவங்களையும் தவிர்ந்து கொள்ளுங்கள் ஏனெனில் அவை ஒரு மனிதரில் (சிறு சிறு கரும் புள்ளிகளாகப்) படிந்து அவனையே அழித்துவிடக் கூடியதாகும் என்று அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் (இப்னு மஸுஊத் (ரலி) அஹ்மது, 24:15,)

ஆனால் பிறை தொடர்பான பார தூரமான விபரீதங்களை நாம் விபரிக்கும்போது நம்மை நோக்கி இதற்கு என்ன நரகமா ? என்று கண்மூடிப் பின்பற்றுபவர்கள்  கேட்கின்றனர் அவ்வாறே கேட்கும்படியானதொரு மாயத் தோற்றத்தை மெளலவிமார்கள் உண்டாக்கி வைத்துள்ளனர் என்பதே கசப்பான உன்மையாகும்

■ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் யூதர்கள் செய்ததைப்போன்று மலிவான தந்திரத்தின் மூலம் இறைவன் தடை செய்தவற்றை அனுமதிக்கப்பட்டவையாக மாற்ற நீங்கள் எண்ணாதீர்கள் அறிவிப்பாளர் அபூஹுரைரா (ரலி) ஹாஷியத்து இப்னில் கய்யூம் , அல்முஃக்னீ , இப்த்தாலுல் ஹியல் லி இப்னி பத்தா தஃபசீர் இப்னு கஸீர் 01:249, 03:929,

அவர்களில் ஒரு குழுவினர் அல்லாஹ் அழிக்க இருக்கிற அல்லது கடுமையான முறையில் வேதனை செய்ய இருக்கிற ஒரு சமுதாயத்தாருக்கு நீங்கள் ஏன் அறிவுரை கூறுகிறீர்கள் ? என்று கேட்டனர் அதற்கு (அவர்கள் விசாரணையின்போது ) உங்கள் இறைவனிடம் பதில் சொல்வதற்காகவும் அவர்கள் இறையச்சம் உடையோராக ஆகக்கூடும் என்பதற்காகவுமே (அவ்வாறு நாங்கள் அவர்களுக்கு அறிவுரை கூறுகிறோம் ) என்று அவர்கள் கூறினார்கள் (07: 164,) இதுவே எமது நிலைப்பாடுமாகும்.

எவன் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் மாறுசெய்து அவனது வரம்புகளை மீறுகின்றானோ அவனை நரகத்தில் அவன் நுழைவிப்பான் அதில் நிரந்தரமாக இருப்பான் மேலும் அவனுக்கு இழிவுதரும் வேதனையுமுண்டு ( 04:14 )

எஸ். எம். அமீர். நிந்தவூர். இலங்கை.

Leave a Comment

Previous post:

Next post: