இந்த இயக்கவாதிகளின் அன்றாடச் செயல்பாடுகளைப் பாருங்கள். நேரடி குர்ஆன், ஹதீஃத் போதனைகளை நிராகரித்து தலைவர்களின் வழி கெட்டப் போதனைகளைக் கண்மூடிச் செயல்படுத்துவார்கள். கடமையான தொழுகைகளைப் பாழ்படுத்துவார்கள். எதிர் தரப்பினரை எதிரிகளாகச் சொல்லி அவர்கள் மீது அவதூறுகளை அள்ளித் தெளிப்பார்கள். அதுமட்டுமா? சண்டை சச்சரவு, அடிதடி போன்ற ஒரு முஃமினிடம் இருக்கக் கூடாத அனைத்து அக்கிரமச் செயல்களும் இயக்க வெறியர்களிடம் காணப்படுகிறது.
இந்த இயக்க வெறியர்களிடம் குர்ஆனுக்கும், ஹதீஃதுக்கும் முரண்பட்ட ஆர்ப்பாட்டம், போராட்டம், பந்த், சாலை மறியல், இன்ன பிற தவறான செயல்களை உரிய குர்ஆன் வசனங்கள், ஹதீஃத்களைக் காட்டி உணர்த்தினால் முஃமின்களைப் போல் உடனடியாக அதற்குக் கட்டுப்படும் உயர் பண்பு இல்லை. அதற்கு மாறாக அற்பமான இவ்வுலகில் கிடைக்கும் மிகமிக அற்பமான லாபங்களைக் காட்டி இறைக் கட்டளைகளை நிராகரித்துப் பாவிகள் ஆகிறார்கள். இதையும் அல்லாஹ் 40:83 இறைவாக்கில் சுட்டிக் காட்டிக் கண்டிக்கிறான். ஆயினும் இயக்க வெறியர்கள் உணர்வதாக இல்லை.
அதற்கு மாறாக ஏதாவதொரு பெயரைக் கற்பனை செய்து அதற்கு பைலா தயார் பண்ணி அரசில் பதிவு செய்து கொள்கிறார்கள். தலைவர், செயலர், பொருளாளர், நிர்வாக உறுப்பினர்கள், உறுப்பினர்கள் என ஒவ்வொருவருக்கும் அட்டையைக் கொடுத்து, நாய்க்குக் கழுத்தில் அட்டை தொங்க விடுவது போல் தொங்க விடுகிறார்கள். அதைக் கொண்டு பெருமையும் படுகிறார்கள். இவை போதாதென்று ஆண்கள் அணி, பெண்கள் அணி, இளைஞர் அணி, மகளிர் அணி, தொண்டர் அணி, குண்டர் அணி எனக் கணக்கற்ற அணிகளைக் கற்பனை செய்து அவற்றிற்கும் தலைவர், செயலர், உறுப்பினர்கள் என நியமித்து இயற்கையாக மனித பலகீனத்தின் காரணமாக இருக்கும் பதவி ஆசையை வளர்த்து விடுகின்றனர். இதில் தப்பிப் பிழைப்பவர்கள் மிக மிகச் சிலரே!
தர்கா, தரீக்கா, மத்ஹபு வழிகேடுகளை விட்டும் விடுபட்டு வெளியேறி வந்த முஸ்லிம் சகோதர சகோதரிகளை மீண்டும் வழிகெட்ட இயக்க மாயையில் சிக்க வைத்தப் பெருமை ததஜ மத்ஹப் இமாமையே சேரும். 1987க்குப் பிறகு புற்றீசல்கள் போல் பெருகி வரும் இயக்கங்களுக்கு வித்திட்டவர் சாட்சாத் பீ.ஜைதான்; வழிகாட்டியவரும் அவரே.
இன்று முஸ்லிம்களிடையே காணப்படும், மத்ஹபு, தரீக்கா, மஸ்லக், முஜாஹித், ஜாக், ஸலஃபி மற்றும் அனைத்து வகை இயக்கப் பிரிவுகள் அனைத்தையும் விட கேடுகெட்ட மாபெரும் வழிகேட்டில் இருப்பது ததஜ பிரிவே. ஆம்! தமிழ்நாடு தறுதலை ஜமாஅத்தாகத்தான் வலம் வருகிறார்கள். இதற்கு அவர் தமுமுகவிலிருந்து வெளியேறிய சமயம், தங்களின் எதிரிகள் மீது அவதூறுகளை வாரி இறைக்கவும், அதை தங்கள் பெயராலேயோ, தங்கள் அமைப்பின் பெயராலேயோ வெளியிட வேண்டாம். பினாமி பெயர்களில் வெளியிடுங்கள் என்று அவரே கையெழுத்திட்டு தமது கண்மூடிப் பக்தர்களுக்கு எழுதிய கடிதமே போதிய ஆதாரமாகும்.
ஆக், ஜாக், தமுமுக, அனைத்துத் தவ்ஹீது, ததஜ போன்ற பிரிவு இயக்கங்கள் இவரே கற்பனை செய்து உருவாக்கிய பிரிவுப் பெயர்கள், அவரது வழிகாட்டல்படி. கணக்கிலடங்கா பிரிவுகள்! எங்கு போய் முடியுமோ இந்த இயக்க வழிபாடு, பெருத்த வழிகேடு!
16:9 இறைவாக்குக் கூறுவது போல் அல்லாஹ் மட்டுமே உங்களுக்கு நேர்வழியைக் காட்ட முடியும். எனவே 2:186 இறைவாக்குக் கூறுவது போல் இம்மவ்லவிகளையும், இயக்கத் தலைவர்களையும் முற்றிலும் நிராகரித்து, அல்லாஹ்வையே முழுக்க முழுக்க நம்புங்கள். அவனிடமே கேளுங்கள். 7:3, 18:102-106, 33:36 இறைக் கட்டளைகளுக்கு முற்றிலும் அடிபணிந்து மனிதர்களில் எவரையும் இடைத்தரகராகக் கொள்ளாமல், நீங்களே, குர்ஆன், ஹதீஃதை நேரடியாகப் படித்துச் சிந்தித்து விளங்க முன்வாருங்கள். 29:69-ல் அல்லாஹ் வாக்களித்துள்ளது போல் நிச்சயம் உங்களது முயற்சியை சுலபப்படுத்தி நேர்வழியைக் காட்டுவான்.
மீண்டும் உறுதியாகக் கூறுகிறோம். சிலை வழிபாடு எப்படிப் பெரும் பாவமோ, கொடிய ´ஷிர்க்கோ, தர்கா வழிபாடு பெரும் பாவமோ, கொடிய ´ஷிர்க்கோ, மத்ஹபு வழிபாடு பெரும் பாவமோ, கொடிய ´ஷிர்க்கோ, தரீக்கா வழிபாடு பெரும் பாவமோ, ´ஷிர்க்கோ, தனி மனித வழிபாடு பெரும் பாவமோ, கொடிய ´ஷிர்க்கோ அதுபோலவே இயக்க வழிபாடும் பெரும் பாவமே! கொடிய ´ஷிர்க்கே!
எனவே இயக்க வழிகேட்டை விட்டு விடுபட்டு நேரடியாக 3:103 இறைக் கட்டளைப்படி எந்த நிலையிலும் பிரியாமல், பிளவுபடாமல், ஒரே ஜமாஅத்தாக குர்ஆனைப் பற் றிப் பிடித்து அதன் நேரடி போதனைகள்படி நடக்க முன்வாருங்கள். அதுவே இவ்வுலகில் பெரும் வெற்றி யைத் தருவதோடு, நாளை மறுமையிலும் சுவர்க்கத்தில் கொண்டு சேர்க்கும். அல்லாஹ் அருள் புரிவானாக!
{ 1 comment… read it below or add one }
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
உங்களது இந்தக் கட்டுரை பீ. ஜை. மீதான உங்களது காழ்ப்புணர்சியைத்தான் காட்டுகிறது. நீங்கள் நாள்தோறும் திட்டித் திட்டி கட்டுரைகள் எழுதினாலும் அவர் வளர்ந்து கொண்டுதானிருக்கிரார். பாவம் நீங்கள்…..அனுதாபங்கள்….
சிராஜ்