இன்றைய இந்திய முஸ்லிம்களுக்கு மிக அவசியத் தேவை ஒற்றுமையாகும். அந்த ஒற்றுமைக்கு பங்கமாக இருப்பது முஸ்லிம்களின் தியாக உணர்வற்ற நிலையாகும். முஸ்லிம்களின் அரசியல் தலைவர்கள் தங்களின் அற்ப உலக சுகம் நாடி, பதவிகளுக்கும் பட்டங்களுக்கும் அடிமைபட்டு, தங்களுக்கு வழங்கப்படும் பெட்டிகளைக் குறியாகக்கொண்டு ஈமானை இழந்து விலை போகின்றனர்.
முஸ்லிம்களை சொர்க்கத்திற்கு வழி நடத்திச் செல்ல வேண்டிய மவ்லவிகளோ, மறுமையையும், அல்லாஹ்வையும், மறந்து மார்க்கத்தையே தங்களின் பிழைப்புக்குரிய வழியாக ஆக்கிக் கொண்டனர். அதனால் தங்களின் வயிற்றை நிறைக்க மார்க்கத்தை திரித்து மற்ற மதங்களைப்போல் இஸ்லாத்தையும் வெற்றுச் சடங்குகள், அனாச்சாரங்கள் நிறைந்த ஒரு மதமாக ஆக்கிவிட்டனர். அவர்கள் தங்களின் வயிறுகளில் நரக நெருப்பையே நிரப்பிக்காள்கின்றனர். (அல்குர்ஆன் 2:174) என்ற இறை வசனத்தை மறந்துவிட்டனர்.
முஸ்லிம்களை வழி நடத்திச் செல்லும் அரசியல் தலைவர்களிடமும், இவர்களிடமும் இஸ்லாம் அடிப்படையாகவே போதிக்கும் தியாக உணர்வு இல்லை என்றால், சாதாரண முஸ்லிம்களிடம் தியாக உணர்வு இருக்கவா போகிறது. இதை நாம் எதிர்பார்க்க முடியுமா?
இந்த நிலை மாற வேண்டுமானால் முஸ்லிம்கள் இவர்கள் பின்னால் கண்ணை மூடிக்கொண்டு குருட்டுத் தனமாகச் செல்வதைக் கைவிடவேண்டும். ஒவ்வோரு ஆணும், பெண்ணும் சுய சிந்தனையாளர்களாக மாறவேண்டும். இவ்வுலக வாழ்க்கை பிரச்னைகளை இந்த அரசியல்வாதிகளையும், மத புரோகிதரர்களையும் நம்பி விட்டு விட்டு இவர்கள் உறங்கினால் இவர்கள் வயிறு நிறையுமா? இவ்வுலகத் தேவைகள் பூர்த்தியாகுமா? நிச்சயமாக ஆகாது. அற்பமான அழியும் இவ்வுலக வாழ்கையே இந்த அரசியல் வாதிகளைக் கொண்டு, மதப்புரோகிதரர்களைக் கொண்டு கைகூட வழியில்லை என்கின்றபோது மறு உலக வாழ்கையை இவர்களிடம் நம்பி ஒப்படைத்தால் நிறைவேறுமா? எவ்வளவு பெரிய மதியீனம்.
அழியும் இவ்வுலகத் வாழ்கைக்கு யாரையும் நம்பாமல் தனது கையே தனக்கு உதவி என்று உறுதி கொண்டு செயல்படும் மனிதன், அழியாத நிந்திய மறு உலக வாழ்கையை மட்டும் இந்த முல்லாக்களை நம்பி ஒப்படைப்பது எவ்வளவு பெரிய மதியீனம். ஷைத்தானுடைய எவ்வளவு பெரிய சூழ்ச்சி? இதைவிட ஒரு ஆபத்தான நிலை இருக்க முடியுமா?
எனவே அன்பார்ந்த முஸ்லிம் சகோதர சகோதரிகளே இந்த சுய நல வாதிகளான அரசியல் தலைவர்களையும் மதப்புரோகிதரர்களையும் நம்பிச் செயல்படுவதைக் கைவிடுங்கள். உங்களது நல்வாழ்வில் உங்களை விட அக்கறையுள்ள யாரும் இருக்க முடியாது. நீங்களே நேரம் ஒதுக்கி முயற்சி செய்யுங்கள். குர்ஆன், ஹதீஸ் தாராளமாகவே விளங்கும். குர்ஆன், ஹதீஸ் விளங்காது என்று கூறி உங்களை ஏமாற்றி வருவது அவர்களின் சுயநலம் கருதியே அவ்வாறு சொல்லுகின்றனர்.
சாதாரண மக்களால் விளங்க முடியாத மார்க்கத்தை அல்லாஹ் மக்களுக்குத் தரவில்லை. எளிதில் புரியும் மார்க்கத்தையே தந்துள்ளான். அதன் இரவும் பகலைப் போன்று வெட்ட வெளிச்சமானது. தேவை உங்கள் முயற்சி மட்டுமே.உள்ளத் துணிச்சலோடு நேரடியாக குர்ஆன், ஹதீஸ் மொழி பெயர்ப்புகளை பாருங்கள். அவை உங்களோடு பேசும். உங்களுக்கு நேரிய வழியைக் காட்டும். இந்த முயற்சி நல்ல பலனைத்தரும். முஸ்லிம்களை சுய சிந்தனையாளர்களாக மாற்றும் என்பதை நீங்கள் அனுபவத்தின் மூலம் அறிந்து ஏக இறைவனுக்கு நன்றி செலுத்துவீர்கள்.
{ 5 comments… read them below or add one }
இறைவன் நமக்காக தேர்ந்தெடுத்த இஸ்லாமிய மார்க்கம் மிக எளிதானது, அவன் நமக்காக அருளிய வேதமும் மிக எளிதானது, நபி வழிமுறையும் மிக மிக எளிதானது. மனித மனங்கள்தான் இதையெல்லாம் கடினமாக எண்ணிக்கொண்டு இறைவனுக்கு பணிந்து வாழ மறுக்கிறது. மனம் இருந்தால் மார்கம் உண்டு. நாம் தான் இறைவனின் திருப்தியை பெற முயற்சிக்க வேண்டும். இறைவன் அருள்புரிய எப்போதும் சித்தமாய் இருக்கிறான். நாம்தான் அந்த பாக்கியத்தை அடைய தயாரில்லை,
நமது சிந்தனைகளில் அரைகுறை ஆலிம்களையும், மறை கழன்ட மார்க்க அறிஞர்களையும், குழப்பியடிக்கும் குருமார்களையும், உயர்ந்த அந்தஸ்த்தில் வைத்துக்கொண்டு பின்பற்றவேண்டிய பெருமானாரின் பொன்னான வழிமுறையை புறம் தள்ளிவிடுகிறோம்.
எனவே ஒவ்வொருவரும் தூய இஸ்லாமை இக்லாசுடன் பின்பற்றி இறைவனை நெருங்க முயற்ச்சிப்போம்
insha allah bro
பிரிந்து இருக்கும் சமூகத்திற்கு வஹியின் எச்சரிக்கை
t
பிரிந்திருப்பது அல்லாஹ்வின் தண்டனையாகும். !
உங்களுக்கு மேலிருந்தோ அல்லது உங்களது பாதங்களுக்கு கீழிருந்தோ உங்களுக்கு வேதனையை அனுப்பிடவும் அல்லது உங்களை பல பிரிவுகளாக ஆக்கி ஒருவரின் கொடுமையை மற்றவர் சுவைக்கச் செய்திடவும் அவன் ஆற்றல் உடையவன் என்று (நபியே) நீர் கூறுவீராக ! (6:65)
பிரிந்திருப்பவர்கள் இணை கற்பிப்போரே !
தங்கள் மார்க்கத்தை பல பிரிவுகளாக பிரித்து, தாங்களும் பல பிரிவுகளாக ஆகிவிட்ட இணை கற்பிப்போரில் நீங்கள் ஆகிவிடாதீர்கள். (30 : 31 , 32)
பிரிந்திருப்பவர்களுக்கும் நபிக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. !
தங்கள் மாரக்கத்தை பிரித்து பல பிரிவுகளாக பிரிந்து விட்டவர்களுடன் (நபியே) உமக்கு யாதொரு சம்பந்தமும் இல்லை (6: 159)
பிரிந்திருப்பவர்கள் அல்லாஹ்வின் அருளற்றவர்கள் !
உமது ரப் நாடியிருந்தால் மனிதர்கள் அனைவரையும் ஒரே கூட்டத்தினராக ஆக்கியிருப்பான். உமது ரப் அருள் புரிந்தோரைத் தவிர மற்றவர்கள் முரண்பட்டோராகவே இருந்து கொண்டிருப்பார்கள். (11: 118 , 119)
பிரிந்திருப்பவர்கள் வழிகேட்டிலேயே இருக்கிறார்கள். !
அல்லாஹ் நாடியிருந்தால் ஒரே சமுதாயமாக ஆக்கியிருப்பான். மாறாக தான் நாடியோரை அவன் வழிகேட்டில் விடுகின்றான். தான் நாடியோருக்கு நேர்வழி காட்டுகின்றான். (16:93)
பிரிவினை நரகத்திற்கே இட்டுச் செல்லும். !
எனது இந்த உம்மத் 73 பிரிவுகளாக பிரிவார்கள். 72 நரகமும் ஒரு கூட்டம் சுவனமும் செல்லும். அது அல்ஜமாஅத் ஆகும். (அபூதாவுத் 4599)

பிரிவினையும் அகீதாவும் (கேள்வி பதில்)
கேள்வி :
‘பிரிவுகள் நரகம் செல்லும்’ என சுட்டிக் காட்டும் ஹதீஸ் அகீதா என்று சொல்லப்படும் நம்பிக்கையில் பிரிபவர்களை விழித்துக் கூறப்பட்டதாகும். நிர்வாகத்திற்காக அல்லது அமல்கள் விடயத்தில் பிரிபவர்களை சுட்டிக் காட்டவில்லை. இன்று காணப்படும் பிரிவுகள் அகீதாவில் பிரியவில்லை என்று கூறுகின்றனரே! இதன் விளக்கம் என்ன?
பதில் :
ஒரு முஸ்லிம் குர்ஆன் சுன்னாவை மட்டுமே பின்பற்ற வேண்டும். மனித கருத்துக்கள் மார்க்கமல்ல. குர்ஆன், ஹதீஸில் ‘பிரியாதீர்கள்’ என்றுதான் கூறப்பட்டுள்ளதே தவிர ‘அகீதாவில் பிரியாதீர்கள்’ என்றோ, ‘இது அல்லாத விடயத்தில் பிரியாதீர்கள்’ என்றோ கூறப்படவில்லை.
அல்குர்ஆனில் அல்லாஹுத்தஆலா:
விசுவாசிகளே! அல்லாஹ்வின் கயிற்றை பிடித்து ஒரு கூட்டமாக இருங்கள். பிரிந்து விடாதீர்கள். (3:103)
என்றும்
மார்கத்தை நிலை நாட்டுங்கள் பிரிந்துவிடாதீர்கள். (42:13)
என்றும்
தெளிவு வந்த பின் மார்கத்தில் கருத்து மோதல் கொண்டு பிரிந்து போகிறார்களே அவர்களை போல் நீங்கள் ஆகிவிடாதீர்கள்.(3:105)
என்றும்
இவ்வாறே ஹதீஸில்:
அல்லாஹ் மூன்று விடயங்களை விரும்புகின்றான். அதில் ஒன்று அல்லாஹ்வின் கயிற்றை பிடித்து ஒரு கூட்டமாக இருக்க வேண்டும். (ஸஹீஹ் முஸ்லிம்)
என்றும்
யார் ஜமாஅத்திளிருந்து ஒரு சான் வெளியேறுகின்ராரோ அவர் இஸ்லாத்தை தன் கழுத்திலிருந்துக் களைந்து விட்டார்.(அஹ்மத்)
என்றும்
பொதுவாகவே வந்துள்ளதை நாம் காண்கிறோம், எனவே அகீதாவில் பிரிவதைதான் இஸ்லாம் தடுத்துள்ளது என்பது சரியன்று.
inshaa Allah