இந்தோனேசியா தீவுகளில் விசித்திர குள்ளர்கள்: யாஜுஜ் – மாஜுஜ்??

Post image for இந்தோனேசியா தீவுகளில் விசித்திர குள்ளர்கள்: யாஜுஜ் – மாஜுஜ்??

in அறிவியல்

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

எஸ்.ஹலரத் அலி-திருச்சி-7

அல்லாஹ்வின் அருள் மறையாம் திருமறைக் குர்ஆனில், மனித சமுதாயம் படிப்பினைப்  பெறுவதற்காக ஏராளமான வரலாற்று சம்பவங்களை எடுத்துக் கூறுகிறான். இனி வரும் காலங்களில் நடைபெறப்போகும் சம்பவங்களும் நமக்கு முன் எச்சரிக்கை ஊட்டுவதற்காக அதில் தெளிவாக விளக்கியுள்ளான். அப்படியான ஒரு நிகழ்வுதான் கடைசி  காலத்தில் வரக்கூடிய யாஜூஜ்-மாஜூஜ் கூட்டமாகும்.

இந்தக் கூட்டத்தைபற்றி எல்லா நபிமார்களும் தம் உம்மத்திற்கு எச்சரிக்கை செய்துள்ளனர்.ஆனால் அவர்கள் வாழ்ந்த காலத்தில் இக்கூட்டம் வெளிவரவில்லை. இறுதி உம்மத்தான நம்  காலத்தில்தான் இக்கூட்டம் வெளிவரப்போவதால், இக்கூட்டத்தைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் விரிவாக தெளிவாக விளக்கிச் சென்றுள்ளார்கள். நபி (ஸல்) அவர்கள் ஆரம்ப காலத்தில் மக்காவில் இஸ்லாத்தை குரைஷி மக்களிடம் போதித்த நேரத்தில், உண்மையில் இவர் இறைதூதர்தானா என்பதை சோதிப்பதற்காக, வேதம் கொடுக்கப்பட்ட யூதர்களிடம் இது சம்பந்தமாக ஆலோசனை நடத்தினர்.

உண்மையில் இவர் இறைத்தூதர்தான் என்பதை அறிந்து கொள்ள மூன்று கேள்விகளைக் கேட்குமாறு யூதர்கள் ஆலோசனை சொன்னார்கள். அவற்றில்  ஒன்றுதான், உலகின் கிழக்கு மேற்கு திசைகளில் பிரயாணம் செய்த பயணியைப்பற்றிய செய்தி. இது குறித்து அல்லாஹ் வசனத்தை இறக்குகின்றான்.

(நபியே!)அவர்கள் துல்கர்னனை பற்றி உங்களிடம் வினவுகின்றனர்,” அவருடைய வரலாற்றில் சிறிது உங்களுக்கு நான் ஓதிக்காண்பிக்கிறேன்” என்று கூறுவீராக.  அல் குர்ஆன்.18:83.

பின்னர், அவர் (மற்றும்) ஒரு வழியைப் பின்பற்றிச் சென்றார். இரு மலைகளுக்கிடையே (இருந்த ஓரிடத்தை) அவர் எத்தியபோது, அவ்விரண்டிற்கும் அப்பால் இருந்த ஒரு சமூகத்தாரைக் கண்டார். அவர்கள் எந்தச் சொல்லையும் விளங்கிக் கொள்பவராக இருக்கவில்லை. அவர்கள் ”துல்கர்னைனே! நிச்சயமாக யஃஜுஜும், மஃஜுஜும் பூமியில் ஃபஸாது குழப்பம் செய்கிறார்கள்; ஆதலால், எங்களுக்கும், அவர்களுக்குமிடையே ஒரு தடுப்பு(ச் சுவரை) நீர் ஏற்படுத்தித் தரும் பொருட்டு நாங்கள் உமக்கு ஒரு தொகையைத் தரலாமா?” என்று கேட்டார்கள்.

    அதற்கவர்; ”என் இறைவன் எனக்கு எதில் (வசதிகள்) அளித்திருக்கிறானோ அது (நீங்கள் கொடுக்க இருப்பதைவிட) மேலானது; ஆகவே, (உங்கள் உடல்) பலம் கொண்டு எனக்கு நீங்கள் உதவி செய்யுங்கள்; ”நீங்கள் இரும்புப் பாளங்களை எனக்குக் கொண்டு வாருங்கள்” (என்றார்). பிறகு அவை இரு மலைகளின் (இடையே நிரம்பி) உச்சிக்குச் சமமாகும் போது, ஊதுங்கள் என்றார்; அதனை அவர் நெருப்பாக ஆக்கியதும் (பின்னர் ”உருக்கிய) செம்பை என்னிடம் கொண்டு வாருங்கள்; அதன் மேல் ஊற்றுகிறேன்”” (என்றார்).

    எனவே, (யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தார்) அதன் மீது ஏறவும் சக்தி பெறவில்லை, அதில் துவாரமிடவும் அவர்கள் சக்தி பெறவில்லை. ”இது என் இறைவனிடமிருந்துள்ள ஒரு கிருபையே ஆகும், ஆனால் என் இறைவனுடைய வாக்குறுதி நிறைவேறும்போது, அவன் இதனையும் தூள்தூளாக்கி விடுவான்; மேலும், என் இறைவனுடைய வாக்குறுதி (முற்றிலும்) உண்மையானதே” என்று கூறினார்.    அல்குர்ஆன் 18:83-98

    யஃஜுஜு, மஃஜுஜு (கூட்டத்தார்)க்கு வழி திறக்கப்படும் போது, அவர்கள் ஒவ்வொரு மேட்டிலிருந்தும் இறங்கிப் பரவுவார்கள்.    அல்குர்ஆன் 21:96

பூமியில் குழப்பம் விளைவிக்கும் ஒரு பெருங்கொண்ட கூட்டம் இறுதி நாளில் வெளியாகி மக்களுக்குத் தீங்கிழைப்பார்கள் என்ற உண்மையை குர்ஆனும் ஹதீஸ்களும் கூறுகின்றன. இவர்கள் பூமியில் இன்றும் உயரமான மலைகள் சூழ்ந்த அரண்களுக்குள் வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் மொத்தமே மூன்று அடி உயரமான விசித்திர குள்ளர்கள்.

    ‘இவர்கள் உயரம் ஒரு சான் அல்லது இரு சான் அதிகபட்சம் மூன்று சான்களுக்கு மேல் இருக்க மாட்டார்கள்’ என்று இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் கூறியதாக ஹாக்கிமில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விசித்திர குள்ளர்கள் இறுதி நாளின்போது வெளிக்கிளம்பி வந்து பெரும் அட்டூழியங்களில் ஈடுபடுவர்.

 ஃபத்ஹுல்பாரி, நூல்: புகாரி 7ம் பாகம் பக்கம் 573.

இவர்கள் நம்மைப்போல ஆதம் (அலை) அவர்களின் சந்ததியில் வந்த மனிதர்களே. “யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தினர் ஆதம்(அலை) அவர்களின் சந்ததிகளாவர். அவர்கள் விடுவிக்கப்படால் மக்களின் வாழ்க்கையை பாழாக்குவார்கள். அவர்களில் ஒவ்வொருவரும் ஆயிரம் அல்லது அதற்கும் அதிகமான சந்ததிகளை உருவாக்காமல் மரணிப்பதில்லை:” என்பது நபிமொழி.-

 அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ரு(ரழி). நூல்: தப்ரானீ; இப்னு ஹஜர்.பத்ஹுல் பாரி.

இவர்கள் நூஹ்(அலை) அவர்களின் புதல்வர் ‘யாபிஸ்’ என்பாரின் வழித்தோன்றல்களாவர் என்று கூறப்படுகிறது. யஃஜுஜ், மஃஜுஜ் அரபி அல்லாத சொற்கள். மனித வர்க்கமும் ஜின் வர்க்கமும் நூறு சதம் என்றால் யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தினர் மட்டும் 90 சதம்.

அல்லாஹ்வின் அடியார் துல்கர்னைன் அவர்கள், சூரியன் உதிக்கும் கிழக்கு திசை பயணத்திலேயே யாஜுஜ்-மாஜுஜால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கிறார்கள். குழப்பமான பித்னாக்கள் புறப்படும் திசை கிழக்கு, பெரும் குழப்பவாதி தஜ்ஜால் கிழக்கு திசையிலிருந்துதான் புறப்பட்டு வருவான் என்பது நபிமொழி (புஹாரி 3279) கீழ் திசையில் இருக்கும் இந்தோனேசியா அடர்ந்த காட்டுத் தீவான  புளோரஸ் என்னும் இடத்தில்,7- செப்டெம்பர் 2003 ம் ஆண்டு மூன்றடி உயரமுள்ள சுமார் 30 வயதுடைய ஒரு பெண்ணின் எலும்புக்கூட்டை அமெரிக்கா ஆய்வாளர்கள் கண்டெடுத்தனர்.

museum exhibit of the hobbit, homo floresiensisஇந்த விசித்திர குள்ளர்கள் வியாதியின் காரணமாக குள்ளமாக உள்ளார்களா அல்லது புதுவித இனமா என்பது பற்றி கடந்த பத்து  வருடங்களாக பல்வேறு ஆய்வுகள் செய்து இறுதியில், இது மனித இனத்தை  சார்ந்த குள்ள இனம். பல ஆயிரம் ஆண்டுகள் அத்தீவிலேயே தனிமைப்பட்டு வாழ்ந்ததில் குள்ளமாக உள்ளனர். மனிதர்கள் மட்டும் அல்ல, அங்குள்ள யானை போன்ற விலங்குகளும் குள்ளம்மாக இருந்தது. இது அத்தீவின்  தனிப்பட்ட விஷேசம் என்பதை ஆய்வுகள் கூறின.

The scientists suggest that on isolated islands, the ancestors of the hobbit underwent dramatic dwarfism, with their bodies shrinking from about 5.4 feet (1.65 m) to 3.6 feet (1.1 m), and brains dwindling from about 52 cubic inches (860 cubic centimeters) to 26 cubic inches (426 cubic cm). “For me, this work will turn the tide about the question of evolutionary origin of H. floresiensis,” study lead author Yousuke Kaifu, a paleoanthropologist at Japan’s National Museum of Nature and Science in Tokyo, told Live Science.

While the human lineage generally evolved larger bodies and brains over time, the hobbit suggests that isolation on islands could substantially reverse this evolutionary trend, Kaifu said

http://www.livescience.com/52839-hobbits-were-separate-species.html

 இந்தக் குள்ளர்கள்  இன்றும் மலைப்பாங்கான அடர்ந்த காட்டு அரண்களுக்குள் வாழ்ந்து  வர வாய்ப்புள்ளது, என்று அமெரிக்கா ஆய்வாளர்கள் கூறினர். இவர்கள் மறைந்து வாழும் யாஜுஜ்-மாஜுஜ் கூட்டமாக இன்ஷாஅல்லாஹ் இருக்கலாம் என்று அன்றே ஒரு கட்டுரை எழுதினோம்.

யஃஜூஜ், மஃஜூஜ், தஜ்ஜால்? http://www.readislam.net/portal/archives/353

இந்த குள்ள மனிதர்களைப்பற்றிய கூடுதல் ஆய்வுச் சான்றுகள், புகழ்பெற்ற ஆராய்ச்சி இதழான நேச்சரில்(Nature-International weekly journal of science. 14. january-2016) இவ்வாரம் வெளியானது. குள்ள மனித எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்ட புளோரஸ் தீவிலிருந்து 500 கி.மீ தொலைவில் உள்ள சூலவேசி என்ற தீவில் நடந்த தொல்பொருள் அகழாய்வில், மனிதர்கள் வேட்டையாட பயன்படுத்திய பல்வேறு கூர்மையான கற்கருவிகளை கண்டெடுத்தனர்.

stone artifacts இந்தக் கற்கருவிகளின் வயதை, அதி நவீன ஆய்வு முறையில் சோதித்து பார்த்த போது, இவைகள் சுமார் 118,000 முதல் 194,000 வருடத்தில் வாழ்ந்த மனிதர்களால் உருவாக்கப்பட்ட ஒன்று என்று ஆய்வு  முடிவுகள் கூறுகின்றன. இந்த உண்மை தொல்பொருள் ஆய்வாளர்களுக்கு ஆச்சரியத்தை அளித்தது. காரணம்,சுமார் 60,000 வருடங்களுக்கு முன்புதான் படகு  மூலம் பயணம் செய்து, மனித இனம் ஆப்ரிக்காவில் இருந்து இந்தோனேசியா பகுதிகளுக்கு இடம் பெயர்ந்ததாக இதுவரை  நம்பப்பட்டு வந்ததே.

http://www.nature.com/nature/journal/v529/n7585/full/nature16448.html

சுமார் ஒரு லட்சம் வருடங்களுக்கு முன்பே இவர்கள் எவ்வாறு கடலைக் கடந்தார்கள் என்பது ஆய்வாளர்கள் மத்தியில் கேள்விக்குறியாக உள்ளது. ஒருவேளை பெரும் சுனாமி அலையின் தாக்கத்தினால் காட்டுமரங்களோடு மிதந்து வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. சூலவேசி தீவுகளில் மனிதர்கள் வாழ்ந்துள்ளதால், இவர்களுக்கும் இதற்கு அருகில் உள்ள புளோரஸ் தீவில் கண்டெடுக்கப்பட்ட குள்ள மனிதர்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

Gerrit van den Bergh of the University of Wollongong in Australia, the study’s lead author, says that the tools likely were made by Homo erectus, an ancient hominin that lived on nearby islands beginning at least 1.5 million years ago. It’s also possible that the toolmakers are yet-undiscovered relatives of Homo floresiensis, a “hobbit” hominin found on the island of Flores, just south of Sulawesi, between 18,000 and 95,000 years ago, if not earlier.

http://news.nationalgeographic.com/2016/01/160113-stone-tool-sulawesi-hobbit-flores-archaeology/

இந்தோனேசியா புளோரஸ் தீவு குகையில் கண்டெடுக்கப்பட்ட மூன்றடி குள்ள மனித எலும்புகூடு, யாஜுஜ்-மாஜுஜ் மனிதக்கூட்டத்தை சேர்ந்ததாக இருக்க வேண்டும் என்பதற்கு பல சான்றுகள் உள்ளன. ஆனாலும் அல்லாஹ்  மட்டுமே உண்மையை அறிந்தவன்.

  1. நமது பூலோக ரீதியான கணக்கின்படி, அல்லாஹ்வின் அடியார் துல் கர்னைன் அவர்கள் பயணம் செய்த சூரியன் முதலில் உதிக்கும் கிழக்கு திசையில் உள்ள நாடுகளில் ஒன்று இந்தோனேசியா. இங்கு மலைகள் சூழ்ந்த அடர்ந்த காடுகளைக் கொண்ட தீவுகள் ஏராளம்.துல் கர்னைன் பயணம் செய்த வடக்கு பக்கம் சூலவேசி தீவு உள்ளது.தெற்கில் உள்ளது புளோரஸ் தீவு.இந்த புளோரஸ் தீவுகளில் இன்று வாழ்ந்து வரும் மக்கள், வழி வழியாக தங்கள் மூதாதையர்கள் கூறிய  குள்ள மனிதர்களைப் Ebu  Gogo பற்றிய கதைகள் அவர்கள் ஊருக்குள் புகுந்து மக்களின் வாழ்வாதாரங்களை நாசம் செய்து, கிடைக்கும் அனைத்தையையும் தின்று தீர்க்கும் குணம், இவை அனைத்தும் யாஜுஜ-மாஜுஜ் கூட்டத்தாருக்கு ஒத்துப் போகிறது. Ebu Gogo என்று தீவுவாசிகளால் அழைக்கப்படும் சொல், Gog-Magog சொல்லுடன் பொருந்துகிறது.
  2. யாஜுஜ்-மாஜுஜ் கூட்டத்தார் ஆதம் (அலை)  அவர்களின் வழித்தோன்றலில்   வந்த ஒரு  இனமே என ஹதீஸ் கூறுகிறது. புளோரஸ் தீவில் கண்டெடுக்கப்பட்ட  மூன்றடி குள்ள எலும்புகூடும் மனித இனத்தின் உள்ள தனி இனம் என்று ஆய்வு முடிவுகள் கூறுவது கவனிக்கத்தக்கது.
  3. யாஜுஜ்-மாஜுஜ் கூட்டத்தார் வில் அம்பு கொண்டு வேட்டையாடுவதில் வல்லவர்கள் என்று  ஹதீஸ் கூறுவதை, புளோரஸ் தீவின் குகையில் கிடைத்த வேட்டை பிராணிகளின் எலும்பும், கூர்மையான கற்கருவிகளும், சூலவேசி தீவில் கண்டெடுத்த கல் ஆயுதங்களும் உறுதிப்படுத்துகின்றன.
  4. அல்லாஹ்வின் அடியார் துல் கர்னைன் அவர்கள் இந்தோனேசியா தீவுப்பகுதிகளுக்கு வந்து ஆட்சி செய்ததற்கு சான்றாக.இன்றும் இந்தோனேசியா சுமத்ரா தீவு அரச குடும்பத்தினர் தாங்கள் துல் கர்னைன் மன்னர் வழி  வந்தவர்கள் என்று கூறி வருவது குறிப்பிடதக்கது.
  5. ஹதீஸ்களில் கூறிய யாஜுஜ்-மாஜுஜ் முக அடையாளமும் குள்ள எலும்புக்கூட்டின் மண்டை ஓட்டை வைத்து கணினி வரைந்த முக அமைப்பும் முற்றாக பொருந்துகிறது.

     “யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டம் வரும்வரை நீங்கள் போராடிக்கொண்டே இருப்பீர்கள்; அவர்களின் முகம் அகன்றதாகவும், கேடயம் போல்(வட்டமாகவும்) கண்கள் சிறிதளவும், முடிகள் பட்டையாகவும் அமைந்திருப்பார்கள்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினர். அறிவிப்பவர்: காலித் பின் அப்துல்லாஹ் நூல்கள்: அஹ்மத் தப்ரானீ.

http://blogs.scientificamerican.com/observations/reconstructed-face-of-extinct-hobbit-species-is-startlingly-humanlike/

Forensic reconstruction of Homo floresiensisயாஜுஜ்-மாஜுஜ் கூட்டத்தார் ரஷியா,காகாசிய-துருக்கி மலைப்பகுதிகளில் இருக்கலாம் என்று இன்றைய, சில குர்ஆன் விரிவுரையாளர்கள் கூறுவது; பைபிளின் விளக்கமாகவே உள்ளது. குர்ஆன் மற்றும் ஹதீஸ் விளக்கத்தின் படி யாஜுஜ்-மாஜுஜ் கூட்டத்தார் விசித்திர குள்ளர்கள். இவர்கள் எதையும் விளங்கிக்கொள்ள முடியாத காட்டுமிராண்டி ஆதிவாசிகள். கொலை, கொள்ளை, அழிவு நாசம் செய்யும் கொடுரமானவர்கள். இவர்கள் நாகரீகம் சூழ்ந்த காகாசிய நாடுகளில் இருக்க வாய்ப்பில்லை.

ஆதம் (அலை) அவர்களைப் படைத்தலிருந்து, மறுமை நாள் ஏற்படுவதற்கும் இடைப்பட்ட நாளில் தஜ்ஜாலின் குழப்பத்தை விட பெரிய குழப்பம் ஏதுமில்லை.” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்:இம்ரான் இப்னு ஹுசைன் (ரழி). முஸ்லிம்.2946.

ஆதம் (அலை) அவர்கள் காலத்திலிருந்து இறுதி நபி (ஸல்) அவர்கள் வரை வந்த அத்துணை நபிமார்களும் தங்கள் உம்மத்திற்கு செய்த எச்சரிக்கை ஒன்றுதான். மகா குழப்பவாதி தஜ்ஜாலின் தீங்கிலிருந்து பாதுகாப்பு தேடுவதுதான். இன்று நமது ஐவேளை தொழுகையில் கேட்கப்படும் துவாவும் இதுதான். இந்த குழப்பவாதி தஜ்ஜாலை ஈஸா (அலை) அவர்கள் மட்டுமே கொல்ல முடியும். வேறு எவராலும் கொல்ல முடியாது.

“தஜ்ஜாலை விட்டும் அல்லாஹ் காப்பாற்றிவிட்ட ஒரு  கூட்டத்தாரிடம் அடுத்து ஈஸா  (அலை) அவர்கள் வருவார்கள். அவர்களின் முகங்களை தடவி விடுவார்கள். அவர்களிடம் சொர்க்கத்தில் உள்ள அவர்களுக்குரிய  தகுதிகளைப்பற்றிப் ஈஸா நபி கூறுவார்கள். அந்த  சமயத்தில் ஈஸாவிடம் அல்லாஹ், “நான் என் அடியார்களை சிலரை வெளியாக்கி  உள்ளேன். அவர்களிடம் யாரும் சண்டை  செய்ய முடியாது. எனவே என் அடியார்களை தூர் மலைப்பக்கம் ஒன்று சேர்ப்பீராக!”  என்று அல்லாஹ் கூறுவான்.

அறிவிப்பவர்: நவாஸ் இப்னு ஸம்ஆன் (ரழி) –முஸ்லிம்.2937.

தஜ்ஜாலுக்கு அடுத்து வரும் யாஜுஜ்-மாஜுஜ் குழப்பக் கூட்டத்தை கொன்று குவிக்க ஈஸா (அலை) அவர்களாலும் முடியாது. அவர்கள் மிகப்பயங்கரமாக பூமியில் அட்டுழியம் செய்வார்கள். அவர்கள் வெளியாக்கப்படும் போது கண்ணில் படுவதை எல்லாம் தின்றும், ஓடும் ஆற்று நீர் வற்றிப்போகும் அளவு குடித்தும் பலம் பெருவார்கள். ஒரு யாஜுஜ்-மாஜுஜ் பெண்ணானவள் ஆயிரம் குழந்தைகளைப் பெறாமல் மரணிக்க  மாட்டாள் என்பது நபி மொழி.

எனவேதான் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்,உலகிலுள்ள அத்துணை  மனு,ஜின் கூட்டத்தில் ஆயிரத்தில் ஒருவர் நரகம் சென்றால்,யாஜுஜ்-மாஜுஜ் கூட்டத்தார் 999  பேர் நரகம் செய்பவர்கள் என்று கூறினார்கள். இந்த விசித்திர குள்ளர்கள் இறுதி காலத்தில் வெளியாக்கப்படுவார்கள் என்று சொல்வதிலிருந்து, இவர்கள் நாம் வாழும் உலகத்தில் எதோ ஓர் இடத்தில் மறைந்து வாழ்கிறார்கள். மறைந்து வாழ்வதற்கு பொருத்தமான இடமாக, அடர்ந்த காடு, உயரமான மலைகள், 150 எரிமலைகள் நிறைந்ததாக  இந்தோனேசியா தீவு கூட்டம் உள்ளது.

இந்தோனேசியா மொத்த  நிலப்பரப்பில்  சுமார் 64% அடர்ந்த காடாக உள்ளது. மொத்தம் உள்ள 18,307  தீவுகளில் சுமார்  8,844 தீவுகளுக்கு மட்டுமே பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதில் சுமார் 6000 தீவுகளில் மனிதர்கள் பரவலாக வசிக்கிறார்கள். 922 தீவுகளில் மனிதர் யாரும் இல்லா அடர்ந்த காடாக உள்ளன. யாஜுஜ்-மாஜுஜ் குள்ளர்கள் வசிப்பதற்கு உகந்த இடமாக இவைகள் இருக்கலாம்.அல்லாஹ் அறிந்தவன்!

தொல்பொருள் ஆய்வாளர்கள் தொடர்ந்து இங்கு அகழாய்வு செய்து வருகின்றனர். குள்ள மனிதர்களைப்பற்றிய புதிய செய்திகள் இன்ஷா அல்லாஹ் வரும் காலங்களில் கிடைக்கலாம். எனினும் அல்லாஹ் யாஜுஜ-மாஜுஜ் கூட்டத்தாருக்கு அனுமதி கொடுக்கும் போதுதான், அவர்களைப்பற்றி உலகம் அறிந்து கொள்ள  முடியும். அதுவரை எந்த ஆய்வாளர்களாலும் அவர்களை உயிருடன் காண முடியாது. காரணம் அவர்கள் மலை  சூழ்ந்த அரணுக்குள் அகப்பட்டுள்ளார்கள்.

2003 ம் வருடம் Lia  Buang எனும் குகையில் கண்டெடுக்கப்பட்ட  பெண் எலும்புக்கூடு வாழ்ந்த காலம் சுமார் 12,000 வருடங்களுக்கு முன்பு.ஒரு வேளை துல்கர்ணைன்(அலை) அவர்கள் இப்பிரதேசத்திற்கு வருவதற்கு முன்பு மரணித்த பெண்ணாக இருக்கலாம். அல்லாஹ் மட்டுமே அறிந்தவன். அல்குர்ஆன் வசனங்களை இன்றைய நவீன ஆய்வுகள் தொடர்ந்து உண்மைப்படுத்தி வருவது ஆச்சரியமல்ல.

அவர்களுக்கு முன்னிருப்பதையும், அவர்களுக்குப்  பின்னால் இருப்பதையும் அவன் நன்கறிவான்; ஆனால் அவர்கள் அதைத் தங்கள் கல்வியறிவு கொண்டு சூழ்ந்தறிய மாட்டார்கள்.     அல் குர்ஆன். 20:110.

————————————————————————————————————————

Reconstructed Face of Extinct Hobbit Species Is Startlingly Humanlike

http://blogs.scientificamerican.com/observations/reconstructed-face-of-extinct-hobbit-species-is-startlingly-humanlike/

This female’s head, like the rest of her body, was unusually small. Her brain was about a third the size of ours, but her species made and used stone tools, and hunted a variety of animals. The small body size of Homo floresiensis may have helped the species survive on an island with limited resources.

http://humanorigins.si.edu/evidence/human-fossils/species/homo-floresiensis

{ 6 comments… read them below or add one }

NISAR AHAMED January 23, 2016 at 9:15 am

அல்லாஹ் மிகப்பெரியவன்.

Reply

ss ibrahim February 16, 2016 at 10:48 pm

அல்லாஹ் மிகப்பெரியவன்.

Reply

Sharmila February 28, 2016 at 1:55 am

Allahuakbar! Save us from yah jujitsu mahjuj.

Reply

sadeeka April 18, 2016 at 3:18 pm

allahu akber

Reply

maharouf May 14, 2016 at 7:28 pm

அல்லாஹ் மிகப்பெரியவன்.

Reply

anzarjohn.H. June 5, 2016 at 10:05 pm

please some good duvas tome with tamil transilations

Reply

Leave a Comment

Previous post:

Next post: