அவர்களோ மாதங்களைச் சரியாக ஆரம்பித்தவர்கள்

Post image for அவர்களோ மாதங்களைச் சரியாக ஆரம்பித்தவர்கள்

in சந்திர நாட்காட்டி

“அவர்களோ மாதங்களைச் சரியாக ஆரம்பித்தவர்கள்”

புதிய மாதம் ஆரம்பிப்பதற்கு முன்பே அம்மாதத்தின் ஆரம்ப நாளைச் சரியாக அறிந்து செயல்ப்பட்ட நபியவர்களும் நபித்தோழர்களும்

■ ஆதி மனிதரும் நபியுமான ஆதம்  (அலை) அவர்களின் ஆறாவது தலைமுறையில் வந்த நபி இத்ரீஸ்  (அலை) அவர்கள் தான் முதன் முதலாக

☪   எழுது கோலால் எழுதியவர்

☪   துணியைத் தைத்து அணிந்தவர்

☪   நட்சத்திரக் கலையைக் கண்டறிந்தவர்

☪   கணிதத்தையும்   கண்டறிந்தவர்

☪   இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் தமது விண்வெளிப் பயணத்தின்போது நான்காவது வானத்தில் அன்னாரைக் கண்டார்கள்

அன்னாருக்கு இறைவன் முப்பது ஆகமங்களை ( ஸுஹூஃப் களை )
அருளினான்- (மாலிக் பின் ஸஅஸஆ (ரலி) புகாரி – 3207, 3887, முஸ்லிம் – 264, தஃப்ஸீர் – அல்குர்துபீ , மாஜிதீ, & தஃப்சீர் இப்னு கஸீர் பாகம் ஐந்து பக்கம் 614 சிறுகுறிப்பு எண், 61,

■ நபி இத்ரீஸ்  (அலை) அவர்களது வழித்தோண்றல்களில் வந்த அரபியர்களும் விண்ணியல்  அறிவைப் பெற்றிருந்தனர் அவர்கள் அறியாதிருந்தது துல்லியமான விண்ணியல் கணித கணக்கிட்டு முறையை மாத்திரமே

■ அந்த அரபியர் சந்திர ஆண்டுக் கணக்கையே பின்பற்றி வந்தனர்
காரணம் எல்லாக் காலங்களிலும் சூரியன் முழு வடிவத்திலேயே தெரியும் அதற்குத் தேய்மானமோ வளர்ச்சியோ தென்படுவதில்லை எனவே சூரிய ஓட்டத்தைக்கொண்டு மாதங்களையும் வருடங்களையும் கணக்கிடுவது அவர்களது காலத்தில் இலகுவில் சாத்தியமானதாக இருக்கவில்லை

ஆனால் சந்திரனின் நிலை அவ்வாறல்ல அதில் ஏற்படும் ஆரம்பப் பிறைக் கீற்று, வளர்பிறை , தேய்பிறை , முழு நிலவு , புவி மைய்ய சங்கமம் எனும் அமாவாசை, ஆகிய நிலைகள் அனைவருக்கும் தெளிவாகத் தெரியும் ஆகவே சந்திரனின் படித்தரங்களுக்கான இந்த மாற்றங்களைக் கொண்டு நாட்கள் மாதங்கள் ஆண்டுகள் எனக் கண்டுகொள்வது அவர்களுக்கு எளிதாக இருந்துள்ளது – தஃப்சீர் -அஸ்மனார்- தஃப்ஸீர்இப்னுகஸீர் பாகம் நான்கு பக்கம் -463  & சிறு குறிப்பு 09 ,

■ அன்றைய அரபிகள் சந்திரன் ஒரு மாதத்தில் சுற்றிவரும் பகுதிகளை 28 பாகங்களாகக் கணக்கிட்டு அந்த ஒவ்வொரு பாகத்துக்கும் நேராக இருக்கும் 28 நட்சத்திரங்களின் பெயர்களை அந்த 28 நாட்களின் நிலைகளுக்குச் சூட்டிச் செயற்ப்படுத்தி வந்தனர்.அவற்றின் ஒவ்வொரு பாகமும் ஒவ்வொரு நாளின் நிலையாகும் என்று  கருதிவந்தனர் அவையாவன

1 ஷரத்தான் 2 புத்தைன்  3 ஸுரய்யா 4 தபரான் 5 ஹக்ஆ  6 ஹன்ஆ 7 திராஉ 8 நஸ்ரா 9 தர்ஃப்  10 ஜப்ஹா 11 தப்ரா 12 ஸர்ஃபா 13 அவ்வாஉ  14 சம்மாக் 15 ஃகஃப்ர் 16 ஸுபானீ 17 இக்லீல்  18 கல்ப் 19 ஷவ்லா 20 ந ஆயிம் 21 பல்தா 22 ச அத்தாபிஹ்  23 ச அத் புலஃக் 24 ச அத் ச ஊத் 25 ச அத் அக்பியா 26  ஃபர உ அவ்வல் 27 ஃபர உ ஸானீ 28 ரஷா உ, என்பனவாகும். ( தஃப்சீர் இப்னு கஸீர்,பா 4:பக்கம் 463, & சிறு குறிப்பு 08.)

■ நபியவர்களின் வருகைக்கு முன்பிருந்தே அன்றைய அரபிகள் போர்செய்வதற்குத் தடைசெய்யப்பட்ட புனித மாதங்களான “ரஜப் “துல்கஃஅதா “துல்ஹஜ் “முஹர்ரம் “ ஆகிய மாதங்களை அவர்கள் அறிந்தே இருந்தார்கள் புனிதமான மாதங்களின் ஆரம்பத்தையும் முடிவையும் சரியாக அறிந்திருந்த அவர்களிடம் மூர்க்க குணமும் குலவெறியும் பழிவாங்கும் துடிப்பும் நிறையவே இருந்தன

இதனால் எதிரிகளுடன் நினைத்த நேரம் சண்டையிட விடாமல் அவர்களைத் தடுத்துக்கொண்டிருந்த புனித மாதங்களில் தொடர்ச்சியாக வரும் -துல்கஃஅதா “ துல்ஹஜ் “ முஹர்ரம் “ஆகிய மாத காலத்தை நீண்ட இடைவெளியாக அவர்கள் கருதினார்கள் எனவே பொறுமையிழந்து அறிந்தநிலையில் சொந்த சுயநலனுக்காக

புனித மாதங்களை முன்னும் பின்னுமாக மாற்றிவந்ததால் அவர்களை அல்லாஹ் இவ்வாறு இடித்துரைக்கின்றான்

(புனித மாதங்களை முன்னும் பின்னுமாக மாற்றி ) ஒத்திவைப்பது என்பதெல்லாம் கூடுதல் இறை மறுப்பாகும் 09:37, மேலதிக விபரங்களுக்கு பார்க்க தஃப்சீர் இப்னு கஸீர் பாகம் 04 பக்கம் 270 –273

■ எனினும் போர் செய்யக்கூடாது என இறைவனால் தடை செய்யப்பட்ட புனித ரஜப் மாதத்தின் கண்ணியத்தை “ முளர் “ குலத்தினர்தான் அதிகம் பேணி வந்தார்கள் என்பதால் அந்த “ரஜப் “ மாதத்தை “ முளர் குலத்தாரின்” ரஜப் “ மாதம் என்றே நபி  (ஸல்) அவர்கள் கூறினார்கள் -அபூ பக்ரா (ரலி) புகாரி -4662,3197, 4406, 5550, 4747,முஸ்லிம் -3467, தஃப்சீர் இப்னு கஸீர் பாகம் -04, பக்கம் -463,

■ “ இம்ரான் பின் மில்ஹான் “ என்பவர் நபி(ஸல்) அவர்களது காலத்திலேயே இஸ்லாத்தில் இணைந்துவிட்டார்கள் ஆனாலும் நபிகளாரைச் சந்திக்கவில்லை இந்த -” அபூரஜாஉ அல் உதாரித்  (ரஹ்) அவர்கள் கூறினார்கள்

நாங்கள் ரஜப் மாதம் வந்து விட்டால் ஆயுத முனையை அகற்றக் கூடியது என்று அந்த மாதத்தை அழைப்போம் “ ரஜப் “ மாதத்தில் எந்த ஈட்டி முனையையும் அம்பு முனையையும் கழட்டி எறியாமல் விடமாட்டோம் -புகாரி -4376,4662,

■ போர் செய்யத் தடுக்கப்பட்ட மாதத்தில் “ உக்காள் சந்தையில் போர் “ ஏற்ப்பட்டதற்காக அம்மாதத்துப் புனிதத்தை அது கெடுத்துவிட்டது என்று அதற்கு “ பாவப் போர் “ என்று பெயரிட்டார்கள் இப்னு ஹிஷாம் -ரஹீக் அல் மக்தும் -79,80, அந்தப் போருக்குப் பிறகு

■ “அப்துல்லாஹ் இப்னு ஜத் ஆன் அத்தைமி “ என்பவரது வீட்டில் போர்
நிறுத்த சிறப்பு ஒப்பந்தம் ஒன்று ஏற்ப்பட்டது அவ் உடன் படிக்கையில்
தமது இருபதாவது வயதில் நபி  (ஸல்) அவர்களும் கலந்து கொண்டார்கள் அவ் உடன் படிக்கையில் கலந்து கொண்டது பற்றி நபித்துவம் கிடைத்த பிறகும் அதை ஞாபகப்படுத்திக் கூறும்போது

“அப்துல்லாஹ் இப்னு ஜத் ஆண்” வீட்டில் நடந்த சமாதானத்துக்கான ஒப்பந்தத்தில் நான் கலந்து கொண்டே ன் அது எனக்கு செந்நிற உயர் ரக ஒட்டகைகள் கிடைப்பதைவிட அந்த ஒப்பந்தத்தில் கலந்து கொண்டது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது என்று நபி  (ஸல்) அவர்கள் கூறினார்கள் இப்னு ஹிஷாம் -ரஹீக் -80,

☪ முஹர்ரம் பத்தாவது நாளின் பிறையைச் சரியாக  அன்றைய மதீனாவாழ் யூதர்களும் அறிந்திருந்தார்கள்  (இவர்களைப்போன்று 12 ஆவது நாளின் பிறையைப் பத்தாக அவர்கள் எடுக்கவில்லை )

■ நபி  (ஸல்) அவர்கள் மதீனா நகருக்கு வந்த போது யூதர்கள் முஹர்ரம் பத்தாவது நாளில் நோன்பு நோற்பதைக் கண்டார்கள் அது பற்றி யூதர்களிடம் கேட்கப்பட்டபோது அந்த நாள்தான் ஃபிர்அவ்னுக்கு எதிராக மூஸா  (அலை) அவர்களுக்கும் இஸ்ரவேலர்களுக்கும் அல்லாஹ் வெற்றியளித்தான் ஆகவே நாங்கள் மூஸா (அலை) அவர்களைக் கண்ணியப்படுத்தும் விதத்தில் அந்த நாளில் நோன்பு நோற்கின்றோம் என்று கூறினார்கள் ***இப்னு அப்பாஸ்  (ரலி) புகாரி-2004,3397 ,3943,4680,4737 ,1893, 1592, 2000–2007,3942,3831, 4680, 4501–4504,முஸ்லிம் -2082,2083,

☪ முஹர்ரம் மாதத்தின் முதலாவது நாளையே புதிய வருடத்தின் ஆரம்ப நாளாக அவர்கள் எடுத்தார்கள்  (இவர்களைப்போன்று மூன்றாவது நாளை முதலாவது நாளாக அவர்கள் எடுக்கவில்லை )

■ அன்றய அரபு மக்கள் முதல் மாதமாக முஹர்ரம் மாதத்தையே வைத்திருந்ததாலும் ஹஜ்ஜை முடித்துவிட்டு ஹாஜிகள் அப்போதுதான் தமது இருப்பிடம் திரும்புவார்கள் என்பதாலும் அந்த “ முஹர்ரம் “ மாதத்தையே நாமும் முதல் மாதமாக்கலாமே என்று உஸ்மான்  (ரலி) அவர்கள் கூறிய மசூரா அடிப்படையிலேயே உமர் (ரலி) அவர்கள் “முஹர்ரம் “ மாதத்தையே வருடத்தின் முதல் மாதமாக நிர்ணயித்து கலண்டர் தயாரித்தார்கள் -ஃபத்ஹுல் Bபாரி

☪ போர் செய்வதற்குத் தடை செய்யப்பட்ட புனிதமான மாதம் என்று அவர்கள் தெளிவாக அறிந்திருந்தும் அன்று  போர் செய்வதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டார்கள்

■ நபித்தோழர்களைக்கொண்ட ஒரு படைப்பிரிவு போர் தடை செய்யப்பட்ட முஹர்ரம் மாதத்தில் இணைவைப்பாளர்களில் ஒரு கூட்டத்தாரை எதிர்கொண்டனர் அவர்கள் முஸ்லீம்களைத் தாக்க முனைந்த போது முஸ்லிம்கள் அவர்களிடம் புனித மாதத்தில் தங்களுடன் போர் புரியாதிருக்குமாறு அல்லாஹ்வை முன்னிறுத்தி எவ்வளவோ வேண்டினார்கள் ஆனால் இணைவைப்பாளர்கள் போர் செய்தே தீருவோம் என்று கூறி முஸ்லிம்கள்மீது எல்லைமீறினர் அப்போது முஸ்லிம்களும் அவர்களுடன் போரிட்டார்கள் அதில் இணைவைப்போருக்கு எதிராக முஸ்லிம்களுக்கு அல்லாஹ் வெற்றியளித்தான் அவர்கள் தொடர்பாகவே இந்த 22:60, வசனம் அருளப்பட்டது தஃப்சீர் தபரீ தஃப்சீர் முகாத்தில் பின் ஹய்யான் & தஃப்சீர் இப்னு கஸீர் பாகம் 02: பக்கம், 120, & 22:60,

☪ அவர்கள் நட்ச்சத்திரக் கலையையும் அறிந்திருந்தனர்

■ ஒரு இரவு மழை பொழிந்தபின் ஹுதைபியா என்னுமிடத்தில் நபி  (ஸல்) அவர்கள் எங்களுக்கு ஸுபஹ் தொழுவித்தார்கள் தொழுது முடித்ததும் மக்களை நோக்கி உங்கள் இறைவன் என்ன கூறினான் என்று அறிவீர்களா? என்று கேட்டார்கள் அதற்கு மக்கள் அல்லாஹ்வும் அவனது தூதருமே நன்கு அறிந்தவர்கள் என்றனர் அதற்கு நபி  (ஸல்) அவர்கள் எனது அடியார்களில் என்னை நம்பியவர்களும் என்னை நிராகரிப்பவர்களும் இருக்கின்றனர் யார் அல்லாஹ்வின் அருளால் அவனது கருணையால் எங்களுக்கு மழை பொழிந்தது என்று கூறுகின்றாரோ அவரே என்னை நம்பியவர் (இன்று) இன்ன இன்ன நட்சத்திரங்கள் இன்ன திசைகளில் இருந்ததாலேயே எங்களுக்கு மழை பொழிந்தது என்று யார் கூறுகின்றாரோ அவர் என்னை நிராகரித்து நட்சத்திரங்களை நம்பியவராவார் என்று அல்லாஹ் கூறியதாகத் குறிப்பிட்டார்கள் -புகாரி -1038,முஸ்லிம் – 125 –127 ,&
56:75–82,

■ மேற்காணும் அறிவிப்புகளின் படி நட்சத்திரக் கணிப்பை அடிப்படையாகக்கொண்ட நுஜும் கணக்கைத்தான் இஸ்லாம் அங்கீகரிக்கவில்லை ஆனாலும் பிறைகளின் படித்தரங்களைப் புறக்கண்களால் மாத்திரமே பார்த்துப் புதிய மாதங்களைத் தீர்மானித்து நடைமுறைப்படுத்த முடியுமான அவர்களது காலத்தில் ஒரு மாதத்தின் ஆரம்ப நாளைச் சரியாகத் தீர்மானிப்பதற்க்காக அதற்கு முந்திய மாத பிறைகளைக் கண்ணுக்குத் தெரியக்கூடிய கடைசிப் படித்தரமான உர்ஜூனில் கதீம் 36:39,வரை கவனமாகப் பார்த்து வந்து கணக்கிட்டு  புதிய மாதங்களை அதன் முதலாவது நாளிலிருந்தே மிகச்சரியாகக் கடைப்பிடித்து வந்துள்ளனர் என்பதற்கு சொல் ,செயல், அங்கீகாரம் கொண்ட ஆதாரபூர்வமான அறிவிப்புகள் ஏராளமுண்டு, இதோ உங்கள் சிந்தனைக்கு சில

☪ அவர்கள் அறியாதிருந்தது துல்லியமான விண்ணியல் கணித கணக்கிட்டு முறையை மாத்திரமே • நாம் துல்லியமான விண்ணியல் கலையை அறியாதவர்களாகவும் அதனை எழுதத் தெரியாதவர்களாகவும் உள்ளோம் என்ற நபி  (ஸல்) அவர்களின் கூற்று -புகாரி பாகம் 02, பக்கம் -587,பாடம் -13,

■ அல்லாஹ்வின் தூதர்  (ஸல்) அவர்கள் கூறினார்கள் நாம் உம்மி சமுதாயம் ஆவோம் விண்(ணியல்) கலையையும் அறியமாட்டோம் (அதனை) எழுதுவதை ( யும்) அறியமாட்டோம்,,,,,,,,,,புகாரி -1913,

■ எனினும் தமக்குப்பிறகு வரவிருக்கும் சந்திர ஓட்டத்தைத் துல்லியமாகக் கணக்கிடவும் அதனை எழுதவும் தெரிந்த சமுதாயம் இது விஷயத்தில் சரியான தீர்வை எட்டும் என்பதை மறைமுகமாகக் குறிப்பிட்டு இப்போது நமக்குள்ள வசதிக்கேற்ப கணக்கிட்டும் செயற் படலாம் என்பதை வலியுறுத்தும் பொருட்டு பிறை பார்த்தல் சம்பந்தமாக வரும் வசனங்களிலெல்லாம் கண்ணால் மாத்திரமே பார்ப்பதற்க்குண்டான “ரஃயல் ஐன் “ 03:13 என்ற வார்த்தையைப் போடாமல் – “ருஃயத் “ர அய்து “ அரா “தரா” ரஆ “என்ற “கண்ணால் “ கனவால் “ கணக்கீட்டால் “ கவனித்தலால் “ கவனத்தால்” தகவலால் “ ஆய்வால் “ உள்ளத்தால் “உணர்வால் “ சிந்தனையால் “ ஆறிவால் “,,,, என மறைமுகமாகப் பல பொருளையுடைய ☆ ருஃயத் ☆ என்ற வார்த்தையை அல்லாஹ்வின் தூதர்  (ஸல்) அவர்கள் பாவித்துள்ளார்கள் என்பது தெளிவாகிறது.

■ நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘ரமழானின் ஆரம்பத்தை அறிந்துகொள்ள ஷஃபான் முதல் பிறையிலிருந்து கணக்கிடுங்கள்’ (நூல்: திர்மிதி, அஹ்மத்.)

■ ரமழானின் ஆரம்பத்தைச் சரியாக அறிந்துகொள்வதற்காக  நபி (ஸல்) அவர்கள் ஷாஃஅபான் மாதத்தின் நாட்களை மட்டும்  (குறிப்பாகக் கவனித்துக் ) கணக்கிடக்கூடியவர்களாக இருந்தார்கள் மற்ற மாதங்களின் நாட்களை அப்படிக்  (குறிப்பாக அவர்கள் ) கணக்கிடவில்லை. பின்னர் அவர்கள்மீது மறைக்கப்படும்போது அதை அவர்கள் முப்பதாவது நாள் என்று எண்ணிக் கொள்வார்கள். பிறகு (ரமழானில்) நோன்பு வைப்பார்கள். ஆயிஷா  (ரலி) அபூதாவூத் -1993, அஹ்மத்,

■ ரமழானின் ஆரம்பத்தை ( ச் சரியாக ) அறிந்துகொள்ள      “ஷாஃஅபான் “ ( மாதப் ) பிறைகளைக் (கவனித்துக் ) கணக்கிட்டு வாருங்கள் என்று நபி  (ஸல்) அவர்கள் கூறினார்கள் -அபூ ஹுரைரா ( ரலி) திர்மிதி -687, அஹ்மத்

☪ சந்திரன் கிழக்கில் உதித்து மேற்கில் மறைகிறது என்பதையும் அவர்கள் தெளிவாக விளங்கியிருந்தார்கள் (இவர்களைப்போன்று மேற்கில் உதித்து கிழக்கில் மறைகிறது என்று அவர்கள் நம்பவில்லை)

■ எனது இறைவன் சூரியனை கிழக்கில் உதிக்கச் செய்கின்றான் நீ மேற்கில்  அதனை உதயமாக்கு என்று இப்ராஹீம் கூறினார் -02:258,

■ சூரியன் மீதும் அதன் பிரகாசத்தின் மீதும் சத்தியமாக  ( ப் பின்னர் ) அதனைத் தொடர்ந்து வரும் சந்திரன் மீதும் சத்தியமாக -91:01,02,

■ சந்திரன்  ( கிழக்கில் ) உதயமாவதை இப்ராஹீம்  ( அலை அவர்கள்)
கண்டார்கள் -06:77–86,

☪ முதலாவது நாளில் பிறை கிழக்குத் திசையிலிருந்து சூரியனைப் பின்தொடர்ந்து உதித்து வரும் என்பதையும் விளங்கியிருந்தார்கள்     (இவர்களைப்போன்று மஃரிப் நேரம் மேற்கில் உதிக்கிறது என்று அவர்கள் நம்பவில்லை )

■ மாதத்தின் முதல் நாளில் சந்திரன் சூரியனைப் பின்தொடர்ந்து வரும் என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்

■ சந்திர மாதத்தின் முதல் நாளில் பிறையானது சூரியன் உதித்த பின்னர் சற்று தாமதித்து கிழக்கில் உதிக்கும் அந்த முதல் நாளில் சூரியன் மறைந்ததற்க்குப் பின்னரே அந்தப் பிறை நமது புறக்கண்களுக்குக் காட்சியளிக்கும் என்று கத்தாதா (ரஹ்)அவர்களும் விளக்கமளித்துள்ளார்கள் தஃப்ஸிர் இப்னு கஸீர் -91:01,02, குர்ஆன் வசனங்களின் விரிவுரையில்.

☪ என்று பிறை பார்க்கின்றீர்களோ அது அன்றைக்குரிய பிறையே தவிர மாறாக அது அடுத்த நாளுக்குரிய பிறை அல்ல என்பதையும் மிகத் தெளிவாக அவர்கள் அறிந்திருந்தார்கள்.  மேலும்.

☪ முதலாவது நாளின் பிறையானது “சிறிது நேரம்” மாத்திரமே தென்படும். என்பதையும் அவர்கள் அறிந்திருந்தார்கள் மாறாக.  இவர்கள் முதலாவது பிறை என்று காட்டும் இஷாவுக்குப் பிறகும் மறையும் பிறையைப் போல அல்ல.

■ அபுல் பக்தரீ சயீத் பின் ஃபைரூஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் உம்ராவிற்காக (மக்காவிற்கு)ப் புறப்பட்டுச் சென்றோம். (வழியில்) நாங்கள் “பத்னு நக்லா” எனுமிடத்தில் தங்கியிருந்தபோது, பிறையைப் பார்க்க ஒன்றுகூடினோம். அப்போது மக்களில் சிலர், “அது மூன்றாவது பிறை” என்று கூறினர். வேறுசிலர், “(அல்ல) அது இரண்டாவது பிறை” என்று கூறினர். பின்னர் நாங்கள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களைச் சந்தித்தபோது, “நாங்கள் பிறை பார்த்தோம். மக்களில் சிலர் “அது மூன்றாவது பிறை” என்றனர்.

வேறுசிலர் “அது இரண்டாவது பிறை” என்று கூறினர்” என்று சொன்னோம். அதற்கு  இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “எந்த நாளில் நீங்கள் பிறை கண்டீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு, “இன்ன (மாதத்தின்) இன்ன நாளில்” என்று பதிலளித்தோம். அப்போது, “பார்ப்பதற்காகவே  பிறையை அல்லாஹ் “சிறிதுநேரம்” தென்படச் செய்கிறான். ஆகவே, அது நீங்கள் கண்ட (அந்த) நாளுக்குரியதே ஆகும்” (அடுத்த நாளுக்குரியதல்ல) என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்றார்கள். ஸஹீஹ் முஸ்லிம் : 1984. 1885,)  அத்தியாயம் : 13. நோன்பு.

■ சந்திர மாதத்தின் முதல் நாளில் பிறையானது சூரியன் உதித்த பின்னர் சற்று தாமதித்து கிழக்கில் உதிக்கும் அந்த முதல் நாளில் சூரியன் மறைந்ததற்க்குப் பின்னரே அந்தப் பிறை நமது புறக்கண்களுக்குச் (சிறிது நேரமே) காட்சியளிக்கும் என்று கத்தாதா (ரஹ்)அவர்களும் விளக்கமளித்துள்ளார்கள் தஃப்ஸிர் இப்னு கஸீர் -91:01,02, குர்ஆன் வசனங்களின் விரிவுரையில்)

☪ மாதத்தின் இறுதி நாளான  இன்று புவிமைய்ய சங்கம நிகழ்வு ஏற்படும் “கும்ம “ வுடைய கடைசி  நாள் என்றும். நாளை மாதத்தின் முதலாவது நாள் என்பதையும் இன்றே அவர்கள் தெளிவாக  விளங்கியிருந்தார்கள் (இவர்களைப்போன்று காலையில் உதித்து பன்னிரண்டு மணி நேரங்களைக்கடந்து மேற்குத்திசையில் மஃரிபுநேரம் மறையப்போகும் பிறையைப் பார்த்துவிட்டு அடுத்த இரண்டாவது நாளை மதலாவது நாளாக எடுப்பது -அல்து அது தவறினால் 36 மணி நேரங்களைக்கடந்து இரண்டாவது நாள் மஃரிப் நேரம் மறையப்போகும் பிறையைப் பார்த்துவிட்டு மூன்றாவது நாளை முதலாவது நாளாக எடுப்பது போன்றல்ல அவர்கள்)

■ நபி  (ஸல்) அவர்கள்  போர் செய்யத் தடுக்கப்பட்ட ரஜப் மாதத்தில்    * முஹாஜிர்கள் * எட்டுப்பேர் கொண்ட ஒரு படைப்பிரிவுக்கு * அப்துல்லாஹ் பின் ஜஹ்ஷ்  (ரலி) அவர்களைத் தலைவராக நியமித்து உளவு பார்க்க அனுப்பி வைத்தார்கள்,,,,,,

அவர்கள் நக்லா எனும் இடத்திற்கு வந்து சேர்ந்து அங்கு தங்கினார்கள் அப்போது குறைஷியரின் வணிகக் குழுவொன்று அந்தப் பகுதியைக் கடந்து சென்றது

*அது ரஜப் மாதத்தின் புவிமைய்ய சங்கம நிகழ்வு ஏற்பட்டும் இறுதி  (அமாவாசை) நாளாகும் * அப்போது வணிகக் குழுவினர் மீது தாக்குதல் தொடுப்பது பற்றித்
தங்களுக்கிடையே ஆலோசனை செய்த நபித்தோழர்கள் அல்லாஹ்வின் மீது ஆணையாக!  இன்றிரவு இந்த வணிகக் குழுவினரைத் தாக்காது நாம் விட்டுவிட்டால் நாளை அவர்கள் அபயமளிக்கப்பட்ட ஹரம் புனிதப் பகுதிக்குள் நுழைந்து விடுவார்கள்
பின்னர் அங்கும் அவர்களைத் தாக்க முடியாது

இப்போது அவர்களைத் தாக்கினால் புனித மாதத்தில் போர் புரிந்த குற்றம் நம்மீது ஏற்ப்படும் என்று கூறி ஒரு தீர்க்கமான முடிவுக்கு வர முடியாமல் தடுமாறிக் கொண்டிருந்தார்கள்,,,,,,,,,,,,,அவர்கள் தொடர்பாகவே  (நபியே!) புனித மாதத்தில் போர் புரிவது குறித்து அவர்கள் உம்மிடம் வினவுகின்றனர்,,,,,,,,,,,-02:217, எனும் இறை வசனத்தை அல்லாஹ் அருளினான் ( சுருக்கம் ) மேலதிக விபரங்களுக்கு பார்க்க -சுனனுல் பைககீ, அல் அஜமுல் கபீர், சீரத் இப்னு ஹிஷாம் பாகம் 02,பக்கம் -183, தஃப்சீர் இப்னு அபீ ஹாத்திம், தஃப்சீர் தபரீ,தஃப்சீர் இப்னு கஸீர் பாகம் 01,பக்கம் 678-686,

☪ இஷாத் தொழுகை நேரம் மறைவது அம்மாதத்தின் மூன்றாவது நாளின் பிறைதான் என்பதையும் அவர்கள் விளங்கியிருந்தார்கள் (இவர்களது வளமை போன்று ஐந்தாவது  நாளின் நிலவு அல்ல)

■ நான் தான் இந்த இஷாத் தொழுகையின் நேரத்தைப்பற்றி மக்களுக்குள் மிக அறிந்தவனாவேன்  அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மாதத்தின் மூன்றாம் பிறை மறையும் போது இஷாத் தொழுபவர்களாக இருந்தார்கள் நுஃமான் பின் பஷீர்  (ரலி) திர்மிதி -151,நஸயீ -526, அபூதாவூத் -355,

☪ ஒவ்வொரு மாதத்திலும் 07, ஆம்  நாளில் தோன்றும் முதல் கால் பகுதி பிறையின் நிலையாகிய  (F, QUARTER) எனும் முந்திய கால் பகுதிப் பிறை சரியாக அரைவட்ட வடிவில் “இஷா” தொழுகை நேரம் தலைக்கு மேலே தெரியும். என்றும் அது சுபஹ் தொழுகைக்கு முன்னர் மறையும் என்பதையும் விளங்கியிருந்தார்கள்.

■ அஸ்மா (ரலி) அவர்களின் முன்னாள் அடிமையான அப்துல்லாஹ் பின் கைசான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அஸ்மா (ரலி) அவர்கள் முஸ்தலிஃபா இல்லத்தின் அருகே இருந்தபோது, என்னிடம் “சந்திரன் மறைந்துவிட்டதா?” என்று கேட்டார்கள். நான் “இல்லை” என்றேன். அவர்கள் சிறிது நேரம் தொழுதுவிட்டுப் பிறகு “மகனே! சந்திரன் மறைந்துவிட்டதா?”என்று (மீண்டும்) கேட்டார்கள். நான் “ஆம் (மறைந்துவிட்டது)” என்றேன். “என்னுடன் (மினாவுக்குப்) புறப்படு” என்று கூறினார்கள். அவ்வாறே நாங்கள் புறப்பட்டுச் சென்றோம். (மினா வந்ததும்) அவர்கள் “ஜம்ரா”வில் கல்லெறிந்துவிட்டுப் பின்னர் (திரும்பிவந்து) தமது கூடாரத்தில் தொழுதார்கள். அப்போது அவர்களிடம் நான், “அம்மா! நாம் விடிவதற்கு முன்பே (மினாவுக்கு) வந்து விட்டோம்” என்றேன். அவர்கள், “(இதில் தவறேதும்) இல்லை, மகனே! நபி (ஸல்) அவர்கள் பெண்களுக்கு (விடியலுக்கு முன்பே மினாவிற்கு வர) அனுமதியளித்துள்ளார்கள்” என்று சொன்னார்கள்.- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது .அதில் “இல்லை, மகனே! அல்லாஹ்வின் நபி (ஸல்) அவர்கள், பயணத்திலிருந்த தம் பெண்களுக்கு (விடியலுக்கு முன்பே மினாவிற்கு வர) அனுமதியளித்துள்ளார்கள்” என்று கூறியதாக இடம்பெற்றுள்ளது.(முஸ்லிம் – 2484)

☪ மேற்குத் திசையில் சந்திரன் மறைந்துவிட்டால் அந்தப் பிரதேசத்திற்கான அன்றைய பிறை மறைந்துவிட்டது எனவே அடுத்த நாளுக்கான கிரிகைகளை சலுகை அடிப்படையில் ஆரம்பிக்கலாம் என்பதை விழங்கியிருந்தார்கள். ஆனால் இவர்களோ மேற்குத்திசையில் சந்திரனைக் கண்டுவிட்டு அது மறைந்துவிட்டால் அன்றைய நாள் அப்போதுதான் ஆரம்பிக்கிறது என்று எண்ணுகிறார்கள்.

அஸ்மா(ரலி) அவர்களின் ஊழியர் அப்துல்லாஹ் அவர்கள் அறிவித்தார். அஸ்மா(ரலி) முஸ்தலிஃபாவில் தங்க வேண்டிய இரவில் அங்கு தங்கினார்கள். பிறகு எழுந்து சிறிது நேரம் தொழுதுவிட்டு, ‘மகனே! சந்திரன் மறைந்துவிட்டதா?’ எனக் கேட்டார்கள். நான் ‘இல்லை!’ என்றதும், சிறிது நேரம் தொழுதார்கள். பிறகு ‘சந்திரன் மறைந்துவிட்டதா?’ எனக் கேட்டார்கள். நான் ‘ஆம்!’ என்றதும் ‘புறப்படுங்கள்!’ எனக் கூறினார்கள். நாங்கள் புறப்பட்டு வந்ததும் ஜம்ராவில் அவர்கள் கல் எறிந்தார்கள். பிறகு அங்கிருந்து திரும்பி வந்து தம் கூடாரத்தில் ஸுப்ஹு தொழுதார்கள். அப்போது நான், ‘அம்மா! நாம் விடியும் முன்பே வந்துவிட்டதாகத் தெரிகிறதே!’ என்றேன். அதற்கவர்கள், ‘மகனே! நபி(ஸல்) அவர்கள்(முதியோர்கள், குழந்தைகள், நோயாளிகள், ) பெண்களுக்கு இவ்வாறு வர அனுமதி வழங்கியுள்ளார்கள்’ என்றார்கள். ( புகாரி – பாகம் 02, பக்கம் 399, பாடம் 98, & 1676 – 1679)

☪ மாதத்தின் பெளர்ணமி எனும் முழு  நிலவு தோன்றுவது * 14 *ஆவத நாளில் தான் என்பதையும் அவர்கள் விளங்கியிருந்தார்கள் (இவர்களது கணக்கின்படி * 12 * ஆவது நாளில் அல்ல )

■ ஓர் இரவில் நாங்கள் நபி  (ஸல்) அவர்களுடன் அமர்ந்து கொண்டிருந்தோம் அப்பொழுது அவர்கள் பதினான்காம் நாளின்  (பெளர்ணமி ) முழு நிலாவைக் கூர்ந்து நோக்கியபடி இந்த நிலாவை நீங்கள் நெருக்கடியின்றிக் காண்பது போல் உங்கள் இறைவனையும் (மறுமையில்)  காண்பீர்கள்,,,,,,,,,,என்று கூறினார்கள் -ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) புகாரி -4851) அடுத்து

☪ ஒவ்வொரு மாதத்திலும் 22 ஆம்  நாளில் தோன்றும் கடைசி கால் பகுதி பிறையின் நிலையாகிய  (LAST QUARTER) எனும் பிந்திய கால் பகுதிப் பிறை சரியாக அரைவட்ட வடிவில் சுபஹ் நேரம் தலைக்கு மேலே தெரியும் போது அம்மாதத்தில் எஞ்சியிருப்பது எட்டு நாளா, அல்லது ஏழு நாளா, அல்லது லைலதுல் கத்ருடைய நாளா,என்பதையும் அவர்கள் மிகத் தெளிவாக விளங்கியிருந்தார்கள் இன்றும் அப்பிரதேசங்களில் வாழும் பூர்வீக அரபிகளுக்கு இதுபற்றிய ஆழ்ந்த அறிவு உண்டு ஆனால் சுயநல ஆட்சியாளர்கள் இவர்களைக் கண்டுகொள்வதில்லை நம்மவர்களுக்கோ இது இன்னும் அறிமுகமாகவில்லை *

■ நாம் கத்ருடைய நாளைப் பற்றி நபியவர்களிடம் நினைவு படுத்தினோம் அப்போது அல்லாஹ்வின் தூதர்  (ஸல்) அவர்கள் கேட்டார்கள் மாதத்தின் எத்தனை நாட்கள் முடிந்தன? 22 நாட்கள் முடிந்தன மேலும் எட்டு நாட்கள் மீதம் உள்ளன என நாம் கூறினோம் (அதற்கவர்கள் ) இந்த மாதம் 29 நாட்களைக்கொண்டது எனக்கூறினார்கள் பிறகு நபி  (ஸல்) அவர்கள் தமது கையில் 29 நாட்கள் வரை எண்ணினார்கள் பிறகு இன்றைய நாளில் அந்த கத்ருடைய நாளைத் தேடுங்கள் எனக் கூறினார்கள் -இப்னு ஹுஸைமா -2024,பைஹகீ -8018,இப்னு ஹிப்பான் -2588,மேலும்

■ அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அருகில் “லைலத்துல் கத்ர்” இரவு பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது அவர்கள், (முழு வளையமாகவுள்ள “ஸஹன்” போன்ற பெரிய)  “உணவுத் தட்டின் (சரி) பாதித்துண்டைப் போன்று நிலா தோன்றும் இரவே (லைலத்துல் கத்ருடைய நாள்) ஆகும் என்பதை உங்களில் நினைவில் கொள்பவர் யார்?” என்று கூறினார்கள்.( அபூ ஹுரைரா (ரலி) முஸ்லிம், 2160, 2177 ஆகிய இரு அறிவிப்பாளர் தொடர்களில் இந்த ஹதீஸ் வந்துள்ளது.) பள்ளிவாசலில் தங்குதல் (இஃதிகாஃப்) அத்தியாயம் : 13. நோன்பு

☪ ஒவ்வொரு மாதத்திலும் 22 ஆம்  நாளில் தோன்றும் கடைசி கால் பகுதி பிறையின் நிலையாகிய  (LAST QUARTER) எனும் பிந்திய கால் பகுதிப் பிறை சரியாக அரைவட்ட வடிவில் சுபஹ் நேரம் தலைக்கு மேலே தெரியும் என்பதையும் விளங்கியிருந்தார்கள்.

■ அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அருகில் “லைலத்துல் கத்ர்” இரவு பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது அவர்கள், (வளையமாகவுள்ள) “உணவுத் தட்டின் பாதித்துண்டைப் போன்று நிலா தோன்றும் இரவே (லைலத்துல் கத்ர் நாள்) ஆகும் என்பதை உங்களில் நினைவில் கொள்பவர் யார்?” என்று கூறினார்கள்.( அபூ ஹுரைரா (ரலி) முஸ்லிம், 2177 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.)

☪ நடப்பு மாதத்தின் ஐந்து நாட்கள் மிகுதியாக இருக்கிறது என்றும் ஆறாவது நாள் புதிய மாதத்தின் முதலாவது நாள் என்பதையும் திடமாக அவர்கள்  விளங்கியிருந்தார்கள் புதிய மாதம் ஆரம்பிப்பதற்கு ஐந்து நாட்களுக்கு முன்பே கணக்கின் அடிப்படையில்
செயற்பட ஆரம்பித்தார்கள் பெரும் கூட்டத்தினருடன் ஹஜ்ஜுக்காகக் கிளம்பிவிட்டார்கள்

■ ஹஜ்ஜை மாத்திரம் நிறைவேற்றும் எண்ணத்தில் -துல் கஃதா மாதத்தின் -ஐந்து நாட்கள் மிகுதி இருக்கும் போது நபி  (ஸல்) அவர்களுடன் புறப்பட்டோம் நாங்கள் மக்காவை நெருங்கியதும் பலிப் பிராணியைக் கொண்டு வராதவர்கள் தவாஃப் செய்துவிட்டு
ஸஃபா மர்வாவிற்கிடையே ஓடி முடித்தவுடன் இஹ்ராமைக் களைந்து விட வேண்டும் என்று நபி  (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள் பிறகு துல்ஹஜ் பத்தாவது நாள் மாட்டின் இறைச்சி எங்களுக்கு வந்தது “இது என்ன” என நான் கேட்டேன் -அதற்கு -மக்கள் நபி  (ஸல்) அவர்கள் தமது மனைவியரின் சார்பாகப் பலியிட்டார்கள்! என்றனர்
(ஆயிஷா  (ரலி) அவர்கள் புகாரி -1709,1720,2952)

☪ 05:03, குர்ஆன் வசனம்  – என்று, எங்கே, எப்போது, அருளப்பட்டது அது எந்த நாள் என்பதும்  அவர்களுக்குத் தெளிவாகத் தெரியும்

■ யூதர்களில் ஒருவர் உமர்  (ரலி) அவர்களிடம் வந்து அமீருள் முஃமினீன் அவர்களே நீங்கள் உங்கள் வேதத்தில் ஓதிக்கொண்டிருக்கும் *இன்றைய தினம் உங்களின் மார்க்கத்தை உங்களுக்கு நிறைவு படுத்திவிட்டேன் உங்கள் மீது எனது அருள் கொடைகளை முளுமைப்படுத்திவிட்டேன் இஸ்லாத்தையே உங்களுக்காக மார்க்கமாகப் பொருந்திக்கொண்டேன் 05:03, என்ற ஒரு வசனம் யூதர்களான எங்கள் மீது இறக்கியிருந்தால் அந்த நாளை நாங்கள் ஒரு பெருநாளாகக் கொண்டாடியிருப்போம் என்றார்

அதற்கு உமர்  (ரலி) அவர்கள் அது எப்போது இறங்கியது ? எங்கே இறங்கியது?  அது இறங்கிய வேளையில் அரஃபா நாளில் நபி (ஸல்) அவர்கள் எங்கேயிருந்தார்கள் என்பதையெல்லாம் நான் அறிவேன் அல்லாஹ்வின் மீது ஆணையாக நாங்கள் அப்போது அரஃபாவில் இருந்தோம் –வியாழக்கிழமையன்று — அந்த வசனம் அருளப்பட்டது ஹஜ் பயணிகளின் பெருநாள் தினமான துல்ஹஜ் பிறை ஒன்பதாவது அரஃபாவுடைய நாளில்தான்  (அன்றைய நாளை நாங்களும் பெருநாளாகத்தான் கொண்டாடுகிறோம் ) என்று உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள் தாரிக் பின் ஷிஹாப் (ரஹ்) புகாரி -45,4407,4606,7268,

☪ மாதமென்பது சில வேளை 29 நாள்களாகவும் சில வேளைகளில்
30 நாட்களாவும் இருக்கும் என்பதையும் விளங்கியிருந்தார்கள்  (இவர்களைப்போன்று எல்லா மாதங்களையும் முப்பது முப்பதாகப் பூர்த்தி செய்யவில்லை )

■ அல்லாஹ்வின் தூதர்  (ஸல்) அவர்கள் கூறினார்கள் மாதம் என்பது சில வேளை 29 நாட்களைக் கொண்டதாகவும் சில வேளை 30 நாட்களைக் கொண்டதாகவும் இருக்கும் என்று அபூ ஹுரைர  (ரலி) இப்னு உமர் (ரலி) அனஸ் (ரலி) அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) உம்மு ஸலமா (ரலி) புகாரி -1907–1913, 2468,

■ நபி(ஸல்) அவர்கள் ஒரு மாதம் தமது மனைவியருடன் சேருவதில்லை என்று சத்தியம் செய்திருந்தார்கள் 29 நாட்கள் முடிந்ததும் அவர்கள் தங்கியிருந்த பரணை விட்டும் இறங்கி – மனைவியரின் -வீட்டிற்குத் திரும்பி வந்தார்கள் அவர்களிடம் நீங்கள் ஒரு மாதம் வீட்டிற்கு வருவதில்லை என்று சத்தியம் செய்தீர்களே –

-அதை நான் ஒவ்வொரு நாளாக எண்ணிக்கொண்டே வருகின்றேனே
-என்று கேட்கப்பட்டது அதற்கு நபியவர்கள் ஒரு மாதம் என்பது 29 நாள்களாகவும் அமையும்! என்று கூறினார்கள் -உம்மு ஸலமா  (ரலி) அனஸ் (ரலி) ஆயிஷா (ரலி) இப்னு அப்பாஸ் (ரலி) புகாரி -1910,1911,2468,2469,378,4785,4786,4788,4789,5262,5263, & நஸயீ -2104,

☪ அல்லாஹ் சொல்வது போன்று மாத முடிவின் இரன்டு நாட்களுக்கு முன்புள்ள – கண்ணுக்குத் தெரியக்கூடிய கடைசிப் படித்தரமான உர்ஜூனில் கதீமையும் 36:39, (உலர்ந்து வளைந்த பழைய பேரீத்த மட்டையைப் போலாகும் வரையில் சந்திரனுக்கு நாம் பல படித்தரங்களை ஏற்படுத்தியிருக்கின்றோம் ) என்பதையும் அதற்கு அடுத்த கடைசி நாளான புவிமைய்ய சங்கம நிகழ்வு ஏற்ப்படும் நாளையும் அவர்கள் தெளிவாக  விளங்கியிருந்தார்கள்

■ ரமழானுக்கு முதல் நா( ளான புவிமைய்ய சங்கம நிகழ்வு ஏற்படும் -அமாவாசை-நா) ளும் • அதற்கு முதல் நா( ளான கண்ணுக்குத் தெரியக்கூடிய கடைசிப் படித்தரமான உர்ஜூனில் கதீம் 36:39, தென்படக்கூடிய நா) ளும் உங்களில் எவரும் நோன்பு நோற்கக் கூடாது அந்நாளில் வழக்கமாக நோற்கும் நோன்பு -வந்து – அமைந்தாலே தவிர! ,,,,, என்று அல்லாஹ்வின் தூதர்  (ஸல்) அவர்கள் கூறினார்கள் -அபூ ஹுரைரா (ரலி) புகாரி பாகம் 02, பக்கம் 588, பாடம் 14 & 1914, முஸ்லிம் -1082, ரியாதுஸ் ஸாலிஹீன் -1224,

( ரமழானுக்கு முதல் மாத  ஷஃஅபானின் கடைசியான சங்கம  நாளையும் அதற்கு முந்திய இரண்டாவது  உர்ஜூனில் கதீமுடைய 36:39,நாளையும் அறிவதற்காகக் கடைசிப் பிறைகளைப் பார்த்து வருபவர்களிடமே இவ்வாறு சொல்ல முடியும்  என்பதையும் நாம் புரியவேண்டும்.)

■ நோன்புப் பெருநாளுக்கான கட்டாய தர்மத்தை நபித்தோழர்கள் பெருநாளைக்கு – ஒரு நாளைக்கு முன்னரோ. இரண்டு நாளைக்கு முன்னரோ கொடுத்து வந்தார்கள் -இப்னு உமர்  (ரலி) நாஃபிஉ( ரஹ்) புகாரி பாகம் 02, பக்கம் -263–269, பாடம் 70 இருந்து, 1503–1512 வரை ( பிந்திய பிறைகளைத் தொடராகப் பார்த்து வருபவர்களுக்கே இது சாத்தியப்படும்)

☪ இரண்டு பெருநாட்களின் மாதங்கள்  சேர்ந்தாற்போல் எண்ணிக்கையில் 29 + 29,நாட்களாகக் குறைந்து வராது என்பதையும் விளங்கியிருந்தார்கள் (பிறை மாதங்களின் சிறந்த பரிச்சயம் இல்லாதவர்கள் இவ்வாறு சொல்ல முடியாது)

■ பெருநாட்களின்  இரு மாதங்களும் சேர்ந்தாற்போல் இருபத்தொன்பது- இருபத்தொன்பது- நாட்களாகக் குறையாது என்று முஹம்மது கூறுகின்றார் (புகாரி. பாகம் 2,பக்கம் 586,பாடம் -12 )

■ அல்லாஹ்வின் தூதர்  (ஸல்) அவர்கள் கூறினார்கள் துல்ஹஜ், ரமழான், ஆகிய பெருநாட்களுக்குரிய இரண்டு மாதங்கள் சேர்ந்தாற்போல்  ( 29 + 29, நாட்களாகக் ) குறையாது என்று அபூபக்ரா (ரலி) அவர்கள் புகாரி பாகம் 02,பக்கம் -586,பாடம் -12 &
1912, (இரண்டு பெருநாட்களுக்குரிய மாதம் என்பது துல்ஹஜ். மற்றும். ஷவ்வால் மாதமாகும் )

■ அல்லாஹ்வுடைய தூதர்  (ஸல்) அவர்களது மக்காவுடைய வாழ்வின்  இறுதிக்கட்ட உயிரச்சுறுத்தலுக்கான நெருக்கடியான சந்தர்ப்பத்தில் அவர்கள் அங்கிருந்து இடம்பெயர்ந்து செல்லும் சரியான நாளை அல்லாஹ்தான் தீர்மானித்தான் அது தற்செயலாக நடந்த  ஒன்றல்ல

குறைஷியர்கள் நபி  (ஸல்) அவர்களைக் கொலைசெய்யத் திட்டமிட்ட போது அல்லாஹ்வின் புறத்திலிருந்து இறங்கி வந்த ஜிப்ரீல்  (அலை) அவர்கள் – நீங்கள் ஹிஜ்ரத் செய்ய அல்லாஹ் அனுமதி கொடுத்து விட்டான்—அதற்குரிய நேரத்தையும் நிர்ணயம் செய்துள்ளான்,,,,,,,,என்று கூறினார்கள் 08:30, இப்னு ஹிஷாம், ரஹீக் -204,
நபி  (ஸல்) அவர்கள் தமது வீட்டை விட்டும் கிளம்பியது # வியாழக்கிழமை # ஆகும் ஹிஜ்ரி 01-01-01 அன்றைய வியாழக்கிழமைக்கு முந்திய புதன் கிழமையன்றுதான் சந்திர
மாதத்தின் இறுதி நாள் என்பதை மேலும் உறுதிப்படுத்தும் முகமாக சூரியன் சந்திரன் பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் சங்கமித்து அன்று சூரிய கிரகணமும் அந்த சங்கம நாளில் நடைபெற்றுள்ளது நபி  (ஸல்) அவர்களின் கட்டளைப்படி “கும்ம “ வுடைய நாளான அந்த புவிமைய்ய சங்கம நிகழ்வு ஏற்ப்படும்-( அமாவாசை ) நாள் சந்திர மாதத்தின் இறுதி நாள் என்பதையும் அதற்கு அடுத்த நாள் புதிய மாதத்தின் முதல் நாள் என்பதையும் பாடம் பெற்ற சஹாபாக்கள் அன்றைய திகதியை 01-01-01-என வரையறுத்து வழிகாட்டிச் சென்றார்கள்

■ நான் எவ்வாறு ஹஜ் கடமையை நிறைவேற்றக் கண்டீர்களோ அப்படியே நீங்களும் ஹஜ் செய்ய வேண்டும் என்று நபி  (ஸல்) அவர்கள் கூறினார்கள் -முஸ்லிம், அதற்கு ஏற்பவே நபியவர்களின் இறுதி ஹஜ்ஜும் தற்செயலான ஒன்றல்ல அதுவும் ஏக இறைவனால் நாள் குறிக்கப்பட்ட ஒரு நிகழ்வாகும்

நபி  (ஸல்) அவர்கள் தமது ஹஜ்ஜத்துல் விதாவின்போது துல்ஹஜ் பிறை பத்தாவது நாள்  ( 10-12-10-வெள்ளிக்கிழமை,யவ்முன் நஹர் ) அன்று மினாவில் வைத்து நிகழ்த்திய வரலாற்றுச் சிறப்புமிகு உரையில் — வானங்களையும் பூமியையும் அல்லாஹ் படைத்த ஆதி நாளில் எப்படி இருந்ததோ அந்த அஸல் நிலைக்கே திரும்பி வந்து விட்டது என்பதை உறுதிப்படுத்துகின்றார்கள் -இப்னு உமர்  (ரலி) புகாரி-4406,5550 ,4662,7447,3197 ,முஸ்லிம் -3467,3468,4477,தஃப்சீர் தபரீ, தஃப்சீர் இப்னு மர்தவைஹி, தஃப்சீர் இப்னு கஸீர் பாகம் 04,பக்கம், 261–269, & 262 சிறு குறிப்பு 87,

☪ஆக நபி  (ஸல்) அவர்கள் நாடு துறந்த நாள் ஹிஜ்ரி -01-01-01-அன்று வியாழக்கிழமை என்ற அளவுகோலை வைத்தும் இறுதி ஹஜ்ஜின் பத்தாவது நாள் -ஹிஜ்ரி -10-12-10- அன்று வெள்ளிக்கிழமை என்ற அளவுகோலை வைத்தும்

பின்னோக்கிச் சென்று கணக்கிட்டுப் பார்க்கும்போது அவர்களது நாடு துறத்தலும் ஹஜ்ஜும் புவிமைய்ய சங்கம நிகழ்வு ஏற்பட்டு அடுத்த நாளை முதலாவது நாளாக எடுத்த தாகவே பாதுகாக்கப்பட்டுப் பதியப்பட்ட  வானியற் பெளதீகத் தரவுகளின் மூலம் துல்லியமாக அறிய முடிகிறது

■ அது போன்றே -நபி  ( ஸல்) அவர்கள் ஒரு மாதம் தமது மனைவியருடன் சேருவதில்லை என்று சத்தியம் செய்த,,,,,,# ஈலாஉ # (புகாரி -1910,1911,நஸயீ -2104, )  சம்பவமும்
அல்லாஹ்வுடைய திட்டமிடலின் பிரகாரம் மாத இறுதியின் புவிமைய்ய சங்கம நிகழ்வு ஏற்பட்டு அடுத்த நாளை முதலாவது நாளாக எடுத்ததாகவே அறிய முடிகிறது –முதலாவது பிறையிலிருந்து இருபத்தொன்பது நாட்களையும் ஆயிஷா  (ரலி) அவர்கள் எண்ணிக்கொண்டே வந்துள்ளார்கள் -புகாரி -2468,2469,378, 4785–4789,5262,5263, நஸயீ -2104,

■ அத்துடன்  நோன்பு கடமையாக்கப்பட்டு சுமார் ஒன்பது வருடங்கள்
வரை புனித ரமழான் மாதங்களை எதிர்கொண்ட நபி  (ஸல்) அவர்கள் இவர்களைப்போன்று காலையில் உதித்து பன்னிரண்டு மணி நேரங்களைக்கடந்து மேற்குத்திசையில் மறையப்போகும் பிறையைப் பார்த்துவிட்டு ஆ பிறை பிறந்துவிட்டது மாதம் ஆரம்பித்துவிட்டது என்று கோசமிட்டு அடுத்த இரண்டாவது நாளை மதலாவது நாளாக எடுத்த தாகவோ அல்லது 36 மணி நேரங்களைக்கடந்து மேற்கில்  மறையப்போகும் இரண்டாவது நாளின் பிறையைப் பார்த்துவிட்டு அடுத்த மூன்றாவது நாளை முதலாவது நாளாக எடுத்ததாகவோ

அல்லது 28 நோன்பு நோற்ற நிலையில் பிறைகாணப்பட்டு ஒரு நோன்பை கழா செய்ததாகவோ ஷவ்வால் ஒன்று அல்லது இரண்டாவது நாள் ஹராமான நாளில்  நோன்பு நோற்றதாகவோ

அரஃபா ஒன்பதாவது நாளின் சுன்னத்தான நோன்பை பிறை பத்து அல்லது பதினொன்றில் நோற்றதாகவோ

அல்லது துல்ஹஜ் பிறை ஒன்பதாவது நாள் மினாவிலும் பத்தாவது நாள் ஹாஜிகளை அரஃபா மைதானத்திலும்  நிறுத்தியதாகவோ பிறை -11-அல்லது 12 -ஆவது நாளில் ஹஜ்ஜுப் பெருநாள் கோண்டாடியதாகவோ முஹர்ரம் பிறை 11-அல்லது 12 -ஆகிய நாட்களில் ஆஸுரா நோன்பு நோற்றதாகவோ அல்லது 29 நாட்களைக்கொண்ட மாதங்களையெல்லாம் முப்பது முப்பதாகப் பூர்த்தி செய்ததாகவோ புதிய மாதத்தின் ஆரம்ப ஒருநாள் அல்லது இரண்டு நாளை கடந்த மாத இறுதிக்குள் செலுத்தி மாதங்களை வருடங்களை முன்னும் பின்னுமாக மாற்றியதாகவோ** ஆய்வின்படி எம்மால் அறிந்துகொள்ள முடியவில்லை

☆ ஆக மேலேயுள்ள தகவல்களின் அடிப்படையில்  நபி (ஸல்) அவர்கள் நோன்பையும் பெருநாளையும் அரஃபா நாளையும் ஹஜ் பெருநாளையும் முஹர்ரம் ஆஷுரா நோன்பையும்

புவிமைய்ய சங்கமம் ஏற்ப்பட்டு அடுத்த நாளை முதலாவது நாளாகக் கணக்கிட்டுச் செயற்ப்படுத்தியமை பின்னோக்கிக் கணக்கிட்டுப் பார்த்ததில் தெளிவாகப் புரிகிறது நீங்களும் ஆய்ந்து பார்க்கலாம் *

☆ அதே அடிப்படையில் தான் உமர்  (ரலி) அவர்களது ஆட்சியின் போது அவர்களது காலத்திலிருந்து சுமார் 200 மாதங்கள் பின்னோக்கிச் சென்று அன்றைய மூத்த நபித்தோழர்கள் கணக்கிட்டு  துல்லியமான ஹிஜ்ரிக் கலண்டரை நிறுவினார்கள் என்பது வரலாறு *
எஸ்.எம்.அமீர். நிந்தவூர் இலங்கை.

Leave a Comment

Previous post:

Next post: