அவர்களுடைய முகக்குறிகளைக் கொண்டு நீர் அவர்களை நன்கறிந்து கொள்வீர்! (Human Facial Expressions maybe Universal across Cultures –AI Study found)

Post image for அவர்களுடைய முகக்குறிகளைக் கொண்டு நீர் அவர்களை நன்கறிந்து கொள்வீர்!  (Human Facial Expressions maybe Universal across Cultures –AI Study found)

in அறிவியல்

அவர்களுடைய முகக்குறிகளைக் கொண்டு நீர் அவர்களை நன்கறிந்து கொள்வீர்!
-அல் குர்ஆன்.47:30.

(Human Facial Expressions maybe Universal across Cultures –AI Study found)

உலகிலுள்ள மனிதர்கள் அனைவரும் பரிணாம வளர்ச்சியின்படி குரங்கிலிருந்தே படிப்படியாக மனிதனார்கள என்பதே இன்றைய அறிவியல் கொள்கை இந்த கற்பனை கதையை இஸ்லாம் முற்றாக மறுக்கிறது. மாறாக, ஒரு ஆண் பெண்ணிலிருந்தே மனித சமுதாயம் உருவானது என்ற உண்மையை உரைக்கிறது.

மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஒரு ஆண் பெண்ணிலிருந்தே
படைத்தோம்.நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு பின்னர், உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம். – அல்குர்ஆன்.19:13.

உலக மனிதர்கள் அனைவரும் இனத்தால்,நிறத்தால்,மொழியால்,கலாச்சாரத்தால், நாட்டால் வேறுபட்டுள்ளனர்.ஆயினும் இவர்கள் அனைவரும் ஒருதாய் மக்களே என்கிறது இஸ்லாம்,ஆயினும் நாத்திகம் பேசும் அறிவுலக அறிஞர்கள் அனைவரும் மனிதர்களை இனம்,மொழி,கலாச்சாரத்தால் பிரித்தே பார்த்தனர்.இதன் முடிவாக, ஒவ்வொரு மனிதர்களின் உணர்ச்சி முகபாவனைகளான மகிழ்ச்சி,சோகம்,அன்பு கோபம்,போன்றவை அந்தந்த கலாச்சாரத்திற்கு தகுந்தவாறு மாறு பட்டிருக்கும் என்றே சொல்லி வந்தனர்.

இதன் உண்மை நிலையை அறிவதற்காக, அமெரிக்காவின் கலிபோர்னியா பெர்க்லி பல்கலைக்கழக ஆய்வாளர்கள் ஒரு உலகளாவிய பரந்த ஆய்வை மேற்கொண்டனர். இந்தியாவில் ஆங்கிலம் பேசும் மக்களைத் தேர்வு செய்து அவர்களின் 16 வகையான அடிப்படை உணர்ச்சி முகபாவனைகளை பதிவு செய்தனர்.உலகிலுள்ள 12 தட்ப வெப்ப பிரதேசத்தில் வாழும் 144 நாட்டின் 60 லட்சம் மக்களின் யு ட்யூப் ( GOOGLE – YOUTUBE) வீடியோ பதிவுகளுடன் அவற்றை ஒப்பிட்டு ஆய்வு செய்தனர்.

இந்திய மக்கள் வெளிப்படுத்திய பதினாறு வகை அடிப்படை முகபாவனைகளான,கேளிக்கை,கோபம்,பிரமிப்பு,செறிவு,குழப்பம்,அவமதிப்பு,மனநிறைவு,ஆசை,ஏமாற்றம்,சந்தோசம் உற்சாகம்,ஆர்வம், வலி, சோகம், ஆச்சர்யம்,மற்றும் வெற்றி போன்ற முகபாவங்கள் அப்படியே அனைத்து உலக மக்களுக்கும் சுமார் 70% பொருந்திப்போனது.இது குறித்தான ஆய்வுக் கட்டுரை கடந்த 16, டிசம்பர் 2020 நேச்சர் இதழில் வெளியானது. https://www.nature.com/articles/s41586-020-3037-7

இதன் மூலம் உலக மக்கள் எந்த இனத்தவராக,கலாச்சார வேறுபாட்டில் இருந்தாலும், அவர்கள் வெளிப்படுத்தும் உணர்ச்சி வெளிப்பாடுகள் ஒன்றே என்ற முடிவுக்கு வந்தனர்.ஒரு ஆண் பெண்ணிலிருந்து பல்கிப் பெருகிய மனிதர்களின் உணர்ச்சி வெளிப்பாடு ஒன்று போல் இருப்பதில் ஆச்சரியமில்லை.

உலக மக்கள் பல்வேறு இனம்,மொழி,நிறம்,கலாச்சாரத்தில் வேறுபட்டு வாழ்ந்து மறைந்திருந்தாலும் ….மறுமையில் எழுப்பப்படும் போது அவர்களின் நிலையை அவர்களின் முகக்குறியின் மூலம் அறிந்து கொள்ள முடியும் என்று அல்லாஹ் சொல்கிறான்.

குற்றவாளிகள் அவர்களுடைய முகக்குறி அடையாளங்களைக்கொண்டே அறியப்படுவர்கள். அவர்களுடைய உச்சி மயிரையும், கால்களையும் பிடித்திழுத்து நரகத்தில் எறியப்படும். – அல் குர்ஆன். 55:41.

மறுமையில் மட்டும் அல்ல,இம்மை உலகிலும் மனிதர்களின் முகபாவனை உணர்ச்சி வெளிப்பாட்டின் முலம் அவர்களின் நிலையை அறிய முடியும் அதற்குப்பிறகு தான் அவர்களின் பேச்சின் மூலம் அவர்களின் கருத்தை அறிந்து கொள்ள முடியும் என்பதையும் அல் குர்ஆன் சொல்லிக்காட்டுகிறது.

அவர்களின் முக அடையாளம்கள் மூலம் நீர் அவர்களை அறிந்து கொள்வீர்.ஏன், அவர்கள் பேசும் தொனியிலிருந்தும் அவர்களை நீர் அறிந்து கொள்வீர். – அல் குர்ஆன்.27:30.

உலகமனிதர்கள் அனைவரும் இனம்,மொழி,நாடு,கலாச்சாரம் என்று வேறுபட்டிருந்தாலும்…அவர்கள் வெளிப்படுத்தும் உணர்ச்சி முகபாவனைகள் எல்லாமே ஒன்றாகவே இருக்கும் என்று அல் குர்ஆன் அன்று சொன்னதை இன்று, அறிவியல் உலகம் ஆய்வு செய்து ஏற்றுக்கொண்டுள்ளது..குரங்கிலிருந்து மனிதன் என்ற பொய்யான பரிணாம கொள்கையும் புறந்தள்ளப்பட்டுவிட்டது.

இன்றைய மனிதர்களின் முக பாவனை உணர்ச்சிகளை மட்டும் ஆராய்ந்தது மட்டுமின்றி, பழங்கால மனிதர்களின் 3500 – 600 ஆண்டுகளுக்கு முந்திய கல் சிற்பங்களின் முகபாவனைகளையும் ஒப்பிட்டு ஆய்வு செய்தே இம்முடிவுக்கு வந்துள்ளார்கள். மனிதர்களின் முகங்கள் வெளிப்படுத்தும் பல்வேறு உணர்ச்சி பாவங்கள் அனைத்தும் உலகளாவிய அளவில் ஒன்றாகவே இருக்கிறது.அம்மனிதர்கள் பல்வேறு பட்ட கலாச்சார,,இன, மொழி,வேறுபட்டிருந்தாலும் சரியே! அனைவரும் ஒரு தாய் பிள்ளைகளாக இருப்பதால் அவைகள் ஒன்று போலவே இருக்கிறது.

மனிதர்களே! உங்கள் அனைவரையும் ஒரே ஆண், ஒரே பெண்ணிலிருந்துதான் படைத்தோம் .-அல் குர்ஆன். 49:13.

What Ancient Sculptures Reveal About Universal Facial Expressions | Smart News | Smithsonian Magazine

உலகிலுள்ள அனைத்து மனிதர்களும் ஒரே தாய் தந்தையின் சந்ததியினராக இருப்பதால் அவர்கள் முகங்காட்டும் பாவனைகளும் ஒன்றாகவே இருக்கும். முகம் காட்டும் உணர்ச்சியே பின்பு பேச்சுக்களாக வெளி வந்து அவர்களை அடையாளம் காட்டுக்கிறது. இவ்வுண்மையை இன்றைய அறிவியல் உலகம் உண்மைப்படுத்தியுள்ளது.”அகத்தின் அழகு முகத்தில் தெரியும்’ என்று தமிழில் கூறுவதும் யாவரும் அறிந்ததே!

மண்ணிலிருந்து படைக்கப்பட்ட நீங்கள் பல பாகங்களிலும் சென்று திரியக்கூடிய மனிதராக ஆனதும் அவனது அத்தாட்சிகளில் ஒன்றாகும். – அல் குர்ஆன். 30:20.

Leave a Comment

Previous post:

Next post: