அல் குர் ஆனின் வழியில் அறிவியல்……நாமே பூமியை விரித்தோம்!

Post image for அல் குர் ஆனின் வழியில் அறிவியல்……நாமே பூமியை விரித்தோம்!

in அறிவியல்

“இன்னும் பூமியை நாம் அதனை விரித்தோம்”-அல் குர்ஆன்.51:48

அல்லாஹ் பல இடங்களில் அல்குர்ஆனில் இப்பூமியை விரித்ததாக குறிப்பிடுகிறான். ஆதியில் இப்பூமி படைக்கப்பட்டபோது இன்றிருப்பதுபோல் தனித் தனி கண்டங்களாக இல்லை.பெரும் ஒற்றை பாறைக் கோளமாகவே இருந்தது. இதனை “பாங்கியா’(Super Continent Pangaea) என்று அழைக்கின்றனர். பூமியின் நிலத்தட்டை அல்லாஹ் ஏன் விரிக்க  வேண்டும்? உயிர் ஜீவன்கள் வாழ்வதற்கு இவை அவசியம் என்று இன்றைய அறிவியல் அறிஞர்கள், ஆராய்ச்சியாளர்கள் கூறுவதைப் பார்ப்போம்.

Pangaea (sometimes spelled Pangea), the most recent of a series of supercontinents on Earth, formed about 270 million years ago and broke apart about 200 million years ago. At this time most of the dry land on Earth was joined into one huge landmass that covered nearly a third of the planet’s surface. The giant ocean that surrounded the continent is known as Panthalassa.

Artwork showing the Earth at the time Pangaea broke upநாம் அறிந்தபடி அடித்தட்டு பெயர்ச்சி (Tectonic Plate Movement) உயிரின பிறப்புகளுக்கு மிகவும் முக்கியமானது. பாறை கோள்களில் (Rocky Planets)  மனிதக் குடியேற்றம் பற்றி சொல்ல வந்தால், எண்ணிக்கையில் பேரளவு பெயர்ச்சிகள் நேர்வது பெரும் தேவை என்பது எங்கள் கணக்குப்படி தெரிய வருகிறது. சூரிய மண்டலத்தில் நமது பூமியே பெரும்பாறைக் கோள் என்பதும், உயிரினம் வாழ தகுதி உள்ள கோள் என்பதும் எதிர்பாராது நிகழ்ந்தவை அல்ல. மீள் சுற்று இயக்கங்கள் பாறைக்கோள்களில் உயிரினம் வசிக்க பெரும் பங்கு ஏற்கின்றன. அடித்தட்டுகள் நகர்வதாலும், பாறைகளுக்குள் அடைபட்ட ஆக்சிஜன், கார்பன் டைஆக்சைடு போன்ற சிக்கலான இரசாயன வாயுக்கள் வெளியேறி, மீள் சுற்று நிகழ்ச்சியில் சூழ்வெளியில் தொடர்ந்து பயணிக்கின்றன. -Diana Valencia, Harvard University.

கடலடி தட்டுகள் நகர்ச்சியின்றி உயிரினங்கள் விருத்தி நேர்ந்திருக்காது
நமது நீர்க்கோள் நம் கண்முன்பே மாறி வருகிறது. அதனால் அநேக உயிரினப் பிறப்புகள் விளிம்பு முனையில் உள்ளன. நாம் வாழும் பூகோளமானது நிறை குன்றிச் சிறிதளவு சிறுத்திருந்தால் கண்டங்களை நகர்த்தி, மலைகளை எழுப்பும் அடித்தட்டுப் பெயர்ச்சிகள் ( Plate Tectonics ) நேர்ந்திரிக்காது. அடித்தட்டு நகர்ச்சி இல்லையேல் வாயுச் சூழ்வெளி அமைப்பின்றி உயிரினங்கள் பூமியில் தடம் வைத்து நடமாடி இருக்க முடியாது.

புதிய ஆராய்ச்சியின்படி பூர்விகத்தில் பூமிக்கு நேர்ந்த பூதப்பளு தாக்குதலால், அடித்தட்டு நகர்ச்சியும் தொடங்கி நமது நீர்க்கோள் உயிரின வசிப்புக்கு ஏற்ற நட்புக்கோளாய் மாறியது என்று தெளிவாய் அறியப்படுகிறது. சுமார் 3.26 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னார், சுமாரி 25 மைல்  (60 கி.மீ) அகலமுள்ள விண்கல்  பூமியில் எங்கோ மோதி அதன் பூதள விளைவுச் சான்றுகள் தென் ஆப்பிரிக்கப் பகுதியில் இருந்தது தெரிகிறது. அந்த மோதலைப் பற்றி ஆராய்ச்சியாளர் டோனால்டு லவ்  2014 ஏப்ரல் Journal of Geochemistry,Geophysics & Geosystem ல் ஆய்வுக்கட்டுரை எழுதியுள்ளார்.

அந்த யுகத்தில் உயிர் நுண்ணிகள் (Microbiological beings) மட்டும் இருந்ததாக அறியப்படுகிறது. அவை அந்த மோதலில் பெரிதும் பாதிக்கப்பட்டதாக தெரிகிறது. சுமார் 3 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்புதான் அடித்தட்டுப் பெயர்ச்சியே ஆரம்பமானது என்றும் டொனால்டு லவ் கூறுகிறார். தோன்றிய பூகோள உயிரினங்கள் ஏற்ப்பட்ட அடித்தட்டு பெயர்ச்சி விளைவுகளுக்குத் தம்மை தகுதியாக்கிக் கொண்டன என்றும் கூறுகிறார்.
http://www.dailygalaxy.com/my_weblog/2014/05/without-plate-tectonics-life-on-earth-might-never-have-gained-a-foothold-harvard-smithsonian-center-.html

ஓய்வில்லாமல் விரியும் இன்றைய பூகோளம்
பல மில்லியன் ஆண்டுகளாக படிப்படியாக மிக மெதுவாக பூமியின் வடிவம் மாறி வருகிறது. 4.5 பில்லியன் வருடங்களுக்கு முன் தோன்றிய ஆரம்ப காலத்து விட்டம் 4000  மைல் (6600 கி.மீ) 3.5 பில்லியன் ஆண்டுகளில் 4800 மைலாக ( 8000 கி.மீ) விரிந்தது. 2.8 பில்லியன் ஆண்டுகளில் 5280 மைலாக ( 8800 கி.மீ)  600 மில்லியன் ஆண்டுகளில் 7200 மைல் ( 12000 கி.மீ) விட்டமும் இருந்தது. இப்போது 7850 மைல் ( 12750 கி.மீ) விட்டம் கொண்டுள்ளது.

பூமியின் உள்ளமைப்பில் உள்ள உலோகக் கனல் திரவம் கொந்தளிப்பதால் மேலேலுச்சி ஓட்டங்கள் (Convection Current) நிகழ்கின்றன. அந்த ஓட்டமே பூகோளத்தின் உந்து சக்தியாக (Driving Force) மலை மேடுகளை உண்டாக்கியும், கண்ட நகர்ச்சியைத் (Continental Movement ) தூண்டியும் வருகிறது.

“நமது பிரபஞ்ச விண்வெளியில் பூமியைப்போன்று கடினமான நிறையுடைய செவ்வாய், சந்திரன் போன்ற எத்தனையோ கோள்கள் உள்ளன. ஆனால் அக்கோள்களின் நில உள் அமைப்பில் அடித்தட்டு நகர்ச்சி (Tectonic Plate Movement) ஏற்படுவதில்லை. நமது பூமியில் மட்டுமே இச்செயல் நடக்கிறது. பூமியில் உள்ள 70% கடல் நீரானது பூமித்தட்டு நகர்வுக்கு மசகு எண்ணெய் போல் செயல் புரிகிறது. இம்மாதிரி உட்கருவின் வெப்பமும் இடையடுக்கு, மேலடுக்கு அமைப்புகளும் பூமியில் இல்லாவிட்டால் பூதட்டு நகர்ச்சி எழவே எழாது. பூமியில் உயிரினமும் நீடித்திருக்காது”

ஜொனாதன் லூனின்.Astronomy Magazine: The Solar System-What Makes Earth Right for Life? By:Jonathan Lunine (Dec.2008)

பூமியில் உயிரினங்கள் வாழ்வதற்கு தகுந்த சூழல் ஏற்ப்பட அடித்தட்டு நகர்ச்சி அவசியம் என்று இன்றைய அறிவியல் கூறுவதை படைத்த ரப்புல் ஆலமீன் 1400 ஆண்டுகளுக்கு முன்பே கூறிவிட்டான்.

“இன்னும், பூமியை படைப்பினங்களுக்காக அவனே விரித்தமைத்தான்.” -அல் குர்ஆன்.55:10.
மேலும் அல்லாஹ் கூறுகின்றான்,
“பூமியை நாம் விரித்து அதில் உறுதியான மலைகளை நிலைப்படித்தினோ -அல் குர்ஆன்.15:19.

நாம் வாழும் பூமியின் மேலடுக்கு பல பிளேட்டுகளாக ஒன்றோடோண்டு இணைக்கப்பட்டுள்ளது. பூமியின் மையத்தில் கடும் வெப்ப நிலையில் பாகு போன்ற திரவத்தில் நமது பூமியின் மேலடுக்கு மிதந்து விரிந்து கொண்டே செல்கிறது. வருடத்திற்கு சுமார் 4 செ.மீ. அளவில் விரிகிறது. பூமியின் மேலடுக்கில் உள்ள கண்டங்களும், கடல்களும் சேர்ந்தே நகர்கின்றன.

இப்படி பூமிக்கு அடியில் இருக்கும் பாறை அடுக்குகள் நகரும்போது ஒரு அடித்தட்டு பிளேட் அடுத்த தட்டு பிளேட்டோடு சொருகும் போது மேல்தட்டு அடுக்கு உயர்ந்து மலைகள் உருவாகின்றன. உலகத்தில் உயர்ந்த இமயமலையானது இவ்விதம் உருவானதே. நவீன டெக்டோனிக் கொள்கையின்படி இமயமலை இந்திய ஆஸ்திரேலிய தட்டு மற்றும் யூரேசியன் கண்டங்களிடையே நிகழ்ந்த மோதலால் உருவாகியது.

பூமியில் மலைகள் ஏன்? எதற்கு?
உயிர் ஜீவன்கள் வாழ்வதற்கு தேவையான பிரதானமான நீர் மலையிலிருந்தே உருவாகின்றன. மிக உயர்ந்த இடத்தில் பனிக்கட்டி மற்றும் பனியாறு உருவாகிறது. இமயமலையில் மட்டும் சுமார் 15000 பனியாறுகள் உற்பத்தியாகின்றன. இத்தகைய உயர மாறுபாடு மழை அளவு மண்ணின் நிலை மற்றும் மிக அதிக பனிபொழிவு காரணமாக நிறைய தாவரங்களும் விலங்குகளும் உயிர் வாழ உதவுகிறது.

உலகில் ஆசியாவின் 64% நிலப்பகுதியும்; ஐரோப்பாவின் 25% நிலப்பகுதியும்; தென்னமெரிக்காவின் 22% உம்; ஆசுத்திரேலியா, ஆப்பிரிக்காக்கண்டங்களில் முறையே 17%, 3% ஆகிய பகுதிகளும் மலைகளினால் மூடப்பட்டுள்ளன. மொத்தமாக உலகின் 24% நிலப்பகுதி மலைகளாக உள்ளன. உலகின் 10% மக்கள் மலைப் பகுதிகளில் வாழ்கின்றனர். உலகின் 90% ஆறுகள் மலைப் பகுதிகளிலேயே உருவாகின்றன என்பதுடன் உலக மக்களில் 50% மக்களின் நீர் தேவையை இம்மலைகளே நிறைவு செய்கின்றன. http://www.fao.org/docrep/w9300e/w9300e03.htm

மழை பொழிவதற்கு மலைகள் அவசியம். உதாரணமாக கேரளா மாநிலத்தில் அதிக மழை பொழியக் காரணம் மேற்கு தொடர்ச்சி மலைகள் அங்கு இருப்பதே. மேற்குத் தொடர்ச்சி மலை (Western Ghats) இந்திய துணைக்கண்டத்தின் மேற்புறத்தில்அரபிக்கடலுக்கு இணையாக அமைந்துள்ள தொடர்மலையாகும். மேற்குத் தொடர்ச்சி மலை அரபிக்கடலில் இருந்து வரும் குளிர்ந்த காற்றைத் தடுத்து அதன் மேற்பகுதியில் அமைந்துள்ள கேரளா மற்றும் மேற்கு கடற்ரையில் நல்ல மழையைத் தருகின்றது. கடல் வெப்பம் ஆவியாகி மிக உயரம் சென்று மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரில் பட்டு குளிர்ந்து அங்கு தொடர் மழையைப் பொழிவிக்கிறது.மலை இன்றி மழை இல்லை.

அல்லாஹ் மலைகளைப் படைத்து அதில் ஆறுகளை உருவாக்கி சகல ஜீவராசிகளுக்கும் நீரை ஆதாரமாக்கியுள்ளான்.

99% ஆன பனியாறுகள் துருவப் பகுதிகளிலுள்ள பனிவிரிப்புகளில் காணப்படுகின்றது. மற்றவை ஒவ்வொரு கண்டத்திலும் உள்ள மலை குன்றுகளிலும் உயர் தீவுகளிலும் உள்ளன. புவியில் காணப்படும் நன்னீர் மூலங்களில் மிகப் பெரியதும் இந்த பனியாறுகளே. உலகத்தில் இருக்கும் மக்கள் தொகையின் ஒன்றில் மூன்று மடங்கு மக்களுக்கான நன்னீர்த் தேவை இந்த பனியாறுகளாலேயே பூர்த்தி செய்யப்படுகின்றது. தாவரங்கள், விலங்குகள் மனிதரின் நனீர்த் தேவையை ஈடுசெய்ய முக்கியமாக இந்த பனியாறுகள் பயன்படுகின்றன.  உலகின் நீளமான ஆறுகளில் ஒன்றான அமேசான் நதி பெரு நாட்டின் ஆண்டீஸ் மலைத்தொடரில் பணி ஆறாக உருவாகிறது.நமது இமயமலை பனிச் சிகரங்களில் சிந்து,கங்கை,கோதாவரி,பிரமபுத்ரா,போன்ற நதிகள் உற்பத்தியாகி பல்லுயிர் ஜீவன்களுக்கு பயன் தருகிறது. அத்துடன் ஆறுகளின் பயன்களை அல்லாஹ் கூறுகிறான்.

உங்களுடன் பூமி அசையாதிருப்பதற்க்காக, அவன் அதன் மேல் உறுதியான மலைகளை நிறுத்தினான்; இன்னும் நீங்கள் சரியான வழியை அறிவதற்காக அவன் ஆறுகளையும், பாதைகளையும் அமைத்தான். –அல் குர்ஆன்.16:15
 
இன்று ஆறுகள் நீர்வழிப் போக்குவரத்திற்கு சிறந்த பாதையாக உள்ளன. நதி செல்லும் பாதையிலேயே மனித நாகரிகங்கள் பிறந்தன, வளர்ந்தன. மேலும்  நாடுகளுக்கிடையில் மலைகளும்,நதிகளும் எல்லைகளாக விளங்குகின்றன. குறிப்பாக ஐரோப்பாவில் ஓடும் நதிகள் இரு நாடுகளுக்கு குறுக்கே ஓடி எல்லைகளாக விளங்குகின்றன. நதியில் பாலம் அமைப்பதன் மூலம் தரை வழி பாதைகளை உருவாக்கி போக்குவரத்திற்கு பெரிதும் பயன்தருகின்றன.

அல்லாஹ் கூறுகிறான்,
 “மேலும் நாம் பூமியை நீட்டி விரிவாக்கி, அதில் உறுதியான மலைகளை அமைத்துள்ளோம்; மேலும் அதில் அழகிய புற்பூண்டுகளை (ஆண்,பெண்) ஜோடியாக முளைப்பிக்கவும் செய்திருக்கின்றோம்.” -அல் குர்ஆன்.50;7

தாவர புற்பூண்டு இனங்களில் ஆண்-பெண் ஜோடி உள்ளதா என்று கேள்விக்கு 17 ம் நூற்றாண்டு வரை எவருக்கும் தெரியாது. 1790 ம் ஆண்டு ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த  கிருஸ்டியன் கொன்ராடு ஸ்பிரின்ஜெல் என்னும் ஆராய்ச்சியாளரே தாவரங்கள் ஆண்,பெண் ஜோடி,ஜோடியாக உள்ளன என்பதை கண்டு பிடித்து உலகிற்கு அறிவித்தார்.

“Christian Konrad Sprengel (22 September 1750 – 7 April 1816) was a German theologist, teacher and, most importantly, a naturalist. He discovered sexuality in the plant kingdom.”
http://en.wikipedia.org/wiki/Christian_Konrad_Sprengel
http://www.livescience.com/32261-do-plants-have-sex.html

“அவனே இரவைப் பகலால் மூடுகிறான்” –அல் குர்ஆன்.!3:3

இவ்வசனத்தின் மூலம் முதலில் இருளாக இருந்த பிரபஞ்சத்தில் சூரியனை படைத்த பின்னரே இரவு பகல் உண்டாகியது என்ற உண்மையையும் கோள்கள் அனைத்தும் உருண்டையாக சுழன்று செல்வதாலே இரவு பகல் மாறி மாறி வருகிறது என்ற தெளிவும் கிடைக்கிறது. ஒரே ஒரு வசனத்தில் ஏராளமான அறிவியல் உண்மைகளை அடைக்கி வைத்து நம்மை அல்லாஹ் சிந்திக்கச் சொல்கின்றான்.

“ அவன் எத்தகையவன் என்றால் அவனே பூமியை விரித்து, அதில் உறுதியான மலைகளையும், ஆறுகளையும் உண்டாக்கினான்; இன்னும் அதில் ஒவ்வொரு கனி வர்க்கத்திலிருந்தும் இரண்டு இரண்டு ஜோடிகளை உண்டாக்கினான்; அவனே இரவைப் பகலால் மூடுகிறான்- நிச்சயமாக இவற்றில் சிந்திக்கும் மக்களுக்குப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.” -அல் குர்ஆன்.13:3

எஸ்.ஹலரத் அலி-ஜித்தா.

{ 2 comments }

M.M.A.NATHARSHA August 25, 2014 at 1:01 am

ALHAMATHILILLAH ALLAH AKBAR

A.ABDULRAJAK September 30, 2014 at 10:02 pm

dear brothers,
for more information
46:21. மேலும் “ஆது” (சமூகத்தாரின்) சகோதரர் (ஹூது) திடமாகவே, அவருக்கு முன்னரும், அவருக்குப் பின்னரும் எச்சரிக்கை செய்பவர்கள் (இறை தூதர்கள்) வந்திருக்கிறார்கள் – (அவர்) தம் சமூகத்தாரை, “அல்லாஹ்வையன்றி (வேறு எதனையும்) நீங்கள் வணங்காதீர்கள் – நிச்சயமாக ஒரு கடுமையான நாளின் வேதனை உங்களுக்கு வரும் என்று நான் பயப்படுகிறேன்” என்று மணல் குன்றுகளிலிருந்து அச்சமூட்டி எச்சரிக்கை செய்ததை (நபியே!) நீர் நினைவு கூர்வீராக this is happening by movement of internal plates of earth.

16 -15 உங்களுடன் பூமி அசையாதிருப்பதற்க்காக, அவன் அதன் மேல் உறுதியான மலைகளை நிறுத்தினான்; இன்னும் நீங்கள் சரியான வழியை அறிவதற்காக அவன் ஆறுகளையும், பாதைகளையும் அமைத்தான். these were happened after earth created by ALLAH.

குன்று என்பது அதனைச் சுற்றியுள்ள இடங்களைக் காட்டிலும் உயர்ந்து காணப்படுகின்ற ஒரு நில அமைப்பாகும். குன்றுகள் பெரும்பாலும் ஒரு உச்சியை உடையனவாக உள்ளன. எனினும், உச்சி எதுவும் இல்லாமலேயே உயர்வான தட்டையான நிலப்பகுதியையும் குன்று என அழைப்பது உண்டு.

குன்று, மலை என்பவற்றுக்கு இடையேயான வேறுபாடுகள் தெளிவாக இல்லை. எனினும், குன்று மலையைவிட உயரம் குறைந்ததாகவும், சரிவு குறைந்ததாகவும் இருக்கும். ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்தில்]] புவியியலாளர்கள், கடல் மட்டத்தில் இருந்து 300 மீட்டருக்கு (1,000 அடி) மேற்பட்ட உயரம் கொண்ட குன்றுகளையே மலை எனக் கருதி வந்துள்ளனர். ஆனால், குன்றில்நடப்போர், கடல் மட்டத்திலிருந்து 610 மீட்டர்களுக்கு (2,000 அடி) மேற்பட்டவற்றையே மலை எனக் கொள்கின்றனர். ஆக்சுபோர்டு ஆங்கில அகராதியும் 610 மீட்டர்கள் உயரத்துக்கு மேற்பட்டவையே மலை எனக் குறிப்பிட்டுள்ளது

Comments on this entry are closed.

Previous post:

Next post: