அலாஸ்கா தேதி மாற்றத்தால்… வியாழக்கிழமையில் ஜும்மா தொழுகை?

Post image for அலாஸ்கா தேதி மாற்றத்தால்… வியாழக்கிழமையில் ஜும்மா தொழுகை?

in சந்திர நாட்காட்டி

அலாஸ்கா தேதி மாற்றத்தால்…   வியாழக்கிழமையில் ஜும்மா தொழுகை?

எஸ்.ஹலரத் அலி, திருச்சி-7.( +91 9865361068)

இஸ்லாமிய அடிப்படையில் காலெண்டரை கட்டமைக்காமல்…. ஆங்கிலேயரின் (GMT) கிரீன்விச் பிரைம் மெரிடியன் 00 / 24 என்ற அடிப்படையில் லண்டனை மையப்படுத்திய காலெண்டரை ஹிஜ்ரி கமிட்டி தயாரித்துள்ளது  இதனால் அலாஸ்காவில் உள்ளவர்கள் இன்றும் ஜும்மா தொழுகையை வியாழக்கிழமையில் தொழும் அவல நிலையில் உள்ளதாக குற்றம் சாட்டப்படுகிறது. அலாஸ்காவானது ரஷ்யாவிடமிருந்து 1867 ஆம் ஆண்டு அமெரிக்கா வாங்கியதிலிருந்து இந்நிலை நீடிப்பதாக சொல்லப்படுகிறது.
அட்ச ரேகைகளும் தீர்க்க ரேகைகளும் ...

ஹிஜ்ரி கமிட்டி காலெண்டர் மீது வைக்கப்படும் இந்த குற்றச்சாட்டு உண்மைதானா? என்று வரலாற்று ஒளியில் ஆய்வு செய்வதே இக்கட்டுரையின் நோக்கம். பூமியின் மேற்கிலிருந்து கிழக்கு திசை நோக்கி பயணம் செய்பவர்களுக்கு பயண நேரம் ஓரு நாள் கூடுதலாகவும்…..பூமியின் கிழக்கிலிருந்து மேற்கு திசை நோக்கி பயணம் மேற்கொள்பவர்களுக்கு….  பயண நாளில் ஒரு நாள் குறையும் அதிசயம் அனைவரும் அறிந்த ஒன்றுதான்.

இதை உலகிற்கு முதன்முதலில் முன்னறிவித்தவர் சிரியா நாட்டைச் சேர்ந்த முஸ்லீம் புவியியல் அறிஞர் அபுல் பிதா இஸ்மாயில் இப்னு அலி,(Abu al-Fida -1273-1331). இதன் காரணம் பூமியானது மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி சுழன்று செல்வதே! இந்த உண்மையை… இரு நூறு வருடங்களுக்குப்பின் உலகை சுற்றி கப்பல் பயணம் செய்த மெகல்லன் (Magellan – Elcano expedition ( 1519-1522)  நிரூபித்தார். ஸ்பெயின் நாட்டிலிருந்து மேற்கு நோக்கி பயணத்தை தொடங்கிய மெகல்லன் உலகை சுற்றி விட்டு,  தன் கப்பல் பயணக்குறிப்பின்படி 9-7- 1552  ஆம் வருடம் புதன் கிழமை ஸ்பெயின் திரும்பினார். ஆனால் ஸ்பெயினில் அன்று 10-7-1552  வியாழக்கிழமையாக இருந்தது.

இஸ்லாமிய புவியியல் அறிஞர் அபுல் பிதா அவர்களுக்கு பூமியானது கோள வடிவமானது  என்ற உண்மையும், ஒரு திசையில் தொடர்ந்து பயணம் செல்லும் போது ஒருநாள் கூடுதல், அல்லது குறைவு ஏற்படும் என்ற உண்மையும் தெரிந்திருக்கிறது. இந்த புவியல் அறிவு அவருக்கு எங்கிருந்து வந்ததென்றால்… அல் குர்ஆனை அவர் ஆய்வு செய்ததன் மூலமே என்று நம்மால் விளங்க முடிகிறது. உலகம் கோள வடிவமானது என்பதை துல்கர்னைன் மன்னர் அவர்களின் பயணத்தின் மூலம் அல்லாஹ் சொல்லிக்காட்டுகிறான்.

அவர் ஒரு வழியை பின்பற்றினார்.சூரியன் மறையும் மேற்கு திசை வரை அவர் சென்றடைந்தபோது….   அல் குர்ஆன். 18:85,86

பின்னர் அவர் ஒரு வழியை பின்பற்றிச் சென்றார்.அவர் சூரியன் உதயமாகும் கிழக்கு திசையை எத்திய போது… அது ஒரு சமூகத்தாரின் மீது உதயமாகி இருப்பதைக் கண்டார்.  அல் குர்ஆன்.18:90

முதலில் சூரியன் மறையும் மேற்கு திசை வரை செல்லுகிறார். அங்கிருந்து மீண்டும் திரும்பி அவர் கிழக்கு திசைக்கு வரவில்லை மேற்கு திசையில் இருந்த வழிகளிலேயே… ஒரு வழியில் சென்று சூரியன் உதிக்கும் கிழக்கு திசையை அடைகிறார். உலகம் உருண்டையாக இருந்தால்தான் இது சாத்தியம். அப்போதுதான் மேற்கு நோக்கிச் சென்றவர் கிழக்கு நோக்கி வந்து சேர முடியும்.

What is the International Date Line?
உதாரணமாக உலகம் என்று கற்பனை செய்யப்பட்ட ஒரு கால்பந்தை நிறுத்தி வைத்து, பந்தின் கிழக்குப் புறமிருந்து விரலை வைத்து நகர்த்திக் கொண்டு சென்றால் பந்தின் சரி பாதியை (180 டிகிரி)  கடந்தவுடன் விரலானது கிழக்கு நோக்கி திரும்பி துவங்கிய இடத்தை அடையும். மன்னர் துல்கர்னைன் அவர்களின் மேற்கு – கிழக்கு உலகப்பயணத்தில் திசை மாறும் ஓரிடம் மறைமுகமாக குறிப்பிடப்படுகிறது. இதுதான் இயற்கையாக அமையப்பட்ட சர்வதேச தேதிக் கோடாக இன்று உள்ளது.

பூமியானது கிழக்கு நோக்கி சுழன்று செல்வதன் மூலம், அல்லாஹ் இயற்கையாகவே ஒரு நாள் மாறும் பயணக் கோட்டை போட்டுள்ளான். உலக மக்கள் அனைவரும் ஒரு பொதுவான நேரத்தை அறிந்து கொள்வதற்காக பூமியில் ஒரு புள்ளியை வைத்து அதை பிரைம் மெரிடியன் ஆக்கினார்கள். இந்தப் புள்ளியை எங்கு வைப்பது என்று பல ஆய்வுகள் நடந்து இறுதியில் இங்கிலாந்து கிரீன்விச் 00 E / 24 W தேர்வு செய்யப்பட்டது. இதற்கு நேர் எதிரே பூமியின் மறுபுறம் 180  W  and 180 E  டிகிரி  (Antipode Meridian) ஆக தேர்வு செய்யப்பட்டது.

தீர்க்க ரேகையின் பிரதான ஆரம்பப் புள்ளியாக,  இங்கிலாந்தின் லண்டன் கிரீன்விச் தேர்ந்தெடுக்கப்பட்டது. சதிச் செயலோ அல்லது தற்செயலோ அல்ல. 1675 ஆம் ஆண்டிலேயே இரண்டாம் சார்லஸ் மன்னரால் ( Royal Greenwich Observatory) ராயல் வானியல் ஆய்வுக் கூடம்  கிரீன்விச்சில் கட்டப்பட்டு அட்சரேகைகள், தீர்க்கரேகைகள் ஆய்வு செய்யப்பட்டு கடற்பயண கப்பல்களின் இருப்பிடம் அறிந்து கொள்ளப்பட்டது. இதன் தொடர்ச்சியாகவே கிரீன்விச் பிரைம் மெரிடியனாக தேர்வு செய்யப்பட்டது.

இந்த GMT-UTC க்கு ஆங்கிலேய யூத,கிருஸ்துவர்கள் யாரும் அடிப்படை மதச் சாயத்தை பூசவில்லை. இதற்கு மதச் சாயம் பூசி அழகு பார்ப்பவர்கள், ஹிஜ்ரி கமிட்டி காலெண்டர் எதிர்ப்பாளர்கள் மட்டுமே!  உலக மக்கள் அனைவருக்குமான ஒரு பொதுவான நேரப் புரிதலுக்காகவே பிரைம் மெரிடியன் தேர்வு செய்யப்பட்டது. கிரீன்விச் மையப்புள்ளியாக தேர்வு செய்யப்பட்டதன் காரணம், கிருஸ்துவ பைபிள் அடிப்படையிலோ,அல்லது யூதர்களின் தவ்ராத் அடிப்படையிலோ அல்ல.. இது பொருளாதார நலன் கருதி, கப்பல்கள் இருப்பிடம்,ரயில்களின் பயண நேரத்தை நிர்ணயிக்க போடப்பட்ட ஒன்று.

ஒவ்வொரு மதத்தினரும் ஒரு பிரைம் மெரிடியன் வைத்துக் கொண்டால் குழப்பமே ஏற்படும். பூமி,சூரியன், சந்திரன், நேரம் ஆகியவை உலக மக்களுக்கான பொதுவான ஒன்று. இதில் இஸ்லாமிய அடிப்படையை பிரித்துத் தேடுபவர் பித்னாவையே விதைக்கிறார். நாள் என்பது 24 மணி நேரம் கொண்டது. ஒரு வாரத்தில் 7 நாட்கள்  வருடத்திற்கு 12 மாதங்கள். இதில் எந்த மதத்தினருக்கும் மாற்றமில்லை. இதில் சூரியனும், சந்திரனும் பொதுவான காலம் காட்டிகள். நாள் துவக்கம் சூரியன் மூலமும், மாதத் துவக்கம் சந்திரன் மூலமும் பார்க்கப்படுகிறது.

தற்போதுள்ள கிரீன்விச் பூஜ்ய டிகிரி ஆரம்பமே மிகச்சரியாக … எந்த நாட்டு நிலப்பகுதிக்குள்ளும் செல்லாமல், நாள் மற்றும் கிழமை பிரிவினை ஏற்படுத்தாமல் கடலுக்கு நடுவே செல்கிறது. மக்கா மையக் கொள்கைக்காரர்களின் 180 டிகிரி அலாஸ்கா சர்வதேச தேதிக் கோடானது… மக்கள் வசிக்கும் அடுத்தடுத்த நிலப்பகுதிகளை இரண்டு கிழமைகளாக பிரிப்பதே இவர்களின் கொள்கையாக இருக்கிறது. இவர்களின் பார்வையில் இஸ்லாம் முழுமை பெறாமல் உள்ளது. மக்காவை மையமாக்கிவிட்டால் இஸ்லாம் முழுமை அடைந்து விடும் மனோ இச்சையை மார்க்கமாக்க விரும்புகிறார்கள்.

கிரீன்விச் எதிர்முனையானது பசிபிக் பெருங்கடலில் 180 டிகிரிக்கு நெருக்கமாக உள்ள ஒரு ஆளில்லாத தீவு ஆகும். இது 1800 ஆம் ஆண்டு இங்கிலாந்து கப்பல் ( HMS Reliance Captain Water House) கேப்டனால்  கண்டுபிடிக்கப்பட்டது லண்டன் கிரீன்விச் கோட்டிற்கு மறு புறம் உள்ள நிலப்பகுதியாக இருப்பதால் இதற்கு ஆன்டிபோட் தீவு (Antipodes Islands) என்று பெயரிட்டனர்.

அதே சமயம் அட்லாண்டிக் கடலில் உள்ள (0 Zero degree longitude and  0 degree Latitude) மெரிடியன் கோடும் பூமத்திய ரேகை கோடும் சந்திக்கும் புள்ளியை (Prime meridian and Equator cross) (Null Islands) பூஜ்ய தீவு என்று அழைக்கின்றனர். உண்மையில் அங்கு எந்த ஒரு தீவும் இல்லை. ஆயினும் அந்த மையப்புள்ளியில் ஒரு வானிலை மிதவையை ( Weather Buoy) நிறுத்திக் கணக்கிடுகின்றனர். லண்டன் கிரின்விச்சை பூஜ்ய டிகிரியாகவும் அதன் மறு முனை 180 டிகிரிப் புள்ளியை சர்வதேச தேதிக் கோடாக (IDL) 1884 ல் நிர்ணயித்தனர்.

(There is a moored weather and sea observation buoy at 0.000 N 0.000 E (0°0’0″ N 0°0’0″ W). This buoy (“Station 13010 – Soul”) is part of the PIRATA system operated jointly by the United States, France, and Brazil.[)

தற்போது ஹிஜ்ரி கமிட்டியின் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு,

// தேதிக் கோட்டின் உண்மை நிலை- என்ற தலைப்பில் எழுதுகிறார்… பல அதிர்ச்சியான செய்திகள் கிடைத்துள்ளன. இதில் பல சதி வேலைகள் பார்க்கப்பட்டு ஒரு நாட்டின் தேதி குறைக்கப்பட்டு தேதிக் கோட்டின் இடம் மாற்றப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.வடக்குப் பனிப் பிரதேசமான அலாஸ்கா 1867 க்கு முன் ரஷ்யாவின் பகுதியாக இருந்தது.ரஷ்யா தேதிப்படி இருந்தது.1867  ல் அது அமெரிக்காவிடம்  விற்கப்பட்டு ஒரு  கிழமை குறைக்கப்பட்டது.( வெள்ளிக்கிழமை, வியாழக்கிழமையாக மாற்றப்பட்டது.) // By– S.H.அப்துல் ரஹ்மான் –அந்நஜாத்.செப்.2018 
கற்பனை கதை
உலகின் மையமாக மக்கா இருந்தது போன்றும்… அதை மாற்றியே ஆங்கிலேயர்கள் சதி  செய்து லண்டன் கிரீன்விச்சை மையமாக்கிக் கொண்டார்களேன்றும்… இதன் நேர் எதிர்முனையை மாற்றியமைக்கவே அலாஸ்காவை அமெரிக்கா வாங்கியது என்றும் கற்பனை கதையை ஜோடித்து  வரலாற்றை திரிக்க முயற்சிக்கிறார். ”வரலாறு தெரியாதவர்களால் வரலாறு படைக்க முடியாது” என்ற உண்மையை இவர் அறியவில்லை. தன் மனம் போன போக்கில் கதை எழுதுகிறார்.

சர்வதேச கோட்டுப்பகுதியின் இரு புறமும் இருக்கும் நாடுகள்… தங்கள் விருப்பப்படி கோட்டின் கிழக்குப் பக்கமோ, அல்லது மேற்குப் பக்கமோ மாறிக்கொள்வதற்கும், உள்ளூர் நேரத்தை முடிவு செய்து கொள்ளவும்  பூரண உரிமை உண்டு. எந்த சர்வதேச சட்டம்களும் எந்த வல்லரசு நாடும் அவர்களை தடுக்கமுடியாது. ஆங்கிலேயர்கள் அலாஸ்காவில் சதி செய்ததாகக் கூறுவது அவரது அப்பட்டமான அறியாமை! இதற்கு முன்பே பல நாடுகள் கோட்டின் முன் பின் மாறியிருக்கின்றன. ஒரு நாட்டின் உள்ளூர் தேதி மற்றும் நேரத்தை அந்தந்த நாடுகளே முடிவுசெய்து கொள்ளலாம் என்பதே சர்வதேச பொது விதி. இதில் சதி செய்வதற்கு ஒன்றுமில்லை.

No international organization, nor any treaty between nations, has fixed the IDL drawn by cartographers: the 1884 International Meridian Conference explicitly refused to propose or agree to any time zones, stating that they were outside its purview. The conference resolved that the Universal Day, midnight-to-midnight Greenwich Mean Time (now known as Coordinated Universal Time, or UTC), which it did agree to, “shall not interfere with the use of local or standard time where desirable”.[11]From this comes the utility and importance of UTC or “Z” (“Zulu”) time: it permits a single universal reference for time that is valid for all points on the globe at the same moment.

கிரிமியன் யுத்தத்திற்கும் சர்வதேச தேதிக்கோட்டிற்கும் ஒரு சம்பந்தமும் இல்லை 
ரஷ்யாவிற்கு எதிராக பிரிட்டிஷ், பிரான்ஸ், துருக்கி ஆகிய நாடுகள் கலந்து கொண்ட  கிரிமியன் யுத்தத்திற்கும் சர்வதேச தேதிக்கோட்டிற்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. சம்பந்தம் இருப்பது போல்… ஒரு கற்பனை கதையை ஜோடிக்கிறார். கிரிமியன் போரில் தோல்வியுற்ற ரஷ்யாவானது … தனது பொருளாதார தேவைக்காக தம் கைவசம் இருந்த அலாஸ்காவை விற்க விரும்பியது. (இது மட்டுமே உண்மை.) ரஷ்யா முதலில் பிரிட்டனிடம்தான் அலாஸ்காவை வாங்கிக் கொள்ளும்படி பேரம் பேசியது. ஆனால் அன்று 1859 ல் இங்கிலாந்தின் பிரதமராக இருந்த லார்ட் பால்மர்ஸ்டன் இந்த வாய்ப்பை உறுதியாக நிராகரித்தார். ஏனெனில் அவர்களிடம் ஏராளமான காலனியாதிக்க குடியேற்றப் பகுதிகள் பிரிட்டீஷ் கொலம்பியா என்ற கனடா பகுதியில் இருந்தது. ஆகவே அலாஸ்காவை வாங்க அவர்கள் விருப்பம் தெரிவிக்கவில்லை. இதன் பின்னரே அமெரிக்கா தரப்பை அணுகி விற்பனைப் பேரத்தை முடித்தனர். அலாஸ்கா பகுதியை வாங்கினால்தான் லண்டனின் எதிர்முனை 180  டிகிரியாக ஆக்க முடியும் என்ற சதியின் காரணமாகவே அலாஸ்கா மாற்றம் நடந்ததென்பது ஒரு கற்பனைக் கதை. இதனால்தான் கிரிமியன் போர் நடந்ததென்பதும் ஒரு கிரிமினல் கற்பனை. தனது பொய்யான குழப்ப காலெண்டரை கரையேற்றுவதற்கு எத்தகைய ஒரு சரித்திர புரட்டுக்கும் இவர்கள் அஞ்சுவதில்லை.

Therefore, Emperor Alexander II decided to sell the ( Alaska) territory. The Russian government discussed the proposal in 1857 and 1858.[5] Perhaps in the hope of starting a bidding war, both the British and the Americans were approached in 1859. However, British Prime Minister Lord Palmerston steadfastly rejected the offer, arguing that Canada (which was not independent at the time but a number of separate British colonies with varying arrangements for democratic representation) had enough uncharted wilderness to deal with, and that Britain would overstretch its resources in maintaining Alaska as well as its existing territories and colonies. Then the Russians offered to sell the territory to the United States, hoping that its presence in the region would offset the plans of Britain. However, no deal was reached, as the risk of an American Civil War was a more pressing concern in Washington.[6] [7]

https://en.wikipedia.org/wiki/Alaska_Purchase

அலாஸ்கா ரஷ்யாவின் ஆதிக்கத்தில் இருக்கும் போது அது கிழக்குப் பகுதி தேதியை கொண்டிருந்தது. மேலும் ரஷ்யர்கள் ஜூலியன் வருட காலெண்டரைரே பின்பற்றினர். அலாஸ்காவிற்கு அடுத்ததாக இருந்த அமெரிக்கர்கள் மேற்கு பகுதி தேதி அதாவது ஒரு நாள் பின் தங்கி இருந்தார்கள். மேலும் அமெரிக்கர்கள் பின்பற்றியது கிரி கொரியன் காலெண்டர். ஜூலியன் காலெண்டரை விட கிரிகோரியன் காலெண்டர் 11 நாட்கள் அதிகம் இருக்கும்.

விற்பனை ஒப்பந்தம் அலாஸ்காவில் 6-அக்டோபர் 1867  வெள்ளிக்கிழமை ரஷ்யாவின் ஜூலியன் காலெண்டர் படி விற்கப்பட்டது. அமெரிக்காவின் கிரிகோரியன் காலேண்டர்படி 18  அக்டோபர் வெள்ளிக்கிழமை 1867  வாங்கப்பட்டது. இதை சற்று விளக்கமாக சொல்வதென்றால் அலாஸ்காவில் குடியிருந்த ரஷ்யர்களுக்கு அன்று வெள்ளிக் கிழமை. சர்வதேச கோட்டிற்கு மேற்கில் இருந்த அமெரிக்கர்களுக்கு வியாழக்கிழமை. வெள்ளிக்கிழமை நள்ளிரவு 11:59 க்கு அலாஸ்காவில் ரஷ்யா ஆட்சி முடிவுக்கு வருகிறது. 12 மணிக்கு சனிக்கிழமைக்குள் நுழைகிறார்கள். இது போல் நள்ளிரவு 11:59 வியாழக்கிழமையில் இருந்த அமெரிக்கர்கள் 12: 00 மணிக்கு வெள்ளிக்கிழமைக்குள் நுழைந்து ஆட்சியை கைப்பற்றுகிறார்கள்.

ஒரு நாள் முந்தியிருந்த ரஷ்யர்கள் அலஸ்காவை விட்டு வெளியேறி.. தங்களின் ரஷ்யா பகுதிக்குச் சென்று வழமையான கிழமையை தேதியை தொடர்கிறார்கள். இது போல் ஒரு நாள் பிந்தியிருந்த அமெரிக்கர்கள் அலாஸ்காவில் நுழைந்து தங்கள் வழமையான தேதி, கிழமையை எந்த மாற்றமுமின்றி தொடர்கிறார்கள். அலாஸ்கா பிரதேசம் ஒன்றுதான். ஆனால் அங்கு முன்பு இருந்த ரஷ்யர்களுக்கும், பின்பு வந்து குடியேறிய அமெரிக்கர்களுக்கும் வழமையான தேதி கிழமைகளில் ஒரு மாற்றமும் இல்லை. இயற்கையை வணங்கிய அலாஸ்கா பூர்வ குடியினருக்கு ஜும்மா தேவையில்லை. இன்று அலாஸ்காவில் வியாழக்கிழமையில் ஜும்மா தொழுவதாக கட்டி விடப்பட்ட கதைக்கு கண்ணும் இல்லை, காதுமில்லை.

ஆகவே அலாஸ்கா மாற்றத்தில் பெரிய சதி நடந்திருப்பதாக சொல்லப்பட்ட கற்பனை கதைகளுக்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை. சர்வதேச தேதிக் கோட்டின் இரு புறமும் உள்ள நாடுகள்.. தாங்கள் விரும்பினால் ஒரு நாள் முன்னால் கிழக்குப் பக்கமும் போகலாம். அல்லது ஒரு நாள் பின்னால் மேற்குப்பக்கமும் போகலாம். இதை எந்த சர்வதேச சட்டமோ வல்லரசோ தடுக்க முடியாது. இதன்படியே பல தேதிக் கோட்டு நாடுகளில் மாற்றம் நிகழ்ந்தது. இதற்கு எந்த ஆங்கிலேயே,யூதர்களின் சதியும் அவசியமில்லை. அந்த நாட்டு பார்லிமென்டில் ஒரு சட்டமியற்றினால் போதுமானது.

ஸ்பெயினின் காலனி ஆதிக்கத்திலிருந்த பிலிப்பைன்ஸ் நாடானது 16 MARCH -1521  ஆம் ஆண்டு முதல் ஸ்பெயின் தேதிப்படி ஒரு நாள் குறைந்து மேற்குப் பகுதிக்கு சென்றது. அதாவது பிலிப்பைன்ஸ் ல் இருந்த ஸ்பெயின் நாட்டவர்களுக்கு வியாழக்கிழமை என்றால் பிலிப்பைன்ஸ் மக்களுக்கு அன்று வெள்ளிக்கிழமை. பிலிப்பைன்ஸ் மிண்டனோ தீவை ஆண்ட முஸ்லீம் சுல்தான்கள் தங்கள் வழமையான ஜும்மாவை வெள்ளிக்கிழமையில் தொழுதனர் என்ற தகவலை  ஜனவரி 1687 ல் பிலிப்பைன்ஸ் மிண்டனோ தீவுக்கு வந்த  இங்கிலாந்து கேப்டன் வில்லியம் டேம்பியர் கூறுகிறார்.

http://www.staff.science.uu.nl/~gent0113/idl/idl_philippines.htm

ஆனால் ஸ்பெயின் காலனி ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்றவுடன் 1 JANUARY-1845 முதல் மீண்டும் பழைய நிலைக்கு ஒரு நாள் முந்திய நிலைக்கு மாறிக் கொண்டார்கள்.

இது போல் சர்வதேச தேதிக் கோட்டில் உள்ள சமோவா தீவுகள் நாடானது 1892 ஆம் வருடம் வரை சர்வதேச கோட்டிற்கு மேற்கில் இருந்தது. ஆயினும் ஆஸ்திரேலிய, மற்றும் நியுசிலாந்துவுடன் நடக்கும் வணிகத் தொடர்புக்காக 30  டிசம்பர் 2011 ல் மீண்டும் கிழக்கு பகுதிக்கு மாறிக்கொண்டது. இது போலவே கிரிபாட்டிக் தீவுக் கூட்டங்களும் 31 டிசம்பர்  1994  ஆம் ஆண்டு முதல் ஒரு நாளைக் குறைத்து சர்வதேச கோட்டிற்கு மேற்கே மாறியது.

சர்வதேச கோட்டை ஒட்டியுள்ள நாடுகள் தங்களின் பொருளாதார, வணிக நலன்களுக்காக ஒருநாளைக் கூட்டி கிழக்கே போவதும், ஒரு நாளை குறைத்து மேற்கே வருவதும் ஆண்டாண்டு காலமாக நடந்து வரும் நடை முறையே! அந்த நாட்டு மக்கள் அதை அங்கீகரிப்பதன் மூலமே இம்மாற்றம் நடைபெறுகிறது. இந்த தேதி கோட்டு நாடுகளின் நாள் மாற்றத்திற்கும் ஹிஜ்ரி கமிட்டி கலெண்டருக்கும் ஒரு சம்பந்தமுமில்லை. இனி வருங்காலத்தில் கூட சில நாடுகள் தேதிக்கோட்டிற்கு முன் பின் போகலாம்.அப்பொழுது அப்துல் ரஹ்மானின் மக்கா மையக் காலெண்டர் அல்லாஹ்வின் சட்டத்தை மாற்றியதாகி விடுமா?

The International Date Line, established in 1884, passes through the mid-Pacific Ocean and roughly follows a 180 degrees longitude north-south line on the Earth. It is located halfway round the world from the prime meridian—the zero degrees longitude established in Greenwich, England, in 1852.

The International Date Line functions as a “line of demarcation” separating two consecutive calendar dates. When you cross the date line, you become a time traveler of sorts! Cross to the west and it’s one day later; cross back and you’ve “gone back in time.”

Despite its name, the International Date Line has no legal international status and countries are free to choose the dates that they observe. While the date line generally runs north to south from pole to pole, it zigzags around political borders such as eastern Russia and Alaska’s Aleutian Islands.      https://oceanservice.noaa.gov/facts/international-date-line.html

காலனிய ஆட்சியாளர்கள் தாங்கள் பிடிக்கும் நிலப்பரப்பில் தங்கள் காலெண்டர் கணக்கின்படி செயல்பட்டாலும்..  அங்குள்ள மக்கள் மற்றும் வேறு நாடுகளில் இருந்து குடியேறுபவர்கள் அவரவர் நாள் கிழமைகளையே பின்பற்றினர் என்பதற்கு வரலாற்று சான்றுகள் உள்ளன. உதாரணமாக, இன்று அமெரிக்காவின் மாநிலமாக உள்ள கலிபோர்னியா, மற்றும் ஹவாய் தீவுகள் முன்பு ரஷ்யாவின் காலனி நிலப்பரப்புகளாக இருந்தன.

 

The Russians established their outpost of Fort Ross in 1812 near Bodega Bay in Northern California,[6] north of San Francisco Bay. The Fort Ross colony included a sealing station on the Farallon Islands off San Francisco.[7] By 1818 Fort Ross had a population of 128, consisting of 26 Russians and of 102 Native Americans.[6] The Russians maintained it until 1841,

https://en.wikipedia.org/wiki/Russian_colonization_of_the_Americas#California

அங்கிருந்த ஸ்பானிஷ் அமெரிக்கர்கள் தேதிக்கோட்டிற்கு மேற்கே இருந்ததால்  ஒரு நாள் பிந்தியும்  கிழக்கிலிருந்து வந்த ரஷ்யர்கள் ஒரு நாள் முந்தியும் கணக்கிட்டுக் கொண்டனர்.ஆகவே ஒரு வாரத்திற்கு இரண்டு ஞாயிற்றுக் கிழமைகள் வந்ததாக குறிப்பிடுகின்றனர்.

// There was no shortage of opportunities for  festivities, because all holidays were repeated twice, not only because they were reckoned according to the Old style (Julian calendar) among the Russians and the New style ( Gregorian calendar) among the Spaniards but also because the Spaniards had come to America from the East and we from the West, with the result that we differed by one day from them,

It was already Sunday to us, and on our Monday it was still only Sunday for the Spaniards. Before the celebrations the hunters could make merry two Sundays in a row, the Russian and the Spanish. //

– “California through Russian eyes. 1806 – 1848”. By James R. Gibson.page.236.

சர்வதேச தேதிக்கோட்டை ஒட்டியுள்ள சமோவா, டோங்கா போன்ற நாடுகள் ஒரு நாளைக் கூட்டிக் குறைத்துக் கொண்டாலும், அங்குள்ள சில கிருஸ்துவ மிஷனரி அமைப்புகள்… குறிப்பாக (SDA –Seventh Day Adventist) “செவென்த்டே அட்வென்டிஸ்ட்” வார இறுதி ஓய்வு நாளாக பழைய “யவ்முல் சபாத்’ சனிக்கிழமையே தொடர்கிறார்கள். ஆனாலும் அரசின் அதிகாரபூர்வ நாளாக அன்று ஞாயிற்றுக் கிழமை. சில யூத அமைப்புகளும் இதே முறையையே பின்பற்றுகின்றனர்.

ஹிஜ்ரி கமிட்டி வெளியிட்டுள்ள காலெண்டரை விட சிறந்த, பிழை இல்லாத நாட்காட்டியை யார் வெளியிட்டாலும் அதனை வரவேற்க அனைவருமே தயார். ஆனால் அறியாமையை ஆதாரமாக்கி வரலாறுகளில் திரிபு செய்து…. யூதர்களின் நாள் ஆரம்பம் மஹ்ரிப் என்னும் கொள்கைக்கு; இஸ்லாமிய அடிப்படை வர்ணம் அடித்து விடுவதன் மூலம் அது இஸ்லாமியக் காலெண்டர் ஆக முடியாது. பிரிட்டீஸ்காரர்கள் தாங்களாகவே கிரீன்விச்சை மையமாக்க சதி செய்து அறிவிக்கவில்லை

25  உலக நாடுகளின் அமைப்பை உருவாக்கி, ஒவ்வொரு நாட்டின் கருத்தையும் பரிசீலித்து ஓட்டெடுப்பின் மூலமே கிரீன்விச் மையமாக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொள்ளாத பிரான்ஸ் நாடு… தங்கள் நாட்டு தலை நகரான பாரிஸை உலகின் மையமாக 1911 வரை (Prime Meridian) வைத்துக் கணக்கிட்டனர். அலாஸ்காவை வாங்கிய அமெரிக்காவே தனது நாட்டு தலை நகரமான வாஷிங்டன் அல்லது நியூயார்க்கை  பிரைம் மெரிடியனாக வைக்க வேண்டுகோள் வைத்தது. ஆனாலும் இக்கருத்து எவராலும் ஏற்கப்படவில்லை. தங்களின் மனோ இச்சை மையக் காலெண்டர் கொள்கைக்காக… வரலாற்றை வளைப்பதும்,திரிப்பதும் வன்மையாக கண்டிக்கத்தக்கது.

Leave a Comment

Previous post:

Next post: