அமெரிக்க முஸ்லிம்கள்

Post image for அமெரிக்க முஸ்லிம்கள்

in பொதுவானவை

ஆரூர்.யூசுப்தீன்

சமீபத்திய ஒரு செய்தி முஸ்லிம்கள் அனைவரின் மனதில் கோபத்தை ஏற்படுத்தியது.அச்செய்தி உணர்த்தும் பொருள் அனைவருக்கும் வெறுப்பை ஏற்படுத்தியது. முஸ்லிம்கள் இனி அமெரிக்காவில் நுழைய அனுமதிக்க கூடாது என்று அமெரிக்க நாட்டின் அதிபர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் டொனால்ட் ட்ராம்ப் கூறிய செய்திதான் அது.

உண்மையில் டொனால்ட் கூறிய வார்த்தைகள் அவர் மனதில் ஏற்பட்ட மாற்றத்தினால் வெளிவந்தவை. கடந்தகால நிகழ்வுகளில் முஸ்லிம்கள் மீது ஆதிக்கவர்க்கம் திணித்த பொய்யான குற்றசாட்டுகள் தான் இதற்கு முக்கிய காரணிகள்.

அமெரிக்காவின் நவீன வரலாற்றில் முஸ்லிம்கள் இருப்பு 20ஆம் நூற்றாண்டுகளில் மட்டும் தான் காணப்படுகிறது.

உண்மையில் அமெரிக்காவின் ஆக்கம், உருவாக்கம் ,வளர்ச்சி மற்றும் நிலைநிறுத்தல் ஆகிய அனைத்து பக்கங்களையும் முஸ்லிம்கள் நிரப்பியுள்ளனர்.

1775 – 1783 ஆகிய காலகட்டத்தில் நடைபெற்ற வேர்ஜினியா எல்லைக்கான போரில் பம்பெட் முஹம்மது என்ற முஸ்லிம் போர் வீரர் கலந்துகொண்டுள்ளார்.

பிரித்தானிய காலனியாட்சிக்கு எதிராக ஜார்ஜ் வாஷிங்டன் தலைமையில் போராடிய படைகளில் பங்கர் ஹில் (சலாம்) என்ற ஆபிரிக்க அரேபிய முஸ்லிமும் அடங்கும்.

அமெரிக்கா என்றவுடன் அனைவரின் கண்ணுக்கு முன்வருவது வாணுயர்ந்த கட்டிடங்கள் தான்.ஆனால் அக்கட்டிடம் உருவாக முக்கிய பங்காற்றிய முஸ்லிம் பொறியாளன் யார் என்று நம் கண்ணுக்கும் தெரியாது.

ஆம் கட்டடமைப்பு பொறியியல்துறையின் அயின்ஸ்டீன் என்றழைக்கப்படும் வங்கதேசத்தில் பிறந்து அமெரிக்காவில் குடியமர்ந்த முஸ்லிம் பொறியாளன் ஃபஜ்லுர் ரஹ்மான் தான் அவர்.

ஃப்ரேம் குழாய் மூலம் கட்டப்படும் கட்டடங்களால் இரும்பின் பயன்பாடு குறைக்கபடுவதை கண்டுபிடித்து அமேரிக்கா முழுவதும் வாணுயர்ந்த கட்டடங்களை கொண்டு அமெரிக்காவை அழங்கரிக்க செய்தார்.

இன்னும் சற்று தெளிவாக கூறுவதென்றால் டொனல்ட் சொந்தமான நட்சத்திர ஹோட்டல்களும் கட்டிடங்களும் இக்கட்டடகலையை பயன்படுத்தி கட்டபட்டதுதான்.

இதேபோல் மருத்துவம் மற்றும் அறுவைசிகிச்சை துறையில் டாக்டர் அய்யூப் ஓமாயவின் பங்கு எண்ணற்றது.இருதய கீழறையின் குழாய் அறுவை சிகிச்சைக்கு இவர் கண்டுபிடித்தவை அறுவை சிகிச்சைதுறைக்கு மிகப்பெரிய உதவியாக விளங்கியது. கிமோதரப்பி முறையின் அடிப்படையில் மூலையில் ஏற்படட்டுள்ள கட்டியை அகற்ற பயன்பட்டது.

விளையாட்டு துறையை பொறுத்தவரை குறை என்று சொல்ல முடியாது காரணம் அவ்விடத்தை முஹம்மது அலி என்ற ஒற்றை மனிதர் நிரப்பியுள்ளார். மூன்று முறை உலக குத்துசண்டை போட்டியின் சாம்பியன் பட்டம் பெற்றவர். நான் இவரை மட்டும் சொல்ல இன்னும் ஒருகாரணமும்  உண்டு 2007இல் முஹம்மது அலி இவருக்கு தன் பெயரை கொண்ட முஹம்மது அலி என்னும் விருதை டொனல்ட் அவருக்கு வழங்கினார்.

மற்றும் ஃபரா பண்டித் என்னும் முஸ்லிம் பெண்மணியின் பலபரிணாமங்கள் அமெரிக்காவிற்கு மிகவும் உதவியாக இருந்தது. மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொடர்பை ஏற்படுத்தவும் உறவுகளை உண்டாக்கவும் ஏற்படுத்தபட்ட அமைப்பின் இயக்குனராகவும், ஐரோப்பிய நாடுகளின் முஸ்லிம்களின் ஈடுபாட்டை உருவக்ககும் பிரிவின் ஆலோசகராகவும், ஹிலாரி கிளிண்டனின் உலக முஸ்லிம் சமூகத்தின் தூதரகவும் பதவிவகித்தார்.

வேதியல் துறையில் நோபல் பரிசு பெற்ற அஹமத் ஜிவைல் வேதியல் துறையில் பல ஆய்வுகளை செய்துள்ளார். இவரின் அறிவியல் துறையின் அறிவாற்றலும் மத்திய கிழக்கு நாடுகளில் இவருக்குள்ள மதிப்பினாலும் ஒபாமா தனது அதிபர் அவையில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை பணியாற்ற செய்தது.இவரை கண்ணியபடுத்தும் விதமாக இவருடைய புகைப்படம் தபால்தலையாக வெளியிடபட்டது.

நான் கடைசியாக இம்மனிதரை குறிப்பிடுவதினால் இவர் சளைத்தவர் அல்ல அமெரிக்க மக்களின் குடியுரிமையை மீட்டு தர போராடியவரும் கருப்பினதிற்கு எதிராக நடந்தேறிய வெறியாட்டத்தை கட்டுபடுதியரும் சமூக விடுதலை போராளி மால்கம் X  அவர்களின் பங்கு ஆற்பரியது.

அமெரிக்காவின் முதல் அதிபர் ஜார்ஜ் வாசிங்டன் கூறியதாவது: அமெரிக்காவில் யார் வேண்டுமென்றாலும் வாழலாம் அவர் எந்த ஒரு மதத்தையும் பின்பற்றலாம் ஆனால் அவர் ஒரு அமெரிக்கர் என்ற எண்ணம் அவருக்கு வேண்டும் என்றார்.

ஆனால் இக்கொள்கை டொனல்ட் அவர்களின் பார்வைக்கு நேர்மாறாக உள்ளது. டொனல்ட் தனது நிலையை மாற்றிக்கொள்ளவேண்டும் இல்லையெனில் அதிபர் கனவு கனவாகவே போய்விடும்.

சில நாட்களுக்கு முன்பு மூன்று செய்திகள் அமெரிக்க முஸ்லிம்களின் பிரச்சனைகளையும் அதன் தீர்வையும் உலகமக்களுக்கு வேலிகொனர்ந்துள்ளது.

வேர்ணன் என்ற பள்ளிக்கூடத்தில் படிக்கும் இஸ்லாமிய மாணவிகள்  இஸ்லாமிய மார்கத்திற்கு எதிராக பரப்பட்டும் பொய் பிரச்சாரத்தையும் இனவெறியையும் தடுக்கும் வகையில் ஒரு முயற்சியை எடுத்தனர்..

அம்முயற்சியின் வெளிப்பாடாக அப்பள்ளியில் பயிலும் முஸ்லிம் அல்லாத மாணவிகள் சகமுஸ்லிம் மாணவிகள் அணியும் முக்காடை அணிய விருப்பம் தெரிவித்தனர். மேலும் ஒருவர் அணியும் ஆடையை வைத்து அவரை எடைபோடக்கூடாது என்ற கருத்தை பெரும்பாலான மாணவிகள் கூறினார்.

இந்நிகழ்வை பற்றி பள்ளி தலைமையாசிரியர் கூறுகையில்: தற்போதிய காலகட்டத்தில் முஸ்லிம் மாணவராக வாழ்வது அமெரிக்காவில் மிகவும் கடினமான ஒன்று.இம்மாணவிகளின் முயற்சியால் எம்பள்ளியில் இப்பொழுது அப்படிபட்ட நிலையில்லை.

முஸ்லிம் அல்லாத மாணவி ஒருவர் கூறுகையில்: தற்போது எனக்கு இஸ்லாம் என்னும் மார்க்கத்தில் மீது அதிகம் மரியாதை வந்துள்ளது. அவர்கள் போல் ஹிஜாப் அணிய மிகவும் ஆர்வமாக உள்ளேன். முஸ்லிம்கள் பற்றிய பொய்கள் இனி என்னிடம் செல்லாது என்றார்.

கலிபோர்னிய நகரில் உள்ள ஓர் இஸ்லாமிய இறையில்லத்தில் சில மதவெறிபிடித்த கும்பல் தீயிட்டது. வெள்ளியன்று நடைபெற்ற இந்நிகழ்வை பற்றி பள்ளிவாசல் இமாம் பேசுகையில் இந்நிகழ்வுக்கு டொனல்ட் ட்ரம்ப் அவரின் பேச்சுதான் காரணம் என்றார்.

டொனால்டின் மதவெறி பேச்சின் காரணமாக சிலர் இஸ்லாமியர்களின் மீது காழ்புணர்ச்சி கொண்டு இத்தாக்குதலை நடத்தியுள்ளனர் என்றார்.

தொடர்ந்து இஸ்லாம் மற்றும் இஸ்லாமியர்கள் மீது தொடுக்கப்படும் எதிர்மறை தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர் பரக் ஒபாமா கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பிற்கும் பிற இன குழுக்களுக்கும் இடையே நடக்கும் சண்டையை யாரும் இஸ்லாத்திற்கும் மேற்குலகத்திற்கும் இடையே நடக்கும் பொற்போல் எண்ணவேண்டாம்.என்றார்.

ஐ.எஸ்.என்பது இஸ்லாம் அல்ல.அமெரிக்க முஸ்லிம்கள் யாரும் தீவிரவாதிகள் அல்ல. இஸ்லாமியர்கள் மீது நடைபெறும் வார்த்தை தாக்குதலை ஒருபோதும் அனுமதிக்க முடியாது

.அமெரிக்க முஸ்லிம்கள் அனைவரும் அமெரிக்காவை அதிகம் நேசிக்கின்றனர்.நாட்டிற்காக பல தியாகங்களையும் செய்ய தயாராகவுள்ளனர்.

நாட்டில் நிலவிவரும் பிரச்சனைகள் காரணமாக ஏறத்தாழ 22% அமெரிக்க முஸ்லிம் இளைஞர்கள்  தங்களுடைய மத நம்பிக்கையையும் மற்றும் வழிபாட்டையும் தொடர்ந்து செயல்படுத்த கஷ்டபடுகிறோம் என்றனர்.சில மேற்குலக ஊடகம் இஸ்லாமியர்கள் மீது தொடுக்கப்பாடும் ஊடக பயங்கரவாதத்தினால் தாடி வைத்தவர்கள் எல்லாரும் தீவிரவாதிகள் என்று சித்தரிகபடுவதினால் முஸ்லிம்கள தங்களுடைய மத அடையாளத்தை வெளிபடுத்தவும் செயல்படுத்தவும் முட்டுகட்டையாக இருக்கிறது.

சிலசமயங்களில் சக நண்பர்களுடனும் சகஜமாக பழகவும்இது தடையாக இருக்கிறது.

பெருகிவரும் உலகமயமாக்கம் மற்றும் நவீன கால நாகரிகமும் , மேற்குலகத்தின் அழுத்தம் காரணமாக அமெரிக்க முஸ்லிம்கள் மன ரீதியாகவும் உடல்ரீதியாகவும் அதிகம் பாதிக்கபட்டுள்ளனர்.

அமெரிக்க முஸ்லிம் இளைஞர்கள் சந்திக்கும் பாகுபாடு அல்லது வேற்றுமை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக்கொண்டேதான் இருக்கிறது. பகுபடினால் பதிக்கப்பட்ட முஸ்லிம் இளைஞர்களின் சதவிகிதம் 2000 இல் 10% மாக இருந்த சதவிகிதம் 2003-2004இல் 49% மாக உயர்ந்துள்ளது.

ஓர் ஆய்வின் தகவல்படி 70% சதவிகித அமெரிக்க முஸ்லிம் இளைஞர்கள் தங்களுடைய மதநம்பிக்கையை பின்பற்றுவதினால் விரும்பத்தகாத நிகழ்வுகளை சந்திக்க நேரிட்டது என்றனர். மறைமுகமாக ஓர் சமூகம் சமுதாயத்தில் இருந்து ஒதுக்கப்படுவது நாட்டின் ஜனநாயகத்திற்கு விரோதமானது.

அமெரிக்க முஸ்லிம் இளைஞர்கள் தங்களுடன் சகஜமாக பழகுவதில்லை என்று ஓர் குற்றசாட்டை பொதுவாக கூறபடுகிறது.அதற்கு காரணம் அவர்களுடைய மதநம்பிக்கை  என்று கூறுகின்றனர்.

ஆம் அதுஉன்மைதான் எப்படியது உண்மை இஸ்லாமிய சட்டங்களின் அடிப்படையில் முஸ்லிம் மாணவன் சக மாணவியுடன் பழகுவதில் சில கட்டுபடுவுள்ளது.அதேபோல்தான் முஸ்லிம் மாணவிக்கும்.இதன் காரணமாகவும் பாகுபாடு ஏற்படுகிறது.

இப்படியான அனைத்து பிரச்சனைகளுக்கும் அரசு,பொது நிறுவனங்கள்,கல்வி மற்றும் சமுதாய அமைப்புகள் ஓர் முடிவை கொண்டுவர முன்வரவேண்டும். அமெரிக்க அரசு முஸ்லிம்கள் மீதான நேரடி மற்றும் மறைமுக தாக்குதலை முற்றிலுமாக தடுக்கும் வகையில் ஆய்வுகளை நடத்தி அதன் மூலம் தெரியவரும் தீர்வுகளை நடைமுறைபடுத்தவேண்டும்.

அரசு முஸ்லிம்கள் மற்றும் பிறமத்தை சார்ந்த மக்களிடையே புரிந்துணர்வு நிகழ்ச்சியை ஏற்படுத்தவேண்டும்.இஸ்லாம் மற்றும் இஸ்லாமியர்கள் பற்றி முழுமையாக தெரிந்துகொள்ளும் பொருட்டு சமுதாய கூடங்களை அமைத்து மாதந்திர ஒன்றுகூடலை ஏற்படுத்தி அவர்களிடையே உள்ள வேறுபாடுகளை களைய முன்வரவேண்டும்.

கல்விநிலையங்கள் அனைத்து மாணவர்களிடையே மதம் மற்றும் கலாசார ஒருமைப்பாட்டினை உருவாக்கும் வகையில் நிகழ்ச்சிகளையும் பயிற்சி வகுப்புகளையும் நடத்தவேண்டும்.இதன் மூலம் இஸ்லாம் மற்றும் இஸ்லாமியர்கள் மீதான புரிந்துணர்வு மற்ற மாணவர்களிடையே பெருகும்.

சமூதாயத்தில் சரியான அடையாளமும் கிடைக்கும்.வகுப்பறையில் படிக்கும் பாடம் பின் நாட்டின் முன்னேற்றத்திற்கும் பயன்படும்.

இதற்கு ஆசிரியர்களும் மாணவர்களும் இணைந்து செயலபட்வேண்டும். அப்படி செயல்பட்டால் நிச்சயம் வெற்றிகிடைக்கும்.(அமெரிக்கர்கள் பாகம் -2 இடைபெற்ற பள்ளி நிகழ்வு இதற்கு சான்று.)

இதேபோல் இஸ்லாமிய மையங்கள் மற்றும் இஸ்லாமிய அமைப்பு தலைவர்கள் இஸ்லாமிய குடும்பங்களை வலுபடுத்தவேண்டும். நாட்டில் இஸ்லாமியர்களாக வழுவதில் உள்ள சவால்களையும் அதற்கான தீர்வையும் கற்றுத்தரவேண்டும். மனோரீதியான பிரச்சனைகளை எப்படி கையாளுவது என்ற கல்வியையும் சொல்லித்தரவேண்டும்.

தாய் அல்லது தந்தை இல்லாத குடும்பத்தில் உள்ள பிள்ளைகளை வழிநடத்தும் பொறுப்பு அச்சமுதாயத்தின் தலைவர்களுக்கு தான் உள்ளது. இதுவரை நான்  சொன்னது அடிப்படை பிரச்சனைகளின் 1 சதவிகிதம்தான்.

அமெரிக்கர்கள் என்றாலே வெறுப்புணர்வை உண்டாக்கும் கருவிகள் சற்று அமெரிக்கர்கள் என்றால் அதில் இஸ்லாமியர்களும் அடங்கும் என்பதை மனதில் பதிய வைத்துகொள்ளவேண்டும்.யார் எதிரி என்பதை தெளிவாக கண்டறியவேண்டும்.

{ 1 comment… read it below or add one }

Sabeek Navab December 31, 2015 at 3:53 pm

என் அன்பு சகோதரர் ஆரூர்.யூசுப்தீன் அவர்களே நமக்குள் உள்ள குறைபாடு நாம் நமக்குள்ளே பேசிக்கொள்வது தான் . தாங்கள் ஏன் தங்களின் ஆக்கத்தை மற்ற மொழிகளிலும் வெளியிடக்கூடாது. இவ்வாறு ஒவ்வொரு முஸ்லிம் சிந்திக்க, பேச ஆரம்பித்தால் இன்ஷா அல்லாஹ் இஸ்லாமும் இஸ்லாமியர்களும் நூர் எனும் பிரகாசத்தை அடைவார்கள்.
அல்லாஹ் உங்களுக்கும், எனக்கும், ஏனைய முஸ்லிம்களுக்கும் மற்றும் முழு மனித சமுதாயத்திற்கும் நற்கிருபை செய்வானாக!
ஆமீன்! ஆமீன்!! யா ரப்பில் ஆலமீன்!!!

Reply

Leave a Comment

Previous post:

Next post: