புதிது புதிதாக இயக்கங்கள் தோன்றுவதை நம்மில் யாரும் விரும்புவது இல்லை! ஆனால் அதற்கான அடிப்படைக் காரணத்தை உணர்ந்ததாக தெரியவில்லை ! காரணங்களை கண்டறிந்து களையாமல் காரியங்களைத் தடுக்க முடியாது ! காரணம் என்ன ? தான் உருவாக்கிய முன்மாதிரி முஸ்லிம் ஜமாத்தில் அனைத்து அதிகாரங்களையும் கொண்ட அல்லாஹ்வின் தூதர் அவர்கள் தெளிவாகத் தெரிந்த நயவஞ்ச்கர்களைக் கூட ஜமாத்தில் இருந்து நீக்கி வைக்கவில்லை ! அப்துல்லாஹ் இப்னு உபை ஒரு போர் சமயத்தில் பாதிப்பேரை அழைத்துக் கொண்டு திரும்பிய […]
நாம் இன்று ஒரு மோசமான சூழ்நிலைக்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கின்றோம். இஸ்லாமிய குழுக்களிடையே காணப்படும் பிரிவினை வாதத்தால் முஸ்லிம் உம்மாவை கூறுபோடும் அவல நிலைதான் அது. இஸ்லாத்தின் வளர்ச்சிக்காக பாடுபடும் பல குழுக்களின் முயற்சிகளால் நன்மைகள் சில ஏற்பட்டிருப்பினும், இக்குழுக்களால் முஸ்லிம்களிடையே ஒற்றுமையின்மைக்கான விதை தூவப்பட்டுள்ளது. முஸ்லிம்களிடம் ஜக்கியமற்ற தன்மை நிலவுவதை அல்லாஹ் விரும்பவில்லை. அவன் இதனை தனது குர்ஆனில் இவ்வாறு கண்டிக்கிறான். مِنَ الَّذِينَ فَرَّقُوا دِينَهُمْ وَكَانُوا شِيَعًا كُلُّ حِزْبٍ […]
முஃதஸிலாக்கள் என்று அடையாளப்படுத்தப்பட்ட ஒரு வழிகெட்ட கூட்டம் இஸ்லாமிய வரலாற்றில் தோன்றியது. குர்ஆனுக்கும், ஹதீஸிற்கும் மனம் போன போக்கில் விளக்கம் என்ற பெயரில் குதர்க்கமான அர்த்தங்களைக் கற்பித்தனர். தமது அறிவுக்கு முரண்பட்ட பல அம்சங்களை நிராகரித்தனர். ஏராளமான ஹதீஸ்களை நிராகரித்தனர் அல்லது மாற்று விளக்கமளித்தனர். அந்தக் காலத்தில் வாழ்ந்த சில கலீபாக்கள் இவர்களினால் கவரப்பட்ட போது ஆட்சி அதிகாரத்துடன் தமது கருத்தை நிலைநாட்டியதுடன் மாற்றுக் கருத்துடைய அறிஞர்கள் மீது வன்முறைகளையும் கட்டவிழ்த்துவிட்டனர். இன்று தம்மை முஃதஸிலாக்கள் என்று […]
முஸ்லிம் சமுதாயம் பேச்சளவில் ஒரே உம்மத் எனும் சமுதாயத்தவராகவே இருக்கிறார்கள். இத்தனை பெரிய சமுதாயம் உண்மையிலேயே ஒன்றுபட்டால் முழு ஒற்றுமையோடு இறைவனின் வார்த்தையை உயர்த்துவதற்கு வேலை செய்தால் கண்ணியமும், சிறப்பும் அவர்களின் காலடியில் விழ எந்த வினாடியும் தயாராக இருக்கும். ஆனால் இன்று பல கோஷ்டிகளாக பிரிந்து கிடக்கிறது. இப்படிப்பட்ட கோஷ்டி மனப்பான்மையால், தமது சமுதாயத்தையும், தமது பள்ளிவாசல்களையும் தனியாக்கிக் கொண்டார்கள். ஒருவன் மற்றவனை திட்டுகிறான். பள்ளிவாசலிருந்து அடித்து விரட்டப்படுகிறான்! வம்பும் வழக்கும் நடத்தப்படுகின்றன. இப்படி முஸ்லிம் சமுதாயத்தை […]
முஸ்லிம் உம்மத்திற்கு அல்லாஹ் இட்ட அழகிய பெயர் “முஸ்லிம்கள்’. இந்த முஸ்லிம்களின் கூட்டமைப்பிற்கு நபி(ஸல்) அவர்கள் வைத்த பெயர் “ஜமாஅத் அல் முஸ்லிமீன்’. இதனை தவிர்த்து வேறு எந்தப் பிரிவுப் பெயர்களையும் அல்லாஹ்வும் அவனது தூதரும் அங்கீகரிக்கவில்லை. நபி(ஸல்) அவர்கள் காலத்திலும் ஸஹாபாக்கள், தாபியீன்கள், இமாம்கள் இவர்களுக்குப் பின் சுமார் ஆயிரம் ஆண்டு கால கட்டத்தில் கூட இஸ்லாத்தின் பெயரால் தனி ஜமாஅத் எவரும் ஏற்படுத்தவில்லை. ஆனால் இன்று தவ்ஹீது பேசும் ஆலிம்கள் தங்களை “ஸலஃபிகள்’ என்றும் […]
உலக அளவில் முஸ்லிம்களின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன. முஸ்லிம்கள் அநியாயமாக கொல்லப்படுகிறார்கள், கேவலப்படுத்தப்படுகிறார்கள். பற்பல கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். இரண்டாம்தர குடிமக்களாக நடத்தப்படுகிறார்கள். இன்னும் இதுபோன்று முஸ்லிம்களின் அவல நிலைகள் பலவற்றைக் குறித்துப் பல்வேறு இஸ்லாமிய இதழ்களில் கட்டுரைகள் வெளி வருவதையும், பேச்சாளர்களில் சிலர் இது குறித்து ஆவேசமாக உரை நிகழ்த்துவதையும் பார்க்கிறோம். நம்பிக்கை கொண்டோருக்கு உதவுவது நம்மீது கடமையாக ஆகிவிட்டது. (குர்ஆன் 22:38, 30:47, 10:103) என்று அல்லாஹ் குர்ஆனில் உத்திரவாதம் அளித்திருந்தும் அல்லாஹ்வின் புறத்திலிருந்து முஸ்லிம்களுக்கு உதவிகள் […]
“அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹு வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹூ வரசூலுஹூ’ என்ற கலிமாவை எவர் மொழிகிறாரோ, அந்த நிமிடமே படைத்த ஏக இறைவனை (தவ்ஹீத்) மட்டும் வணங்கி முஸ்லிமாக மாறி விடுகிறார். இவர் பிற ஷிர்க், பித்அத் முஸ்லிம்களிடமிருந்து பிரித்துக் காட்ட “நான் தவ்ஹீது முஸ்லிமாகி விட்டேன்’ என எவரும் கூறுவதில்லை. உதாரணமாக சமீபத்தில் இஸ்லாத்தைத் தழுவிய சகோதரர் பெரியார்தாசன் முன்பு, இந்துவாய், பின்பு இறை மறுப்பாளராய், மீண்டும் புத்தரை ஏற்பவராக இருந்தார். பின்பு குர்ஆன் […]
முனாஃபிக் யார்..? பொதுவாக நம்மை சுற்றியுள்ள மனிதர்களிடம் காணப்படும் பண்புகள் பலவாக இருக்கலாம். சிலரிடம் நற்பண்புகள் தீயபண்புகள் ஒருங்கே அமைந்தும் இருக்கலாம். நற்பண்புகள் நம்மை சுவனம் அழைத்துச்செல்லும். தீய பண்புகள் நரகம் இட்டுச்செல்லும்..! அவ்வாறு, நரகத்துக்கு இழுத்துச்செல்லும் ஒரு பண்புதான் இந்த நயவஞ்சகம்..! அதாவது, உள்ளத்தில் உள்ளதை உலகுக்குத் தெரியாமல் மறைத்து, தம்மைச் சார்ந்திருப்போர் மனம் மகிழும்படி நடித்து, அவர்களை வழிகெடுத்து, தம் வழிக்கு கொண்டு வரும் இந்த நாசகார பண்புதான் நயவஞ்சகம்..! இத்தீய பண்பை கொண்டவனை […]
எல்லாம் வல்ல அல்லாஹ் தன் நெறிநூலில் ‘…..இன்னும் இஸ்லாத்தை மார்க்கமாக நான் பொருந்திக் கொண்டேன்….” (அல்குர்ஆன் 5:3) ‘….நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் (அங்கீகரிக்கப்பட்ட) மார்க்கம் இஸ்லாமாகும்.” (அல்குர்ஆன் 3:19) ‘இஸ்லாம் அல்லாததை அல்லாஹ் ஒப்புக் கொள்ள மாட்டான்” (அல்குர்ஆன் 3:85) இது போன்ற பல வசனங்களில் தான் அங்கீகரித்துள்ள வாழ்க்கை வழிமுறைகளை மனித சமுதாயத்திற்கு அறிவுறுத்தவும் அதன்படி வாழ்ந்துகாட்டவும் தனது இறுதித் தூதர் முஹம்மது(ஸல்) அவர்களை இவ்வுலகிற்கு அனுப்பினான். அல்லாஹ்வுடைய மார்க்கத்தை ஏற்று அதன் சட்டதிட்டங்களுக்கு கட்டுப்பட்டு வாழ்க்கையை […]
(இறைத்தூதர் நுஹுக்கு எதை அவன் அறிவுறுத்தினானோ-அதையே (அந்த இஸ்லாத்தையே) உங்களுக்கும் (அந்த அல்லாஹ்) மார்க் கமாக்கியிருக்கின்றான். (நபியே!) நாம் உமக்கு வஹியாக அறிவித்ததும் (இறைத்தூதர்கள்) இமாஹீம், மூஸா ஈஸா ஆகியோருக்கும் (இறைக் கட்டளயாக) அறிவுறுத்தியதும், (இஸ்லாம்) மார்க்கத்தை நிலைநிறுத்துங்கள். அதிலிருந்து நீங்கள் பிரிந்துவிடாதீர்கள் என்பதுதான். இணை வைப்போரை எதன்(இஸ்லாத்தின்) பக்கம் அழைக்கிறீர்களோ-அது அவர்களுக்குப் பெரும் சுமையாக இருக்கிறது. தனக்கு விருப்பம் உள்ளவர்களை அல்லாஹ் நேர்வழிக்குரியவர்களாய் தேர்ந்தெடுத்துக் கொள்கிறான். அவனை முன்னோக்கி வருவோர்க்கு தன்னிடம் வரும் நேர்வழியை […]