அருளாளன் அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால் சூனிய வாதம்: (Nihilism) அல்லாஹ் தன் திருமறையில், “என்னுடைய இறைவனே இறந்தவர்கள் எழுப்பப்படும் நாள் வரை எனக்கு அவகாசம் கொடுப்பாயாக! என்று இப்லீஸ் கூறினான். நிச்சயமாக! நீ அவகாசம் அளிக்கப்பட்டோரில் ஒருவனாவாய், அதற்கு இப்லீஸ்; என் இறைவனே! என்னை நீ வழிகேட்டில் விட்டு விட்டதால் நான் இவ்வுலகில் (வழிகேட்டை தரும் அனைத்தையும்) அவர்களுக்கு அழகாகத் தோன்றும்படி செய்து (அதன்மூலமாக) அவர்கள் அனைவரையும் வழிகெடுத்து விடுவேன்.” அல் குர்ஆன்.15:36-39. சபிக்கப்பட்ட ஷைத்தான் அல்லாஹ்விடம் […]
கண்ணியமிக்க எனது சகோதரர்களே! நானும் சிந்திக்கிறேன், நம்மில் ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன். நாம் ஏன் இறைவனின் அன்பிலிருந்து விலக்கப்பட்டிருக்கிறோம்? எல்லாப் புறங்களிலும் துன்பங்கள் ஏன் சூழ்ந்துக் கொண்டிருக்கின்றன? காபிர்கள் இறைவனை வழிபடாதவர்கள் என்று யாரை நாம் சொல்கிறோமோ அவர்கள் நம்மை விட எல்லா விதத்திலும் ஏன் மோலோங்கி நிற்கிறார்கள்? இறைவனுடை சட்டத்துக்கு பணிந்து நடப்பதாய்ச் சொல்லிக் கொண்டிருக்கும் நாம் ஏன் ஒவ்வொரு இடத்திலும் தாழ்வுற்றுக் கிடக்கிறோம்? அதாவது, பெயர் ரீதியான அடிப்படையைத்தவிர […]
பிறந்தவர் அனைவரும் இறப்பது உறுதி உலகம் தோன்றிய நாளிலிருந்து இவ்வுலகில் பிறந்த அனைவரும் இறந்து போனார்கள். இப்போது வாழ்ந்துக் கொண்டிருக்கும் அனைவரும் இறக்கத்தான் போகிறார்கள். உலகம் அழியும் வரை இனி பிறக்கப் போகிறவர்களும் இறப்பது நிச்சயம். இந்த ஒரு விஷயத்தில் மட்டும் ஒருவருக்கும் ஒருபோதும் சந்தேகமே இல்லை. ஏக இறைவனை ஏற்றுக் கொண்டோரும், ஏராளமான தெய்வங்கள் இருப்பதாக நம்பிக் கொண்டிருப்போரும், இறைவனையே ஏற்க மறுத்தோரும் ‘மண்ணில் பிறந்த அனைவருக்கும் மரணம் நிச்சயம்” என்பதில் மாற்றுக் கருத்தைக் கொண்டிருக்கவில்லை. […]
“(நபியே!) உமதிறைவன் தன்னைத் தவிர (மற்றெவரையும்) வணங்கக் கூடாதென்றும் (கட்டளையிட்டிருப்பதுடன்) தாய் தந்தைக்கு நன்றி செய்யும்படியாகவும் கட்டளையிட்டிருக்கிறான். (17 :23) தாய் தந்தையரின் முக்கியத்துவத்தைத் தெளிவாக விளக்கும் மிக ஆழமான வசனம். ஆனால் இன்று மனிதர்களில் பெரும்பாலோரும் ஏன்! ஓர் இறைவனை வணங்கும் நிலையில் முதன்மை தரத்தை உடைய மக்களில் பெரும்பான்மையினோரும் பெற்றோர்கள் விஷயத்தில் தான் தாழ்ந்து நடந்து கொள்கின்றனர். இவ்விசயம் அவர்களை சுவனத்திற்கு செல்லும் நிலையை தடுக்கும் சக்தி கொண்ட மிக முக்கியமான ஒரு அம்சம் […]
கருத்து வேறுபாடற்ற ஒரே தலைப்பு, அது மரணம் என்பது மட்டுமே! இரண்டாம் கருத்துக்கு இடம்பாடுள்ள விடயங்களில் தலையைப் பிய்த்துக் கொள்ளும் நாம், நிச்சயிக்கப்பட்ட அந்த நாளிகையை மறந்து விட்டோமா? அல்லது உலக வாழ்க்கையும் சடவாதமும் நம்மை மறக்கடிக்கச் செய்து விட்டதா? புரியாத புதிராய் நம் வாழ்க்கை நடை போட நாட்டு நடப்புக்கள் நம் மண்டையை நறை போட இறத்தக் களரிகள் இதயத்தைத் துளை போட இங்கிதமற்ற வாழ்க்கை மட்டும் நமை இம்சைப் படுத்துகின்றது! மனிதா நில்! இன்றோ […]
அல்லாஹ் இவ்வுலகில் மனிதர்களை ஒரு குறிக்கோளோடு படைத்திருக்கிறான். “நான் ஜின்களையும், மனிதர்களையும் எனக்கு அடிபணிய வேண்டும் என்பதற்காகவேயன்றி வேறு எதற்காகவும் படைக்கவில்லை. 51:56” லும் “உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காகவே அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான். என்று 67:2 லும் அந்தக் குறிக்கோளை தெளிவு படுத்தியும் உள்ளான். எனவே உலகில் பிறந்த ஒவ்வொரு ஆணும், பெண்ணும் ‘நாம் யார்?’ எங்கிருந்து வந்தோம் எங்கே போகப் போகிறோம்? நமது இறுதி முடிவு என்ன? அது […]
ஈமான் கொண்டோரே! ஒரு குறித்த தவனையின் மீது உங்களுக்குள் கடன் கொடுக்கல் வாங்கல் செய்து கொண்டால், அதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள்;. எழுதுபவன் உங்களிடையே நீதியுடன் எழுதட்டும்;. எழுதுபவன் எழுதுவதற்கு மறுக்கக்கூடாது. (நீதமாக எழுதுமாறு) அல்லாஹ் அவனுக்குக் கற்றுக் கொடுத்தபடி அவன் எழுதட்டும். இன்னும் யார் மீது கடன் (திருப்பிக் கொடுக்க வேண்டிய) பொருப்பு இருக்கிறதோ அவனே (பத்திரத்தின்) வாசகத்தைச் சொல்லட்டும்;. அவன் தன் ரப்பான (அல்லாஹ்வை) அஞ்சிக் கொள்ளட்டும். அல்குர்ஆன் 2:282 இந்த வசனத்தின்படி கடன் […]
நான் உனக்கு எதில் குறை வைத்தேன்? அன்பார்ந்த சகோதர, சகோதரரிகளே இந்த கேள்வி கேட்கப்டாத குடும்பங்கள் உள்ளதா? உங்கள் அன்பிற்கினியவர்கள் உங்களை நோக்கி இந்த கேள்வியை கேட்டுவிட்டால் எப்படி இருக்கும் என்பதை ஒரு கணம் யோசித்துப்பாருங்கள். இந்த கேள்வியை கேட்டுவிட்டால் ஆத்திரப்படாதவர்கள் எவரேனும் இருப்பார்களா? என்னைப் பார்த்து இக்கேள்வியை கேட்கிறாயே உனக்கு அவ்வளவு துணிச்சலா? என்று பதில் வரும் உடனே என் இஷ்டம் எனக்கு என்ன பிடிக்குதோ அதைத்தான் செய்வேன் என்று சாக்கு போக்கு கூறி பிரச்சினையிலிருந்து […]
உலகத்தில் நாம் பரவலாக பார்க்கும்போது இன்பமும் துன்பமும் இருக்கிறது. இந்த உலகத்தில் மனிதனுக்கு, விருப்பத்திற்கு உட்பட்டவைகளும் சம்பவிக்கின்றன. ஆக இன்பம் துன்பம் விருப்பு வெருப்புகள் ஆகிய எல்லாமே நிறைந்ததுதான் வாழ்க்கை. ஆனால் உலகில் ஒவ்வொரு தனி மனிதனும் “நம் வாழ்வில் இன்பமும் இருக்கிறது. துன்பமும் இருக்கிறது. எது அதிகம்? என்று தன்னைத்தானே கேட்டுக் கொள்ளும் போது” ஒவ்வொருவனும்90% க்கு மேல் இன்பத்தை அனுபவிக்கிறார்கள். ஒரு 10%க்கும் குறைவாகவே துன்பம் அவனது வாழ்வில் அவ்வப்போது தலை காட்டுகிறது” என்பதை […]
என் தோழர்களை ஏசாதீர்கள்! ஏனெனில், நிச்சயமாக யார் கைவசம் என் உயிர் இருக்கின்றதோ அவன்மீது ஆணையாக” உஹத் மலையளவு தங்கத்தை எவர் தர்மம் செய்தபோதும் என் தோழர்களின் நிலையை அடைய முடியாது, ஏன் அதில் பாதியளவு கூட அடையமுடியாது” என்று நபிகள் (ஸல்) அவர்கள் நவின்றார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி) நூல்: முஸ்லிம்) சோதனை அண்ணல் நபி(ஸல்) அவர்கள் சத்திய இஸ்லாத்தை அரபுத் தீபகற்பத்தில் முழங்கியபோது, அவர்களுக்கு ஏற்ப்பட்ட இன்னல்களும், அவர்கள் மீது வீசப்பட்ட இழிசொற்களும் வசைமாரிகளும் […]