நடுநிலையோடு சிந்திப்பவர்களுக்கு இன்றைய உலகின் நிலை தெளிவாகவே விளங்கும். மனிதன் செய்யக் கூடாதவை எவை எல்லாம் உண்டோ அவை அனைத்தையும் பெருமையுடன் செய்யும் இழி நிலைக்கு இன்று மனித குலம் தள்ளப்பட்டுள்ளது. நான்கு கால் மிருகங்களை விட கேடு கெட்ட வாழ்க்கையை இரண்டு கால் மனிதன் செய்யும் நிலைக்கு மனிதன் தாழ்ந்துள்ளான். 1500 வருடங்களுக்கு முன்னால் மடமை நிறைந்த மக்கள் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். குடிப்பதில் பெருமை, விபச்சாரம் செய்வதில் பெருமை, கொள்ளை அடிப்பதில் பெருமை, கொலை செய்வதில் […]
ஆறறிவு படைத்த மனிதன் ஐயறிவு மிருகங்களை விட உயர்ந்தவன் என்பதில் அசல் பகுத்தறிவாளர்களிடம் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது. ஆனால் மனிதர்களில் மிகப்பெரும்பாலோர் போலி பகுத்தறிவு பேசி மிருக நிலைக்கு அதாவது ஐயறிவு பிராணியாக தாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அதன் காரணமாக மிருகங்களைவிட கேடுகெட்ட நிலைக்கு ஆளாகிக் கொண்டிருக்கிறார்கள். (7:179) அதனால் இன்றைய மக்களிடையே விபசாரம், கொலை, கொள்ளை. புகை, மது, வட்டி, களவு, சூது, சாதிப்பாகுபாடு, மொழி வேறுபாடு, நிறவேறுபாடு, இனவேறுபாடு, பில்லி சூன்யம், மந்திரம், சோதிடம், […]
ஒன்றே குலம்! ஒருவனே தேவன்!! என்ற தெளிவான ஏகத்துவ கொள்கையிலிருந்த நம் தமிழகம், ஆரியர்களின் படயெடுப்பிற்குப் பின்னர் ஜாதி அடிப்படையிலான மனு தர்ம கொள்கைக்கு அடிமைப்பட்டது. அதன் காரணமாக ஒருதாய் மக்கள் பல ஜாதிகளாகப் பிளவு படுத்தப்பட்டனர். வேதம் ஓதுவோர் பிரம்மாவின் முகத்தில் பிறந்த உயர் ஜாதியாகவும், ஆட்சி புரிவோர் பிரம்மாவின் தோளிலிருந்து பிறந்த அடுத்த ஜாதியாகவும், வியாபாரம் செய்வோர் பிரம்மாவின் இடுப்பிலிருந்து பிறந்த மூன்றாம் ஜாதியாகவும், மற்றவர்கள் எல்லாம் பிரம்மாவின் காலிலிருந்து பிறந்த நாலாம் இழி […]
பொதுவான ஒரு நிலை என்னவென்றால் எந்த ஒன்றைப் பற்றியும் உண்டு என்ற நிலைக்குப் பிறகுதான் இல்லை என்ற நிலை தோன்ற முடியும். இல்லாத ஒன்றை இல்லை என்று கற்பனை செய்ய முடியாது. அரிசி தமிழக மக்களின் பிரதான உணவு; அத்தியாவசியத் தேவை, அதனால் தான் மனித நேயமற்ற அரக்க குணம் கொண்ட வியாபாரிகள் அதில் கல்லைக் கலந்து கல்லைம் அரிசியாக்குகின்றனர். மக்களுக்குத் தேவையில்லாத ஒன்றை கலப்படம் செய்து ஆதாயம் அடைய முடியாது. மக்களுக்குத் தேவையானவற்றில் தான் கலப்படம் […]
அருளாளன் அன்பாளன் இறைவனின் பெயரால்… இன்று உலகம் அழிவின் விளிம்பில் நிற்கிறது. எங்கு பார்த்தாலும் குடி, கூத்து, இசை. சீரழிய சினிமா, ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம், ஆபாசம், சூது, விபச்சாரம், கற்பழிப்பு, ஒழுக்கக் கேடுகள், கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி, ஏமாற்று, வஞ்சனை, மோசடி, லஞ்சம், கற்பழித்துக் கொலை, வரதட்சணை கொடுமை, பெண்கள் எரித்துக் கொல்லப்படுதல், வன்செயல்கள், தீவிரவாதம் இப்படி பஞ்சமா பாவங்களில் எது ஒன்றும் விடுபடாமல் கொடிகட்டிப் பறக்கின்றன. மனிதனின் அமைதி வாழ்க்கைக்குக் குந்தகம் விளைவிக்கும் […]
இன்று மனித குலம் அழிவின் விளிம்பில் நிற்கிறது. மனித குலத்தைச் சீரழிவில் சிக்க வைக்கும் அனைத்துச் சீர்கேடுகளும் இன்று மனிதர்களிடம் நீக்கமறக் காணப்படுகின்றன. நான்கு கால் மிருகங்களிடம் காணப்படாத ஒழுக்கக் கேடுகள் இன்று இந்த இரண்டு கால் மிருகங்களிடம் காணப்படுகின்றன. மிருகங்களில் எந்த மிருக இனமாவது ஓரினப் புணர்ச்சியில் ஈடுபடுவதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? அல்லது நீங்கள் கேள்விப்பட்டாவது இருக்கிறீர்களா? இருக்கவே முடியாது. ஐயறிவு மிருகங்களை விட இழி நிலை! ஐயறிவுள்ள மிருக இனங்களே செய்யத் துணியாத ஒரு […]
மனித குலத்தை ஒரு சுயநல சிறுபான்மைப் பிரிவினராகிய மதகுருமார்கள் மற்றும் அரசியல் குருமார்கள் எண்ணற்ற மதங்களாக, ஜாதிகளாக, இசங்களாக, இயக்கங்களாக, பிரிவுகளாகப் பிரித்து, அற்ப உலகியல் ஆதாயங்களை அடைந்து வருகிறார்கள். மதங்களை விட்டும், ஜாதிகளை விட்டும் மனித குலத்தைத் தூய்மைப்படுத்துகிறோம் என்று முழக்கமிட்டுச் செயல்படுகிறவர்களும் உலகியல் பட்டம், பதவி, பேர் புகழ், அற்ப உலகியல் ஆதாயங்கள் இவற்றைக் குறிக்கோளாகக் கொண்டு செயல்படுவதாலும், தங்களின் அற்பமான அறிவையே எல்லையாகக் கொண்டு செயல் படுவதாலும் அவர்களாலும் மத வேற்றுமைகளையோ, ஜாதிப் […]
பகுத்தறிவுகாரர்கள் கண்னுக்குத் தெரியாத கடவுளை நம்புவது காட்டு மிராண்டித்தனம். பகுத்தறிவுக்கு ஒவ்வாதது. கடவுளைக் காட்டினால் நம்புகிறோம், லட்சக்கணக்கில் பணம் பரிசும் தருகிறோம் என்று சவால் விடுகிறார்கள். இதை உண்மையான பகுத்தறிவு என்று ஏற்றுக்கொள்ள முடியுமா? எந்த உண்மையான பகுத்தறிவுவாளனும் இதை பகுத்தறிவு என்று ஒப்புக் கொள்ளமாட்டான். இதனைப் பார்த்தறிவு அதாவது ஜயறிவு என்றே சொல்லுவான். இன்னும் பச்சையாகச் சொன்னால் இதை மிருக அறிவு என்றே சொல்ல வேண்டும். கண்ணியமிக்க ஒருவர் உங்களிடம் வந்து எதிர்வரும் ஒரு தேதியில் […]
மதப்புரோகிதரர்கள் இடைத்தரகர்கள் கடவுளின் பெயரால் மக்களை ஏமாற்றிக் கல்லையும், மண்ணையும், பறவைகளையும் அனைத்து படைப்புகளையும் தெய்வமாக்கி மக்களை ஏமாற்றி வயிறு வளர்க்கும் அற்ப்பத்தனத்தை கண்டிக்கப் புறப்பட்ட இந்தப் பகுத்தறிவாளர்கள், ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து மனிதனைக் கடித்த கதையாக, பொய் கடவுள்களைக் கண்டிக்கப்போய், உண்மையான இறைவனையும் கண்டிக்கத் துணிந்து விட்டார்களே! இது நியாயமா? கடவுளின் பெயரால் மதப்புரோகிதரர்கள் மக்களை ஏமாற்றுகிறார்கள் என்பதற்காக உண்மையான இறைவனை மறுக்கத்துணிந்த இந்த பகுத்தறிவாளர்கள் அரசியல் பெயரால் இன்றைய அரசியல்வாதிகள் அதைவிடக் […]
தொன்று தொட்டு இன்றுவரை மதத்தின் பெயரால் தான் மனித இரத்தம் அதிகமாய் சிந்தப்பட்டுள்ளது. மதம் பிடித்த மனிதன்தான் மனிதனை கொல்கின்றான். இன்று உலகில் காணப்படும் அமைதியின்மைக்கு மதங்கள்தான் காரணம் மதங்கள் அழிந்தால்தான் மதங்களை ஒழித்தால்தான் மனித இனம் அமைதி பெறும் என்றெல்லாம் நாத்திகர்கள் ஓயாமல் பிரச்சாரம் செய்து வருகின்றார்கள். இன்று உலகில் நடைபெறும் சம்பவங்ளை பார்க்கும்பொழுது இதில் உண்மையிருக்குமோ என்று மக்களுக்கும் சந்தேகம் ஏற்படுகின்றது. மதத்தின் பெயரால் இன்று மக்கள் மத்தியில் வெறுப்பு ஏற்படுவதற்கு இந்த சந்தேகங்களும் […]