மனித இனம் காலம் காலமாக வியந்து பார்க்கும் இயற்கையின் பல பிரம்மாண்ட நிகழ்வுகள், கண்ணுக்குப் புலப்படாத நுண்ணுயீரிகளின் (Microorganisms) அசைவியக்கத்தில்தான் நிலைபெற்றுள்ளன.
நவீன அறிவியல் கருவிகள் கொண்டு ஆராயும்போது, பெருவெளியின் விதிகளும் நுண்ணுலகின் இரகசியங்களும் எத்தகையத் துல்லியத்தோடு ஒன்றிணைந்துள்ளன என்பது புலப்படுகிறது.
அதிசயங்களின் உறைவிடமாக வர்ணிக்கப்படும் சுவனத்தில், மனிதர்களுக்கு வாக்களிக்கப்பட்ட நான்கு விதமான ஆறுகளின் வர்ணனை திருக்குர்ஆனில் இடம்பெற்றுள்ளது:
1.கெட்டுப்போகாத நீர்,
2.சுவை மாறாத பால்,
3.இன்பம் தரும் மது,
4.மற்றும் தெளிந்த தேன்.
பிரபஞ்சத்தின் பிரம்மாண்ட படைப்பாளன், இந்த நான்கும் பூமியில் சாத்தியமாவதற்குக் காரணமாக அமைத்த நுண்ணுயீரிகளின் வியத்தகு பங்களிப்பை நவீன அறிவியலின் ஆழமான சான்றுகளுடன் இந்தக் கட்டுரையில் விரிவாகப் பார்ப்போம்.
- நீராறு:
மழையைக் கருக்கொள்ள வைக்கும் கண்ணுக்குத் தெரியாத உயிர்!
“அல்லாஹ் காற்றுகளை அனுப்பி மேகத்தை கருக்கொள்ள (லவாஹிஹ்- Impregnant) வைக்கிறான்…”
— அல் குர் ஆன்
30:48.
வானத்தில் மேகங்கள் திரண்டு மழை பொழிவதற்கு வெறும் நீராவி மட்டும் போதாது. அந்த நீர்த்துளிகள் ஒன்றிணைந்து பனி கட்டிகளாக மாற ஒரு
“விதை” அல்லது “கரு”
தேவைப்படுகிறது. இதனை அறிவியல் Ice Nucleation என்கிறது.
டேவிட் சண்ட்ஸின் (David Sands) ஆய்வு:
1970-களில் Bioprecipitation என்ற தத்துவத்தை இவர் முன்மொழிந்தார். Pseudomonas syringae என்ற பாக்டீரியாவின் மேற்பரப்பில் உள்ள சிறப்புப் புரதம், சாதாரண நீரை -8°C வெப்பநிலைக்குப் பதிலாக -3°C இலேயே ஐஸ் கட்டியாக மாற்றும் தன்மை கொண்டது.
அறிவியல் சான்று:
காற்றில் பறக்கும் இந்த நுண்ணுயிரிகள் மேகங்களுக்குள் சென்று பனித்துளிகளுக்கான கருவாக மாறுகின்றன. Science இதழில் வெளியான பிரெண்ட் கிரிஸ்ட்னர் (Brent Christner) அவர்களின் ஆய்விலும், உலகெங்கிலும் பெய்யும் பனி மற்றும் மழையின் மையத்தில் உயிரியல் தோற்றம் கொண்ட Ice Nuclei இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தத்துவார்த்தப் பார்வை:
கண்ணுக்குத் தெரியாத ஒரு பாக்டீரியாதான் வானத்தில் மேகங்களைக் கருக்கொள்ள வைத்து பூமியை வாழ வைக்கிறது என்ற குர்ஆனின் குறிப்பு, நவீன சூழலியல் மற்றும் நுண்ணுயிரியல் விஞ்ஞானத்தால் நூற்றுக்கு நூறு மெய்ப்பிக்கப்பட்டுள்ளது.
- பாலாறு:
சாணத்திற்கும் இரத்தத்திற்கும் நடுவே நடக்கும் நுண்ணுயீர் வியப்பு!
“…அதன் வயிற்றில் உள்ள சாணத்திற்கும் இரத்தத்திற்கும் இடையில் இருந்து கலப்படமற்ற பாலை புகட்டுகிறோம்!”
— அல் குர்ஆன். 16:66.
மாடு புல் தின்றால் நேராகப் பால் மடிக்கு வராது. மாட்டின் செரிமான மண்டலத்தில் உள்ள Rumen எனப்படும் பிரம்மாண்டமான நொதித்தல் கூடத்தில் கோடிக்கணக்கான நுண்ணுயீரிகள் வாழ்கின்றன.
செரிமானமும் மாற்றமும்:
மாடுகளால் தாவரங்களின் புல்லிலுள்ள செல்லுலோஸை (Cellulose) நேரடியாகச் செரிக்க இயலாது.
அங்கே வசிக்கும் பாக்டீரியாக்கள்தான் அந்தச் செல்லுலோஸை உடைத்து Volatile Fatty Acids (Propionate, Butyrate) ஆக மாற்றுகின்றன.
இந்த கொழுப்பு அமிலங்களே பின்னர் இரத்தத்தின் வழியாகச் சென்று பாலின் சத்துக்களாக மாறுகின்றன.
நுண்ணுயிர் வேறுபாடு:
“Frontiers in Microbiology” இதழ் ஆய்வின்படி, அதிக பால் கொடுக்கும் மாடுகளுக்கும் குறைந்த பால் கொடுக்கும் மாடுகளுக்கும் உள்ள மிகப்பெரிய வித்தியாசம் அவற்றின் ரூமென் (Rumen) பாக்டீரியாக்களின் துல்லியமான அமைப்பே ஆகும்.
அதிசயப் பொருத்தம்:
சாணத்திற்கும் இரத்தத்திற்கும் இடைப்பட்ட செரிமான மண்டலத்தில், எந்தவொரு கலப்படமும் இன்றி நுண்ணுயிரிகளைக் கொண்டு பாலின் மூலக்கூா்களை உருவாக்கும் இறைவனின் நுட்பம் இங்கே வியக்க வைக்கிறது.
- தேனாறு:
தேனீயின் வயிற்றுக்குள் நடக்கும் அமிர்த ரகசியம்!
“…அதன் வயிற்றிலிருந்து பல நிறங்களையுடைய பானம் வெளியாகிறது…”
— அல் குர் ஆன்
16:69.
தேனீ பூக்களில் இருந்து நேராகத் தேனை எடுப்பதில்லை; பூக்களின் சாற்றை (Nectar) சேகரித்துத் தேனாக மாற்றுகிறது.
குடல் பாக்டீரியாவின் பங்கு:
தேனீக்களின் தேன் வயிறு (Crop) மற்றும் குடலில் Lactobacillus மற்றும் Apilactobacillus kunkeei போன்ற லாக்டிக் அமில பாக்டீரியாக்கள் (LAB) நிரம்பியுள்ளன.
பாதுகாப்பு அரண்:
தேனீக்கள் பூஞ்சாற்றைச் சேகரிக்கும் போதே இந்த நுண்ணுயீரிகள் அதில் கலந்து நொதித்தல் (Fermentation) நிகழ்கிறது.
இதுவே தேனுக்கு இயற்கையான Antimicrobial Property (எதிர்ப்புச் சக்தி) கொடுத்து அது கெட்டுப்போகாமல் பாதுகாக்கிறது. இந்த பாக்டீரியாக்கள் இல்லாவிட்டால் தேன் வெறும் சர்க்கரைத் தண்ணீராக அழுகிவிடும்.
இறைவசனத்தின் ஆழம்:
தேனீயின் “வயிற்றிலிருந்து” வெளியாகும் அந்தத் தெளிந்த பானத்திற்குப் பின்னால் நுண்ணுயீரிகளின் அசுர உழைப்பும், குர்ஆன் சுட்டும் உடற்கூற்றியல் உண்மையும் ஒன்றிணைந்து நிற்கின்றன.
- மது ஆறு:
நொதித்தலின்றி உருவாகாத இயற்கை அமுதம்!
இயற்கையில் எந்தவொரு பழச்சாறும் தானாக மதுவாக (Alcohol) மாறுவதில்லை. இதற்கு நுண்ணுயிரிகளின் உதவி கட்டாயமாகும்.
ஈஸ்ட் (Yeast) எனும் அற்புதம்:
Saccharomyces cerevisiae என்ற ஈஸ்ட் (இது ஒரு பூஞ்சை வகை நுண்ணுயீரி) பழங்களில் உள்ள சர்க்கரையை உட்கொண்டு, அதனை Ethanol + CO2 ஆக மாற்றுகிறது.
அறிவியல் அமைப்பான VAAM இந்த ஈஸ்டை” Microbe of the Year 2022″ ஆகத் தேர்ந்தெடுத்தது.
இந்த நொதித்தல் (Fermentation) செயல்முறை இல்லாவிட்டால் மதுவின் உற்பத்தியே சாத்தியமில்லை.
சுவன மதுவின் சிறப்பு:
பூமியில் நுண்ணுயீரிகளால் உருவாக்கும் மது… போதையையும் தலைவலியையும் தரும்; ஆனால், சுவனத்தில் வழங்கப்படுவது எந்தத் தீங்கும் தராத, தூய்மையான இன்பம் தரும் ஆறு என்று குர்ஆன் கூறுவது கூடுதல் சிந்தனைக்குரியது.
முடிவுரை!:
பகுத்தறிவுப் பார்வை!
பூமியில் ஒரு துளி மழை பெய்யவும், ஒரு சொட்டு பால் சுரக்கவும், ஒரு துளி தேன் உருவாகவும், ஒரு துளி மது உருவாகவும் இந்த நுண்ணுயீரிகளே அடிப்படையாகத் திகழ்கின்றன.
மிகச் சிறிய கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயீரிகளைக் கொண்டு இந்தப் பேருலகின் உணவுச் சங்கிலியையும் வாழ்வாதாரத்தையும் இயக்கும் வல்லமையுள்ள இறைவனால், சுவனத்தில் இதே போன்று தூய்மையான ஆறுகளை என்றென்றும் (Eternally) ஓடச் செய்வது எத்தகைய எளிய காரியம்!
“அவன் ஒரு காரியத்தை நாடினால் ‘ஆகுக’ என்பான், உடனே ஆகிவிடும்!
— அல் குர் ஆன். 36:82.
தொகுப்பு:
— எஸ். ஹலரத் அலி
(+91 99653 61068.)