ரபீஉல் அவ்வல் மாதம் முஸ்லிம் சமுதாயம் நாடு முழுவதும் மீலாது விழாக்கள் நடத்துவதையும், வீடுகள் தோறும் மவ்லூது ஓதுவதையும் கொண்டு நபி صلى الله عليه وسلم அவர்கள் மீது தங்களுக்குள்ள அன்பையும், பிரியத்தையும் வெளிப்படுத்துவதாக நம்பிக் கொண்டிருக்கிறது. இந்த சடங்கு, சம்பிரதாயங்கள் எல்லாம் நபி صلى الله عليه وسلم அவர்களின் மறைவிற்கும் 600 ஆண்டுகள் கழித்தே மக்களின் மனோ இச்சைகளுக்கு ஏற்றவாறு தோற்றுவிக்கப்பட்டவையாகும்.
மற்ற மதத்தவர்கள் எப்படி தங்கள் வேதங்களையும் மதச்சிறப்புகளையும் வேதாந்தமாகவும் வெற்று முழக்கங்களாகவும் ஆக்கி விட்டரனரோ அதே போல் முஸ்லிம்களும் இஸ்லாத்தின் தூய வாழ்க்கை நெறி முறைகளையும் வெற்று முழக்கங்களாகவும், பஜனை பாடுவதாகவும் ஆக்கிவிட்டார்கள் என்பதை இந்த மீலாது விழாக்களும் மவ்லூது சபைகளும் தெள்ளத் தெளிவாகப் பறை சாற்றுகின்றன. மாற்று மதத்தினரை அடி பிசகாமல் அப்படியே பின்பற்றி நடக்க ஆரம்பித்து விட்டனர் முஸ்லிம்களும்.
நபி صلى الله عليه وسلم அவர்கள் இந்த சமுதாயத்தின் வழிகேட்டைப்பற்றி இவ்வாறு கூறுகின்றார்கள்.
“நீங்கள் உங்கள் முன்னோர்களின் வழிமுறைகளை ஜானுக்கு ஜான் முழத்திற்கு முழம் பின்பற்றுவீர்கள். எதுவரை என்றால் அவர்கள் உடும்பின் பொந்துக்குள் நுழைந்தால் நீங்களும் அதனுள் நுழைவீர்கள்” என்று.அதற்கு நாங்கள் (நபித்தோழர்கள்) “அவர்கள் யகூதி, நஸரானிகளா? என்று கேட்டதற்கு, வேறு யார் என்று பதிலளித்தார்கள். அறிவிப்பாளர்: அபூஸயீதுல் குத்ரீ(ரலி) நூல்: முஸ்லிம்-இல்ம், புகாரி-இஃதிஸாம்.
முஸ்லிம்கள் தாங்கள் நடத்தும் இந்த மீலாது விழாக்களில் மாற்று மதத்தினரையும் அழைத்து அவர்கள் இஸ்லாத்தைப் பற்றியும், நபி صلى الله عليه وسلم அவர்களைப் பற்றியும் ஏற்றிப் போற்றிப் பேசுவதை பெருமையாக எண்ணும் துரதிஷ்ட நிலையும் இன்று நாடு முழுதும் பரவிவிட்டது. நாங்கள் போடுவது வெற்றுக் கோஷங்கள்தான் -வீண் முழக்கங்கள்தான் என்பதை இது கொண்டு உறுதிபடுத்துகின்றனர்.
உள்ளும் புறமும் ஒருங்கே சீராகச் செயல்படும் உண்மையாளர்கள் ஒரு போதும் இவ்வாறு நடக்க முடியாது; பேச முடியாது. மேடைப் பேச்சு, கற்பனைப் பேச்சு, நயவஞ்சகப் பேச்சு என்பதுபோல் பீலாது மேடைகளையும் ஆக்கி வருகிறது இந்த முஸ்லிம் சமுதாயம். இது வேதனைக்குரிய விஷயமா இல்லையா?
அல்லாஹ்வும் அவனது ரஸூலும் காட்டித்தராது, மனித கற்பனைகளைக் கொண்டும், யூகங்களைக் கொண்டும் நல்லவைகயாகக் கருதப்பட்டு செயல்படுத்தும் காரியங்கள் அனைத்தும் இறுதியில் சமுதாயத்திற்கு கேடு விளைவிப்பவையாக அமையுமே அல்லாமல் சமுதாயத்திற்குப் பலன் தரும் செயல்களாக ஒரு போதும் அமையாது.
உண்மையில் நபி صلى الله عليه وسلم அவர்கள் மீது உறுதியான அன்புள்ளவர்கள், அவர்களை அல்லாஹ்வால் அனுப்பப்பட்ட உண்மைத் தூதர் என்று மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டவர்கள் இப்படிப்பட்ட வெற்றுச் சடங்குகளில் ஈடுபடமாட்டார்கள். ரபீஉல் அவ்வல் மாதம் மட்டும் மேடைகளை அமைத்துக் கற்பனைக் கவிதைகளான மவ்லூதுகளை ஓதுபவர்களாகவும் மீலாது மேடைகள் அமைத்து நுனி நாவில் புகழ் பாடுபவர்களாகவும் இருக்க மாட்டார்கள்.
நபி صلى الله عليه وسلم அவர்களுக்குப் பிறகு மனிதர்களால் உருவாக்கப்பட்டவற்றை மார்க்கமாக ஒரு போதும் எடுத்துச் செயல்படுத்தமாட்டார்கள். மாறாக வருடம் 365 நாட்களும், நபி صلى الله عليه وسلم அவர்களைத் தமது வழிகாட்டியாக மனப்பூர்வமாக ஏற்று அவர்களின் அடிச்சுவட்டை அப்படியே பின்பற்றி, குர்ஆனைக் கொண்டும் மட்டும் நிலை நாட்டப்பட்டுள்ள காரியங்களை மட்டும் மார்க்கமாக ஏற்றுச் செயல்படுவார்கள். அப்படிப்பட்ட உண்மை முஸ்லிம்களாக நாம் அனைவரும் வாழ அல்லாஹ்வின் அருள் கிட்டுமாக!
{ 12 comments }
இன்று இஸ்லாமிய இயக்கங்கள் அவர்களின் இயக்க செயல்பாடுகளை காண்பிக்கவேண்டி
நினைத்த பெயரில், நினைத்தவிதத்தில் தனது இயக்க விளம்பரங்களுக்காக விழாக்கள், கூட்டங்கள்,
பேரணிகள், இஜ்திமாக்கள் , இவைகளை நடத்திவிட்டு முஸ்லிம்கள் தமது நபியின் “மீலாது விழாக்களை,
மௌலிது நிகழ்சிகளை நடத்துவதை குறைகூறுவது சுத்த முட்டாள் தனம் என்றுதான் கூறவேண்டும்.
ஆகவே ! இதுபோன்ற நட்சுக்கருதுக்களை கூறுவதை விட்டுவிட்டு ஆகவேண்டிய காரியங்களை அழகிய
முறையில் கூற முன்வாருங்கள் என கேட்டுக்கொள்கிறேன் !
அஸ்ஸலாமு அலைக்கும் அணைத்து முஸ்லிம்களுக்கும்.
// ரபீஉல் அவ்வல் மாதம் மட்டும் மேடைகளை அமைத்துக் கற்பனைக் கவிதைகளான மவ்லூதுகளை ஓதுபவர்களாகவும் மீலாது மேடைகள் அமைத்து நுனி நாவில் புகழ் பாடுபவர்களாகவும் //
// இஸ்லாமிய இயக்கங்கள் அவர்களின் இயக்க செயல்பாடுகளை காண்பிக்கவேண்டி
நினைத்த பெயரில், நினைத்தவிதத்தில் தனது இயக்க விளம்பரங்களுக்காக விழாக்கள், கூட்டங்கள்,
பேரணிகள், இஜ்திமாக்கள் ,//
போன்ற செயல்கள் நபி (ஸல்) அவர்களால் சொல்லிக் கொடுக்கப் படாததால். நபியவர்கள் காலத்தில் அந்த அருமை மக்கள் எனப்படி வாழ்ந்தார்களோ அதே வழியை நாமும் கடை பிடித்து வாழ்வோமாக. நபி (ஸல்) அவர்கள் இறக்கும் காலம் வரை என்னென்ன செயல் பாடுகள் சஹாபாக்கள் பெருமக்கள் வாழ்வில் இருந்துக் கொண்டிருந்தது என்ற வரலாற்று சுவடுகளை நாம் ஆராய்ந்து அதற்க்கு உட்படுத்திக் கொல்லனும்.ஒரு ஆதாரமில்லாத செயலை சரிகான்பதர்க்காக வேறொரு தவறான செயலை உவமானம் காட்டி படு பாதாளத்தில் நாம் விழாமல் அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழியை காட்டுவானாக ஆமீன்.
மா சலாம்.
அப்துல் அஜீஸ்
ASSALAMU ALAIKKUM(VARAH..)
ALLAH VIN IRUDHI THOODHARAANA, NABIHALUKKU YELLAM THALAIVARAANA NAMADHU KANMANI NAAYAHAM NABI(S.A.W) AVARHALAI PUHALVADHU PAAVAM YENDRUM, ADHUVUM AVARHAL PIRANDHA DHINATHTHIL AVARHALAI PUHALVADHU PAAVAM YENDRUM KOORIVARUM ANDHA PAAVIHAL NIRAINDHA பாதாளத்தில் நாம் விழாமல் அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழியை காட்டுவானாக ஆமீன்.
NABI(S.A.W) AVARHALAI NAM VAAZHKAI MUZHUVADHUM PUHAZHALAAM, NAM UYIRAI VIDA
AVARHAL MEEDHU ANBU SELUTHTHA VENDUM….
அஸ்ஸலாமு அலைக்கும். சகோ யாசர் அரபாத் முஹம்மது என்னும் இறைத் தூதருடைய சொல்,செயல்,அங்கீகாரம் ஆகியவை ஹதீத்கலாகும். இறைத் தூதரை நேசிக்கும் சமூகமாக இருந்தால் அவர்கள் உத்தரவிடும் ஒவ்வொரு சொல்லுக்கும் நாம் கட்டுபட்டாகனும். கீழ் கண்ட ஹதீதை பாருங்கள்.
3445. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்
“நபி(ஸல்) அவர்கள், ‘கிறிஸ்தவர்கள் மர்யமின் மகன் ஈசாவை (அளவுக்கு மீறிப் புகழ்ந்து கடவுள் நிலைக்கு) உயர்த்திவிட்டதைப் போல் நீங்கள் என்னை உயர்த்தி விடாதீர்கள். ஏனெனில், நான் அல்லாஹ்வின் அடியான் தான். (அப்படி ஏதாவது என்னைப் பற்றிச் சொல்வதாயிருந்தால்) ‘அல்லாஹ்வின் அடியார்’ என்றும் ‘இறைத்தூதர் என்றும் சொல்லுங்கள்’ என்று கூறினார்கள்” என மிம்பரின் (உரை மேடை) மீதிருந்தபடி உமர்(ரலி) சொல்ல கேட்டிருக்கிறேன்.
இப்படி கட்டளையிட்ட பிறகு வேறொரு வார்த்தைகளை கொண்டு எந்த அடிப்படையில் புகழ்வது. அல்லது உங்களுக்கு தெரிந்து இன்னென்ன வார்த்தைகளை போட்டு என்ன அழையுங்கள் என்று ஓர் ஹதீதையாவது உதாரனத்திற்க்கு காட்டுங்கள்.
மா சலாம்.
அப்துல் அஜீஸ்
3532. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எனக்கு ஐந்து பெயர்கள் உள்ளன. நான் முஹம்மது – புகழப்பட்டவர் – ஆவேன். நான் அஹ்மத் – இறைவனை அதிகமாகப் புகழ்பவர் ஆவேன். நான் மாஹீ – அழிப்பவர் ஆவேன். என் மூலமாக அல்லாஹ் இறைமறுப்பை அழிக்கிறான். நான் ஹாஷிர் – ஒன்று திரட்டுபவர் ஆவேன். மக்கள் எனக்குப் பின்னால் ஒன்று திரட்டப்படுவார்கள். நான் ஆகிப் (இறைத்தூதர்களில்) இறுதியானவர் ஆவேன்.
என ஜுபைர் இப்னு முத்யிம்(ரலி) அறிவித்தார்.
Volume :4 Book :61
3533. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்
குறைஷி (மறுப்பாளர்)களின் திட்டுதலையும், அவர்களின் சபித்தலையும் என்னைவிட்டு அல்லாஹ் எப்படி திருப்பி விடுகிறான் என்பதைக் கண்டு நீங்கள் வியப்படைய வில்லையா? (என்னை) ‘முதம்மம்’ (இகழப்படுவர்)’ என்று (சொல்லி) ஏசுகிறார்கள்; சபிக்கிறார்கள். ஆனால் நானோ ‘முஹம்மத்’ (புகழப்படுபவர்) ஆவேன்.
Volume :4 Book :61
3589. (எனக்குப் பின்) உங்களிடையே ஒரு காலம் வரும். அப்போது என்னைக் காண்பது உங்கள் மனைவி மக்கள், செல்வம் ஆகியன (உங்களுடன்) இருப்பதை விடவும் உங்களுக்கு மிகப் பிரியமானதாயிருக்கும்.
இந்த மூன்று ஹதீஸ்களையும் அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Volume :4 Book :61
அஸ்ஸலாமு அலைக்கும். சகோதரர் யாசர் அரபாத் நீங்கள் மேற்கோள் காட்டிய ஹதீதானது முஹம்மத் (ஸல்) அவர்களின் பெயர்களின் பட்டியல்.அந்த பெயர்களுக்கு தக்கவாறு நபியவர்களின் தன்மைகளும் உள்ளடங்கிவிட்டன நடந்தேரியும் விட்டன புகழவும் பட்டுவிட்டார்கள். அபுல் காசிம் என்றும் கூட அவர்களுக்கு பெயர் உண்டு. ஆனால் விஷயம் அதுவல்ல ஒரு மனிதர் புதிதாக இஸ்லாத்தில் சேருகிறார் அவருக்கு கலிமா முன்மொழிந்து அவரை இஸ்லாத்தில் நுழைவிக்கிறது. உலகம் அறிந்தது அந்த கலிமா எப்படி பட்டது என்றால் ( அஷ்ஹது அன்லாயிலாஹா இல்லல்லாஹு வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹூ வரசூலுஹு ) இதை சொன்னால் முஸ்லிமாகிவிடுகிறார். இந்த இடத்தில் நபிக்கு தான் நீங்கள் குறிப்பிட்ட ஹதீத் மூலம் பல பெயர்கள் உண்டு அல்லவா? அதில் எதையாவது ஒரு பெயரை தேர்வு செய்து ” அஷ்ஹது அன்ன மாஹீ அப்துஹூ வரசூலுஹு என்று சொல்லிக் கொடுப்பீர்களா? அல்லது தொழுகையில் அத்தஹியாத்தில் வரும் இதே கலிமாவில் இவ்வளவு பெயர்கள் இருக்கின்றனவே ஏன் ? ஒரே பெயரை சொல்லி ஓதனும் ஷாகிர் என்றோ அல்லது ஆகிப் என்றோ சொல்லி தொழுகையின் கலிமாவை முடிப்பீர்களா? ஏன் என்றால் அதுவும் ரசூலுல்லாஹ்வின் பெயர் தான் அப்படி செய்தால் அது அல்லாஹ்வால் அங்கீகரிக்கப் படுமா? நஷ்டம் தான் மிஞ்சும்.ஏன் என்றால் அதிக பிரசிங்கி தனம் நமக்கு அந்த உரிமை இல்லை. இதே போல தான் நாமாகவே ஒரு நாளை தேர்ந்தெடுத்து அது நபியவர்களின் பிறந்த தேதியை மைய்யமாக வைத்து கச்சேரி அரங்கேரவைத்து சினிமா பாட்டு மெட்டில் நபியை ”தன்” இஷ்டத்திற்கு புகழ்ந்து போற்றும் அவல நிலை நடக்கின்றது. எதன் அடிப்படையில் பிறந்த தேதியை செலக்ட் செய்தார்கள்.
மா சலாம்.
அப்துல் அஜீஸ்
மௌலித் என்றால் என்ன?
மவ்லித் என்ற சொல்லுக்கு அரபு மொழியில்
பிறப்பு என்று பொருளாகும்.
இஸ்லாமியர்களின் வழக்கில்
… இறைத்தூதர் ஸல்லல்லாஹு
அலைஹிவஸல்லம் அவர்களின்
பிறப்பு மற்றும் சிறப்புகளை கவிநடையில்
புகழ்வதற்கு மவ்லித் என்று கூறப்படும்..!
ஹஸ்ஸான் ரழியல்லாஹு அன்ஹு
அவர்களுக்கு பள்ளிவாசல் ஒரு மிம்பரை
அமைத்துக் கொடுத்தார்கள்.
அதிலே அவர் ஏறி நின்று
இறைதூதர் ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம் அவர்களையே புகழ்வார்கள்.
அறிவிப்பாளர் :ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா
நூல் :திர்மிதி எண் :2773
நாமும் நமது வருங்கால சந்ததியும்
அல்லாஹ்வை மற்றும் அவனது தூதரை
நேசித்து, சஹாபா பெருமக்கள்
நபிகளார் ஸல்… அவர்களை புகழ்ந்ததை
போல புகழ்ந்து ஈருலகிலும் வெற்றி பெற
அல்லாஹ் ஜல்…. அருள் புரிவானாக!
ஆமீன்!!
ஆமீன்!
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரர்களே ! ஒரு ஹதீதை முன் வைக்கும் பொழுது அதன் அனைத்து சுற்று சூழலும் எடுத்து எழுதுவது தான் சிறந்தது. இல்லை என்றால் ஒரு ஹதீத் மற்றொரு ஹதீதுக்கு முரண்பாடுடையதாக அமையக் கூடும். விசயத்திற்கு வருவோம் திர்மிதீயில் உள்ள ஒரு ஹதீதை மட்டும் பதிந்துவிட்டு அதை சஹாபாக்கள் பெருமக்கள் அனைவரும் கவி நடையில் புகழ்ந்ததாக வேறு அவதூறு எழுதியுள்ளீர்கள்.
3531. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
(முஸ்லிம்களுக்கெதிராக இணைவைப்பவர்கள் வசை பாடிய போது) இணைவைப்பவர்களுக்கெதிராக வசைக் கவிதைபாடுவதற்கு நபி(ஸல்) அவர்களிடம் (கவிஞர்) ஹஸ்ஸான் இப்னு ஸாபித்(ரலி) அனுமதி கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள் என் வமிசம் (அவர்களுடன் கலந்திருக்க, அவர்களை வசை பாடுவது; எப்படி?’ என்று கேட்டார்கள். அதற்கு ஹஸ்ஸான்(ரலி), ‘மாவிலிருந்து முடியை உருவியெடுப்பது போல் தங்களை அவர்களிலிருந்து உருவியெடுத்து (வசையிலிருந்து நீக்கி) விடுவேன்” என்று கூறினார்கள்.
உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) கூறினார்
(ஒரு முறை) நான் ஹஸ்ஸான்(ரலி) அவர்களை ஏசிக் கொண்டே ஆயிஷா(ரலி) அவர்களிடம் சென்றேன். அவர்கள், ‘அவரைத் திட்டாதே! ஏனெனில், அவர் (எதிரிகளின் வசைப் பாடல்களுக்குத் தக்க பதிலடி கொடுத்து) நபி(ஸல்) அவர்களைப் பாதுகாப்பவராக இருந்தார்” என்று கூறினார்கள்.
Volume :4 Book :௬௧
3213. பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் ஹஸ்ஸான்(ரலி) அவர்களிடம், ‘எதிரிகளுக்கு (பதிலடியாக) வசைக் கவிதை பாடுங்கள். ஜிப்ரீல் உங்களுடன் (துணையாக) இருப்பார்” என்று கூறினார்கள்.
முஸ்லிம்களை திட்டி தீர்ப்பதையே தொழிலாக கொண்ட குறைஷிகளுக்கு எதிராக கவிதை பாட அனுமதி கேட்ட ஹஸ்ஸான் ஸாபித்(ரலி) பின்பு இறைதூதர் (ஸல்) அவர்கள் அனுமதிக்கிறார்கள், மேலும் அவர்களுக்காக பிரார்த்தனையும் செய்தார்கள்.
. நபியவர்களை பாதுகாப்பவர் என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறும் கூற்று நபியையும் சேர்த்து தான் குறைஷிகள் திட்டியுள்ளார்கள் என்பது தெளிவாகிறது.கவிதை மூலம் நபியவர்களுக்கு பதில் கொடுக்க முடியாததால் தான் சஹாபி ஹஸ்ஸான் (ரலி) மூலம் இறைதூதர் பதிலடி கொடுத்தார்கள்.
وَمَا عَلَّمْنَاهُ الْشِّعْرَ وَمَا يَنْبَغِيْ لَهُ.(يس:69
நாம் கவிதையை அவருக்குக் (முஹம்மதுக்கு) கற்றுக் கொடுக்கவுமில்லை, அது அவருக்கு அவசியமும் இல்லை.
மா சலாம்.
அப்துல் அஜீஸ்
அப்துல் அஜீஸ் ( திர்மிதீயில் உள்ள ஒரு ஹதீதை மட்டும் பதிந்துவிட்டு அதை சஹாபாக்கள் பெருமக்கள் அனைவரும் கவி நடையில் புகழ்ந்ததாக வேறு அவதூறு எழுதியுள்ளீர்கள்) அவதூறு கூறுவது எனது பழக்கமில்லை. அது வஹ்ஹாபிய மதவாதிகளின் பழக்கமாக இருக்கலாம். அது அவர்களுக்கு கைவந்த
கலையாக இருக்கலாம். எப்படியும் நபி (ஸல்) அவர்களை யாரும் புகழ்ந்துவிடக்கூடாது என்பதில் உமது
கால்புனர்சியை ,வக்கிர புத்தியை இங்கு வெளிப்படுத்தி உள்ளீர். அதன் பிறகு மூன்று ஹதீஸ்களை குரிபிட்டுள்ளீர் . அதுவும் அருமை சஹாபாக்கள் நபி (ஸல்) அவர்களை புகல்துல்லார்கள் என்பதற்கே
ஆதாரமாக உள்ளது. இதில் இறுதியாக நீர் எதனை சொல்ல வருகிறீர்? ஏன் சுற்றி வளைத்து உண்மையை
மறைக்கிறீர்? நபி (ஸல்) அவர்களுக்கு எப்படியும் புகழ் வந்துவிடக் கூடாது என்பதில் குறியாக இருக்காதீர்.
அதுவே உம்மை இழிவுக்குல்லாக்கி விடும் என்பதை விளங்கிக் கொள்வீர் ! எப்படியோ உமது வஹ்ஹாபிய
மத கொள்கைக்கு ,உமது மத தலைவர்களின் வழிக்கேட்டுக் கொள்கைக்கு விசுவாசகமாகவே இருக்கிறீர்.
ஆகவே ! உமது உண்மை நிலை அறிய ஆசை படுகிறேன். தெளிவான விளக்கம் கிடைக்கும் வரை
தொடர்வேன் ! இன்ஷா அல்லாஹ் !
அஸ்ஸலாமு அலைக்கும். சகோதரர் அஹ்மத் சாஹா
// அதுவும் அருமை சஹாபாக்கள் நபி (ஸல்) அவர்களை புகல்துல்லார்கள் என்பதற்கே
ஆதாரமாக உள்ளது. //
மேற்கண்ட நான் பதிந்த ஹதீதானது ஒரே சஹாபி ”ஹஸ்ஸான்(ரலி)” தான் நபி (ஸல்) அவர்களை வசை பாடியதிலிருந்து தடுத்தார். நீங்கள் நினைத்தது போல் அனைவரும் அல்ல என்பதை நினைவில் வைக்கவும். முதலில் ஒருமை, பன்மை என்ற இலக்கணம் தெரிந்து கொள்ளுங்கள். அப்புறம் வந்து என் பதிவுக்கு பதில் போடுங்கள்.
// நபி (ஸல்) அவர்களுக்கு எப்படியும் புகழ் வந்துவிடக் கூடாது என்பதில் குறியாக இருக்காதீர்.//
நபியவர்களுக்கு புகழ் தந்து கொண்டு தான் இருக்கிறோம். ஒவ்வொரு தொழுகையிலும், பாங்கிலும். அவர்கள் சொன்ன பிரகாரம் நாங்கள் நடப்பதிலும்.
// எப்படியோ உமது வஹ்ஹாபிய மத கொள்கைக்கு ,உமது மத தலைவர்களின் வழிக்கேட்டுக் கொள்கைக்கு விசுவாசகமாகவே இருக்கிறீர்.//
ஒரு முஸ்லிமின் நிலை அறியாமலேயே என்னை வஹ்ஹாபி மதம் சார்ந்தவன் என்றும். எனக்கொரு மத தலைவரை நான் தேர்ந்தெடுத்துக் கொண்டேன் என்றும். உங்களின் கற்பனை படி அந்த தலைவனுக்கு விசுவாசி நான் என்றும் எழுதியுள்ளீரே! இதற்க்கு பெயர் தான் அவதூறு. அல்லாஹ்வுக்கு பயந்து கொள்ளுங்கள்.
இந்த மாதிரி தான் சஹாபாக்கள் விஷயத்திலையும் அவதூறு பரப்பி வருகிறீர்கள்.
// உமது உண்மை நிலை அறிய ஆசை படுகிறேன்.//
41:33. எவர் அல்லாஹ்வின் பக்கம் (மக்களை) அழைத்து, ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து: “நிச்சயமாக நான் (அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபட்ட) முஸ்லிம்களில் நின்றும் உள்ளவன் என்று கூறுகின்றாரோ, அவரைவிட சொல்லால் அழகியவர் யார்?” (இருக்கின்றார்?)
மேற்கண்ட வசனத்தின் படி நான் ஒரு முஸ்லிம் எந்த ஒரு அமைப்பிற்கோ, இயக்கதிர்க்கோ, ஜமாஅத்திற்கோ உட்பட்டவன் கிடையாது. இன்னும் நான் அழகிய சொல்லை சொன்னவன் என்பதை மறக்காதீர். என் நிலையில் யார் யாரெல்லாம் உள்ளார்களோ இன்னும் வாழ்ந்து முடித்தார்களோ அவர்களின் வழியில் உள்ளவன்.
2:132. இதையே இப்ராஹீம் தம் குமாரர்களுக்கு வஸிய்யத்து (உபதேசம்) செய்தார்; யஃகூபும் (இவ்வாறே செய்தார்); அவர் கூறினார்: “என் குமாரர்களே! அல்லாஹ் உங்களுக்குச் சன்மார்க்கத்தை (இஸ்லாமை) தேர்ந்தெடுத்துள்ளான். நீங்கள் முஸ்லிம்களாக அன்றி மரணிக்காதீர்கள்.”
6:163. “அவனுக்கே யாதோர் இணையுமில்லை – இதைக் கொண்டே நான் ஏவப்பட்டுள்ளேன் – (அவனுக்கு) வழிப்பட்டவர்களில் – முஸ்லிம்களில் – நான் முதன்மையானவன் (என்றும் கூறும்).
போதுமான குர்ஆன் வசனப் படி முஸ்லிமாக அன்றி இன்ஷா அல்லாஹ் மரணிக்க மாட்டேன், முஸ்லிம்களில் முதலானவன் என்று அல்லாஹ்வின் உபதேசப் படி இருக்கின்றேன். இப்படி தான் அனைவரும் இருக்க வேண்டும்.
மா சலாம்.
அப்துல் அஜீஸ்
மௌலிது என்றால் என்ன?
மௌலிது என்னும் வார்த்தைக்கு அரபி மொழியில் பிறப்பு என்று பொருளாகும். இஸ்லாமியர்களின் வழக்கத்தில் நபிகள் நாயகம் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மற்றும் இறைநேசர்கள் ஆகியோர்களின் பிறப்பு, வாழ்க்கை, வரலாறு, அற்புதங்கள், மாண்புகள் ஆகியவற்றைக் குறித்து பாடப்பட்ட கவிதைகளுக்கு மௌலிது என்று பெயர்.இதை இஸ்லாமியர்கள் மிகவும் கண்ணியத்துடனும், மரியாதையுடனும், புண்ணியம் கருதியும் ஓதி வருகின்றனர்.
உத்தம நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உன்னத நினைவை உயிர்பிப்பது என்பது, மவ்லிது ஓதுவதால் ஏற்படும் பயன்களில் ஒன்றாகும். அதேபோல் இறைநேசர்களின் மௌலிதும் பயனள்ளதாகும். இறைநேசர்களைப் பற்றி நினைவு கூறுமிடங்களில் அல்லாஹ்வின் ரஹ்மத் இறங்குகிறது என்று ஜுனைதுல் பகுதாதி நாயகம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியுள்ளார்கள்.
நாயகம் கண்மணி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை குர்ஆனில் இறைவன் பல்வேறு இடங்களில் புகழ்ந்து பேசுகிறான்.
وَإِنَّكَ لَعَلَىٰ خُلُقٍ عَظِيمٍ
(நபியே) நிச்சயமாக நீங்கள் மேலான நற்குணத்தில் இருக்கிறீர்கள். (68:4)
وَرَفَعْنَا لَكَ ذِكْرَكَ(நபியே) உங்கள் கீர்த்தியை நாம் உயர்த்தியுள்ளோம். (94:4)
وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِّلْعَالَمِينَ
(நபியே) அகிலத்தாருக்கு அருட்கொடையாகவே உங்களை நாம் அனுப்பியுள்ளோம். (21:107)அப்துல்லாஹ் இப்னு ரவாஹா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்
وَفِيْنَا رَسُوْلَ اللهِ يَتْلُوْا كِتَابَهُاِذَا انْشَقَ مَعْرُوْفٌ مِنَ الْفَجْرِ سَاطِعٌاَرَانَا الْهُدَى بَعْدَ الْعَمى فَقُلُوْبُنَابِهِ مُوْقِنَاتٌ اَنَّ مَاقَالَ وَاقِعِيَبِيْتُ يُجَافِيْ جَنْبُهُ عَنْ فِرَاشِهِاِذَا اسْتَثْقَلَتْ بِالْمُشْرِكِيْنَ الْمَضَاجِعُ
1. எங்களிடையே அல்லாஹ்வின் தூதர் இருக்கிறார்கள். வைகறைப் பொழுது புலரும் நேரத்தில் அவர்கள் இறைவேதத்தை ஓதுகிறார்கள்.
2. குருட்டுத் தன்மையில் இருந்த எங்களுக்கு நேர்வழி காட்டினார்கள். அவர்கள் கூறியது நிச்சயம் நிகழும் என எங்கள் உள்ளங்கள் உறுதியாக நம்புகின்றன.
3. இரவில் இணைவைப்பாளர்கள் படுக்கையில் ஆழ்ந்து கிடக்கும்போது நபியவர்கள் படுக்கையிலிருந்து எழுந்து தொழுவார்கள்.
அறிவிப்பாளர்: அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹுநூல்: புகாரி 1087.
ஹஸ்ஸான் இப்னு தாபித் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்,
هَجَوْتَ مُحَمَّدًا فَاَجَبْتَ عَنْهُوَعِنْدَ اللهِ فِيْ ذَاكَ الْجَزَاءُهَجَوْتَ مُحَمَّدًا بَرًّا حَنِيْفًارَسُوْلِ اللهِ شَيْمَتُهُ الْوَفَاءُوَقَالَ الله قَدْ اَرْسَلْتُ عَبدًايَقُوْلُ الْحَقَّ لَيْسَ بِهِ خَفَاءُ
1. (இறை மறுப்பாளர்களே) முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைக் குறைவுபடுத்தி நீங்கள் கவி பாடுகிறீர்கள். அதற்குப் பதிலாக அவர்களை நான் புகழ்ந்து பாடுவேன். அதற்குரிய நற்கூலி இறைவனிடம் உண்டு.2. நல்லவராகவும் நேரிய வழியில் உள்ளவராகவும் இருக்கிற நபி முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை குறைவுபடுத்திப் பேசுகிறீர்கள். வாக்குறுதியை நிறைவேற்றுவது அவர்களின் அழகிய குணமாகும்.
3. அவர்கள் விஷயத்தில் இறைவன் கூறினான், சத்தியத்தைக் கூறுகிற ஓர் அடியாரை திருத்தூதராக அனுப்பியுள்ளேன். அதில் ஒளிவு மறைவு இல்லை.அறிவிப்பாளர்: ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹாநூல்: முஸ்லிம் 4545
கஃப் இப்னு ஜுஹைர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்,
وَالْعَفْوَ عِنْدَ رَسُوْلَ اللهِ مَأْمُوْلُفَقَدْ اَتَيْتُ رَسُوْلِ اللهِ مُعْتَذَرَاوَالْعَذْرُ عِنْدَ رَسُوْلَ اللهِ مَقْبُوْلُاِنَّ الرَّسُوْلَ لَنُوْرٌ يُسْتَضَاءُ بِهِوَصَارِمٌ مِنْ سُيُوْفِ اللهِ مَسْئُوْلٌ
1. நபிகள் நாதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எனக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்கள் என எனக்குத் தெரிவிக்கப்பட்டது. மன்னிப்பு என்பது இறைத் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்தில் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றே.
2. மன்னிப்புத் தேடியவனாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் நான் வந்தேன். அம்மன்னிப்பு இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஒப்புக் கொள்ளப்பட்டது.
3. நிச்சயமாக முஹம்மத் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒளி கொடுக்கும் பேரொளியாகவும், இறைவனின் வாட்களில் உருவிய வாளாகவும் இருக்கிறார்கள்.
அறிவிப்பாளர்: ஆஸிம் இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹுநூல்: ஹாகிம் 6558
إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ ۚ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا
நிச்சயமாக இறைவனும் அவனுடைய மலக்குகளும் நபி மீது ஸலவாத் சொல்கிறார்கள். ஈமான் கொண்டவர்களே! அந்த நபி மீது நீங்களும் ஸலவாத் சொல்லுங்கள் சலாமும் கூறுங்கள். (அல்குர்ஆன் 33:56)
இதற்கு விரிவுரை சொல்லும் போது இமாம் அபுல் முஆலி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் ‘அல்லாஹ் ஸலவாத் கூறுகிறான் என்றால் திருநபியை அமரர்களிடம் போற்றிப் புகழ்கிறான் என்பதே பொருள் என்று கூறுகிறார்கள். -ஸஹீஹுல் புகாரி 2:77
இமாம் இப்னு கதீர் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள், அல்லாஹ் இப்பூவுலகவாசிகளோடு திருநபி மீது ஸலவாத் உரைக்க கட்டளையிட்டதன் நோக்கம், அவ்விண்ணிலும் இம்மண்ணிலும் திருநபியின் புகழ் முழங்கப்பட வேண்டும் என்பதற்கே என்கிறார்கள். -இப்னு கதீர் 3:533
மவ்லிதுகளில் கூறப்படும் ஸலவாத்துகள் இந்த இறைக் கட்டளையை நிறைவேற்றிய பலனைத் தருகிறது.
அதேபோல் இங்கு கூறப்படும் சலாமும், புகழ்ச்சிகளும் நபிகள் நாதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு உடனே எத்திவைக்கப்படுகிறது.
عَنْ اِبْنِ مَسْعُوْد قَالَ قَالَ رَسُوْلِ اللهِ صَلّى الله عليه و سلم اِنَّ لله مَلَا ئِكَة ً سَيَّا حِيْنَ فِيَ اَلَا رْضٍ يَبَلِّغُوْنَي مِنْ امَّتَى
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள், அல்லாஹ்விற்கு மண்ணுலகில் சுற்றிவரும் மலக்குகள் இருக்கிறார்கள். என் உம்மத்தினர் கூறும் சலாமை அவர்கள் என்னிடம் தெரிவிக்கிறார்கள்.
அறிவிப்பாளர்: இப்னு மஸ்வூத் ரலியல்லாஹு அன்ஹுநூல்: நசாயீ 1265
ஹஸ்ஸான் இப்னு தாபித் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் அறிவிப்புப்படி நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் புகழ்ந்து பாடினால் அதற்கு அல்லாஹ்விடம் கூலியும் கிடைக்கிறது.
இந்த கருத்துக்களை நிதானமாக சிந்திக்கவும். இதுவும் புரியாமல் போனால் அது ஒரு சிந்தனை கோளாறு என்றுதான் சொல்லவேண்டும்.
அஸ்ஸலாமு அலைக்கும். சகோதரர் அஹ்மத் சாஹா அவர்களுக்கு
நீங்கள் மறுபடியும் மனிதர்கள் கைப்பட உருவாக்கி வைத்துள்ள ஒரு கவிதைக்கே முக்கியத்துவம் கொடுத்து அதை பாடினால் அது அல்லாஹ்விடமிருந்து நமக்கு நற்கூலி கிடைக்கும் என்பது போல் ஒரு தோற்றத்தை ஏற்படுத்திவருகிரீர்கள். நீங்கலாக ஏற்படுத்திக் கொண்டு நபியை புகழ்ந்தால் பலன் கிடைக்குமா? அல்லது நபி (ஸல்) அவர்கள் எப்படி சொல்லி கொடுத்தார்களோ அதன் படி புகழ்ந்தால் பலன் உண்டா என்பதை கீழ் கண்ட உதாரணத்தில் தெரிந்துக் கொள்ளுங்கள்.
அதி காலையில் பஜ்ர் தொழுகைக்காக எழுந்து சுத்தம் செய்து தொழுகைக்கு செல்கிறோம் ஆனால் அங்கே இரண்டு ரக்அத் தான் தொழவிக்கப் படுகிறது இதுக்காகவா நாம் இவ்வளவு தியாகம் செய்து தூக்கத்தை விட்டு எழுந்து பள்ளிக்கு வருகிறோம் நாம் கொஞ்சம் யோசித்து ஏன்? லுஹருக்கு அஸருக்கு இருப்பது போல் நான்கு ரக்அத் ஆக இருக்கக் கூடாது என்று முடிவு செய்து சேர்த்து இரண்டு தொழுதால் அது தொழுகையாகுமா? அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் உள்ள மார்க்கத்திற்குள் அது சேருமா? அந்த உரிமை நமக்குண்டா ? கண்டிப்பாக இல்லை அந்த இரண்டு ரக்அதிலும் அதே குர்ஆன் தான் ஓதுகிறோம் அதே அல்லாஹ்வை தான் சஜ்தா செய்வோம் அந்த நபி மேல தான் சலவாத் சொல்வோம் அத்தஹியாத்தில் இருந்தாலும் ஏன் புறந்தள்ளப் படுகிறது நாம் இங்கு வலியமாக உரிமையில்லாத விஷயத்தில் கை வைக்கிறோம் என்பதனால்.
// إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ ۚ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا
நிச்சயமாக இறைவனும் அவனுடைய மலக்குகளும் நபி மீது ஸலவாத் சொல்கிறார்கள். ஈமான் கொண்டவர்களே! அந்த நபி மீது நீங்களும் ஸலவாத் சொல்லுங்கள் சலாமும் கூறுங்கள். (அல்குர்ஆன் 33:56) //
நிச்சயமாக அல்லாஹ்வும் அவனுடைய மலக்குகளும் என்று ஆரம்பிக்கிறது ” இறைவனும் ”என்று அல்ல.அந்த வசனம் திருத்திக் கொள்ளவும்.
அந்த நபி மீது நீங்களும் சலவாத் சொல்லுங்கள் என்ற வசனத்திர்க்கிணங்க முஹம்மது (ஸல்) அவர்களும் நமக்கு எப்படி தன் மேல் சலவாத் சொல்லவேண்டும் என்று இஸ்லாத்தை சொல்லிவிட்டே சென்றுள்ளார்கள்
// மவ்லிதுகளில் கூறப்படும் ஸலவாத்துகள் இந்த இறைக் கட்டளையை நிறைவேற்றிய பலனைத் தருகிறது.//
மவ்லித்களையும் சலவாதுடன் இணைப்பது வழி கேடாகும் இன்னும் இறைக்கட்டளையை நிறைவேற்றிய பலன் தருகிறது என்று போடுவது மனிதர்கள் எழுதும் கவிதையான மவ்ளிதையும் இறைவன் நமக்கு கட்டளை போட்டது போல் பிம்பம் தருகிறது. இன்னும் இறைத் தூதர் (ஸல்) அவர்கள் இஸ்லாத்தை இந்த மவ்லிதை கொண்டு எத்திவைக்காமல் சென்றுள்ளர்கள் என்ற குற்றம் சாடுகிறது.
ஆனால் இஸ்லாமோ பூர்த்தியாகிவிட்ட மார்க்கம்
// இந்த கருத்துக்களை நிதானமாக சிந்திக்கவும். இதுவும் புரியாமல் போனால் அது ஒரு சிந்தனை கோளாறு என்றுதான் சொல்லவேண்டும்.//
உங்கள் சிந்தனையை கவிதையின் பக்கம் திருப்பாதீர்கள்
// இறைநேசர்கள் ஆகியோர்களின் பிறப்பு, வாழ்க்கை, வரலாறு, அற்புதங்கள், மாண்புகள் ஆகியவற்றைக் குறித்து பாடப்பட்ட கவிதைகளுக்கு மௌலிது என்று பெயர்.//
இப்படி தனி மனித துதி பாடினால் அல்லாஹ் நம்மை நரகில் கொண்டு போய் சேர்த்து விடுவான் இறை நேசர்கள் யார் என்று அறிவுயுங்கள் இறைவன் அவரை நேசிக்கிறானா? அல்லது அவர் இறைவனை நேசிக்கிறாரா? என்ற விளக்கம் தேவை அப்புறம் அவர்களுக்கு பாடுவதா என்பது பற்றி விவாதிப்போம்.
மா சலாம்.
அப்துல் அஜீஸ்
Comments on this entry are closed.