மனோ இச்சைக்கு வழிப்படுதல்

in அல்குர்ஆன்

4:135. முஃமின்களே! நீங்கள் நீதியின்மீது நிலைத்திருப்பவர்களாகவும் உங்களுக்கோ அல்லது (உங்கள்) பெற்றோருக்கோ அல்லது நெருங்கிய உறவினருக்கோ விரோதமாக இருப்பினும் அல்லாஹ்வுக்காகவே சாட்சி கூறுபவர்களாகவும் இருங்கள்். (நீங்கள் யாருக்காக சாட்சியம் கூறுகிறீர்களோ) அவர்கள் செல்வர்களாக இருந்தாலும் ஏழைகளாக இருந்தாலும் (உண்மையான சாட்சியம் கூறுங்கள்). ஏனெனில் அல்லாஹ் அவ்விருவரையும் காப்பதற்கு அருகதையுடையவன்். எனவே நியாயம் வழங்குவதில் மன இச்சையைப் பின்பற்றி விடாதீர்கள்். மேலும் நீங்கள் மாற்றிக் கூறினாலும் அல்லது (சாட்சி கூறுவதைப்) புறக்கணித்தாலும் நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதையெல்லாம் நன்கு அறிந்தவனாகவே இருக்கின்றான்.

5:48. மேலும் (நபியே! முற்றிலும்) உண்மையைக் கொண்டுள்ள இவ்வேதத்தை நாம் உம்மீது இறக்கியுள்ளோம் இது தனக்கு முன்னிருந்த (ஒவ்வொரு) வேதத்தையும் மெய்ப்படுத்தக் கூடியதாகவும் அதைப் பாதுகாப்பதாகவும் இருக்கின்றது. எனவே அல்லாஹ் அருள் செய்த(சட்ட திட்டத்)தைக் கொண்டு அவர்களிடையே நீர் தீர்ப்புச் செய்வீராக. உமக்கு வந்த உண்மையை விட்டும் (விலகி) அவர்களுடைய மன இச்சைகளை நீர் பின்பற்ற வேண்டாம். உங்களில் ஒவ்வொரு கூட்டத்தாருக்கும் ஒவ்வொரு மார்க்கத்தையும் வழிமுறையையும் நாம் ஏற்படுத்தியுள்ளோம்். அல்லாஹ் நாடினால் உங்கள் அனைவரையும் ஒரே சமுதாயத்தவராக ஆக்கியிருக்கலாம்். ஆனால் அவன் உங்களுக்குக் கொடுத்திருப்பதைக் கொண்டு உங்களைச் சோதிப்பதற்காகவே (இவ்வாறு செய்திருக்கிறான்). எனவே நன்மையானவற்றின்பால் முந்திக் கொள்ளுங்கள். நீங்கள் யாவரும் அல்லாஹ்வின் பக்கமே மீள வேண்டியிருக்கிறது. நீங்கள் எதில் மாறுபட்டு கொண்டிருந்தீர்களோ அத(ன் உண்மையி)னை அவன் உங்களுக்குத் தெளிவாக்கி வைப்பான்.

5:77. ”வேதமுடையவர்களே! நீங்கள் உங்கள் மார்க்கத்தில் உண்மையில்லாததை கூறி வரம்பு மீறாதீர்கள். (உங்களுக்கு) முன்பு வழிதவறிச் சென்ற கூட்டத்தாாின் மனோ இச்சைகளை நீ்ங்கள் பின்பற்றாதீர்கள்். அநேகரை அவர்கள் வழி தவறச் செய்ததுடன் தாங்களும் நேர் வழியை விட்டு விலகி விட்டனர்”” என்று (நபியே!) நீர் கூறுவீராக!

7:176. நாம் நாடியிருந்தால் நம் அத்தாட்சிகளைக் கொண்டு அவனை உயர்த்தியிருப்போம்் எனினும் அவன் இவ்வுலக வாழ்வை(யே சதமென) மதித்து தன்னுடைய இச்சைகளையே பின்பற்றினான்் அவனுக்கு உதாரணம் நாயைப் போன்று அதை நீர் விரட்டினாலும் நாக்கைத் தொங்க விடுகிறது அல்லது அதை நீர் விட்டு விட்டாலும் நாக்கைத் தொங்க விடுகிறது – இதுவே நம் வசனங்களைப் பொய்யெனக் கூறும் கூட்டத்தாருக்கும் உதாரணமாகும் – ஆகவே அவர்கள் சிந்தித்து நல்லுணர்வு பெறும் பொருட்டு (இத்தகைய) வரலாறுகளைக் கூறுவீராக.

6:150. ”நிச்சயமாக அல்லாஹ் தான் இதனை ஹராமாக்கினான் என சாட்சி சொல்லக்கூடிய உங்கள் சாட்சிகளைக் கொண்டு வாருங்கள்”” என்று கூறும்் அவர்கள் சாட்சி கூறினால் (அவர்கள் பொய்யராகவேயிருப்பர்) அவர்களுடன் சேர்ந்து நீர் சாட்சி சொல்ல வேண்டாம் – நம் வசனங்களைப் பொய்ப்பிக்கின்றவர்கள் மறுமையை நம்பாதவர்கள் ஆகியோாின் வீணான மன இச்சைகளை நீர் பின்பற்ற வேண்டாம் – ஏனெனில் அவர்கள் தாம் தங்கள் இறைவனுக்குப் பல தெய்வங்களை இணையாக்குகின்றனர்.

6:56. ”நீங்கள் அல்லாஹ்வையன்றி வேறு எவர்களை(க் கடவுளர்களாக) அழைக்கின்றீர்களோ அவர்களை வணங்கக் கூடாதென்று நான் நிச்சயமாக தடுக்கப்பட்டு உள்ளேன்”” (என்று நபியே!) நீர் கூறுவீராக ”உங்களுடைய மன இச்சைகளை நான் பின்பற்ற மாட்டேன்் (நான் அப்படிச் செய்தால்) நான் நிச்சயமாக வழி தவறி விடுவேன்் மேலும் நான் நேர்வழி பெற்றவர்களிலும் இருக்கமாட்டேன்”” என்றும் (நபியே!) நீர் கூறுவீராக.

18:28. (நபியே!) எவர் தம் இறைவனுடைய திருப்பொருத்த்தை நாடியவர்களாக காலையிலும் மாலையிலும் அவனைப் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறார்களோ அவர்களுடன் நீரும் பொறுமையை மேற் கொண்டிருப்பீராக! இன்னும் உலக வாழ்க்கையின் அலங்காரத்தை நாடி அ(த்தகைய)வர்களை விட்டும் உம் இரு கண்களையும் திருப்பி விடாதீர்் இன்னும் எவனுடைய இதயத்தை நம்மை நினைவு கூர்வதிலிருந்து நாம் திருப்பி விட்டோமோ அவனை நீர் வழிபடாதீர்் ஏனெனில் அவன்தன் இச்சையைப் பின் பற்றியதனால் அவனுடைய காாியம் வரம்பு மீறியமாகி விட்டது.

25:43. தன் (இழிவான) இச்சையையே தன் தெய்வமாக எடுத்துக் கொண்டவனை (நபியே!) நீர் பார்த்தீரா? அ(த்தகைய)வனுக்கு நீர் பாதுகாவலராக இருப்பீரா?

28:50. உமக்கு அவர்கள் பதில் கூறாவிடில் நிச்சயமாக அவர்கள் தம் மன இச்சைகளையே பின்பற்றுகிறார்கள் என்று நீர் அறிந்து கொள்ளும்் இன்னும் அல்லாஹ்விடமிருந்து நேர்வழி காட்டியின்றித் தன் மன இச்சையைப் பின்பற்றுபவனைவிட மிக வழி கெட்டவன் எவன் இருக்கின்றான்் நிச்சயமாக அல்லாஹ் அக்கரமக்கார சமூகத்தாருக்கு நேர்வழி காட்ட மாட்டான்.

30:29. எனினும் அநியாயக்காரர்கள் கல்வி ஞானமில்லாமல் தம் மனோ இச்சைகளையே பின்பற்றுகிறார்கள்் ஆகவே எவர்களை அல்லாஹ் வழிகெடச் செய்தானோ அவர்களை நேர் வழியில் கொண்டு வருபவர் யார்? மேலும் அவர்களுக்கு உதவி செய்வோர் எவருமில்லர்.

47:16. இன்னும் அவர்களில் உம்மைச் செவிமடுப்பவர்களும் இருக்கின்றனர்் ஆனால் அவர்கள் உம்மை விட்டு வெளியேறியதும் எவர்களுக்கு (வேத) ஞானம் அருளப் பெற்றதோ அவர்களைப் பார்த்து் ”அவர் சற்று முன் என்ன கூறினார்?”” என்று (பாிகாசமாகக்) கேட்கின்றனர்் இத்தகையோாின் இருதயங்களின் மீது அல்லாஹ் முத்திரையிட்டுவிட்டான். மேலும் இவர்கள் தங்கள் மனோ இச்சைகளையே பின்பற்றுகின்றனர்.

45:23. (நபியே!) எவன் தன்னுடைய (சாீர மனோ) இச்சையைத் தன்னுடைய தெய்வமாக ஆக்கிக் கொண்டானோ அவனை நீர் பார்த்தீரா? மேலும் அநிந்தே அல்லாஹ் அவனை வழிகேட்டில் விட்டு அவனுடைய காதுகள் மீதும் இருதயத்தின் மீதும் முத்திரையிட்டு் இன்னும் அவனுடைய பார்வை மீதும் திரையை அதை்துவிட்டான். எனவே அல்லாஹ்வுக்குப் பிறகு அவனுக்கு நேர்வழி காண்பிப்பவர் யார்? நீங்கள் சிந்தித்து உணர வேண்டாமா?

79:37-41 எனவே எவன் வரம்பை மீறினானோ – இந்த உலக வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்தானோ- அவனுக்கு நிச்சயமாக நரகந்தான் தங்குமிடமாகும்.. எவன் தன் இறைவன் முன் நிற்பதை அஞ்சி மனதையும் இச்சைகளை விட்டு விலக்கிக் கொண்டானோ நிச்சயமாக அவனுக்குச் சுவர்க்கம்தான் தங்குமிடமாகும்.

38:26. (நாம் அவாிடம் கூறினோம்்) ”தாவுூதே! நிச்சயமாக நாம் உம்மை புூமியில் பின்தோன்றலாக ஆக்கினோம்் ஆகவே மனிதர்களிடையே சத்தியத்தைக் கொண்டு (நீதுமாக)த் தீர்ப்புச் செய்யும்் அன்றியும் அனோ இச்சையைப் பின் பற்றாதீர்் (ஏனெனில் அது) உம்மை அல்லாஹ்வின் பாதையை விட்டும் வழி கெடுத்து விடும். நிச்சயமாக எவர் அல்லாஹ்வின் பாதையை விட்டு வழிகெடுக்கிறாரோ அவர்களுக்குக் கேள்வி கணக்குக் கேட்கப்படும் நாளை மறந்து விட்டமைக்காக மிகக்கொடிய வேதனையுண்டு.

4:27. மேலும் அல்லாஹ் உங்களுக்குப் பாவமன்னிப்பு அளிக்க விரும்புகிறான்். ஆனால் தங்கள் (கீழ்தரமான) இச்சைகளைப் பின்பற்றி நடப்பவர்களோ நீங்கள் (நேரான வழியிலிருந்து திரும்பி பாவத்திலேயே) முற்றிலும் சாய்ந்துவிட வேண்டுமென்று விரும்புகிறார்கள்.

53:23. இவையெல்லாம் வெறும் பெயர்களன்றி வேறில்லை நீங்களும் உங்கள் மூதாதையர்களும் வைத்துக் கொண்ட வெறும் பெயர்கள்! இதற்கு அல்லாஹ் எந்த அத்தாட்சியும் இறக்கவில்லை நிச்சயமாக அவர்கள் வீணான எண்ணத்தையும் தம் மனங்கள் விரும்புபவற்றையுமே பின் பற்றுகிறார்கள் எனினும் நிச்சயமாக அவர்களுடைய இறைவனிடமிருந்து அவர்களுக்கு நேரான வழி வந்தே இருக்கிறது.

Comments on this entry are closed.

Previous post:

Next post: