பித்தப்பை கற்கள் (Galbladder Stones)

Post image for பித்தப்பை கற்கள் (Galbladder Stones)

in பொதுவானவை

முதலில் பித்தப்பை என்றால் என்ன என்பது பற்றி அறிவோம். அதாவது கல்லீரலில் உற்பத்தியாகும் பித்த நீரை எடுத்துச் செல்லும் பித்த நாளத்தில் ஒட்டியிருக்கும் சிறிய பைதான் பித்தப் பை எனப்படுகிறது. இது கல்லீரலின் அடியில் அமைந்துள்ளது.

இந்த பித்தப் பை நமது உணவு ஜீரணமாவதற்கு பெரிதும் உதவுகிறது. அதாவது ஒரு வேளை சாப்பிட்டு அடுத்த வேளை உணவு உண்பதற்கு இடைப்பட்ட நேரத்தில் இந்த பித்தப் பை ஜீரணத்திற்குத் தேவையான ஜீரண நீரை சேமித்து வைக்கும்.

 

நாம் உணவு உண்டதும் இந்த பித்தப் பை சுருங்குகிறது. இதனால் பையில் இருக்கும் ஜீரண நீர் குடலுக்குச் சென்று உணவு செரிமானத்திற்கு உதவுகிறது.

அவ்வாறு பித்தப் பை சுருங்கி விரிவடையாமல் நின்று போவதால் பித்தப் பையில் சுரங்கும் ஜீரண நீர் தேங்கி கற்களாக மாறுகிறது.

இந்த பித்தப் பையில் ஏற்படும் கற்களுக்கும் நாம் உணவில் தெரியாமல் சாப்பிட்டுவிடும் கற்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

பித்தக் கற்கள் மூன்று வகைப்படும். ஒவ்வொரு வகை கற்களும் ஒவ்வொரு காரணத்தினால் உண்டாகின்றன.

பொதுவாக உடல் பருமனாக இருப்பது உணவில் கொழுப்புச் சத்து அதிகமாக இருப்பது கருத்தடை மாத்திரை அதிகம் உபயோகிப்பது போன்றவற்றாலும் இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்கள் விரைவாக உடைவதாலோ பித்த நீர்ப் பையில் பாக்டீரியா அல்லது குடல் புழுக்கள் சேர்வதாலோ பித்தப் பையில் கற்கள் உண்டாகின்றன.

பித்தப் பையில் கற்கள் உண்டான ஒருவருக்கு வாயுத் தொல்லை ஏற்படுவது சாப்பிட்ட பிறகு வயிற்றின் மேல் பாகத்தில் வலதுபுறம் வலி உண்டாவது மஞ்சள் காமாலை நோய் தாக்குவது கடுமையான வயிற்றுவலி போன்றவை ஏற்படலாம்.

நிறையப் பேர் பித்தப் பை கல் பிரச்சினை ஏற்பட்டு சாதாரண வயிற்று வலி என்று நினைத்து மருந்து உட்கொண்டு வருவதால் எந்த பலனும் அளிக்காமல் இறுதியாகத்தான் மருத்துவ பரிசோதனைக்கு வருகிறார்கள்.

பித்தப் பை கற்களை அல்ட்ரா சவுண்ட் சோதனை மூலம் எளிதாகக் கண்டறிய முடியும். அப்படி கண்டறிய முடியாதவர்களுக்கு மட்டுமே சிடி ஸ்கேன் அல்லது எம்.ஆர்.ஐ. ஸ்கேன் தேவைப்படுகிறது.

பித்தப் பை கற்களுக்கு பெரும்பாலும் அறுவை சிகிச்சைதான் தீர்வாக உள்ளது. மருந்தினால் குணப்படுத்த முடியும் என்றாலும் 100ல் 10பேருக்கே மருந்து குணமளிக்கிறது.

அதிலும் மருந்தை தொடர்ந்து சாப்பிட வேண்டிய சூழ்நிலைக்கு உள்ளாவார்கள். மருந்தை நிறுத்தினால் மீண்டும் பிரச்சினை துவங்கிவிடும். மேலும் மாத்திரைகளினால் பக்க விளைவுகளும் ஏற்படுகின்றன. எனவே பித்தப் பை கற்களுக்கு அறுவை சிகிச்சையே பூரண குணமளிக்கும்.

அறுவை சிகிச்சை என்றால் வயிற்றுக் கிழித்து செய்யப்படும் சிகிச்சை அல்ல. தற்போது லேப்ரோஸ்கோப்பி அறுவை சிகிச்சை நல்ல பலனை அளித்து வருகிறது. வயிற்றைக் கிழிக்காமல் ஒரு சொட்டு ரத்தத்தையும் வீணாக்காமல் இந்த சிகிச்சை முறை அளிக்கப்படுகிறது.

 
by Regha Healthcare Center

{ 6 comments }

mohamed Ilyas April 21, 2011 at 4:22 pm

Thank you for the more informative and useful article. More leadies getting affected with gadbladder stones after first baby delivered.
Can you please tell us, after removing the gadbladder through laproscopy is there any side affect? or how the food get digested? or they have to be in diet for life long??
* Please refer with your doctor

Abdur Rahman April 23, 2011 at 1:26 pm

Assalamu alaikkum va rahmathullahi va barakathahu

Nice article. Is there any natural food to cure the disease? Kindly advise.

Wassalam
உடல் நலம் சம்பந்தமாக மருத்தவரிடம் ஆலோசனைகள் பெற்றுக்கொள்ளவும்.

abdul kader jailani April 26, 2011 at 12:03 pm

thank u very much for urinformative news .do more as like this

Mihar Mansoor July 16, 2011 at 4:15 pm

Thanks lot,

Pls publish more article’s like this for Muslim community.

palaniappan July 17, 2014 at 4:43 pm

பித்தப்பையில் கற்களை அல்ட்ரா சவுண்ட் முலம் அகற்ற முடியுமா
அல்லது பித்தப்பையை முற்றிலும் அகற்ற வேண்டுமா

மருத்துவ ஆலோசனை கூறவும்

பித்தப்பையை அகற்றினால் ஏதாவது ஜீரண பிரச்சினை ஏற்படுமா
உடல் உபாதைகள் ஏற்படுமா
மருத்துவர் பித்தப்பையை அகற்ற வேண்டும் என்று கூறுகிறார்கள்

punidhan November 24, 2014 at 2:30 am

assalamu alaikkum (varah…)pithapayil karkal iruppavargal,vaarathirkku 3 naatgal “carrot&beetroot” juice kudithu varuvadhaal ,kaleeral sambandha patta noigal gunamaagum endru solgiraargal,ungaludaya karuthai engalukku theriviyungal.wassalam.

Comments on this entry are closed.

Previous post:

Next post: