பறவைகள்! வானத்து விமானிகள்! “இவைகளை தாங்குவது யார்? “

என்ற குர்ஆனின் கேள்விக்கு அறிவியல் பதில்!

எஸ். ஹலரத் அலி (+91 99653 61068.)

வசனங்கள்:

“இவர்கள் பறவைகளைக் கவனித்ததில்லையா? அவை விண் வெளியில் எவ்வாறு கட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றன?

அல்லாஹ்வைத் தவிர அவற்றைத் தாங்கிக் கொண்டிருப்பவன் வேறு யார்?”

அல்குர்ஆன் 16:79

“சிறகுகளை விரித்தும் மடக்கியும் தங்களுக்கு மேல் பறந்து கொண்டிருக்கும் பறவைகளை இவர்கள் பார்க்கவில்லையா?

அவற்றைத் தடுத்து வைத்திருப்பவன் கருணைமிக்க இறைவனைத் தவிர வேறு எவருமில்லை!”

அல்குர்ஆன் 67:19

முன்னுரை:

ஒரு புறா கேட்ட கேள்வி:

500 கிராம் புறா, 15 கிலோ கழுகு, 2 கிராம் தேன்சிட்டு – இவை எப்படி கீழே விழாமல் மணிக்கணக்கில் பறக்கின்றன?

1903-ல் ரைட் சகோதரர்கள் 12 வினாடி பறக்க 4 வருஷம் உழைத்தார்கள். ஆனால் பறவைகள் கோடி வருஷமாக பறக்கின்றன. “யார் தாங்குகிறான்?” என்று குர்ஆன் 1400 வருஷம் முன்பே கேட்ட கேள்விக்கு, இன்றைய ஏரோடைனமிக்ஸ் பதில் சொல்கிறது.

சுருக்கம்:

மா யும்ஸிகு ஹுன்ன இல்லல்லாஹ்!

அல்லாஹ் தான் காற்றை,அழுத்தத்தை, புவி ஈர்ப்பை படைத்து, அதன் மூலம் பறவையை தாங்குகிறான்.

யக்பிழ்ன” – மணிக்கு 389 கி.மீ வேகத்தின் ரகசியம்.

பெரெக்ரின் பருந்து உலகின் வேகமான உயிரினம். டைவ் வேகம்: 389 km/h. F-16 விமானத்தை விட Drag குறைவு. எப்படி?

குர்ஆன் சொன்னது:

வ யக்பிழ்ன”

சிறகை மடக்குதல்.
NASA 2015 ஆய்வு சொன்னது:
பருந்து இரையை பார்த்ததும் சிறகை 100% உடம்போடு ஒட்டி மடக்கும். உடம்பு Bullet வடிவம் ஆகும். தலை, அலகு, உடல், வால் எல்லாம் ஒரே கோடு. காற்று உராய்வு – (Drag) – 0.05 மட்டும்.

அல்லாஹ்வின் ஐந்து Streamlining டிசைன்:

Teardrop உடல்:

முன்னாடி கூர்மை, பின்னாடி மெல்லியது. காற்று வழுக்கிகொண்டு போகும். Bullet Train, விமானம் எல்லாம் இதை Copy செய்தே உருவாக்கினார்கள்.

இறகு Tile Design:

மேல் இறகு சிறியது, கீழ் இறகு பெரியது. காற்று புகுந்து கொந்தளிக்காது. Laminar Flow = Drag இல்லை.

கூர்மையான அலகு:

வாத்து, பருந்து அலகு கத்தி போல காற்றை கிழிக்கும். Japan Bullet Train மீன் கொத்தி அலகை Copy பண்ணி சத்தம் 30% குறைத்தது.

மடக்கும் கால்:

பறக்கும் போது காலை வயிற்றோடு ஒட்டும். தொங்க விட்டால் உராய்வு (Drag) 40% ஏறும். விமானம் Landing Gear மடக்குவது போல.

வால் Air Brake:

வேகம் வேண்டும் என்றால் வாலை குவிக்கும் = “யக்பிழ்ன”. திரும்ப வேண்டும் என்றால் விரிக்கும் = “ஸாஃப்ஃபாத்.”

  1. இல்லர் ரஹ்மான்” – கருணையாளனின் Engineering.

மனிதன் 100 வருடம் ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்ததை, அல்லாஹ் ஒரு 10 கிராம் மூளை உள்ள பறவைக்கு இயல்பாகவே கொடுத்திருக்கிறான்.

பறவைகளுக்கு அல்லாஹ் வழங்கிய சிறப்பு அம்சங்கள்.

எடை-பலம்:
எலும்பு 5% மட்டுமே! ஆனால் ஸ்டீலை விட வலிமை!

மனிதன் உருவாக்கிய போயிங்.747 ல் அதன் உடல் கூடு (Frame) மட்டும் 20%.

தானியங்கி-(Auto pilot.):

வெப்பக் காற்று (Thermal) திசையை நொடியில் கணக்கிட்டு தன் சிறகை சரி செய்யும்.
அமெரிக்காவின் அதி நவீன போர் விமானம் F-22. செயல் பட மூன்று கம்யூட்டர்கள் + ஆட்டோ பைலட் தேவை.

எரிபொருள்- (Fuel.):

Artic Tern பறவை 4000 கி.மீ (Non-Stop) தொடர்ந்து பறப்பதற்கு 2 கிராம் கொழுப்பு மட்டும் போதும்.
நமது Air bus-A380 விமானம் 1கி.மீ பறப்பதற்கு 12 லிட்டர் எரி பொருள் தேவை.

ஆந்தை இறகு ஓரம் ரம்பம் போல இருக்கும். சத்தமே வராது. Boeing 787 இதை Copy பண்ணி Engine சத்தம் குறைத்தது.
கழுகு சிறகு நுனி மேலே வளைந்திருக்கும். Airbus Sharklet இதை Copy பண்ணி 4% Fuel Save பண்ணுகிறது.

வ ஃபில் அர்ழி ஆயாதுல் லில்மூகினீன்” — 51:20.

– பூமியில் நம்பிக்கையாளருக்கு அத்தாட்சி இருக்கிறது!

PhD வாங்கும் இன்ஜினியர் பறவையை பார்த்து தான் Thesis எழுதுகிறார்.

  1. நமக்கான பாடம்:ஈமானிய விமானம்:

பறவையின் பறத்தல் முஃமினின் வாழ்க்கைக்கு உதாரணம்:

லிஃப்ட் = தவக்குல். பறவை சிறகை அடிக்கும், ஆனால் காற்று தாங்கும் என்று நம்பும். நாம் முயற்சி செய்ய வேண்டும், ரிஸ்க் அல்லாஹ் தருவான் என்று நம்ப வேண்டும்.

*ஹதீஸ்:*

“பறவைகள் போல தவக்குல் வைத்தால், காலையில் வெறும் வயிற்றோடு போகும், மாலையில் நிரம்பிய வயிற்றோடு திரும்பும்” திர்மிதி- 2344.

,தெர்மல் = அல்லாஹ்வின் உதவி. கழுகு தானாக மேலே ஏறாது. சூடான காற்று தூக்கி விடும். நாம் துஆ, தொழுகை மூலம் அல்லாஹ்வின் Thermal க்கு காத்திருக்க வேண்டும்.

“முஸக்கராத் = ஷரீஅத்.” பறவை காற்றின் சட்டத்தை மீறி பறக்க முடியாது. முஃமின் குர்ஆன் சுன்னத் சட்டத்தை மீறி வெல்ல முடியாது.

முடிவுரை:

விஞ்ஞானம் சொல்லும் “எப்படி”, குர்ஆன் கேட்கும் “யார்”

அறிவியல் சொல்கிறது:

Bernoulli, Newton, Gravity, Thermal – ல் பறவை பறக்கிறது.

குர்ஆன் கேட்கிறது:
அந்த Bernoulli யை யார் படைத்தது? Newton விதியை யார் எழுதியது? Gravity யை யார் Set பண்ணியது?

பதில்: “மா யும்ஸிகுஹுன்ன இல்லல்லாஹ்… இன்னஹூ பிகுல்லி ஷைஇன் பஸீர்”

அல்லாஹ் தான் சட்டத்தை படைத்தான். அந்த சட்டத்தை கொண்டு பறவையை தாங்குகிறான். ஒவ்வொரு அணுவையும் அவன் பார்த்து கொண்டிருக்கிறான்.

விமானம் பறந்தால் Newton ஐ புகழ்கிறோம்.
பறவை பறந்தால் அல்லாஹ்வை மறக்கிறோம்.
இந்த முரண்பாட்டை தான் குர்ஆன் தட்டி கேட்கிறது.

அடுத்த முறை வானத்தில் பறவையை பார்த்தால், Physics பாடம் மட்டும் படிக்காதீர்கள். “சுப்ஹானல்லாஹ்” என்று தவ்ஹீத் பாடமும் படியுங்கள்.

ஏனென்றால் “இன்ன ஃபீ தாலிக ல ஆயாதில் லிகவ்மின் யுஃமினூன்” –

” நம்பிக்கை கொள்ளும் மக்களுக்கு இதில் அத்தாட்சி இருக்கிறது. 16:79.

வ அல்லாஹு அஃலம்! – அல்லாஹ்வே அறிந்தவன்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *