நோய் என்பது ஆரோக்கியத்தின் எதிர் மறையாகும். உடம்பிலும், மார்க்கத்திலும் ஆரோக்கியம் உள்ளது போல், இவ்விரண்டிலும் அதற்கு எதிரான நோயும் உண்டு. உள்ளதில் நோய் எனப்படுவது, ஒரு மனிதனின் மார்க்க விஷயங்களில் உள்ள அனைத்து குறைபாடுகளையும் குறிக்கும். எனவே! நோய் என்பது அடிப்படையில் குறைபாடாகும். நோயான உடம்பு என்றால் ஆரோக்கியமற்ற, வலிமை குறைந்த உடம்பு என்று பொருளாகும். மேலும் நோயான உள்ளம் என்பது மார்க்க விஷயங்களில் அவரிடம் உள்ள குறைகளையும் சத்தியத்தை விட்டும் தூரமானதையும் குறிக்கும். நோயான உடம்பு என்பது உடல் உருப்புக்களில் ஏற்படும் சோர்வைக் குறிக்கும்.
ஒரு நோயாளியிடம் இருக்க வேண்டிய பொறுமையும் அதற்கான கூலியும்: ஒரு நோயாளி தனக்கு ஏற்பட்டுள்ள நோயை பொறுமையுடன் சகித்துக் கொள்ள வேண்டும். அதன் மூலம் பொறுமையாளிகளுக்கு அல்லாஹ் வாக்களித்துள்ள நன்மைகளை அல்லாஹ்விடம் எதிர்பார்க்க வேண்டும். அல்லாஹ் கூறுகின்றான்:
(நபியே!) நீர் கூறும்; “ஈமான் கொண்ட நல்லடியார்களே! உங்களுடைய இறைவனுக்கு பயபக்தியாக இருங்கள்; இவ்வுலகில் அழகாய் நன்மை செய்தோருக்கு அழகிய நன்மையே கிடைக்கும் – அல்லாஹ்வுடைய பூமி விசாலமானது பொறுமையுள்ளவர்கள் தங்கள் கூலியை நிச்சயமாகக் கணக்கின்றிப் பெறுவார்கள்.” அல்குர்ஆன் 39-10
மேலும் அவன் கூறுகையில்: உங்களில் தியாகம் செய்தோரையும் பொறுமையாளரையும் அடையாளம் காட்டிட உங்களைச் சோதிப்போம், உங்கள் செய்திகளையும் வெளிப்படுத்துவோம்(47:31)
இன்னும் ஒரு வசனத்தில் அவன் கூறுகையில்: ஒவ்வொருவரும் மரணத்தைச் சுவைக்கக் கூடியவரே. நன்மை மற்றும் தீமையின் மூலம் பரீட்சித்துப் பார்ப்பதற்காக உங்களைச் சோதிப்போம். நம்மிடமே திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள் (21:35)
இன்னும் அவன் கூறுகின்றான்: இந்தப் பூமியிலோ, உங்களிடமோ எந்தத் துன்பம் நிகழ்ந்தாலும் அதை நாம் உருவாக்குவதற்கு முன்பே பதிவேட்டில் இல்லாமல் இல்லை. இது அல்லாஹ்வுக்கு எளிதானது. உங்களுக்கு தவறிவிட்டதாக நீங்கள் கவலைப்படாமல் இருப்பதற்காகவும், அவன் உங்களுக்கு வழங்கியதில் வரம்பு மீறி மகிழ்ச்சி கொள்ளாதிருப்பதற்காகவுமே. கர்வமும் பெருமையும் கொண்ட எவரையும் அல்லாஹ் நேசிக்க மாட்டான் (57:22,23)
மற்றொரு வசனத்தில் கூறுகிறான்: எந்தத் துன்பம் ஏற்பட்டாலும் அல்லாஹ்வின் விருப்பத்தைக் கொண்டே தவிர இல்லை. அல்லாஹ்வை யார் விசுவாசிக்கிறாரோ அவரின் உள்ளத்திற்கு அவன் வழி காட்டுவான். அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன். (64:11)
மேலும், ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், செல்வங்கள், உயிர்கள், மற்றும் பலன்களைச் சேதப்படுத்தியும் உங்களைச் சோதிப்போம். பொறுத்துக் கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக! (தமக்கு ஏதேனும் துன்பம் ஏற்படும் பொது ~நாங்கள் அல்லாஹ்வுக்கே உரியவர்கள், நாங்கள் அவனிடமே திரும்பிச் செல்பவர்கள் என்று கூறுவார்கள். அவர்களுக்கே தமது இறைவனின் அருளும் அன்பும் உள்ளன. அவர்களே நேர் வழி பெற்றவர்கள். (2:155-157)
மேலும் அல்லாஹ் கூறுகையில்: (யார் பிறரால் பாதிக்கப்பட்ட பின்) பொறுமையை மேற கொண்டு மன்னிக்கிறாரோ அது உறுதி மிக்க காரியங்களில் ஒன்றாகும். (42:43)
நம்பிக்கை கொண்டோரே! பொறுமை மற்றும் தொழுகையின் மூலம் உதவி தேடுங்கள்! அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான். (2:153)
மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ~பொறுமை ஒளியாகும்என அபூ மாலிக் அல் அஷ்அரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (முஸ்லிம்:223)
இன்னும் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஸுஹைப் (ரலி) அவ்கள் அறிவிக்கிறார்கள்: ஒரு முஃமினின் விஷயம் ஆச்சரியமாக உள்ளது. அவரின் அனைத்து விஷயங்களும் நன்மையாக உள்ளது. அவ்வாறு ஒரு முஃமினைத் தவிர வேறு எவருக்கும் எற்படாது. அவருக்கு மகிழ்வூட்டக் கூடிய ஏதும் நிகழ்ந்தால் அதற்காக நன்றி செலுத்துவார். உடனே அது அவருக்கு நன்மையாக மாறிவிடுகிறது. மேலும் அவருக்கு ஏதும் தீங்குகள் ஏற்பட்டால் அதனை பொறுமையுடன் சகித்துக் கொள்வார். உடனே அது அவருக்கு நன்மையானதாக மாறிவிடும். (முஸ்லிம்:2999)
இன்னும் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொள்ளை நோய் பற்றிக் கேட்டேன். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் தெரிவித்தார்கள்: ~அது தான் நாடியவர்கள் மீது அல்லாஹ் அனுப்பும் வேதனையாக இருந்தது. (ஆனால் இப்போது) அதை இறை நம்பிக்கையாளர்களுக்கு அல்லாஹ் கருணையாக ஆக்கிவிட்டான். ஆகவே! (இறைவனின்) அடியார் ஒருவர் கொள்ளை நோய் பரவும் போது தமக்கு அல்லாஹ் எழுதிய விதிப்படியே அல்லாமல் எந்த நோயும் தம்மைத் தீண்டாது என உறுதி பூண்டவராகத் தம் ஊரிலேயே பொறுமையுடன் (நிலை குலையாமல்) இருப்பாராயின் அவருக்கு உயிர்த்தியாகிக்குக் கிடைக்கும் நன்மையைப் போன்ற நன்மை (மறுமையில்) கிடைக்கும். (புஹாரி:5734)
மேலும் ஒரு ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் கூறுகையில்: ~ நிச்சயமாக பொறுமை என்பது முதல் கட்டத்தில் வர வேண்டிய ஒன்றாகும்.(புஹாரி:1283, முஸ்லிம்:926) மேலும் அபூ ஸஈத், அபூ ஹுறைறா (ரலி) அவர்கள் இருவரும் நபியவர்கள் கூறியதாகக் கூறுகின்றார்கள்: ~ஒரு முஸ்லிமைத் தைக்கும் முள் உட்பட அவருக்கு நேரிடும் களைப்பு, நோய், துக்கம், கவலை, தொல்லை, மனவேதனை ஆகிய எதுவாயினும் அதற்குப் பதிலாக அவருடைய பாவங்களிலிருந்து சிலவற்றை அல்லாஹ் மன்னிக்காமல் 13 இருப்பதில்லை.(புஹாரி:5641, முஸ்லிம்:2573)
அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவிக்கின்றார்கள்: ~எந்தவொரு முஸ்லிமுக்கும் நோய், மற்றும் அதல்லாத எந்தத் துன்பம் நேர்ந்தாலும் அதற்கு பதிலாக அவருக்கு ஒரு நன்மை எழுதப்படாமலும், அவரது ஒரு பாவம் மன்னிக்கப்படாமலும் இருப்பதில்லை. (முஸ்லிம்:2572)
இன்னுமொரு ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஹுறைறா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ~யாருக்கு அல்;லாஹ் ; நன்மையை நாடுகின்றானோ அவரை சோதனைக்கு உள்ளாக்குகின்றான் (புஹாரி:5645)
மேலும் அனஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் : ~நிச்சயமாக பெரும் துன்பங்களுக்குத் தான் பெரும் கூலி உள்ளது. அல்லாஹ் ஒரு சமுதாயத்தை நேசித்தால் அவர்களைச் சோதிக்கிறான். யார் அதில் திருப்தி கொள்கிறாரோ அவருக்கு (இறை) திருப்தி உண்டு. யார் அதில் அதிருப்பதி கொள்கிறாரோ நோயாளியின் தொழுகை அவருக்கு (இறைவனின்) அதிருப்தியே உள்ளது. என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி:2396)
இன்னும் முஸ்அப் பின் ஸஃத் (ரலி) அவர்கள் தன் தந்தை கூறியதாக அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதரே! மனிதர்களில் அதிகம் சோதிக்கப்படுவோர் யார் என நான் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள்: ~நபிமார்கள், அதற்கு அடுத்த தரத்திலுள்ளோர், அதற்கு அடுத்த தரத்திலுள்ளோர் (என்ற வரிசையில் சோதிக்கப்படுவர்). ஒருவர் அவரது மார்க்கப்பற்றுக்கேற்ப சோதிக்கப்படுவார். மார்க்கத்தில் உறுதியானவராக இருந்தால் அவரது சோதனையும் கடுமையாக இருக்கும். மார்க்கத்தில் உறுதி குறைந்தவராக இருந்தால் அவரது மார்க்கப்பற்றின் அளவுக்கேற்ப சோதிக்கப்படுவார். எந்தப் பாவமும் அற்றவராக நடமாடும் அளவுக்கு அடியான் சோதனைக்கு ஆளாவான் என்றுவிடையளித்தார்கள் (திர்மிதி:2398)
ஒரு முஸ்லிம் இவ்வுலகிலும், மறுமையிலும் அல்லாஹ்விடத்தில் மன்னிப்பையும், நல்லாரோக்கியத்தையும் மற்றும் தீமைகளை விட்டும் பாதுகாப்பையும் வேண்டுவார். அப்பாஸ் பின் அப்துல் முத்தலிப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நான் நபி (ஸல்) அவர்களிடம், அல்லாஹ்விடத்தில் வேண்டுவதற்காக ஒருவிஷயத்தைக் கற்றுத் தாருங்கள் எனக் கேட்டேன். அதற்கு நபியவர்கள்: ~நீங்கள் அல்லாஹ்விடம் ஆரோக்கியத்தைக் கேட்பிராக! என்றார்கள். பின்பு சில நாட்கள் தங்கிவிட்டு நபியவர்களிடம் வந்து அல்லாஹ்விடம் கேட்பதற்கு ஒருவிஷயத்தைக் கற்றுத் தாருங்கள் என்றேன். உடனே ~அப்பாஸே! அல்லாஹ்வின் தூதரின் பெரிய தந்தையே! நீர் அல்லாஹ்விடத்தில் இவ்வுலகிலும், மறுவுலகிலும் ஆரோக்கியத்தையே கேட்பீராக!என்றார்கள்.(திர்மிதி:3514)
மேலும் நபி (ஸல்) அவர்கள் மின்பர் மீது ஏறியவர்களாக ~நீங்கள் அல்லாஹ்விடத்தில் மன்னிப்பையும், நலத்தையும் கேளுங்கள். ஏனெனில், நிச்சயமாக எவருக்கும் உறுதியான ஈமானுக்குப் பின் நன்மையைத் தவிர சிறந்த எதுவும் கொடுக்கப்படவில்லை எனக் நோயாளியின் தொழுகை கூறினார்கள் என அபூபக்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (திர்மிதி:3558)
இன்னும் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் ~இறைவனே! உனது அருள் நீங்குவதிலிருந்தும், நீ தரும் ஆரோக்கியம் தடை செய்யப்படுவதிலிருந்தும், திடீர் என நிகழும் உன் தண்டனையிலிருந்தும், உன் அனைத்துக் கோபத்திலிருந்து நான் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று பிரார்த்திப்பவர்களாக இருந்தார்கள் (முஸ்லிம்: 2739)
மேலும், அபூ ஹுறைறா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: ~நபி (ஸல்) அவர்கள் மோசமான தீர்ப்பைவிட்டும், கடுமையான சோதனைகளைவிட்டும், பாதுகாப்புத் தேடக் கூடியவர்களாக இருந்தார்கள்.(முஸ்லிம்:2707)
ஆரோக்கியமாக இருக்கின்ற நிலமைகளில் நல்லமல்களை செய்வதில் முயற்சி செய்தல்.
இவ்வாறு செய்யக் கூடியவர்களுக்கு அவர்கள் சுகவீன முற்று அந்த அமல்களைச் செய்ய முடியாத நிலமைகளில் அவருக்கு அதற்கான பூரண நன்மைகள் எழுதப்படும். இதற்கு அபூ மூஸா அல் அஷ்அரி (ரலி) அவர்களின் ஹதீஸ் சான்றாக உள்ளது. அவர்கள் நபி (ஸல்) அவர்கள் கூறியதாகக் கூறுகின்றார்கள். ~ஓர் அடியான் நோய் வாய்ப்பட்டால், அல்லது பிரயாணம் செய்தால் அவனுக்கு, தான் ஆரோக்கியமானவனாக, பிரயாணம் செய்யாமல் ஊரில் தங்கியிருந்த காலங்களில் செய்த அமல்களை செய்தது போன்ற நன்மைகள் எழுதப்படும். (புஹாரி:2996)
இஸ்லாமிய மார்க்கத்தின் எளிதான நடைமுறையும், இலகுவான போக்கும், பரிபூரணத்துவமும்.
அல்லாஹ் அவனது திருமறையில் கூறுகின்றான்: ~~இம்மார்க்கத்தில் அவன் உங்களுக்கு எந்தச் சிரமத்தையும் ஏற்படுத்தவில்லை. (22:78)
மேலும், அவன் கூறுகையில்: ~~அல்லாஹ் உங்களுக்கு எளிதானதையே நாடுகின்றான். சிரமமானதை உங்களுக்கு நாடமாட்டான் (2:185)
இன்னும் கூறும் போது: ~~உங்களால் இயன்றவரை அல்லாஹ்வை நீங்கள் அஞ்சுங்கள்(64:16)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ~நான் உங்களுக்கு சொல்லாது விட்டு விட்டவைகளில் (என்னிடம் கேள்வி கேட்காது) என்னை விட்டு விடுங்கள். நிச்சயமாக உங்களுக்கு முன் இருந்தவர்கள் அதிக கேள்விகள் கேட்டதாலும், தங்களது நபிமார்களுடன் வேறுபட்டதாலும் தான் அழிந்தார்கள். எனவே! நான் உங்களுக்கு ஒருவிஷயத்தை ஏவினால் அதனை நீங்கள் உங்கள் சக்திக்கு ஏற்ற விதத்தில் எடுத்துக் கொள்ளுங்கள். நான் எதையேனும் தடுத்ததால் அதனை முழுமையாகத் தவிர்த்துக் கொள்ளுங்கள் (புஹாரி:1337)
மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ~நிச்சயமாக மார்க்கம் எளிதானதாகும் (புஹாரி:39)
ஒரு நோயாளி உளூவை முறிக்கக்கூடிய சிறு தொடக்கிலிருந்து உளூ செய்து தன்னை சுத்தம் செய்து கொள்ள வேண்டும்;. இன்னும் அவர் (குளிப்பைக் கடமையாக்கும்) பெருந் தொடக்கிலிருந்து குளித்து சுத்தம் செய்து கொள்ள வேண்டும்
. 2- உளூ செய்யுமுன் தன் இரு முன் பின் துவாரங்களினால் வெளியாகக் கூடிய அசுத்தங்களை தண்ணீரால் நீக்கிக் கொள்வது அவசியமாகும். ஏனெனில், ~நபி (ஸல்) அவர்கள் தண்ணீரால் சுத்தம் செய்யக் கூடியவர்களாக இருந்தார்கள்.(புஹாரி:150, முஸ்லிம்:271)
மேலும் தண்ணீருக்குப் பதிலாக கற்களையோ அல்லது அதற்குப் பகரமானதையோ உபயோகித்து சுத்தம் செய்து கொள்ளலாம்.கற்களுக்குப் பகரமாக என்பதன் கருத்து என்னவெனில், சுத்தமான, கட்டியான தடை செய்யப்படாத (கண்ணியப்படுத்தப்படாத) அனைத்துப் பொருட்களுமாகும். உதாரணமாக: பலகைத் துண்டு, காகிதம் போன்ற உறிஞ்சி எடுக்கும் அனைத்துப் பொருட்களும் கற்களைப் போன்றதாகும். இதுவே சரியான கருத்தாகும்
. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ~உங்களில் ஒருவர் மலசல கூடத்திற்குச் சென்றால் அவர் தன்னுடன் மூன்று கற்களை எடுத்துச் சென்று
நோயாளி சுத்தம் செய்து கொள்ளட்டும். நிச்சமாக அது அவனுக்கு நிறைவேறிவிடும் (அபூதாவூத்:40) இவ்விஷயத்தில் மூன்று கற்கள் அல்லது அதற்குப் பகரமாக உபயோகிக்கக் கூடியதொன்று அவசியமாகும்.
ஸல்மான் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: ~மலசலம் கழிக்கும் போது கிப்லாவை முன்னோக்க வேண்டாமென்றும், (மலசலம் கழித்த பின்) வலக்கரத்தால் சுத்தம் செய்ய வேண்டாம் என்றும், மூன்றைவிடக் குறைவான கற்களால் சுத்தம் செய்ய வேண்டாம் எனவும், மற்றும் விட்டைகள், எலும்புகளால் சுத்தம் செய்ய வேண்டாமென்றும் எங்களை நபி (ஸல்) அவர்கள் தடுத்தார்கள் (முஸ்லிம்; 262)
எனவே, மூன்று கற்கள் போதாவிட்டால் நான்காகவோ, ஐந்தாகவோ சுத்தம் செய்யப்பட வேண்டிய உறுப்புக்கள் பூரணமாக சுத்தமாகும் வரை கற்களை உபயோகிக்க வேண்டும். மேலும் கற்களால் சுத்தம் செய்யும் போது அவற்றை ஒற்றைப்படயாக உபயோகித்துக் கொள்வது மிகவும் சிறந்தது. நபி (ஸல்) அவர்கள் கூறியதாகஅபூஹுரைரா (ரலி) அவர்கள் 21 அறிவிக்கிறார்கள்: ~யார் சுத்தம் செய்கிறாரோ அவர் ஒற்றைப்படயான கற்களால் சுத்தம் செய்து கொள்ளட்டும். (புஹாரி:162, முஸ்லிம்:237)
மேலும், ஒருவர் கற்களால் சுத்தம் செய்துவிட்டு அதன் பின் தண்ணீரால் சுத்தம் செய்து கொள்வதும் சிறந்ததாகும். ஏனெனில், கற்கள் அசுத்தத்தை நீக்கிவிடுகின்றது. தண்ணீரோ அசுத்தமான இடத்தை சுத்தம் செய்கின்றது. இவ்வாறு செய்வது சுத்தம் செய்வதில் மிக மேலான வழி முறையாகும். எனவே, ஒருவர் கற்களால் சுத்தம் செய்தல், அல்லது தண்ணீரால் அசுத்தத்தை நீக்குதல், அல்லது இவ்விரண்டையும் ஒன்றாகச் செய்தல் ஆகியவற்றில் தனக்கு விருப்பமானதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள முடியும். இரண்டு முறைகளையும் ஒரே சந்தர்ப்பத்தில் உபயோகிப்பது மிகவும் சிறந்ததாகும். அவ்வாறின்றி, இரு முறைகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து சுத்தம் செய்ய விரும்பினால் தண்ணீரைப் பயன்படுத்துவது சிறந்ததாகும். ஏனெனில், தண்ணீரை உபயோகிப்பது அசுத்தம் வெளியான இடத்தை சுத்தப்படுத்துவதுடன் அதன் அடையாளத்தையும் நீக்கி விடுகின்றது.
நோயாளியின் தொழுகை இன்னும் இரு துவாரங்களினாலும் ஈரமாக வெளியாகக் கூடியவைகளான சிறு நீர், மலம், போன்றவற்றை தண்ணீரால் சுத்தம் செய்ய வேண்டும். மாறாக, தூக்கம், காற்று வெளியாகுதல், ஒட்டக இறைச்சி சாப்பிடுதல், அபத்தைத் தொடுதல் போன்றவற்றிற்காக தண்ணீரால் சுத்தம் செய்ய வேண்டுமென்பதில்லை. இரு துவாரங்களாலும் வெளியாகும் அசுத்தங்களை நீக்கவே தண்ணீரைக் கொண்டு சுத்தம் செய்யும் முறை கடமையாக்கப்பட்டுள்ளது.
நோயாளி அசைய முடியாதளவுக்கு நோய்வாய்ப் பட்டிருந்தால் இன்னொருவர் அவரை உளூச் செய்து வைக்க வேண்டும். அவர் பெருந் தொடக்குள்ளவராக இருந்தால் அவரைக் குளிப்பாட்டுவதில் உதவி செய்ய வேண்டும். அவரது வெட்கட்தளங்களைப் பார்க்கக் கூடாது.
நோயாளி தண்ணீரால் சுத்தம் செய்ய முடியவில்லை, தனக்கு ஏதும் தீங்கு ஏற்படும், அல்லது தன் உறுப்புக்கு ஏதும் நோவினை ஏற்படும், அல்லது தண்ணீரை உபயோகிப்பதினால் வேறு புதிதாக இன்னொரு நோய் ஏற்படும் 23 அல்லது அவரால் தண்ணீரை உபயோகித்தால் நோய் மேலும் அதிகரித்து குணமடைய தாமதிக்கும் என்ற அச்ச நிலை ஏற்படும் போது அவர் தயம்மும் செய்து கொள்ளலாம். அல்லாஹ் கூறுகின்றான்:
உங்களை நீங்கள் கொலை செய்து கொள்ளாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் உங்களிடம் மிக்க கிருபையுடையோனாக இருக்கின்றான்(4:29)
மூலம்: ஸஈத் இப்னு அலீ இப்னு வஹ்ஃ;ஃப் அல்க்கஃதானீ
இஸ்லாமிய அழைப்பு வழி காட்டல், வக்பு, அலுவல்கள்
அமைச்சு – சவூதி அரேபியா
Comments on this entry are closed.