நிலவு தன்னுடைய ஒளியை வெளிப்படுத்திக் கொள்கிறது என்றே முந்தைய நாகரிங்கள் கருதின. ஆனால் இன்றோ நிலவின் அதன் ஒளி பிரதிபலிக்கப்பட்ட ஒளி என்ற உண்மையை இன்றைய அறிவியல் எடுத்து கூறுகின்றது. ஆனால் 1400 வருடங்களுக்கு முன்பே திருக்குர்ஆன் வசனத்தில்…
تَبَارَكَ الَّذِي جَعَلَ فِي السَّمَاء بُرُوجًا وَجَعَلَ فِيهَا سِرَاجًا وَقَمَرًا مُّنِيرًا
வான (மண்டல)த்தில் கோளங்கள் வரும் பாதைகளை உண்டாக்கி, அவற்றிடையே ஒரு விளக்கை (சூரியனை)யும்; ஒளிவான சந்திரனையும் உண்டாக்கினானே அவன் பாக்கியமுள்ளவன்.سورة الفرقان 25:61
திருக்குர்ஆனில் சூரியனுக்கு பயன்படுத்தப்படும் அரபுச் சொல் ‘ஷம்ஸ்’ இதனை ‘ஸிராஜ்’ (ஒளிவிளக்கு) ‘வஹ்ஹாஜ்’ (பிரகாசிக்கும் விளக்கு) ‘தியா’ (ஒளிரும் மகிமை) என்றும் திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளது. சூரியன் தனக்குள் எரிந்துகொண்டே இருப்பதால், அது கடுமையான உஷ்ணத்தையும் வெளிச்சத்தையும் உண்டு பண்ணிக்கொண்டே உள்ளது.
சந்திரனை குறிக்கும் அரபுச் சொல் ‘கமர்’ என்பதாகும். இந்த சந்திரனை ‘முனீர் என்றும் வர்ணிக்கிறது. ‘முனீர்’ என்றால் ஒளியை (நூர்) வழங்கும் கோளம் என்று பொருள். எந்த இடத்திலும் சந்திரனை குறித்திட ‘வஹ்ஹாஜ்’ ‘தியா’ ‘ஸிராஜ்’ ஆகிய சொற்கள் பயன்படுத்தப்படவே இல்லை. அதே போல் சூரியனை குறித்திட ‘நூர்’ அல்லது ‘முனீர்’ என்ற சொற்களும் பயன்படுத்தப்படவில்லை.
சூரியனிலிருந்தும், சந்திரனிலிருந்தும் பெறப்படும் ஒளியின் இயல்பை எடுத்துக் கூறும் வசனங்களைப் பாருங்கள்.
هُوَ الَّذِي جَعَلَ الشَّمْسَ ضِيَاء وَالْقَمَرَ نُورًا
“அவன்தான் சூரியனை (சுடர்விடும்) பிரகாசமாகவும், சந்திரனை ஒளிவுள்ளதாகவும் ஆக்கினான்” سورة يونس 10:5
أَلَمْ تَرَوْا كَيْفَ خَلَقَ اللَّهُ سَبْعَ سَمَاوَاتٍ طِبَاقًا وَجَعَلَ الْقَمَرَ فِيهِنَّ نُورًا وَجَعَلَ الشَّمْسَ سِرَاجًا
ஏழு வானங்களையும் அல்லாஹ் அடுக்கடுக்காய் எப்படி படைத்திருக்கின்றான் என்பதை நீங்கள் பார்க்கவில்லையா? இன்னும் அவற்றில் சந்திரனைப் பிரகாசமாகவும், சூரியனை ஒளி விளக்காகவும் அவனே ஆக்கியிருக்கிறான். 71:15,16 سورة نوح
Dr. Zakir Naik. தமிழாக்கம்: இப்னு ஹுஸைன்
Comments on this entry are closed.